kavithai arangam

278 views
Skip to first unread message

Subbaiyar Ramasami

unread,
Jul 19, 2017, 1:55:40 PM7/19/17
to santhav...@googlegroups.com
அடுத்த கவிதை அரங்கம்  :  ஆகஸ்டு1ந்தேதி தொடங்கும்
நெறியாளார்: இலந்தை

தலைப்பு:   மனத்துக்கு ஒரு மடல்

கலந்து கொள்ள விரும்புபவர் பெயர் கொடுக்கவும்.   26ந்தேதி வரை பெயர் கொடுக்கலாம்.

இலந்தை

Kaviyogi Vedham

unread,
Jul 19, 2017, 2:39:24 PM7/19/17
to santhavasantham, ilan...@gmail.com
pl. include my name Vedham
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

M. Viswanathan

unread,
Jul 19, 2017, 3:49:03 PM7/19/17
to Santhavasantham
அன்புக் கவிமாமணியே...என்பெயரையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றி.
மீ.வி.

Subbaraman NV

unread,
Jul 19, 2017, 7:18:02 PM7/19/17
to santhav...@googlegroups.com
கவிதை அஎஅங்கில் எனக்கோர் இடம் வேண்டும் என உங்களிடம் வேண்டி, நகலை என் மனத்துக்கு ஒரு மடல்வழி அனுப்பியுள்ளேன். 
என் வி சுப்பராமன்

On Thu, Jul 20, 2017 at 12:09 AM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kaviyog...@gmail.com) Add cleanup rule | More info

pl. include my name Vedham
 yogiyar
2017-07-19 13:55 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

விவேக் பாரதி

unread,
Jul 19, 2017, 10:41:01 PM7/19/17
to santhav...@googlegroups.com
மடலெழுதும் மாணவனை மன்றத்தில் சேர்த்தால் 
உடனே பெறுவேன் உவப்பு 

ramaNi

unread,
Jul 19, 2017, 11:38:12 PM7/19/17
to சந்தவசந்தம்
என்பெயரையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றி.
ரமணி

Subbaraman NV

unread,
Jul 20, 2017, 4:03:51 AM7/20/17
to santhav...@googlegroups.com
எனது ” மனத்துக்கு 34 வரி மடல் தயார்!”
நெறியாளர் அழைப்பு நோக்கிக்    காத்துள்ளேன்.

என் வி சுப்பராமன் 

On Thu, Jul 20, 2017 at 9:08 AM, ramaNi <sai...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (sai...@gmail.com) Add cleanup rule | More info

என்பெயரையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றி.
ரமணி

On Wednesday, July 19, 2017 at 11:25:40 PM UTC+5:30, கவிமாமணி wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Krishnan Parthasarathy

unread,
Jul 20, 2017, 4:08:01 AM7/20/17
to santhavasantham
I have done an important role in the Tamil film "Yentha Nerathilum" to be screened on 21 July.

Subbaraman NV

unread,
Jul 20, 2017, 4:21:22 AM7/20/17
to santhav...@googlegroups.com
Hearty congrats Shri KP.
N V Subbaraman

Vis Gop

unread,
Jul 20, 2017, 4:35:49 AM7/20/17
to santhav...@googlegroups.com
Congratulations, Paaki!
gopal.

2017-07-20 13:37 GMT+05:30 Krishnan Parthasarathy <paaki...@gmail.com>:

Subbaiyar Ramasami

unread,
Jul 20, 2017, 8:42:08 AM7/20/17
to santhav...@googlegroups.com
congrats.
 but posted in kaviyarangam thread. Please  post this in a separate thread so that kaviarangam postings do not get mixed up.

2017-07-20 13:37 GMT+05:30 Krishnan Parthasarathy <paaki...@gmail.com>:

Ashok Subramaniam

unread,
Jul 20, 2017, 2:04:46 PM7/20/17
to santhav...@googlegroups.com
மனதாலே எழுதுமடல் எத்தனையோ உண்டு
மனதாற எழுதுகின்ற மடல்சிலவும் உண்டு
மனமொப்பி சிலருக்கு எழுதுமடல் உண்டு
மனத்துக்கு ஒருமடலோ இனிமேல்தான் உண்டு..

அதனால், என்னுடைய பெயரையும் இலந்தையாரே தயைகூர்ந்து சேர்த்துக்கொள்ளவும்.. 

நன்றி நன்றி!

அன்பன்
அஷோக் சுப்ரமணியம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kaviyogi Vedham

unread,
Jul 20, 2017, 3:52:30 PM7/20/17
to santhavasantham
ஆகா அப்படிப்போடும் அஷோக்..
...
மன( த் )தாலே- எழுதுமடல் எத்தனையோ உண்டு
மனதாற எழுதுகின்ற மடல்சிலவும் உண்டு
மனமொப்பி சிலருக்கு எழுதுமடல் உண்டு
மனத்துக்கு ஒருமடலோ இனிமேல்தான் உண்டு..
.
 என்னதான் இந்த தலைப்புக்கு ஏற்றமாதிரி எழுதறதுன்னு
 என் வெள்ளை நரை--  மண்டையைக் கொஞ்சம் கசக்கி விட்டுக்கொண்டிருந்தேன். சில முடிகள் உதிர்ந்தபின் இதோ
 அஷோக் சட்டுன வந்து அடி யெடுத்துக்கொடுத்தாயிற்று.
 இனி பின்னிப்பிடுவம்.. சரியா?
 யோகியார்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கதிருக்குப் பரித்தேர் போன்றும்,
.. கனலுக்குக் கரித்துண் டெனவும்
முதிர்கன்னி க்குத் தாலி போன்றும்  
 ...முளைஎடுத்துக் கொடுத்தார்காண்!
.
 இனி வளரத் தடையுண்டோ?
 
Ashok Subramaniam

unread,
Jul 20, 2017, 8:25:22 PM7/20/17
to santhav...@googlegroups.com
அடியேன் பாக்கியம் யோகியாரே...! அணியாக இல்லாவிட்டாலும், அணிலாகவாவது இருக்க  முடிந்தமைக்கு :)

நவம்பர் 5ம் தேதி வாக்கில், டொரோண்டோ வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்... 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Chandar Subramanian

unread,
Jul 20, 2017, 11:39:36 PM7/20/17
to santhavasantham
வணக்கம். என் பெயரையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Thanks
Chandar Subramanian

Subbaiyar Ramasami

unread,
Jul 21, 2017, 10:25:23 AM7/21/17
to santhav...@googlegroups.com
இதுவரை பெயர் கொடுத்துள்ளவர்கள்

1- இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக்  சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
 7 இரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 21, 2017, 1:33:00 PM7/21/17
to சந்தவசந்தம்
இன்னும் என் மனத்துக்குச் சொல்ல ஒரு செய்தியும் உருவாகவில்லை (சொன்னாலும் அது கேட்காது என்பது வேறு விஷயம்!). தாமதத்திற்கு மன்னிக்கவும்.

அனந்த்

-- 

Ramamoorthy Ramachandran

unread,
Jul 21, 2017, 11:07:46 PM7/21/17
to santhav...@googlegroups.com
என் மனத்துக்கு நானே மடலெழுதும் அளவுக்கு அந்நியமாகும் கற்பனையில் நானும் கலந்து கொள்கிறேன்! 
அன்புடன் புலவர் இராமமூர்த்தி  

--

Siva Siva

unread,
Jul 22, 2017, 2:14:15 PM7/22/17
to santhavasantham
இதன் வரிசை எண் 3?

என் பெயரையும் சேர்த்துக்கொள்க.

2017-07-19 13:55 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Narayan Swaminathan

unread,
Jul 22, 2017, 4:31:31 PM7/22/17
to santhav...@googlegroups.com
அன்பின் இலந்தையார் :
  என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சுவாமிநாதன்

--

Vis Gop

unread,
Jul 23, 2017, 12:00:15 AM7/23/17
to santhav...@googlegroups.com

என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கோபால்.

Kalam Kader

unread,
Jul 23, 2017, 6:35:01 AM7/23/17
to santhav...@googlegroups.com
அடியேனும் கலந்து கொள்கிறேன் ஐயா

Subbaiyar Ramasami

unread,
Jul 23, 2017, 6:57:08 PM7/23/17
to santhav...@googlegroups.com

இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக்  சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
 7 இரமணி- இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக்  சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
 7 இரமணி் 
88  சிவசிவா
9  புலவர்
10 எல்லே சுவாமிநாதன்
11, கலாம்
12  வி.எஸ் கோபால்

Vis Gop

unread,
Jul 23, 2017, 11:10:43 PM7/23/17
to santhav...@googlegroups.com

'வி எஸ் கோபால்' என்னை க் குறிக்குமானால் 'கோபால்' என்று மாற்ற வேண்டுகிறேன்.

1 இலந்தை

2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக்  சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி

7 இரமணி் 

8  சிவசிவா
9  புலவர்
10 எல்லே சுவாமிநாதன்

11 கலாம்
12  கோபால்

pushpa christy

unread,
Jul 24, 2017, 3:33:19 PM7/24/17
to santhav...@googlegroups.com

    நானும் வருகிரறேன் ஐயா. புஷ்பா

On Jul 23, 2017 11:24 PM, "Vis Gop" <vis...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (vis...@gmail.com) Add cleanup rule | More info

'வி எஸ் கோபால்' என்னை க் குறிக்குமானால் 'கோபால்' என்று மாற்ற வேண்டுகிறேன்.

1 இலந்தை

2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக்  சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி

7 இரமணி் 

8  சிவசிவா
9  புலவர்
10 எல்லே சுவாமிநாதன்

11 கலாம்
12  கோபால்

Subbaiyar Ramasami

unread,
Jul 27, 2017, 12:43:16 PM7/27/17
to santhav...@googlegroups.com
இதுவரை பெயர் கொடுத்தவர்கள்.

1 இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக்  சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
7 இரமணி் 
8  சிவசிவா
9  புலவர்
10 எல்லே சுவாமிநாதன்
11 கலாம்
12  கோபால்
13 புஷ்பா கிறிஸ்டி

கவிதையரங்கம் 3   தொடங்கும் நாள்:1-8-2017

கவிதைவழங்கும் வரிசை
ஆகஸ்ட் 1 முதல் 6 வரை

கவிஞர்கள்:

1-  சிவ சிவா
 2 -  சுப்பராமன்
 3  புலவர்
 4 ரமணி
5 விவேக் பாரதி

ஆகஸ்ட் 8 முதல் 14 வரை

கவிஞர்கள்
1 கோபால்
2 சகோதரி புஷ்பா கிறிஷ்டி
3 அஷோக் சுப்ரமணியம்
4 சந்தர் சுப்ரமணியம்
5 கலாம்

ஆகஸ்ட் 16 முதல் 23 வரை

1 இலந்தை
2 கவியோகி
3 எல்லே சுவாமிநாதன்
மேற்கொண்டு கலந்துகொள்ள விரும்புகிறவர்கள்.

இலந்தை.

விவேக் பாரதி

unread,
Jul 28, 2017, 1:38:51 AM7/28/17
to santhav...@googlegroups.com
ஆஹா ! நல்லது ! என் மனதுக்காக மடல் தயாராகி விட்டது. 5ஆந் தேதிக்குக் காத்திருக்கிறேன்.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9750588007

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 28, 2017, 5:37:56 PM7/28/17
to சந்தவசந்தம்
என் பெயரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்..

அனந்த்

Subbaiyar Ramasami

unread,
Jul 30, 2017, 11:36:14 AM7/30/17
to santhav...@googlegroups.com

கவிதை அரங்கம்-  3- மனத்துக்கு ஒரு மடல்

நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்

மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்

என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்துக  வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்

மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?

தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?

புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!

இலந்தை

--

Subbaiyar Ramasami

unread,
Jul 30, 2017, 11:37:28 AM7/30/17
to santhav...@googlegroups.com
முதல் பட்டியலில் இருப்பவர்கள் 1முதல் 6 வரை எந்தத் தேதியிலும் கவிதை இடலாம். 

Subbaiyar Ramasami

unread,
Jul 30, 2017, 11:39:26 AM7/30/17
to santhav...@googlegroups.com

கவிதை அரங்கம்-  3- மனத்துக்கு ஒரு மடல்

நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்

மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்

என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு

முன்பெடுத்து  வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்

மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?

தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?

புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!

Subbaiyar Ramasami

unread,
Jul 30, 2017, 11:51:42 AM7/30/17

Jul 31, 2017, 8:08:10 PM7/31/17
to santhav...@googlegroups.com
சந்தவசந்தம் மாதக் கவியரங்கம் Aug 2017
தலைப்பு: மனத்துக்கு ஒரு மடல்
நெறியாளர்: கவிமாமணி இலந்தையார்
பங்கேற்பு: ரமணி

காப்பு
(நேரிசை வெண்பா)

என்மனம் என்னுள்ளா என்மனத் துள்நானா
இன்முகம் காட்டியருள் ஏரம்ப! - பொன்னைப்
புடம்போட்டுக் கொள்ளும் புனிதமாய் என்பா
விடைநின்று நீக்கு விடர்.

நெறியாளர் வாழ்த்து
(இன்னிசை வெண்பா)

என்றும் இனிமை இளமை ததும்பவே
பொன்நிகர்ப் பாக்கள் பொலிவுறச் சொல்லும்
இலந்தை இராமர் எடுத்தும் தொடுத்தும்
வலம்படச் செய்பா வளம்.

அவையடக்கம்
(இன்னிசை வெண்பா)

சான்றோர்கள் வாழும் சபையிலே நானொரு
ஆன்றவிந்தான் இல்லையென் றாகிலும் - தோன்றியதைப்
பாடலில் தந்தேன் படித்தே நிறைகுறை
ஓடுவதைச் சொல்வீர் உடன்.

***
மனத்துக்கு ஒரு மடல்
(முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

என்மனத்தை நானாள்வ தாகுமா - அன்றி
. என்னைமனம் ஆள்வதெனும் மோகமா?
என்றெண்ணிச் செய்தேனிம் மின்மடல் - அதற்(கு)
. என்மனமும் சொல்வதாயு டன்பதில்! ... 1

இணையத்தில் பேச்செனவே இம்மடல் - அதை 
. ஏற்கமனம் தந்ததுவே சம்மதம்
துணையாகும் என்மனத்தின் மூலமே - நான்
. தொலைத்ததனைக் காணுகின்ற கோலமே! ... 2

இனி நானும் என் மனமும் இணையப் பேச்சில்.

நான்:
இன்றென்ன செய்வதெனக் காலையில் - உன்
. எண்ணங்கள் எத்தனையோ வேலையில்!
என்னென்ன வோதிட்டம் உள்ளெழும் - பாதி
. இங்கொன்றும் அங்கொன்றும் மாய்விழும்! ... 3

மனம்:
ஆற்றொருகால் சேற்றொருகால் ஆகவே - நீர்
. ஆவதனால் என்னுள்ளே தாகமே!
நேற்றின்று நாளையெனும் வாழ்விலே - நீர்
. நேர்வதனைக் கற்றறியாத் தாழ்விலே! ... 4

இனி நானும் மனமும் அடுத்தடுத்து:

மூவகையாம் கூறுகொளும் உள்ளமே - உன்னுள்
. மொழியாரும் வண்ணத்தின் வெள்ளமே!
தாவுவதில் மந்தியுன்னை விஞ்சுமோ? - உன்றன்
. தாக்கத்தில் நானுள்ளே துஞ்சுவேன்! ... 5

சித்தமனம் கண்டதெல்லாம் செல்வமாய் - என்னுள்
. சேர்வதையென் செய்கைமனம் கொள்ளுமே
புத்திமனம் சொல்வதைநீர் கேட்டிலை - என்றால் 
. போவதெவண் ஆன்மீகத் தேட்டிலே? ... 6

புலனைந்தும் கட்டாதே உள்ளமே - என்னைப் 
. புறந்தள்ளிக் காண்பதுன்றன் கள்ளமே!
நிலையொன்றாம் கண்விழிப்பில் எண்ணமாய் - உள்ளே
. நிற்பதெலாம் மாயையதன் வண்ணமே! ... 7

கண்ணுக்குக் கடிவாளம் ஒட்டவோ - நின்று
. கழுமுனையில் மூச்சைநீர் கட்டினால்
எண்ணமற என்னைநீர் ஆளுவீர் - அங்கே
. எழுவெள்ளத் தானந்தம் சூழவே. ... 8

கனவுலகில் நானலையும் தூக்கமே - எனைக்
. கண்டபடி அச்சுறுத்தும் சூக்கமே
நனவுலகில் எளியேனாம் யத்தனம் - இங்கோ
. நாயென்றே நானலையும் மத்தனம்! ... 9

முன்வினையே அவ்வுலகில் முந்துறும் - உமது
. முடிவிலாத ஆசைகளும் வந்துறும்
சென்மவினை கனவுகளில் பொன்றுமே - புதிதாய்ச்
. சேருவினை கொஞ்சமெனக் குன்றுமே. ... 10

ஆழ்தூக்கத் தானந்தம் இல்லையே - உன்றன்
. ஆற்றலிலே நேர்வதெலாம் தொல்லையே
வாழ்வறமே மாயயென வானதோ - அதன்
. மருளுறவே ஆன்மவொளி போனதோ? ... 11

கர்மபக்தி ஞானயோகம் மூவகை - மாந்தர்
. காணுகின்ற பக்தியோகம் பாவகை
அர்த்ததான காமமுக்தி நால்வகை - உம்மை
. ஆளுவதோ பொங்கியெழும் தால்வகை! ... 12

அர்த்தநாரி ஈசராக ஒன்றினோம் - உன்றன்
. ஆற்றலினால் உள்ளேநான் குன்றினன்
நர்த்தனத்தை நீயாடும் சூழலில் - அங்கே
. நானமர வேண்டுமர நீழலில். ... 13

நாரியவள் நாடுபல நாடவே - அந்த
. நாயகனின் லீலைகளும் ஓடுமே!
நாரியென்னை நீர்விடுவ தாகுமோ - இம்மை
. நல்லறத்தில் நாமொன்றாய் ஏகுவோம்! ... 14

புத்திமன சாட்சியினால் உள்ளமே - நம்முள்
. புன்மையெலாம் ஆய்ந்தவற்றைத் தள்ளுவம்
சத்திசிவன் போலநாமும் வாழ்வினில் - சுத்த
. சைதனியம் காணுநெறி ஆழ்வமே. ... 15

இருவரும்:
(நாற்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

சத்தியத்தின் நித்தியத்தின் வித்தறி வோமே - சேர்ந்தே
எத்தனித்து மெத்தனத்தின் வித்தறுப் போமே
சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே - நாம்
இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே! ... 16

சில குறிப்புகள்:
செய்யுள் 2. இணையத்தின் பேச்சு = IRC: Internet Relay Chat

செய்யுள் 5. 
மனத்தின் கூறுகள் மூவகை: சித்தம் = நினைவுகளைச் சேமித்துவைக்கும் கூறு;
புத்தி = பகுத்தறிந்து நன்மை-தீமை சொல்லும் கூறு; 
செய்கைமனம் = எண்ணைத்தைச் சொல்லாகவோ செயலாகவோ விளைக்கும் கூறு.
இவை தவிர நாலாவது கூறாகும் அகங்காரம் என்பதும் மனத்தின் உணர்வுதான்.

செய்யுள் 10. 
நனவில் நிறைவேறாத எண்ணங்கள், அதீத ஆசைகள் கனவில் உருவெடுக்கும்.
சில கனவுகள் முன்வினையின் விளைவென்றும் சொல்வர். நம் கனவுச் செயல்கள்
இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர். உறுதினான உள்ளுணர்வுடன்
கனவுகளை ஆளமுடியும். இப்படி நம் வசத்தில் ஆளும் கனவுகள், 
lucid dreams என்று அழைக்கப்படுகின்றன.

செய்யுள் 11. ஆழ்தூக்கம் = அது உணர்வற்றதானால், சுஷுப்தி நிலை; 
ஆனந்த உணர்வானால் துரீய நிலை.

செய்யுள் 12. தால்வகை = நாவால் எழும் வகை.’

செய்யுள் 16. 
சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே = 
சித்தம் உரைத்துப்பார்த்து, எழும் கேள்விகளுக்கு அத்வைதத்தின் விடைகளால்

இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே = 
இவ்வுலகை ஆளும் மாயையின் தந்திரம் (லன்க்=என்க்>த்ரிச்க்ச்) ஆரிவோமே.

--ரமணி, 31/07/2017, கலி.15/04/5118

*****

Subbaraman NV

unread,
Jul 31, 2017, 8:16:49 PM7/31/17
to santhav...@googlegroups.com

சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017

மனத்துக்கு ஒரு மடல்!

வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்

தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்

தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே

நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே

எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை

ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே!       6

கவிபடைக்கும் திறன் படைத்த கவிஞர்களே!  

கவியரங்கில் பாப்புனையக் காத்திருக்கும் புலவர்களே!

மகிழ்ச்சியிலே திளைத்து நிற்கும் பெரியோர்களே

புகழ்ச்சிதனை நோக்காது பங்கேற்கும் வணக்கமிது!            10

மனம் எங்கே உள்ளதெனத் தேடி நின்றேன்

முகவரியும் தெரியாமல் முயற்சி செய்தேன்

தூதஞ்சல் அலுவலகம் சென்று கேட்டேன்

வாதமெதுஞ்செய்யாமல் எனைத் திருப்பி விட்டார்!             14

நாவுக்கரசர் சுட்டிக் காட்டினார் சுகந்தரும் திசைதனையே

பாவுக்கரசர் அவர்- நன் மனம் எனும் தோணி கண்டார்

அத்தோணியை நானும் பற்றி ஒரு மடல்

எழுதக் காண்பீர் எழுதியதைப் படிக்கக் கேட்பீர்!             18

”மனமே! என்னை உனக் கடிமையாக்கு என்

உடலை உந்தனுக்கே அடிமை யாக்கு

நீ காட்டும் தோணியிலே செல்லத்தூண்டு

நிலை கெட்டுப் போகாமல், எனை நீயும் வாழவிடு!         22

நல்லவற்றை என் கண்கள் பார்த்திடட்டும்

அல்லவற்றை என் செவிகள் கேளாது ஒழித்திடட்டும்

தீயவற்றை பேசாது என்நாவும் பழகிடட்டும்

தூய காற்றை ஏற்று என்நாசி செழித்திடட்டும்!       26

மனமே! காற்றடிக்கும் திசையெல்லாம் நீ மாறாதே

தினமே பாக்களைப் பாடவிடு, பூக்களை அவனுக்குச் சாத்தவிடு 

 றைப்பற்றை என்றென்றும் வளர்த்துவிடு  

மறைகள் காட்டும் பாதையிலே போகவிடு!”

போதுமென்று அடக்குமுன்னே அடங்கிடுவேன்

வேதம் தந்த வழியினிலே நானும் அமர்ந்திடுவேன்

அனைவருக்கும் நன்றி கூறி! அடுத்த அழைப்பிற்கு

அமைதியோடு காத்து நிற்பேன் அனைவரின் கவிதைஇரசித்து! 34

 நன்றி

வணக்கம்.

On Sun, Jul 30, 2017 at 9:21 PM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kavim...@gmail.com) Add cleanup rule | More info

கவிதை அரங்கம்-  3- மனத்துக்கு ஒரு மடல்

நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்

மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்

என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு

முன்பெடுத்து  வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்

மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?

தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?

புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!

2017-07-30 10:37 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
முதல் பட்டியலில் இருப்பவர்கள் 1முதல் 6 வரை எந்தத் தேதியிலும் கவிதை இடலாம். 

2017-07-30 10:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaraman NV

unread,
Jul 31, 2017, 8:18:07 PM7/31/17
to santhav...@googlegroups.com
arumai  Ramani.
N V Subbaraman

*** 
சில குறிப்புகள்:
செய்யுள் 2. இணையத்தின் பேச்சு = IRC: Internet Relay Chat

செய்யுள் 5. 
மனத்தின் கூறுகள் மூவகை: சித்தம் = நினைவுகளைச் சேமித்துவைக்கும் கூறு;
புத்தி = பகுத்தறிந்து நன்மை-தீமை சொல்லும் கூறு; 
செய்கைமனம் = எண்ணைத்தைச் சொல்லாகவோ செயலாகவோ விளைக்கும் கூறு.
இவை தவிர நாலாவது கூறாகும் அகங்காரம் என்பதும் மனத்தின் உணர்வுதான்.

செய்யுள் 10. 
நனவில் நிறைவேறாத எண்ணங்கள், அதீத ஆசைகள் கனவில் உருவெடுக்கும்.
சில கனவுகள் முன்வினையின் விளைவென்றும் சொல்வர். நம் கனவுச் செயல்கள்
இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர். உறுதினான உள்ளுணர்வுடன்
கனவுகளை ஆளமுடியும். இப்படி நம் வசத்தில் ஆளும் கனவுகள், 
lucid dreams என்று அழைக்கப்படுகின்றன.

செய்யுள் 11. ஆழ்தூக்கம் = அது உணர்வற்றதானால், சுஷுப்தி நிலை; 
ஆனந்த உணர்வானால் துரீய நிலை.

செய்யுள் 12. தால்வகை = நாவால் எழும் வகை.’

செய்யுள் 16. 
சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே = 
சித்தம் உரைத்துப்பார்த்து, எழும் கேள்விகளுக்கு அத்வைதத்தின் விடைகளால்

இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே = 
இவ்வுலகை ஆளும் மாயையின் தந்திரம் (லன்க்=என்க்>த்ரிச்க்ச்) ஆரிவோமே.

--ரமணி, 31/07/2017, கலி.15/04/5118

*****

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Jul 31, 2017, 9:00:44 PM7/31/17
to சந்தவசந்தம்
உங்கள் பாடல் அழகு, சுப்பராமன் ஸார்! மனத்தை வேண்டுவதில்தான் நாம் ஆன்மசாதனையில் அதன் குறுக்கீடின்றி முன்னேறலாம் என்று சுட்டியது உண்மையே.
ரமணி

Subbaraman NV

unread,
Jul 31, 2017, 10:19:15 PM7/31/17
to santhav...@googlegroups.com
Thanks Ramani for your kind feedback.
N V Subbaraman
(Tamil font  is on strike!!!!!)

On Tue, Aug 1, 2017 at 6:30 AM, ramaNi <sai...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (sai...@gmail.com) Add cleanup rule | More info

உங்கள் பாடல் அழகு, சுப்பராமன் ஸார்! மனத்தை வேண்டுவதில்தான் நாம் ஆன்மசாதனையில் அதன் குறுக்கீடின்றி முன்னேறலாம் என்று சுட்டியது உண்மையே.
ரமணி

On Tuesday, August 1, 2017 at 5:46:49 AM UTC+5:30, NVSR wrote:

சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017

மனத்துக்கு ஒரு மடல்!

வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்

தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்

தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே

நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே

எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை

ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே!       6

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaraman NV

unread,
Jul 31, 2017, 10:25:33 PM7/31/17
to santhav...@googlegroups.com
enathu idukaiyil  31aam variyil muthal ezuththu  "i" "iraippatru" enak koLLa vaeNdum..
N V Subbaraman
(Tamil font on strike!!!!!!!) 

Kaviyogi Vedham

unread,
Jul 31, 2017, 10:31:04 PM7/31/17
to santhavasantham

நல்லவற்றை என் கண்கள் பார்த்திடட்டும்

அல்லவற்றை என் செவிகள் கேளாது ஒழித்திடட்டும்

தீயவற்றை பேசாது என்நாவும் பழகிடட்டும்

தூய காற்றை ஏற்று என்நாசி செழித்திடட்டும்!    

...

 அருமை.. இந்தத் தூய நெறி தழைத்தால் ஒரு சமுதாயமே செழிக்குமே.

 வாழ்க கவி..!,

 யோகியார்

Subbaraman NV

unread,
Jul 31, 2017, 11:14:02 PM7/31/17
to santhav...@googlegroups.com
நன்றி யோகியார் அவர்களே.
என் வி சுப்பராமன்.

M. Viswanathan

unread,
Jul 31, 2017, 11:59:18 PM7/31/17
to Santhavasantham
அன்புமிக்க கவிமாமணி இலந்தையார் அவர்களுக்கு,
வணக்கம்.
எனது பெயரை 20.07.2017 அன்றே கொடுத்திருந்தேன். இந்த இழையின் முதலில் அது இருக்கிறது. ஏனோ விடுபட்டிருக்கிறது. அடியேன் பெயரை இறுதிச் சுற்றில் கொள்ளவும். நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்

M. Viswanathan

unread,
Aug 1, 2017, 12:13:30 AM8/1/17
to Santhavasantham
கவிஞர்கள் ரமணி, சுபாராமன் கவிதைகள் கவியரங்கத்துவக்கத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.

"சித்தமனம் கண்டதெல்லாம் செல்வமாய் - என்னுள்
. சேர்வதையென் செய்கைமனம் கொள்ளுமே
புத்திமனம் சொல்வதைநீர் கேட்டிலை - என்றால் 
. போவதெவண் ஆன்மீகத் தேட்டிலே? ... 6

புலனைந்தும் கட்டாதே உள்ளமே - என்னைப் 
. புறந்தள்ளிக் காண்பதுன்றன் கள்ளமே!
நிலையொன்றாம் கண்விழிப்பில் எண்ணமாய் - உள்ளே
. நிற்பதெலாம் மாயையதன் வண்ணமே! .."  ரமணியின்  அருமையான கருத்துத்துள்ள வரிகள்.. 

பெரியோர்கள் மனத்திற்கு அடிமையாகாதே என்பார்கள். கவிஞர் சுபாராமன் அவர்களோ தன்னை மனத்திற்கு அடிமையாக வேண்டிக் கொள்கிறார். நல்ல துணிச்சலான வரிகள். 

"”மனமே! என்னை உனக் கடிமையாக்கு என்

உடலை உந்தனுக்கே அடிமை யாக்கு

நீ காட்டும் தோணியிலே செல்லத்தூண்டு

நிலை கெட்டுப் போகாமல், எனை நீயும் வாழவிடு! "   

அன்பன்,

மீ.வி.

Subbaraman NV

unread,
Aug 1, 2017, 12:23:19 AM8/1/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி  மீ.வி.
என் வி சுப்பராமன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Aug 1, 2017, 12:27:32 AM8/1/17
to சந்தவசந்தம்
Thanks for your appreciation Sir.
ramaNi

ramaNi

unread,
Aug 1, 2017, 12:28:32 AM8/1/17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி விசு.
ரமணி

On Tuesday, August 1, 2017 at 9:43:30 AM UTC+5:30, meev1955 wrote:
கவிஞர்கள் ரமணி, சுபாராமன் கவிதைகள் கவியரங்கத்துவக்கத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.

"சித்தமனம் கண்டதெல்லாம் செல்வமாய் - என்னுள்
. சேர்வதையென் செய்கைமனம் கொள்ளுமே
புத்திமனம் சொல்வதைநீர் கேட்டிலை - என்றால் 
. போவதெவண் ஆன்மீகத் தேட்டிலே? ... 6

புலனைந்தும் கட்டாதே உள்ளமே - என்னைப் 
. புறந்தள்ளிக் காண்பதுன்றன் கள்ளமே!
நிலையொன்றாம் கண்விழிப்பில் எண்ணமாய் - உள்ளே
. நிற்பதெலாம் மாயையதன் வண்ணமே! .."  ரமணியின்  அருமையான கருத்துத்துள்ள வரிகள்.. 

Subbaiyar Ramasami

unread,
Aug 1, 2017, 7:25:46 AM8/1/17
to santhav...@googlegroups.com
என்மனத்தை நானாள்வ தாகுமா - அன்றி
. என்னைமனம் ஆள்வதெனும் மோகமா?

மிக அருமை

2017-07-31 20:08 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
சந்தவசந்தம் மாதக் கவியரங்கம் Aug 2017
தலைப்பு: மனத்துக்கு ஒரு மடல்
.

Subbaiyar Ramasami

unread,
Aug 1, 2017, 7:30:45 AM8/1/17
to santhav...@googlegroups.com
நல்லன கேட்கவும் டஅல்லன தள்ளவும்
அடக்க வேண் டியதற்குள் அடங்கிப் போகவும்
சொன்ன கவிதை சுகமாய் ஆனது

இலந்தை

2017-07-31 20:16 GMT-04:00 Subbaraman NV <nvsubb...@gmail.com>:

ramaNi

unread,
Aug 1, 2017, 8:40:22 AM8/1/17
to சந்தவசந்தம்
தலைவருக்கு மிக்க நன்றி.
ரமணி

Siva Siva

unread,
Aug 1, 2017, 8:49:59 AM8/1/17
to santhavasantham
தத்துவப் பாட்டு! வாழ்க!

2017-07-31 20:08 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
சந்தவசந்தம் மாதக் கவியரங்கம் Aug 2017
தலைப்பு: மனத்துக்கு ஒரு மடல்
நெறியாளர்: கவிமாமணி இலந்தையார்
பங்கேற்பு: ரமணி

காப்பு
(நேரிசை வெண்பா)

என்மனம் என்னுள்ளா என்மனத் துள்நானா
இன்முகம் காட்டியருள் ஏரம்ப! - பொன்னைப்
புடம்போட்டுக் கொள்ளும் புனிதமாய் என்பா
விடைநின்று நீக்கு விடர்.

--> விடர் = ?
 
நெறியாளர் வாழ்த்து
(இன்னிசை வெண்பா)

என்றும் இனிமை இளமை ததும்பவே
பொன்நிகர்ப் பாக்கள் பொலிவுறச் சொல்லும்
இலந்தை இராமர் எடுத்தும் தொடுத்தும்
வலம்படச் செய்பா வளம்.

அவையடக்கம்
(இன்னிசை வெண்பா)

சான்றோர்கள் வாழும் சபையிலே நானொரு
ஆன்றவிந்தான் இல்லையென் றாகிலும் - தோன்றியதைப்
பாடலில் தந்தேன் படித்தே நிறைகுறை
ஓடுவதைச் சொல்வீர் உடன்.

--> /ஆன்றவிந்தான் இல்லையென் றாகிலும்/ 
ஆன்றவிந் தான்அல்லேன் ஆயினும்?

***
மனத்துக்கு ஒரு மடல்
(முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

என்மனத்தை நானாள்வ தாகுமா - அன்றி
. என்னைமனம் ஆள்வதெனும் மோகமா?
என்றெண்ணிச் செய்தேனிம் மின்மடல் - அதற்(கு)
. என்மனமும் சொல்வதாயு டன்பதில்! ... 1

நல்லவினா.
--> /கழுமுனை/ 
சுழுமுனை?

கனவுலகில் நானலையும் தூக்கமே - எனைக்
. கண்டபடி அச்சுறுத்தும் சூக்கமே
நனவுலகில் எளியேனாம் யத்தனம் - இங்கோ
. நாயென்றே நானலையும் மத்தனம்! ... 9

--> /மத்தனம்/ = ?

முன்வினையே அவ்வுலகில் முந்துறும் - உமது
. முடிவிலாத ஆசைகளும் வந்துறும்
சென்மவினை கனவுகளில் பொன்றுமே - புதிதாய்ச்
. சேருவினை கொஞ்சமெனக் குன்றுமே. ... 10

--> /சென்மவினை கனவுகளில் பொன்றுமே/  = ?

--> /சேருவினை/
சேர்வினை? சேரும்வினை?

ஆழ்தூக்கத் தானந்தம் இல்லையே - உன்றன்
. ஆற்றலிலே நேர்வதெலாம் தொல்லையே
வாழ்வறமே மாயயென வானதோ - அதன்
. மருளுறவே ஆன்மவொளி போனதோ? ... 11

கர்மபக்தி ஞானயோகம் மூவகை - மாந்தர்
. காணுகின்ற பக்தியோகம் பாவகை
அர்த்ததான காமமுக்தி நால்வகை - உம்மை
. ஆளுவதோ பொங்கியெழும் தால்வகை! ... 12

--> /அர்த்ததான காமமுக்தி நால்வகை/  = ?

அர்த்தநாரி ஈசராக ஒன்றினோம் - உன்றன்
. ஆற்றலினால் உள்ளேநான் குன்றினன்
நர்த்தனத்தை நீயாடும் சூழலில் - அங்கே
. நானமர வேண்டுமர நீழலில். ... 13

நாரியவள் நாடுபல நாடவே - அந்த
. நாயகனின் லீலைகளும் ஓடுமே!
நாரியென்னை நீர்விடுவ தாகுமோ - இம்மை
. நல்லறத்தில் நாமொன்றாய் ஏகுவோம்! ... 14

புத்திமன சாட்சியினால் உள்ளமே - நம்முள்
. புன்மையெலாம் ஆய்ந்தவற்றைத் தள்ளுவம்
சத்திசிவன் போலநாமும் வாழ்வினில் - சுத்த
. சைதனியம் காணுநெறி ஆழ்வமே. ... 15

இருவரும்:
(நாற்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

சத்தியத்தின் நித்தியத்தின் வித்தறி வோமே - சேர்ந்தே
எத்தனித்து மெத்தனத்தின் வித்தறுப் போமே
சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே - நாம்
இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே! ... 16

*** 
சில குறிப்புகள்:
செய்யுள் 2. இணையத்தின் பேச்சு = IRC: Internet Relay Chat

செய்யுள் 5. 
மனத்தின் கூறுகள் மூவகை: சித்தம் = நினைவுகளைச் சேமித்துவைக்கும் கூறு;
புத்தி = பகுத்தறிந்து நன்மை-தீமை சொல்லும் கூறு; 
செய்கைமனம் = எண்ணைத்தைச் சொல்லாகவோ செயலாகவோ விளைக்கும் கூறு.
இவை தவிர நாலாவது கூறாகும் அகங்காரம் என்பதும் மனத்தின் உணர்வுதான்.

செய்யுள் 10. 
நனவில் நிறைவேறாத எண்ணங்கள், அதீத ஆசைகள் கனவில் உருவெடுக்கும்.
சில கனவுகள் முன்வினையின் விளைவென்றும் சொல்வர். நம் கனவுச் செயல்கள்
இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர். உறுதினான உள்ளுணர்வுடன்
கனவுகளை ஆளமுடியும். இப்படி நம் வசத்தில் ஆளும் கனவுகள், 
lucid dreams என்று அழைக்கப்படுகின்றன.

--> /நம் கனவுச் செயல்கள் இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர்./ 
மனம் வாக்கு காயம் இம்மூன்றாலும் புண்ணியம் பாவம் வரும். 
ஆனால கனவால் புண்ணியம் பாவம் வருமா? கனவுகள் மூலம் வினை குறையுமா?

செய்யுள் 11. ஆழ்தூக்கம் = அது உணர்வற்றதானால், சுஷுப்தி நிலை; 
ஆனந்த உணர்வானால் துரீய நிலை.

செய்யுள் 12. தால்வகை = நாவால் எழும் வகை.’

செய்யுள் 16. 
சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே = 
சித்தம் உரைத்துப்பார்த்து, எழும் கேள்விகளுக்கு அத்வைதத்தின் விடைகளால்

இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே = 
இவ்வுலகை ஆளும் மாயையின் தந்திரம் (லன்க்=என்க்>த்ரிச்க்ச்) ஆரிவோமே.

--ரமணி, 31/07/2017, கலி.15/04/5118

*****

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
Aug 1, 2017, 8:56:03 AM8/1/17
to santhavasantham
2017-07-31 20:16 GMT-04:00 Subbaraman NV <nvsubb...@gmail.com>:

சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017

மனத்துக்கு ஒரு மடல்!

வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்

தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்

தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே

நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே

எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை

ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே!       6

கவிபடைக்கும் திறன் படைத்த கவிஞர்களே!  

கவியரங்கில் பாப்புனையக் காத்திருக்கும் புலவர்களே!

மகிழ்ச்சியிலே திளைத்து நிற்கும் பெரியோர்களே

புகழ்ச்சிதனை நோக்காது பங்கேற்கும் வணக்கமிது!            10

மனம் எங்கே உள்ளதெனத் தேடி நின்றேன்

முகவரியும் தெரியாமல் முயற்சி செய்தேன்

தூதஞ்சல் அலுவலகம் சென்று கேட்டேன்

வாதமெதுஞ்செய்யாமல் எனைத் திருப்பி விட்டார்!             14

நாவுக்கரசர் சுட்டிக் காட்டினார் சுகந்தரும் திசைதனையே

பாவுக்கரசர் அவர்- நன் மனம் எனும் தோணி கண்டார்

அத்தோணியை நானும் பற்றி ஒரு மடல்

எழுதக் காண்பீர் எழுதியதைப் படிக்கக் கேட்பீர்!             18

--> "மனமெனும் தோணி பற்றி மடலெனும் கோலை ஊன்றித்
தினமொரு பாட்டி யற்றிச் செப்பிட வந்தேன் கேளீர்!"   என்றீர்! வாழ்க!

அவனடிமை

unread,
Aug 1, 2017, 11:34:58 AM8/1/17
to சந்தவசந்தம்
கவிவேழம் ஐயாவின் வரவேற்புக் கவிதையே கவிதை அரங்கத்தில் வரவிருக்கிற தமிழமுத பாக்களுக்கு ஒரு செம ’ட்ரெய்லர்’, ’டீசர்’ ஆக இருப்பது போல் எதிர்பார்ப்பை உண்டுபண்ணுகிறது.
//மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்//
//மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?//
//புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே// - ஆஹா, என்ன ஒரு சொல்லாடல், ஓசை நயம்... பிரமாதம் :-)

விவேக் பாரதி

unread,
Aug 1, 2017, 11:44:27 AM8/1/17
to santhav...@googlegroups.com
ஆஹா ஆஹா ! இலந்தை ஐயாவின் தலைமைக் கவிதை எனக்கு எப்போதும் நினைவூட்டுவது ஒன்றே ஒன்றுதான். அரங்கத் தலைவராக வருபவர் கொடுக்கும் தலைப்பிற்கு மற்றவர்கள் என்னவெல்லாம் பாட எடுத்துக் கொண்டாரோ அத்தனையும் தானே கூறிவிட வேண்டும் என்பதே ! மிகப் பிரமாதம். முதலில் பதிந்த ரமணி ஐயாவின் கவிரை அபாரம். அலசிக் கடைந்து கொடுக்கிறார். மிக்க நன்றி ஐயா. இரண்டாவதாக பதிந்த சுப்பராமன் ஐயாவின் மடல் மனத்திற்கு அனைவரும் இடும் கட்டளையாகக் கொள்ளலாம் அவ்வளவு உண்மையான வெளிப்பாடு. மிக்க நன்றி ஐயா ! சிறிய வேலை வெளியில் தங்கியுள்ளேன். படிக்கவே நேரம் கிடைத்தது. என் மடல் வீட்டுக் கணினியில். நாளை பதிகிறேன். நன்றி !

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9750588007

அவனடிமை

unread,
Aug 1, 2017, 11:46:43 AM8/1/17
to சந்தவசந்தம்
இரமணி சார், கலக்கிட்டீங்க போங்க. ஓபனின் பாட்ஸ்மேன், பிட்சுக்கு வந்த ஒருமணியிலேயே ஒரு செஞ்சுரி போட்ட மாதிரி இருக்கு..

//என்பா
விடைநின்று நீக்கு விடர்.//
ஹஹா ஹா, செம, செம...
என்ன ஒரு கற்பனை!
பா இவர் (’என்’பா) எழுதுவாராம், இடையில ’அவர்’ இருந்து இடர் எல்லாத்தையும் நீக்கணுமாம். இறைக்கு மொழி, உணர்ச்சி முதலியவை உண்டென்றால், இந்த அழகு சொற்சேர்க்கைக்காகவே வந்து நிப்பாரில்ல.... ;-)

//

என்றும் இனிமை இளமை ததும்பவே
பொன்நிகர்ப் பாக்கள் பொலிவுறச் சொல்லும்
// - very clever, ஃப்ரெஞ்சு தாடி தலைவர் இளமை-ங்கறாரா, இல்லை அவர் சொல்லற பாக்களை இளமை-ன்னு சொல்லறாரான்னு எப்படி வேணும்னாலும் எடுத்துக்கற மாதிரி ஒரு பாராட்டு; நெறியாளர் வாழ்த்தேதான் ;-)

பாக்கி பாவுக்கு மறுமொழி அப்புறம், கொஞ்சம் வேலையையும் கவனிக்கறேன்..... ;-)

அவனடிமை

unread,
Aug 1, 2017, 6:13:29 PM8/1/17
to சந்தவசந்தம்
//நானொரு ஆன்றவிந்தான் // - புணர்ச்சியில் தளை விதி உடையுமோ?
//
என்னென்ன வோதிட்டம் உள்ளெழும் - பாதி
. இங்கொன்றும் அங்கொன்றும் மாய்விழும்! // - mind spread too thin என்பதை அழகாக பாடும் வரிகள்

//
மூவகையாம் கூறுகொளும் உள்ளமே - உன்னுள்
. மொழியாரும் வண்ணத்தின் வெள்ளமே!
தாவுவதில் மந்தியுன்னை விஞ்சுமோ? - உன்றன்
. தாக்கத்தில் நானுள்ளே துஞ்சுவேன்! ... 5
// - மனத்தின் வெவ்வேறு வகையான தொழிற்படல் நான்கு விதமாக அழைக்கபடுவதாக படித்திருக்கிறேன் - சங்கல்பிக்கும் மனது, பகுத்தாய்ந்து தீர்மானிக்கும் புத்தி, நினைவுகளை சேமித்து வெளிக்கொணரும் சித்தம் மற்றும் நான் நான் என்று assertiveஆக இருக்கு குறுகிய தன்னுணர்வாகிய அகந்தை/அகங்காரம் - உங்கள் வகைப்படுத்துதலில் //செய்கைமனம்// புதிதாக இருக்கிறது
//உன்னுள். மொழியாரும் வண்ணத்தின் வெள்ளமே// - இதற்கு பொருள் விளங்கவில்லை
//உன்றன். தாக்கத்தில் நானுள்ளே துஞ்சுவேன்//  - இதற்கும் பொருள் புரியவில்லை? மனம் தாவினால் நான் ஏன் துஞ்சவேண்டும்?

//கழுமுனையில்// - என்பது சுழுமுனை என்கிற யோக பதத்திற்கு இன்னொரு சொல்லா?

//யத்தனம் - இங்கோ. நாயென்றே நானலையும் மத்தனம்// - புரியவில்லை, கனவில் செய்யும் முயற்சிக்கு இங்கு ஏன் நாயைப்போல் நான் அலைய வேண்டும்? மத்தனம் என்ற சொல்லை எப்படி பொருள் கொள்ளவேண்டும்?

//காணுகின்ற பக்தியோகம் பாவகை// - பாவகை?

//
சத்தியத்தின் நித்தியத்தின் வித்தறி வோமே - சேர்ந்தே
எத்தனித்து மெத்தனத்தின் வித்தறுப் போமே
சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே - நாம்
இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே! ... 16
// - ‘த்’ ‘த்’ என்று பிரமாதப் படுத்திவிட்டீர் இந்த செய்யுளை

இந்த காலத்துல மடல் / letter எல்லாம் யாரு எழுதறா?
இதோ சிறுகதை பாணியில். ஒரு இணைய சாட் உரையாடலை, அதுவும் ஒரு ஆண்/பெண் உரையாடலைக் கொடுக்கறேன்னு  சொல்லிக் கொடுத்த மாதிரி இருக்கு உங்க பா, சபாஷ், நல்ல கற்பனை.
அப்படியே உயர் தத்துவத்தையும் சேர்த்துக் கொடுத்த விதம் பிரமாதம்.
வாழ்த்துகள் :-)

On Monday, July 31, 2017 at 5:08:10 PM UTC-7, ramaNi wrote:

அவனடிமை

unread,
Aug 1, 2017, 6:52:34 PM8/1/17
to சந்தவசந்தம்
சுப்பராமன் ஐயாவின் பாடல் அருமை.
ஒரே ஒரு ஆதங்கம் - இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம்; மூன்றே மூன்று செய்யுட்களில் சொல்லி முடித்துவிட்டீர்கள்: சட்டென்று, ‘மனமே உன் வழியில அழைச்சிக்கிட்டு போ, it's ok, நான் வரேன், ஆனா நல்ல வழியா இருக்கட்டும்’ என்று.
இவ்வளவு தெளிவா, சுருக்கமா சொன்னா, மனம் கேட்டுத் தானே ஆகவேண்டும்! :-)
பிறந்தநாளை ஒட்டி வந்த கவிதை பிரமாதம்
- பணிவுடன், அன்பு கலந்த வாழ்த்துகள்.

Subbaraman NV

unread,
Aug 1, 2017, 7:04:26 PM8/1/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.மூர்த்தி அவர்களே.  ஏதோ ஒரு நினைவு, இக்கவிதைகள் 32 வரிகளுக்கு மேற்படாமல் இருக்கவேண்டும் என்ற ஒரு விதி யிருப்பதாக. மேலும் என்னுடைய சரக்கும் அவ்வளவுதான்!!!!!!!!!!
என் வி சுப்பராமன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Aug 1, 2017, 10:30:12 PM8/1/17
to சந்தவசந்தம்
வணக்கம் சிவசிவா.'

என்பாவிடை நின்று நீக்கு இடர். => சரிதானே?

--> /ஆன்றவிந்தான் இல்லையென் றாகிலும்/ 
>> ஆன்றவிந் தான்அல்லேன் ஆயினும்?
வழக்கமான தவறு! திருத்திக்கொள்கிறேன்.

--> /கழுமுனை/ 
>> சுழுமுனை?
சுழுமுனைப் பொருளில் கழுமுனைச் சொல்லும் வழக்கில் இருப்பதாகத் தெரிகிறது.

திருமந்திரம் 2156
கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15

‘‘கழுமுனை சொல் லாமிரண்டுஞ் சுத்ததநு வாமத் 
தழிவில்லா முத்திவலத் தாம்’’
– சைவ சமய நெறி

-->/. நாயென்றே நானலையும் மத்தனம்! ... 9
--> /மத்தனம்/ = ?
மர்த்தனம் = மத்தனம் = கடைதல்

--> /சென்மவினை கனவுகளில் பொன்றுமே/  = ?
--> /சேருவினை/
சேர்வினை? சேரும்வினை?
chEruvinai => vinaiththokai

--> /அர்த்ததான காமமுக்தி நால்வகை/  = ?
arththatharma kAmamukthi enRu mARRikkoLkiREn.

--> /நம் கனவுச் செயல்கள் இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர்./ 
மனம் வாக்கு காயம் இம்மூன்றாலும் புண்ணியம் பாவம் வரும். 
ஆனால கனவால் புண்ணியம் பாவம் வருமா? கனவுகள் மூலம் வினை குறையுமா?

Some links:
Can you accumulate karma in a dream? The accumulation of karma is not in the activity that you perform. It is in the volition or the intention of one’s action. -- sadguru jaggi

In Mahabharata Anusasana Parva, Section VII (thanks Keshav for the link), Bhishma says that fruits of those actions done with the mind are experienced in dreaming state while those actions done with body are experienced in waking state:

ramaNi

unread,
Aug 1, 2017, 10:32:47 PM8/1/17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, மூர்த்தி அவர்களே. உங்கள் திறனாய்வும் பாராட்டும் எனக்கு உற்சாகம் தருவன.
ரமணி

ramaNi

unread,
Aug 1, 2017, 10:54:41 PM8/1/17
to சந்தவசந்தம்
வணக்கம் மூர்த்தி அவர்களே.

//நானொரு ஆன்றவிந்தான் // - புணர்ச்சியில் தளை விதி உடையுமோ?
மாற்றிவிட்டேன். நன்றி.

சான்றோர்கள் வாழும் சபையில் அடியேனோர்
ஆன்றவிந்தான் அல்லேனென் றாகிலும் - தோன்றியதைப்
பாடலில் தந்தேன் படித்தே நிறைகுறை
ஓடுவதைச் சொல்வீர் உடன்.

// - மனத்தின் வெவ்வேறு வகையான தொழிற்படல் நான்கு விதமாக அழைக்கபடுவதாக படித்திருக்கிறேன் - சங்கல்பிக்கும் மனது, பகுத்தாய்ந்து தீர்மானிக்கும் புத்தி, நினைவுகளை சேமித்து வெளிக்கொணரும் சித்தம் மற்றும் நான் நான் என்று அச்செர்டிவெஆக இருக்கு குறுகிய தன்னுணர்வாகிய அகந்தை/அகங்காரம் - உங்கள் வகைப்படுத்துதலில் //செய்கைமனம்// புதிதாக இருக்கிறது.

சங்கல்பிக்கும் மனதைத்தான் செய்கைமனம் என்று குறித்தேன். அகங்காரம் என்பது மனத்தின் நான்காம் கூறென்பது சரியே. என் பாடலில் அந்த அகங்காரமாகிய நான் தான் மற்ற மூன்று கூறுகளில் இருந்து தன்னைப் பிரித்துப் பார்த்து மனத்துடன் பேசுகிறது!

அகங்காரம் என்பது தன்னை மனத்துடன் ஐக்கியப் படுத்திக் கொள்ளும்போது மமதை யாகிறது. மனத்தினின்று பிரிந்து தன்னை விசாரம் செய்யும்போது நான் என்னும் உணர்வாகிய சீவான்மா வாகிறது அல்லவா?

/உன்னுள். மொழியாரும் வண்ணத்தின் வெள்ளமே// 
- இதற்கு பொருள் விளங்கவில்லை

மூவகையாம் கூறுகொளும் உள்ளமே - உன்னுள்
. மொழியாரும் வண்ணத்தின் வெள்ளமே!

மனத்தின் வண்ணங்களே அதன் எண்ணங்கள். அது காட்சிகளை, உணர்வகளை மொழியாகத் தன்னுள் நிறைத்தே புரிந்துகொள்ள முனைகிறது. நம் எண்ணங்கள் உட்பேச்சாகத் தானே பெரிதும் உலவுகின்றன?

/உன்றன். தாக்கத்தில் நானுள்ளே துஞ்சுவேன்//  
- இதற்கும் பொருள் புரியவில்லை? மனம் தாவினால் நான் ஏன் துஞ்சவேண்டும்?

இங்கு நான் என்பது சீவான்மா. அகங்காரம் மமதை உருவில் விழித்திருக்கும்போது, உள்ளே சீவான்மா தூங்குகிறது என்று சொல்லவந்தேன்.

//கழுமுனையில்// 
- என்பது சுழுமுனை என்கிற யோக பதத்திற்கு இன்னொரு சொல்லா?
அப்படித்தான் நினைத்து எழுதினேன். சரியென்று இணையத் தேடலில் அறிகிறேன். சிவசிவாவின் ;பின்னூட்ட பதிலும் காண்க.

/யத்தனம் - இங்கோ. நாயென்றே நானலையும் மத்தனம்//'
 - புரியவில்லை, கனவில் செய்யும் முயற்சிக்கு இங்கு ஏன் நாயைப்போல் நான் அலைய வேண்டும்? மத்தனம் என்ற சொல்லை எப்படி பொருள் கொள்ளவேண்டும்?

முதலடி கனவுலகம் பற்றிப் பேசுவதால் இங்கே என்றது கனவுலகைக் குறிக்கிறது. ம(ர்)த்தனம் என்பது கடைதல். எண்ணங்களின் கடைசல் தானே கனவு?

//காணுகின்ற பக்தியோகம் பாவகை// - பாவகை?
பக்தியோகத்தை நாம் பயில்வது துதிப்பாடல்கள், சுலோகங்கள் மூலம்தானே?

உங்கள் விரிவான திறனாய்வுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி, மூர்த்தி அவர்களே.

அன்புடன்,
ரமணி

*****
 
விவேக் பாரதி

unread,
Aug 2, 2017, 2:41:39 AM8/2/17
to santhav...@googlegroups.com
காப்பு :

மனதுக்கொரு மடலைத்தர மகிழ்வோடு நுழைந்தேன்
எனதிக்கவி தனையற்புத எழிலாங்குகன் காக்க !
புனைசொற்பத மதிற்கற்பனை புதிதாயவன் சேர்க்க !
கனவிற்கவி சொலும்சக்தியின் கனியானவன் காப்பே !

தலைவர் வாழ்த்து :

சீய மென்னபாச் சீற்றமே காட்டிடும்
நாய கன்புகழ் நாடொறும் வாழ்கவே !
தூய நெஞ்சொடு தோன்றுமி லந்தையின்
நேயம் வேண்டிடும் நேர்மையன் வாழ்த்திதே !

மனதுக்கு ஒரு மடல் (மடலுக்கு ஒரு மனம் என்றதைச் சாடுதல்)

மனமே இதுகேள் மகிழ்வை விரும்பித்
தினமும் நீசெயும் திமிரா டங்கள்
அளவிற் கடங்கா அமைப்பில் நகர்ந்தால்
தளையிட் டடக்கும் நிலைபெற் றிடுவாய் !
மடலுக் கொருமனம் விரிவதைக் கண்டு
படபடத் துன்னிடம் பகர விழைந்தேன் !
அம்மை மடலுக் கமைதி உற்றாய் !
பொம்மை போலே பொலிவில் நகைத்தாய் !
அப்பன் மடலுக் கதிர்ந்து நடித்தாய் !
ஒப்பார் இலையென் றோங்கித் துடித்தாய் !
நண்பன் மடலில் நாட்டம் விளைத்தாய் !
பண்பா சான்மடல் பதிலைத் தவிர்த்தாய் !
காதலி மடலில் கனவை வளர்த்தாய் !
பாதி படிக்கையில் பாடித் துளிர்த்தாய் !
முகமறி யாத முழுமடல் கண்டால்
ஜெகமே உனதெனச் செய்தி விரித்தாய் !
கால மடலில் கடமை மறந்தாய் !
கோலம் வேண்டிக் கொள்கை துறந்தாய் !
இறைவன் மடலின் இயக்கம் சிதைத்தாய் !
பொறையில் லாமல் பொழுதை வதைத்தாய் !
கவிதை மடலில் கருத்தைப் பறித்தாய் !
தவமடல் வரவே தள்ளிச் சிரித்தாய் !
இளமைச் செருக்கில் இயக்கம் அறுத்தாய் !
வளமை எல்லாம் தூங்கிக் கழித்தாய் !
குழந்தையில் மடல்கள் குழைந்து வரவே
எழிலுடன் படித்த ஏற்ற நினைவுகள்
உனைவிட் டகல உயர்வைக் குறைத்தாய் !
கனவில் வாழ்ந்தே காலம் நிறைத்தாய் !
முதுமை மடலாம் மூச்சிடும் நேரம்
புதிதா யொருமடற் புயல்வரும் நண்பா
அந்தப் பொழுதில் ஆடித் தளர்ந்து
எந்தக் கல்வியும் ஏறா மதியுடன்
நின்று துடிக்கும் நிலையில்
கொன்றுவழி காட்டும் கூற்றுவன் மடலே !

Vis Gop

unread,
Aug 2, 2017, 3:16:38 AM8/2/17
to santhav...@googlegroups.com
திரு ரமணியின் கவிதை மிக அருமை. அவருடைய விளக்கங்களும், அறிஞர்களின் சில கேள்விகளும் விடைகளும் சேர, கவிதையின் சாராம்சம் விளங்குகிறது. மனம், புத்தி, உடல் - இவற்றைத் தனியாக்கி, எண்ணம், அறிவு, செயல், கனவு, உறக்கம், மாயை, ஆனந்தம், .. போன்ற அசைவுகளுக்கும் அவற்றின் காரண/அனுபவங்களுக்கும் "பொறுப்பு யார்?/எது சரி?" என்பது "நானும் மனமும்" விவாதித்த தலைப்பு போலத்  தோன்றியது. தத்துவக் குறிப்புகள் எனக்கு எட்டாத உயரத்தில் இருக்கின்றன. திரு ரமணியின் கவிதை முயற்சிகள் கண்டு என் சிரம் தாழ்கிறது!
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2017-08-02 8:24 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:
.

Vis Gop

unread,
Aug 2, 2017, 3:37:28 AM8/2/17
to santhav...@googlegroups.com

திரு சுப்பராமன் கவிதை அழகு!.

மனம் எங்கே உள்ளதெனத் தேடி நின்றேன்

முகவரியும் தெரியாமல் முயற்சி செய்தேன்

தூதஞ்சல் அலுவலகம் சென்று கேட்டேன்

வாதமெதுஞ்செய்யாமல் எனைத் திருப்பி விட்டார்!

இது நகைச்சுவையான தொடக்கத்திற்காகவா, அன்றி தூதஞ்சல் ஏதாவது தத்துவத்தைக் குறிக்கிறதா?

மனமே! என்னை உனக்கடிமையாக்கு      என்று சொல்கையில் மனத்திடம் இருந்த நம்பிக்கை
காற்றடிக்கும் திசையெல்லாம் நீ மாறாதே  என்கையில் ஏன் குறைந்தது?
மறைகள் காட்டும் பாதையிலே போகவிடு என்பது மனத்திடம் வேண்டுபவர் விரும்புவது. ஆகவே இந்தப் பாடல், மனத்தைச் செம்மைப் பாதையை விட்டு நழுவாததாக இருக்கச் செய்து பின் அதன் வழியை நம்பிச் செல்ல விழையும் நிலையைக் குறிக்கிறது. சரியா?
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2017-08-01 5:46 GMT+05:30 Subbaraman NV <nvsubb...@gmail.com>:

Vis Gop

unread,
Aug 2, 2017, 3:57:57 AM8/2/17
to santhav...@googlegroups.com
திரு விவேக்கின் கவிதை அருமை, புதிய சிந்தனை!

மனதுக்கு ஒரு மடல் (மடலுக்கு ஒரு மனம் என்றதைச் சாடுதல்)

மனமே இதுகேள் மகிழ்வை விரும்பித்
தினமும் நீசெயும் திமிரா டங்கள்                 [திமிராட் டங்கள்]
அளவிற் கடங்கா அமைப்பில் நகர்ந்தால்
தளையிட் டடக்கும் நிலைபெற் றிடுவாய் !  [எச்சரிக்கை? ஆனால் கூற்றுவன் மடல் வரும் வரை, மனத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் காணவில்லையே! மனம் அளவைத் தாண்டி நகரவில்லையா? அது துள்ளுவதையும் காலத்தைக் கொல்வதையும் இயல்பென்று கொள்ள வேண்டுமா?]

மடலுக் கொருமனம் விரிவதைக் கண்டு
படபடத் துன்னிடம் பகர விழைந்தேன் !
அம்மை மடலுக் கமைதி உற்றாய் !
பொம்மை போலே பொலிவில் நகைத்தாய் !
அப்பன் மடலுக் கதிர்ந்து நடித்தாய் !    
       [☺]
ஒப்பார் இலையென் றோங்கித் துடித்தாய் !
நண்பன் மடலில் நாட்டம் விளைத்தாய் !
பண்பா சான்மடல் பதிலைத் தவிர்த்தாய் !  
  [☺]
காதலி மடலில் கனவை வளர்த்தாய் !
பாதி படிக்கையில் பாடித் துளிர்த்தாய் !
முகமறி யாத முழுமடல் கண்டால்
ஜெகமே உனதெனச் செய்தி விரித்தாய் !     [இதன் பொருள்?]

கால மடலில் கடமை மறந்தாய் !
கோலம் வேண்டிக் கொள்கை துறந்தாய் !
இறைவன் மடலின் இயக்கம் சிதைத்தாய் !
பொறையில் லாமல் பொழுதை வதைத்தாய் !

கவிதை மடலில் கருத்தைப் பறித்தாய் !
தவமடல் வரவே தள்ளிச் சிரித்தாய் !
இளமைச் செருக்கில் இயக்கம் அறுத்தாய் !
வளமை எல்லாம் தூங்கிக் கழித்தாய் !
குழந்தையில் மடல்கள் குழைந்து வரவே
எழிலுடன் படித்த ஏற்ற நினைவுகள்
உனைவிட் டகல உயர்வைக் குறைத்தாய் !
கனவில் வாழ்ந்தே காலம் நிறைத்தாய் !

முதுமை மடலாம் மூச்சிடும் நேரம்
புதிதா யொருமடற் புயல்வரும் நண்பா
அந்தப் பொழுதில் ஆடித் தளர்ந்து
எந்தக் கல்வியும் ஏறா மதியுடன்
நின்று துடிக்கும் நிலையில்
கொன்றுவழி காட்டும் கூற்றுவன் மடலே !

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

Subbaraman NV

unread,
Aug 2, 2017, 4:19:40 AM8/2/17
to santhav...@googlegroups.com
That is how I have picturized. Thanks Shri Gopal.
N V Subbaraman.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vis Gop

unread,
Aug 2, 2017, 4:33:32 AM8/2/17
to santhav...@googlegroups.com
அகங்காரம் என்பது தன்னை மனத்துடன் ஐக்கியப் படுத்திக் கொள்ளும்போது மமதை யாகிறது. ?
அகங்காரம் = நான் என்னும் எண்ணம்
மமதை = மமகாரம் = எனது என்ற எண்ணம்.

ramaNi

unread,
Aug 2, 2017, 8:58:04 AM8/2/17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, இருமொழிக் கவிஞர் கோபால் அவர்களே.
ரமணி

ramaNi

unread,
Aug 2, 2017, 9:29:15 AM8/2/17
to santhav...@googlegroups.com
வணக்கம் கோபால் அவர்களே.

அகங்காரம் என்பது நான் எனும் எண்ணமாகிய அந்தக்கரணம். பரமான்மாவிலிருந்து தன்னைப் பிரிந்து நான் வேறு என்று நினைக்கும் அவித்யை.

மமதை என்பது எனது என்ற எண்ணமாயினும் அச்சொல் செருக்கு, தனித்துவம் என்று பொருள்கொள்ளும் அன்றோ?

'என் பொருள், என் குணம், என் உணர்வு, என் அவயம்' என்று தனதாக்கிச் சொல்வதுபோல், 'என் மனம்' என்றும் வெகு எளிதாகச் சொல்கிறோம். ஆனால் 'என் மனம் நினைக்கிறது' என்பதே உண்மையாயினும், 'நான் நினைக்கிறேன்' என்கிறோம். நான் சொன்னது இந்த மமதையைத் தான்.

'நான்' என்னும் உணர்வாகிய அகங்காரமே ஆன்ம சாதனைக்கு மூலம் அல்லவா? 'நான் அது, நான் இது' என்பனவற்றை நேதி-நேதி என்று தள்ளிவிட்டு, 'நான் யார்?', என்னுள் எழும் நான் என்ற உணர்வின் மூலம் எது என்று ஆராய்ந்தால், முடிவில் சீவான்மா தான் பரமான்மாவே என்ற பேரானந்தம் பெருகப் பரம் தவிர உலகில் வேறில்லை, அப்படி இருப்பதாகத் தோன்றுவது மாயை என்பதன்றோ அத்வைதம்?

In the English rendering of advaita, (capital) I is considered to be the (Universal) Self, while (small) i is considered to be the (individual) self. They are the ahaMkAra and mamatA in that order, aren't they?

அன்புடன்,
ரமணி

அவனடிமை

unread,
Aug 2, 2017, 11:49:43 AM8/2/17
to santhav...@googlegroups.com
கவிஞர் விவேக் அவர்களின் கவிதை நன்றாக இருக்கிறது.
ஆனால் நான் படித்தனுபவித்த அவருடைய படைப்புகளில் இது பிரமாதமாக உச்சத்தில் இருக்கிறதா என்றால் என் அளவில் இல்லை என்றே தோன்றுகிறது.
இப்பாவில் வாழ்க்கையில் பிறந்ததுமுதல் இறப்பு வரை மனத்தின் பல நிலைகளை வருணிக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு நிலையிலும், ‘மடல்’ என்பதை மனத்திற்கு வரும் ‘செய்தியாகக்’ கொண்டு,  மனம் எப்படி அவற்றை எதிர்கொள்கிறது என்றும், சில நிலைகளில் நன்னெறியிலிருந்து வழுவுகிறது என்பதையும் ஆங்காங்கே கூறியுள்ளார் என்று தோன்றுகிறது.
//நாட்டம் விளைத்தாய் // - விளைத்தாய் என்பது சரியான பயன்பாடா? இதன் பொருள் என்ன, ’நாட்டம் கொண்டாய்’ என்பதா?
//இறைவன் மடலின் இயக்கம் சிதைத்தாய் !// - புரியவில்லை - இறைவன் தரும் செய்தியை ’இயற்கை’ என்று கொண்டு அதை மனம் தன் எண்ணம்/செயல்களால் சிதைக்கிறது என்று கொள்ளலாமா?

//

எந்தக் கல்வியும் ஏறா மதியுடன்
நின்று துடிக்கும் நிலையில்
கொன்றுவழி காட்டும் கூற்றுவன் மடலே
// - முடிவு எதிர்பார்த்ததாக இருந்தாலும், ‘படித்ததெல்லாம் வீண்’ என்று அழுத்தமாகக் கூறுவது சிறப்பு.

வாழ்க புலவரின் படைப்புப் பணி. :-)

ஒரு ஐயம்:
’மனதை’, ’மனது’ என்பது போன்ற பயன்பாடுகள் தவறென்றும் ’மனத்தை’, ’மனத்து’ என்பவையே சரி என்றும் படித்துள்ளேன். அறிஞர்கள் தெளிவாக்குவார்கள் என்று நம்புகிறேன்.
(மேற்சொன்ன பயன்பாட்டை விளக்குபவர்கள், உதாரணத்திற்கு, ” ’பணதை’, ’பணதின்’ என்று வருமா?” என்று கேட்டு ’பணத்தை’, ’பணத்தின்’ என்பவையே சரியல்லவா, அதுபோலத்  தான் ’மனத்தை’, ’மனத்தின்’ தான் சரியான பயன்பாடுகள் என்பார்கள்)

Vis Gop

unread,
Aug 2, 2017, 12:49:26 PM8/2/17
to santhav...@googlegroups.com
மிகப் பணிவுடன் உங்கள் விளக்கங்களை ஏற்கிறேன். உண்மையில் இந்தத் தத்துவக் குறிப்புகள் எனக்கு எட்டுவதில்லை. வழக்கத்தில் அஹங்காரம், மமதை இரண்டும் ஒரே பொருளில் பயன் படுத்தப் படுகின்றன. இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்ட தொடர்புடைய சொற்கள். நீங்கள் அஹங்காரம் மமகாரமாகப் பரிணமிக்கிறது என்று சொன்னதால் ஐயம் எழுந்தது. தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி.

நான் கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவன். அதற்கான திறனையும் சொல்வளத்தையும் வளர்த்துக் கொள்ள முயலாததால் நான் கவிஞன் என்ற தகுதி உடையவன் அல்லன். ஆயினும் என்னை இருமொழிக் கவிஞன் என்று அழைத்தது உங்கள் வள்ளன்மை; வாழ்த்து! உண்மையாகுமெனில் மகிழ்ச்சியே!
நல்வாழ்த்துகளுடன் 
கோபால்.

Kalam Kader

unread,
Aug 2, 2017, 1:38:02 PM8/2/17
to santhav...@googlegroups.com
ஐயா வணக்கம்

என் கவிதை ஆயத்தமாக உள்ளது. எப்பொழுது இங்கு இட வேண்டும்?

பணிவன்புடன்
மாணவன்
கலாம்

--

Pas Pasupathy

unread,
Aug 2, 2017, 4:17:04 PM8/2/17
to Santhavasantham
கவிதைவழங்கும் வரிசை
ஆகஸ்ட் 1 முதல் 6 வரை

கவிஞர்கள்:

1-  சிவ சிவா
 2 -  சுப்பராமன்
 3  புலவர்
 4 ரமணி
5 விவேக் பாரதி

ஆகஸ்ட் 8 முதல் 14 வரை

கவிஞர்கள்
1 கோபால்
2 சகோதரி புஷ்பா கிறிஷ்டி
3 அஷோக் சுப்ரமணியம்
4 சந்தர் சுப்ரமணியம்
5 கலாம்

ஆகஸ்ட் 16 முதல் 23 வரை

1 இலந்தை
2 கவியோகி
3 எல்லே சுவாமிநாதன்
மேற்கொண்டு கலந்துகொள்ள விரும்புகிறவர்கள்.

இலந்தை.

2017-08-02 13:37 GMT-04:00 Kalam Kader <kalam...@gmail.com>:
ஐயா வணக்கம்

என் கவிதை ஆயத்தமாக உள்ளது. எப்பொழுது இங்கு இட வேண்டும்?

பணிவன்புடன்
மாணவன்
கலாம்

Siva Siva

unread,
Aug 3, 2017, 9:40:40 AM8/3/17
to santhavasantham
Posting pulavar's poem (that came as a separate thread) in the main thread for this kavithai arangam
-----------------
சந்த வசந்தக் கவியரங்கம் - 3.
==========================

திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி.
-------------------------------------------

கடவுள் வாழ்த்து.
******************

மனத்திலு   தித்தே  மனத்தை அருந்தும் மதனை எரித்தாய்  மாதேவா !
மனத்தினைப்   பூவாய்  மாற்றியுன்  பாத  மருங்கிலி  ரைத்தேன், மாதேவா! 
சினத்தினில்  முப்புர  மெரித்தாய்; என்றன்  சிறுமைக  ளெரியச் சிரிப்பாய்! இத் 
தினத்தினில்  நின்றன் திருவருள்  வேண்டுஞ்  செய்யுளின் பொருளாய்த் திகழ்வாயே!

புனத்துறை  வள்ளி  பொற்பதம்   சூடிப்  புகழ்ந்திடு  வேலோ  னொருதாதாய்!
வனத்தினில்  வேட  னெனச்   சரமீந்தே மகிழ்வி  ஜயன்போ  லெனையாக்கித்  
தனத்தொடு  மாயுள் தடைஎன  மாறச்  சலித்திடு  முள்ளந்  தனையாண்டே ,
கனத்திடு  ஞானம்   கண்ணிய   வாழ்க்கை கடிதினி   லீந்தே   கடைக்கண்பார்! 

சந்தவசந்தக்  கவிஞர்கள்!
-----------------------------------------
எல்லையிலா   வானத்தில்  அலைவார், ஆனால் 
    எப்போதும் கைக்கெட்டும் தொலைவில் நிற்பார்!
 வெல்லத்தில்  தேன்கலந்தே விந்தை  யாக
     வெவ்வேறு  சுவைக்கவிதை  வடிப்பார்! மெல்லச்     
சொல்லாமல்   சொல்லிசிறு  பிழைதி   ருத்திச் 
     சூரர்களாய்க்   கவிஞர்களை உயர்த்தி வைப்பார்!
வல்லவர்கள்  நம்சந்த    வசந்தச்  சான்றோர்
     வழிபாடாய்ப்   பாட்டுப்பூ  வைப்போம் , வாரீர்!

கவியரங்கத் தலைவர்!
------------------------------------
மங்காப்பு    கழ்பெற்ற  பாரதி  வழியிலே  வருவோர்  தமைய  ழைத்தே 
துங்கமார்  சந்தவ   சந்தமாம்  குழுவினை  சுடரோங்கவே   யமைத்தார் 
எங்கணும்  நம்புகழ்  தங்கிடுந்   தொண்டாக இணையத்தில் பாவடித்தார்! 
எங்கள்இ   லந்தைஇ   ராமசா    மிப்புகழ்  என்றென்றும்   வாழி   யவே!

மனத்தை  அறிந்து கொள்  
-----------------------------------------

கான்மலர்ச்    சிந்தனைத்   தேனெடுத்   துலகில் 
                  கவியெனத்    தருவே   னோ?
         களிப்புடன்   உலகினர்   கடைப்பிடித்  திடும்படிக் 
                   காவியம்   படைப்பே   னோ?
ஏனெனக்   கித்திறம்   எய்திய  தென்றெம 
                    தீசனைக்   கேட்டிடுங்   கால் 
         இலந்தை   எனுங்கவி   வேழத்துதிக்  கைதான் 
                    எனக்காசி   தந்ததென்   றான்!

பேயென   உழலும்  சிறுமனம்   பாரதி 
                   பெரிதும்  வெறுத்தது   வாம்!
       பெண்ணெழில்   கண்டவள்  பின்செலும்  புத்திகள்   
                   பிறழ்மனச் செய்கைக   ளாம்!
  நாயகன்   திருவடி    நண்ணிய   சிந்தனை 
                    நல்லவி   னைப்பய னாம்!
         நானுமம்   மனத்தினை   நாடியே   ஆண்டிடும் 
                      ஞானம   டைவே  னா?

மனமெனும்   கருவியின் மகத்துவ   மதனை  
                      மதித்தவ  ரீங்குண்டோ?  -- அது
     வாய், செவி ,   மூக்கு ,கண்   உடம்பினால்  இயங்கும்  
                      வகையினை  யறிவாரோ?
சினம்,முத   லாம்நவ   ரசத்தினில் பலவகை  
                      சென்றிடும்  மெய்ப்பாட்டில் - இவர் 
        தினந்தினம்   கண்டிடும்   கனவெலாம்  வீணெனத்  
                        தெளிந்தவர் இங்குண்டோ?
அனமுடன்   விரவிய  அறுசுவை  உணவினி  
                         லாசைமி  கக்கொண்டே - தினம் 
        அலைந்திடும்  மனநிலை ஆயுளை அழித்தலை 
                         அறிந்தவர்  இவணுண்டோ?
வினவிடும்  பலவினா   விடையெலாம்   வெறுமையே ;   
                         வேகமும்   தாமதமே!   - மனோ  
         வேகத்தை    வென்றிட  விரையும்   கருவிகள்   
                          மெய்யல , பொய்யன்றோ?

புலனறி   வென்பது  மனநிலை ! அதனுளே  
                     வேண்டுதல்  வேண்டா  மை 
       பொருந்திடல்   புத்தியாம், அதனைச்செய்  வேனெனப்  
                    புரிந்திடல்    சித்தம  தாம்!
நலமுறச்   சிந்தையில்  நண்ணிடும்   கவிதையாம்,
                    நாமதன்   கருப்பை  யாம்!
.       நயமிகு    சிந்தனை  அனைவர்க்கும்  நல்லதை 
                      நாட்டினில்   நாட்டுவ  தாம்! 
பலமுறும்   மனத்துறை   புத்தியும்  சிந்தையும்
                    பயில்மனக்   கூறுக  ளாம்!
             பதமுடன்   மனத்தினை   நன்கு சமைத்திடப்  
                     பரமன்    பதம்பணி   வோம்!
நிலமெலாம்   பலவளம்   நிறைந்திட  மேகமும்  
                    நித்தில  மலர் சொரிய  
            நேயம்வ    ளர்த்திடும்   நெகிழ்தமிழ்ப்   பாடலை 
                      நெஞ்சுக்குச்  சொல்லி வைப்போம் !

மனத்துக்குக்    கடிதம்    வரையும்ம   னத்துடன்  
              வளமிக்க   சொல்வேண்   டினேன்!
        வாயால்  உரைத்திடின்  மனத்துக்குக்  காதுண்டோ? 
                வழிதேடி  வாட்டம் கொண்டேன்,
சினத்தாலே  மனஞ்செய்யும்  தீங்கைத்  தவிர்க்கவே 
                சீரால்அ   லங்கரி     தேன் ;
         திங்களின்  பனிசேர்த்து  வானவில்  ஓலையில் 
                  செந்தமிழ்ப்   பாப்புனைந்  தேன்!
தனக்குற்ற   மடல்காணக்   கண்ணுள்ள   தோவென்று 
               தடுமாற்றம்   கொள்ளலா  னேன்.
        தமிழை   அறிந்தின்பம்  சார்படிப்   பறிவென்றன் 
                 தளர்மனந்    தனக்கு   முண்டோ?
எனக்குற்ற  ஐயத்தால்  மடலொன்றை   எவ்வாறு 
              எழுதலாம்  என்றெண்ணி   னேன்!
        எண்ணத்தை   எண்ணியே  எழுப்பலாம் என்றெண்ணி 
                  எண்ணத்தால்    எழுதுகின்   றேன்!

பார்மீதில்  பதவிக்கும்  காசுக்கும் அலைகின்ற 
            பாமரம்   என்னுள்ள  மா?
      பக்குவம்  உள்ளதாய்ப்   பரிவுடன் வரவேற்கும் 
             பண்புள்ள  தென்னுள்ள   மா?
தேர்ந்திடின் ஆண்தானா? பெண்ணா? மற்ற.:. றிணைச் 
            சிற்றுயிர்  என்னுள்ள  மா?
       தெரியாத   இருளிலே  புரியாத  செய்தியைத் 
             தெளிவின்றிச்   செப்பலா   னேன்!
ஓர்நொடிக்   குள்காதம்   ஒருலட்சம்  தாவிடும் 
            உள்ளத்தைப்    பின்தொடர்ந்  தேன்!
      ஒருவன்மேல்   மயல்கொண்ட  ஒருத்தியின்  காதல்போல்  
              உறங்கா   திருக்கக்   கண்டேன்!
 ஆர்வத்தில்   ஊர்தேடி  ஆகாயம்  கடலெங்கும் 
              ஆங்காங்கே   சென்ற    போழ்தில்.. 
         ஆகா!என்   னுள்ளம் தன்  அன்பென்னும்  நல்விடை 
                  அனுப்பிடக்  கண்டு கொண்டேன்!

  வெகுளியில்   சுடுமொழி  விடுத்திட்டால்  
           விரைவில்  அதுவே   எதிரொலிக்கும்!
 மிகுந்திடுங்   கவலையை  வெளியிட்டால் 
           மீண்டுமக்   கவலையே  விடையாகும்!
தொகுப்புடை  மலைமேல்  நாமுரைக்கும் 
           சொல்லே  மீண்டும்  வருவதுபோல்  
அகத்துறை  உள்ளம்  அன்பென்றால்  
          அழகிய  அன்பாய்  பதில்தருமே!

மனத்தை  மதித்தால்   மதிக்கும்  மனத்தை  
மனத்தால்  மதித்தே  மகிழ்!

நன்றி  அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
-----------------

Ramamoorthy Ramachandran

unread,
Aug 3, 2017, 9:50:31 AM8/3/17
to santhav...@googlegroups.com
Sivasiva! Thanks for posting my poems in a proper thread. 
Expecting, corrections and comments. 
pulavar iraamamoorthy. 

Kalam Kader

unread,
Aug 3, 2017, 10:56:16 AM8/3/17
to santhav...@googlegroups.com
அழகும் ஆளுமையும் இனிமையும் நிறைந்த செய்யுள் செய்து மனத்தறிக்குள் பண்பை நெய்து தந்தீர்கள் புலவரய்யா!

Siva Siva

unread,
Aug 3, 2017, 5:35:31 PM8/3/17
to santhavasantham
சில கருத்துகளைக் கீழ்க் காண்க.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

2017-08-03 9:40 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
Posting pulavar's poem (that came as a separate thread) in the main thread for this kavithai arangam
-----------------
சந்த வசந்தக் கவியரங்கம் - 3.
==========================

திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி.
-------------------------------------------

கடவுள் வாழ்த்து.
******************

மனத்திலு   தித்தே  மனத்தை அருந்தும் மதனை எரித்தாய்  மாதேவா !
மனத்தினைப்   பூவாய்  மாற்றியுன்  பாத  மருங்கிலி  ரைத்தேன், மாதேவா! 
சினத்தினில்  முப்புர  மெரித்தாய்; என்றன்  சிறுமைக  ளெரியச் சிரிப்பாய்! இத் 
தினத்தினில்  நின்றன் திருவருள்  வேண்டுஞ்  செய்யுளின் பொருளாய்த் திகழ்வாயே!

--> /பாத  மருங்கிலி  ரைத்தேன்/ 
இரைத்தேன் - typo?

பாத மலரினில் இட்டேன்?

புனத்துறை  வள்ளி  பொற்பதம்   சூடிப்  புகழ்ந்திடு  வேலோ  னொருதாதாய்!
வனத்தினில்  வேட  னெனச்   சரமீந்தே மகிழ்வி  ஜயன்போ  லெனையாக்கித்  
தனத்தொடு  மாயுள் தடைஎன  மாறச்  சலித்திடு  முள்ளந்  தனையாண்டே ,
கனத்திடு  ஞானம்   கண்ணிய   வாழ்க்கை கடிதினி   லீந்தே   கடைக்கண்பார்! 

சந்தவசந்தக்  கவிஞர்கள்!
-----------------------------------------
எல்லையிலா   வானத்தில்  அலைவார், ஆனால் 
    எப்போதும் கைக்கெட்டும் தொலைவில் நிற்பார்!
 வெல்லத்தில்  தேன்கலந்தே விந்தை  யாக
     வெவ்வேறு  சுவைக்கவிதை  வடிப்பார்! மெல்லச்     
சொல்லாமல்   சொல்லிசிறு  பிழைதி   ருத்திச் 
     சூரர்களாய்க்   கவிஞர்களை உயர்த்தி வைப்பார்!
வல்லவர்கள்  நம்சந்த    வசந்தச்  சான்றோர்
     வழிபாடாய்ப்   பாட்டுப்பூ  வைப்போம் , வாரீர்!

--> /வெல்லத்தில்  தேன்கலந்தே விந்தை  யாக
     வெவ்வேறு  சுவைக்கவிதை  வடிப்பார்/ 

வெல்லம் + தேன் = பல சுவைகள் தரச்செய்தல் விந்தையே!
--> அந்தக்கரணசுத்தி பெற அவனைப் பணிதலே வழி என்று  எடுத்துரைத்தீர்.

--> /நிலமெலாம்   பலவளம்   நிறைந்திட  மேகமும்  
                    நித்தில  மலர் சொரிய  
            நேயம்வ    ளர்த்திடும்   நெகிழ்தமிழ்ப்   பாடலை 
                      நெஞ்சுக்குச்  சொல்லி வைப்போம்/

மழைத்துளியை முத்தாகச் சொன்னீரோ?

நல்லார் உளரேல் எல்லார்க்கும் மழை!

மனத்துக்குக்    கடிதம்    வரையும்ம   னத்துடன்  
              வளமிக்க   சொல்வேண்   டினேன்!
        வாயால்  உரைத்திடின்  மனத்துக்குக்  காதுண்டோ? 
                வழிதேடி  வாட்டம் கொண்டேன்,
சினத்தாலே  மனஞ்செய்யும்  தீங்கைத்  தவிர்க்கவே 
                சீரால்அ   லங்கரி     தேன் ;
         திங்களின்  பனிசேர்த்து  வானவில்  ஓலையில் 
                  செந்தமிழ்ப்   பாப்புனைந்  தேன்!
தனக்குற்ற   மடல்காணக்   கண்ணுள்ள   தோவென்று 
               தடுமாற்றம்   கொள்ளலா  னேன்.
        தமிழை   அறிந்தின்பம்  சார்படிப்   பறிவென்றன் 
                 தளர்மனந்    தனக்கு   முண்டோ?
எனக்குற்ற  ஐயத்தால்  மடலொன்றை   எவ்வாறு 
              எழுதலாம்  என்றெண்ணி   னேன்!
        எண்ணத்தை   எண்ணியே  எழுப்பலாம் என்றெண்ணி 
                  எண்ணத்தால்    எழுதுகின்   றேன்!

--> /தமிழை   அறிந்தின்பம்  சார்படிப்   பறிவென்றன் 
                 தளர்மனந்    தனக்கு   முண்டோ/ 

படியா மனத்தைப் படிக்கவைத்தீர்! :)

பார்மீதில்  பதவிக்கும்  காசுக்கும் அலைகின்ற 
            பாமரம்   என்னுள்ள  மா?
      பக்குவம்  உள்ளதாய்ப்   பரிவுடன் வரவேற்கும் 
             பண்புள்ள  தென்னுள்ள   மா?
தேர்ந்திடின் ஆண்தானா? பெண்ணா? மற்ற.:. றிணைச் 
            சிற்றுயிர்  என்னுள்ள  மா?
       தெரியாத   இருளிலே  புரியாத  செய்தியைத் 
             தெளிவின்றிச்   செப்பலா   னேன்!
ஓர்நொடிக்   குள்காதம்   ஒருலட்சம்  தாவிடும் 
            உள்ளத்தைப்    பின்தொடர்ந்  தேன்!
      ஒருவன்மேல்   மயல்கொண்ட  ஒருத்தியின்  காதல்போல்  
              உறங்கா   திருக்கக்   கண்டேன்!
 ஆர்வத்தில்   ஊர்தேடி  ஆகாயம்  கடலெங்கும் 
              ஆங்காங்கே   சென்ற    போழ்தில்.. 
         ஆகா!என்   னுள்ளம் தன்  அன்பென்னும்  நல்விடை 
                  அனுப்பிடக்  கண்டு கொண்டேன்!

--> /பாமரம்   என்னுள்ள  மா/ 
பாமரம் =  பாக்கள் காய்க்கின்ற மரம்! 

--> /தெரியாத   இருளிலே  புரியாத  செய்தியைத் 
             தெளிவின்றிச்   செப்பலா   னேன்/
அழகு.

"இருட்டறையில் மலடு கறந்து எய்த்தவாறே" என்று அப்பர் சொல்வது நினைவிற்கு வந்தது.

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.5.6 -
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போது மடியவர்கட் காரமுதா மாரூ ரரை
எப்போதும் நினையாதே யிருட்டறையின் மலடுகறந் தெய்த்த வாறே);

  வெகுளியில்   சுடுமொழி  விடுத்திட்டால்  
           விரைவில்  அதுவே   எதிரொலிக்கும்!
 மிகுந்திடுங்   கவலையை  வெளியிட்டால் 
           மீண்டுமக்   கவலையே  விடையாகும்!
தொகுப்புடை  மலைமேல்  நாமுரைக்கும் 
           சொல்லே  மீண்டும்  வருவதுபோல்  
அகத்துறை  உள்ளம்  அன்பென்றால்  
          அழகிய  அன்பாய்  பதில்தருமே!

மனத்தை  மதித்தால்   மதிக்கும்  மனத்தை  
மனத்தால்  மதித்தே  மகிழ்!

-->  /மனத்தை  மனத்தால்  மதித்தே  மகிழ்/
வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் ! :)

நன்றி  அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
-----------------

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

ramaNi

unread,
Aug 3, 2017, 9:30:23 PM8/3/17
to சந்தவசந்தம்
விவேக்கின் கவிதை மனத்தின் உடன்பாடு, எதிர்மறை இயக்கங்களை வருணிப்பது அழகு.
ரமணி

pushpa christy

unread,
Aug 3, 2017, 9:57:01 PM8/3/17
to santhav...@googlegroups.com
மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?

மனது வைத்துத் தான், மனதுக்கு எழுத வேண்டும் இலந்தை ஐயா... 

சோதரி புஷ்பா 

On Sun, Jul 30, 2017 at 11:39 AM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kavim...@gmail.com) Add cleanup rule | More info

கவிதை அரங்கம்-  3- மனத்துக்கு ஒரு மடல்

நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்

மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்

அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்

என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்து  வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்

மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?

எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?

தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?

புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!

2017-07-30 10:37 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
முதல் பட்டியலில் இருப்பவர்கள் 1முதல் 6 வரை எந்தத் தேதியிலும் கவிதை இடலாம். 

2017-07-30 10:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

கவிதை அரங்கம்-  3- மனத்துக்கு ஒரு மடல்

நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்

மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்

அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்

என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்துக  வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்

மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?

எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?

தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?

புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!

இலந்தை

2017-07-28 16:37 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
என் பெயரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்..

அனந்த்

2017-07-27 9:43 GMT-07:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
இதுவரை பெயர் கொடுத்தவர்கள்.
1 இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக்  சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
7 இரமணி் 
8  சிவசிவா
9  புலவர்
10 எல்லே சுவாமிநாதன்
11 கலாம்
12  கோபால்
13 புஷ்பா கிறிஸ்டி

கவிதையரங்கம் 3   தொடங்கும் நாள்:1-8-2017

கவிதைவழங்கும் வரிசை
ஆகஸ்ட் 1 முதல் 6 வரை

கவிஞர்கள்:

1-  சிவ சிவா
 2 -  சுப்பராமன்
 3  புலவர்
 4 ரமணி
5 விவேக் பாரதி

ஆகஸ்ட் 8 முதல் 14 வரை

கவிஞர்கள்
1 கோபால்
2 சகோதரி புஷ்பா கிறிஷ்டி
3 அஷோக் சுப்ரமணியம்
4 சந்தர் சுப்ரமணியம்
5 கலாம்

ஆகஸ்ட் 16 முதல் 23 வரை

1 இலந்தை
2 கவியோகி
3 எல்லே சுவாமிநாதன்
மேற்கொண்டு கலந்துகொள்ள விரும்புகிறவர்கள்.

இலந்தை.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

pushpa christy

unread,
Aug 3, 2017, 9:58:43 PM8/3/17
to santhav...@googlegroups.com

”மனமே! என்னை உனக் கடிமையாக்கு என்

உடலை உந்தனுக்கே அடிமை யாக்கு

அருமை வரிகள் சுபராமன் ஐயா.. வாழ்த்துக்கள்..

அன்புடன் சோதரி புஷ்பா 

On Mon, Jul 31, 2017 at 10:18 PM, Subbaraman NV <nvsubb...@gmail.com> wrote:
Boxbe Automatic Cleanup: keep last 10 emails (nvsubb...@gmail.com) Edit rule | Delete rule | Mark important

Thanks Ramani for your kind feedback.
N V Subbaraman
(Tamil font  is on strike!!!!!)

On Tue, Aug 1, 2017 at 6:30 AM, ramaNi <sai...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (sai...@gmail.com) Add cleanup rule | More info

உங்கள் பாடல் அழகு, சுப்பராமன் ஸார்! மனத்தை வேண்டுவதில்தான் நாம் ஆன்மசாதனையில் அதன் குறுக்கீடின்றி முன்னேறலாம் என்று சுட்டியது உண்மையே.
ரமணி

On Tuesday, August 1, 2017 at 5:46:49 AM UTC+5:30, NVSR wrote:

சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017

மனத்துக்கு ஒரு மடல்!

வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்

தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்

தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே

நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே

எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை

ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே!       6

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

--

pushpa christy

unread,
Aug 3, 2017, 10:04:47 PM8/3/17
to santhav...@googlegroups.com
சொல் விளக்கத்துடன் அழகான தத்துவக் கவிதை தந்த ரமணிக்கு வாழ்த்துக்கள்.. 

உறவுக்குள் ஒரு இழப்பு.. அதனால் தான் உடன் கருத்துரைக்க வரவில்லை.. மன்னிக்கவும்..

அன்புச் சோதரி 
புஷ்பா கிறிஸ்ரி

On Tue, Aug 1, 2017 at 10:30 PM, ramaNi <sai...@gmail.com> wrote:
Boxbe Automatic Cleanup: keep last 10 emails (sai...@gmail.com) Edit rule | Delete rule | Mark important

pushpa christy

unread,
Aug 3, 2017, 10:07:14 PM8/3/17
to santhav...@googlegroups.com
முதுமை மடலாம் மூச்சிடும் நேரம் 
புதிதா யொருமடற் புயல்வரும் நண்பா 
அந்தப் பொழுதில் ஆடித் தளர்ந்து 
எந்தக் கல்வியும் ஏறா மதியுடன் 
நின்று துடிக்கும் நிலையில் 
கொன்றுவழி காட்டும் கூற்றுவன் மடலே ! 

இறுதி நாட்களின் கோலத்தைக் கூறும் வரிகள் விவேக் பாரதி.. 

வாழ்த்துக்கள்..
சோதரி
புஷ்பா 

On Wed, Aug 2, 2017 at 2:41 AM, விவேக் பாரதி <tamiludanvi...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (tamiludanvivekbharathi@gmail.com) Add cleanup rule | More info

காப்பு :

மனதுக்கொரு மடலைத்தர மகிழ்வோடு நுழைந்தேன்
எனதிக்கவி தனையற்புத எழிலாங்குகன் காக்க !
புனைசொற்பத மதிற்கற்பனை புதிதாயவன் சேர்க்க !
கனவிற்கவி சொலும்சக்தியின் கனியானவன் காப்பே !

தலைவர் வாழ்த்து :

சீய மென்னபாச் சீற்றமே காட்டிடும்
நாய கன்புகழ் நாடொறும் வாழ்கவே !
தூய நெஞ்சொடு தோன்றுமி லந்தையின்
நேயம் வேண்டிடும் நேர்மையன் வாழ்த்திதே !

மனதுக்கு ஒரு மடல் (மடலுக்கு ஒரு மனம் என்றதைச் சாடுதல்)

மனமே இதுகேள் மகிழ்வை விரும்பித்
தினமும் நீசெயும் திமிரா டங்கள்
அளவிற் கடங்கா அமைப்பில் நகர்ந்தால்
தளையிட் டடக்கும் நிலைபெற் றிடுவாய் !
மடலுக் கொருமனம் விரிவதைக் கண்டு
படபடத் துன்னிடம் பகர விழைந்தேன் !
அம்மை மடலுக் கமைதி உற்றாய் !
பொம்மை போலே பொலிவில் நகைத்தாய் !
அப்பன் மடலுக் கதிர்ந்து நடித்தாய் !
ஒப்பார் இலையென் றோங்கித் துடித்தாய் !
நண்பன் மடலில் நாட்டம் விளைத்தாய் !
பண்பா சான்மடல் பதிலைத் தவிர்த்தாய் !

காதலி மடலில் கனவை வளர்த்தாய் !
பாதி படிக்கையில் பாடித் துளிர்த்தாய் !
முகமறி யாத முழுமடல் கண்டால்
ஜெகமே உனதெனச் செய்தி விரித்தாய் !
கால மடலில் கடமை மறந்தாய் !
கோலம் வேண்டிக் கொள்கை துறந்தாய் !
இறைவன் மடலின் இயக்கம் சிதைத்தாய் !
பொறையில் லாமல் பொழுதை வதைத்தாய் !
கவிதை மடலில் கருத்தைப் பறித்தாய் !
தவமடல் வரவே தள்ளிச் சிரித்தாய் !
இளமைச் செருக்கில் இயக்கம் அறுத்தாய் !
வளமை எல்லாம் தூங்கிக் கழித்தாய் !
குழந்தையில் மடல்கள் குழைந்து வரவே
எழிலுடன் படித்த ஏற்ற நினைவுகள்
உனைவிட் டகல உயர்வைக் குறைத்தாய் !
கனவில் வாழ்ந்தே காலம் நிறைத்தாய் !
முதுமை மடலாம் மூச்சிடும் நேரம்
புதிதா யொருமடற் புயல்வரும் நண்பா
அந்தப் பொழுதில் ஆடித் தளர்ந்து
எந்தக் கல்வியும் ஏறா மதியுடன்
நின்று துடிக்கும் நிலையில்
கொன்றுவழி காட்டும் கூற்றுவன் மடலே !

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9750588007

pushpa christy

unread,
Aug 3, 2017, 10:10:45 PM8/3/17
to santhav...@googlegroups.com
மனத்தை மதிக்க அறிவுரை சொன்ன புலவர் இராமமூர்த்தியின் வரிகள் அருமை.  
வாழ்த்துக்கள் ஐயா..
சோதரி 
புஷ்பா கிறிஸ்ரி

On Thu, Aug 3, 2017 at 9:50 AM, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
Boxbe Automatic Cleanup: keep last 10 emails (rawmu...@gmail.com) Edit rule | Delete rule | Mark important

Sivasiva! Thanks for posting my poems in a proper thread. 
Expecting, corrections and comments. 
pulavar iraamamoorthy. 
2017-08-03 19:10 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

அவனடிமை

unread,
Aug 3, 2017, 11:01:52 PM8/3/17
to சந்தவசந்தம்
முதல் காப்புச் செய்யுளிலேயே கடவுளை பொதுவாக காக்கும்படி வேண்டுவதுடன் நில்லாமல் கவிதையின் பொருளாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பி வேண்டுவதில் மறைமுகமாகக் கோடிட்டுக் காட்டி, பின்னர் இறுதியில் மனத்துக்குச் சொல்லும் வரிகளில் பட்டவர்த்தனமாகக் அந்த மையக்கருத்தைக் காண்பித்துக் கொடுத்தது மிக மிகச் சிறப்பு.

அப்படி என்ன காண்பித்தார் என்று கேட்கிறீர்களா? கவிதையை மறுபடியும் முதலிலிருந்து இறுதிவரை கூர்ந்து படியுங்கள். தெரியும். ;-)

புலவர் ஐயா வழக்கம் போல் பிரமாதமாகப் பாடிவிட்டார். என்ன சொல்வது?
அன்பே சிவம் என்று சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன். :-)
இன்னும் ஒரு முறையேனும் படித்துவிட்டு வேறு கேள்விகள், ஐயங்கள் இருந்தால் பின்னர் வருகிறேன்.
வாழ்த்துகள் ஐயா!

On Thursday, August 3, 2017 at 6:50:31 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
Sivasiva! Thanks for posting my poems in a proper thread. 
Expecting, corrections and comments. 
pulavar iraamamoorthy. 
2017-08-03 19:10 GMT+05:30 Siva Siva:
Posting pulavar's poem (that came as a separate thread) in the main thread for this kavithai arangam
-----------------
சந்த வசந்தக் கவியரங்கம் - 3.
==========================

திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி.
-------------------------------------------

கடவுள் வாழ்த்து.
******************

மனத்திலு   தித்தே  மனத்தை அருந்தும் மதனை எரித்தாய்  மாதேவா !
மனத்தினைப்   பூவாய்  மாற்றியுன்  பாத  மருங்கிலி  ரைத்தேன், மாதேவா! 
சினத்தினில்  முப்புர  மெரித்தாய்; என்றன்  சிறுமைக  ளெரியச் சிரிப்பாய்! இத் 
தினத்தினில்  நின்றன் திருவருள்  வேண்டுஞ்  செய்யுளின் பொருளாய்த் திகழ்வாயே!

.

Siva Siva

unread,
Aug 4, 2017, 8:04:31 AM8/4/17
to santhavasantham

சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4

2017-07-22

"மனத்துக்கு ஒரு மடல்"

-------------------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

1)

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?

2)

பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற

குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்

நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா

வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!

3)

மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்

பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!

வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்

கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!

4)

காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்

நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்

தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்

சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!

5)
ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,

இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி

இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!

வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!

6)

கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு

சுடலையென்றும் பிரியாதாய் துணையென்று சுரர்வேண்ட

நடலையின்றி உண்டருள்செய் நம்பாஎன் மனத்துக்கோர்

மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

2017-07-30 11:37 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
முதல் பட்டியலில் இருப்பவர்கள் 1முதல் 6 வரை எந்தத் தேதியிலும் கவிதை இடலாம். 
2017-07-30 10:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

கவிதை அரங்கம்-  3- மனத்துக்கு ஒரு மடல்

நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்

மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்

என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்துக  வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்

மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?

தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?

புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Aug 4, 2017, 9:05:11 AM8/4/17
to santhav...@googlegroups.com
ஆகஸ்ட் 8 மு தல் 15 வரை எப்பொழுது வேண்டுமெனினும் கலாம் கவிதை இடலாம்.

2017-08-02 13:37 GMT-04:00 Kalam Kader <kalam...@gmail.com>:

Subbaiyar Ramasami

unread,
Aug 4, 2017, 9:06:22 AM8/4/17
to santhav...@googlegroups.com
ஆகஸ்ட் 16-23 பட்டியலில் சேர்பவர்கள் அனந்த், மீ.வி 

--

Subbaiyar Ramasami

unread,
Aug 4, 2017, 9:35:09 AM8/4/17
to santhav...@googlegroups.com

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?

ஆஹா, எதுகைஉ என்ன அழகாக விழுந்திருக்கிறது!  தரவுக்கு இது நல்வரவு

மனத்துக்கோர்உ

மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை -  மனம் நெஞ்சம் இரண்டும் ஒன்றுதானா?

இலந்தை

பி.கு: மனம்,  அகம், நெஞ்சம் உள்ளம் இவற்றையெல்லாம் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். எல்லாம் ஒன்றுதானா

--

Subbaiyar Ramasami

unread,
Aug 4, 2017, 9:39:30 AM8/4/17
to santhav...@googlegroups.com
மனத்தைக் கண்டு மருட்சியா?  மடல் விடல் விடல்  ஏன்?

மனத்தை மதித்தால் மதிக்கும் மனத்தை
மனத்தால் மதித்தே மகிழ்.

ஒரு பெரிய வியாக்கியானமே எழுதவேண்டிய குறள் இது.  அற்புதம்.
இலந்தை

Kalam Kader

unread,
Aug 4, 2017, 12:53:17 PM8/4/17
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா

அவனடிமை

unread,
Aug 4, 2017, 7:04:26 PM8/4/17
to santhav...@googlegroups.com
சிவசிவா அவர்களின் கவிதையென்றால் இங்குள்ள எல்லோரும் எதிர்பார்க்கும்படி "Hello Mr. மனம், உடனே ஓடிப் போய் சிவபெருமான் கால்ல விழுந்திடு, right now!" என்பது போன்ற ரீதியில் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவு.
ஆனால் எனக்கு 'எப்படி, என்ன என்ன புதுமையெல்லாம் கொடுப்பாரோ' என்று ஒரே ஆவல். ஆவலுடன் இருந்ததற்கு ஏமாற்றமே இல்லை.

BTW, இதுதான் இக்குழுமத்தின் கவி அரங்கங்களின் சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். It brings the best in all participating poets and throws lots of surprises and beauties in it too. And all in a matter of few weeks on one topic! :-)

இந்தக் கவிதையில் எப்பேர்ப்பட்ட அற்புதமான ஒரு எதுகைகளின் வரிசை!, சரம் சரமாக செய்யுள் செய்யுளாக, பலதும் முழு முழு சீர்களாக எதுகைகள் வருகிறதே! அப்பாடா! என்ன அழகு, என்ன அழகு!

//பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற குணங்காக்கும் மடநெஞ்சே!// - திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதன் flip side; wonderful

//மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம் பொருத்துவது வந்திலையே!//
- சூப்பர்; இதே கருத்தை இப்படி எண்சீர் அடியாக --->
<<
உள்ளமுமோர் உறுப்பென்றால் செயற்கை யாக
.....உள்ளத்தை மாற்றிடவும் காண்பார் உத்தி
>>
என்று எழுதி வைத்திருந்தேன்; வேறு யாரேனும் இதே கருத்தை எழுதுவரோ என்று காத்திருந்தேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள்... :-)

//ஒரு போதன்....இருபோதும் .. இரு,போதும்!... ஒருபோதும்// - ஆஹாஹா, வார்த்தை விளையாட்டு, மிகச் சிறப்பு

உங்கள் பாவைப் படித்து என் மனம் சிவனிடம் செல்லுமோ என்னவோ, செல்லாததற்கு நிச்சயமாக நாணும்.
நான்கு புதிய சொற்களையும் கற்க முடிந்தது:
நிணம், புணை, தாமம், நடலை - மிக்க நன்றி...

பணிவான நன்றிகளும், நல்வாழ்த்துகளும் உங்களுக்கு, சிவசிவா சுப்பிரமணியன் ஐயா :-)

ramaNi

unread,
Aug 4, 2017, 10:18:01 PM8/4/17
to சந்தவசந்தம்
புலவரின் பாடல் வீச்சும் விளைவும் அருமை. அதற்கு சிவசிவாவின் பின்னூட்டமும்.
ரமணி

ramaNi

unread,
Aug 4, 2017, 10:18:52 PM8/4/17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி.
ரமணி

Siva Siva

unread,
Aug 5, 2017, 9:21:28 AM8/5/17
to santhavasantham
With some notes now.

2017-08-04 8:04 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4

2017-07-22

"மனத்துக்கு ஒரு மடல்"

-------------------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

1)

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?

வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;

கேட்டல் - 1. To hear, hearken, listen to; செவிக்குப் புலனாக்குதல்; 11. To accept, agree to; ஏற்றுக்கொள்ளுதல்; 

2)

பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற

குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்

நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா

வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!

நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;

நரகு அடையாவணம் காக்கும் - நரகத்தில் வீழாதபடி காக்கின்ற;
 
3)

மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்

பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!

வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்

கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!

பொருதுதல் - போரிடுதல்;

மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);

கருத்தன் - கர்த்தா - தலைவன்; 

4)

காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்

நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்

தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்

சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!

புணை - தெப்பம்;

தாமம் - கயிறு; மாலை; வடம்;

சேமம் - க்ஷேமம் - இன்பம்; நல்வாழ்வு; 

5)
ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,

இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி

இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!

வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!

ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;

வருகாலம் - வினைத்தொகை - எதிர்காலம்; 

6)

கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு

சுடலையென்றும் பிரியாதாய் துணையென்று சுரர்வேண்ட

நடலையின்றி உண்டருள்செய் நம்பாஎன் மனத்துக்கோர்

மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!

நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - விரும்பப்படுபவன்; விரும்பத்தக்கவன்;
 
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

ramaNi

unread,
Aug 5, 2017, 10:08:34 PM8/5/17
to சந்தவசந்தம்
சிவசிவாவின் பாடலும் அவனடிமை மூர்த்தியவர்கள் தந்த பின்னூட்டம் மிக அருமை. எங்கும் எதிலும் ஈசனைத் தமிழில் கண்டு போற்றும் மனத்தை ஆளும் அடியார்க்குப் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறையும் பரம்பொருளன்றி வேறொன்று தோன்றுமோ?

ரமணி

Siva Siva

unread,
Aug 6, 2017, 8:56:51 AM8/6/17
to santhavasantham
நான் இட்ட பாடலைப் படித்துக் கருத்துச் சொன்னோர்க்கும் அமைதியகப் படித்தோர்க்கும் (இனிப் படிக்க இருப்போர்க்கும்) என் வணக்கம்.

அவனடிமை மூர்த்தி தாம் இரசித்தவற்றை விவரிக்கும் விதம் அழகு!

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

2017-08-04 19:04 GMT-04:00 அவனடிமை <murt...@gmail.com>:
சிவசிவா அவர்களின் கவிதையென்றால் இங்குள்ள எல்லோரும் எதிர்பார்க்கும்படி "Hello Mr. மனம், உடனே ஓடிப் போய் சிவபெருமான் கால்ல விழுந்திடு, right now!" என்பது போன்ற ரீதியில் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவு.
ஆனால் எனக்கு 'எப்படி, என்ன என்ன புதுமையெல்லாம் கொடுப்பாரோ' என்று ஒரே ஆவல். ஆவலுடன் இருந்ததற்கு ஏமாற்றமே இல்லை.

BTW, இதுதான் இக்குழுமத்தின் கவி அரங்கங்களின் சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். It brings the best in all participating poets and throws lots of surprises and beauties in it too. And all in a matter of few weeks on one topic! :-)

இந்தக் கவிதையில் எப்பேர்ப்பட்ட அற்புதமான ஒரு எதுகைகளின் வரிசை!, சரம் சரமாக செய்யுள் செய்யுளாக, பலதும் முழு முழு சீர்களாக எதுகைகள் வருகிறதே! அப்பாடா! என்ன அழகு, என்ன அழகு!

//பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற குணங்காக்கும் மடநெஞ்சே!// - திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதன் flip side; wonderful

//

மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்

பொருத்துவது வந்திலையே!
// - சூப்பர்; இதே கருத்தை இப்படி எண்சீர் அடியாக --->
<<
உள்ளமுமோர் உறுப்பென்றால் செயற்கை யாக
.....உள்ளத்தை மாற்றிடவும் காண்பார் உத்தி
>>
எழுதி வைத்திருந்தேன்; வேறு யாரும் இதே கருத்தை எழுவரோ என்று காத்திருந்தேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள்... :-)

//ஒரு போதன்....இருபோதும் .. இரு,போதும்!... ஒருபோதும்// - ஆஹாஹா, வார்த்தை விளையாட்டு, மிகச் சிறப்பு

உங்கள் பாவைப் படித்து என் மனம் சிவனிடம் செல்லுமோ என்னவோ, செல்லாததற்கு நிச்சயமாக நாணும்.
நான்கு புதிய சொற்களையும் கற்க முடிந்தது:
நிணம், புணை, தாமம், நடலை - மிக்க நன்றி...

பணிவான நன்றிகளும், நல்வாழ்த்துகளும் உங்களுக்கு, சிவசிவா சுப்பிரமணியன் ஐயா :-)

On Friday, August 4, 2017 at 5:04:31 AM UTC-7, siva siva wrote:

சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4

2017-07-22

"மனத்துக்கு ஒரு மடல்"

-------------------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

1)

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?

pushpa christy

unread,
Aug 6, 2017, 12:41:57 PM8/6/17
to santhav...@googlegroups.com
விளக்கத்துடன் கவிதையை படிக்க நலல தெளிவு பிறக்கிறது...சிவா ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.. 
நிச்சயம் இன்னொரு மனதை மாற்ற முடியாது தான்.. அதனால் தான்  மனக்கிலேசம் அடைபவர்கள், துயரத்தீயில் உழல்கின்றனர்..

சோதரி\
புஷ்பா கிறிஸ்ரி

On Sat, Aug 5, 2017 at 9:21 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
Boxbe Automatic Cleanup: keep last 10 emails (naya...@gmail.com) Edit rule | Delete rule | Mark important

With some notes now.

2017-08-04 8:04 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4

2017-07-22

"மனத்துக்கு ஒரு மடல்"

-------------------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

1)

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?

வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;

கேட்டல் - 1. To hear, hearken, listen to; செவிக்குப் புலனாக்குதல்; 11. To accept, agree to; ஏற்றுக்கொள்ளுதல்; 

2)

பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற

குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்

நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா

வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!

நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;

நரகு அடையாவணம் காக்கும் - நரகத்தில் வீழாதபடி காக்கின்ற;
 
3)

மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்

பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!

வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்

கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!

பொருதுதல் - போரிடுதல்;

மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);

கருத்தன் - கர்த்தா - தலைவன்; 

4)

காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்

நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்

தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்

சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!

புணை - தெப்பம்;

தாமம் - கயிறு; மாலை; வடம்;

சேமம் - க்ஷேமம் - இன்பம்; நல்வாழ்வு; 

5)
ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,

இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி

இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!

வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!

ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;

வருகாலம் - வினைத்தொகை - எதிர்காலம்; 

6)

கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு

சுடலையென்றும் பிரியாதாய் துணையென்று சுரர்வேண்ட

நடலையின்றி உண்டருள்செய் நம்பாஎன் மனத்துக்கோர்

மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!

நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - விரும்பப்படுபவன்; விரும்பத்தக்கவன்;
 
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--

pushpa christy

unread,
Aug 6, 2017, 12:47:20 PM8/6/17
to santhav...@googlegroups.com
கவிதை அரங்கம் 3
மனதுக்கு ஒரு மடல்...

வணக்கம் என் மனமே 
உன்னை என்னுள் வைத்தவன் இறைவன்.
அன்புடன் அவனுக்கும் நன்றி

நீ தனித்திருக்கின்றாயா?
இல்லை தவித்திருக்கின்றாயா?

என் மனமே தூங்காதே
நீ  என்றும் விழித்திரு

இதயத்தையே இழந்து தினம் 
இளமையைத் தொலைக்கும் வாழ்வு...

அதில் உனக்குள் வாழ்வைத் தேடு
அதிலும் "வாழும் மனிதத்தைத் தேடு"

உறங்கும் உயிர்களை எழுப்பு
உறவுகளில் உயிர்களைக் கூட்டு

மனமே உனக்கெனக் கடமையுண்டு
மனதாரப் பிறரை மதிக்கப் பழகு

மானசீகமாகப் பிறரை மன்னித்து தொழு
தான தருமங்களால் தரித்திரரை தேற்று

உலகம் பிரண்டு அடம்பிடித்திருக்கும்
உலகை நிமிர்த்தும் நெம்புகோல் நீயே

பிறரைப் புகழ்ந்து வாழாதே
பிறர் பிழை, களைந்து   புகழாதே

உறவுக் கலசம் உனக்கெனத் தரப்பட்டது
உதறித் தள்ளி அதை உடைத்துவிடாதே

கொம்பு கொண்ட உறவுகளை கொழுத்திவிடு
அன்பு கொண்ட உறவுகளை ஆதரித்து மகிழ்

உன்னுள் இருப்பது வெளிச்சமா? இருளா?
அது உனக்கே தெரியும் உண்மை

வெளிச்சமெனில் உன் முகம் பிரகாசிக்கும்
இருளெனில் அங்கே அருவருப்புத் தெரியும்

நிறைவு காண்பாய் உன்னுள் நிறைந்து
குறைவு பெறுவாய் பிறரில் குறைகண்டால்

அடிமை விலங்குகளை அறுத்தெறி
அடங்கா மனதுகளை தகர்த்தெறி

கோபமாக, பொறாமையா, ஆத்திரமாக, துயரமாக 
பாபமாக என்னை படாது படுத்தும் உலகம்

என்னுள்ளிருந்து என்னை ஆட்கொண்டு 
என்னை வழிநடதும் மனமே, உனக்கு நன்றி...

உன் வார்த்தைகள் உண்மைகளாகட்டும்
உன்னால் என்றும் உலகம் செழிக்கட்டும்.
 
என்னை நடத்தும் என் மனமே 
என்றும் உனக்கு நன்றி.. 

மீண்டும் தொடரும் வரை 
அன்புடன் விடை பெறுகிறேன் மனமே..

Kaviyogi Vedham

unread,
Aug 6, 2017, 4:47:01 PM8/6/17
to santhavasantham

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?

.

இவ்வரிகள் எனக்குப் பிடித்திருந்தது.

 அத்தனை சிவாவரிகளும், சிவனையே நினைக்கத்தூண்டுபவை.

 வாழ்க அவர்!,

 யோகியார்

..
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Vis Gop

unread,
Aug 7, 2017, 1:21:48 AM8/7/17
to santhav...@googlegroups.com
தேடி அலைந்தும் திறனாய்ந்தும்
   தெளிவு மறைந்தே ஏய்த்ததனால்
வாடித் தளர்ந்து வீழாமல்
   மனத்தை அறியப் பின்தொடர்ந்தே 
ஓடிப் பிடித்தார் 'உண்மையிலே
   உள்ளம் அன்புக் கே'என்று!
பாடிப் பிறர்க்கும் அமுதளித்தார் 
   பாவலர் புலவர் சுவைநிறைத்தே!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2017-08-03 19:20 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
Sivasiva! Thanks for posting my poems in a proper thread. 
Expecting, corrections and comments. 
pulavar iraamamoorthy. 
2017-08-03 19:10 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
Posting pulavar's poem (that came as a separate thread) in the main thread for this kavithai arangam
-----------------
சந்த வசந்தக் கவியரங்கம் - 3.
==========================

திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி.
-------------------------------------------

கடவுள் வாழ்த்து.
******************
!
. . . . .
.........

Vis Gop

unread,
Aug 7, 2017, 2:07:09 AM8/7/17
to santhav...@googlegroups.com
ஒருபோதும் ஈசுரனை உன்னமற வாமனத்தை
இருபோதும் நினையென்றே இவர்சொல்லும் மடல்காண
இருபாதம் தமைவிட்டே என்றுவரும் அந்தமனம்?
ஒருபோதன் தருபோதம் உற்றவனுக் கதுபோதும்!

திரு சிவசிவாவின் பாடல் மிக அருமை. முதல் 5 பாடல்களில் மனத்துக்கு நல்வழி யாதென்று காட்டி, கடைசியில் இந்த மடலை மதி என்று வேண்டுவது உருக்கமாக இருக்கிறது. மடலை அனுப்பிய பிறகு, அந்த மடல் மனத்துக்கு நல்வழி காட்டவேண்டும் என்று இறைவனை வேண்டுவது நோக்கத்தை முழுமைப் படுத்துகிறது.
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Aug 7, 2017, 2:22:00 AM8/7/17
to santhav...@googlegroups.com
வணக்கத்துடன் தொடங்கி விடைபெறும் வரை, உண்மையிலேயே ஒரு கடிதம்போல அமைந்திருக்கிறது, சகோதரி புஷ்பாவின் பாடல்.  அழகு!

"வாழும் மனிதத்தைத் தேடு"
உறங்கும் உயிர்களை எழுப்பு
உறவுகளில் உயிர்களைக் கூட்டு                             என்று மனிதத்தை மேம்படுத்திப் பேசியபின்

கொம்பு கொண்ட உறவுகளை கொழு(ளு)த்திவிடு    என்று விரோதத்தைப் போதிப்பதேன்?

மனதாரப் பிறரை மதிக்கப் பழகு
மானசீகமாகப் பிறரை மன்னித்து தொழு         மனத்திடம் பேசுகையில் இந்தச் சொற்களின் பொருளென்ன?

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.
It is loading more messages.
0 new messages