நினைவு நாரில் கனவுப்பூக்கள்!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நினைவு நாரில் கனவுப்பூக்கள்!
சில்லெறிந்து நொண்டியிட்டுச்
சிறுவரங்கு தாவுவார்!
மல்லிவிற்க என்னைமட்டும்
மாட்டிவிட்ட பாவியார்?
நூலெடுத்து பள்ளிசெல்லும்
நூறுமங்கை ஓங்குவர்!
நூலெடுத்துப் பூத்தொடுத்து
நொந்துளத்துள் ஏங்குவேன்!
கல்விகற்கும் மாணவர்கள்
கண்டுகொள்வர் சாத்திரம்!
முல்லைமல்லி கூவுகின்ற
முறையெனக்கு மாத்திரம்!மாலைதன்னில் நார்தொடுக்கும்
மலரனைத்தும் ஓர்குலம்!
சாலைதன்னில் பூவிரிக்கும்
சிறுமிமட்டும் ஓர்புறம்!பூவளித்துக் கோவிலுக்குள்
புண்ணியத்தைத் தேடுவர்!
பூவளிக்கும் என்தொழிலைப்
பேரமாக்கிச் சாடுவர்!
பூக்குமுன்னர் தோளிலாடப்
பூவைநாடும் ஆண்டவா!
பூக்குமுன்னர் வாடிநிற்கும்
பூவைஉன்னை வேண்டவா?
நல்லமுல்லை சேர்த்ததாலே
நாரு(ம்)மணம் வீசிடும்!
கல்வியில்லை என்பதாலே
காலமென்னை ஏசிடும்!
சோலைதந்த மலரெனக்குச்
சொந்தமாகிப் போனது!
காலையென்ன? மாலையென்ன?
கனவுவாழ்க்கை ஆனது!போதையிலே தந்தையெனைப்
போட்டுடைத்துப் போனதால்
பாதையிலே பூவிரிக்கும்
பாடெனதாய் ஆனதோ?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
திரு சிவசிவா எழுப்பிய ஒரு வினாவுக்கு விடையளிக்க மறந்து விட்டேன்.
போதையிலே தந்தையெனைப் போட்டுடைத்துப் போனதால் - இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை புடைத்துவிட்டுப் போனார் என்ற பொருளா?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
மழலையர் கவிதைகள்
அன்புடன்,
தங்கமணி.
On Dec 1, 5:49 am, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> *நினைவு நாரில் கனவுப்பூக்கள்!*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கெஞ்சி நின்ற பொம்மையே!
.. கோபம் என்ன? நீரினால்
பஞ்சு கொண்ட உன்னுடல்
.. பாழ டைந்துப் போய்விடும்!
மஞ்சள் வண்ணம் யாவுமே
.. மறைந்து போகும் என்பதால்
அஞ்சி அன்று கடற்கரை
.. அழைத்துச் செல்ல வில்லைநான்!
கருத்துகளுக்கு மிக்க நன்றி.
1)
/நீலச் சட்டை யாவிலும்.. நிறைய ஈரம் ஆனதே! /
யாவிலும்?
"நீலச் சட்டை எங்கணும்.. நிறைய ஈரம் ஆனதே" என்பது பொருந்துமோ?
நீங்கள் குறிப்பிட்ட சொல் பொருந்துகிறது. ஆயினும் மழலைப் பாடல் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன்.
2)
/கெஞ்சி நின்ற பொம்மையே!
.. கோபம் என்ன? நீரினால் /
மோனை அமைந்தால் இன்னும் இவ்வடி சிறக்கும்.
சூழலைச் சொல்லவேண்டியிருந்ததால் கொஞ்சி என்ற வார்த்தையைவிட கெஞ்சி என்பது பொருத்தமாக இருக்கும் என்றே விட்டுவிட்டேன்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஒரு போன்சாய் மரத்தின் புலம்பல்...
சோர்வறு நெஞ்சே!
பாரத விடியலில் பாரதி
(காவடிச் சிந்து)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பாரதி என்னும் ஜீவநதி
பாரதி எனும் ஜீவ நதி மிகவும் அற்புதமான கவிதை.இனி உங்களைச் சந்த
சுப்பிரமனியன் என்று அழைக்கலம் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
கோ.கணபதி
On 12/12/11, Chandar Subramanian <chandarsu...@gmail.com> wrote:
> *பாரதி என்னும் ஜீவநதி*
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
குன்றிலே விளக்கெரிந்தால்!

ஐயா, உமக்குக் கவிஞப் பட்டம் பெறவேண்டும் என்றோராசையுண்டோ? எனில் -
இனிக் கவிதையெழுதவேண்டாம். ......!நகுபோலியன்
On Nov 30, 7:49 pm, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
*நினைவு நாரில் கனவுப்பூக்கள்!*
பைந்தமிழ்ப் பூவனம்
மழலையர் சிரிப்பு!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நிர்வாணம்

On 12/20/11, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
> ஆகா..உயர் ஆன்மத் தாகம் மின்னலிடும் அழகிய கவி இதுவே,
> யோகியார்
>
> 2011/12/20 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
>
>> *நிர்வாணம்*
நம்பினார் கெடுவதில்லை!
கவிதைக் கையூட்டு!
(கிளிக்கண்ணி)
இருட்டில் வெளிச்சம்
நல்ல சிந்தனை.
'கோலம் நிறைந்துக் குழையும் கனவுலகில்'என்பதில்,ஒற்றை நீக்கிவிடவும். 'நிறைந்து குழையும்' என்பதே சரியாக அமையும். 'இருட்டுப் பொழுதில் இணைப்பின்றவரை இழந்து தவிக்கின்றேன்' என்பதில், 'இணைப்பின்றவரை' என்பதைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாம்.
அ.ரா.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தனிமரம்
வருக புத்தாண்டே வருக!

காலக்கொடி
எல்லாம் நிலைத்தெதும் இயங்கா தாயும்
நில்லாப் பொருளாய் நீண்டிடும் காலம்;
ஒற்றைக் கோடாய் ஒருதுளிக் கீற்றாய்
வற்றா தோடும் வழக்குடை ஆறு!
நிகழ்வைக் கொல்லும் நிரந்தரக் கூற்றன்!
அகழ்ந்திடற் கரிய ஆழப் பெருங்கடல்!
திருப்பம் இல்லாத் திசைசெலும் தெருவில்
விருப்பும் வெறுப்பும் விலக்கிய பயணம்!
உயிருள பொருளை உரசும் போக்கில்
வயதெனும் மாற்றம் வழங்கும் மாயன்!
கழித்தல் அறியாக் கணக்கியல் மூலம்!
ஒழிப்பில் பிறப்பாய் உயிரின் தோற்றம்!
நீற்றுப் போகும் நிகழ்வை நினைவாய்
ஆற்றுப் படுத்தும் அற்புதப் பாணன்!
முப்பரி மாணம் முழுதையும் அசைத்துச்
செப்படி வித்தை செய்திடும் காலன்!
நான்காம் கோணம் நடக்கும் விதத்தால்
மூன்றில் மாற்றம் முடித லானது!
கணங்கள் முகிழ்க்கும் காலக் கொடியில்
நிணங்கொள் காயம் நிழற்கனி ஆமே!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
மழலையர் சிரிப்பு!
சின்னச் சிரிப்பில் ஒருகவிதை - புதுச்
.. சிந்தாய் மலரும் தருணமிது!
கன்னம் குழியக் கவியமுது - நம்
.. கண்ணில் படிந்து வழிகிறது!வெள்ளை மனத்தின் விடியல்கள் - அவை
.. விடிந்தும் நிலவே தவழ்கிறது!
கள்ளின் சுவைசேர் கனியமுது! - அதில்
.. களித்துக் கருக்கல் கரைகிறது!தொற்றிப் படரும் துளிர்சிரிப்பு! - மனம்
.. தொட்டுச் சுகத்தைச் சுகிக்கிறது!
முற்றும் துறந்தும் முனிவருளம் - இதன்
.. மொட்டுச் சிரிப்பால் முகிழ்க்கிறது!இதழில் இழையும் சிரிப்பதனால் - நம்
.. இதயம் இனிதாய் இசைக்கிறது!
அதரம் பொழியும் அசைவுகளால் - வாய்
.. அரங்கில் பரதம் நடக்கிறது!குட்டிக் குமுதம் விரிகிறது! - குழல்
.. குழையும் இசையைப் பொழிகிறது!
பட்டு பனியால் நனைகிறது! - மனம்
.. பாட்டில் பரவசம் அடைகிறது!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பன்முக தெய்வதம்பாரதி...தெய்வதத்தின் பன்முகத்தைச் தெளிந்துறவிற் கண்டவன்!
.. சேவகனாய்க் காதலனாய்ச் சீர்தொகுத்துத் தந்தவன்!
செய்கைகளே வேள்வியெனும் சித்தாந்தம் என்றவன்!
.. சித்திலெலாம் அவனுருவைச் சித்தரித்துக் கொண்டவன்!
மெய்யறிவைப் பாவிலேற்றி மெய்சிலிர்க்கச் செய்தவன்!
.. மேன்மையுடை தெய்வதத்தை மானுடத்தில் கண்டவன்!
பெய்யமுதைப் பாடல்வழி பெற்றுலகுக் கீந்தவன்!
.. பேரின்பப் புதிரவிழ்க்கும் பெருங்கவிதை நெய்தவன்! (1)பாரதி கண்ட தெய்வதம்...போர்த்தொடுக்கும் போதிலங்கு தேர்நடத்தித் தந்தவன்!
.. பொய்யுளத்தின் நீள்கருவப் பூண்டழியச் செய்பவன்!
கார்மழையில் ஓர்குடையாய்க் காத்துநிற்கும் காவலன்!
.. கள்ளநெஞ்சர் சொல்லுரைக்கக் காய்த்தழிக்கும் தோழனாம்!
நீர்வழியில் நாளழுகி நிலைத்துநின்ற பாசியை
.. நீக்குகின்ற வெள்ளமாகி நெஞ்சைவென்று நின்றவன்!
பார்மடியில் நானுறங்கப் பாசமுள்ள பூமியாய்ப்
.. பலகதைகள் சொல்லியென்னுட் பாவுகின்ற தாயவன்! (2)
வாழ்த்துக்கு நன்றி.
1)
போர் தொடுக்கும் என்று 'த்' மிகாது வரும் என்று எண்ணுகிறேன்.
குறிப்புக்கு நன்றி.
2)
கார்மழை - கார்ப்பருவ மழை என்ற பொருளிலா?
ஆம்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
எந்நாளோ?
பாசியிற் பழகும் தண்ணீர்
.. பருகுதற் காகா தென்றும்!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
'பாசியிற் பழகும் தண்ணீர்' என்பது குறித்த உங்களின் கருத்துக்கு நன்றி. சரிசெய்கிறேன்.
இரண்டாவது கருத்தில் நீங்கள் கூற வருவது முதல் விருத்தத்தையா? அல்லது ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் கையாள்வதையா? விவரம் மேலும் இருந்தால் நல்லது.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On 1/16/12, Chandar Subramanian <chandarsu...@gmail.com> wrote:
> *ஆதவன் அந்தாதி *
> *குறிப்பு*: அடிகளுக்கிடையே ஒன்றாம் இரண்டாம் சீரில் எதுகையும், அடிதோறும்
> ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனையும் வருமாறு அமைக்கப்பட்ட வஞ்சி விருத்த
> அந்தாதி.
>
>
> --
> அன்புடன்
> சந்தர் சுப்ரமணியன்
> www.MovingMoon.com
>
ஆதவன் அந்தாதிசோதி போலெழும் தீச்சுடர்
மோதுங் காலிருள் மூப்புறும்!
சூதின் லீலைகள் தோற்றிட
ஆதி மூலவ! ஆள்கவே! (1)
ஆளும் மாயைகள் அற்றிட
நாளும் பாயொளி நல்கிடும்!
நீளும் தீயவை நீக்கிட
கோள மாயெழும் கூற்றமே! (2)கூற்றம் போலிருள் கொன்றிடும்
ஆற்ற லாலதன் ஆளுமை
சாற்றும் ஞாலமும்! தாய்முறை
ஏற்ற தாலொளி ஈனுமே! (3)
ஈனும் பொன்னொளி ஈந்தியே
தான மென்பதன் தத்துவ
ஞான மொன்றினை நல்கிடும்
வான மண்டல மையமே! (4)
மைய ஊற்றென வான்மிசை
வையம் மாற்றிடும் வேலையைப்
பைய ஆற்றிடும் பானுவைத்
தையில் போற்றுவம் தாயதே! (5)தாயின் அண்மையைச் சார்ந்திடும்
சேயின் துன்பெலாம் தீர்ந்திடும்!
தூய மண்மிசை சூதெலாம்
ஓய வெண்கதிர் ஓங்கவே! (6)
ஓங்கும் வானவன் ஊர்ந்திடத்
தூங்கும் மானுடர்ச் சோர்வெலாம்
நீங்கும் காணது நீங்கிடின்
யாங்கும் மேனிலை ஆகுமே! (7)
ஆகும் யாதிலும் ஆதியாய்ப்
போகப் பாதைஈன் பூதியாய்த்
தேக சோதியின் சீருடை
ஏக மூதுவ ஏந்தலே! (8)
ஏந்தும் தீச்சுடர் யாங்ஙனும்
போந்த பூச்சரம் போல்விழ
நீந்தும் நீச்சலில் நீழலை
மாந்தும் மாச்சுடர் வாழ்கவே! (மாந்துதல் = உண்ணுதல்) (9)
6.1.2 அந்தாதி முறைப்பாடல்கள்
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், கோயில் மூத்த திருப்பதிகம். கோயில் திருப்பதிகம், குழைத்த பத்து, யாத்திரைப் பத்து ஆகிய பகுதிகளை அந்தாதி முறையில் பாடியுள்ளார். திருமூலர், திருமந்திரத்தில் பல பாடல்களை அந்தாதியாக அமைத்துள்ளார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரம் பாடல்களும் அந்தாதித் தொடையால் அமைந்துள்ளன.
சிற்றிலக்கிய வகைகளில் இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணி மாலை, நான்மணி மாலை, கலம்பகம் ஆகியன அந்தாதித்து முடியும் நிலையைத் தம் இலக்கணமாகக் கொண்டு உள்ளன.
********************--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
1)
இருள் மூப்புறும்?
'இருள் முற்றுறும்' என்பது இன்னும் பொருந்துமோ?
முற்றுறும் என்பது நேரடிப்பொருள். மூப்புறும் என்றால் அழிவதற்கான காலம் வந்ததாகப் பொருள்கொள்ளலாம். (வானோங்கிய புகழ் என்பது போல!)
5)
/மானுடர்ச் சோர்வெலாம் /
வல்லொற்று மிகாமல் 'மானுடர்* சோர்வெலாம்' என்று வரவேண்டுமோ?
"அரசன் மானுடர் சோர்வெலாம் நீக்கவே' எனும் வரியை எப்படி பொருள் கொள்வது? அரசன் நீக்கினானா அல்லது மானுடன் நீக்கினானா? இத்தகைய பயன்பாட்டில் ச் மிகும் போது சோர்வு மானுடர்க்குரியது என்பது விளங்குவது போல் எனக்குத் தோன்றுகிறது. தவறெனின் விளக்கவும்.
6)
'ஏக மூதுவ' = ?
ஒன்றான, மூதையனான
7)
யாங்ஙனும் = ? (யாங்கணும்?)
நீங்கள் சுட்டியது சரியே.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
திருவாளர்கள் தமிழ மல்லன், சிவ சிவா, பசுபதியார் ஆகியோர்களின் அந்தாதி அமைப்பு குறித்த கருத்துகளுக்கு நன்றி. இப்பாடலில் அந்தாதி முறை அமைக்க, பாரதியின் 'கண்ணன் திருவடி' என்னும் பாடலே என்னைத் தூண்டியது. 'அந்தாதி' என நூற்பெயராகக் கொள்ள வேண்டுமெனின், அதில் வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் மட்டுமே அமைய வேண்டுமா? விளக்கவும். திரு சிவ சிவா குறிப்பிட்டபடி, சில 'ஒருபா ஒரு பஃது' வகைத் தொகுப்புகளிலும் அந்தாதி முறை கடைபிடிக்கப் பட்டுள்ளது. ஆயினும் நூற்பெயர் அந்தாதி என்று அமையப் பெறவில்லை.