வணக்கம்,
ஒரு மிகப்பெரிய Project - க்காக பாரதி, தமிழில் புகுத்திய புதுமைகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களைத் திரட்டி வருகிறேன்.
கதை, கவிதை, கட்டுரை என மூன்று தளங்களில் நான் இதுவரை திரட்டிய தகவல்களை இங்கே பதிவிடுகிறேன்.
குழுமச் சான்றோர், தவறுகளைச் சுட்டிக்காட்டியும் நான் ஏதேனும் தகவல்களை விட்டிருந்தால் அதை தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
நிரஞ்சன் பாரதி
******************************************
கதை :
துளஸி பாயி என்ற ரஜ புத்திர கன்னிகையின் கதை - தமிழின் முதல் நெடுங்கதை / சிறுகதை
கவிதை:
* அரசர் அவைகளில் இருந்த தமிழை முதல் முறையாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் ( எல்லாத் துறைகளிலும்) - நவீனத்தமிழின் முன்னோடி
* தமிழில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடலை மொழி பெயர்த்தவர் ( இருமுறை)
* தமிழர்க்கு முதன்முறையாக 'பாரதமாதா' என்னும் கருத்தை அறிமுகம் செய்தவர்
* தமிழில் பாரத மாதா மீது முதன்முதலில் திருப்பள்ளியெழுச்சி பாடியவர்
* தமிழில் முதன்முறையாக தேசியக்கொடி வடிவமைப்பு பற்றிய பாடலை எழுதியவர் ( தாயின் மணிக்கொடி பாரீர்)
* தமிழின் குழந்தை இலக்கியத்துக்கு முன்னோடி - 'ஓடி விளையாடு பாப்பா '
* தமிழில் இயேசுபிரானைப் பற்றி முதலில் பாடிய கிறிஸ்துவர் அல்லாத முதல் கவிஞர்
*தமிழில் அல்லாஹ்வைப் பற்றி முதலில் பாடிய இஸ்லாமியர் அல்லாத முதல் கவிஞர்
* புரட்சி, பொதுவுடைமை, வினைச்சி போன்ற புதிய சொற்களைத் தமிழுக்குத் தந்தவர்
* தமிழில் புதுக்கவிதைக்கு முன்னோடி
* தமிழ் கிராமிய இசை வடிவங்களில் ஒன்றான சிந்துக்கு மிகப்பெரிய இலக்கிய அந்தஸ்தை அளித்தவர்
* ரஷ்ய புரட்சியைப் பற்றி முதன்முதலில் எழுதிய தமிழ்க்கவி
* ரஷ்யா, பெல்ஜியம், இத்தாலி, ஃபிஜி என வெளிநாடுகளைப் பற்றி முதன்முதலில் எழுதிய தமிழ்க்கவி
* குயில் பாட்டு - தமிழின் முதல் Musical Man - Bird Love Story written in a poetry format ?
* தமிழில் sonnet வடிவத்தை அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் - 'தனிமை இரக்கம் ' ?
* தமிழ் பக்தி இலக்கியத்தில் முதன்முறையாக கண்ணனைக் காதலியாக பாவித்து பாடல் இயற்றியவர்
* சகோதரி நிவேதிதையைப் பற்றி முதன்முதலில் தமிழில் கவிதை எழுதியவர்
* புதிய தலைப்பு / கருப்பொருள்களில் தமிழில் முதன்முறை பாடல்கள் தந்தவர் ( சாதாரண வருஷத்து தூமகேது)
* தேசியத் தலைவர்கள் மற்றும் ஆளுமைகளைப் பற்றி தமிழில் பாடிய முதல் கவிஞர் ( திலகர், தாதாபாய் நவுரோஜி, சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த் சிங், காந்தி, லாலா லஜபத் ராய், வ.உ.சி , அபேதானந்தர், பூபேந்திரர்) ?
* தமிழின் முதல் சர்வ மத நல்லிணக்க கடவுள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் ( புதிய ஆத்திசூடி)
* தமிழில் உ.வே.சா, ரவி வர்மா ஆகியோர் மீது முதன்முதலில் வாழ்த்துப்பா இயற்றியவர்?
* தமிழில் முதன்முறை காயத்ரி மந்திரத்தை மொழி பெயர்த்தவர் ?
* தமிழில் முதன்முறை வேதம், உபநிடதங்களை மொழி பெயர்த்தவர்?
* பகவத் கீதைக்குத் தமிழில் உரை எழுதிய முதல் தமிழ்க் கவிஞர்
* தன் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்ட உலகின் முதல் கவிஞர்
* புதுச்சேரி உப்பளத்தில் உள்ள தேசமுத்துமாரியம்மன் கோவில் தெய்வத்தின் மீது முதன்முதலில் தமிழில் பாடியவர்
* மனைவியின் மீது பாடல் இயற்றிய முதல் தமிழ்க்கவி?
* மனைவியின் பெயரில் தனது பாடல்களைப் பிரசுரம் செய்த முதல் தமிழ்க் கவிஞர் ?
*
கட்டுரை/ உரைநடை:
* சேர்த்து சேர்த்து பெருஞ்சொற்களை உருவாக்கி நீண்ட நெடிய வாக்கியங்கள் எழுதும் உரைநடை பாணியை மாற்றியவர். பிரித்து பிரித்து எழுதி, சின்ன சின்ன வாக்கியங்கள் உருவாக்கி புது உரைநடை பாணிக்கு வித்திட்டவர்
* தமிழில் முதலில் இசைக்கச்சேரி விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்?
* தமிழ் இதழியலில் கருத்துச் சித்திரங்களை அறிமுகம் செய்தவர்
* தமிழ் இதழியலில் பத்தி எழுத்துகளை அறிமுகம் செய்தவர் ( Columns)
* கச்சேரி மேடைகளில் தமிழிசைப் பாடல்கள் பாட வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தவர்
* The occult elements of Tamil speech என்ற அரிய கட்டுரையை எழுதியவர்