சந்தவசந்தம் இதுவரை 61 கவியரங்கங்கள், மூன்று கவிதைப் பட்டிமண்டபங்கள், ஒரு தொடர் வழக்காடுமன்றம், குரல்வழிக்கவியரங்கம், காணொளி அரங்கம் எனப்பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில கவியரங்கங்களில் ஒன்று திரு. அனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
குரல்வழிக் கவியரங்கம்.. மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் கவியரங்கத்திலிருந்து கவியரங்கத்திற்கு ம்முன் தோரண வாயில் படைத்தளிப்பதைத் தொடங்கினேன். அந்த அரங்கத்தில் தோரணவாயில் என்று பெயர் கொடுக்காமல் கொடியேற்றம் எனப் பெயர் சூட்டியிருந்தேன். நேற்ரு அந்தக் கொஇயேற்ரக் கவிதை கிடைத்தது