நவராத்திரி நாள் 1-4

6 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Sep 24, 2025, 10:46:52 PM (6 days ago) Sep 24
to சந்தவசந்தம்
சில திருத்தங்கள் மாற்றங்களுடன் தனி இழையில்....

நவராத்திரி நாள்-1

அன்னாய்! தேவி! அகிலம் காக்கும் 
    அரசி! ஓங்கு மலைமகளே!
பொன்னே! மணியே!
     பொருளே! அருளே!
    போதம் கூட்டும் மகராணி!
மின்னே! ஒளியே! வினைகள் போக்கி
    விதியை மாற்றும்   
  வித்தகியே!
உன்ன அரியாய்! எண்ணத்(து) அமர்ந்தே
     ஒளிர்வாய் ஒன்பான்     
     நாள்களுமே!

நவராத்திரி நாள்-2

ஒன்பது நாள்களும் ஒவ்வொரு கோலத்தும் 
முன்பெழுந்தே 
ஆளும் முகத்தழகி - மன்பதையில்
கோலங்கள் மாறிக் கொடுமை 
புரிவோரை
சூலம்கைக்
கொண்டே தொலை!

 நவராத்திரி நாள் -3

தொலைநோக்கில் சூலம்கை தொட்டே, அறங்கள்
நிலைக்க, கொடுமைகளை நீக்கித் - துலக்கம்
தரும்ஆதி துர்க்கை; 
தவம்சேர் அரன்மெய்
சரிபாதி கொண்டசக்தித்
தாய்!

 நவராத்திரி நாள் -4

தாயும் ஆகித் தங்கம் ஆகித்
  தழைக்கும் தேவி திருமகள்
தூய பாதம் தோயும் வீடு
     துலங்கச் செய்யும் 
    அருள்மகள்!
ஈயும் வள்ளல் இல்லத்(து)           இவளின்
  இருப்பு நிறைய வருமகள்!
ஈயார் தங்கள்  இதயம் ஒன்றி
    ஈகைப் பண்பைத் தருமகள்!
 
கல்விக் காகக் கட்ட ணத்தைக்
   கட்ட இல்லார் கையிலும்
நல்வி தத்தில் தொண்டு செய்யும் 
    நல்லார் தங்கள் கையிலும் 
பல்வி தத்தில் பாடு பட்டுப்
    பரித விக்கும் ஏழையர்
வெல்வி தத்தும் செல்வ மாக
    மேவி வருக செல்வியே!

அரசி. பழனியப்பன்
25.09.25

Arasi Palaniappan

unread,
Sep 26, 2025, 3:06:52 AM (5 days ago) Sep 26
to சந்தவசந்தம்
நவராத்திரி நாள் -5

செல்வியே! காணருஞ் செவ்வியே! செந்தா மரைத்திருவே!
பல்விதச் செல்வமும் பாரோர் அடையக்கண் பார்ப்பவளே!
செல்வழி முன்னர் தெரிந்திடச் செய்யாத் திறத்தவளே!
நல்வழி ஈட்டியே நல்லறம் பேணும் நலமருளே!

அரசி. பழனியப்பன்

Ram Ramakrishnan

unread,
Sep 26, 2025, 3:26:56 AM (5 days ago) Sep 26
to santhav...@googlegroups.com
நவராத்திரிப் பாடல்கள் யாவும் மிக அருமை.

அற்புதமான சரள நடை.
வாழ்த்துகள் திரு. பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 26, 2025, at 12:36, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYgu76K6%2BWON4VFkpuFMPA2e3HpzU%2B7di-JSm41mbnJVg%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Sep 26, 2025, 3:28:21 AM (5 days ago) Sep 26
to சந்தவசந்தம்
தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி திரு ராம்கிராம் அவர்களே!

Arasi Palaniappan

unread,
Sep 26, 2025, 10:59:28 PM (4 days ago) Sep 26
to சந்தவசந்தம்
நவராத்திரி நாள் -6

அருளே கொன்றும் உலகத்தார் 
    அவரின் வாழ்வே குறியாகப்
பொருளே தேட முனைகின்ற
     போற்றி அதனைக் காக்கின்ற
மருளே நீங்கத் திருமகளே!
   மனங்கள் தோறும் எழுந்தருளிப் 
பொருளின் பொருளை உணர்த்திடுக!
    புதிய பாதை காட்டிடுக!

அரசி. பழனியப்பன்

Ram Ramakrishnan

unread,
Sep 27, 2025, 5:41:43 AM (4 days ago) Sep 27
to santhav...@googlegroups.com
ஆகா!

“பொருளின் பொருளை உணர்த்திடுக”.
அருமையான பிரயோகம், திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 27, 2025, at 08:29, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Arasi Palaniappan

unread,
Sep 27, 2025, 5:43:05 AM (4 days ago) Sep 27
to சந்தவசந்தம்
மிக்க நன்றி திரு ராம்கிராம் அவர்களே!

Arasi Palaniappan

unread,
Sep 29, 2025, 10:33:13 PM (23 hours ago) Sep 29
to சந்தவசந்தம்
 நவராத்திரி நாள் -7

காட்டை மேட்டைச் சீர்திருத்திக் 
     கல்விப் பயிரின் விதைபாவி
நாட்டார் நகரார் அனைவர்க்கும்
  நாற்றாய்க் கல்விப் பயிர்விளைத்த
வாட்டம் இல்லாப் பொற்காலம்
     வாஞ்சைக் கரங்கள் வீணையினை
மீட்டும் கலைத்தாய்
     அருளாலே
    மீளும்,நிறையும் உளப்பைகளே!

பைகள் நிறைந்த     பணம்கொண்டும்
    பண்பே இல்லா மனம் கொண்டும்
செய்கள் எல்லாம் கட்டடங்கள்
   செய்து கல்விப் பயிர்வளர்த்து
வைகல் தோறும் அறுவடையை
     மணியாய்ச் செய்து 
கொழிக்கின்றார்
கைகள் தூக்கி வணங்குகிறோம்
     கலையே! மகளே! நிலைமாற்று!


 நவராத்திரி நாள் -8

மாற்றுயர் பொன்னே! வலம்புரி முத்தே! வளங்களினைப் 
போற்ற அருளும் புனிதமே! யாம்செய்த புண்ணியமே!
சேற்றலர் செந்தா
மரையில் திகழும் திருமகளே!
ஈற்றில் திகழ்வோர்நல் 
ஏற்றம் பெறவே இனிதருளே!

அரசி. பழனியப்பன்
30.09.2025

Ram Ramakrishnan

unread,
Sep 29, 2025, 10:51:14 PM (23 hours ago) Sep 29
to santhav...@googlegroups.com
அருமை, திரு. பழனியப்பன்.

உளப்பை - உருவகம் அருமை.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 30, 2025, at 08:03, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 29, 2025, 10:59:20 PM (23 hours ago) Sep 29
to santhav...@googlegroups.com
அருமை!

அனந்த் 

>> ஈற்றில் திகழ்வோர்நல் 
ஏற்றம் பெறவே இனிதருளே!  - திகழ்வது நல்ல செயல், அதனால் ஈற்றில் இருப்போர்/உழல்வோர்  என்னலாம்.

Arasi Palaniappan

unread,
Sep 29, 2025, 11:13:37 PM (22 hours ago) Sep 29
to சந்தவசந்தம்
மிக்க நன்றி திரு ராம்கிராம் அவர்களே!

Arasi Palaniappan

unread,
Sep 29, 2025, 11:20:36 PM (22 hours ago) Sep 29
to சந்தவசந்தம்
மிகச்சரி. நானும் அவ்வாறே 
நினைத்தேன். மாற்றுகிறேன் ஐயா! மிக்க நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 29, 2025, 11:24:36 PM (22 hours ago) Sep 29
to சந்தவசந்தம்
திகழ்வோர் எனும் இடத்தில் உழ ல்வோர் என மாற்றியிருக்கிறேன்.மிக்க நன்றி

அரசி. பழனியப்பன்

ஈற்றில் உழல்வோர்நல்

இமயவரம்பன்

unread,
Sep 29, 2025, 11:40:36 PM (22 hours ago) Sep 29
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நவராத்திரிப் பாக்கள் யாவும் மிகச் சிறப்பு! வாழ்த்துகள்!

- இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
12:00 AM (22 hours ago) 12:00 AM
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இமய வரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
8:54 PM (1 hour ago) 8:54 PM
to சந்தவசந்தம்
 நவராத்திரி நாள் -8(1)

மாற்றலர் ஆகிய மம்மர் அறுத்து மனப்பழக்கப்
பேற்றை 
அருள்எனப் பெய்குவோய்! யாம்செய் பெருந்தவமே!
சேற்றலர் 
வெள்ளைக் கமலா சனத்தில்
திகழ்கலையே!
ஊற்றெனக் கற்போர் உளங்களிற் பொங்கியே ஓங்குவையே!

(இதற்கு முந்தைய பாடல் திருமகளுக்காக அமைந்து விட்ட படியால் கலைமகளுக்காக மாற்றினேன்)

மாற்றலர் - பகைவர்

மம்மர் - அறியாமை/கல்லாமை

மனப்பழக்கம் -கல்வி


 நவராத்திரி நாள் 9

ஆயுத/சரஸ்வதி பூசை

வையம் எல்லாம்
வளர்கலை யாலே
உய்ய மதிநல உயர்வருள் தேவி
ஆய கலைகள் அறுபத்து நான்கும் 
ஏயும் பற்பல இன்றைய கலைகளும் 
தாங்கிப் புரக்கும்
தனிப்பெருந் தலைவி
பாங்குடை தேவியைப் பணிநாள் இந்நாள்
கற்போர் உழைப்போர் கவிஞர் அறிஞர்
பொற்புறு தேவியைப் போற்றும் நன்னாள்
கல்வி தழைக்க,
களப்பணி
யாளர்
நல்விதம் ஓங்க நாயகி 
அருள்நாள்
அந்தம்இல் அறிவால் உழைப்பால்
நந்தம் நாடும் நனிசிறந்(து) ஓங்குமே!

அரசி. பழனியப்பன் 
01.10.2025
Reply all
Reply to author
Forward
0 new messages