தாயுமானவர் பாடல்களில் தாயும் சேயும்
முன்னுரை:
இற்றைக்கு சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்னர் தோன்றி; தமிழக மக்களுக்குத் தன் அனுபவத்தைக் கூறும் வழிகாட்டியாகத் தாயுமானவரின் பாடல்கள் அமைந்துள்ளன. இறைப்பொருளின் பெருமையைக் கூறும் வழிபாட்டுப் பாடல்களும் உள்ளன. பகுத்தறிவோடு வினாத்தொடுக்கும் சீர்திருத்தப் பாடல்களும் உள்ளன. இப்பாடல்களில் இடம் பெறும் உவமைகள் இலக்கிய நயம் சேர்ப்பதோடன்றி; கருத்துப் புலப்பாட்டிற்கும் பயனாகின்றன. தாய் சேய் உறவை அவர் உவமையாகப் பல இடங்களில் கையாளுகிறார். அவ்வுவமை தரும் இலக்கிய இன்பமே இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.
பசுவும் கன்றும் :
“கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலெனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே “ எனும் கண்ணியில்
சேதா என்பது ஈன்றணிமை வாய்ந்த பசுவைக் குறிக்கிறது. கன்றை ஈன்று தாய்மையில் திளைக்கும் பசு இங்கு இறைவனுக்கு உவமை ஆகிறது. பசுவின் கனிவிலும், இரக்கத்திலும் திளைக்கும் கன்று பத்தனுக்கு உவமை ஆகிறது. இறைவனின் கருணைக்காக ஏங்கும் அடியவர் குரலாக இங்கே தாயுமானவரின் குரல் ஒலிக்கிறது. அவரது பத்திமை இறைவனைத் தாயாக நோக்கும் அதே நேரத்தில் தந்தையாகவும் நோக்குகிறது. மொத்தத்தில் இறைப்பொருளின் கருணைக்கு பெற்றோரின் கருணையை ஈடாக்கிப் பாடியுள்ளார்.
கன்றை உதை காலி:
“என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும்
கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ எனும் போது ஈன்று போதுமான காலம் கழிந்தபின் தன் கன்றின் நலன் நோக்கி அதை உதைக்கும் பசுவின் செயல் உவமையாகிறது. பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; தேவை கருதித் தன் கன்று தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுகிறது. அதுபோலத் தான் என்றும் இறைப்பொருளை அடைந்தவர் பலரையும் அவன் இரங்கி ஆட்கொள்ளாது இருக்கிறான் என்பது கருத்தாக அமைந்துள்ளது.
துள்ளும் இளங்கன்று:
“உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னிப் பேசில் ஐயோ
துள்ளி இளங்கன்றாய்த் துடிப்பேன் பராபரமே“ என்ற பாடலில் தாயுமானவரின் மென்மையான மனநிலை புலனாகிறது. மூடப் பழக்கங்களை ஒழிக்கவும், இறைப்பொருளைக் குறைவற எல்லோரும் உணரவும் தாயுமானவர் தன் கருத்துக்களைத் துணிந்து அக்காலத்தில் சொன்னது ஒரு புரட்சி என்றே சொல்லத்தக்கது. ஆயினும் முன்னிலையார் தாயுமானவரின் உள்ளக்
கிடக்கையைப் புரிந்து கொள்ளாமல் ஏதாவது அழுத்திப் பேசினால்; நிலையில்லாமல் துள்ளும் இளங்கன்று போல அவரது மனம் துடித்துத் துன்புறுகிறது என்கிறார். இளங்கன்று துள்ளுவது இயற்கை; அப்போது கன்றின் மனம் துன்புறுவதில்லை. ஆனால் தாயுமானவரின் மனம் கன்று போல் துள்ளும் போது அத்துள்ளலுக்குத் துன்பம் அடிப்படையாகிறது என வேற்றுமைப் பொருள் அமைந்து அழகூட்டுகிறது.
தாயும் பிள்ளையும்:
“தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தாற் போல் எவ்விடத்தும்
நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே “ எனும் அடிகள் நம் கண்முன் உலகாயதத்தைக் கொண்டு வருகிறது. தாய் அருகில் இருந்தாலும்; அவள் வேறு வேலையில் ஈடுபடுவதையும், பிறரோடு பேசுவதையும், சிரிப்பதையும், பொறுக்காத பிள்ளை கொஞ்சிக் கொஞ்சி அழுவதுண்டு. இறைவனோ எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான். இது நன்றே புரிந்திருந்தும்; இறையுடன் ஒன்ற வேண்டித் தாயுமானவர் கெஞ்சி நிற்கிறார். இது குழந்தை பெற்றவளிடம் உரிமையோடு சிணுங்குவது போன்ற மனநிலை ஆகும். பிள்ளை தளர்வதும், தாயுமானவர் தளர்வதும் ஒன்றற்கொன்று இணையாகத் தோன்றும் அழகிய உவமை ஆகும்.
குற்றம் பொறுக்கும் தாய்:
“எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும்
அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ என்ற மெய்யுணர்வுப் பாடல் தாயின் நிலையைப் பரம்பொருள் நிலைக்கு இணையாக உயர்த்தும் உவமை ஆகும். குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் அடியவர்க்கு அவரது பிழை பொறுத்து அருள் செய்பவன் ஆவான் என்கிறார். தவறிழைத்த பிள்ளை ஆயினும் தாய் தன் பாசத்தால் பிள்ளையை அடுத்தவர் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் பிள்ளையைக் கண்டித்தாலும், தண்டித்தாலும் அது மூன்றாம் நபருக்குத் தெரியாமலே நடக்கும். அதுபோல இறைவனும் தன்னை அண்டும் மெய்யன்பரைக் குழந்தையாக ஏற்றுக் கொண்டு அவர்க்கு மட்டுமே புரியுமாறு கண்டித்தும், தண்டித்தும் அருள் செய்கிறான் என்று பொருள் விரிகிறது.
ஈன்ற தாயும் அழும் குழவியும்:
“அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே“
எனுங்கால்; ‘மிகுந்த சினம் காரணமாகப் பெற்ற தாய் குழந்தையைத் தவிர்த்தாலும், ஒறுத்தாலும்; மீண்டும் குழந்தை தாயின் அன்பை நினைத்தே அழுவதைப் போல; தானும் இறைவனை எண்ணி எண்ணி ஏங்குவ’தாகப் பாடுகிறார். பெற்றவள் தன்னை ஒதுக்குவதால் பிள்ளை ஒதுங்கிச் செல்வது இல்லை. மாறாக அழுது கொண்டேனும் மீண்டும் மீண்டும் அவளை நாடிச் செல்லும். சூழலும், உலக நடப்பும் தனக்கெதிராக இருப்பினும் மெய்யன்பராகிய தாயுமானவர்க்கு அது ஒரு பொருட்டல்ல; குழந்தை தாயைத் தேடுவது போல் இறைவனையே எண்ணிப் பக்தி செலுத்துவதாகக் கூறுமிடத்து அவரது தன்னுணர்வு விளக்கம் பெறுகிறது.
தொட்டிலுக்குள் சேய்:
“கெட்டி என்றுன் அன்பர் மலம்கெட்டு அயர்ந்தோர் பூரணமாம்
தொட்டிலுக்குள் சேய்போல் துயின்றார் பராபரமே” என்ற பராபரக் கண்ணிப் பாடல் மெய்யடியார் எவர்க்கும் பொருந்தும் பாடலாகும்.
தொட்டிலுக்குள் துயிலும் சேய் பாதுகாப்பாக உணரும். அதுமட்டுமல்ல; தாய் குழந்தை தூங்குவதற்காகத் தொட்டிலை ஆட்டித் தாலாட்டுவாள். அது மிகுந்த சுகத்தையும், நிறைவையும் அளிப்பதால் குழந்தை; நிம்மதியாகக் கண்ணயரும்.
தன்னைப் பற்றி மட்டுமல்லாது பிற மெய்யடியவர் பற்றியும் புனையும் தாயுமானவர்; அவர்களது ஆணவம், கன்மம், மாயை முதலிய மலங்கள் கெட்டு; புலனின்பங்களை விடுத்து; இறைப்பொருளோடு ஒன்றுங்கால்; அப்பேரானந்தம் ஒரு முழுமையை உணரச் செய்கிறது என்கிறார். அவ்வுணர்வு தொட்டிலுக்குள் துயிலும் சேயின் அமைதி போன்றது என்கிறார்.
ஐம்புலன்களை அடக்குவது என்பது அடியவர் தம் ஆன்மீகப் பயணத்தின் முதற்படி. அதில் வெற்றி பெற்றோரே சிற்றின்பத்தை விடுத்து இறைநாட்டம் கொள்வர். அடுத்த நிலையில் அவர்கள் மும்மலங்கள் அழிய; மெய்யுணர்வு பெறுவர். அந்நிலைக்கே தொட்டிலில் துயிலும் குழந்தை உவமை ஆகிறது. இங்கு குழந்தையின் உணர்வும் மெய்யடியார் உணர்வும் ஒன்றிற்கொன்று சமம் என்னும் மனப்புல உருக்காட்சி அமைந்து அழகூட்டுகிறது.
அன்னை இலாச் சேயும், அகத்தில் தாயும்:
“அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார
என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்முள்ளும் இருக்கிறான். தாயுமானவர் தன்னுள் இருக்கும் இறைவனை உணர்கிறார். அவ்வுணர்வு மனதில் தாயைத் தாங்கிக் கொண்டிருப்பது போல் உள்ளது. ஆனாலும் உலகாயதத்தில் உழலும் போது தாயில்லாச் சேய் போல் துன்புறுவதாகப் பாடியுள்ளார். மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் அன்றாடச் சிக்கல்கள் அவரைத் தாயற்ற குழந்தை போலத் துன்புற வைக்கின்றன என்பது பொருள்.
தாயே அனைய அருள்:
“நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத்
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அன்றாட வாழ்வில் அக்கொள்கையை எப்போதும் நினைத்துப் பார்ப்பதுமில்லை. நினைக்க வேண்டிய தேவை இல்லாதபடி வாழ்க்கை முறையும் அமைந்துள்ளது. அந்தக் கொள்கை வாழ்வோடு ஒன்றிவிட்டதால் மறப்பது என்பதும் இல்லை. இந்தப் பக்குவநிலை இறைவனின் தாயனைய அருளால் கிடைத்ததாகும் என்கிறார்.
முடிவுரை:
தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இறைவனைப் புரிய வைக்கின்றன. அந்த எளிமைக்குக் காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகள் ஆகும். தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிக்கிறது.
kanmani
அருமையான பாடல் இசையினியன்.நான் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்னால் பேசியதால் அவர்கள் அறிந்து கொள்ளத்தக்க வகையில் என்னால் விளக்கம் சொல்ல இயலும் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தேன்.யோகாசனாலயா அமைப்பினர் பத்தாண்டுகளாக இப்போட்டியைப் பள்ளி மாணவர்க்கு இடையே நடத்தி வருகின்றனர்.சென்ற ஆண்டும் விருதுநகரில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.மாணவருலகிற்கு நடுவில் இருக்கும் இன்பமான வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைக்கிறது.கண்மணி
On Sun, 3 Mar 2019 9:29 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1.
என்ற சிறப்பான பாடலையும் இணைத்து இருக்கலாம்.
அருமையான பாடல் இசையினியன்.நான் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்னால் பேசியதால் அவர்கள் அறிந்து கொள்ளத்தக்க வகையில் என்னால் விளக்கம் சொல்ல இயலும் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தேன்.யோகாசனாலயா அமைப்பினர் பத்தாண்டுகளாக இப்போட்டியைப் பள்ளி மாணவர்க்கு இடையே நடத்தி வருகின்றனர்.சென்ற ஆண்டும் விருதுநகரில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.மாணவருலகிற்கு நடுவில் இருக்கும் இன்பமான வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைக்கிறது.கண்மணி
அருளையவடிகள் பாடியது
உலகினுக் கணியா மிராமநா தபுரத்
துயர்நறை வாவியின் குணபால்
மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்டை
மருவிமெய் யொருவிவே தாந்தத்
திலகிய பொருளால் வானமாய் நிறைவு
மெந்தையே எனதுபந் தமும்போய்
நிலையுற நினது திருவரு ளளிப்பாய்
நின்மலா னந்தமே போற்றி
"தாயுமானவ கவசம் தான்! எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவாறே இருந்த போது அந்தஎல்லோரிலும் நல்ல உள்ளங்கள் ஏராளம் இருந்தன அல்லவா! அந்த உள்ளங்களின் ஆசீர்வாதம்தொடர்ந்து அதற்கு இருந்து வந்ததல்லவா! அந்த தெய்வ சக்தி தீய சக்திகளைத் துரத்தி விட்டது; விகடன் பிழைத்தது!
விகடனை வாழ வைத்த அந்த தாயுமானவ கவசம் தன்னை அணிந்து கொள்ளும் தமிழர்களையும் காப்பாற்றும் என்பதில் சந்தேகம் என்ன?
திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் தாயுமானவர் பாடல்களை அருமையாகத் தனது நூல்களில் விளக்கியுள்ளார். அவர் நடத்தி வந்த அந்தர்யோகத்திலும் தாயுமானவரின் பாடலின்விளக்கவுரை தவறாமல் இடம் பெறும்.
தாயுமானவரின் சிந்தனை உயரிய சிந்தனை; அதன் அகலமும் நீளமும் ஆழமும் தொடர்ந்துபடித்தால் மட்டுமே புரியும்; உணர முடியும். அதன் பயன் எல்லையற்றது!
பொருளில்லா அடுக்கு மொழிகளில் தடுக்கி விழுந்து ஏமாறும் தமிழர்களுக்குப் பொருளுடன் கூடியஅடுக்கு மொழிகள் ஏராளம் தாயுமானவ கவசத்தில் உண்டு."
On Sun, 3 Mar 2019 9:29 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1.
என்ற சிறப்பான பாடலையும் இணைத்து இருக்கலாம்.
--
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
For more options, visit https://groups.google.com/d/optout.
23.2.2019 சனிக்கிழமை அன்று யென்னார்க்கே ரவீந்திரன் திலகவதி வித்தியாசாலையில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான தாயுமானவர் பாடல்கள் மனனப் போட்டியில் 200பள்ளிமாணவர் பங்கேற்ற போது ஆற்றிய சிற்றுரையின் சாரம்.தாயுமானவர் பாடல்களில் தாயும் சேயும்
முன்னுரை:
இற்றைக்கு சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்னர் தோன்றி; தமிழக மக்களுக்குத் தன் அனுபவத்தைக் கூறும் வழிகாட்டியாகத் தாயுமானவரின் பாடல்கள் அமைந்துள்ளன. இறைப்பொருளின் பெருமையைக் கூறும் வழிபாட்டுப் பாடல்களும் உள்ளன. பகுத்தறிவோடு வினாத்தொடுக்கும் சீர்திருத்தப் பாடல்களும் உள்ளன. இப்பாடல்களில் இடம் பெறும் உவமைகள் இலக்கிய நயம் சேர்ப்பதோடன்றி; கருத்துப் புலப்பாட்டிற்கும் பயனாகின்றன. தாய் சேய் உறவை அவர் உவமையாகப் பல இடங்களில் கையாளுகிறார். அவ்வுவமை தரும் இலக்கிய இன்பமே இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.
கன்றை உதை காலி:
“என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும்
கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ எனும் போது ஈன்று போதுமான காலம் கழிந்தபின் தன் கன்றின் நலன் நோக்கி அதை உதைக்கும் பசுவின் செயல் உவமையாகிறது. பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; தேவை கருதித் தன் கன்று தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுகிறது. அதுபோலத் தான் என்றும் இறைப்பொருளை அடைந்தவர் பலரையும் அவன் இரங்கி ஆட்கொள்ளாது இருக்கிறான் என்பது கருத்தாக அமைந்துள்ளது.
'ஈன்ற தாயும் அழும் குழவியும்'என்ற தலைப்பின்கீழ் காட்டப்பட்டுள்ள 'அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றி டுனும் மற்ற வள்தன் அருள் நினைந்தே அழுங்குழவி... ' என்ற பாடல் தாயுமானவருடைய பாடலல்லவே. அது குலசேகர ஆழ்வாருடைய பெருமாள் திருமொழியில் 'தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை' என்று தொடங்கும் பாடல் வரிகளாயிற்றே.
அ.ரா.