Bhagavan Ramana Maharshi Jayanthi

6 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 1, 2026, 1:48:31 AM (8 days ago) Jan 1
to சந்தவசந்தம்
இன்று பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி அவதாரம் செய்த நன்னாள்.

Arunachalam+ Bhagavan edited.jpg

             <> திருச்சுழியில் தோன்றிய தீ <>


கருத்தனை நம்முள்ளே காண்பதே வாழ்வின்
அருத்தம்எனத் தாமறியா மாந்தர் - வருத்தும்
கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று
திருச்சுழியில் தோன்றியதோர் தீ  1
 
தீப்பிழம்பாய்த் தோன்றிய தேவின் திருத்தலப்பேர்
நாப்பழக்க மாய்க்கொண்ட நல்லோனைப்  – பாப்புனைந்து
போற்றும் செயலால் புனிதம் பெறநினைத்துச்
சாற்றுவேன் அன்னான் தகை  2

அன்ன(ம்)நிகர்ப் பெண்ணொருத்தி ஆரூரன் நாமத்தை
முன்னம் பிறர்மொழியக் கேட்டதுபோல்** – தன்னுள்ளே
தாரக மாயொலித்த சத்தம் ஒருதலத்தின்
பேரென்று பிள்ளைஅறிந் தான்  3
 
அறிவில் நிலைத்த அருணையின் வண்ணம்
குறித்துமனம் கொண்ட களிப்பில் – வெறிகொண்டு
பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்
சித்தனாய்ப் பின்திகழ்ந் தோன்  4
 
தோன்றும் பொருள்யாவும் சோணா சலமெனஉள்
ஊன்றி அதிலுறைவோன் உள்ளபடி – ஈன்றதன்
தந்தையென ஏற்றுத் தனைப்பெற்றோர் சுற்றம்பால்
பந்தமறுத் தான்பா லகன்  5

 அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்
சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்
காணவொண்ணா அண்ணா மலையானைக்; கண்டபின்
நாணமிலா நங்கைஒத் தான்.
 
தான்யார் எனமறந்தான் தன்நாமங் கெட்டான்அக்
கோன்பால் தலைப்பட்டான்.## குன்றதனில் – மோனத்தில்
ஆழ்ந்தான் அருண அசலம்போல் ஆனந்தம்
சூழ்ந்ததவன் உள்ளில் தொடர்ந்து  7
 
தொடங்கிய நாள்முதலாய்த் தோல்போர்த்த தேகம்
விடவந்த வேளைவரை தன்னை – அடைந்தோர்க்குக்
காட்டினான் கல்லாலின் நீழல்கீழ் நால்வர்ஐயம்
ஓட்டியவன் ஒத்தோர் வழி   8  
 
வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)
அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது
நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்
வெம்மைமிகு நோய்நமை விட்டு  9

நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்
அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்
ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்
ஆசிநமக் கென்றும் அரண்  10

அரவணைக்கும் அன்னை அருளொளி வீசும்
இரவி எனரமணன் அந்நாள் - கருணை
அலையாய் நமக்களித்த ஆன்மவி சாரம்
நிலையாய்உள் நிற்கும் கரு. 11

(## திருநாவுக்கரசரின் திருவாரூர் திருத்தாண்டகம்:_ https://safe.sur.ly/o/thevaaram.org/AA000014?pageviewId=desktop-302e363637303535303020313731323138363934352031393431373738373430)
(கரு: உட்பொருள். (W.) 11. Substance, contents.)
 ... 

இமயவரம்பன்

unread,
Jan 1, 2026, 5:59:28 AM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான வெண்பாக்கள்!

“பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்”

இது குலசேகர ஆழ்வாரின் பாசுர வரிகளை நினைவுறுத்துகிறது:

“ பேயரே எனக்கு யாவரும், யானும் ஓர்
பேயனே எவர்க்கும், இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே”
- பெருமாள் திருமொழி

ஶ்ரீ ரமணரின் போதனைகளின் சாரத்தை ஒரே வெண்பாவில் விரித்து உரைத்தமை சிறப்பு:
“ வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)
அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது
நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்
வெம்மைமிகு நோய்நமை விட்டு 9”

GOPAL Vis

unread,
Jan 1, 2026, 11:20:51 AM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
ஶ்ரீ அனந்த்,
ஶ்ரீ ரமண மஹருஷியைப் படம் பிடித்துத் தந்த அற்புதக் காட்சி, அந்தாதி அலங்கலாக!
தங்களுக்கு அவர் ஸ்வரூபதரசனம் கிட்டியிருக்கிறது! ஆதலால் தங்கள் வாக்கு
மாளாத மாண்டநல் வாக்கு!
நல்வாழ்த்துகள் வேண்டி,
கோபால். 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 1, 2026, 11:23:45 AM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி இமயவரம்பன்.🙏 ஆழ்வார் பாசுரத் துதி மேற்கோளுக்கு நன்றி
அனந்த்

On Thu, Jan 1, 2026 at 4:29 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/DB8A4FEF-6D31-4D45-A0F5-FFF62AD33683%40gmail.com.

Swaminathan Sankaran

unread,
Jan 1, 2026, 11:25:32 AM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
ரமணருடைய வாழ்க்கையையும் வசனங்களையும் அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறையையும் 
ஒருங்கே படம் பிடித்துக் காட்டியதைப் போல  அனுபவித்து எழுதிய வெண்பாக்கள் அருமை!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 1, 2026, 12:47:28 PM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
நன்றி சங்கரன்
அனந்த்

On Thu, Jan 1, 2026 at 9:55 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wroteண:

Subbaier Ramasami

unread,
Jan 1, 2026, 2:12:26 PM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
அமைவான வெண்பாக்கள் அள்ளித்தந் தாரோ
ரமணரே உள்ளே  இருந்து

ஆழமாய் வெண்பா அனந்த்  அளித்தாரே
வாழும் வகைக்கு மருந்து


--

Kaviyogi Vedham

unread,
Jan 1, 2026, 8:44:24 PM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 3, 2026, 11:37:57 AM (5 days ago) Jan 3
to santhav...@googlegroups.com
இலந்தையாருக்கும் யோகியாருக்கும் மிக்க நன்றி.

அனந்த்

Reply all
Reply to author
Forward
0 new messages