இன்று 27-02-26- ஏகாதஶி! அடியேன் எம்பெருமானுக்கிடும் அறுசீர் விருத்தம்!
தயையுடையேய் தரணியிலே தெரிவதெலாம்
தவழுமிடம் நினதுமடி அரிவரெவர்?
மயலறுத்து மனிதகுலம் மகிழ்ந்திடவே
மறையளித்தாய் முகுந்தனுனை மறத்தலுமேன்?
நவையறுத்த குணமுடைத்த நினதருளால்
நடையறிந்து நடப்பதற்கு நலனிடுவாய்
சுவையறிந்து சுகம்பெறவே சுழலுமெனை
சுருதிவழி சிறையறுப்பாய் சிரீதரனே!
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
சுழலுமெனைச் சுருதிவழி என்று வாசிக்கவும்.
தாஸன்
இன்று 27-02-26- ஏகாதஶி! அடியேன் எம்பெருமானுக்கிடும் அறுசீர் விருத்தம்! எழுத்துப்பிழையைச்சரிசெய்து மீள்பதிவிட்டுளேன்.
தயையுடையேய் தரணியிலே தெரிவதெலாம்
தவழுமிடம் நினதுமடி அறிவரெவர்?
மயலறுத்து மனிதகுலம் மகிழ்ந்திடவே
மறையளித்தாய் முகுந்தனுனை மறத்தலுமேன்?
நவையறுத்த குணமுடைத்த நினதருளால்
நடையறிந்து நடப்பதற்கு நலனிடுவாய்
சுவையறிந்து சுகம்பெறவே சுழலுமெனைச்
சுருதிவழிச் சிறையறுப்பாய் சிரீதரனே!
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
இன்று 10-07-26 வெள்ளிக்கிழமை ஏகாதஶி! எம்பெருமானுக்கு இட்ட எண்சீர் விருத்தம் உங்கள் அனுபவத்திற்கு!
கண்ணெதிரில் காண்பனவை கண்ணன் ஆகும்
கவனமிட்டே அவனுருவைக் கண்டால் போதும்
பண்ணெடுத்துப் பாடிடவே பக்தி ஊறும்
பகலிரவு பாராது போற்றத் தோன்றும்
எண்ணமெலாம் நிறைந்தவனின் எழிலில் ஆடும்
எதிரிகளும் நட்பெனவே அன்பில் மாறும்
வண்மையுடன் மறைவிரித்த வகையில் தேறும்
வளமான வாழ்வதையே கொள்வோம் நாளும்
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
For the best mobile reading experience, rotate your screen horizontally.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்ற ‘அந்தர்யாமித்வம்’ மற்றும் ‘க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்’, ‘வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:’ என்னும் கீதா வாக்கிய நிலைப்பாடுகளைச் சுட்டும் பாடல். ஆனந்த் சொன்னவாறு ‘காண்பதெலாம்’ என்று மாற்றியமைக்கலாம்.
ஸௌந்தர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f7fe35d6-555e-446b-8465-5607c2476e8bn%40googlegroups.com.
On Aug 9, 2026, at 08:07, Parthasarathy S <spart...@gmail.com> wrote:
இன்று ஏகாதஶி ( 09-08-26) எம்பெருமானுக்கு அடியேனிட்ட எண்சீர் விருத்தம் உங்கள் அனுபவத்திற்காக_
--