அருள்மிகு சாமுண்டேஸ்வரி துதி

4 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 24, 2025, 1:20:00 PM (yesterday) Nov 24
to santhavasantham
அருள்மிகு சாமுண்டேஸ்வரி துதி
(கலிவிருத்தம்)

ஏரொன்றும் ஊரென்று பாரன்பின் கூறுந்தொல் 
சீரொன்று மைசூரு சேரன்னை சாமுண்டி!
கூரொன்று சூலத்தாய்! தார்மன்னு கோலத்தாய்!  
சார்வென்று வாழ்வேற்குத் தாயுன்தாள் தாராயே.

சொற்பொருள்:
ஏர் ஒன்றும் = அழகு மிகுந்த;
பார் அன்பின் கூறும் = உலகம் அன்புடன் புகழும்; 
தொல் சீர் ஒன்று = பழம்பெருமை வாய்ந்த; 
சேர் அன்னை = எழுந்தருளியிருக்கும் அன்னை; 
கூர் ஒன்றும் = கூர்மை மிகுந்த; 
தார் மன்னும் = மலர்மாலை என்றும் விளங்கும்; 
வாழ்வேற்கு = வாழும் எனக்கு;
தாய் உன் தாள் = தாயே உனது திருவடிகளை

கருத்து:
அழகு மிகுந்த ஊர் என்று உலகம் புகழும் சிறப்பு மிக்க மைசூரு நகரில் எழுந்தருளியிருக்கும் சாமுண்டி தாயே! கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவளே; மலர்மாலை அணிந்த திருக்கோலத்தைக் கொண்டவளே; நீயே துணை என்று வாழும் எனக்கு உனது அன்பை அருள்வாயாக!

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Nov 24, 2025, 9:33:51 PM (22 hours ago) Nov 24
to santhav...@googlegroups.com
மிக அழகான துதி.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மைசூரில் சாமுண்டேசுவரியைத் தரிசிக்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 24 Nov 2025, at 11:50 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/379AECD2-CF7F-4E10-B86F-53D33CB5CDD9%40gmail.com.

Arasi Palaniappan

unread,
Nov 24, 2025, 9:35:03 PM (22 hours ago) Nov 24
to சந்தவசந்தம்
அழகான துதி!

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 24, 2025, 10:25:00 PM (21 hours ago) Nov 24
to santhav...@googlegroups.com
அழகிய தொடக்கம். 

அனந்த்

>கூரொன்று சூலத்தாய்; உரையில், கூர் ஒன்று*ம் = கூர்மை மிகுந்த--> *ம் ஒற்று மிகை


NATARAJAN RAMASESHAN

unread,
Nov 24, 2025, 11:24:15 PM (20 hours ago) Nov 24
to santhav...@googlegroups.com
அருமையான பாடல் திரு இமயவரம்பன் 

             —தில்லைவேந்தன்


முன்பு நான் எழுதிய பாடல் :

. சாமுண்டியின் தயைபெறுவோம்!


பாமண்டு புலவோர்நா பதிகங்கள் பலபாடும்

பூமண்டு நறைகண்டு பொறிவண்டு பண்பாடும்

காமண்டு மைசூரில் கவின்மலைமேல் வீற்றிருக்கும்

சாமுண்டித் தாயவளின் தாளண்டித் தயைபெறுவோம்!


—தில்லைவேந்தன்  


Siva Siva

unread,
Nov 24, 2025, 11:27:29 PM (20 hours ago) Nov 24
to santhav...@googlegroups.com
Nice.
All thEmAngAy seers!

V. Subramanian

இமயவரம்பன்

unread,
4:20 AM (15 hours ago) 4:20 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம் .

இந்த வருடம் பிப்ரவரியில் மைசூரு சென்று சாமுண்டேஸ்வரியைச் சேவிக்கும் பேறு அடியேனுக்கும் வாய்த்தது.

இமயவரம்பன்

unread,
4:21 AM (15 hours ago) 4:21 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.

இமயவரம்பன்

unread,
4:22 AM (15 hours ago) 4:22 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. அனந்த்.

உரையில் திருத்தத்தை அன்புடன் சுட்டிக் காட்டியதற்கும் மிக்க நன்றி.

இமயவரம்பன்

unread,
4:33 AM (15 hours ago) 4:33 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you.

I wanted most of the seers to echo the sound of சாமுண்டி. In fact, I initially began composing it as a வண்ணவிருத்தம், but eventually settled on கலிவிருத்தம் with தேமாங்காய்.

> On Nov 24, 2025, at 11:27 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> Nice.
> All thEmAngAy seers!

இமயவரம்பன்

unread,
4:38 AM (15 hours ago) 4:38 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. தில்லைவேந்தன்.

எதுகையும் இயைபும் செழிக்கும் தங்கள் பாடல் மிகச் சிறப்பு. 
Reply all
Reply to author
Forward
0 new messages