கத்தரிக்காய்

20 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 6, 2026, 10:51:46 AMMar 6
to santhavasantham

Another vegetable veNbA!


2026-03-06

கத்தரிக்காய்

----------------

(வெண்பா)


கத்தரி கத்தரிக் காயென்று வாசலிலோர்

கத்தல் கவின்நீலம் கண்டவுடன் - சித்தம்

கறிகொத்ஸு பிட்டலை காட்டியதென் செய்ய

அறிகிலளே தாரம் அவள்.


பதம் பிரித்து:

"கத்தரி! கத்தரிக்காய்!" என்று வாசலில் ஓர்

கத்தல்; கவின்-நீலம் கண்டவுடன், - சித்தம்

கறி கொத்ஸு பிட்டலை காட்டியது! என் செய்ய

அறிகிலளே தாரம் அவள்.


கவின் - அழகு;

நீலம் - blue / dark color;

சித்தம் - மனம்;

செய்ய - இடைநிலைத்தீவகமாக - "என் செய்ய" & "செய்ய அறிகிலளே" - என்று இருபக்கமும் இயைத்துக்கொள்க;


V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 6, 2026, 4:14:07 PMMar 6
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 
புரியவில்லை விளக்கம் தேவை

Siva Siva

unread,
Mar 6, 2026, 9:54:47 PMMar 6
to santhav...@googlegroups.com
சமைக்கத் தெரியாத மனைவியின் கத்தரிக்காய்ப் பிரியனான கணவனின் கூற்றாக அமைந்த பாடல்.
கத்தரிக்காய் வியாபாரியின் வண்டியில் / கூடையில் இருக்கும் காய்களை அவன் பார்த்த காட்சியை வர்ணிக்கின்றது.

==

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 7, 2026, 2:17:44 AMMar 7
to சந்தவசந்தம்
 விளக்கம் தந்தமைக்கு நன்றி குருவே

கத்தரிக்காய் பற்றி ஔவை

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமு ரெனவே புளித்த மோரும்தரமுடனே
பல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்

 வழுதுணங்காய் பற்றி திருமூலர்  
( இணையத்தில் கிடைத்த இரண்டு பொருள் ஏது சரியோ அறியேன்)

பொருள் 1

           வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

(ப. இ.) அருளால் வழுதலங் கத்தரிக்காயை விதைத்தேன். அஃதாவது அகத்தவமாகிய யோகப்பயிற்சியினை மேற்கொண்டேன். அவ் வித்தின்கண் விளைவாகப் பற்றறுதி என்று சொல்லப்படும் வைராக்கியம் வளர்ந்தது. இப் பற்றறுதியினைப் பாகல் என்று ஓதினர். தத்துவங்களாகிய மெய்யினை ஆராயத் தொடங்கினேன். ஈண்டுப் புழுதியைத் தோண்டினேன் என்பது தத்துவ ஆராய்ச்சி செய்தேன் என்பதாம். இவ் வாராய்வின் பயனாகப் பூசணியாகிய சிவம் பூத்தது. தோட்டக் குடிகளாகிய ஐவரும் தொண்ணூற்றறுவரும் அதனைக் கண்டு தொழுதுகொண்டோடினர். திருவடிப் பேறாகிய வாழைக்கனி முழுதும் பழுத்து விழுப்பயனாயது. வாழ்வைத் தருங்கனி வாழைக்கனி. நெடு வாழ்வைத்தரும் ஈடும் எடுப்புமில் பீடு சேர் திருவடிப்பேற்றினுக்கு வாழைக்கனியே ஒருபுடை யொப்பாம் என்க. வாழை மா பலா மூன்றும் முறையே அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுங் குறிக்கும் குறிப்பாகும்.

(அ. சி.) வழுதலை வித்து-யோகப்பயிற்சி. பாகல்-வைராக்கியம். புழுதியைத் தோண்டினேன் - தத்துவ ஆராய்ச்சி செய்தேன். பூசணி பூத்தது - சிவம் வெளிப்பட்டது. தோட்டக் குடிகள் - இந்திரியாதி விடயங்கள். பழுத்தது - கிடைத்தது. வாழைக்கனி - ஆன்மலாபம்.


பொருள் 2

கத்தரிக்காயை விதைத்தேன், பாகற்கொடியாக முளைத்து வந்தது. கொஞ்சம் மண்ணைக் கிளறிப் பார்த்தேன்; பூசணி பூத்திருந்தது. அதையும் தோட்டத் தொழிலாளர்கள் எடுத்துச் சென்றனர். வாழை முழுமையாக பழுத்தது என்பது இப்பாடலின் பொருள்.


 கத்தரிக்காயில் உள்ள அத்தனை விதைகளை போல நான் அத்தனை கர்மாக்களை செய்தேன் அதனால் துன்பம் மிகுந்த பிறவியாகிய பாகற்காய் முளைத்துவிட்டது. என் மனத்தோட்டத்தில் ஆழக்குழி செய்து புழுதியைத் தோண்டியதில் அதாவது தியானம் செய்ததில் பூசனிக்காய் போல சிவப்பழம் கிடைத்தது இதுவரை இந்தப் பழத்தை என்னை அடையவிடாமல் செய்த திருடர்களாகிய ஐம்புலன்கள் இப்போது ஒன்றும் செய்ய முடியாமல் ஓடிப்போய்விட்டனர். அதாவது அடங்கிவிட்டனர். இதனால் மிகவும் இனிப்பானை விதைகள் இல்லாத வாழைப்பழம் போன்ற மோட்சத்தை அடைந்து விட்டேன். விதை இருந்தால்தானேபிறவி. அதனால் விதை இல்லாதவாழைப்பழத்தை உதாரணமாகச் சொல்கிறார் திருமூலர்.




On Saturday, March 7, 2026 at 8:24:47 AM UTC+5:30 Siva Siva wrote:
சமைக்கத் தெரியாத மனைவியின் கத்தரிக்காய்ப் பிரியனான கணவனின் கூற்றாக அமைந்த பாடல்.
கத்தரிக்காய் வியாபாரியின் வண்டியில் / கூடையில் இருக்கும் காய்களை அவன் பார்த்த காட்சியை வர்ணிக்கின்றது.

==

நன்றி 

Siva Siva

unread,
Mar 7, 2026, 11:35:35 AMMar 7
to santhav...@googlegroups.com

1)
The correct version of that auvaiyar song is here:
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே
புல்வேளுர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டான்ஈ(து)
எல்லா வுலகும் பெறும்.

I think it should be treated as இன்னிசை வெண்பா (& not as நேரிசை வெண்பா) - given the occurrence of ர & ற in those 3 words.

2)
Dharmapuram adheena urai of that thirumandhiram verse can be seen here:
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பாடல் எண் : 4
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே .
===

Arasi Palaniappan

unread,
Mar 7, 2026, 12:22:09 PMMar 7
to சந்தவசந்தம்
என் முயற்சி 

கொய்கின்ற  காயைநாம் கொய்யாக்காய் என்றுரைப்போம் 
பொய்யையும் மெய்யாய்ப் புரட்டுதல்போல் - வையத்தில் 
இல்லா ததனை இருப்பதாய், உள்ளதை 
இல்லாத(து) என்னல் இயல்பு!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNekMf0aw4pZfJA8FOK4GwKNbvU%2B0vmB0O6-4baSkcRJg%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Mar 7, 2026, 1:22:22 PMMar 7
to Santhavasantham
கத்தரிக்காய் நல்ல கறி.

அன்பன்
மீ.வி.

Siva Siva

unread,
Mar 7, 2026, 3:26:29 PMMar 7
to santhav...@googlegroups.com
கொய்யாக்காய் நன்று!

Ram Ramakrishnan

unread,
Mar 7, 2026, 4:32:07 PMMar 7
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. பழனியபன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 7, 2026, at 15:26, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Mar 7, 2026, 10:54:01 PMMar 7
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணலே!

Arasi Palaniappan

unread,
Mar 7, 2026, 10:55:07 PMMar 7
to சந்தவசந்தம்
Thanks

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages