ஏழு சுரங்களுக்குள் ஆறாம் சுரப்பெயர்: தைவதம் = விளரி
----------------------------------------
ஏழு ஸ்வரங்கள் சரிகமபதநி. இவற்றுக்கான விளக்கம் பொதுவாகச் சொல்லப்படுகிறது: "ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமும் பஞ்சமும் (‘ஸ’வும் ‘ப’வும்) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும் படிப் பிரமாணங்கள் அகப்பட்டன.
விக்ருதிகளான ரி, க, ம, த, நி-களில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது.
ஷ்டஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவற்றின் முதல் எழுத்துக்களை வைத்தே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. ஏழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். இந்த ‘ஸ’வுக்கு அடுத்த ‘ரி’யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. ‘க’ – ஆடு போடும் சத்தம். ‘ம’-க்ரௌஞ்ச பக்ஷியின் கூவல். ‘ப’-குயிலின் ஒலி. ‘த’ – குதிரைக் கனைப்பு. ‘நி’ -யானையின் பிளிறல்."
https://www.kamakoti.org/tamil/3dk245.htmஆழ்வார் பாசுரங்களில் அன்றில் எனப்படும் பறவைக்குக் க்ரௌஞ்சம் என உரை எழுதிய ப்ர. ப. அ. அவர்கள், சங்கீதத்தில் அன்றில்/க்ரௌஞ்சம் என்ற பறவைப் பெயர் உள்ளதை விளக்கியுள்ளார்.
"ஸம்ஸ்க்ருதத்தில், ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஸப்தஸ்வரங்கள் தமிழில் முறையே குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையெனப்படுதலால் விளரியென்றது. தைவதமென்னும் ஸ்வரமென்னலாம்; அன்றி, வடமொழிநிகண்டில் “க்ரௌஞ்ச: க்வணதி மத்யமம்” என்றதால் அன்றில் மத்யமமென்னும் ஸ்வரத்தை யொலிக்கிறதென்று தெரிதலால் விளரி யென்பதற்கு மத்யம ஸ்வரமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. விளரியென ஓர் பண்ணுமுண்டு."
அன்றில் பறவை வெவ்வேறு சமயங்களில் வேறுபட்ட ஒலியை எழுப்பும். எனவே, விளரி என்பதை மத்யம ஸ்வரம் எனக் கொள்ளத் தேவையில்லை. விளரி என்பது தைவத ஸ்வரம் (ஆறாவது சுரம்) . ஏன் அதற்கு தைவதம் என்ற பெயர் எனப் பார்ப்போம். அன்றில் துணையில் ஒன்று பிரிந்தாலும் குரல் எழுப்பும். இந்தக் குரலை ‘அகவல்’ என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும்போது எழுப்பும் குரலை ‘உளறல்’ என்றும், பேடு கருவுற்றிருக்கும்போதும் எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் சங்கத்தமிழ் பாகுபடுத்தி வழங்குகிறது.
(1) உழை - மத்தியம சுரத்தின் தமிழ்ப்பெயர்
-------------------------------
மத்யம ஸ்வரம் (நான்காம் சுரம்) அன்றில் பட்சிகள் உயர்ந்த மரங்களில் (பனை, தென்னை, வாகை, electric tower...) கூடுகட்டிக் கொஞ்சிக் குலாவிப் புணர்கையில் எழுப்பும் ஒலி ஆகும். Ibises form lifelong pairs.
https://x.com/Anir_banBhowmik/status/1898258265688940603https://x.com/puregoldj/status/1918021037007966646https://x.com/TathagatEcon/status/1774118882275717499https://www.alamy.com/stock-photo-a-mating-couple-of-red-naped-ibis-in-the-forests-as-pond-herons-roost-103705739.htmlhttps://birdsofnepal.wordpress.com/2017/04/17/black-ibis/உழை=பக்கம்; உழையர்=பக்கத்திலிருப்பவர், சுற்றம்போல் (கிளை போல்) பக்கத்திருப்பவர், கிளை போல் குரலுடன் பொருந்தியிசைக்கும் நரம்பு உழை எனப் பெயர் பெற்றது. குரல் - உழை உறவு என்பது பக்கத்தில் இருக்கும் சுற்றம் போன்ற உறவுத் தன்மை. உழைநரம்பு என்பது உறவினர் அல்லது சுற்றத்தார் அல்லது சொந்தக்காரர் போன்ற உறவுடைய நரம்பு எனப் பொருள்படுவது. தழையினும் உழையிற் போகான் (குறுந்தொகை, உழை = பக்கம்). அன்றில்/கிரவுஞ்சப் பட்சிகள் உழைந்து (நெருங்கி) வாயலகைக் கோத்துப் புணரும் கலவியோசை "உழை" மத்யம ஸ்வரம் எனக் கொண்டனர். உழை/மத்யம சுரத்தின் ஓசை க்ரௌஞ்சத்தின் ஓசை என்பது இதனால் தான்.
(2) விளரி - தைவத சுரத்தின் தமிழ்ப் பெயர்
---------------------------------
விள்- > விளர்-தல் (விளம்புதல்). விளரி (-‘த’ ஸ்வரம்) இளி (ப) எனும் நரம்பினுக்கு அடுத்து ஒட்டிச் சற்று உயர்ந்து மெல்லியதாக ஒலிப்பது விளரி. விளரி= கூவி அழைப்பது: சிறு நா ஒண்மணி விளரி ஆர்ப்ப (குறுந்தொகை). மென்மை ஒலியுடையது விளர்=மென்மை. மிக உருக்கமான, இரங்கற்குரிய மென்மையான நெய்தற் பண்ணுக்கு ‘விளரிப்பண்’ எனப் பெயருடைமையால், விளரி நரம்பு என்னும் சொல்லை விளங்கிக் கொள்ளலாகும்.
விளர்⁴-தல் viḷar- , 5 v. tr. cf. விளம்பு-. To call; கூப்பிடுதல். வையமுற்றும் விளரியதே (திவ். இயற். திருவிருத். 82).
விளரி² viḷari , n. prob. விளர்⁴-. 1. (Mus.) The sixth note of the gamut, one of seven icai, q.v.; ஏழிசையு ளொன்று. (திவா.) 2. (Mus.) A melody-type of the neytal class, suited for mourning; நெய்தற்குரிய இரங்கற்பண். விளரி யுறுதருந் தீந்தொடை நினையா (புறநா. 260). 3. Yāḻ; யாழ். (அக. நி.)
கூட்டில் உள்ள அன்றில் பேடு, ஆண்துணையைப் பிரியுங்கால் ஏங்கி ஏங்கி நீண்ட தூரம் கேட்கும் விளரிப் பண்ணை இசைத்துக்கொண்டேயிருக்கும். இதனைத் தான், வடமொழியில் சங்கீதவாணர்கள் "தைவத" ஸ்வரம் என அழைக்கலாயினர். நெய்தல் பண் விளரி. பிரிவுக்கும், இறப்புக்கும் தெய்வம் வருணன். அவனது திணையின் பண் அன்றில் இசைக்கும் விளரி ஆகும். தைவதம் என்றால் தெய்வத் தொடர்புடைய சுரம் என்ற பொருள் கொடுக்கிறது. இது இராமனைப் பிரிந்த சீதாதேவியின் விளரிப்பண், ஆதிகாவியமும், அன்றில் பறவையை வேடன் கொன்றதும், அன்றிற்பேட்டின் ஆற்றாமையை வெளிப்படுத்திய விளரிப்பண்ணால் ஏற்பட்ட பெயர் ஆகும். அன்றிலின் சோகம், ச்லோகம் பிறக்க மூலமானது. பறவையாளர்களும் (Birders) அன்றில் (ஐபிஸ்) பறவைகளின் விளரிப்பண்ணை இரவு முழுதும் பதிவு செய்துள்ளனர். சாருஸ் நாரை போன்றவை இவ்வாறு விளரி இசைப்பதில்லை. எனவே தான், சாருஸ் நாரை அன்றில்/க்ரௌஞ்சம் அல்ல என்ற முடிபுக்கு வந்தேன்.
https://www.kamakoti.org/tamil/Kural80.htmமேலும், க்ரௌஞ்சம் கரிய நிறம் உடையது. Black ibis, Indian black ibis என்ப.
https://en.wikipedia.org/wiki/Red-naped_ibis சாருஸ் நாரைக்குக் கரிய வண்ணம் இல்லை. இதனைக் கம்பரும் சாற்றுகிறார்:
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார்
சென்று இலங்கு அயில் தாதையைச் சேர்ந்துளார்
அன்றிலின் சோகம், ச்லோகம் பிறக்கக் காரணம்:
https://www.valmikiramayan.net/utf8/baala/sarga2/balaroman2.htmhttps://sacred-texts.com/hin/rys/rys1002.htm39 samākṣaraiś caturbhir yaḥ pādair gīto maharṣiṇā
so 'nuvyāharaṇād bhūyaḥ śokaḥ ślokatvam āgataḥ
Classical Sanskrit Tragedy: The Concept of Suffering and Pathos in Medieval India
https://api.pageplace.de/preview/DT0400.9780755617869_A40776749/preview-9780755617869_A40776749.pdfAnandavardhana: Dhvanyaloka
https://gretil.sub.uni-goettingen.de/gretil/1_sanskr/5_poetry/1_alam/andhvy_u.htmkāvyasyātmā sa evārthas tathā cādikaveḥ purā /
krauñca-dvandva-viyogotthaḥ śokaḥ ślokatvam āgataḥ // DhvK_1.5 //
vividha-vācya-vācaka-racanā-prapañca-cāruṇaḥ kāvyasya sa evārthaḥ sāra-bhūtaḥ /
cādikaver vālmīkeḥ nihata-sahacarī-viraha-kātara-krauñcākranda-janitaḥ śoka eva ślokatayā pariṇataḥ / śoko hi karuṇa-sthāyi-bhāvaḥ / pratīyamānasya cānya-bheda-darśane 'pi rasa-bhāva-mukhenaivopalakṣaṇaṃ prādhānyāt || DhvA_1.5 ||
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ, - கபிலர், குறிஞ்சிப்பாட்டு.
விளரிப்பண்ணை வீழ்ந்த வீரர்களுக்குப் பாடுதலை நெடுங்கழுத்துப் பரணர் புறப்பாட்டில் சொல்லியுள்ளார். "விளரிப்பண் கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு " புறப்பொருள் வெண்பா மாலை.
"இரங்கற் பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இரக்கம் உண்டாக்கினார்கள். சிவபெருமானால் கைலையின் கீழ் அமிழ்த்தப்பட்ட இராவணன் அவருக்கு இரக்கம் உண்டாக விளரியைப் பாடினான் என்ற பொருள்பட,
"விராய்மலர்ப்பூங் குழலிபங்கன் மகிழ்வி னோங்கும்
வெள்ளிமலைக் கீழ்க்கிடந்து விளரிபாடும், இராவணனார்"
என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இச் செய்யுட்பகுதி விளரி இரங்கற்பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க." உவேசா,
https://s-pasupathy.blogspot.com/2015/10/56.html )
இச் செய்யுளை உவேசா அதிவீரராம பாண்டியர் செய்த கூர்மபுராணம் (பூருவகாண்டம்) கொண்டுள்ளது.
"இசைக்கும் திறன்மிகு பெரும் புலவன்
வெள்ளி மலைக் கீழிருந்து விளரி பாடினான்" (ஏ. கே. வேலன், இராவணலங்கை).
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் - கம்பர்.
அராகம் > ராகம். அராகங்கள் இருவகைப் படும்: (1) பண் (ஜனக ராகம்) (2) திறம் (ஜன்ய ராகம்). நிறம் ஒளியால் கண் காண்கிறது. ஒளி ஏழு வண்ணங்களின் கலவை. அதுபோல, ஏழு சுரங்களின் கலவைக்கு "நிறம்" என்ற பெயரும் சொல்லலாம். நிறவாளத்தி niṟa-v-āḷatti , n. < id. + ஆளத்தி. An elaboration of musical modes; இசையின் ஆலாபனவகை. (சிலப். 3, 26, உரை.) நிற ஆளத்தி = ராக ஆலாபனை. நிறங்களில் சிறந்தது அராகம் (அரக்கு) என்னும் சிவப்பு. அராகம் = சிவப்பு நிறம் என்கிறது பிங்கல நிகண்டு. ராகியின் நிறமும் சிவப்பு (கேழ்வரகு). பறக்கும்/நடக்கும் உயிர்களை “அரக்கினால்” அரத்தம் வரும். அராகம் சிவப்பு எனல் பொருத்தம். ராகம் வண்ணங்களுடன் தொடர்புடையது என்பது இந்திய சங்கீத சாஸ்திரம். வண்ணங்களில் சிறந்தது சிவப்பு நிறம், அதற்கான, அராகம் என்ற பெயர் எல்லா ராகங்களுக்குமாய் நிற்கிறது. உ-ம்: தாமரை என்றால் சிவப்பான பூ. வெள்ளைத்தாமரை, நீலத்தாமரை எல்லாவற்றுக்கும் ஆகிவருகிறது. அரங்கம் > ரங்கம், அராகம் > ராகம், அரம்பம் > ரம்பம் (அரம்பை(யர்) > ரம்பா), அரதனம் > ரதனம் > ரத்னம், அரத்தை > ரத்தம், ...
"இசைவகை:
இசையில் பண்களென்றும் திறங்களென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டன. நரம்பு என்பது இங்கே ஸ்வரம். ஏழு ஸ்வரமுங் கொண்டவை ஸம்பூர்ண ராகம். அதுவே பண்ணாம். வடமொழியில் மேளகர்த்தாவென்று கூறப்படுவதும் அதுவே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படும்; அவற்றையே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்குவர். யாவருக்கும் இயல்பான குரல் ஸட்ஜம் ஆகும். அதனைக் குரலென்றே வழங்கிய பெயரமைதி வியக்கற் பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று இப்போது பயிலப்படும் எழுத்துக்களைப் போலவே தமிழ் முறையில் ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்ற ஏழு நெடிலையும் ஸ்வரங்களுக்கு எழுத்துக்களாகக் கொண்டு பயின்றனர். இந்த ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனகராகமென்பதும் அதுவே. அப்பண்களிலிருந்து திறங்கள் பிறக்கும். அவை இக்காலத்தில் ஜன்ய ராகங்களென்று வழங்கப்படும்.
"நிறைநரம் பிற்றே பண்ணென லாகும்
குறை நரம்பிற்றே திறமெனப் படுமே"
என்ற திவாகரச் சூத்திரத்தால் பண்கள், திறங்கள் என்பவற்றின் இலக்கணம் விளங்கும். பண்களுக்கு இனமாகத் திறங்கள் கூறப்படும். யாப்பருங்கல விருத்தி யுரையில் காணப்படும் மேற்கோட் செய்யுளாகிய,
"பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்
வண்ண விகற்ப வகைமையாற் பண்ணின்
நிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
இசைமருட்கு மில்லை யினம்"
என்பதில் இது விளக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இப்படிப் பிறக்கும் பண்ணும் திறமுமாம் இசை வகைகள் ஒரு வழியில் தொகுக்கப்பட்டு 11,991 என்று கூறப்படுகின்றன."
Krauñca Bird of the Rāmāyaṇa: Its Identification from Sanskrit and Tamil sources. In this essay, I have tried to explain the Krauncha saaman of the Vedas, and its source as the bardic source of ViLari lament songs.
4. Ancient Oral Bardic Tradition and Indian Music. Last paragraph of this section,
"Vaudeville’s explanation will be very clear when juxtaposed with Tamil Sangam data in the identification of krauñca as black ibis. Also, note that the French Sanskritist differentiates between krauñca versus sārasa. Birders have recorded the female ibises crying throughout the nights, and female Sarus cranes never do this lament for hours together when their mates are separated. This is a main reason why ibis is the identification of krauñca bird, and not the sarus crane. “The association between krauñca meaning a musical tone, a type of chant, and secondarily a class of water-birds with a pathetic call (such krauñca, sārasa, haṃsa) on the one hand, and śloka, meaning a "rhythmic cry," especially as uttered by the same kind of birds, is a natural association and must be very ancient, as already indicated in RV 3. 53, 10 where śloka is connected with haṃsa. The Valmikian episode under consideration is another illustration of the same association, but it introduces a romantic element, apparently based on popular belief: the cry of those water-birds is caused by sorrow or mourning, śoka, so that the śloka sung by krauñca birds is really "born of śoka" and expresses pathos, karuṇam. As we have seen, in the folk-tales, it is to the female of the species the krauñca or kurarī that this mournful lament is attributed.” (pg. 331, [2])"
பிற பின்,
நா. கணேசன்