Another vegetable veNbA!
2026-03-08
வெண்டைக்காய்
----------------
(வெண்பா)
கெண்டைக்கண் காட்டிக் கிலோவிலை ஐம்பதென்றாள்
வெண்டைக்காய் வாங்கிவந்தேன் வீட்டிலோ - தண்டக்காய்
எல்லாம் படுமுற்றல் ஏமாறி னீரென்றாள்
இல்லாள்சண் டைக்காய் இது!
பதம் பிரித்து:
கெண்டைக்கண் காட்டிக், "கிலோ விலை ஐம்பது" என்றாள்;
வெண்டைக்காய் வாங்கி வந்தேன்; வீட்டிலோ, - "தண்டக்காய்!
எல்லாம் படுமுற்றல்! ஏமாறினீர்" என்றாள்
இல்லாள்! சண்டைக்காய் இது!
வி. சுப்பிரமணியன்