போராட்டம்

12 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
May 17, 2026, 6:50:01 AM (6 days ago) May 17
to santhavasantham
“Conflict” என்னும் தலைப்பில் இன்று SAPNE என்னும் அமைப்பு நடத்தவிருக்கும் பன்மொழிக் கவியரங்கத்திற்காக நாம் எழுதிய கவிதை.

போராட்டம்
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

மறிகடலின் அலையந்தக் கடலின் வேறோ?

… மானிடரொவ் வொருவருமிவ் வுலகின் வேறோ?

உறுகின்ற அடிப்படையுள் ளுணர்வு தன்னில்

… ஒன்றாவோம் அல்லோமோ நாமெல் லோரும்?

சிறுவட்டத் துள்ளிருந்தென் குடும்பம் என்றன்

… தேசமென நமக்குள்ளே மோத லாமோ?

நெறிகளிலும் கொள்கையிலும் வேறு பட்டு  

… நிதம்நிதமும் போராடி மடிய லாமோ? 

பார்மேலே பல்வளங்கள் பெருக்கி  ஓங்கும்

… பரிவார்ந்த இயற்கையதன் பூதம் ஐந்தாம்

நீரோடு வான்பூமி தீக்காற் றெல்லாம்

… நேர்த்தியுடன் ஒருங்கிணைந்தே இயங்கும் போது,

கார்வானம் போலிருண்ட மனத்தால் எங்கும்

… கலவரமே பெருக்குகின்ற மனிதன் மட்டும்

யாரோடும் போராடி எதிர்க்கின் றானே

… இதைப்போல இழிவுநிலை உலகில் உண்டோ? 

வெயிலொளிபோல் விழிகளிலே அறிவை ஏற்றி

… வியனுலகம் முழுதினையும் ஒருங்காய்க் கண்டே

உயிர்களெலாம் உறவெனவே உணர்ந்து விட்டால்

… ஒருபொழுதும் பிரிவினைகள் தோன்றா தன்றோ?

துயர்விளைக்கும் சாதிமதப் பிணக்கைச் சாய்த்துச்

… சுகம்வளர்க்கும் சகோதரத் துவம்பின் பற்றி

அயலெனவும் பகையெனவும் வெறுத்தல் இன்றி

… அரவணைத்து வாழ்ந்திட்டால் அவலம் உண்டோ?

நாம்பலரென் றுள்ளத்தில் நினையா விட்டால்

… ஞாலத்தின் ஒருமைதனை மறவா விட்டால்

ஓம்புகின்ற நேர்மையுடை உழைப்பில் என்றும்

… உயர்வென்றும் தாழ்வென்றும் பாரா விட்டால்

தேம்பியழ மெலியாரை வாட்டா விட்டால்

… சிறுமையினால் பழஞ்சிறப்பே பேசா விட்டால்

பாம்பினைப்போல் பகையுணர்வைக் காட்டா விட்டால்

… பார்மிசையே தோன்றிடுமோ போராட் டம்தான்?        

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
May 17, 2026, 7:29:36 AM (6 days ago) May 17
to santhav...@googlegroups.com
அருமை திரு. இமயவரம்பன். பார்மிசையில் பகையுணர்வு தோன்றாதிருக்கப் பட்டியலிட்டு காட்டுகின்ற
பாவலர் வாழ்க. 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 17 May 2026, at 4:20 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

“Conflict” என்னும் தலைப்பில் இன்று SAPNE என்னும் அமைப்பு நடத்தவிருக்கும் பன்மொழிக் கவியரங்கத்திற்காக நாம் எழுதிய கவிதை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/34F2D323-3115-4474-8709-5302049FA3D6%40gmail.com.

Rajagopalan Soundararajan

unread,
May 17, 2026, 7:30:01 AM (6 days ago) May 17
to சந்தவசந்தம்

அருமை! "மறிகடலின் அலையந்தக் கடலின் வேறோ?" என்கிற வரிகள், திருவாய்மொழி (1-1-2) “அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு, அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே” என்னும் பாசுரத்தின் உட்பொருளைப் ப்ரதிபலிக்கின்றன.

ஸௌந்தர் 

இமயவரம்பன்

unread,
May 17, 2026, 7:32:02 AM (6 days ago) May 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம் 

இமயவரம்பன்

unread,
May 17, 2026, 7:36:41 AM (6 days ago) May 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான திருவாய்மொழி மேற்கோளுடன் வாழ்த்தியமைக்கு மிக்கநன்றி திரு ஸெளந்தர். 

“தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே” என்னும் திருச்சந்தவிருத்தப் பாசுரமும் நினைவுக்கு வருகிறது.

Rajagopalan Soundararajan

unread,
May 17, 2026, 8:02:50 AM (5 days ago) May 17
to சந்தவசந்தம்
ஒரு திருத்தம். 

திருவாய்மொழி (1-2-7)

Subbaier Ramasami

unread,
May 17, 2026, 8:24:56 AM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com
நல்ல கவிதை.

இலந்தை

On Sun, May 17, 2026 at 6:50 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
May 17, 2026, 8:38:53 AM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி தலைவரே

Arasi Palaniappan

unread,
May 17, 2026, 8:43:35 AM (5 days ago) May 17
to சந்தவசந்தம்
போராட்டம் பற்றிப் புகலும் விருத்தங்கள் 
சீரோட்டம் கொண்ட சிறப்பு! 

அருமை இளவலே!

இமயவரம்பன்

unread,
May 17, 2026, 8:46:05 AM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி அரசியாரே

Siva Siva

unread,
May 17, 2026, 10:48:48 AM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

On Sun, May 17, 2026 at 6:50 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
“Conflict” என்னும் தலைப்பில் இன்று SAPNE என்னும் அமைப்பு நடத்தவிருக்கும் பன்மொழிக் கவியரங்கத்திற்காக நாம் எழுதிய கவிதை.

போராட்டம்
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

...

Swaminathan Sankaran

unread,
May 17, 2026, 12:50:38 PM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com
சிறந்த கருத்து, தெளிவான, அருமையான கவிதை.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
 Swaminathan Sankaran

இமயவரம்பன்

unread,
May 17, 2026, 2:05:27 PM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you

> On May 17, 2026, at 10:48 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> Nice

இமயவரம்பன்

unread,
May 17, 2026, 2:05:47 PM (5 days ago) May 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி 🙏

Parthasarathy S

unread,
May 17, 2026, 11:12:48 PM (5 days ago) May 17
to சந்தவசந்தம்
போராட்டம் என்றாலும் நீரோட்டம் கொண்டுகவித்
தேரோட்டம் காணல் சிறப்பு

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

இமயவரம்பன்

unread,
May 18, 2026, 12:49:03 PM (4 days ago) May 18
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான குறள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, திரு. பார்த்தசாரதி.
Reply all
Reply to author
Forward
0 new messages