. இப்பொழுதுதான் பார்க்கிறேன். பொதுவாக வழக்கத்திலில்லாத ஒரு புதுமாதிரியான விருத்தம். பதினாறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். பொதுவாக 5,9,13 சீர்களில் மோனை வரும். ஆனால் இந்தப்பாடலில் 9 வது சீரில் மீண்டும் எதுகைவரும். 13 வதுசீரில் அந்த எதுகைக்கு ஏற்ப மோனை வரும்.
ஓரடிக்குக் கரைகட்டும் ஜரிகை பார்டர்
ஒளிகாட்டும் ஒய்யாரத் தங்கப் பூக்கள்
பாரடியோ பாரென்று பெண்களெல்லாம்
பார்த்தேவாய் பிளக்கின்ற பட்டு டுத்தி
ஈரடியும் தேறாத கூந்தல் மட்டும்
எப்படியோ ஐந்தடியாய் நீண்டு போக
நாரிடையே இருப்பதுவும் தெரியா வண்ணம்
நாள்மலர்கள் மலர்ப்பாம்பாய் வளைந்து தொங்க
சூரியனும் சந்திரனும் சுட்டி யாக
தோள்வரையில் நகையெல்லாம் ஒளியைச் சிந்த
சீரடியைப் பெயர்த்தெடுத்து வைக்கும் போது
சிலுசிலுக்கும் கொலுசுக்கும் தினவெடுக்க
ஓரிடத்தும் நில்லாமல் பெண்ணின் கண்கள்
ஒருபக்கம் தாம்சாய்ந்து துணிவெடுத்து
நேரிடையாய் மாப்பிள்ளை தன்னைப் பார்க்கும்
நிச்சயதார்த்தருமை நிகழ்த்து கின்றேன்.
எங்கேயோ பிறந்தவர்கள் , காலப் போக்கில்
எங்கேயோ வளர்ந்தவர்கள், ஏட்டுக் கல்வி
எங்கேயோ கற்றவர்கள், , எண்ண வீச்சில்
எங்கெங்கோ நிற்பவர்கள், கலாச்சாரத்தில்
மங்காத இழையொன்றே ஊடு பாவ
வாழ்க்கையிலே இணைகின்ற பரிமாற்றத்தில்
”இங்கே வா, உனக்கிவர்தான், இவள்தான் உன்றன்
இல்வாழ்க்கைத் தோணியிலே துணையாய் வாழ்க்கைப்
பங்கேற்கப் போகிறவள், இனிமேல் உன்றன்
பார்வையெலாம் இவள்மேல்தான் தைக்க வேண்டும்
எங்கெங்கோ சென்ற மன எழுச்சி யெல்லாம்
இனி, மையம் கொள்ளட்டம், எழிலாய் இந்த
மங்கையெனும் வீணையைத்தான் புனிதமாய் நீ
வாசிக்க உனக்கென்றே வடித்து வைத்தோம்
இங்கிந்த வேளையிலே பெரியோர் முன்னே
இயம்புகிறோம் இவர்க்கிவர்தான் மாற்ற மில்லை
ஆயிரமாம் காலத்துப் பயிராய் நீங்கள்
அன்போடு வாழுதற்குப் போடுகின்ற
பாயிரமாய் உறுதியினைக் கொள்ளும் நந்நாள்
பாத்திகளைக் கட்டுகிறோம், நாத்தும் நட்டு
நேயமுடன் வாழ்த்துகிறோம், உறுதி பெற்று
நிமிர்கின்றோம், மகிழ்கின்றோம், தனிமைக்கப்பல்
போயங்கோர் ஓரத்தில் நிற்பதற்குப்
போடுகிறோம் நங்கூரம், இல்லறத்தின்
வாயிலிலே படிவைத்து, நிலை திருத்தி
மாவிலையால் தோரணங்கள் கட்டி, தொங்கும்
மாயவலைத் திரைநீக்கி, விளக்கு வைத்து
வற்றாத பாசமெனும் எண்ணெய் ஊற்றி
தூயநெறித் திரிபோட்டு நனைத்து வைத்து
சொந்தமெனும் ஒளியேற்ற வருக” என்றே
தாயொடுதந் தைசுற்றம் அழைத்து வாழ்த்தும்
தகைமைநிச் சயதார்த்தம் இனிமை யாகும்
திருமணத்தின் முன்னோடி, சிந்தை தன்னில்
தேக்கிவைத்த கற்பனையின் வடிவைச் சற்றே
ஒருமனத்தில் சரிபார்க்க விளக்கி வைத்த
ஒப்பற்ற கண்ணாடி, உறுதி பெற்று
வருமனத்தின் முன்னாலே மனத்துக் குள்ளே
வடிவத்தை நிலையாக்கி நாளை வாழ்வின்
பெருமையதைக் கற்பனையில் பறக்க வைக்கும்
பெற்றியினைத் தருகின்ற முதல்மு கூர்த்தம்
இருமனங்கள் கண்ணுக்குள் கண்ட தோற்றம்
இளமையிலே இனிமையதன் புதுமை தன்னைக்
கருதரிய கனவுக்குள் நடத்தி வைக்கக்
கற்பனையில் பாரிப்பைக் கொண்டு நாளை
உரிமையுடன் நடத்துகிற ஆர்ப்பாட்டத்தின்
ஒத்திகையை நெஞ்சுக்குள் நிகழ்த்து தற்கே
ஒருபெரிய வாய்ப்பதனைக் கூட்டுகின்ற
ஒப்பில்நிச் சயதார்த்தப் பெருமை வாழ்க!
கவிவேழம்
45 வருடங்களாவது ஆகியிருக்கும். கவிமாமணி தமிழ்மாறன் ஏற்பாட்டில் ஒரு கல்யாணக் கவிய்ரங்கில்(காயத்ரி சுவாமிகளுடைய தமியானார் வீட்டுக் கல்யாணம் என நினைக்கிறேன்) நிச்சயதார்த்தம் எனும் தலைப்பில் நான் எழுதிய கவிதை.. இப்பொழுதுதான் பார்க்கிறேன். பொதுவாக வழக்கத்திலில்லாத ஒரு புதுமாதிரியான விருத்தம். பதினாறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். பொதுவாக 5,9,13 சீர்களில் மோனை வரும். ஆனால் இந்தப்பாடலில் 9 வது சீரில் மீண்டும் எதுகைவரும். 13 வதுசீரில் அந்த எதுகைக்கு ஏற்ப மோனை வரும்.
....
மறைந்துவரும் மரபினையும் மீட்டுக் காட்டி
உறுதியுடன் பிணைக்கின்ற உறவும் சொல்லித்
திறம்படவே நகைச்சுவைத் தேனில் தோய்த்த
நிறங்கொள் நிச்சயதார்த் தம்கண் டோமே
On Sep 24, 2026, at 05:37, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBJktuYZG68GW5%2BWjcdYQbjJUYkb7zoM%2BPAG-R2OFXSSg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOGib_VG3DbQBOG8chxrki9y%2BF-w9n%3D39C_SBAg5MD73w%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC0BqE_GebfWu5_k-nSiNNqYhaH%3DF_uFeEwW6Vhgaxd5Q%40mail.gmail.com.
அருமை இலந்தை ஐயா.
. இப்பொழுதுதான் பார்க்கிறேன். பொதுவாக வழக்கத்திலில்லாத ஒரு புதுமாதிரியான விருத்தம். பதினாறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். பொதுவாக 5,9,13 சீர்களில் மோனை வரும். ஆனால் இந்தப்பாடலில் 9 வது சீரில் மீண்டும் எதுகைவரும். 13 வதுசீரில் அந்த எதுகைக்கு ஏற்ப மோனை வரும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.