தமிழ்த்தாய் வாழ்த்து

1,148 views
Skip to first unread message
Message has been deleted

naa.g...@gmail.com

unread,
May 22, 2012, 5:23:01 AM5/22/12
to Santhavasantham, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்பின் கவிஞர் சவகர்லால் ஐயா,

வணக்கம் கணக்கில. இவ்விழையில் சந்தவசந்தக் கவிஞர்கள்
தாங்கள் இயற்றியவையோ, அன்றேல் படித்தோ, கேட்டோ
சுவைத்த தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ள
வேண்டுகிறேன்.

தமிழின் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பூவராகரின் நிலமடந்தையாக
தமிழகத்தை, தமிழை வாழ்த்தி, அடுத்த பாட்டில் கலைமகளாக
வில்லிபாரதத்தில் (14-ஆம் நூற்றாண்டு) பாடுவது. பின்னர்
உலகம் அறிந்தது கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசரின்
தம்பி கருணைப்பிரகாசர் சீகாளத்திப் புராணத்தில் தமிழன்னையை
வணங்குதல். 19-ஆம் நூற்ராண்டில் வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் பாடல்கள் பல தமிழ்த்தாய் மேல் உள்ளன.
மனோன்மணீயத்தில் கருணைப்பிரகாசர் பாடலைக் காட்டி
கொற்றவையாக [1], அவளின் அமிசமான சரசுவதியாய்
பெ. சுந்தரனார் பாடிய பாடல் தமிழ்நாட்டரசாங்கத்தின்
அதிகார பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக இலங்குகிறது.
உலகெங்கும் தமிழ்ச் சங்கங்களிலும், தமிழ்ப் பள்ளிகளிலும்
நிகழ்ச்சிகளின் முதல் பாடலாக, மோகன ராகத்தில்
எம்எஸ்வி - ராமமூர்த்தி இசைகட்டியபடி பாடப்படும் தமிழ்த்தாய்
வாழ்த்திது.

முதலில், கவிஞர் சவகர்லால் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தை
இங்கே அளிக்க வேண்டுகோள். இதுவரை பாடியிராவிட்டால்,
ஒன்றோ, பஞ்சகமோ, பதிகமோ அளிக்க சவகர்லால் ஐயாவைக்
கோருகிறேன். எனக்குத் தெரிந்த சில தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே
அளிக்கவும் விருப்பம்.

கவிஞர்கள் ஜவஹர்லால், இலந்தையார், கவியோகி, அனந்த், பசுபதி, ஹரிகி,
சிவ. சூரி, கிரிகாசன், வித்தியாசாகர், கலாம், தங்கமணி அம்மா,
மதுரபாரதி, சௌந்தர், குமார், நிரஞ்சன், இன்னும் இங்கிருப்போர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை அளிக்கவேண்டுகிறேன்.

நன்றி,
நா. கணேசன்

குறிப்பு [1]: கொற்றவை வணக்கம் பாரதத்தில் அரதப் பழசு.
பாவை, தையல், கன்னி என்னும் சின்னஞ்சிறுபெண் அவள்.
மீனாட்சி ஆட்சியால் பாண்டிநாட்டுக்கு கன்னிநாடு என்று ஒரு
பெயருண்டு. கொற்றி/துர்க்கை வணக்கம் சைவர், சமணர், வைணவர்
எல்லாருக்கும் உண்டு. பாகவதம் விளக்குகிறது. பாவைப்
பாடல்கள் அவற்றாலெழுந்தவை. கொற்றவை வாழ்த்தே
தமிழ்த்தாய் வாழ்த்து. மகரத்துக்குத் தமிழ்ப் பெயர் தை.
இதை எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, ... இவற்றில் காணலாகும்.
மகர விடங்கர் - கொற்றவை சம்பந்தத்தை தமிழ்ப் பல்கலை
நிறுவிய வ. ஐ. சுப்பிரமணியம் ஐயா அஞ்சலி மலரில்
(கேரள/மத்திய அரசுகள் வெளியிட்டது) எழுதினேன்.
அதை பிடிஎப் கோப்பாக இங்கே பெறலாம்:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9

சின்னஞ்சிறு பெண்போலே - சீர்காழி பாடுகிறார்:
http://www.youtube.com/watch?v=eoldjJS1OWI

kirikasan

unread,
May 23, 2012, 2:18:11 AM5/23/12
to சந்தவசந்தம்
கவிஞர் சவகர்லால் ஐயா அவர்களை அழைத்தீர்கள்.. அவர் தருவதற்குள் இந்த
முந்திரிக்கொட்டை ஒன்றுபோட்டுவிடுகிறேன்
இது என்னுடையது.

தமிழின் சுவை

தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே முழு நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனதிடையாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?

மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுறாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியாமோ?

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளை துன்பந் தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்
**********

Kavingar Jawaharlal

unread,
May 23, 2012, 6:47:04 AM5/23/12
to santhav...@googlegroups.com
                             தமிழே!

விண்சிரித்தால் இடியாகும்; ஊர்ந்து வந்து
  முகில்சிரித்தால் மின்னாகும்; செழிப்பு மிக்கு
மண்சிரித்தால் பயிராகும்; கீழை வானில்
  வருகதிரோன் சிரித்திட்டால் பகலா யாகும்;
தண்மதிதான் சிரித்திட்டால் குளுமை யாகும்;
  தவழ்தென்றல் நகைத்திட்டால் புயலா யாகும்'
என்னுயிரே! தமிழேநீ என்றன் நாவில்
  இளஞ்சிரிப்புக் காட்டிடுவாய்; கவிதை யாகும்.

பாட்டினிலே பத்தாகிச் சிறந்தாய்; பாடல்
  பயில்சுவையில் ஒன்பதென மிளிர்ந்தாய்; சங்க
ஏட்டினிலே தொகையெட்டா யானாய்; மீட்டும்
  இசையினிலே ஏழெனநீ நின்றாய்; இன்பங்
காட்டுதமிழ் முகமாறாய் வந்தாய்; மன்னர்
  கலந்தாளக் குழுவைந்தாய்ப் பொலிந்தாய்; நான்கைக்
கூட்டியொரு முப்பாலில் அடியி ரண்டில்
  கொடுத்திட்ட குறளொன்றாய் உயர்ந்தாய் தாயே!           


2012/5/23 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


VETTAI ANANTHANARAYANAN

unread,
May 23, 2012, 9:27:57 AM5/23/12
to santhav...@googlegroups.com
மிகவும் அருமையான விருத்தங்கள். பத்துச் சிறப்போடு சேர்ந்த ஒன்றாக இருக்கும் தமிழைப் புகழ்ந்த விதம் அழகு.

அனந்த்


2012/5/23 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
May 23, 2012, 11:10:32 PM5/23/12
to santhav...@googlegroups.com
நன்றி.மகிழ்ச்சி.

2012/5/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kavingar Jawaharlal

unread,
May 24, 2012, 12:51:04 AM5/24/12
to santhav...@googlegroups.com
            கொட்டு முரசே!

கோலநெடு வான்பரப்பில் நீந்து மதியாய்-வண்ணக்
  கோவைதனைப் பூமியிலே காட்டுங் கதிராய்க்
காலமெனுந் தேவமகள் சூடு மணியாய்-எங்கள்
  கன்னிமொழி வாழ்கவெனக் கொட்டு முரசே!

ஞாலமெனுஞ் சோலையிலே பூத்த மலராய்-அந்த
  நாறுமலர்த் தேனினிமை காட்டுஞ் சுவையாய்
சீலமெனும் போர்வையிலே போர்த்த பொருளாய்-நிற்கும்
  செல்வமகள் வாழ்கவெனக் கொட்டு முரசே!

பூமியிலே வான்படைத்துக் காட்டுந் திருவாய்ச்-செல்வம்
  பொங்கிவர நல்லறத்தைக் கூட்டுந் துணையாய்க்
கோமகளாய்ச் சீர்படைத்தே ஆண்ட தமிழே-இந்தக்
  குவலயத்தை ஆள்கவெனக் கொட்டு முரசே!

பாடுங்குயி லோசையிலே தேருஞ் சுவையாய்-அதன்
  பண்ணினிமை கண்டுணர்ந்து போற்று முணர்வாய்
ஆடுமயி லாடுமெழில் நாடும் நலமாய்- எங்கள்
   அழகுமொழி வாழ்கவெனக் கொட்டு முரசே!

எட்டிவரு வேலதனைத் தட்டிப் பிடித்தே -மார்பில்
  இட்டதொரு வேலதனைக் கட்டிப் பறித்தே
விட்டெறியும் வீரமறங் கட்டி வளர்த்த -எங்கள்
  வீரமகள் வாழ்கவெனக் கொட்டு முரசே!


2012/5/24 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

naa.g...@gmail.com

unread,
May 24, 2012, 6:29:11 AM5/24/12
to சந்தவசந்தம்

அருமை ஐயா. கிரிகாசனுக்கும் வாழ்த்து.
அனந்த் தமிழ்த்தாய் வாழ்த்து தரவேண்டும்
சிவசிவா, மோகனரங்கன் போன்றோர் தமிழ்த்தாய்
வாழ்த்தும் கேட்போம்.

நா. கணேசன்

On May 23, 9:51 pm, Kavingar Jawaharlal


<kavingar.jawahar...@gmail.com> wrote:
>             கொட்டு முரசே!
>
> கோலநெடு வான்பரப்பில் நீந்து மதியாய்-வண்ணக்
>   கோவைதனைப் பூமியிலே காட்டுங் கதிராய்க்
> காலமெனுந் தேவமகள் சூடு மணியாய்-எங்கள்
>   கன்னிமொழி வாழ்கவெனக் கொட்டு முரசே!
>
> ஞாலமெனுஞ் சோலையிலே பூத்த மலராய்-அந்த
>   நாறுமலர்த் தேனினிமை காட்டுஞ் சுவையாய்
> சீலமெனும் போர்வையிலே போர்த்த பொருளாய்-நிற்கும்
>   செல்வமகள் வாழ்கவெனக் கொட்டு முரசே!
>
> பூமியிலே வான்படைத்துக் காட்டுந் திருவாய்ச்-செல்வம்
>   பொங்கிவர நல்லறத்தைக் கூட்டுந் துணையாய்க்
> கோமகளாய்ச் சீர்படைத்தே ஆண்ட தமிழே-இந்தக்
>   குவலயத்தை ஆள்கவெனக் கொட்டு முரசே!
>
> பாடுங்குயி லோசையிலே தேருஞ் சுவையாய்-அதன்
>   பண்ணினிமை கண்டுணர்ந்து போற்று முணர்வாய்
> ஆடுமயி லாடுமெழில் நாடும் நலமாய்- எங்கள்
>    அழகுமொழி வாழ்கவெனக் கொட்டு முரசே!
>
> எட்டிவரு வேலதனைத் தட்டிப் பிடித்தே -மார்பில்
>   இட்டதொரு வேலதனைக் கட்டிப் பறித்தே
> விட்டெறியும் வீரமறங் கட்டி வளர்த்த -எங்கள்
>   வீரமகள் வாழ்கவெனக் கொட்டு முரசே!
>

> 2012/5/24 Kavingar Jawaharlal <kavingar.jawahar...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > நன்றி.மகிழ்ச்சி.
>
> > 2012/5/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
> >> மிகவும் அருமையான விருத்தங்கள். பத்துச் சிறப்போடு சேர்ந்த ஒன்றாக இருக்கும்
> >> தமிழைப் புகழ்ந்த விதம் அழகு.
>
> >> அனந்த்
>

> >> 2012/5/23 Kavingar Jawaharlal <kavingar.jawahar...@gmail.com>

> > *பொற்கிழிக்கவிஞர்*
> > *டாக்டர். ச.சவகர்லால்*
> > கைபேசி : *+91- 9790846119*
> > kavingar-jawaharlal.blogspot.com
> > kaviingar.jawahar...@gmail.com
>
> --
> *பொற்கிழிக்கவிஞர்*
> *டாக்டர். ச.சவகர்லால்*
> கைபேசி : *+91- 9790846119*
> kavingar-jawaharlal.blogspot.com
> kaviingar.jawahar...@gmail.com

வித்யாசாகர்

unread,
May 24, 2012, 5:38:21 PM5/24/12
to santhav...@googlegroups.com
ன் மதிப்பிற்குரிய ஐயா கணேசன் அவர்களுக்கும் பெரியோர் அனைவருக்கும் வணக்கம், தமிழின் சுவை, கொட்டுமுரசே, தமிழே' வின் இரண்டாம் பாடல் என முத்துமுத்தாய் எழுத பெரும் புலவர்கள் வீற்றிருக்கும் அவையில், குருவியின் தலைமேல் வைத்த பனங்காயை ஒரு பாட்டினூடே கண்டுவிட்டு பறந்துபோய் தன் கூட்டிலமர்ந்துக் கொண்ட உணர்வினோடு நானும்... நகர்ந்துக் கொண்டேன்!

முடியாதென்று எல்லாம் ஒன்றுமேயில்லை. ஆயினும், இதற்கு என்னைவிட முதிர்ந்த தகுதியும், வியக்குமளவு திறனும், தமிழின்பால் அக்கரையும், ஆழ்ந்த தமிழிலக்கண அறிவும் பெற்றோர் பலரிருக்க இடையே முளைத்துக் கொள்ள விருப்பமில்லை ஐயா. நான் வெறுமனே என் மக்களை மக்கள் சார்ந்த என் உணர்வை மட்டும் மொழிபடுத்துபவன் அவ்வளவே..

மற்றபடி, என் மதிப்பிற்குரிய ஐயா'க்கள் எழுதுவார்கள், ஆரவாரம் பொங்க கைதட்டி அதைக் கேட்டு ரசித்து வரிசையில் நின்று பாடும் குழந்தைகளின் ஒரு குரலாய் பாடியும் கொள்கிறேன். தங்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றியும் வணக்கமும் ஐயா!

வித்யாசாகர்




--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

kalam kader

unread,
May 24, 2012, 6:15:40 PM5/24/12
to santhav...@googlegroups.com

தமிழாய்த் தமிழுக்காய்...! தமிழ்த்தாய் வாழ்த்து




தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்து
அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
மொழியாம் தமிழை மொழிந்து.

சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
வழிகள் பிறழாது வாழ்வாய்த் தமிழாய்
இழியும் பழியும் இழுக்கு.

ஒழுக்கம் தழுவி ஒழுகுதல் வாழ்க்கை
விழுப்புண் விழவே விழைவாய்த் தமிழுக்காய்
வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
சூழும் புகழ்ச்சி சுழல்.

மொழியை அழித்தல்; முழியை மழித்தல்
விழியை இழந்து விழுவாய்க் குழியில்
மொழியைப் பழித்தால் முழுதாய் அழிந்தாய்
பிழையில் உழலும் பிழைப்பு


(வேறு)

தாய்ப்பாலில் கலந்துவந்த அமுதே நீதான்
     தமிழ்க்குடிலில் எம்மையும்தான் ஈன்றாய் நீதான்
ஆய்வாளர்க் காதாரச் சுருதி நீதான்
      ஆதாமின் முதன்மொழியாய் ஆன நீதான்
வாய்ச்சொல்லில்  தசைப்பயிற்சி தருவாய் நீதான்
      வல்லினமும் மெல்லினமும் இடையும் நீதான்
காய்போல கைப்பின்றி கனியும் நீதான்
     காலமெலாம் வாழ்வாயே தமிழ்த் தாயே!


2012/5/25 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>



--
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalam...@gmail.com
                                       shaic...@yahoo.com
                                       kalaam...@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844
 
 

kalam kader

unread,
May 24, 2012, 6:31:30 PM5/24/12
to santhav...@googlegroups.com
//கவிஞர்கள் ஜவஹர்லால், இலந்தையார், கவியோகி, அனந்த், பசுபதி, ஹரிகி,

சிவ. சூரி, கிரிகாசன், வித்தியாசாகர், கலாம், தங்கமணி அம்மா,
மதுரபாரதி, சௌந்தர், குமார், நிரஞ்சன், இன்னும் இங்கிருப்போர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை அளிக்கவேண்டுகிறேன்.//

இதோ என் தமிழ்த்தாய் வாழ்த்து:

தமிழாய்த் தமிழுக்காய்...! தமிழ்த்தாய் வாழ்த்து..!!

அன்பின் கவிஞர் சவகர்லால் ஐயா,

வணக்கம் கணக்கில. இவ்விழையில் சந்தவசந்தக் கவிஞர்கள்
தாங்கள் இயற்றியவையோ, அன்றேல் படித்தோ, கேட்டோ
சுவைத்த தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ள
வேண்டுகிறேன்.

தமிழின் முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பூவராகரின் நிலமடந்தையாக
தமிழகத்தை, தமிழை வாழ்த்தி, அடுத்த பாட்டில் கலைமகளாக
வில்லிபாரதத்தில் (14-ஆம் நூற்றாண்டு) பாடுவது. பின்னர்
உலகம் அறிந்தது கற்பனைக்க்களஞ்சியம் சிவப்பிரகாசரின்

தம்பி கருணைப்பிரகாசர் சீகாளத்திப் புராணத்தில் தமிழன்னையை
வணங்குதல். 19-ஆம் நூற்ராண்டில் வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள் பாடல்கள் பல தமிழ்த்தாய் மேல் உள்ளன.
மனோன்மணீயத்தில் கருணைப்பிரகாசர் பாடலைக் காட்டி
கொற்றவையாக [1], அவளின் அமிசமான சரசுவதியாய்
பெ. சுந்தரனார் பாடிய பாடல் தமிழ்நாட்டரசாங்கத்தின்
அதிகார பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக இலங்குகிறது.
உலகெங்கும் தமிழ்ச் சங்கங்களிலும், தமிழ்ப் பள்ளிகளிலும்
நிகழ்ச்சிகளின் முதல் பாடலாக, மோகன ராகத்தில்
எம்எஸ்வி - ராமமூர்த்தி இசைகட்டியபடி பாடப்படும் தமிழ்த்தாய்
வாழ்த்திது.


எனக்குத் தெரிந்த சில தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இங்கே
அளிக்கவும் விருப்பம்.

முதலில், கவிஞர் சவகர்லால் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தை
இங்கே அளிக்க வேண்டுகோள். இதுவரை பாட்டியிராவிட்டால்,

ஒன்றோ, பஞ்சகமோ, பதிகமோ அளிக்க சவகர்லால் ஐயாவைக்
கோருகிறேன்

கவிஞர்கள் ஜவஹர்லால், இலந்தையார், கவியோகி, அனந்த், பசுபதி, ஹரிகி,
சிவ. சூரி, கிரிகாசன், வித்தியாசாகர், கலாம், தங்கமணி அம்மா,
மதுரபாரதி, சௌந்தர், குமார், நிரஞ்சன், இன்னும் இங்கிருப்போர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை அளிக்கவேண்டுகிறேன்.

நன்றி,
நா. கணேசன்

குறிப்பு [1]: கொற்றவை வணக்கம் பாரதத்தில் அரதப் பழசு.
பாவை, தையல், கன்னி என்னும் சின்னஞ்சிறுபெண் அவள்.
மீனாட்சி ஆட்சியால் பாண்டிநாட்டுக்கு கன்னிநாடு என்று ஒரு
பெயருண்டு. கொற்றி/துர்க்கை வணக்கம் சைவர், சமணர், வைணவர்
எல்லாருக்கும் உண்டு. பாகவதம் விளக்குகிறது. பாவைப்
பாடல்கள் அவற்றாலெழுந்தவை. கொற்றவை வாழ்த்தே
தமிழ்த்தாய் வாழ்த்து. மகரத்துக்குத் தமிழ்ப் பெயர் தை.
இதை எந்தை, முந்தை, நுந்தை/உந்தை, ... இவற்றில் காணலாகும்.
மகர விடங்கர் - கொற்றவை சம்பந்தத்தை தமிழ்ப் பல்கலை
நிறுவிய வ. ஐ. சுப்பிரமணியம் ஐயா அஞ்சலி மலரில்
(கேரள/மத்திய அரசுகள் வெளியிட்டது) எழுதினேன்.
அதை பிடிஎப் கோப்பாக இங்கே பெறலாம்:


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kavingar Jawaharlal

unread,
May 24, 2012, 10:05:02 PM5/24/12
to santhav...@googlegroups.com
பாடல்கள் நன்றாக உள்ளன .

2012/5/25 kalam kader <kalam...@gmail.com>



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்

வித்யாசாகர்

unread,
May 24, 2012, 11:59:17 PM5/24/12
to santhav...@googlegroups.com
//தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்து

அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
மொழியாம் தமிழை மொழிந்து// எனும் வரிகள் சிறப்பு ஐயா. வைரம் வைத்து கட்டியச் சுவர்போல 'ழ'கர ஒலியின் சிறப்பில் மின்னுகிறது பாடல்...

வாழ்த்துக்களும் வணக்கமும்..


வித்யாசாகர்

2012/5/25 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>



--

kalam kader

unread,
May 25, 2012, 1:28:26 AM5/25/12
to santhav...@googlegroups.com
நெஞ்சம் படர்ந்த நன்றி வித்தைகளின் சாகரமே!
தமிழே சிறந்த ஒலி
அதன் “ழ” கரம் அதிசிறந்த ஒலி
அதனாற்றான் தமிழை வாழ்த்த- தமிழாய் வாழ “ழ”கரத்தை வைத்தேன் என்பாட்டில் - வெண்பாட்டில்!

கற்றவர் சபையில் எனக்காக ஓர் இடமும் வழங்கிய வணக்கத்திற்குரிய ஆசான் இலந்தையார் அவர்கட்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆசான்கள் புதுவைப் புலவர் இராஜ. தியாகராஜன், கவிஞர் டாக்டர் சவகர்லால், கவிஞர் நா.கணேசனார், கவிஞர் சந்தர் சுப்ரமணியனார், கவிஞர் பசுபதியார், கவிஞர் துரையார், கவிஞர் வித்யாசாகர், சகோதரிகள் புஷ்பா கிறிஸ்டி, சுகந்தி வெங்கடேஷ் மற்றும் “சந்தவசந்தம்” இணைய குழும உறுப்பினர்கள் எல்லார்க்கும் இதயம் கனிந்த நன்றி!

2012/5/25 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>

kalam kader

unread,
May 25, 2012, 1:33:12 AM5/25/12
to santhav...@googlegroups.com
நிரம்ப நன்றி ஆசான் டாக்டர் கவிஞர் சவகர்லால் அவர்களே!

”வாழ்த்துரை” இழையில் என் வாழ்த்துக்கு உங்கள் மறுமொழி காண அவா. இருப்பினும், நாளை உங்கள் பிறந்தநாளில் அலைபேசியில் அழைத்து மீண்டும் வாழ்த்துவேன்.

2012/5/25 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
May 25, 2012, 9:43:16 AM5/25/12
to santhav...@googlegroups.com
நன்றி கலாம் அவர்களே!


2012/5/25 kalam kader <kalam...@gmail.com>

Siva Siva

unread,
May 26, 2012, 10:54:40 AM5/26/12
to santhav...@googlegroups.com

2012-05-25
திருத்தமிழ் கற்க! (மாலைமாற்று)
-----------------
மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே
தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்






--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Subbaier Ramasami

unread,
May 27, 2012, 8:41:41 AM5/27/12
to santhav...@googlegroups.com
இது ஒரு சாதனைதான்.
 
இலந்தை

2012/5/26 Siva Siva <naya...@gmail.com>

--

Pas Pasupathy

unread,
May 27, 2012, 9:08:52 AM5/27/12
to santhav...@googlegroups.com
மிக அருமை! இன்றைய தண்டியலங்கார உரையில் காட்டாகக் கொடுக்கப் படவேண்டிய பாடல். 

( சிங்கையில் தமிழ்ப் பேராசிரியர் திரு சுப. திண்ணப்பன் அவர்களிடம் சீனப் பெண்மணிகள் தமிழ் கற்றனர் என்று என்றோ படித்தது நினைவுக்கு வந்தது.) 

2012/5/26 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Subbaier Ramasami

unread,
May 27, 2012, 12:40:32 PM5/27/12
to santhav...@googlegroups.com
நான் எழுதியுள்ள பொருநை வெள்ளம், சந்தவசந்தம் கவிதைஹ்ட்தொகுதிகள் இரண்டிலும் தமிழ் வாழ்த்து சேர்த்திருக்கிறேன்.
 
வாழிய செந்தமிழ் என்னும் பாடல் தமிழக முதலமைச்சர் எம்.ஜி ஆர் தலைமையில்  ம.பொ சி.
ஆர்.எம் .வீரப்பன்  இன்னும் பல தலைவர்கள் முன்னிலையில் படித்தேன். பாடல் இன்னும் பெரிது. இங்கே சுருக்கிக் கொடுத்திருக்கிறேன்.
 
 
 
இலந்தை
vazhiya senthamiz1.zip
vazhiya senthamiz2.zip
en thamiz1.zip
enthamiz2.zip

Pas Pasupathy

unread,
May 27, 2012, 3:27:09 PM5/27/12
to santhav...@googlegroups.com
நான் எழுதிய கீழ்க்கண்ட பாடல்   தலைப்பிற்குச் சிறிது பொருந்தலாம்.
 
 
தமிழன்னை
       ----------
 

பரமனின்  பாட்டில் பிழைதனைக் கண்டு
. . பகர்ந்தது யாருடைச் சொல்? -- தமிழ்
மரபணு என்னும் மகிமைப்  பிரணவ
. . மந்திர நாயகி சொல்  (1).

 

தாவத் தவித்திடும்   முல்லைக்குத்  தேரினைத்
. . தந்த தெவருடைக் கை? -- மொழிக்
காவலர் காமுறும் தொன்மை இலக்கணக்
. . காப்பிய நாயகி கை.  (2)

அன்பும் இறையும் இரண்டிலை ஒன்றென
. . ஆய்வுகள் செய்தவர் யார் ? -- திரு
மந்திரம் ஓதிய  மாமுனி முத்தமிழ்
. . மாதவள் செல்வ  மகன்.   (3)

கறையான் அரித்த சுவடிகள் தேடிக்
. . களைத்த தெவருடைக் கால்? -- நான்
மறையென மாண்புறு முப்பால் வழங்கிய 
. . வண்டமிழ் அன்னையின் கால்.  (4)

பண்ணிசை கூத்தியல் யாப்பியல்  நல்கிப்
. . பகுத்தது யார் அறிவு? -- எந்த
மண்ணும் அறிந்திடாச் சந்தம்  நிறைதமிழ்
. . மாதாவின் கூர் அறிவு.  (5)

யாவரும் எம்மவர் யாதுமே நம்நகர்
. . என்றசொல் யாருடைச் சொல்? -- சங்கப்
பாவலர் பாட்டிசைப் பாணரைப் பெற்றவள்
. . பைந்தமிழ்  அன்னையின் சொல். (6)


Chandar Subramanian

unread,
May 27, 2012, 8:19:38 PM5/27/12
to santhav...@googlegroups.com
சென்ற கவியரங்கத்தில் தமிழ் வாழ்த்தாக நான் வழங்கிய பாடல்:
 
தமிழ்
 
சொல்லாகிப் பொருளாகிச்
சுவையு மாகித்
தொன்மையுடன் புதுமையெனத்
தொடர்ந்தே என்றும்
 
நில்லாது செல்கின்ற
நிகழ்வாய் ஆகி
நிற்காத ஆறாகி
நினைவாய் ஆகிச்
 
செல்லாது செம்மொழியாய்
செழித்துப் பல்லோர்
சிந்தனையின் சீர்சேர்த்துத்
தெரிந்து மாசே
 
இல்லாத தேனாகி
இசையாய் இன்றும்
இருக்கின்ற தமிழணங்கே
என்றும் வாழ்க!


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Kavingar Jawaharlal

unread,
May 28, 2012, 12:10:03 AM5/28/12
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்.

2012/5/28 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--

Lalitha & Suryanarayanan

unread,
May 28, 2012, 12:23:36 AM5/28/12
to santhav...@googlegroups.com
தமிழ்த்தாய்

1)
எங்களது செந்தமிழின் எழிலைக் கொஞ்சம்
   எடுத்துரைக்கும் எண்ணமுடன் இங்கே வந்தேன்!
சங்கமதில் தங்கமெனத் திகழக் காணும்
   சந்தத்தின் வசந்தமெனத் தரணி சொல்லும்
மங்கலிலா இணையத்துக் குழுவாம் இங்கே
   மரபுவழிக் கவிசெய்யும் புலவோர் உள்ளம்
மங்கைதமிழ் தான்தங்கும் மனையாய்க் கொண்டாள்,
   மலர்போல மணக்கின்ற கவியாய் உள்ளாள்!

 2)

இலக்கணத்தை எளிதாக இப்பா ருள்ளோர்
   இனியென்றும் அறிந்துகொண்டு இன்பம் கொள்ள,
கலக்குகவே கவியியற்றி என்ற நூலைக்
   கண்டன்னைக் களிப்பதனைக் காண்பீர் காண்பீர்!
இலக்குவனின் நெஞ்சத்தில் என்றும் வாழும்
   இணையில்லாக் காகுத்தன் தலைமை தந்தே
கலக்கமெதும் இல்லாமல் என்போன் றோர்கள்
   கவிசெய்யத் தமிழ்த்தாயே கருணை செய்தாள்!

3)

முனைவர்கள் பற்பலரும் முறையாய் இங்கே
    முத்தமிழின் புகழ்பாட முறுவல் செய்தே
தனயர்கள் தண்டமிழில் துதிகள் செய்யத்
    தலையசைத்து  மகிழ்ந்துள்ளாள் தமிழாம் அன்னை!
முனிவர்கள் கவியின்பம் வேண்டி இங்கே
   முறையாகத் தவம்செய்யும் காட்சி பாரீர்!
மனிதர்மேல் மனிதர்க்கு நேயம் ஊட்டும்
    மாந்தர்கள் பற்பலரின் வரிசை காணீர்!

4)

இணையத்தில் தினந்தோறும் கட்டு ரைகள்
   எழுதிப்புகழ் சேர்த்தவர்கள் அருகே நிற்க
இணையில்லா மணிசெய்யும் ஆற்றல் மிக்கார்
   இருமருங்கும் நின்றென்றும் துதிகள் செய்யக்
கணைபோலக் கவிதைகள் பெருக்கெ டுக்கும்
   காட்சியிதற் கீடேதும் இல்லை இல்லை!
மணியான கவிமணிகள் செய்யக் கண்டே
   மங்கைதமிழ் மகிழ்ந்திருக்கும் கோலம் பாரீர்!

5)

அப்பாலுக் கப்பாலும் அழகாய்ப் பார்க்கும்
   அறிவுடைய அருந்தமிழர் ஒன்றாய்ச் சேர்ந்து
முப்பாலை மும்மணியாய் வடிக்கக் கண்டு
  முகமலர்ந்த தமிழன்னை முறுவல் பாரீர்!
எப்போதும் யாவர்க்கும் இனிக்கும் வண்ணம்
  இவர்செய்யும் கவிப்பூசை அழகை மாந்தி
ஒப்பேதும் இல்லாத கவிதை மணிகள்
   உவந்தன்னை அணிந்துள்ள ஒயிலைப் பாரீர்!

6)

புதுவுயரம்  தனக்களித்த புலவர் ஏறு
   புதுமைபுகழ் பாரதியின் புகழைப் பாட
மதுரமிகு மணிசெய்யப் புலவர் நால்வர் 
  மண்ணுலகில் பன்னாட்டில் இருந்த வண்ணம்
விதவிதமாய்ப் பாடுகின்ற எழிலைப் பார்த்து 
   வையத்தோர் களிக்கின்ற நிலையைக் கண்டு
இதுவமுதம் என்றுசொல்லி இருகை கொட்டி
   இன்பமுறும் தமிழன்னை இங்கே பாரீர்!

7)

கட்டளைசெய் கலித்துறையால் காவி யத்தைக்
   கவினழகாய்ச் செய்கின்ற புலவர் கண்டே
இட்டமுடன் சுவைத்திருந்து இன்பம் கொண்டே
   இதயமெல்லாம் களித்திருக்கும் அன்னை பாரீர்!
தொட்டனைத்தே உறுகின்ற கிணற்றின் நீர்போல்
   துணிந்திங்கே கவிதைகள் செய்யச் செய்ய
மொட்டவிழிந்து மணம்வீசும் மலர்கள் போலே
   முகிழ்க்கின்ற கவியெல்லாம் அவளால் தானே!

8)

மொழியியலை முற்றுணர்ந்த முனைவர் பல்லோர்
  முகங்கண்டு மலர்கின்றாள் தமிழாம் அன்னை!
வழிவகைகள் கண்டுணர்ந்து சொற்கள் மூலம்
  வையத்தோர் உணரஅவர்  உரைத்தல் பார்ப்பீர்!
மழையெனவே அருள்பொழியும் அறிஞர் பல்லோர்
  மரபுகளை எடுத்துரைக்கும் வகையைப் பார்த்தே 
எழுந்தருளி இருக்கின்றாள் தமிழாம் அன்னை
  இணைந்துள்ளோர் நம்முளத்தில் எழிலாய்த் தானே!

9)

பேய்மழையைப் பாடலிலே பிடித்து நெஞ்சில்
   பெரிதாக இடம்பிடிக்கும் சித்தர் கண்டு
தாய்த்தமிழாள் சிரிக்கின்ற தன்மை பாரீர்,
  தன்மகனைச் சான்றோனாய்க் கண்டாள் போலும்!
வையமிதில் கிளிசோஸ்யம் கேட்டால் தானே
  கிளிக்குணவு கிட்டுமென்ற வாக்கைப் பார்த்து 
சேய்முகத்தைக் கண்டின்பம் கொள்ளும் தாயின்
  சீர்முகத்தின் எழில்செப்பல் இயலா தய்யா!

10)
 

திருவெழுகூற் றிருக்கை செய்த ளித்துச்
   சீருடனே ஆடுமோகை சிறப்பைக் கண்டு
பெரிதுவக்கும் பேறுடைய அன்னை பாரீர்,
   பெற்றதனால் பெருமையுற்ற நிலையைப் பாரீர்!
அரிபுகழும் அரன்புகழும் அடுக்க டுக்காய்
  அரங்கத்தில் ஏறுகின்ற அழகைக் கண்டு
கருணைமழை பொழிகின்ற தமிழாம் அன்னை
  கண்டுவக்கக் காலிடுவீர் இணையம் இங்கே!

11)
 
தங்களது சிற்றூரில் கோவில் கொண்ட
  தாய்மாரி எழில்பாடத் தன்னே ரில்லாச் 
சிங்கமதில் அமர்ந்துள்ள அன்னை பற்றிச்
  சிறப்பாகக் கவிசெய்த சீர்மை  கண்டு
அங்கமதில் அதையெடுத்து அணிந்து நிற்கும்
  அன்னையிவள் அழகினையும் பாரீர் பாரீர்!
இங்கிதனை எவரேதான் இயம்ப வல்லார்
  இமயமென இணையமிது நிற்றல் காணீர்!

12)

கள்ளமாக அரிநெஞ்சில் காலை வைத்துக்
  கச்சபீயின் வீணைநாதம் கேட்கச் செய்தே
உள்ளமெலாம் அமுதவெள்ளம் பரவச் செய்த
 ஒப்பில்லா வாணியவள் தமிழும் ஆவாள்!
வெள்ளமென மக்களெல்லாம் கவிதை செய்ய
 விழிமலர்ந்து கேட்டிருக்கும் எழிலைப் பாரீர்!
அள்ளியள்ளி நாம்செய்யும் பாடல் எல்லாம்
 அணிந்தருளும் அன்னைதமிழ் பாரீர் பாரீர்!

13)

சந்தமெல்லாம் தன்பாட்டில் விளையச் செய்யும்
 தண்டமிழர் கிரிகாசன் கவியைக் கண்டு
சொந்தமகன் இவனென்று மகிழ்ந்து நின்று
 சொக்கிநிற்கும் தமிழன்னை பாரீர் பாரீர்!
சிந்தையெல்லாம் தமிழ்மணக்கும் புலவர் கூட்டம்
 செய்வதெல்லாம் இவள்போட்ட பிச்சை தானே!`
செந்தமிழாள் சீர்பாடும் திறனும் கூட
  திருவிழியின் கொடையால்தான் சேரு மன்றோ!

சிவ சூரியநாராயணன்.
 
 
 


 


 



K.R. Kumar

unread,
May 28, 2012, 1:32:41 AM5/28/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவ சூரி,

அழகு! அற்புதம் !! அன்பு !!!

இவையனைத்தும் கலந்த கலக்கலான பாடல்கள்.

வணக்கங்களும் வாழ்த்துகளும்.

அன்புடன்,
குமார்(சிங்கை)


2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

Pas Pasupathy

unread,
May 28, 2012, 7:23:24 AM5/28/12
to santhav...@googlegroups.com
இத்தகைய அருமையான கவிதைகளை எழுதும் ஒருவர் இக்குழுவில் இருக்கிறார் என்பதை நினைக்கவே பெருமை பொங்குகிறது. 

வாழ்க! 

2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தமிழ்த்தாய்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

kalam kader

unread,
May 28, 2012, 7:38:15 AM5/28/12
to santhav...@googlegroups.com
மண்சீர் தமிழ் மணக்கும் பதின்மூன்று
எண்சீர் விருத்தம் இனிது

2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தமிழ்த்தாய்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
 
 

kalam kader

unread,
May 28, 2012, 7:41:21 AM5/28/12
to santhav...@googlegroups.com
மண்சீர் தமிழால் மணக்கும் பதின்மூன்று
எண்சீர் விருத்தம் இனிது



2012/5/28 kalam kader <kalam...@gmail.com>

thangamani

unread,
May 28, 2012, 7:41:55 AM5/28/12
to சந்தவசந்தம்
திரு.பசுபதி அவர்கள், புலவர்.குழந்தை அவர்களின் ஈற்றடியை வைத்து
ஓர் ஒன்பதின் சீரடி விருத்தம் இயற்ற,பயிற்சியாகக் கொடுத்தார்.
அதற்கு நான் இயற்றிய விருத்தம் இது.(2009)

குடிபடை வீரம் காதல்
..குடிகொளும் பக்தி நேயம்
...கொண்டிடும் பாங்கு சாற்றும்

படிபுகழ் காவி யங்கள்
..பனுவலின் உன்ன தங்கள்
...பைந்தமிழ்ப் பாவ ளங்கள்

பொடியணி ஈச னாரும்
..புனிதமாம் சங்க மாய்ந்த
...பொற்பெனப் பல்வி தத்தில்

முடியுடை மூவர் செங்கோல்
..முறையினிற் போற்றிக் காத்த
...முத்தமிழ் வாழ்க மாதோ!
அன்புடன்,
தங்கமணி.

On May 28, 4:23 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> இத்தகைய அருமையான கவிதைகளை எழுதும் ஒருவர் இக்குழுவில் இருக்கிறார் என்பதை
> நினைக்கவே பெருமை பொங்குகிறது.
>
> வாழ்க!
>

> 2012/5/28 Lalitha & Suryanarayanan <lallis...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > *தமிழ்த்தாய் *

> ...
>
> read more »

Pas Pasupathy

unread,
May 28, 2012, 8:02:28 AM5/28/12
to santhav...@googlegroups.com
விடை தெரியாமல் வினா எழுப்புவதுதான் என் வேலை. :-))
பல ஆசிரியர்களுக்கே உரித்தான ஒரு பழக்கம் இது!

நான் “ கவிதை இயற்றிக் கலக்கு” என்ற தொடரில் கொடுக்கும் இத்தகைய பல பயிற்சிகளுக்குச் சளைக்காமல் பதில்கள் எழுதியவர் தங்கமணி அவர்கள். 

அந்த விடைகளைத் தனி நூலாகப் போட்டால், மூலத்தை விட அதிகம் விற்கும் என்று நினைக்கிறேன் ! 


2012/5/28 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
May 28, 2012, 8:15:14 AM5/28/12
to santhav...@googlegroups.com
தமிழ்மாரி கண்டேன்!
தமிழுக்கு ஒரு மாதிரி கண்டேன்!

இக்குழுவில் உள்ளோர் பலரின் பணியையும் பாராட்டிச் செல்லும் பாடல்கள் இனிமை!

வாழ்க!


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தமிழ்த்தாய்


--> ஊறுகின்ற?
 

--> முதல் அரையடியை இவ்வாறு பிரிக்கவேண்டுமோ? - "திருவெழு கூற்றிருக்கை செய்த ளித்துச்"
(அன்றேல் 2ம் சீர் மாச்சீராவதால், 3ம் சீர் நிரையசையில் தொடங்கவேண்டும் என்று எண்ணுகீறேன்).



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
May 28, 2012, 8:26:23 AM5/28/12
to santhav...@googlegroups.com
இப்பாடலைப் பதம்பிரித்து அருஞ்சொற்பொருளோடு 'மதிசூடி துதிபாடி - 4' இழையில் இட்டுள்ளேன்.

படிப்போர் வசதிக்காக இங்கும் பதம் பிரித்து இடுகிறேன். கீழ்க்காண்க.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/5/27 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
மிக அருமை! இன்றைய தண்டியலங்கார உரையில் காட்டாகக் கொடுக்கப் படவேண்டிய பாடல். 

( சிங்கையில் தமிழ்ப் பேராசிரியர் திரு சுப. திண்ணப்பன் அவர்களிடம் சீனப் பெண்மணிகள் தமிழ் கற்றனர் என்று என்றோ படித்தது நினைவுக்கு வந்தது.) 

2012/5/26 Siva Siva <naya...@gmail.com>

2012-05-25
திருத்தமிழ் கற்க! (மாலைமாற்று)
-----------------
மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே
தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே!


பதம் பிரித்து:
மேரு அன சீர் வருவ; கற்க, தேம் தமிழ்; வால் விடையரே தே,
தேர்; ஏய்; அடைவில் வாழ் மிதந்தே; கற்க வருவர் சீனவருமே.

 

Lalitha & Suryanarayanan

unread,
May 28, 2012, 9:08:52 AM5/28/12
to santhav...@googlegroups.com
நன்றி நண்பரே!

வணக்கம்.
சிவசூரி.

2012/5/28 K.R. Kumar <krish...@gmail.com>
அன்புள்ள சிவ சூரி,

அழகு! அற்புதம் !! அன்பு !!!

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Lalitha & Suryanarayanan

unread,
May 28, 2012, 9:11:50 AM5/28/12
to santhav...@googlegroups.com
ஈதென் பாக்கியம் என்வாழ்வில்!
நன்றி.வணக்கம்.
சிவசூரி.

2012/5/28 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
இத்தகைய அருமையான கவிதைகளை எழுதும் ஒருவர் இக்குழுவில் இருக்கிறார் என்பதை நினைக்கவே பெருமை பொங்குகிறது. 

வாழ்க! 



 
 
 


 


 



--




--

Lalitha & Suryanarayanan

unread,
May 28, 2012, 9:17:16 AM5/28/12
to santhav...@googlegroups.com
வணக்கம் . நன்றி .


தொட்டனைத்தே உறுகின்ற கிணற்றின் நீர்போல்
  

--> ஊறுகின்ற?
தட்டச்சுப் பிழை -சரி செய்துகொள்கிறேன்.


திருவெழுகூற் றிருக்கை செய்த ளித்துச்
   சீருடனே ஆடுமோகை சிறப்பைக் கண்டு
 

--> முதல் அரையடியை இவ்வாறு பிரிக்கவேண்டுமோ? - "திருவெழு கூற்றிருக்கை செய்த ளித்துச்"
(அன்றேல் 2ம் சீர் மாச்சீராவதால், 3ம் சீர் நிரையசையில் தொடங்கவேண்டும் என்று எண்ணுகீறேன்).
நன்றி. திருவேழு கூற்றிருக்கை என்று மாற்றிக் கொள்கிறேன்.


 
2012/5/28 Siva Siva <naya...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
May 28, 2012, 9:48:58 AM5/28/12
to santhav...@googlegroups.com
திருவெழுகூற் றிருக்கை செய்த ளித்துச்
   சீருடனே ஆடுமோகை சிறப்பைக் கண்டு

 

--> முதல் அரையடியை இவ்வாறு பிரிக்கவேண்டுமோ? - "திருவெழு கூற்றிருக்கை செய்த ளித்துச்"
(அன்றேல் 2ம் சீர் மாச்சீராவதால், 3ம் சீர் நிரையசையில் தொடங்கவேண்டும் என்று எண்ணுகீறேன்).
நன்றி. திருவேழு கூற்றிருக்கை *என்று மாற்றிக் கொள்கிறேன்.
*இப்படிச் செய்தால் எதுகை சரியாக அமையாது என்பதால்,
திருவெழுகூற் றிருக்கையெனும் பாடல் யாத்துச்
  சீருடனே ஆடுமோகை சிறப்பைக் கண்டு


என்று மாற்றிக்கொள்ளவா?

நன்றி.
சிவசூரி.

Siva Siva

unread,
May 28, 2012, 9:58:26 AM5/28/12
to santhav...@googlegroups.com
"திருவெழுகூற் றிருக்கையொன்றை யாத்த ளித்துச்" / "திருவெழுகூற் றிருக்கைதனை யாத்த ளித்துச்"
என்பதும் பொருந்தலாம்.


2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
திருவெழுகூற் றிருக்கை செய்த ளித்துச்

   சீருடனே ஆடுமோகை சிறப்பைக் கண்டு

--> முதல் அரையடியை இவ்வாறு பிரிக்கவேண்டுமோ? - "திருவெழு கூற்றிருக்கை செய்த ளித்துச்"
(அன்றேல் 2ம் சீர் மாச்சீராவதால், 3ம் சீர் நிரையசையில் தொடங்கவேண்டும் என்று எண்ணுகீறேன்).

Lalitha & Suryanarayanan

unread,
May 28, 2012, 10:03:41 AM5/28/12
to santhav...@googlegroups.com
கவியன்பன்  கலாமுக்கு  நன்றிகள்.

சிவசூரி..

2012/5/28 kalam kader <kalam...@gmail.com>
மண்சீர் தமிழ் மணக்கும் பதின்மூன்று
எண்சீர் விருத்தம் இனிது

2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தமிழ்த்தாய்





--
 
 


VETTAI ANANTHANARAYANAN

unread,
May 28, 2012, 11:00:58 AM5/28/12
to santhav...@googlegroups.com

சந்தவசந்தக் குழுவின் முதல் கவியரங்கத்தில் நான் இட்ட ஒரு பாடலை இந்தத் தொகுப்பிற்காக மீண்டும் கீழே தந்துள்ளேன். அதற்கு முன்னுரையாக இன்றெழுதிய பாடல் ஒன்றை முதலில் இட்டுள்ளேன்:


..அனந்த் 28-5-2012

 


                   <> தமிழ்த்தாய் வாழ்த்து <>


 

எத்தனை கவிஞரும் எத்தனை அறிஞரும் அன்னையுன் எழிலை எண்ணி

.. எழுதியும் பாடியும் ஏத்திய பின்னரும் இன்னுமுன் ஏற்ற மெல்லாம்


சித்திரித் திலரெனும் சீர்த்தியைக் கொண்டனை; சிந்தனை செய்யுங் காலை

.. திறந்தவான் வெளியெனத் திகழுமுன் சிறப்பெலாம் சிக்குமோ எழுதுகோலில்?


முத்தமிழ்க் கடலிலே மூழ்கிய புலவர்கள் முதிர்ந்தபல் கோடி முத்தை

.. மொண்டெமக் களித்ததால் விளைந்ததோர் களிப்பினில் மிதந்துன திளமை போற்றி


இத்தினம் தன்னிலிவ் வெளியனேன் இயற்றுமிச் சிறியதோர் கவிதை என்னும்

… இன்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.


                                                          *


     

எனக்குள்ஒரு புனலாய்ச்சிறு நதியாய்அலை கடலாய்

.... இழைந்தோடுநல் லமுதேஇயல் இசைநாடகத் தமிழே!


மணக்கும்புது மலரேஎழிற் பொழிலேகவின் வனமே

.... வருடும்மிளந் துளிரேஉயர் பொதிகைவளர் மொழியே!


நினைக்கும்பொழு(து) எளிதேமனம் நிறைந்தென்கரம் வழியே

.... நெடுநாள்நிலை கவியாய்உரு வெடுக்கும்என துயிரே!


உனைக்கும்பிட உனைஏத்திட உயரும்உன(து) அடியேன்

.... ஒருநாளொரு பொழுதாகிலும் மறவேன்உன தருளே!

                              *



எனக்குள்ளொரு துணையாய்ப்புது உறவாய்ப்பெரு நிதியாய்

.... இணையும்படி இனிதெய்திய பலதோழர்கள் உலகம்


அனைத்தும்நிறை கவிபாடுநர் அவரோடள வளவி

.... அடையும்சுகம் அடடா!அது   பெரிதேமிக அரிதே!


வனைக்கும்பல கவியோவிய மடலாம்அவை மனத்தில்

.... வளர்க்கும்உணர் வதனால்வரு நெகிழ்வால்நம துடலம்


நனைக்கும்விழி மழையேதமிழ் புரக்கும்புனல் புவியில்

.... நமக்கென்றொரு இடமேபெற வழிகாட்டிடும் அதுவே!          

                           *



எனக்குள்ஒரு நிலவாயெரி கதிராயகல் விளக்காய்

.... இருள்நீக்கிடும் ஒளியேபழ மறையேஎன(து) இறையே!


மனக்கோவிலில் புகுவாய்அதில் உனைக்காட்டியென் உளநோய்

..... மறைந்தேகிடத் தருவாய்உன தருளானநல் மருந்தே


கனக்கும்பவச் சுமைதாங்கிட இயலாமலுன் கழலே

.... கதியேஎன வருமேழையின் கவல்தீர்த்திடும் நிழலே


க்குள்உனைத் தெளிவாயெவன் அறிவான் அகத்தே

.... தழைக்கும்சுக நிலையேஎனைத் தலையாட்கொளும் பரமே!      


                                                  *****

Pas Pasupathy

unread,
May 28, 2012, 11:46:22 AM5/28/12
to santhav...@googlegroups.com
இன்னொரு பாடல். அண்மையில் நடந்த கவிதைப் பட்டி மண்டபத்தில்
நான் எழுதிய அறிமுகக் கவிதையிலிருந்து:
 
தமிழ்
=====
 
 

மும்மை என்னும் குணமுண்டு -- தமிழ்
   மொழிக்குத் தனியோர் பண்புண்டு
செம்மை என்னும் நிறைவுண்டு -- சங்கத்
   திணைகள் கொடுக்கும் சிறப்புண்டு                               (1)
 

இயலும் இசையும் கூத்துமென -- வே(று)
   எங்கும் இல்லா முப்பிரிவால்
பயனும் வியனும் விளைந்தனவே -- இப்
   பகுப்பால் மொழியும் உயர்ந்ததுவே !                           (2)
 

யவனம் லத்தீன் அறிந்தோர்கள் - தமிழ்
   யாப்பு, முழுமை  சிறப்பென்றார்.
புவனப் பேச்சு மொழிசிலவே -  சீர்,
   பொலிவு, திருத்தம், உளதமிழ்போல் [1]                          (3)
 

பொருளைத் தொல்லி லக்கணத்தில் -- சேர்த்த
   புதுமை தண்ட மிழ்க்குண்டு !
தரமாம் மரபி லக்கியங்கள் -- பல
   தந்த பெருமை அதற்குண்டு !                                         ( 4 )
 

அகமும் புறமும் வழியமைக்கும் - மிக
   அழகாய் நூலை வரையறுக்கும்
சகமே போற்றும் தத்வங்கள் -- செந்
   தமிழை வளர்த்த சமயங்கள் .                                         (5)
 

இசையில் பிறந்த இலக்கணத்தால் -- தமிழ்
   இனிமை என்றான் பாரதியும் [2]
வசியம் செய்யும் தொடையழகில் -- மிக
   மனம கிழ்ந்தான் கூத்தனுமே ! [3]                                 (6)
 

அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்
   யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே
சிகரக் கவிதை வண்ணம்போல் --ஒரு
   சீர்த்தி உண்டோ பிறமொழியில் ?                                (7)
 
இழைய றாமல் வாழுமொழி -- பெரும்
  இலக்கி யங்கள் இலங்குமொழி
பழமைக் காலத் தொடர்ச்சியிலே -- புதுப்
  படைப்புத் துடிப்பு வெடிக்குமொழி                                 (8)
 
[1]
 
"தமிழ் கிரேக்கமொழியினும் நயமான செய்யுள்நடையுடையது
லத்தீன் மொழியினும் பூரணமானது"    (வின்ஸ்லோ)
 
"மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும்
சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று." (டெய்லர் )
 
 

[2] “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம் “ -பாரதி
 
[3] “ மோனை முத்தமிழ் மும்மத மும் பொழி “ --ஒட்டக்கூத்தர்

                                               *****

2012/5/22 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>



கவிஞர்கள் ஜவஹர்லால், இலந்தையார், கவியோகி, அனந்த், பசுபதி, ஹரிகி,
சிவ. சூரி, கிரிகாசன், வித்தியாசாகர், கலாம், தங்கமணி அம்மா,
மதுரபாரதி, சௌந்தர், குமார், நிரஞ்சன், இன்னும் இங்கிருப்போர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை அளிக்கவேண்டுகிறேன்.

நன்றி,
நா. கணேசன்


--

K.R. Kumar

unread,
May 28, 2012, 12:08:59 PM5/28/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள பசுபதி ஐயா,

அழகான சந்தம்..அமைதியான நடை

வாய்விட்டுப ப்டிக்கும்போது மிகவும் சுகமாகவும் இனிமையாகவும் இருந்தது.  

அன்புடன்,

குமார்(சிங்கை)

2012/5/28 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
May 28, 2012, 1:39:30 PM5/28/12
to santhav...@googlegroups.com
நன்றி, ஜவகர்லால்!

2012/5/28 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Pas Pasupathy

unread,
May 28, 2012, 1:40:04 PM5/28/12
to santhav...@googlegroups.com
நன்றி, குமார்.

2012/5/28 K.R. Kumar <krish...@gmail.com>
அன்புள்ள பசுபதி ஐயா,

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 28, 2012, 1:48:06 PM5/28/12
to santhav...@googlegroups.com
>> இன்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.

”இம்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.” - என்று திருத்திப் படிக்கவும்


அனந்த்

2012/5/28 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
May 28, 2012, 7:24:59 PM5/28/12
to santhav...@googlegroups.com

2012-05-28
தேர் ஆணை துதைந்த தமிழ்! (மாலைமாற்று)
-----------------
வாகா வாய்தேர்வா யாணை துதைந்த தமிழாவா
வாழா மிததந்தை துணையா வார்தேய் வாகாவா

பதம் பிரித்து:
வாகு ஆவாய்; தேர்வாய் ஆணை துதைந்த தமிழ்; ஆ ஆ
ஆழா மித; தந்தை துணை ஆவார்; தேய்வு ஆகா; வா!

உரைநடை:
வா! தேர்வாய் ஆணை (/ஆண் ஐ) துதைந்த தமிழ்; தந்தை துணை ஆவார்; ஆ ஆ ஆழா மித; தேய்வு ஆகா; வாகு ஆவாய்!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/5/26 Siva Siva <naya...@gmail.com>

2012-05-25
திருத்தமிழ் கற்க! (மாலைமாற்று)
-----------------
மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே
தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
May 28, 2012, 8:11:39 PM5/28/12
to santhav...@googlegroups.com
இனிய பாடல்கள்.

/இயற்றுமிச் சிறியதோர் கவிதை என்னும்… இம்மலர் தன்னை/

'இ' என்று சுட்டு இருமுறை வருகிறதோ?
'இயற்றிய' என்று இருக்கலாமோ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/5/28 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
May 28, 2012, 11:36:41 PM5/28/12
to santhav...@googlegroups.com

சென்ற வருடம் நமது இணையத்தில் இட்டிருந்த ஒரு வாழ்த்துப் பாடலைச் சற்று மாற்றம் செய்து இங்கே இடுகின்றேன்.


1)

கூடல்  திருநகரில் கூடிக் களித்திருந்த
பாடற் தொழில்செய்யும் பைந்தமிழ்ச் சங்கத்தார்
ஏடில் இருந்தம்மை ஈதென்ன விந்தையின்றே
ஈடில் மொழியம்மை இன்னமுத ஊற்றம்மை
கேடில் விழுச்செல்வம்  கேளாது தந்தம்மை
வாடும் பயிர்க்கெல்லாம் வான்மழை  போலம்மை
கூடிக்  களித்தே கணேசனார் மூலமெனைப்
பாடிடச் சொன்னாயோ பாட்டேலோர் எம்பாவாய்.


2)

அன்னை இடம்வைத்த ஆலங் குடியானை
மின்னும் பிறையானை விண்ணின் நதியானை
முன்னைப் பழம்பொருளை முத்துக் கவித்தமிழில்
கன்னற்  கிணையான கள்ளின் சுவையாகத்
தன்னிகர் இல்லாத   தன்மைத்தாய்த் தந்தாரே
மன்னும் உலகிற்கே மாணிக்க வாசகர்
என்றாலும் போதாமல் இன்னும் கவிகேட்டாய்
என்நண்பர் மூலந்தான் இன்றேலோர் எம்பாவாய்.


3)


உற்றம் உறவெல்லாம் உன்னோடு தானென்று
பெற்றங்கள் மேய்த்தானைப் பற்றித்தான் பாடல்கள்
வற்றாத ஊற்றாக வஞ்சிக் கொடியாளே
கற்றாரும் மற்றாரும் எற்றைக்கும் இன்புறவே
அற்றைக்கே தந்தாளே ஆண்டாளை எண்ணாயோ
கற்றைக் குழல்முடியாய் கன்னித் தமிழுன்னைப்
பற்றித்தான் பாடல்கள் போதெல்லாம் செய்யென்று
சற்றுத்தான் கேட்டாயோ தாயேலோர் எம்பாவாய்.


4)


வங்கித் தொழிலென்னும் வேலையில் ஓய்வுபெற்றுத்  
தங்கத் தமிழுன்னைத் தான்பாடி நிற்கின்றேன்
பொங்கும் உணர்வோடு புத்தம் புதிதாக
மங்காத மாக்கவிதை மண்ணில்நான் செய்திடவே
இங்கென்னைக் காப்பதுவே இன்றுமுதல் உன்கடனாம்
தங்குதடை  இல்லாமல்  தாரணியில் சீருடனே
எங்கெங்கு சென்றாலும் ஏற்றங்கள் தந்திடுக
சங்கத் தமிழன் னக்கேலோர் எம்பாவாய்.


.சிவ சூரியநாராயணன்.

*

 




Kavingar Jawaharlal

unread,
May 29, 2012, 7:32:41 AM5/29/12
to santhav...@googlegroups.com
நல்ல பாடல்கள் 

2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தமிழ்த்தாய்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Subbaier Ramasami

unread,
May 29, 2012, 9:05:56 AM5/29/12
to santhav...@googlegroups.com
வங்கிப் பணிமுடித்து வந்த சிவசூரி
இங்களித்த பாடல்  இனிது
 
இலந்தை

2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

சென்ற வருடம் நமது இணையத்தில் இட்டிருந்த ஒரு வாழ்த்துப் பாடலைச் சற்று மாற்றம் செய்து இங்கே இடுகின்றேன்.

*

 




Lalitha & Suryanarayanan

unread,
May 29, 2012, 9:14:34 AM5/29/12
to santhav...@googlegroups.com
தலைவருக்கு வணக்கமும் நன்றியும்
சிவசூரி.

2012/5/29 Subbaier Ramasami <elan...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
May 29, 2012, 9:16:11 AM5/29/12
to santhav...@googlegroups.com
பொற்கிழிக் கவிஞருக்கு நன்றிகள்.
சிவசூரி.

2012/5/29 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 29, 2012, 9:54:46 AM5/29/12
to santhav...@googlegroups.com

நன்றி. இயற்றிடும் என்று மாற்றியுள்ளேன்.



எத்தனை கவிஞரும் எத்தனை அறிஞரும் அன்னையுன் எழிலை எண்ணி

.. எழுதியும் பாடியும் ஏத்திய பின்னரும் இன்னுமுன் ஏற்ற மெல்லாம்


சித்திரித் திலரெனும் சீர்த்தியைக் கொண்டனை; சிந்தனை செய்யுங் காலை

.. திறந்தவான் வெளியெனத் திகழுமுன் சிறப்பெலாம் சிக்குமோ எழுதுகோலில்?


முத்தமிழ்க் கடலிலே மூழ்கிய புலவர்கள் முதிர்ந்தபல் கோடி முத்தை

.. மொண்டெமக் களித்ததால் விளைந்ததோர் களிப்பினில் மிதந்துன திளமை போற்றி


இத்தினம் தன்னிலிவ் வெளியனேன் இயற்றிடும் சிறியதோர் கவிதை என்னும்

… இம்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.


அனந்த்

2012/5/28 Siva Siva <naya...@gmail.com>
இனிய பாடல்கள்.

/இயற்றுமிச் சிறியதோர் கவிதை என்னும்… இம்மலர் தன்னை/

'இ' என்று சுட்டு இருமுறை வருகிறதோ?
'இயற்றிய' என்று இருக்கலாமோ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/5/28 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>> இன்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.

”இம்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.” - என்று திருத்திப் படிக்கவும்


அனந்த்




                                                          *

   


Kavingar Jawaharlal

unread,
May 30, 2012, 12:46:16 AM5/30/12
to santhav...@googlegroups.com
அருமை நண்பரே! வாழ்க.

2012/5/29 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Raja.Tyagarajan

unread,
May 30, 2012, 4:08:01 AM5/30/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இத்தலைப்பினில் கீழ்வரும் பாக்கள் சேருமென்று எண்ணுகிறேன்.

வெள்ளியாய் மிளிர்கவே!

கொடிமுல்லைச் சிந்தும் குளிர்மணத்தைக் கூட்டி
அடிவானம் தீட்டு மழகெழிலைச் சேர்த்துப்
படிக்கின்றச் செம்மரபுப் பாட்டே! தமிழே!
விடிவெள்ளி போல்மிளிர்க வே!

என்னில் உறைந்தவளே! தமிழே!

அன்பைப் பொழிந்திடும் அன்னை யுருவெனும் அற்புதமாய்;
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனும் கற்பகமாய்;
பொன்னின் நிறத்துடன் நித்தம் எழுந்திடும் பொற்கதிராய்;
என்னி லுறைந்தெனை யென்றும் வளர்த்திடும் எந்தமிழே!

விண்ணி லுலவிடும் தண்மை யுருவெனும் வெண்ணிலவாய்;
கண்ணைச் சுழற்றியே கன்னம் சிவந்திடும் கன்னிகையாய்:
மண்ணில் பொழிந்திடும் கொண்டல் அனையநற் பண்ணிசையாய்;
எண்ணம் நிறைந்தெனை என்றும் வளர்த்திடும் இன்தமிழே!

துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்;
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்;
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே,
 உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

தமிழ்த்  தாயே! பரிவே!

தனையே தருமுயர் தாயின் பரிவே!
நினைவே நெருப்பின் நிழலாய் எரிய,
வனைந்து வளர்க்கும் வளமை வடிவே;
பனித்துளித் பூத்தப் பசுமைப் படர்வே!
கனிமலைத் தேறல் கனிவே! புலவர்
புனைகவிச் சாரல் பொழிவே! புவியில்
எனையே உயர்த்தும் எழிலே! தமிழே!

வண்டமிழே வாழியவே!

மலர்க்காவாய், மனம்நாடும் மழலைத் தேனாய்,
.....வஞ்சியர்கள் நாடுகின்ற வண்ணப் பூவாய்,
புலர்காலைக் காட்சியெனும் பனிப்பூப் போர்த்த
.....பூமியதன் புத்தமிழ்த மாட்சி மையாய்,
சிலிர்த்திருக்க சிந்தையள்ளும் தென்றல் காற்றாய்,
.....தித்திக்கும் தேன்பாகாய் நாவில் ஊறி,
வலிமையுடன் வந்தெதிர்க்கும் பகைவர் தம்மை
.....வகுந்தெடுக்கும் வண்டமிழே வாழ்க தாயே!

தமிழ் அழலே எழுகவே!

கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம துணர்வில்
தினமும்நமை யழிக்கும்பகைச் சினமாய்நம தெதிரில்
மனிதந்தகர் நலிவாங்கொடு வழியையழித் திடவே
அனலாய்க்கலந் துறையுந்தமி ழழலேயென எழுவாய்!

தமிழவளும் ஓங்குகவே!

ஆன்றதோர் தமிழன்பால் அறிவுசால் நன்னெறியால்
தேன்கனி நிகர்ப்பண்ணால் சிறந்தநற் பாவலர்காள்;
வான்புகழ்க் கவிச்சொல்லால் வளமொடு பாடுகின்றீர்
சான்றுடைத் தமிழவளும் சழக்கற ஓங்கிடவே!

ஆழ்கடல் அலைவீச்சை அழித்திடும் ஆர்ப்பரிப்பை
சூழ்ந்திடும் செருபகையைத் தருக்கரின் தாக்குதலை
வாழ்தமிழ் எதிர்த்தழகாய் வளர்ந்ததைப் பாடுகின்றீர்
தாழ்விலாத் தமிழவளும் தளர்வற ஓங்கிடவே!

கவியெனச் செதுக்கினையே

எண்ணக் கடலது என்று மிரைந்திட
வண்ணக் கலையினில் மல்லைச் சிலையினில்
கண்ணன் குழலினில் கன்னற் சுவையினில்
விண்ணும் கிறுக்கிடும் மின்னல் கொடியினில்
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்
பண்கள் புனைந்திடப் பாட்டும் இசைத்திட
மண்ணில் கவியென என்னைச் செதுக்கவே
என்னி லுறைந்தவ ளே!

என்னை உயர்த்தும் எழிலே! தமிழே!

கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்
பின்னல்கள் சிக்கலெனப் பீடிக்கும் ஆசையற
இன்றிங்கே நானறிந்தேன்; என்றென்றும் எந்தமிழே
என்னை உயர்த்து மெழில்!

புன்மையெனுந் தீயதனில் புத்தழகுப் பொய்யதனில்
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்துழல,
முன்னவரின் நற்செயலால் முத்தமிழே காவலென
என்னை உயர்த்து மெழில்!

இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இப்பிறப்பாம் ஆழியிலே,
என்னுள்ளம் ஓயா தெரிகையிலே, நான்வணங்கும்
உன்னதமா யென்னுள்ளே உட்போந்த செந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.

என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே
அன்பதனை ஆற்றலினை அங்கெங்கோ தேடுகையில்
தன்னறிவாய் சத்தியத்தைத் தந்துவிட்ட தீந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.

என்னில் கண்டதைத் தந்தவளே!

என்வாழ்விலே விளைந்திட்டநல் ஏற்றங்களும்
என்தாழ்விலே முளைத்திட்டசொற் றூற்றல்களும்
என்னாற்றலால் தான்வந்ததாய் அன்றெண்ணினேன்!
பைந்தமிழ்
அன்னையி னருளதால் தெளிகிறேன்,
கண்டதைத் தந்ததுங் கன்னலாந் தமிழே!

செய்ந்நன்றி மறப்பேனோ தமிழே!

என்வாழ்வும் என்வளமும் எனதுயிரும்,
.....என்மெய்யும் உன்னருளா லியங்குதடி!
என்னுள்ளில் நீயிருந்தே இயக்குகிறாய்;
.....எந்நாளுந் தேந்தமிழே இயங்குகிறேன்!
என்னெண்ணம் அத்தனையுந் தமிழதுவாய்,
.....இன்றிங்கே ஆனதுவும் உனதுயர்வால்!
என்வாழ்க்கை இன்றிருக்கும் இயல்பினுக்கே,
.....என்நன்றி சொல்லுவனோ தமிழணங்கே!
===================


அன்பன்
இராஜ.தியாகராஜன்

naa.g...@gmail.com

unread,
May 31, 2012, 7:45:17 AM5/31/12
to சந்தவசந்தம்

அந்தக் காலத்தில் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்கள்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் பலவும் தொகுத்து, ‘மொழியரசி’ என்ற நூலை
வெளியிட்டார்கள். சந்தவசந்தக் கவிஞர்களின் கவிதைக் கனிகளும் அத் தொகுப்பை
விரிவுபடுத்த உதவும். கம்பனடிப்பொடி சா. கணேசன் கட்டிய தமிழ்த்தாய்
திருக்கோவில் குடமுழுக்கின்போது தமிழ்த்தாய் பிரபந்தம் வெளியானது. 20-ஆம்
நூற்றாண்டு பத்திரிகைகளில் வெளியான தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் பல உள்ளன.
எல்லாவற்றையும் சில தொகுப்பாசிரியர் முயன்று ஓரிடத்தில்
தரவேண்டும்.

அருமையான தமிழ்த்தாய் போற்றிப் பாடல்கள். சங்க இலக்கியத்தில்
முக்கியமானது அகவல் யாப்பே.
ஆசிரியப்பாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்று எழுத விண்ணப்பிக்கிறேன்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கனார்,
... இன்னும் பலர் பங்கு பெற வேண்டுகிறேன். வசனகவிதையாக நிரஞ்சன் பாரதி
எழுதலாமே.
பாற்கரன் முத்துசாமி, ... எல்லோரும் எழுதுங்கள்.

அன்புடன்
நா. கணேசன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 31, 2012, 3:31:35 PM5/31/12
to santhav...@googlegroups.com

அன்புள்ள சூரி,

உங்களுடைய அருமையான கவிதைப் பூங்கொத்தை இப்போதுதான் முழுமையாகப் படித்தேன். தங்கு தடையின்றிப் பொங்கிவரும் கற்பனைப் பிரவாகம் கவிதை உருக்கொள்ள வைப்பதில் நீர் கைவந்தவர் என்பதற்கு மேலுமொரு சான்று. வாழ்த்துகள்!

…அனந்த் 31-5-2012

தட்டச்சு: தொட்டனைத்தே ஊறுகின்ற கிணற்றின் நீர்போல்
குற்றியலுகரப் புணர்ச்சி: இட்டமுடன் சுவைத்திருந்*து* இன்பம் கொண்டே

 

2012/5/28 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தமிழ்த்தாய்

1)
எங்களது செந்தமிழின் எழிலைக் கொஞ்சம்
   எடுத்துரைக்கும் எண்ணமுடன் இங்கே வந்தேன்!
சிவ சூரியநாராயணன்.

RAJAGOPALAN APPAN

unread,
May 31, 2012, 4:10:12 PM5/31/12
to santhav...@googlegroups.com

வாழ்க தமிழ் மொழி

நெற்றித் திலகமென நீயணிந்த முப்பாலும்
பொற்பாதச் சிலம்பும் புனைமகுடம் கம்பன்செய்
சொற்கோலம் என்றமர்ந்த செந்தமிழே நின்னழகு
நிற்குமென் நெஞ்சில் நிலைத்து.


எண்ண மெல்லாம் என்னை யன்றி ஏது மற்ற நாளிவர்ந்து
அன்னை யென்று நின்றே என்னை யாத ரித்து மாற்றினை!
எண்ணி லாத நூல்க ளாயி லக்கி யங்கள் காட்டிநீயே
கன்னி யாக மாறி நின்று காத லின்ப மூட்டினை!

மேக வண்ணன் ஆதி நாதன் மண்ணி லன்று தித்துராம(ன்)
ஆக வந்த காதை சொன்ன கம்ப செல்வ முன்னதே!
சோக முற்று ராச மன்றில் சிலம்பு சூளு ரைத்துநீதி
தாக முற்றே ஊரெ ரித்த பெண்மை யுந்தன் பெண்மையே!

வேத நூல டக்க மிங்கும் வேண்டு மென்றி யற்றிவைத்து
ஓது கின்ற பாசு ரங்க ளோசை யின்ப முன்னதே!
சோதி மிக்க பாட லால்சு டர்ந்தொ ளிர்ந்த பாரதிக்கு,
யாது மாகி நின்ற சக்தி உன்னை யன்றி வேறுயார்?

பத்து எட்டு கீழ்க்க ணக்கு மென்ற மொத்த நூல்களோடு
சித்தர் மூலர் ஞான மென்று சேர்ந்த சொத்து மெத்தனை?
ஒத்த தென்றே ஒன்றி லாவு யர்வு கொண்டு நின்றனை
நித்த மாய்ச்சி றந்தி ருந்து வாழ்க வாழ்க வாழ்கவே!

சென்னை பாரதி கலைக்கழகம் 58ம் ஆண்டு விழாவில் பாடியது.
 
அ.ரா

N. Ganesan

unread,
May 31, 2012, 4:44:45 PM5/31/12
to santhav...@googlegroups.com
தமிழ்த்தாயே பாடுவதாக பாரதியார் ஒரு பாடல்
அற்புதமாக நமக்குக் கொடுத்துள்ளார். தமிழ்த்தாயின் சிறப்புக்கள்
என அப்போது கருதிய எல்லாமும் சொல்லியுள்ளார்.
 
யாராவது அழகாக இப்பாடல் முழுமையும் பாடியுள்ளனரா?
பரத நாட்டியம் அபிநயம் காட்டி நிச்சயம் ஆடியிருப்பார்கள்.
காணொளி, கேட்பொலி கிடைத்தால் தேவலை.
 
தமிழ்த் தாய்
 பாரதியார்
 
தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)
 
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
   ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
   மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். 1
 
மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். 2
 
கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
    காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் – பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். 3
 
சாத்திரங் கள்பல தந்தார் – இந்தத்
    தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்;
நேத்திரங் கெட்டவன் காலன் – தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். 4
 
நன்றென்றுந் தீ தென்றும் பாரான் – முன்
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் -வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். 5
 
கன்னிப் பருவத்தில் அந்நாள் – என்றன்
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு – பின்னர்
    யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர் 6
 
தந்தை அருள் வலி யாலும் – முன்பு
    சான்ற புலவர் தவவலி யாலும்.
இந்தக் கணமட்டும் காலன் – என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். 7
 
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்! – இனி
    ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! 8
 
“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள்கூறும்:
மெத்த வளருது மேற்கே – அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 9.
 
சொல்லவும் கூடுவ தில்லை – அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.” 10
 
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடு வீர்எட்டுத்திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 11
 
தந்தை அருள்வலி யாலும் – இன்று
    சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். 12
 
------------
வாழ்க தமிழ்மொழி! வாழ்க நிரந்தரம்!
 
 
நா. கணேசன்

Lalitha & Suryanarayanan

unread,
Jun 1, 2012, 4:51:40 AM6/1/12
to santhav...@googlegroups.com
பேராசிரியருக்கு,


வணக்கம். நன்றி.
இப்படி மாற்றிக் கொண்டுவிட்டேன்;



கட்டளைசெய் கலித்துறையால் காவி யத்தைக்
   கவினழகாய்ச் செய்கின்ற புலவர் கண்டே
இட்டமுடன் சுவைத்தவளாய்  இன்பம் கொண்டே
   இதயமெல்லாம் களித்திருக்கும் அன்னை பாரீர்!
தொட்டனைத்தே ஊறுகின்ற கிணற்றின் நீர்போல்
   துணிந்திங்கே கவிதைகள் செய்யச் செய்ய
மொட்டவிழிந்து மணம்வீசும் மலர்கள் போலே
   முகிழ்க்கின்ற கவியெல்லாம் அவளால் தானே!

சிவசூரி.


2012/6/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
Jun 1, 2012, 5:41:49 AM6/1/12
to santhav...@googlegroups.com
நல்ல பாடல்கள் .

2012/6/1 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 1, 2012, 7:24:41 AM6/1/12
to சந்தவசந்தம்

On Jun 1, 2:41 am, Kavingar Jawaharlal <kavingar.jawahar...@gmail.com>
wrote:


> நல்ல பாடல்கள் .
>

ஆம் ஐயா. இவ்விழையில் வந்துள்ள பாடல்களைத் தமிழ்த்தாய் உவந்தேற்பாள்.

அன்புடன்
நா. கணேசன்

> 2012/6/1 RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > வாழ்க தமிழ் மொழி
>
> >  நெற்றித் திலகமென நீயணிந்த முப்பாலும்
> > பொற்பாதச் சிலம்பும் புனைமகுடம் கம்பன்செய்
> > சொற்கோலம் என்றமர்ந்த செந்தமிழே நின்னழகு
> > நிற்குமென் நெஞ்சில் நிலைத்து.
>
> > எண்ண மெல்லாம் என்னை யன்றி ஏது மற்ற நாளிவர்ந்து
> > அன்னை யென்று நின்றே என்னை யாத ரித்து மாற்றினை!
> > எண்ணி லாத நூல்க ளாயி லக்கி யங்கள் காட்டிநீயே
> > கன்னி யாக மாறி நின்று காத லின்ப மூட்டினை!
>
> > மேக வண்ணன் ஆதி நாதன் மண்ணி லன்று தித்துராம(ன்)
> > ஆக வந்த காதை சொன்ன கம்ப செல்வ முன்னதே!
> > சோக முற்று ராச மன்றில் சிலம்பு சூளு ரைத்துநீதி
> > தாக முற்றே ஊரெ ரித்த பெண்மை யுந்தன் பெண்மையே!
>
> > வேத நூல டக்க மிங்கும் வேண்டு மென்றி யற்றிவைத்து
> > ஓது கின்ற பாசு ரங்க ளோசை யின்ப முன்னதே!
> > சோதி மிக்க பாட லால்சு டர்ந்தொ ளிர்ந்த பாரதிக்கு,
> > யாது மாகி நின்ற சக்தி உன்னை யன்றி வேறுயார்?
>
> > பத்து எட்டு கீழ்க்க ணக்கு மென்ற மொத்த நூல்களோடு
> > சித்தர் மூலர் ஞான மென்று சேர்ந்த சொத்து மெத்தனை?
> > ஒத்த தென்றே ஒன்றி லாவு யர்வு கொண்டு நின்றனை
> > நித்த மாய்ச்சி றந்தி ருந்து வாழ்க வாழ்க வாழ்கவே!
>
> > சென்னை பாரதி கலைக்கழகம் 58ம் ஆண்டு விழாவில் பாடியது.
>
> > அ.ரா
> > Visit arajagopalan.blogspot.com
>

> > 2012/5/31 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>

> *பொற்கிழிக்கவிஞர்*
> *டாக்டர். ச.சவகர்லால்*
> கைபேசி : *+91- 9790846119*
> kavingar-jawaharlal.blogspot.com
> kaviingar.jawahar...@gmail.com

Siva Siva

unread,
Jun 1, 2012, 9:27:19 AM6/1/12
to santhav...@googlegroups.com
Something that happened catch my eye!

http://india.blogs.nytimes.com/2012/06/01/indias-new-english-only-generation/

June 1, 2012, 7:18 am

India’s New ‘English-Only’ Generation

By SARITHA RAI
.................
.................
In Bangalore and elsewhere in Big City India, factors like great mobility, a demanding school system and mixed marriages are churning up a startling consequence: a generation of urban children is growing up largely monolingual — speaking, thinking and dreaming only in English.
.................
.................

In the lower socioeconomic strata, where learning English is aspirational, the language is trickling down quickly. Neighborhood private schools have unstated admission requirements: at 3 and 4, the child is required to be toilet-trained and speak English.

Parents who stretch their family budgets to get their children into “English medium” schools see that the language has obvious economic benefits in an increasingly globalized world. Higher up the economic ladder, though, it is a matter of convenience.

Rimjhim Chakraborty is 9. Her mother, Pinky, a realtor, speaks Sindhi, a language from the northwest. Rimjhim’s father, Apurba, who heads sourcing for a sporting goods multinational, is fluent in both Punjabi and Bengali. Rimjhim, despite learning Hindi at school, refuses to answer when spoken to in anything other than English. So that is the language that rules the Chakraborty household.

That is unfortunate, says her mother, who wants to make an effort to teach Rimjhim an Indian language. But “between her math homework, sports, a little bit of PlayStation and television, where is the time?” Ms. Chakraborty asks.

She ends up scolding Rimjhim in Sindhi. “Not the best introduction to a language,” she admits.

Then she makes a dire prediction: “At the rate we are going, all Indian languages will die.”







Message has been deleted

N. Ganesan

unread,
Jun 17, 2012, 9:54:50 AM6/17/12
to Santhavasantham

நிரஞ்சன் ‘தமிழின் தனிச்சிறப்பு என்ன?’ என்று கேட்டுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து:
-----------------------

வைய மீன்ற தொன்மக்கள் உளத்தினைக்
கையி னாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம்

                      பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளையவர்கள்
                        கரந்தைத் தமிழ்ச் சங்கம் (நிறுவுநர்)

பாரதத்தின் பழமையை அறிய இரண்டு செம்மொழிகள்தான் முக்கியமானவை:
(1) தமிழ் (2) சம்ஸ்க்ருதம். பல நூறு மடங்கு பழைய இலக்கியங்களை
சம்ஸ்க்ருதம் கொண்டுள்ளது. பல மதங்களின் ஆராய்ச்சிக்கும், இந்தியாவின்
கணிதம், விஞ்ஞானம், ... ஆராயவும் அவை துணைவருகின்றன. இந்தியாவின்
 பழைய பல்துறைகளை ஆராயவும், இந்தியாவின் தாக்கம் மத்திய ஆசியாவிலும்,
தென்கிழக்கு ஆசியாவிலும், சீனாவிலும், திபெத்திலும் என்று
பார்க்கப்பயன்படுகிறது.

அவ்வளவு விரிவான நூல்கள் பழமையுடன் இல்லாவிடினும், ஆரியமொழி
இலக்கியங்களுக்கு இணையாக செந்தமிழ் இலக்கியங்கள் வைக்கப்படுவது,
ஆரியத்தில் இந்தியாவின் பழமை பற்றிச் சொல்லாத விஷயங்கள் செந்தமிழிலே
சொல்லப்படுவது தமிழின் முக்கியமான தனிச்சிறப்புகளில் ஒன்று.

சிந்து சமவெளி நாகரீகத்தின் பல கூறுகளை ஆராயத் தமிழ் இலக்கியங்கள்
உதவுகின்றன. அதைத் தமிழின் இன்றியமையாத தனிச்சிறப்புகளின் ஒன்றெனச்
சாற்றலாம்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages