வண்ண விருத்தம் முயற்சி 14 (ராம்)

4 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Aug 7, 2026, 9:31:28 PM (7 days ago) Aug 7
to santhavasantham
 

வண்ண விருத்தம் முயற்சி 14 (ராம்)

 

திருப்புகழ் சந்தம்

 

தனதனன தான தத்த தனதனன தான தத்த 

தனதனன தான தத்த              தனதான

 

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க                    அறியாத

 

-------------------------------------------------------------------------------------

 

 

மனனமதி லாலை யத்தை மனவொளியி னால மைத்து

மயிலைபுரி வாழ லுற்ற     வினையாகி

மலரடியி லேயி ருத்தி நிதமுணரு மேக னத்தன்

வயிலரவர் காண லுற்ற     தொருநாளே

 

அனவரதம் ஆசை மிக்கு அடிபரலி லாக மொத்தி

அசனமது தானு முற்ற             அடியானை

அருளினொடு காண லுற்று உமையவளி னோடு நிற்க

அமரரவர் மேவ சக்கி        உனதானார்

 

வினைபுரியும் வாணி த்தில் மனதரும மேக முற்றர்

விடையமரு மீசன் நச்ச      மனையீவார்

விடயமது மீற லுற்ற துசமயம் வீரர் சுற்ற

விரிசடைய னாகி யுச்ச      மருளோனே

 

இனியமுடன் ஆவி னத்தின் அமுதுசிவ மேலு குத்து

இணயுமன மோன சுத்தி     மகனாரின்

இடைவருத லா த்தன் அடிமிகுத லாயு றுத்த

எறிமழுவ தாலும் வெட்ட    அணைவோனே

 

பத்ம் பிரித்துப் பொருளுரை:

 

மனனமதில் லையத்தை மனவொளியினால் அமைத்து

மயிலைபுரி வாழல் ற்ற    வினையாகி

மலரடியிலே ருத்தி நிதம் உணரும் ன் த்தன்

வயிலரவர் காணல் ற்றது ருநாளே

 

வாயிலார் நாயனார் வாழ்க்கைக் குறிப்பு

 

மனனமதில் லையத்தை மனவொளியினால் அமைத்து

மயிலைபுரி வாழல் ற்ற    வினையாகி

 

((புறத்தே கற்களாலும் செங்கற்களாலும் கோயில் கட்டாமல், மயிலாப்பூரில் தோன்றிய வாயிலார் நாயனார் தன் அகத்தே (மனதினுள்ளே) பேரன்பால் ஆலயம் அமைத்தார். அதில் ஞானமாகிய அகவிளக்கை (மனவொளி) ஏற்றி இறைவனை வழிபடும் வினையைச் செய்தார்))

 

மலரடியிலே இருத்தி நிதம் உணரும் ஏகன் அத்தன்

 

(ஒப்புமையற்ற தனிப் பெரும்பொருளான சிவபெருமானின் (ஏகன் அத்தன்) மலரடியை மனக் கோயிலின் கருவறையில் வைத்து, நாள்தோறும் இடைவிடாது தியானித்தார்.)

 

வயிலரவர் காணல் உற்றது ஒருநாளே

 

((இத்தகைய இணையற்ற அகப்பூசை புரிந்த வாயிலார் நாயனாருக்கு (வயிலரவர்), பிறவிப் பிணி நீங்கும் வண்ணம் சிவபெருமான் தன் திருவடிக் காட்சியளித்து ஆட்கொண்டு முத்திப் பேறு அளித்ததும்

ஓர் திருநாளாகும்))

 

சாக்கிய நாயனார் வாழ்க்கைக் குறிப்பு

 

அனவரதம் ஆசை மிக்கு அடிபரலில் மொத்தி

அசனமது தானும் ற்ற            அடியானை

அருளினொடு காணல் ற்று உமையவளி னோடு நிற்க

அமரரவர் மேவ சக்கி        உனதானார்

 

"அனவரதம் ஆசை மிக்கு அடிபரலில் ஆக மொத்தி அசனமது தானும் உற்ற அடியானை

 

((சிவபெருமானிடம் கொண்ட மாறாத பேரன்பினால், நாள்தோறும் இறைவனின் திருமேனி மீது சிறு பருக்கைக் கற்களைப் (பரல்) பூக்களாகப் பாவித்து அன்போடு எறிந்து வழிபட்டு, அவ்வாறு வழிபட்ட பின்னரே உணவு உண்கின்ற (அசனம்) உறுதியான விரதத்தை மேற்கொண்ட சிவத்தொண்டராம் சாக்கிய நாயனார்))

 

"அருளினொடு காணல் உற்று உமையவளி னோடு நிற்க"

 

((சாக்கிய நாயனாரின் இத்தகைய தூய, (வழக்கத்திற்கு மாறான) அன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், அருள்நோக்கோடு உமையம்மையோடும் அவருக்கு நேரில் திருக்காட்சி தந்தருளினார்.))

 

"அமரரவர் மேவ சக்கி உனதானார்"

((தேவர்கள் எல்லோரும் போற்றி மகிழ, அத்தகைய மனவுறுதி கொண்ட சாக்கிய நாயனார் (சக்கி) இறைவனின் திருவடி நீழலை அடைந்து அவனுக்கே உரியவரானார் (உனதானார்)).

 

இயற்பகை நாயனார் வாழ்க்கைக் குறிப்பு

 

வினைபுரியும் வாணித்தில் மனதருமம் க முற்றர்

விடையமரும் சன் நச்ச    மனையீவார்

விடயமது மீறல் உற்ற துசமயம் வீரர் சுற்ற

விரிசடையன் கி ச்சம்   அருளோனே

 

"வினைபுரியும் வாணிகத்தில் மனதருமம் ஏக முற்றர்"

 

((வாணிகத் தொழில் செய்துவந்த இயற்பகை நாயனார், தமக்கு வரும் பொருள்களைக் கொண்டு சிவனடியார்களுக்குத் தருமம் செய்வதையே தம் வாழ்வின் முதன்மையானப் பெருவிருப்பமாகக் கொண்டு திகழ்ந்தார்))

 

"விடையமரும் ஈசன் நச்ச மனையீவார்"

 

((இடப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெருமான், ஒரு அந்தண வடிவில் வந்து நாயனாரின் கற்புடைய மனைவியைக் கேட்க, சிறிதும் தயங்காது தன் மனையாளை இறைவனுக்குத் தானமாக அளித்தருளினார்.))

 

"விடயமது மீறல் உற்ற அதுசமயம் வீரர் சுற்ற"

 

((உலக இயல்புக்கு மாறான இச்செயலைக் ((விடயம்) கண்டு கோபமுற்ற உறவினர்களாகிய வீரர்கள் சூழ்ந்துவந்து தடுத்தபோது).

 

"விரிசடையன் ஆகி உச்சம் அருளோனே"

 

((தடுத்த சுற்றத்தாரை வீழ்த்தி இறைவனுக்குப் பாதுகாப்பு அளித்து வழி அனுப்பிவைத்த நாயனாருக்கு), விரிசடையோனாகிய சிவபெருமான் உமையவளோடு கயிலைக் காட்சி தந்து முத்தியெனும் உச்சப் பேற்றை அருளினான்) ஏகம்: 'மிக்க / அதிகம்' என்னும் பொருளில் நாயனாரின் தரும சிந்தனையின் மிகுதியைக் குறிக்கிறது.))

 

சண்டேசுவர நாயனார் வாழ்க்கைக் குறிப்பு

 

இனியமுடன் ஆவினத்தின் அமுதுசிவன்மேல் குத்து

இணயுமன மோன சுத்தி     மகனாரின்

இடைவருத லா த்தன் அடிமிகுதலாய்  றுத்த

எறிமழுவதாலும் வெட்டல் அணைவோனே

 

"இனியமுடன் ஆவினத்தின் அமுது சிவன்மேல் உகுத்து"

 

((பசுக்களின் வழியே கிடைக்கப்பெறும் இனிய அமுதமாகிய பாலைக் கொண்டு, மண்ணால் அமைத்த சிவலிங்கத் திருமேனிக்கு மிக்க அன்போடு அபிஷேகம் செய்து வழிபட்ட விசாரசர்மன் (பின்னால் சண்டேசுவர நாயனார் என் அறியப்பெற்றவர்))

 

"இணையுமன மோன சுத்தி"

 

(உலக நினைவுகள் ஏதுமின்றி, அகத்தூய்மையோடு (மோன சுத்தி) சிவபெருமானோடு ஒன்றிய தூய தியானத்தில் ஈடுபட்ட)

 

"மகனாரின் இடைவருதலான தத்தன்"

 

((தன் மகனாகிய விசாரசர்மரின் வழிபாட்டை உணராமல், தந்தையாகிய எச்சதத்தன் (தத்தன்) (கோபத்துடன்) பாலைக் காலால் இடறி இடையூறு செய்ய)).

 

"அடிமிகுதலாய் உறுத்த எறிமழுவதாலும் வெட்டல்"

 

((இறைவழிபாட்டிற்குத் தடையாக அமைந்த தந்தையின் செயல் கண்டு, (சிவபூசையே மேலானது என்ற உறுதியோடு) ஓர் மழுவை வீச அது தந்தையின் கால்களைத் வெட்டுண்து))

 

"அணைவோனே"

 

(தன் வழிபாட்டிற்குத் தந்தையையும் பொருட்படுத்தாத அவர்தம் இணையற்ற அன்பைக் கண்டு மெச்சி நேரில் தோன்றி அவரைத் தழுவி அணைத்து, தமக்குச் சூட்டிய கொன்றை மாலையைச் சூட்டி 'சண்டேசுவர நாயனார்' என்னும் பதவியை அருளி ஆட்கொண்ட சிவபிரானே).

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Aug 7, 2026, 11:01:35 PM (7 days ago) Aug 7
to santhav...@googlegroups.com
Your effort to include several stories is commendable.
Some things to check - see below.

V. Subramanian


On Fri, Aug 7, 2026 at 9:31 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
 

வண்ண விருத்தம் முயற்சி 14 (ராம்)

 

திருப்புகழ் சந்தம்

 

தனதனன தான தத்த தனதனன தான தத்த 

தனதனன தான தத்த              தனதான

 

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க                    அறியாத

 

-------------------------------------------------------------------------------------

 

 

மனனமதி லாலை யத்தை மனவொளியி னால மைத்து

மயிலைபுரி வாழ லுற்ற     வினையாகி

மலரடியி லேயி ருத்தி நிதமுணரு மேக னத்தன்

வயிலரவர் காண லுற்ற     தொருநாளே

 

==> 
மனனம் & மனம் - ஒரே பொருளா?

/ ஆலையத்தை / 
ஆலயத்தை

/ வயிலரவர்   /
வாயிலாரவர் - என்பதன் செய்யுள் விகாரமா?


மிக்கு அடி   /
/  லுற்று உமை  /
மேலு குத்து இணயுமன /

புணர்ச்சி?

/ அருளோனே  /

= அருளாதவனே!
May need tweaking. அருள்வோனே?

Sai Ganesan H

unread,
Aug 8, 2026, 7:43:18 AM (6 days ago) Aug 8
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை! 

— சத்ய வேழன்H சாயிகணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgjjN%3DM9_vWnTaWonFq2aFoOOh%3DoDpLOd5gVgEwtqLQhw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Aug 8, 2026, 8:15:59 AM (6 days ago) Aug 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. சிவா.

மனனம் மனம் இரண்டும் வேறு- ஸ்ரவணம்,
 மனனம், நிதித்யாசனம் என்ற வகையில், காதால் கேட்டு அறிந்த தொன்றன் உண்மைப் பொருளை ஆய்ந்துப் பின் தக்க வைத்தல் என்று கொண்டேன். இவ்வகையில் இரண்டும் வேறு தாமே.

ஆலயத்தை்- இந்த தவற்றைப் பதிவிற்குப் பின் கண்டு எனது குறிப்பில் மாற்றினேன்.

வயிலவரவர் என்பது வாயிலாரவர் என்பதன் செய்யுள் விகாரமே. இதற்கு முன் எழுதிய வண்ணப்பாடலில் தாங்கள் “புலையர்” என்ற குலத் தொழிலோ அல்லது்நாயன்மாரின் பேரையோ இட்டால் படிப்பவரின் புரிதலுக்கு ஏதுவாகும் என்ற கருத்திட்டமையால், முடிந்தவரை இந்த வண்ணப் பாடலில் அவ்வாறு அமைக்க முயற்சித்தேன்.

புணர்ச்சித் திருத்தங்களோடு அருள்வோனே என்ற திருத்தத்துடன் மீள் பதிவு செய்வேன்.




அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 7, 2026, at 23:01, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 8, 2026, 8:16:28 AM (6 days ago) Aug 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சாய் கணேசன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 8, 2026, at 07:43, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Aug 8, 2026, 9:03:30 AM (6 days ago) Aug 8
to santhav...@googlegroups.com
வண்ண விருத்தம் முயற்சி 14 (ராம்) (திருத்தங்களுடன் மீள்பதிவு)

 

திருப்புகழ் சந்தம்

 

தனதனன தான தத்த தனதனன தான தத்த 

தனதனன தான தத்த              தனதான 

(சுவாமிமலை)

 

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க அறியாத

 

-------------------------------------------------------------------------------------

 

 

மனனமதி லால யத்தை மனவொளியி னால மைத்து

மயிலைபுரி வாழ லுற்ற     வினையாகி

மலரடியி லேயி ருத்தி நிதமுணரு மேக னத்தன்

வயிலரவர் காண லுற்ற     தொருநாளே

 

அனவரதம் ஆசை மிக்கு டிபரலி லாக மொத்தி

அசனமது தானு முற்ற             அடியானை

அருளினொடு காண லுற்ற னுமையவளி னோடு நிற்க

அமரரவர் மேவ சக்கி        உனதானார்

 

வினைபுரியும் வாணி த்தில் மனதரும மேக முற்றர்

விடையமரு மீசன் நச்ச      மனையீவார்

விடயமது மீற லுற்ற துசமயம் வீரர் சுற்ற

விரிசடைய னாகி யுச்ச      மருள்வோனே

 

இனியமுடன் ஆவி னத்தின் அமுதுசிவ மேலு குத்து

மிணயுமன மோன சுத்தி     மகனாரின்

இடைவருத லா த்தன் அடிமிகுத லாயு றுத்த

எறிமழுவ தாலும் வெட்ட    அணைவோனே

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இமயவரம்பன்

unread,
Aug 9, 2026, 1:04:28 PM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. ராம்கிராம்!

Ram Ramakrishnan

unread,
Aug 9, 2026, 1:42:37 PM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 9, 2026, at 13:04, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக அருமை, திரு. ராம்கிராம்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages