இக் குறட்பாவின் பொருள் வேண்டும்.
திருக்குறளில் ஏறத்தாழ எல்லா அதிகாரங்களிலும் தேடிவிட்டேன், கிடைக்கவில்லை!
பாடல் முதற்குறிப்பிலும் இல்லை!
இது, திருக்குறள்தானா?
அப்படியென்றல் இது, எந்த அதிகாரத்தில் இருக்கிறது!
மதிப்பிற்குரிய புலவர் பெருமக்கள், விளக்க வேண்டுகிறேன்!
பாரதிப்பித்தன்.
4.2 அசைக்குப் புறனடை |
|
உறுப்பியலில் அசை இலக்கணத்தில் குறில், குறில்ஒற்று, நெடில், நெடில்ஒற்று ஆகிய
நான்கு வகைகளில் வருவது நேரசை என அறிந்தீர்கள். இவற்றுள் தனிக்குறில் சீரின்
முதலிலும், சீரின்நடுவிலும் நேரசை ஆகாது: அதன் அருகில் உள்ள மற்றொரு குறில் அல்லது
நெடிலுடன் சேர்ந்து நிரையசையாகவே வரும் என முன்பே அறிந்திருக்கிறீர்கள். |
|
கசடற - என்பதை கச|டற என இருகுறில் இணைந்த நிரையசையாகவே அலகிட வேண்டும். |
|
தனிக்குறில் சீரின் முதலில் நேரசையாக வரும் இடமும் உண்டு. தமிழில் ஒரு சொல்லில்
அடுத்தடுத்து இரண்டு உயிரெழுத்துகள் சேர்ந்து நிற்பதில்லை. புணர்ச்சியில்
அடுத்தடுத்து உயிர்கள் வந்தால் அவற்றை இணைக்க இடையே உடம்படுமெய் வரும். |
|
அ+அன்> அ+வ்+அன்> அவன் |
|
மணி+ஒளி > மணி+ய்+ஒளி> மணியொளி |
|
இவ்விலக்கணம் நீங்கள் அறிந்ததே. சில இடங்களில் உயிரொலிகள் உடம்படுமெய் இல்லாமல்
அடுத்தடுத்து நிற்க நேர்வது உண்டு. அப்போது அவற்றுக்கிடையே ஒருவிதமான ஒலித்தடை
ஏற்படும். எடுத்துக்காட்டாக, உயிரெழுத்துகளை வரிசையாகச் சொல்லும்போது (அஆஇஈஉஊ
என்பன போல) அவை ஒன்றுடன் ஒன்று இணையாமல் ஒலியால் விலகி நிற்கின்றன. ‘அஆ’ என்பதை
உச்சரித்துப் பாருங்கள். இரண்டு எழுத்துகளுக்கும் இடையே ஏற்படும் ஒலித்தடையை
உணர்வீர்கள். இந்த ஒலித்தடை ‘விட்டிசை’ எனப்படும். |
|
செய்யுளில் சில காரணங்களால் விட்டிசைக்கும் உயிரெழுத்துத் தொடர்ச்சி இடம் பெறும்.
அப்போது சீரின் முதலில் வரும் விட்டிசைத்த உயிர்க்குறில் அல்லது உயிர்மெய்க்குறில்
தனித்து நின்று நேரசையாகி விடும். |
|
(எ-டு) |
|
(நாலடியார்,
செல்வநிலையாமை, 9) |
|
இப்பாடலில் அஆ என்பது ஒருசீர். சீரின் முதலில் வரும் ‘அ' என்னும் உயிர்க் குறில்
அடுத்து வரும் ‘ஆ’ என்னும் உயிரோடு இணையாமல் விட்டிசைப்பது. ஆகவே, முதலில் வரும்
‘அ’ எனும் குறில் தனி நேரசையாகிறது. அ|ஆ > நேர்நேர் > தேமா. |
|
விட்டிசைக்கும் குறில்கள் சீரின் முதலில்
மட்டுமன்றிச் சீரின் இடையிலும் இறுதியிலும் வரும்போதும் தனி நேரசையாகவே
அலகிடப் பெறும். |
|
அஇ உஎ
ஒஇவை குறிய மற்றைய |
|
என்னும் நூற்பா அடியில் அ|இ|உ|எ என விட்டிசைத்த எல்லாக் குறில்களையும் தனித்தனி
நேரசைகளாக அலகிட வேண்டும். ஆக, விட்டிசைத்த எழுத்து சீரின் மூவிடங்களிலும் தனித்து
நேரசையாவதை அறியலாம். |
|
இவ்வாறு குற்றெழுத்துகள் விட்டிசைப்பது எவ்வெப்பொருளில் வரும்? ஐந்து பொருளில்
வரும்.
|
|
i) |
குறிப்பு:
அச்சம், இரக்கம், அருள் போன்ற குறிப்புப் பொருளில்
விட்டிசை வரும். ‘அஆ இழந்தான்’ என்பது ‘அடடா! இழந்து விட்டானே’
என இரக்கப் பொருள் தருவது. |
|||
|
ii) |
ஏவல்: ஒரு செயல் செய்வதற்கு ஏவுதல் பொருளில் விட்டிசை வரலாம். ‘நொஅலையல்’ என்பதில்
(துன்புறுத்தாதே) ஏவல் பொருள் வருவது காண்க. |
|||
|
iii) |
தற்சுட்டு: எழுத்து தன்னையே, அதாவது
அந்த எழுத்தையே குறிப்பது. மேற்காட்டிய ‘அஇஉஎ ஒஇவை’
என்பதில் எழுத்துகள் தம்மையே சுட்டி நின்று விட்டிசைப்பது காண்க. |
|||
|
iv) |
வினா: |
சுட்டிச் சொல்லும் போதும் வினாவும் போதும் விட்டிசை அமையலாம். |
||
|
v) |
சுட்டு: |
|||
|
(எ-டு) |
|
(யாப்பருங்கலக்
காரிகை, உரை மேற்கோள்) |
|
அஅவனும், இஇவனும், உஉவனும் - இவற்றில் அ, இ, உ சுட்டுகள் |
|
எஎவனை - எ வினா. |
|
விட்டிசைத்துத் தனிநேரசையாக வரும் குற்றெழுத்துகள் வேறு
எழுத்துகளுடன் சேர்ந்து நிரையசை ஆக மாட்டா என்பது உங்கள்
கவனத்திற்குரியது. |
|
இனி, விட்டிசையால் தனிக்குறில் நேரசையாவதைக் கூறும் இலக்கண நூற்பாவைக்
காண்போம். |
|
விட்டிசைத் தல்லால் முதற்கண் தனிக்குறில்
நேரசையென் |
|
(யாப்பருங்கலக் காரிகை, 37) |
|
நூற்பாவின் பொருள் |
|
உயிரெழுத்து விட்டிசைத்து வரும்போது தவிர வேறு வகையில் தனிக்குறில் சீரின் முதலில் நேரசை ஆகாது. |
இது, திருக்குறள்தானா?
அப்படியென்றல் இது, எந்த அதிகாரத்தில் இருக்கிறது!
குறள் வெண்பாவின் இலக்கணமும் இந்த இரண்டடிகளிலும் இல்லை.
முகநூல் நண்பர்களுக்கு யாப்பிலக்கணத்தை எளிமையாக விளக்கப் போய், வந்த சிக்கல் இது!
கற்றது கைமண் அளவு என்பது, இதில் கண்கூடானது!
யாப்பருங்கலக்காரிகையின் தொடைக்கு புறனடை கூறும் 56ம் பாடலில், "நிரக்கு
மெதுகை" என்ற சொல்லாட்சிக்கு, விட்டிசை வல்லொற்றெதுகை என்றும் விட்டிசை
மோனை என்றும் உரைகூறி, விட்டிசை மோனைக்கு மேற்கோளாய் வருகிறது இப்பாடல்!
நானறிந்த வரை, குறட்பாக்கள் அனைத்தும் திருக்குறள் சார்ந்ததே என்று,
ஏறத்தாழ எல்லா பக்கங்களையும் பார்த்துவிட்டேன்!
கிடைக்கவில்லை!
ஆகையால், புலவர் பெருமக்கள் அறிந்திருக்கக் கூடுமென இங்கே வந்தேன்!
நன்றி.
பாரதிப்பித்தன்.
> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.
> இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
>
>
என் அறிவிற்கு எட்டியவரை, தன்னிலை முன்னிலை படர்க்கை சுட்டுகளை கொண்டு,
ஒற்றுமையை வலியுறுத்தி, அத்தகையனை எவரும் வெல்ல முடியாது என்கிறதோவென
நினைக்கிறேன்!
சரியோ? தவறோ?!!
சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளை உரையில், பழைய நூல்களிலிருந்து உதாரணம் காட்டும்போது பாரத வெண்பா, அசதிக் கோவை, சீவகசிந்தாமணி இடைக்காடர் பாடல் என்று சுட்டியே காட்டுகிறார். திருக்குறளிலிருந்து எடுத்தாளும் போதும் தெளிவாகத் 'திருக்குறள்' என்றே குறிப்பிட்டு எழுதுகிறார்.
முதற்கண் நின்ற குற்றெழுத்து விட்டிசையாவழி, பின்னின்ற குறிலுடனாவது நெடிலுடனாவது சேர்ந்து நிரையசையாகும் என்பதற்கு உதாரணமாக,
'அமருந்து தானை யதிகர்தங் கோவே
துமருந்து தூயனவே கொண்டு'.
என்கிற பாடலைக்காட்டும்போதும் மற்றும் வேறு சில இடங்களிலும் குறட் பாக்களைக் காட்டும்போது குறள் என்றோ, திருக்குறள் என்றோ குறிக்கவில்லை. அத்தகைய பாக்கள் உரையாசிரியர் உதாரணங்காட்டுவதற்குத் தாமே எழுதியவையாக இருக்கலாம்.
---
Sent via Epic Browser