"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?
"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கும் என்னம்மை -- தூய
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."
--கம்ப நாடர்
| பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும், கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! உண்டாமோ கைம்மாறு? உரை. |
ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.
அண்ணா,கம்பர் என்று எழுத வந்து காளமேகத்தின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கம்பரின் சரஸ்வதி அந்தாதியில் வரும் வெண்பா அது. பின்னர் பி. சுசீலாவின் அருமையான குரலில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது:
ஆகும் - ஆம்போகும் - போம்
வேகும் - வேம்:
3 செப்டம்பர், 2013 12:11 AM அன்று, Bhuvan Vellore <bhuvane...@gmail.com> எழுதியது:அன்புடையோரே, வணக்கம்.
ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?
ஆக கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.
வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.
ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?
Perhaps, this term was coined to collectively represent those arts expected to be mastered by those present in an assembly of learned people.
PhD படிக்க coursework பண்ணவேண்டும். அதை PhDக்கான coursework என்று சொல்லாமல் PhD coursework என்று சொல்கிறோமல்லவா? அது போல ஆயத்துக்கான கலைகள் என்பதை ஆய கலைகள் என்று சொல்கிறோம் போலும்.வேந்தன்> ஆயக்கலைகள் என்றால் நீங்க சொல்லுவது பொருந்தலாம்அவர்கள் ஆய கலைகள் என்றுதான் கேட்டார்கள்
"ஆம் -ஆகும், ஆய-ஆகிய" – வுக்கும்
"பால-பாலக, தீபா - தீபிகா" வுக்கும் இடையே தொடர்பே இல்லை.
பின்னது, பெயர்ச்சொல்லுடன் (அ)க / (இ)கா விகுதிசேர்க்கும் வடமொழியிலக்கணம்.
முந்தையது "ஆ" எனும் வினைச்சொல் வேரின் "ஆகு" எனும் மாற்றுருவத்தால் விளைவதாகும்:- ஆ- ஆகிற but ஆகிய/ஆய ஆகும்/ஆம் ஆகாது ஆகட்டும் ஆவன.
மேலும் இவ்வகையில்: போ => போகிற, போகும், போகாது, போயின, போந்த, போன: சா:- சாகிற, சாகாத, சாவு:
வே வேகிற, வேகும் வெந்த :
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.