எங்கும் கவிதை!

4 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 12, 2025, 8:05:52 AM (2 days ago) Oct 12
to santhav...@googlegroups.com
.              எங்கும் கவிதை!

மலையின் நிழலில் நனைந்தேன்- அதில்
    மயங்கிக் கவிதை புனைந்தேன்
அலையின் ஒலியில் களித்தேன் - அந்த
    அழகில் கவிதை அளித்தேன்
தலையை அசைக்கும் தென்னை -மனம்
    சாற்றும் கவிதை தன்னை
கலையை எங்கும் கண்டேன்- உடன்
     கவிதை நூறு விண்டேன்!

                            —தில்லைவேந்தன்.
..
Reply all
Reply to author
Forward
0 new messages