பிரமாதம் என்றால் என்ன?

3 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
8:52 AM (10 hours ago) 8:52 AM
to Santhavasantham
வணக்கம்,

இன்றைக்கு சிறப்பான, அருமையான, மேன்மையான போன்ற பொருள்களில் 'பிரமாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால், கந்தர் அலங்காரத்தில் அச்சம் , ஆபத்து என்ற பொருளில் அது‌ பயன்படுத்தப்பட்டுள்ளது. (எ.கா.  : 'மரண ப்ரமாதம் நமக்கில்லை')

எனில் பிரமாதம் என்ற சொல்லின் பொருள் காலப்போக்கில் எப்படி மாறியது? 

சான்றோர் பெருமக்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 

நன்றி,
நிரஞ்சன் 

இமயவரம்பன்

unread,
5:26 PM (2 hours ago) 5:26 PM
to santhav...@googlegroups.com, Santhavasantham
புத்தபகவானுடைய வாய்மொழிகள் அடங்கிய “தம்மபதம்” என்னும் நூலைத் “தம்மபத வெண்பா” வாகத் தமிழாக்கம் செய்யும் போது எனக்கும் இக்கேள்வி எழுந்தது.

தம்மபதத்தில் “ப்ரமாதம்” என்பது விழிப்பின்மை என்னும் பொருளிலேயே வருகிறது. சமஸ்கிருத அகராதியிலும் கீழ்க்கண்ட விளக்கங்களையே காண்கிறேன்:

प्रमादः pramādaḥ 1 Carelessness, negligence, inattention, inadvertence, oversight; विजिगीषुमिवानयप्रमादौ Ki.13.29; ज्ञातुं प्रमादस्खलितं न शक्यम् Ś.6.25; विद्यां प्रमादगुणितामिव चिन्तयामि Ch. P.1. -2Intoxication, drunkenness. -3 (a) Fainting, swoon. (b) Insanity, madness. -4 A mistake, blunder, mistaken judgment; Pt.1.39. -5 An accident, mishap, calamity, danger; अहो प्रमादः MāI.3; U.3

மேலும் ஆய்ந்து பார்த்ததில், ப்ரமாதம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வேர்ச்சொல் “மதம்” (பித்து அல்லது மயக்கம்) என்று தெரியவந்தது. மதம் பிடித்த யானையும் மிகுந்த வலிமையுடன் செயற்கரிய செயல்கள் செய்வதைப் பார்க்கிறோம். அதனால் சிறப்பான செயல்கள் நடைபெறும்போது எதிர்மறைச் சொல்லான மதத்தைப் பயன்படுத்தி “ப்ர” என்னும் அடைமொழியைச் சேர்த்து “ப்ரமாதம்” என்கிறோம்.

இதேபோல், ஒருவரின் வேகத்தின் சிறப்பைச் சொல்லும்போது “அசுரன்” என்னும் எதிர்மறைச் சொல்லைப் பயன்படுத்தி “அசுர வேகம்” என்று சொல்வதில்லையா? அதுபோல் தான் இதுவும் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்திலும் இதுபோல் “insane performance” என்று சொல்வதையும் காணலாம்.

- இமயவரம்பன்
Reply all
Reply to author
Forward
0 new messages