பிரதோஷப் பாடல்

12 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 18, 2025, 11:21:36 PMSep 18
to சந்தவசந்தம்







இன்று பிரதோஷ நன்னாள்

        <> உன் பாடு <>


         திருச்சிற்றம்பலம்


  


ஓதம் தனிலே ஒருகல்லைப் பூட்டியன்று

சேதம் விளைக்கத் துணிந்தோரை – வாதிட்டுப்

போதம் புகட்டிய புண்ணியர் போற்றியஉன்

பாதம்விழு வேன்பின்னுன் பாடு!

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 19, 2025, 1:39:29 AMSep 19
to santhav...@googlegroups.com
ஈற்றடி மிகவும் அருமை திரு அனந்த்

               —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Sep 19, 2025, 2:22:27 AMSep 19
to santhav...@googlegroups.com
அருமை, அனந்த் ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 19, 2025, at 08:51, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia0Bidyy9tNy8%3D9Zo%3DEQ6YNj57uiqQWYjEVYffa9fdJFTw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Sep 19, 2025, 8:40:43 AMSep 19
to santhav...@googlegroups.com
Nice.

ஓதம் தனிலே ஒருகல்லைப் பூட்டியன்று
  சேதம் விளைக்கத் துணிந்தோரை /

I wonder if any rewording may make it clearer.

ஓதம் தனில்கல் உடன்கட்டி ஆழ்த்தியுயிர்ச் ?

வி. சுப்பிரமணியன்


On Thu, Sep 18, 2025 at 11:21 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:






இன்று பிரதோஷ நன்னாள்

        <> உன் பாடு <>


         திருச்சிற்றம்பலம்


GOPAL Vis

unread,
Sep 19, 2025, 11:08:02 AMSep 19
to santhav...@googlegroups.com
அருமைச் சரணாகதி.

பாதம் விழுந்(து)அதைப் பாடவும் கிட்டியபின்
ஏதங் கினியோர் இனிப்பு?
கோபால்.

On Fri, Sep 19, 2025 at 8:51 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:






இன்று பிரதோஷ நன்னாள்

        <> உன் பாடு <>


         திருச்சிற்றம்பலம்

ஓதம் தனிலே ஒருகல்லைப் பூட்டியன்று

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 19, 2025, 1:15:31 PMSep 19
to santhav...@googlegroups.com
நன்றி. நீங்கள் கூறியவாறு அமைத்து இட்ட வடிவம்:

ஓதம் தனில்கல் உடன்கட்டி ஆழ்த்தியுயிர்ச்

சேதம் விளைக்கத் துணிந்தோரை – வாதிட்டுப்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 3, 2025, 11:10:48 PMOct 3
to சந்தவசந்தம்


                             திருச்சிற்றம்பலம் 
                                                
                       <> கூலி தருவாய் <>


               பிட்டுக்கு மண் சுமந்தது.JPG


      எப்போதும் உனைமறவா தேத்தும் அடியவர்க்குத்

     தப்பாது காசுதரும் சாமிஉனை  ஒப்புக்குப்

     பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும்

     காசுதரல் வேண்டும் கனிந்து.

         (ஒப்புக்கு = போலியாக)

                                              ... அனந்த் 4-10-2025


On Thu, Sep 18, 2025 at 11:21 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 3, 2025, 11:18:58 PMOct 3
to சந்தவசந்தம்
(படத்துடன் மீள் இடுகை)
 
ன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
 
                             திருச்சிற்றம்பலம் 
                                                
                       <> கூலி தருவாய் <>


               
                   image.png


     எப்போதும் உனைமறவா தேத்தும் அடியவர்க்குத்

     தப்பாது காசுதரும் சாமிஉனை  ஒப்புக்குப்

     பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும்

     காசுதரல் வேண்டும் கனிந்து.

         (  ஒப்புக்கு = போலியாக)

                                              ... அனந்த் 4-10-2025

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 3, 2025, 11:39:44 PMOct 3
to சந்தவசந்தம்
ன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
 
                             திருச்சிற்றம்பலம் 
                                                
                       <> கூலி தருவாய் <>


               
                   image.png


     எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத்

Siva Siva

unread,
Oct 4, 2025, 9:17:18 AMOct 4
to santhav...@googlegroups.com
நல்ல பாடல்.

3-ஆம் அடியில் மோனை மறைந்து உள்ளதோ?

அருள்வேண்டாது காசு வேண்டுவதன் கருத்து என்ன? இப்பாடலைப் படிக்கவிருக்கும் பிறர் நோக்கில் சொல்லப்பட்ட கருத்தா?

வி. சுப்பிரமணியன்
On Fri, Oct 3, 2025 at 11:39 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
ன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
 
                             திருச்சிற்றம்பலம் 
                                                
                       <> கூலி தருவாய் <>

GOPAL Vis

unread,
Oct 4, 2025, 9:26:39 AMOct 4
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [04 அக்டோபர் 2025]

நான் அழித்துக் கா!

திரமான நாளின்று பிரதோஷ வேளையில்
……வரமொன்று வேண்டி வந்தேன்!
கரமொன்று கூடிடச் சிரமுங் குனிந்திடப்
……பர உன்னை நாடி நின்றேன்!
அரவொன்று சூடி ஓர் அரை அம்பை யான நீ
……சரணென்று வீழ்ந்து விட்டேன்!
புரம் அன்(று) எரித்துநீ சுரரைப் புரந்தவா(று)
……அர நான் அழித்(து) எனைக் கா!

[திரமான நாள் = சனிக்கிழமை; பர = பரமனே!; நான் = அகங்காரம்; அம்பை = உமா தேவி; சுரர் = தேவர்கள்; புரத்தல் = காத்தல்; கா = காப்பாற்று]
[பரமனே! இன்றைய சனிப் பிரதோஷ வேளையில் ஒரு வரம் வேண்டி, கரங்கூப்பிச் சிரம் தாழ்த்தி உன்னை நாடி வந்தேன். பாம்பைச் சூடிய பாதி உமை வடிவாகிய நீயே அடைக்கலம் என்று (உன் பதத்தில்) வீழ்ந்து விட்டேன்! அரனே! அன்று முப்புரமும் எரித்துத் தேவர்களைக் காத்தவாறு, இன்று என் அகங்காரத்தை அழித்து என்னைக் காப்பாற்று!

நல்வாழ்த்துகள்
கோபால்.

GOPAL Vis

unread,
Oct 4, 2025, 9:35:40 AMOct 4
to santhav...@googlegroups.com
காசு வேண்டும் தங்கள் பாடல் புதுமை! 

ஆசுதோ டன்பெயர் ஆர்சொலினும் தாரானோ
மாசுகா ணாது வரம்!

[ஆசு தோடன் = ஆசுதோஷன் = விரைவில் மகிழ்பவன்]
கோபால்.

On Sat, Oct 4, 2025 at 9:09 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
ன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
 
                             திருச்சிற்றம்பலம் 
                                                
                       <> கூலி தருவாய் <>

     எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத்

Subbaier Ramasami

unread,
Oct 4, 2025, 11:40:37 AMOct 4
to santhav...@googlegroups.com
மிக மிக அருமை. 
பாதம்விழு வேன்பின்னுன் பாடு!- மிகச் சிறப்பு
இலந்தை

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2025, 1:56:06 PMOct 4
to santhav...@googlegroups.com
நன்றி சிவ சிவா.

>> முதல் இரு சீர்களில் மோனை அமைந்தது. “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்’ என்பதைப் போன்று இது 1,2 சீர் மோனை (’கவிதை இயற்றிக் கலக்கு, பக்.60. 

>> அருள்வேண்டாது காசு வேண்டுவதன் கருத்து என்ன? இப்பாடலைப் படிக்கவிருக்கும் பிறர் நோக்கில் சொல்லப்பட்ட கருத்தா?
இங்கு, காசு என்பது அருள், வீடு பேறு என்பவை போல மறைமுகமாகக் குறிக்கும்.

..அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2025, 9:36:17 PMOct 4
to santhav...@googlegroups.com
வாசி தீரவே காசு நல்குவீர் என்று திருஞானம்பந்தப் பெருமான் கேட்டது போலவும் எடுத்துக் கொள்ளலாம் அப்படி அவன் கொடுத்தால் ஏழைகளுக்குக் கொடுக்கலாம்! 

Sent from my iPhone

On Oct 4, 2025, at 1:55 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Oct 4, 2025, 9:52:18 PMOct 4
to santhav...@googlegroups.com
மிக அருமையான பாட்டு, அனந்த்ஜீ.

உங்களது விளக்கத்தின் மூலம் நானும் தெளிவடைந்தேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 4, 2025, at 23:26, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2025, 10:22:52 PMOct 4
to santhav...@googlegroups.com
நன்றி ராம் கி.

பிரதோஷப் பாடல்களைப் படித்த அன்பர்களைக் கரங்கூப்பி வணங்குகிறேன். 

On Sat, Oct 4, 2025 at 9:52 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமையான பாட்டு, அனந்த்ஜீ.

உங்களது விளக்கத்தின் மூலம் நானும் தெளிவடைந்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Fri, Oct 3, 2025 at 11:39 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

ன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
 
                             திருச்சிற்றம்பலம் 
                                                
                       <> கூலி தருவாய் <>


               
                   


     எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத்

     தப்பாது காசுதரும் சாமிஉனை  ஒப்புக்குப்

     பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும்

     காசுதரல் வேண்டும் கனிந்து.

         (  ஒப்புக்கு = போலியாக)

                                              ... அனந்த் 4-10-2025

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group..

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2025, 10:45:58 PMOct 4
to santhav...@googlegroups.com
அருமை!
> அர நான் அழித்(து) எனைக் கா! - நல்ல முரண்!

அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2025, 10:47:10 PMOct 4
to santhav...@googlegroups.com
🙏🙏🙏

அனந்த்

--

GOPAL Vis

unread,
Oct 5, 2025, 5:39:59 AMOct 5
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்.

GOPAL Vis

unread,
Oct 18, 2025, 12:38:53 AM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [18 அக்டோபர் 2025]
வண்ணச் சந்தம் (137)
[தனனா தனனா தனதான]
[‘வரதா மணிநீ யெனவோரில்’ எனத்தொடங்கும் திருப்புகழின் சந்தம்]

அடியார் நலம்!

படமார் பணியூர் வலிமார்ப!
……பணிவாய் விடமோர் மணியாகி
மிடறே றிடவான் மதியோடு
……விசையா றணிவார் சடையோனே!
இடமா யுமையா ளமர்தேகா!
……இனிதே மொழிநா அருள்வாயே!
நடமா டரசே அடியாரின்
……நலமே கருதோர் பெருமானே!
•~•~•~•~•~•~•~•
சொற்பிரிவு; பொருள்:

படம் ஆர் பணி ஊர் வலிமார்ப!
……பணி வாய் விடம் ஓர் மணியாகி
மிடறு ஏறிட, வான் மதியோடு
……விசை ஆறு அணி வார் சடையோனே!
இடமாய் உமையாள் அமர் தேகா!
……இனிதே மொழி நா அருள்வாயே!
நடமாடு அரசே! அடியாரின்
……நலமே கருது ஓர் பெருமானே!

[பணி = பாம்பு; மிடறு = கழுத்து; வார் = நீளமான; ஓர் = ஒப்பற்ற]
[படம் ஏந்திய பாம்பு ஊர்கின்ற வலிமையான மார்பை உடையவனே!
(வாசுகிப்) பாம்பின் வாயிலிருந்து வந்த விடமே ஒரு மணியாய் ஆகி உன் கழுத்தில் ஏறி இருக்க, வானத்தின் நிலவையும் வேகம் மிக்க ஆற்றையும் அணிந்த நீண்ட சடையை உடையவனே! இடப் புறத்தில் உமாதேவி விளங்கும் தேகத்தை உடையவனே! இனிமையானவற்றை மட்டுமே பேசுகிற நாக்கைத் தருக! நடனம் ஆடுகின்ற அரசனே! அடியாரின் நலனையே எண்ணிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற சிவபெருமானே!]


நல்வாழ்த்துகள்
கோபால்.
[18/10/2025]VGK

Siva Siva

unread,
Oct 18, 2025, 10:19:08 AM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
நல்ல வேண்டுகோள்.

வி. சுப்பிரமணியன்

GOPAL Vis

unread,
Oct 18, 2025, 1:54:55 PM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு சிவசிவா.
கோபால்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 18, 2025, 8:38:56 PM (4 days ago) Oct 18
to GOPAL Vis, santhav...@googlegroups.com
மிக அருமை, கோபால்
அனந்த்

Sent from my iPhone

> On Oct 18, 2025, at 1:54 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
>
Reply all
Reply to author
Forward
0 new messages