அம்மையப்பன் அம்மானை

91 views
Skip to first unread message

Vis Gop

unread,
Jul 6, 2016, 5:41:20 AM7/6/16
to santhav...@googlegroups.com
எனக்குக் கிடைத்த முதல் இலக்கியவேல் பிரதியில் திரு அனந்த் அவர்களின் அம்மானை பற்றிய கட்டுரையைக் கண்டவுடன் (ஜனவரி 2015இல்) செய்த முதல் அம்மானை முயற்சி. எங்கோ தவறிப் போயிருந்த காகிதம் இன்று கிடைத்தது.

அம்மையப்பன் அம்மானை

பாண்டியனின் தவமகளின் பதியாவான் வேண்டுபவர் 
வேண்டியதைத் தருவள்ளல் வேந்தனவன் அம்மானை 
வேண்டியதைத் தருவள்ளல் வேந்தனவன் ஆமாகில் 
ஈண்டவனோர் பித்தாகி இருப்பதுமேன்? அம்மானை 
ஆண்டவனின் தலையினிலே அரைமதியுண்டம்மானை!   (1)

தாண்டவமே ஆடிடினும் தவசியவன் எவராலும் 
தீண்டவொணாத் திருவொளியாந் தேகனவன் அம்மானை       [தாண்டவமே ஆடிடினும் தீண்டவொணாத்]
தீண்டவொணாத் திருவொளியாந் தேகனவன் ஆமாகில் 
மாண்டவர்க்குச் சிவபதத்தை வழங்குவதென்? அம்மானை     [சீலருக்கு]
ஆண்டவனை அடைவோரும் ஒளியாவார் அம்மானை!   (2)

வனிதைக்குப் பாதியுடல் வழங்கியவன் கருணையுடன் 
கனிவாகக் கண்குளிரக் காண்பவனாம் அம்மானை 
கனிவாகக் கண்குளிரக் காண்பவனே யாமாகில் 
தனியாகக் கையொன்றில் தழலேனோ? அம்மானை 
பனிமலையிற் பழகுகிற பனித்தலையன் அம்மானை!   (3)

நலிந்தோர்கள் யாவர்க்கும் நண்பனவன் பெருவள்ளல்  
சலித்தோர்கள் எல்லார்க்கும் சரணவனே அம்மானை 
சலித்தோர்கள் எல்லார்க்கும் சரணவனே யாமாகில் 
கலிதீர்க்கும் கண்கண்ட கடவுளெவன்? அம்மானை              [பசுத்தோல் போர்த்திய புலிகள் கலியில் 
புலித்தோலைப் போர்த்திட்ட பசுபதியே அம்மானை!   (4)    [காண்பவை! கலிலக்ஷணம் அறிந்தவன்!

காண்போரைக் கவர்கின்ற கட்டழகன் பேருலகைப்  
பேண்கின்ற தந்தையவன் பிறப்பற்றான் அம்மானை  
பேண்கின்ற தந்தையவன் பிறப்பற்றான் ஆமாகில் 
ஆண்பாதி பெண்பாதி ஆனதுமென்? அம்மானை 
ஆண்டவனே அகிலத்தின் அமையப்பன் அம்மானை!   (5)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.















Vis Gop

unread,
Jul 6, 2016, 5:57:49 AM7/6/16
to santhav...@googlegroups.com
மீண்டும் இடுகிறேன். குறிப்புகள் செய்யுளில் ஊடுருவதைத் தவிர்க்க, சிறிய எழுத்துக்களில்.

எனக்குக் கிடைத்த முதல் இலக்கியவேல் பிரதியில் திரு அனந்த் அவர்களின் அம்மானை பற்றிய கட்டுரையைக் கண்டவுடன் (ஜனவரி 2015இல்) செய்த முதல் அம்மானை முயற்சி. எங்கோ தவறிப் போயிருந்த காகிதம் இன்று கிடைத்தது.

அம்மையப்பன் அம்மானை

பாண்டியனின் தவமகளின் பதியாவான் வேண்டுபவர் 
வேண்டியதைத் தருவள்ளல் வேந்தனவன் அம்மானை 
வேண்டியதைத் தருவள்ளல் வேந்தனவன் ஆமாகில் 
ஈண்டவனோர் பித்தாகி இருப்பதுமேன்? அம்மானை 
ஆண்டவனின் தலையினிலே அரைமதியுண்டம்மானை!   (1)

தாண்டவமே ஆடிடினும் தவசியவன் எவராலும் 
தீண்டவொணாத் திருவொளியாந் தேகனவன் அம்மானை  [தாண்டவமே ஆடிடினும் தீண்டவொணாத்]
தீண்டவொணாத் திருவொளியாந் தேகனவன் ஆமாகில் 
மாண்டவர்க்குச் சிவபதத்தை வழங்குவதென்? அம்மானை     [சீலருக்கு]
ஆண்டவனை அடைவோரும் ஒளியாவார் அம்மானை!   (2)

வனிதைக்குப் பாதியுடல் வழங்கியவன் கருணையுடன் 
கனிவாகக் கண்குளிரக் காண்பவனாம் அம்மானை 
கனிவாகக் கண்குளிரக் காண்பவனே யாமாகில் 
தனியாகக் கையொன்றில் தழலேனோ? அம்மானை 
பனிமலையிற் பழகுகிற பனித்தலையன் அம்மானை!   (3)

நலிந்தோர்கள் யாவர்க்கும் நண்பனவன் பெருவள்ளல்  
சலித்தோர்கள் எல்லார்க்கும் சரணவனே அம்மானை 
சலித்தோர்கள் எல்லார்க்கும் சரணவனே யாமாகில் 
கலிதீர்க்கும் கண்கண்ட கடவுளெவன்? அம்மானை               
புலித்தோலைப் போர்த்திட்ட பசுபதியே அம்மானை!   (4)   
[பசுத்தோல் போர்த்திய புலிகள் காணும் கலியின் லக்ஷணம் அறிந்தவன்!]

Rajja

unread,
Jul 6, 2016, 8:34:56 AM7/6/16
to santhav...@googlegroups.com
அழகிய நடை, நற்பொருள் நளினம்

நன்றி ஐயா

மீ. ரா

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaiyar Ramasami

unread,
Jul 6, 2016, 8:37:01 AM7/6/16
to santhav...@googlegroups.com
முதல் பாடலே மயங்க வைத்துவிடுகிறது.
மிக அற்புதம்.  

அம்மானை அனந்த்  அம்மானைப் பாராட்டத்தான் வேண்டும் நல்ல வழிகாட்டியாக அமைந்தமைக்காக



--

Ramamoorthy Ramachandran

unread,
Jul 6, 2016, 8:43:57 AM7/6/16
to santhav...@googlegroups.com

ஈசன் பசுவாகி ஏமனொரு கன்றாகி
வீசுபுகழ் ஆரூரின்  அம்மானை வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை
கன்றை உதைகாலி கறக்குமோ அம்மானை!
எப்போதோ படித்தது. - புலவர் இராமமூர்த்தி.

Ramamoorthy Ramachandran

unread,
Jul 6, 2016, 8:46:02 AM7/6/16
to santhav...@googlegroups.com

திருத்தம்:இரண்டாமடி -  வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் அம்மானை

ramaNi

unread,
Jul 6, 2016, 10:38:59 AM7/6/16
to சந்தவசந்தம்
அம்மானை அழகாக அமைந்துள்ளது, கோபால்ஜி.
ரமணி

Vis Gop

unread,
Jul 6, 2016, 11:56:07 AM7/6/16
to santhav...@googlegroups.com
அடடா! அருமை! பெரும்புலவரின் பாட்டின் அடையாளம் தெரிகிறது. நன்றி!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால் 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 6, 2016, 12:00:04 PM7/6/16
to சந்தவசந்தம்
அம்மானை அழகாக அமைந்திருக்கிறது.  பாராட்டுகள்!

அனந்த்

2, 5 பாடல்களின்  ஈற்றில் உள்ள  'punch line' இன்னும் சற்றுத் தாக்கத்துடன் இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. நான் சரியாகப் புரிந்து கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.   

Vis Gop

unread,
Jul 6, 2016, 9:50:10 PM7/6/16
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
2ஆம் பாடல். தீண்டவொணாதவன் தன் பதத்தைத் தருவது என் என்பது கேள்வி. சிவபதம் என்பது சிவமாக ஆவதே ஆதலின் அவனை அடைபவரும் ஒளியாகி விடுவர் என்பது பதில். தாக்கத்தைக் கூட்ட யோசிக்கிறேன்.

5ஆம் பாடல். எனக்குத் தோன்றிய இன்னொரு அடி.
"ஆண்டவனே தாயாயும் ஆனவனாம் அம்மானை" என்பது.

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Ramamoorthy Ramachandran

unread,
Jul 6, 2016, 11:41:04 PM7/6/16
to santhav...@googlegroups.com
எக்கண்  இருந்தாலும் எண்டிசையும் நோக்கியருள் 
முக்கண்ணன் அருட்பார்வை மூவுலகும் காத்திடுமே!
முக்கண் அருட்பார்வை  மூவுலகும்  காக்குமெனில் 
திக்கற்ற என்பால் ஒருகண்ணும் திரும்பலையே?
முக்கண்ணுள் இரண்டடியார்க் கொன்றம்மைக் காயினவே!

புலவர் இராமமூர்த்தி.
--

Vis Gop

unread,
Jul 7, 2016, 1:11:26 AM7/7/16
to santhav...@googlegroups.com
திக்கற்ற உன்பால் திரும்பவிலை யேனென்கில்
திக்குள்ளே தவிக்கின்ற அவனேயோர் திகம்பரனே!          [தவம் செய்கின்ற]
திக்காடித் தவம்செய்யும் திருத்தவசி அவனாகில்             [பல திசைகளிலும் க்ஷேத்ராடனம் செய்து]
நக்கினனாய்ப் பைரவனாய் நாணமிலா தானதுமேன்?
அக்கினிக்கோர் ஆடைதனை ஆர்தருவார் அம்மானை!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2016-07-07 9:11 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
எக்கண்  இருந்தாலும் எண்டிசையும் நோக்கியருள் ன்.

Vis Gop

unread,
Jul 7, 2016, 1:21:15 AM7/7/16
to santhav...@googlegroups.com
என் அம்மானை முயற்சிக்குப் பாராட்டுக்களும் கருத்துக்களும் பின்னூட்டங்களும் அருளிய திரு மீ.ரா., திரு இலந்தை, திரு ரமணி, திரு புலவர், திரு அனந்த் ஆகியோர்க்கு மிக்க நன்றி!

Vis Gop

unread,
Jul 7, 2016, 1:54:12 AM7/7/16
to santhav...@googlegroups.com
அங்கயல்போற் கண்ணாளை அவன்பங்கிற் சேர்ப்பிக்கச்
செங்கமலக் கணைதொடுத்தான் சிங்காரன் அம்மானை
செங்கமலக் கணைதொடுத்த சேவகனைச் சினங்கொகொண்டு
சங்காரம் செய்ததுவும் சரிதானோ? அம்மானை
சங்கரிகைக் கரும்பெடுத்தால் சகிப்பானோ அம்மானை!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jul 7, 2016, 7:15:32 AM7/7/16
to santhav...@googlegroups.com
அறிஞர்களிடமிருந்து ஊக்கம் கிடைத்ததால் அம்மானை முயற்சி சற்று வளர்ந்தது. 10 பாடல்களையும் தொகுத்து இங்கே இடுகிறேன்.

அம்மையப்பன் அம்மானை


பாண்டியனின் தவமகளின் பதியாவான் வேண்டுபவர் 
வேண்டியதைத் தருவள்ளல் வேந்தனவன் அம்மானை 
வேண்டியதைத் தருவள்ளல் வேந்தனவன் ஆமாகில் 
ஈண்டவனோர் பித்தாகி இருப்பதுமேன்? அம்மானை 
ஆண்டவனின் தலையினிலே அரைமதியுண்டம்மானை!   (1)

தாண்டவமே ஆடிடினும் தவசியவன் எவராலும் 
தீண்டவொணாத் திருவொளியாந் தேகனவன் அம்மானை  [தாண்டவமே ஆடிடினும் தீண்டவொணாத்]
தீண்டவொணாத் திருவொளியாந் தேகனவன் ஆமாகில் 
மாண்டவர்க்குச் சிவபதத்தை வழங்குவதென்? அம்மானை     [சீலருக்கு]
ஆண்டவனை அடைவோரும் ஒளியாவார் அம்மானை!   (2)

வனிதைக்குப் பாதியுடல் வழங்கியவன் கருணையுடன் 
கனிவாகக் கண்குளிரக் காண்பவனாம் அம்மானை 
கனிவாகக் கண்குளிரக் காண்பவனே யாமாகில் 
தனியாகக் கையொன்றில் தழலேனோ? அம்மானை 
பனிமலையிற் பழகுகிற பனித்தலையன் அம்மானை!   (3)

நலிந்தோர்கள் யாவர்க்கும் நண்பனவன் பெருவள்ளல்  
சலித்தோர்கள் எல்லார்க்கும் சரணவனே அம்மானை 
சலித்தோர்கள் எல்லார்க்கும் சரணவனே யாமாகில் 
கலிதீர்க்கும் கண்கண்ட கடவுளெவன்? அம்மானை               
புலித்தோலைப் போர்த்திட்ட பசுபதியே அம்மானை!   (4)   
[பசுத்தோல் போர்த்திய புலிகள் காணும் கலியின் லக்ஷணம் அறிந்தவன்!]

காண்போரைக் கவர்கின்ற கட்டழகன் பேருலகைப்  
பேண்கின்ற தந்தையவன் பிறப்பற்றான் அம்மானை  
பேண்கின்ற தந்தையவன் பிறப்பற்றான் ஆமாகில் 
ஆண்பாதி பெண்பாதி ஆனதுமென்? அம்மானை 
ஆண்டவனே தாயாயும் ஆனவனாம் அம்மானை!   (5)

அங்கயல்போற் கண்ணாளை அவன்பங்கிற் சேர்ப்பிக்கச்
செங்கமலக் கணைதொடுத்தான் சிங்காரன் அம்மானை
செங்கமலக் கணைதொடுத்த சேவகனைச் சினங்கொகொண்டு
சங்காரம் செய்ததுவும் சரிதானோ? சங்கரிகைகச்
செங்கரும்பு வேற்றிடத்தில் சீராமோ அம்மானை!   (6)

தெக்கணத்தில் தில்லையிலே திருநடனம் ஆடுபவன்
சொக்கனவன் மதுரையிலே சுந்தரனாம் அம்மானை
சொக்கனவன் மாமதுரைச் சுந்தரனே யாமாகில் 
சிக்குடைய சடையேனோ செப்புகநீ! பத்தர்களின்
சிக்கலெலாம் தானேற்கும் செம்மலவன் அம்மானை!    (7)

நேமத்தில் நின்றவனை நிருமலமாய்ப் போற்றுபவர்
சேமத்தைத் தன்கடனாய்ச் செய்பவனாம் அம்மானை
சேமத்தைத் தன்கடனாய்ச் செய்பவனே அவனாகில்
ஈமத்தீக் காட்டிடையே இருப்பதுமேன்? பரவுலகில்
போமாற்றின் வழிகாட்டும் புண்ணியனாம் அம்மானை!   (8)

இறையவனே அறிவுக்கோர் இயல்பான திருவுருவம்
மறையந்தம் கடந்திருக்கும் மருமமவன் அம்மானை
மறையந்தம் கடந்திருக்கும் மருமமவன் தானாகில்
கறைக்கண்டன் பிள்ளையிடம் கற்றதுமென்? அம்மானை
மறையோதக் கேட்டுமனம் மகிழ்பவனாம் அம்மானை!  (9)

தஞ்சமென வந்தவர்க்குச் சரணமெனத் தாள்தருவான்
சஞ்சலங்கள் நீக்குபவன் சாந்தனவன் அம்மானை
சஞ்சலங்கள் நீக்கிமனச் சாந்திதரு வானாகில் 
வஞ்சமிகு கடல்தாண்ட வழியெவனோ? வீடடைய
அஞ்சலெனும் முத்திரையோ(டு) அவனருள்வான் அம்மானை!  (10)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 7, 2016, 8:20:10 AM7/7/16
to சந்தவசந்தம்

மலைமகளைத் தான்மணந்தோன் மூவருளும் மேலான

நிலையுடையோன் என்னுமுயர் நீர்மையன்காண் அம்மானை

நிலையுடையோன் என்னுமுயர் நீர்மையனே ஆமாகில்

தலையெடுக்கும் ஆணவமும் சார்ந்தவனோ அம்மானை

தலையெடுக்கும் வேளையில்ஊண் தானிரக்கும் அம்மானை!

 

(தலைஎடுத்தல்: உண்டாதல், தலையைக் கொய்தல்.  பின்னது, தான் சிவபெருமானினும் உயர்ந்தவன் என்று தருக்குக் கொண்ட பிரமனின் ஐந்தாம் தலையைக் கொய்தபின் அதற்குப் பரிகாரமாய்த் தலையோட்டில் பிச்சையெடுத்துண்டதைக் குறிப்பது. சிவன் தான் எளிமை காப்பதுடன் பிறரது ஆணவ மலத்தையும் அழிப்பவன் என்றவாறு.)  


குறிப்பு:  தரவு கொச்சகக் கலிப்பா வகையில் அமையும் அம்மானைப் பாடல்களில் அடிகளுக்குள் வெண்டளை பயிலுமாறு அமைப்பதை இலக்கியத்தில் காண்கிறோம். ஈற்றடியில் சிலேடையணி அமைத்தல் சிறப்பு. புலவர் இராமமூர்த்தி இட்ட ‘ஈசன் பசுவாகி.. ‘ என்ற பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. (’இலக்கிய வேலில்’ இட்ட அம்மானைக் கட்டுரையை இணைத்துள்ளேன்.) 


அனந்த் 7-7-2016

இலக்கியவேல்- அம்மானை ஒரு ஆய்வுக் கட்டுரை.doc

Ramamoorthy Ramachandran

unread,
Jul 7, 2016, 9:52:57 AM7/7/16
to santhav...@googlegroups.com
உமையவளுக்  குப்பாதி  தந்தமையால் ஒன்றரைக்கண்! 
சமயத்தில் கண்ணப்பன் தனக்கிழந்தான் அதனையுமே!
சமயத்தில் கண்ணப்பன் தனக்கிழந்தான் என்றக்கால் 
இமையாத அரைநுதற்கண் இருக்குமே அம்மானை 
இருப்பதுவும் எரிக்கும்கண்!  என்செய்வான்  அம்மானை! 
 
நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
குறிப்பு:(''ஈசன் பசுவாகி'' எப்போதோ படித்தது! யார் இயற்றியது 
என்பதை அடியேன் அறியேன்!) 

N. Ganesan

unread,
Jul 7, 2016, 7:41:43 PM7/7/16
to சந்தவசந்தம், podhuvan sengai, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Jul 6, 2016 5:43 AM, "Ramamoorthy Ramachandran" <rawmu...@gmail.com> wrote:

> ஈசன் பசுவாகி ஏமனொரு கன்றாகி 
> வீசுபுகழ் ஆரூரின்  வீதிவந்தார் அம்மானை
>   வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாயின்
>   காசளவு பாலும் கறவாதோ அம்மானை 
> கன்றை உதைகாலி கறக்குமோ அம்மானை! 

எப்போதோ படித்தது. - புலவர் இராமமூர்த்தி

மூவரம்மானை - பழைய பதிப்பு பார்த்தேன். அதில் காணோம். 

ஆனால், தனிப்பாடற்றிரட்டு நூலில் இருக்கிறது.
புலவர் செங்கை பொதுவன் தட்டச்சித் தந்துள்ளார்.


பழைய 86 அம்மானைப் பாடல்கள் வாசிக்கலாம்:

நா. கணேசன்


Tamil book 1.jpg

Old Source Book in Tamil, compiled individual poems.jpg




VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 7, 2016, 8:07:37 PM7/7/16
to சந்தவசந்தம்
நன்றி, கணேசன்.
தனிப்பாடற்றிரட்டில் காணும் பாடலில்  தட்டச்சுத் தவஊ ஒன்று உள்ளது: 
ஈசன் பசுவாகி யேமன் ஒரு கன்றாகி
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் அம்மானை
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை
கன்றை *உதைத்த காலி* கறக்குமோ அம்மானை. (30)

இங்கு, ஈற்றடி புலவர் இராமமூர்த்தி தந்தபடி,  “கன்றைஉதை காலி கறக்குமோ அம்மானை!” என்றிருக்க வேண்டும் (வெண்டளை ஒட்டிச் சீர்பிரித்தது).

அனந்த் 

N. Ganesan

unread,
Jul 7, 2016, 8:11:44 PM7/7/16
to சந்தவசந்தம்


On Thursday, July 7, 2016 at 5:07:37 PM UTC-7, ananth wrote:
நன்றி, கணேசன்.
தனிப்பாடற்றிரட்டில் காணும் பாடலில்  தட்டச்சுத் தவஊ ஒன்று உள்ளது: 
ஈசன் பசுவாகி யேமன் ஒரு கன்றாகி
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் அம்மானை
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை
கன்றை *உதைத்த காலி* கறக்குமோ அம்மானை. (30)

இங்கு, ஈற்றடி புலவர் இராமமூர்த்தி தந்தபடி,  “கன்றைஉதை காலி கறக்குமோ அம்மானை!” என்றிருக்க வேண்டும் (வெண்டளை ஒட்டிச் சீர்பிரித்தது).

அனந்த் 


தனியிழையில் மூவரம்மானை நூல் பிடிஎப் பார்ப்போம். அதைத் தட்டெழுதினால் சில பாட வேறுபாடுகள் கிடைக்கலாம்.

நா. கணேசன்

Ramamoorthy Ramachandran

unread,
Jul 7, 2016, 9:10:29 PM7/7/16
to santhav...@googlegroups.com

கணேசனார்க்கு நன்றி. அவர் இடுகையால்  அனைத்துப்பாடல்களையும் படித்தேன். -புலவர் இராமமூர்த்தி.

N. Ganesan

unread,
Jul 8, 2016, 1:07:07 AM7/8/16
to சந்தவசந்தம்
On Thursday, July 7, 2016 at 6:10:29 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:

கணேசனார்க்கு நன்றி. அவர் இடுகையால்  அனைத்துப்பாடல்களையும் படித்தேன். -புலவர் இராமமூர்த்தி.


86 அம்மானையும் வாசித்தமைக்கு நன்றி புலவரையா.

பிச்சைக்காரரில் தொடங்கி தனவந்தர் வரை மனப்பாடமாகச் சொல்லி அநுபவித்த இதுபோன்ற பாடல்களை
முதன்முதலாகத் தொகுத்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்கு நாம் எல்லாம் கடன்பட்டுள்ளோம்.
அவரோடு பழகிய தமிழ்த்தாத்தா ஒரு இரவலரிடமிருந்து பெற்ற வெண்பாவையும், தில்லையம்பூர்க் கவிராயர்
பணியையும் “பிச்சைப் பாட்டு” என்று கட்டுரையில் விவரித்தார்கள்: அக் கட்டுரை பார்ப்போம்,

    பிச்சைப் பாட்டு


    சென்னையில் இப்பொழுதுள்ள இராசதானிக் கல்லூரி (Presidency College) ஆரம்பத்தில் ஒரு சிறு பள்ளிக்கூடமாக இருந்தது. அப்போது மாகாணப் பள்ளிக்கூடம் (Provincial School) என்ற பெயரால் அது வழங்கி வந்தது. அக்காலத்தில் அதில் வெவ்வேறு துறைகளில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்பல அரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிற் சிறந்த புகழ்வாய்ந்தவர்களாக விளங்கிய வித்துவான் தாண்டவராய முதலியார் முதலியவர்கள் அதில் தமிழ்ப்பண்டிதர்களாக இருந்தார்கள். அவர்களுள் ஒருவரான விசாகப் பெருமாளையரென்ற வீரசைவ வித்துவான் இலக்கணப் பயிற்சி மிக்கவர். அவர் இயற்றமிழாசிரிய ரென்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். அவருடைய தம்பியராகிய சரவணப் பெருமாளையரும் தமிழ்ப்புலமை மிக்கவர். அவ்விருவரும் சில நூல்களை இயற்றியுள்ளார்; சில பழைய நூல்களைப் பதிப்பித்து மிருக்கின்றனர். அவர்களிடத்திற் பாடங்கேட்ட சிறந்த மாணாக்கர்கள் பலர். தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவர் அவர்களுள் ஒருவராவர்.

    இவர் தமிழ்மொழியிற் பேரன்புடையவர்; சிறந்த நூற்பயிற்சியுள்ளவர். தம் ஆசிரியர் இயற்றிய பஞ்சலக்ஷண வினாவிடை, பாலபோத இலக்கணமாகியவற்றையும், வேறு நூல்க களாகிய நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுர்ரை, தண்டியலங்காரம், வச்சணந்தி மாலை, விஷப்பிரதி விஷத்திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரதநூல் முதலியவற்றையும் ஆராய்ந்து பதிப்பித்திருக்கிறார். இவர் பல மாணக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும் வந்தார்; சித்தூர் ஹைஸ்கூலில் பல வருஷங்கள் தமிழாசிரிய‌ராக வேலை பார்த்தார்; திரிசிரபுரம் சி.தியாகராச செட்டியார் ஆறுமாதம் ஓய்வெடுத்துக்கொண்ட காலத்தில் கும்பகோணம் காலேஜிலும் பண்டிதராக இருந்து பாடஞ் சொன்னார்.

    மற்ற வித்துவான்களோடு இவர் மனங்கலந்து பழகிப் பொழுதுபோக்குவார். இவரிடம் பொறாமை யென்பது மருந்துக்கும் இல்லை. பழம் புலவர்களுடைய வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் இவருக்கு மிக்க ஊக்கம் இருந்து வந்தது. எங்கே சென்றாலும், அங்கே வழங்கும் புலவர் வரலாறுகளையும் பழம்பாடல்களையும் கேட்டு இவர் தொகுத்து வந்தார். பலரிடம் வினாவி அவர்கள் எழுதியனுப்பும் தனிச் செய்யுட்களையும் சேர்த்து வந்தார். பழைய பாட்டென்று யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு எழுதிக்கொள்வார். இங்ஙனம் பலவகையாகச் சேர்த்துத் தனிப்பாடற் றிரட்டென்னும் புத்தகத்தை ஏறக்குறைய எழுபது வருடங்களுக்கு முன் வெளியிட்டார். இக்காலத்தில் பல‌ தனிப்பாடற்றிரட்டுக்கள் உலாவுகின்றன. முதன் முதலில் அத்தகைய நூலை வெளியிட்ட‌ பெருமை சந்திரசேகர கவிராஜ பண்டிதரையே சார்ந்ததாகும்.

    இவர் என்பால் அன்புடையவராக இருந்தார். இவருடைய புத்தகத்திற் சேர்த்துக் கொள்ளும்படி நானும் பல செய்யுட்களை எழுதிஅனுப்பியதுண்டு. அக்காலத்தில் நான் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வந்தேன். இவர் திருவாவடுதுறைக்கு வந்த சமயங்களில் இவரோடு மனமகிழ்ந்து பொழுதுபோக்குவது எனது வழக்கம். என்னுடைய தமிழாசிரியராகிய மகாவித்துவான் ஶ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலம் சென்றுவிட்டமையால் பழைய நூல்களில் உள்ள சில சந்தேகங்களை அக்காலத்தில் இவரிடம் கேட்டு நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். கோபம் சிறிதும் இல்லாமல பொறுமையோடு இவர் பேசுவார்; விஷயங்களை ஆராய்வார்; பிறர் தூஷித்தாலும் கவனியார். தாம் தனிப்பாடல்களைச் சேகரித்த வரலாறுகளைப்பற்றி அவ்வப்போது சொல்வார். அவற்றை அக்காலத்திற்கேட்டபோது எனக்கு அளவிறந்த வியப்பு உண்டாகும். அவர் கூறியவற்றுள் ஒன்றை இப்போது தெரிவிக்கிறேன்.

    சந்திர சேகர கவிராஜ பண்டிதர் சென்னையில் இருந்தபோது வண்ணார் பேட்டையிலுள்ள சஞ்சீவிராயன் தெருவிற் சில வருஷங்கள் வசித்துவந்தார். ஒருநாள் இரவு நிலா நன்றாக எறித்தது. இராப்பிச்சைக்காரன் ஒருவன் வீடுதோறும் சென்று அன்னப்பிச்சை வாங்கிக்கொண்டே வந்தான். அவன் பல ஊர்களைச் சுற்றினவன்; பல செய்யுட்களை அவன் அறிந்திருந்தான். "அம்மா, பிச்சை" என்று மட்டும் சொல்லிப் பிச்சை வாங்காமல், இனிய சாரீரத்தோடு தமிழ்ப்பாடல்களைப் பாடி அன்னங்கேட்பது அவன் வழக்கம்.

    பிச்சைக்காரன் பாடிக்கொண்டே சந்திர சேகர கவிராஜபண்டிதர் இருந்த தெருவழியே வந்தான். அவனுடைய இனிய குரல் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வரச்செய்தது; பெண்டிர் அவன் பாட்டில் மயங்கி அவனுக்கு மனமுவந்து அன்ன மளித்தனர்.

    தெம்மாங்கு, வெண்ணிலாப்பாட்டு, பராபரக்கண்ணி முதலியவற்றை அவன் பாடுவான். ஒருகண்ணியில் ஓரடியையே திருப்பித்திருப்பிப் பாடுவான். ஒரு தெரு முழுவதற்கும் அந்த ஒரு கண்ணியே அவனுக்குப் போதியதாக இருக்கும். அன்று வீசிய நிலாவொளியில் அவனுடைய ஞாபகம் நிலாவைப்பற்றிய பாட்டொன்றிற் சென்றது.

    "ஊரைச் சுடுமோ"

    என்று அவன் ஆரம்பித்தான். தமிழ்ப்பாட்டாக யார் எதைச் சொன்னாலும் கேட்பதில் ஆவல்கொண்ட கவிராஜபண்டிதரை அந்த ஒலி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவித்தது. பண்டிதர் பிச்சைக்காரனருகிலே சென்று நின்றார். அவன், "ஊரைச்சுடுமோ" என்னும் தொடரையே பலமுறை நீட்டியும் குறுக்கியும் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றான். பண்டிதருக்கோ அந்த நிமிஷத்திலேயே பாட்டு முழுவதையும் அவன் சொல்லிக் கேட்க வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அவனாகச் சொல்லட்டு மென்று காத்திருந்தார். "ஊரைச் சுடுமோ" என்பதற்குமேல் ஓரெழுத்துக் கூட அவன் வாயிலிருந்து வரவில்லை.

    அவர் பொறுமையை இழந்தார்; "அந்தப் பாட்டை முழுவதும் சொல்லிவிடப்பா" என்று கேட்டார். பிச்சைக்காரன் தலையெடுத்துப் பார்த்தான்; ஒன்று மில்லாமற் பிச்சை வாங்குவதைவிடச் சில பாட்டுக்களைப் பாடிப் பிச்சை வாங்க வெண்ணித் தான் பாடிவரும் பாட்டை ஒரு பெரியவர் கவனத்தோடு கேட்டு வருகிறாரென்பதை அவன் உணர்ந்தபோது அவனுக்குச் சிறிது கர்வமும் உண்டாயிற்று.

    "இதோ சொல்லுகிறேன்" என்று கூறி மறுபடியும், "ஊரைச் சுடுமோ" என்றே தொடங்கினான். 'இவனுக்கு இதற்குமேல் தெரியாதோ?' என்ற சந்தேகம் பண்டிதருக்கு உண்டாயிற்று.

    பலமுறை, "ஊரைச் சுடுமோ" என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிவிட்டு அப்பால் பெரிய புதையலை வெளியிற் கொண்டு வந்தவன் போல அவன்,

      "உலகந் தனைச்சுடுமோ"

    என்றான்.

    அதைக்கேட்ட பண்டிதர் அந்தப் பாட்டு ஒரு வெண்பாக இருக்கவேண்டுமென்று ஊகித் தறிந்தார். "பாட்டின் இனிமை முதலடியிலேயே ததும்பி நிற்கிறது! பின் அடிகள் எவ்வளவு இனிமையாக இருக்குமோ!" என்று ஏங்கினார்.

    "ஐயா, நான் மறந்துவிட்டேன். தானாக வந்தால் வரும்; நானாக நினைத்தால் வருவதில்லை" என்றான் பிச்சைக்காரன்.

    "யோசித்துப் பாரப்பா" என்று சொல்லிப் பண்டிதர் அவனைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்னமிடச் செய்தார். அவன் தன்னால் ஆனவரைக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தும் வரவில்லை. முதலடிக்கு மேலே பாடும் வழக்கம் அவனுக்கு இல்லை.

    "பாட்டு முழுவதும் உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் பண்டிதர்.

    "நன்றாகத் தெரியும். எனக்கு ஒரு கிழவனார் அந்தப்பாட்டைச் சொல்லித் தந்தார். பிச்சைக்காரனுக்கு ஓரடி போதாதா? ஐயா!" என்றான் அவன்.

    பண்டிதர், "எப்போதாவது பாட்டு முழுவதும் ஞாபகம் வந்தால் வந்து சொல்; இனாம் தருகிறேன்" என்றார்.

    பிச்சைக்காரன், "என்னால் முடிந்தவரையிற் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு அடுத்த தெருவுக்குப் போனான். பண்டிதருக்குத் தம் வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. அவன் உத்ஸாகங்கொண்டு ஒருகால் அடுத்த தெருவில் பாட்டு முழுவதையும் சொல்லக் கூடுமோவென எண்ணினார்; அவனைப் பின் தொடர்ந்தார். அவன் அங்கும், "ஊரைச் சுடுமோ" என்ற தொடரையே பாடினான். தெருக்கோடியில் அவனுடைய வாயிலிருந்து இரண்டாவது அடியும் வந்தது:

      "ஊரைச் சுடுமோ வுலகந் தனைச்சுடுமோ
      ஆரைச் சுடுமோ வறியேனே"

    என்று அவன் பாடினான். பண்டிதர் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தார்; 'எத்தனை அழகான வெண்பா' என்று மகிழ்ந்தார். 'மற்றப் பகுதியும் இப்படியே இவன் வாயிலிருந்து நழுவி வராதா!' என்று ஆவலோடு எதிர்பார்த்தார். அன்று அந்த இரண்டடிக்குமேல் பிச்சைக்காரன் திருவாய் மலரவில்லை.

    அப்பால் இரண்டு மூன்று நாட்கள், அன்னப்பிச்சை கேட்டு வந்த அவனிடம் இந்தக் கவியைப் பிச்சை கேட்டுக்கொண்டே பண்டிதரும் தொடர்ந்து அலைந்தார். ஒரு பயனும் உண்டாகவில்லை. பிச்சைக்காரனும் நாள் முழுவதும் பாட்டை ஞாபகப்படுத்திப் பார்த்தான். தோற்றவில்லை.

    நான்காம் நாள் அவனுக்கு ஞானோதயமானது போலப் பாட்டின் பிற்பகுதி உதயமாயிற்று. அதைக் கேட்ட பண்டிதர் சிறந்த குரு ஒருவரிடம் உபதேசம் பெற்றுப் பிரம்மானந்தத்தை அனுபவித்தவர் போலானார். பல வருஷங்கள் தவஞ்செய்து ஓர் அருமையான பிள்ளையைப் பெற்றால் தந்தைக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகும்! பண்டிதர் அடைந்த ஆனந்தம் அதை விட அதிகமென்றே சொல்ல வேண்டும்.

    பண்டிதர் பிச்சைக்காரனுக்கு 'இனாம்' கொடுத்தார். வேறு சில செய்யுட்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தப் பிச்சைக்காரன் தந்த பிச்சையாகிய பாட்டைத் தனிப்பாடற்றிரட்டிற் சேர்த்துப் பதிப்பித்தார். அது வருமாறு:-

      * "ஊரைச் சுடுமோ வுலகந் தனைச்சுடுமோ
      ஆரைச் சுடுமோ வறியேனே - நேரே
      பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீ ரிந்த
      நெருப்புவட்ட மான நிலா."

    * இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலாவொளியை வெறுத்துக் கூறியது.

    பண்டிதர் பதிப்பித்த தனிப்பாடற் றிரட்டில் உள்ள மற்றப் பாட்டுக்கள் சிலவே அவருடைய ஞாபகத்தில் இருந்தன. அவற்றுள்ளும் இந்தப்பாட்டே அவருடைய மனத்தில் பசுமரத்தாணிபோலப் பதிந்து நிலவியது. - உவேசா



 
On Thursday, July 7, 2016 at 5:07:37 PM UTC-7, ananth wrote:
நன்றி, கணேசன்.
தனிப்பாடற்றிரட்டில் காணும் பாடலில்  தட்டச்சுத் தவஊ ஒன்று உள்ளது: 
ஈசன் பசுவாகி யேமன் ஒரு கன்றாகி
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் அம்மானை
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை
கன்றை *உதைத்த காலி* கறக்குமோ அம்மானை. (30)

இங்கு, ஈற்றடி புலவர் இராமமூர்த்தி தந்தபடி,  “கன்றைஉதை காலி கறக்குமோ அம்மானை!” என்றிருக்க வேண்டும் (வெண்டளை ஒட்டிச் சீர்பிரித்தது).

அனந்த் 


தனியிழையில் மூவரம்மானை நூல் பிடிஎப் பார்ப்போம். அதைத் தட்டெழுதினால் சில பாட வேறுபாடுகள் கிடைக்கலாம்.

நா. கணேசன்
 
On Jul 6, 2016 5:43 AM, "Ramamoorthy Ramachandran" <rawmu...@gmail.com> wrote:

> ஈசன் பசுவாகி ஏமனொரு கன்றாகி 
> வீசுபுகழ் ஆரூரின்  வீதிவந்தார் அம்மானை
>   வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாயின்
>   காசளவு பாலும் கறவாதோ அம்மானை 
> கன்றை உதைகாலி கறக்குமோ அம்மானை! 

எப்போதோ படித்தது. - புலவர் இராமமூர்த்தி

மூவரம்மானை - பழைய பதிப்பு பார்த்தேன். அதில் காணோம். 

ஆனால், தனிப்பாடற்றிரட்டு நூலில் இருக்கிறது.
புலவர் செங்கை பொதுவன் தட்டச்சித் தந்துள்ளார்.


பழைய 86 அம்மானைப் பாடல்கள் வாசிக்கலாம்:

நா. கணேசன்


Vis Gop

unread,
Jul 8, 2016, 1:07:14 AM7/8/16
to santhav...@googlegroups.com
எட்டாநற் கனியிந்த எழிலான அம்மானை!
கிட்டாமற் போகாது கிடைத்துவிடும் அம்மானை!
கிட்டாமற் போகாது கிடைத்துவிடு மேயாகில்
எட்டாநற் கனியென்ற தென்னவிதம்? அம்மானை
எட்டிவிடக் கசப்பாகும் என்பதனால் அம்மானை!    [எட்டி விடமாய்க் கசக்கும்]]

கோபால்.


2016-07-08 6:40 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

N. Ganesan

unread,
Jul 8, 2016, 1:12:43 AM7/8/16
to சந்தவசந்தம்


On Thursday, July 7, 2016 at 10:07:14 PM UTC-7, visgop wrote:
எட்டாநற் கனியிந்த எழிலான அம்மானை!
கிட்டாமற் போகாது கிடைத்துவிடும் அம்மானை!
கிட்டாமற் போகாது கிடைத்துவிடு மேயாகில்
எட்டாநற் கனியென்ற தென்னவிதம்? அம்மானை
எட்டிவிடக் கசப்பாகும் என்பதனால் அம்மானை!    [எட்டி விடமாய்க் கசக்கும்]]

கோபால்.

அருமை :) 

N. Ganesan

unread,
Jul 8, 2016, 1:36:54 AM7/8/16
to சந்தவசந்தம்


On Thursday, July 7, 2016 at 6:52:57 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
உமையவளுக்  குப்பாதி  தந்தமையால் ஒன்றரைக்கண்! 
சமயத்தில் கண்ணப்பன் தனக்கிழந்தான் அதனையுமே!
சமயத்தில் கண்ணப்பன் தனக்கிழந்தான் என்றக்கால் 
இமையாத அரைநுதற்கண் இருக்குமே அம்மானை 
இருப்பதுவும் எரிக்கும்கண்!  என்செய்வான்  அம்மானை! 
 
நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
குறிப்பு:(''ஈசன் பசுவாகி'' எப்போதோ படித்தது! யார் இயற்றியது 
என்பதை அடியேன் அறியேன்!) 


சிவனுக்கு 1.5 கண் என்கிறார் அப்பர்:

இன்றரைக் கண்ணுடை யார்எங்கு மில்லை இமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீர்ஒற்றி யூருறை உத்தமனே

இல்லையில்லை, அவனுக்கு அரைக்கண் என்கிறார் பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை.

முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே- மிக்க
உமையாள் கண்ணொன் றரைமற் றூன்வேடன் கண்ணொன்
றமையு மிதனாலென் றறி.

(இவ்வெண்பாவைக் காளமேகம் பாடல் எனவும் சொல்லுவர். அது பிழை.)

நா. கணேசன் 

Vis Gop

unread,
Jul 8, 2016, 1:37:06 AM7/8/16
to santhav...@googlegroups.com
நன்றி, கணேசன்!
கோபால்.

2016-07-08 10:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Vis Gop

unread,
Jul 8, 2016, 1:46:58 AM7/8/16
to santhav...@googlegroups.com
இருகண்கள் கண்ணப்பன் ஈந்தான்! இருவர்க்கும்
ஒருக்கண்ணில் பாதி உரித்து!
கோபால்.

2016-07-08 11:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Vis Gop

unread,
Jul 8, 2016, 1:49:57 AM7/8/16
to santhav...@googlegroups.com
இருகண்கள் கண்ணப்பன் ஈந்தான்! அவர்கட்(கு) 
ஒருகண்ணில் பாதி உரித்து!
கோபால்.

Vis Gop

unread,
Jul 8, 2016, 6:50:44 AM7/8/16
to santhav...@googlegroups.com
அம்மானை பாடுகிற ஆசையினால் எழுதிஅதை
அம்மையோர் பங்கர்க்கே அளித்திட்டேன் அம்மானை
அம்மையோர் பங்கர்க்கே அளித்திட்டா யாமாகில்
பெம்மானுக் கம்மானை பிடித்ததுவோ? அம்மானை
அம்மானைக் கண்டேனே அவன்கையில் அம்மானை!

கோபால்.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 8, 2016, 9:36:02 AM7/8/16
to santhav...@googlegroups.com
அழகோ அழகு கோபால்!

சிவசூரி.

Ramamoorthy Ramachandran

unread,
Jul 8, 2016, 9:56:38 AM7/8/16
to santhav...@googlegroups.com

நன்றி உ.வே.சா. எழுத்துவன்மை என்னுளத்தை நெகிழச் செய்த்து. பிச்சைக்காரனிடமும் பிச்சை எடுத்துத் தந்த தமிழ். கோபாலின் அம்மானையால் செல்வம் சேர்க்கிறது. கோபால் வாழ்க! -புலவர் இராமமூர்த்தி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 9, 2016, 10:53:39 PM7/9/16
to சந்தவசந்தம்

பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்துள்ளன.  அம்மானைப் பாடல்களின் 4-ஆம் அடியில் வினாவைத் தொடர்ந்து அம்மானை என்ற சொல்லை அமைப்பது வழக்கம் (பாடலில், கேள்வி எழுப்பும் பெண்ணின் பகுதியை இது குறிப்பிடும்.)  6,7,8,10-ல் இச்சொல் இல்லை. இவ்வாறான அமைப்பு இலக்கியத்தில் உள்ளதா என அறியேன்

 

அனந்த்


-- 

Vis Gop

unread,
Jul 12, 2016, 12:59:21 AM7/12/16
to santhav...@googlegroups.com
சில நாட்கள் வெளியூரில் இருந்தபோது வலைக்கு வெளியில் மாட்டிக் கொண்டிருந்தேன். விடுபட்டவுடன் மீண்டும் வலைக்குள் தலைகுனிந்து நுழைகிறேன். என் அம்மானை முயற்சிக்குப் பாராட்டுத் தந்தவர்களுக்கு அன்பு நன்றி.
சில பாடல்களின் 4ஆம் அடியில் அம்மானை இல்லாமல் எழுதுகையில் எனக்கும் சந்தேகம் வந்தது; அது  தோழியின் பேச்சாயிற்றே என்று. நான் என்னுள் ஒரு கற்பனை செய்துகொண்டேன். கேள்வி வந்தவுடன் இடைவெளிவிடாமல் மறித்து இவள் பதிலை வீசுவதாக! அறிஞர்கள் இது தவறென்று கருதினால் மாற்றி எழுகிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

N. Ganesan

unread,
Jul 12, 2016, 10:09:59 PM7/12/16
to சந்தவசந்தம்


On Monday, July 11, 2016 at 9:59:21 PM UTC-7, visgop wrote:
சில நாட்கள் வெளியூரில் இருந்தபோது வலைக்கு வெளியில் மாட்டிக் கொண்டிருந்தேன். விடுபட்டவுடன் மீண்டும் வலைக்குள் தலைகுனிந்து நுழைகிறேன். என் அம்மானை முயற்சிக்குப் பாராட்டுத் தந்தவர்களுக்கு அன்பு நன்றி.
சில பாடல்களின் 4ஆம் அடியில் அம்மானை இல்லாமல் எழுதுகையில் எனக்கும் சந்தேகம் வந்தது; அது  தோழியின் பேச்சாயிற்றே என்று. நான் என்னுள் ஒரு கற்பனை செய்துகொண்டேன். கேள்வி வந்தவுடன் இடைவெளிவிடாமல் மறித்து இவள் பதிலை வீசுவதாக! அறிஞர்கள் இது தவறென்று கருதினால் மாற்றி எழுகிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


86 பழைய அம்மானையும் பாருங்கள், திரு. கோபால். அதுபோல், மாற்றி எழுதித் தாருங்கள்:

நனிநன்றி,
நா. கணேசன்
 
2016-07-10 8:23 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்துள்ளன.  அம்மானைப் பாடல்களின் 4-ஆம் அடியில் வினாவைத் தொடர்ந்து அம்மானை என்ற சொல்லை அமைப்பது வழக்கம் (பாடலில், கேள்வி எழுப்பும் பெண்ணின் பகுதியை இது குறிப்பிடும்.)  6,7,8,10-ல் இச்சொல் இல்லை. இவ்வாறான அமைப்பு இலக்கியத்தில் உள்ளதா என அறியேன்


அப்படிக் காணோம். 

Vis Gop

unread,
Jul 13, 2016, 12:45:25 AM7/13/16
to santhav...@googlegroups.com
86 பழைய அம்மானையும் பாருங்கள், திரு. கோபால். அதுபோல், மாற்றி எழுதித் தாருங்கள்:

நன்றி திரு கணேசன். முயல்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
[திரு என்பது முழுச்சொல். திருவாளர் என்பதன் சுருக்கமாகக் கொண்டு புள்ளிவைக்கப் படுகிறதா?]

2016-07-13 7:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Jul 13, 2016, 12:51:25 AM7/13/16
to Santhavasantham
2016-07-12 21:45 GMT-07:00 Vis Gop <vis...@gmail.com>:
86 பழைய அம்மானையும் பாருங்கள், திரு. கோபால். அதுபோல், மாற்றி எழுதித் தாருங்கள்:

நன்றி திரு கணேசன். முயல்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
[திரு என்பது முழுச்சொல். திருவாளர் என்பதன் சுருக்கமாகக் கொண்டு புள்ளிவைக்கப் படுகிறதா?]

Perhaps. But probably a copying of custom from English: Mr. John, Mr. David, etc., So, Mr. > Tiru. 

2016-07-13 7:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Vis Gop

unread,
Jul 13, 2016, 3:24:05 AM7/13/16
to santhav...@googlegroups.com
probably a copying of custom from English.

The English custom is consistent in supplying a dot after an abbreviation. Thus, even if we copy their custom, a dot after a full word, except as a mark of end of a sentence, is wrong. 'Sri.' is wrong. 'Smt.' is right.
gopal.

N. Ganesan

unread,
Jul 13, 2016, 8:55:12 AM7/13/16
to சந்தவசந்தம்


On Wednesday, July 13, 2016 at 12:24:05 AM UTC-7, visgop wrote:
probably a copying of custom from English.

The English custom is consistent in supplying a dot after an abbreviation. Thus, even if we copy their custom, a dot after a full word, except as a mark of end of a sentence, is wrong. 'Sri.' is wrong. 'Smt.' is right.
gopal.


Thanks. All punctuation marks in Tamil are quite recent.
Reply all
Reply to author
Forward
0 new messages