1960ம் ஆண்டு சுவாமி விவாகாநந்தரின் கட்டுரை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அது என்ன கட்டுரை எங்கேயிருந்து எடுத்தேன் என்பதெல்லாம் நினைவில்லை. இப்பொழுது பழைய காகிதங்களோடு அந்த மொழியாக்கம் கிடைத்தது. அதைப்படித்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது.
மொழியாக்கம் போலத் தெரியவில்லை. அதனாலே இங்கே கொஞ்சம் கொஞ்சமாக இடுகிறேன். என்ன சிந்தனை, என்ன கம்பீரம்! சுவாமி விவேகாநந்தரைத் தலைதாழ்த்திப்ப் பணிகிறேன்,
ஒன்று
நீ ஸ்ரீ இராமகிருஷ்ணருடைய சிஷ்யர்களிடம் சிறப்பாக ஒன்று கண்டாயானால் அது, அவர்கள் தங்கள் பற்றுநிலைக்கு எவ்வாறு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். இவ்வாறு செயல்படும் நூறு மனிதர்களைக் கொணர்ந்து இங்கே நிலைபெறச் செய்யக்கூடுமானால் இவ்வுலகில் என் வேலை முடிந்துவிடும். மனநிறைவோடு நான் இறப்பேன். இறைவன் , அவனுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். அற்ப மனிதர்களின் சிறு முயற்சிகளெல்லாம் நம் நோக்கிலிருந்து விலகியே நிற்கவேண்டும். மேலும் காலம்பல காலமாய்த் தொடர் போராட்டத்திலே ஒரு பண்பு உருவாகிறது. உண்மையை அடிநாதமாகக் கொண்ட ஒரு சிறு வார்த்தையைக் கூட என்றும் அழிக்க முடியாது. பல காலமாக அது குப்பையோடு குப்பையாகப் புதைந்து கிடக்கலாம். ஆனால் நாளாடைவில் அது தன் உண்மை வடிவைக் காட்டி ஒளிரும்.
உண்மை அழைவில்லாதது. நற்பண்பு அழிவில்லாதது. தூய்மை அழிவில்லாதது. பாரத நாட்டிலே வறுமையின் கொடுமைப் பிடியில் தாழ்ந்துநிற்கும் இலட்சக்கணக்கான மக்களுக்காக நாம் ஒவ்வொருவரும் இரவும் பகலும் இறைவனைத் தொழ வேண்டும். உயர்ந்த நிலையிலுள்ளவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் போதிப்பதைவிட , அவர்களுக்கு மதத்தை அதிகம் போதிக்க நான் கவனங்கொண்டுள்ளேன். நான் தத்துவவாதியோ வேதாந்தியோ அல்லது ஞானியோ அல்லன். நான் ஏழை, ஏழையை நான் நேசிக்கிறேன்.
எவ்வளவு குரைவாகப் படிக்கிறாயோ அவ்வளவு நல்லது. கீதையைப் படி. வேதாந்தத்தைப் பற்றிய பல நல்ல புத்தகங்களைப் படி. அதுவே போதுமானது. இன்றையக் கல்வியமைப்பு முழுமையும் தவறு, சிந்திக்கும் திறன்பெறும் முன்னரே எண்ணிலா முடிபுகள் பல உள்ளத்தே திணிக்கப்படுகின்றன. மனத்தை அடக்கும் முறைதான் முதலில் கற்றுக்கொடுக்கப் படவேண்டும். மீண்டும் கல்வி கற்க நேர்ந்தால், அத்துறையிலே சிறிது மதிப்பும்(உரிமையும்) இருந்தால் நான் முதலில் மனத்தை அடக்கப் பயிலுவேன். பிறகு முடிபுகளை – நான் விரும்பினால்- ஏற்பேன்.
நினைத்த மாத்திரத்தில் மனத்தை ஒருமுகப்படுத்த முடியாத காரணத்தால் மக்கள் பொருள்களைப் பற்றி அறிய நீண்ட நாள்கள் ஆகின்றன.
மனிதனிடம் ஏற்கனவே உள்ள நிறைவைச் செயல்படுத்தக் கொணரும் சாதனமே கல்வி.
தன்காலில் தான் தனித்து நிர்கும் (தனக்கு வேண்டியதைத் தானே பெறும்) தன்மையை உண்டாக்கும் தூண்டுகோலாக அமைவதுதான் உண்மையான கல்வி. இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளி்லும் கற்றுக்கொடுக்கப்படும் கல்விஉங்களை எதையும் கிரகிக்க முடியாத ஒரு இனமாக மாற்றிவிடுகிறது. நீங்கள் இயந்திரத்தைப் போலே இயங்குகிறீர்கள் (பயனற்றுத் திரியும்) மீனாக நீங்கள் வாழ்க்கையை நடத்துகிறீர்கள்.
நாம் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொள்ளவேண்டும். மனிதர்களாக வாழ வேண்டும். பண்புப்பலம் பெற வேண்டும். நல்ல கருத்துகளைக் குவிக்கவேண்டும். ஐந்து கருத்துகளை நீ கொண்டு அவற்றை உன் வாழ்க்கையாக , அதன் பண்பாக அமைத்துக் கொண்டு விட்டால் , நூலகம் முழுதும் மனனம் செய்த ஒருவனைவிட நிறைந்த கல்வி பெற்றவனாக மாறிவிடுவாய்
உலகத்திற்கு ஒளி கொண்டுவா. அந்த ஒளி ஒவ்வொருவருக்கும் கிடைக்கட்டும். இறைவனை ஒவ்வொருவரும் அடையும்வரை அம்முயற்சி தொடர்ந்து நடக்கட்டும். ஏழைகளுக்கு ஒளியைக் கொடு. அதைவிட அதிகமாகப் பணக்காரர்களுக்குக் கொடு. ஏனென்றால் அவர்களுக்குத் தான் ஏழைகளைவிட அதிகம் தேவை. அறிவில்லாதவர்களுக்கு ஒளியைக் கொண்டுவா. அதைவிட அதிகமாக அறிவுடையவர்களுக்குக் கொடு. ஏனென்றால் இன்றையக் கல்வியில் படாடோபம் பெருத்துக் காணப்படுகிறது. இவ்வாறு எல்லோருக்கும் ஒளிகொண்டுவா. மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிடு.
தொடரும்
மற்ற நாடுகளைவிட ஏன் நம் நாடு வளங்குன்றியதாக , மிகவும் பின் தங்கியதாக இருக்கிறது தெரியுமா? சக்தியை இங்கே அவமதிக்கிறார்கள். இப்பொழுது நம் அன்னை(ஸ்ரீஇராமகிருஷ்ணரின் ஆத்ம தேவதையான சாரதா தேவி) இந்தியாவில் இந்த அற்புத சக்தியை மீண்டும் மலர்விக்கப் பிறந்திருக்கிறார்கள். அவர்களை நடுநாயமாகக் கொண்டு மீண்டும் இந்த உலகில் கார்கிகளும் மைத்ரேயிகளும் பிறக்கட்டும்.
பெண்களின் நிலை உயர்ந்தாலன்றி உலகம் நலம் பெற வேறு வழியில்லை. ஒற்றைச் சிறகடித்து எந்தப் பறவையும் பறக்க முடியாது.
தங்கள் பிரச்சினைகளைத் தங்கள் வழியிலேயே தீர்த்துக்கொள்ளும் வகையில் பெண்களின் நிலை அமையவேண்டும். அவர்களுக்காக வேறு எவரும் இதைச் செய்ய முடியாது. செய்யவேண்டுமென்பதும் இல்லை. உலகத்திலுள்ள எந்தப் பெண்ணைப்போலவும் நமது இந்திய மாதர்கள் இதைச் செய்யும் திறமை பெற்றவர்கள். சீதையைப் படைத்த இந்த இனம்- அவள் கற்பனை வடிவே என்று கொண்டாலும்- இப்பூமியிலேயே ஈடு இணையில்லாதவகையில் பெண்களுக்கு மதிப்புக்கொடுக்கிறது என்பதை நான் அறிவேன்.
ஏ, பாரதனே, உனது பெண்மையின் இலட்சியம் சீதை, சாவித்ரி, தமயந்தி, என்பதை மறந்துவிடாதே!, நீ வணங்கும் தெய்வம் தூய்மையிலும் தூய்மையான யாவற்றையும் துறந்த சங்கரன், உமையின் நாதன் என்பதை மறந்துவிடாதே! உன் திருமணம் சொத்து, உயிர் யாவும், சுய இன்பத்திற்காக அல்ல -. உனது சொந்தத் தன்னிச்சையான மகிழ்ச்சிக்காகவும் அல்ல-என்பதை மறந்து விடாதே, அன்னையின் பலிபீடத்திற்கு நீ ஒரு பலியாகப் பிறந்திருக்கிறாய் என்பதையும் மறந்துவிடாதே! உன்சமுதாய ஏற்றத்தாழ்வு முடிவற்ற அகிலாண்ட அன்னைக்கு நீ செய்யும் தீங்கு என்பதை மறந்துவிடாதே! தாழ்த்தப்பட்டவர்கள் , ஏழைகள், கல்வி அறிவற்றவர்கள், செருப்புத் தைப்பவர், தோட்டி, இவர்களெல்லாம் உன்சதையோடும் இரத்தத்தோடும் ஒன்றியவர்கள், உனது சகோதரர்கள் என்பதை மறந்துவிடாதே! ஏ, வீரனே, துணிவுகொள், தைரியமாக இரு. நான் ஒரு இந்தியன். ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன் என்று பெருமையோடு முழங்கு. ஏதுமறியாத இந்தியன், ஏழை இந்தியன் , அனாதை இந்தியன், இவர்கள் எல்லோரும் என் சகோதரர்கள் என்று கூறு. எளிய உடையாம் கௌபீனத்தைக் கட்டிக்கொண்டு உச்சத் தொனியிலே”இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது உயிர், இந்தியாவின் தெய்வங்களும் , தேவதைகளும் என் தெய்வம். இந்தியாவே என்னைச் சீராட்டிய தொட்டில் அதுவே என் இளமை இன்பப்பூங்கா, எனது முதுமையின் புனித வீடு” என்று சங்கநாதம் செய். சகோதரனே எங்கே முழங்கு ” இந்தியாவின் ஆன்மாவே எனது உயர்ந்த சொர்க்கம். இந்தியாவின் நலனே எனது நலன். “ அது மட்டுமா. இதையே திரும்பத் திரும்பச் சொல். இரவும் பகலும் இறையை இறைஞ்சு.
“ஏ, கௌரிநாதனே, அகிலாண்ட நாயகியே, எனக்கு ஆண்மையை அருள். எனது கோழைமையைத் துரத்திவிடு, என்னை மனிதனாக்கு. ”
கடவுள் ஒருவன் இருக்கிறான். இப்பொழுதே இங்கேயே பார்க்க முடியும். தொடவும் முடியும். என்பதை அறிவதே இன்றைய நமது தேவை.
நாம் கடவுளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விரும்புகிறோம். ஏனென்றால் வெளி உலகத்தாலேயே நமது சாதாரண ஆசையெல்லாம் நிறைவெய்தியிருக்கின்றன. இந்தப் பூதவெளியின் எல்லைக்குள் நமது தேவையெல்லாம் அடங்குகின்ற காலம் யாவும் கடவுளை உணர்வதில்லை. நமக்கு இறைவன் தேவையுமில்லை. நம் வாழ்விலே நமக்கு மிகத் துன்பங்களும் எதிலும் ஏமாற்றமும் ஏற்படும்போதுதான் உயர்ந்த நிற்கும் ஒன்றின் தேவையை உணர்கிறோம். பிறகு இறையைத் தேடுகிறோம்.
மதத்தை உணர முடியும். அதற்கு நீ தயாரா? நீ விரும்புகிறாயா? உண்மையிலேயே நீ அதை விரும்பி முனைந்தால் அந்த உணர்வு உனக்கு நிச்சயம் கிடைக்கும். பிறகு நீ உண்மையிலேயே மதவழி செல்பவனாக மாறிவிடுவாய். அந்த உணர்வு வரும் வரை உனக்கும் ஒரு நாத்திகனுக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. நாத்திகர்கள் உண்மையில் அன்பு உள்ளவர்கள் ஆனால் மதத்தையும் நம்பிக்கொண்டு அதைத் தெளிந்து கொள்ள இயலாதவன்தான் உண்மை அன்பில்லாதவன். வேதியலும் மற்ற இயற்கை விஞ்ஞானங்களும் எவ்வாறு இப்பூத உலகின் உண்மைகளோடு செயல்படுகின்றனவோ அவ்வாறே மதம் இப்பூத உலகின் உண்மைகளோடு செயல்படுகிறது.
ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு விண்மீன். அந்த விண்மீன்களெல்லாம் முடிவில்லா நீநிற வானமாம் இறையிடம் அடைகின்றன. அங்கேதான் எல்லாவற்றின் அடிப்படையும் உண்மை இயல்பும் சுத்தத்தன்மையும் இருக்கின்றன. நமது அடிவானிற்கு அப்பால் சென்று மறைந்த இவ்விண்மீன்களில் சிலவற்றைத் தேட மதம் தோன்றியது. அவ்விண்மீன்கள் அனைத்தையும் கடவுளிடம் கண்டது. நம்மையும் அங்கே கண்டு அமைந்தது.
மனித சமுதாயத்திலிருந்து மதத்தை எடுத்து விடு. பிறகு என்ன மிஞ்சும்? விலங்கு வாழ் காட்டைத்தவிர வேறொன்றும் காண முடியாது. மனித இனத்தின் இலக்கு புலனின்பம் அல்ல. ஞானமே வாழ்வின் முடிந்த இலக்கு.
மதம் எல்லாவற்றிற்கும் இடம் கொடுக்க முடியுமா? நிச்சயம் முடியும். அது மனிதனுக்கு அழியாப் பெருவாழ்வை அளிக்கிறது. அது மனிதனை மனிதனாக ஆக்கியிருக்கிறது. இந்த மனித மிருகத்தை நிச்சயம் கடவுளாகவும் மாற்றும். அது மதம் செய்யக்கூடியது. எல்லா மதங்களின் முடிந்த இலக்கு ஒன்றே. விடுதலை பெறுவது, துன்பம் களைவது.
கடவுள் கருணை காட்டவில்லையென்றால் கடலிலே ஒரு துளி நீரும் இருக்காது. அடர்ந்த காட்டில் ஒரு சிறு சுள்ளியும் கிடைக்காது. பணத்தேவதையின் இல்லத்தே ஒரு சிறு சுகமும் கிடைக்காது. அவன் விரும்பினால் பாலையிலே நதிகள் ஓடும். பிச்சைக்காரன் பெரும் பணக்காரன் ஆவான்
ஒரு சிறு குருவி அழிவதையும் அவனால் தாங்க முடியாது. இவ்வார்த்தைகளெல்லாம் வெற்று வார்த்தைகள் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. இதுவே உண்மையான வாழ்க்கை.
தகர்களெல்லாம் எங்கோ இருந்து வந்தவ்ர்களல்ல. உன்னையும் என்னையும் போல அவர்களும் மனிதர்கள். அவர்கள் சிறந்த யோகிகள். ஞான திருஷ்டி அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதை நீயும் நானும் பெற முடியும். ஒரு மனிதன்தான் அந்த நிலையை எய்தியிருக்கிறான் என்பதே ஒவ்வொரு மனிதனும் அவ்வாறு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது. அது முடியுமென்பது மட்டுமல்ல. ஒவ்வொருவரும் அடையவும் வேண்டும். அந்த நிலையை அவசியம் அடையுங்கள். அதுவே மதம்.
இன்று உலகத்தில் நிறைய மதங்கள் உயிரற்ற கேலிக்கூத்தாக இருக்கின்றன. உலகம் விரும்புவது பண்பு. சுடர்விடும் அன்பும் தன்னலமின்மையும் இயைந்த வாழ்வை உடையவர்களே இன்று உலகுக்குத் தேவை. அந்த அன்பு ஒவ்வொரு சொல்லையும் அசனியென்ன ஒலிக்கச் செய்யும்.
உலகமதம் என்ற ஒன்று எப்பொழுதாவது ஏற்படுமாயின் அது கால தேச வர்த்தமானங்களைக் கடந்ததாக அமையவேண்டும். கடவுளைப் போன்று முடிவற்றதாக இருக்கவேண்டும். அதனுடைய ஒளி கிருஷ்ணனின் அடியார்கள், ஏசுவின் தாசர்கள், ஞானியர் , பாவிகள் யாவர்மேலும் சமமாகப் பரவட்டும். அம்மதம் பிரம்மணியத்தையோ பௌத்தத்தையோ கிறித்துவத்தையோ, இஸ்லாம் மதத்தையோ தழுவியதாக அமையவேண்டாம். எல்லா மதங்களின் தொகுப்பாக இன்னும் எதற்கும் இடங்கொடுத்துப் பெருகும் அளவு முடிவில்லா பரப்புடையதாயும் அமையவேண்டும். அதன் அன்பு உளத்தாலே நீண்ட கரங்கள் நீட்டி மிருகத்தினின்றும் சற்று மாறுபட்ட காட்டு மிராண்டி முதல் மனித இயல்புக்கும் மேம்பட்டு, மனித இனத்தின் அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவும் பண்பும் அன்பும் கொண்டு சமுதாயமே வியப்போடும் அச்சத்தோடும் நோக்கும் படி விளங்கும் சிறந்த மனிதன் ஈறாக எல்லோரையும் அணைத்து இடம் கொடுக்கும் வண்ணம் புதிய மதம் அமையட்டும்.
கொலைக்கோ, கொடூரத்திற்கோ அங்கே இடமில்லை. அது ஒவ்வொரு ஆணிடமும் பெண்னிடமும் உள்ள தெய்வத்தன்மையைத் தெளிந்துகொள்வதாக அமையவேண்டும். மனித இனத்தின் உண்மைத் தன்மையையும் தெய்வீக இயல்பையும் உணர்த்தத் துணைபுரியும் வண்ணம் அதனுடைய குறிக்கோளும் திறனும் அமையவேண்டும்.
எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்படும் மதம் ஒன்றைப் பரப்பவே நான் விரும்புகிறேன். அது யாவற்றையும் போலத் தத்துவம் உணர்ச்சி கலந்து செயல்பட எளிதாயிருக்கும் வகையில் அமைய வேண்டும். இந்தச் சேர்க்கையே உலக மதத்தை அணுகும் சிறந்த இலட்சியப் பாதையாகும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கேட்டது ஒன்று-கிடைத்தது ஒன்று
கிடைத்தது தானே மிகநன்று
எதையும் தாங்கும் பலம்கேட்டேன்
எதிர்கொள் என்றான் இன்னல்களை
உதவும் புத்தி தாவென்றேன்
உடனே சிக்கல் தீரென்றான்
இதமாய் மகிழ்ச்சி தாவென்றேன்
இவர்கள் துயரம் பாரென்றான்
சதமாய்ச் செல்வம் நான்கேட்டேன்
தந்தான் உழைக்கும் வழிமுறைகள்
வரங்கள் வேண்டும் எனக்கேட்டேன்
வாய்ப்பை அள்ளி அவன்தந்தான்
பெருகும் அமைதி தாவென்றேன்
பிறருக் குதவும் வழிசொன்னான்
தருக என்றே கேட்டவெலாம்
தாரா இறைவன், என்றனுக்குச்
சரியாய்த் தேவை எவையென்று
தானே கணித்தான், அவைதந்தான்.
இலந்தை- 17 ஆகஸ்ட் 2007
(விவேகானந்தரின் ஆங்கிலப் பாடல் ஒன்றின் தமிழாக்கம்)
When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face
When I Asked God for Brain & Brown
He Gave Me Puzzles in Life to Solve
When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People
When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard
When I Asked God for Favours
He Showed Me Opportunities to Work Hard
When I Asked God for Peace
He Showed Me How to Help Others
God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed
- Swami Vivekananda
கடவுளின்அருளால் எல்லா மனிதர்களும் அவர்கள் உள்ளத்திலே தத்துவம் உணர்ச்சி, வேகம் இவற்றின் மூலங்கள் சமமாக நிறைந்திருக்கும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கிறார்கள். . அதுவே முழுமைபெற்ற மனிதனைப் பெறும் எனது இலட்சியம். இந்தப் பண்பில் ஒன்று அல்லது இரண்டு மூலங்களைக் கொண்டவர்களை நான் “ஒருதலைப் பட்டவர்கள்’ என்று அழைக்கிறேன். இந்த உலகில் தான் செல்லும் பாதையைப் பற்றி அறிந்த இவ்வகை “ஒருதலைப் பட்ட மனிதர்கள்’ நிறைய இருக்கிறார்கள். வேறு எந்தப் பாதையும் அவர்களுக்கு அபாயகரமானதாகவும் பயங்கரமானதாகவும் தோன்றும். இந்த நான்கு பாதைகளும் ஒரே சீராக சமனாக அமைவதுதான் எனது மதத்தின் முக்கிய இலட்சியம்.
இந்துக்கள் எல்லாச் சமயத்தையும் ஒத்துக்கொள்கிறார்கள். தாழ்ந்த தாயத்துமுறை மதம் முதல் உயர்ந்த நிறைவுடைய மதம் ஈறாக எல்லா மதங்களுமே முடிவில்லாப் பூரணத்தை அறியவும் புரியவும் இயலும் மனித ஆன்மாவின் முயற்சியையே குறிக்கின்றன. என்பதை அறிந்து இந்துக்கள், மசூதியில் தொழுகிறார்கள். சௌராஷ்ட்ரர் வளர்க்கும் தீயின் முன்னால் வணங்குகிறார்கள். கிறிஸ்தவச் சிலுவை முன்னே மண்டியிடுகிறார்கள். ஒவ்வொரு மதமும் அது பிறந்த நிலையைப் பொறுத்தும் சேர்ந்து வளர்ந்த இடத்தைப் பொறுத்தும் ஒவ்வொரு நிலையில் முன்னேறுகின்றன. இந்த மலர்களையெல்லாம் நாம் தொகுத்து அன்புக் கயிற்றால் பிணைத்து , அற்புதத் தொழுகைச் செண்டாகச் செய்துவிடுகிறோம்.
பேச்சிலே இலட்சியத்திலே கொள்கையிலே எவ்வளவு அருமையானதாக அமைந்தது நம் மதம் என்பதை உணர்கிறோம். அது இருப்பதோ வளர்வதோ கேட்பதோ ஒத்துக்கொள்வதோ அன்று. எதை நம்புகிறதோ அதற்கு முழு ஆன்மாவையும் மாற்றிவிடுவதுதான் மதம்.
இந்த வாழ்க்கை, சுருக்கமானது . உலகின் படாடோபங்கள் மாறக்கூடியன. ஆனால் மற்றவர்களுக்காக வாழ்பவர் மட்டுமே என்றும் வாழ்கிறார்கள். மற்றவர்களெல்லாம் நடைப்பிணங்களே!
தூய்மையாயிரு. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையோடிரு. ஒருகண நேரம் கூட இறையின் மேல் உனக்குள்ள நம்பிக்கையை விட்டுவிடாதே. நீ நிச்சயம் ஒளியைப் பெறுவாய். உண்மை என்றும் நிலைத்து நிற்கும். உண்மைக்குப் புறம்பானவை அழிந்துபடும். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் செய்தாலும் அதற்காக உனது தூய்மையை நீதியை, கடவுள் அன்பைக் குறைத்துவிடாதே. கடவுளை நேசிப்பவர்கள் எந்த மாயத்திற்கும் அஞ்ச வேண்டாம். தெய்வீகத் தூய்மையே மண்ணிலும் விண்ணிலும் உயர்ந்த தெய்வீகச் சக்தியாகும். உண்மை மட்டுமே வெல்லும். பொய் பொன்றும். உண்மையெனும் பாதையிலேதான் கடவுளை அடையும் பாதைக் கதவு திறக்கப்படும். “ உன்னுடன் யார் கூட்டுச் சேர்கிறார்கள் என்பதைப் பற்றிக் கணமும் கவலையுறாதே! கடவுளின் கையைத் தொடமுடியும் என்ற உறுதியோடிரு.
பற்றைத் துறந்து முடிவில்லாப் பெரும் பொருளைத் தொட்டு ஆன்மாவையும் பரமனிடத்தே ஒப்படைத்துச் செல்வத்தையோ பதவியையோ புகழையோ துச்சமாகக் கருதும் பன்னிரெண்டு சிங்க ஏறுகள் ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கட்டும். இந்த உலகை ஆட்டிப்படைக்க இவர்கள் போதும்.
தன்னையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்தவர்கள் தொண்டு செய்வதாகச் சொல்கிற போலிகளைவிட எவ்வளவோ நன்மை செய்கிறார்கள்.
உனது முக்தியை நீ தேட முனைந்தால் நரகத்துக்குத்தான் போவாய். அடுத்தவர்களின் முக்திக்காக நீ பாடுபடு. அம்முயற்சியில் நீ நரகம் செல்ல நேர்ந்தாலும் அது உன்னுடைய முக்தியைத் தேடிச் சுவர்க்கத்திற்குச் செல்வதை விட எவ்வளவோ உயர்ந்தது.
சமுதாயத்தற்கு மகிழ்வூட்டி , அதே சமயம் பெரும் பணிகள் செய்து வெற்றி கண்டவர்கள் யாருமில்லை. அகத்தினின்றும் எழுகின்ற ஆணைப்படி பணிபுரிய வேண்டும். பிறகு அது சரியாகவும் நல்லதாகவும் இருந்தால் அப்பணி புரிந்தவன் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது சமுதாயம் அதற்கு வளைந்து கொடுத்தே ஆகவேண்டும் நமது செயலிலே உடல், இதயம், ஆன்மா அனைத்தையும் ஈடுபடுத்த வேண்டும்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
A BLESSING
The Mother’s heart, the hero’s will
The softest flowers’ sweetest feel:
The charm and force that ever sway
The altar-fire’s flaming play:
The strength that leads , in love obeys
Far – reaching dreams, and patient ways
Eternal faith in self , in all
The light divine in great ,in small:
All these and more than I could see
Today may”Mother” grant to thee
Swami Vivekananda
அன்னையின் இதயம் வீரனின் உறுதி
அலர்மென் மலரின் சுகந்தம்
அணிபலி பீடத் தடிதீ நடன
அழகு வேகம் வலிமை
முன்செலும் திண்மை அன்பிற் பணிவு
மூலம் பிடிக்கும் கனவு
முறைசெல் பொறுமை வழிகள், தன்மேல்
முறியா திடநம் பிக்கை
அன்னதை எல்லா உயிர்க்கும் ஏற்றல்
அளவில் பெரிதோ சிறிதோ
அனைத்துக் குள்ளும் அருளொளி கண்டே
அதனைத் தொடரும் உறுதி
இன்னவை யாவும் இனும்நான் காணா
இவற்றின் மேலாம் எவையும்
இன்றைக்கு அன்னை அருள்க உனக்கே
இறைவி அருளால் வாழ்க!
இலந்தை
22-11-2013
KALI THE MOTHER
THE STARS ARE BOLTED OUT
THE CLOUDS ARE COVERING CLOUDS
It is darkness vibrant, sonant
In the roaring , whirl wind
Are the souls of a million lunatics
Just loose from the prison-house
Wrenching trees by the roots
Sweeping all from the path,
The sea has joined the fray,
And swirls up mountain-waves
To reach the pitchy sky
The flash of lurid light
Reaveals on every side
A thousand thousand shades
Of Death begrimed and black-
Scattering plagues and sorrows,
Dancing mad with joy
Come Mother ,come
For terror is thy name
Death is thy breath
And every shaking step
Destroys a world for e’er
Thou ‘Time’ , the All- Destroyer!
ComeO ;Mother’come
Who dares misery love
And hug the form of Death
Dance in Destruction’s dance
To hih the Mother comes
Swami Vivekaananda
காளி என் தாய்
மேகங்கள் தம்மையே மேகங்கள் மூடின
விண்மீண்கள் தம்மொளி நீங்கியே வாடின
மீறிச் சிறையைத் தகர்த்துப் பல்லாயிரம்
வீறுகொள் பைத்தியக் கூட்டங்கள் போந்தபோல்
ஏகமாய் எங்கணும் சூழும் இருட்டிலே
எக்காளம் போட்டது சூறையின் நாட்டியம்
ஏகிடும் பாதை எதிர்கொள் தருக்களை
எல்லாமும் வேருடுன் பேர்த்துப் பிடுங்கின
ஆகப் பெருமலை என்ன அலைத்திரள்
ஆகாயம் மட்டிலும் ஓங்கி எழுந்தன
ஆகாகா என்சொல மின்னலின் நீச்சலை
ஆழியும் சேர்ந்தங்கே காட்டிடும் பாய்ச்சலை
தாக மெடுத்ததாய் யாங்கணும் யாங்கணும்
சாவின் நிழல்களாய் ஆயிரம் ஆயிரம்
தாங்க வொணாப்பல நோய்நொடி சோகங்கள்
தாராளமாகவே வீசி அடித்தன
ஆடிவா அன்னையே ஆடிவா- வெறி
ஆனந்த மாக ஆடிவா
அன்னை பயங்கரி ஆடிவா- இந்த
அண்டங் குலுங்கிட ஆடிவா
கூடிடும் சாவினை மூச்செனக் - கொண்ட
கொற்றவை தேவியே ஆடிவா
கூத்தில் அதிரும் அடியிலே – புவி
கொட்டம் ஒடுங்கிட ஆடிவா!
யாவும் அழிப்பவள் அல்லவோ- எங்கள்
அன்னையே காலம்நீ அல்லவோ
ஆடிவா அன்னையே ஆடிவா- மிக
ஆனந்த மாகவே ஆடிவா
சாவின் உருவை அணைப்பவன் - அழி
தாண்டவத் தோடே நடிப்பவன்
யாவன்? அவனிடம் ஓடியே – நம்
அன்னை வருவாள் பார் ஆடியே!