Fwd: பிரதோஷப் பாடல்

14 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 1, 2025, 11:03:55 PM11/1/25
to சந்தவசந்தம்

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

        <> ஈயாயோ? <>

Neelakantan- 1.jpg

உடலில் ஒருகூ(று) உமையன்னை

.. உறையக் கொடுத்தாய்; உம்பருய்யக்

கடலில் எழுந்த விடம்தங்கக்

.. கண்டம் கொடுத்தாய்; விரிசடையை

அடலார் புனலுக்(கு) அன்(று)அளித்தாய்

அரனே! எனக்குன் திருவடிக்கீழ்

இடந்தந் தாலென் சிரமதன்மேல்

.. இட்டுய் வேன்நான், ஈயாயோ?

                    ... அனந்த்1/2-11-2025

------------------------------------

Friday, October 17, 2025

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                திருச்சிற்றம்பலம்

                    <> தாள் வீழ்வோம்<>


                


மன்றில் நடமாடும் மன்னன் மனங்கனிந்து


இன்றுவரை நம்மையெலாம் இவ்வுலகில் - நன்றாக


வாழ்வித் தவன்பேர் மறவாமல் வைத்துள்ளான்

தாழ்ந்தவன்தாள் வீழ்வோம் தினம்.



.........           அனந்த் 18-10-2025

Saranya Gurumurthy

unread,
Nov 2, 2025, 1:12:09 AM11/2/25
to சந்தவசந்தம்
நல்ல வேண்டுகோள். மிக அருமை.

நமச்சிவாய.

Regards,
Saranya

On Sun, Nov 2, 2025, 08:33 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

        <> ஈயாயோ? <>


Kaviyogi Vedham

unread,
Nov 2, 2025, 11:16:23 AM11/2/25
to santhav...@googlegroups.com
தூள்  கிளப்பி விட்டீர்  அநந்த்..,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1g%3DS6qSr1n%2BUfG1Ok1Zo9hV14tXi3j0gsDfMWMx-5RBw%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 2, 2025, 12:00:19 PM11/2/25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, வேதம்.

அனந்த்

On Sun, Nov 2, 2025 at 11:16 AM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
தூள்  கிளப்பி விட்டீர்  அநந்த்..,
 யோகியார்

On Sat, Nov 1, 2025 at 11:03 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

        <> ஈயாயோ? <>


GOPAL Vis

unread,
Nov 2, 2025, 8:27:53 PM11/2/25
to santhav...@googlegroups.com
அருமை!

தாளடித் தூளில் தலைபட முன்வினைக்
கூளம் கொழுந்தெரிக் குள்!

கோபால்.

On Sun, Nov 2, 2025 at 8:33 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

        <> ஈயாயோ? <>

உடலில் ஒருகூ(று) உமையன்னை

Ram Ramakrishnan

unread,
Nov 2, 2025, 9:44:43 PM11/2/25
to santhav...@googlegroups.com
மிக அருமயான வேண்டல், அனந்த ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 2, 2025, at 21:46, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:


தூள்  கிளப்பி விட்டீர்  அநந்த்..,
 யோகியார்

On Sat, Nov 1, 2025 at 11:03 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

        <> ஈயாயோ? <>

<Neelakantan- 1.jpg>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 1, 2025, 10:14:35 PM12/1/25
to சந்தவசந்தம்
இன்று பிரதோஷ நன்னாள்.
                                                     
                     திருச்சிற்றம்பலம் 

                        <> அவன் நோக்கம் <>

               Karaikkaal Ammaiyaar.jpeg

என்பொடு தோலுமணி ஈசன்தன் தாள்சார்ந்த

அன்பே வடிவான அம்மையர்க்கு – என்பொடு

தோலுமுற்ற தோற்றம் அளித்தவளைப் பாடவைத்தான்

கோலமிகு அந்தாதிக்* கொத்து.

(*அற்புதத் திருவந்தாதி)



----------------------------------------------
On Sun, Nov 16, 2025 at 10:12 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                                            திருச்சிற்றம்பலம்

                                       <>விரும்ப வைத்தான் <>


                                       


        கரும்பென என்முனம் காட்சிதந் தான்தனைக் காணவென்னை

        விரும்பவைத் தான்பினர் வேண்டிய தந்துநான் மீண்டுமவன்

        அரும்பதம் தூக்கியவ் வம்பலத் தில்நடம் ஆடுவதைத்

        திரும்பவும் கண்டிடத் தாகம் வளர்த்தனன் தில்லைமன்னே.


                                              .... அனந்த் 16/17-11-2025
 

GOPAL Vis

unread,
Dec 1, 2025, 10:36:17 PM12/1/25
to santhav...@googlegroups.com
அருமை.
என்பும் தோலும் இருவர்க்கும் பொருந்தியது அழகு.
கோபால்.

On Tue, Dec 2, 2025 at 8:44 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்.
                                                     
                     திருச்சிற்றம்பலம் 

                        <> அவன் நோக்கம் <>

Siva Siva

unread,
Dec 1, 2025, 10:36:53 PM12/1/25
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

On Mon, Dec 1, 2025 at 10:14 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்.
                                                     
                     திருச்சிற்றம்பலம் 

                        <> அவன் நோக்கம் <>

               

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 1, 2025, 10:49:05 PM12/1/25
to santhav...@googlegroups.com
நன்றி கோபால்.

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 1, 2025, 10:49:35 PM12/1/25
to santhav...@googlegroups.com
நன்றி சிவசிவா

Nice.

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 1, 2025, 11:26:24 PM12/1/25
to santhav...@googlegroups.com
அருமை திரு அனந்த்

     —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Dec 2, 2025, 12:32:28 AM12/2/25
to சந்தவசந்தம்
அற்புதம்!

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 2, 2025, 1:39:49 PM12/2/25
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா
அனந்த் 

On Mon, Dec 1, 2025 at 11:26 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
அருமை திரு அனந்த்

     —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Dec 2, 2025, 2:54:52 PM12/2/25
to santhav...@googlegroups.com
Superb, Ananth.

Sankaran



--
 Swaminathan Sankaran

Saranya Gurumurthy

unread,
Dec 2, 2025, 6:40:44 PM12/2/25
to சந்தவசந்தம்
ஆஹா அருமை அனந்த் ஸார்.

என்பொடு தோலணி ஈசனைப் பாடுவதே 
என்பணி என்பார் இவர்!!

சரண்யா 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 2, 2025, 10:50:08 PM12/2/25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி சரண்யா. உங்கள் பின்னூட்ட இருவரிக் கவிதையை இரசித்தேன்.

அனந்த் 

--

GOPAL Vis

unread,
Dec 16, 2025, 8:25:41 PM12/16/25
to santhav...@googlegroups.com
பேரா திரு அனந்த் அவர்களின் இன்றைய பிரதோஷப் பாடல்.
[இங்கே இடும்படி என்னைப் பணித்தார்]


இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<>பூசை ஏற்பான்<>

அப்பிலே மூழ்கடித்(து) ஆங்கதன்பின் பல்வகையாய்
ஒப்பனை செய்(து)உவகை உற்றிடுங்கால் - தப்பியவன்
ஓசைசெயா தோடிச் சுடுகாட்டில் ஆடிப்பின்
பூசையை ஏற்பான் புகழ்ந்து.

-----

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 31, 2025, 12:32:19 PM12/31/25
to VETTAI ANANTHANARAYANAN

 இன்று பிரதோஷ நன்னாள்.


                <> என் கதி <>

 

       
          Rolling waves.jpg

எண்ணச் சுழலால் இழுக்கப்பட்(டு) 
.. இங்கும்அங்கும் அலைப்புற்றுப்

புண்ணா னேன்நான்  புவியிதனில்…
.. புண்ணியர் போற்றிப் புகழுமுன்னை

நண்ணா திருந்து வாழ்நாளை
.. நாசம் செய்த துணர்ந்தின்றென்

கண்ணா ளாஉன் கழலிணையே
.. கதியென் றடைந்தேன் காப்பாயே.                         

           … அனந்த் 2-1-2026

On Wed, Dec 17, 2025 at 10:05 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<>பூசை ஏற்பான்<>


25-5-2014 PrdOsham- Sivan alankaram.jpg


அப்பிலே மூழ்கடித்(து) ஆங்கதன்பின் பல்வகையாய்

ஒப்பனை செய்(து)உவகை உற்றிடுங்கால் - தப்பியவன்

ஓசைசெயா தோடிச் சுடுகாட்டில் ஆடிப்பின்

பூசையை ஏற்பான் புகழ்ந்து.

அனந்த் 17-12-2025
-----

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 15, 2026, 9:26:58 PMJan 15
to சந்தவசந்தம்

<> ஈர்த்திடுவாய் <>

 

chidambaram_ceilingpainting_01.jpg



பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்
…..
பாவியேன் அறிந்திலேனே

நீர்க்குமிழி அன்னவிவ் வாழ்க்கையை முற்றிலும்
நிலையென நிற்குமேழைக்(கு)

 

ஆர்த்திடுபொற் சிலம்பொடு ஐயநீ தில்லையில்
ஆடிடும் அழகுகாட்டி

ஈர்த்தெனைஆட் கொண்டிட ஈதுநற் றருணமாய்
எண்ணிநீ காத்திடாயோ.


..அனந்த் 15-1-2026

Kaviyogi Vedham

unread,
Jan 15, 2026, 9:28:15 PMJan 15
to santhav...@googlegroups.com
arumai saar
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Jan 16, 2026, 3:45:54 AMJan 16
to santhav...@googlegroups.com
அருமை!

எண்ணியார்க் கெண்ணிலா தீபவ னீதுமே
தண்ணன் தருந்தருணந் தான்!

கோபால்.

Sathiya Narayanan

unread,
Jan 18, 2026, 10:23:13 AMJan 18
to santhav...@googlegroups.com
கெஞ்சலுடன் கொஞ்சுமொழியில் சிவனாடலின் அழகைக் காட்டிக் காக்கக் கோரும் தங்கள் பா நெஞ்சைத் தொடுகிறது. 


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of GOPAL Vis <vis.go...@gmail.com>
Sent: Friday, January 16, 2026 12:45:37 AM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: பிரதோஷப் பாடல்
 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 29, 2026, 9:53:40 PMJan 29
to சந்தவசந்தம்
இன்று பிரதோஷ நன்னாள்.

       <> ஆற்றல் அளிப்பாய் <>


             திருச்சிற்றம்பலம்

 


AruNachalam.jpg


வலிவந்த வேளையென் வாழ்க்கையின் நோக்கம்

 

வலுவிழக்க வொட்டாது நெஞ்சத்தவிப்பிதுதான்

 

ஆர்க்காம் எனவினவும் ஆற்றலை என்னுள்ளே

 

வார்க்காயோ அண்ணா மலை.

 

               ….அனந்த் 30-1-2026


---------------------------------------------

GOPAL Vis

unread,
Jan 29, 2026, 11:38:35 PMJan 29
to santhav...@googlegroups.com
தவிப்பதுதான் - இன எதுகையோ?

மலையண்ணல் தன்னை மனத்தால் நினைத்தும்
தொலையா வலியேது சொல்!
கோபால். 

On Fri, Jan 30, 2026 at 8:23 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்.

       <> ஆற்றல் அளிப்பாய் <>


             திருச்சிற்றம்பலம்

 



வலிவந்த வேளையென் வாழ்க்கையின் நோக்கம்

வலுவிழக்க வொட்டாது நெஞ்சத்தவிப்பிதுதான்

ஆர்க்காம் எனவினவும் ஆற்றலை என்னுள்ளே

வார்க்காயோ அண்ணா மலை.

 

               ….அனந்த் 30-1-2026


---------------------------------------------

On Thu, Jan 15, 2026 at 9:26 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

<> ஈர்த்திடுவாய் <>

பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்

….. பாவியேன் அறிந்திலேனே

Siva Siva

unread,
Jan 30, 2026, 7:46:50 AMJan 30
to சந்தவசந்தம்
Nice.

Line-2 - no mOnai?

வார்க்காயோ /

தீர்தல் / தீர்த்தல் = தீராய்
பார்த்தல் = பாராய்
காத்தல் = காவாய்

இவ்வாறே, வார்த்தல் - "வாராய்".

வி. சுப்பிரமணியன்


On Thu, Jan 29, 2026 at 9:53 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்.

       <> ஆற்றல் அளிப்பாய் <>


             திருச்சிற்றம்பலம்

 



VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 13, 2026, 9:39:45 PMFeb 13
to சந்தவசந்தம்
இன்று மகாசிவராத்திரிக்கு முந்திய சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                  திருச்சிற்றம்பலம் 

                  <> காரணம் அறிந்தேன் <>


   

வாய்பாடு:

தேமா மா காய்  தேமா மா காய்

….. மா  மா   காய்  மா மா காய்

தேமா மா காய்  தேமா மா காய்

….. மா  மா   காய்  மா மா காய்)
            

தாதை எனநீ ஆடுங்கால்  தம்மை மறந்துன் மெய்யடியார்

…..தரையில் விழுந்துமன(ம்)நெகிழ்ந்துசம்போ! எனவாய் அரற்றிநிற்பார்

……..ஏதோ இதற்குக் காரணம்என்(று) எண்ணிப் பார்த்தேன்பலகாலம்

….……ஏங்கி நின்றும் தவம்கிடந்தும் எங்கெல் லாமோ தேடியதம்

 

தாதை தம்கண் முன்னேஓர் தங்கம் வேய்ந்த கூரையின்கீழ்,

…. சல்சல் என்று சதங்கையொலி  தாளம் கூட்ட அருகினிலே

…….கோதை உமைகை தட்டஉன்றன் கூத்தின் அழகைப் பார்த்தாங்குக்

………..கூடி இருக்கும் இருடிகள்கை கூப்பித் தொழும்அக் காட்சியில்தம்

 

வாதை  யாவும் நிரந்தரமாய் மடியக் கண்டுஇங்(கு) இனிப்பிறவி

….வாரா தென்னும் வகையினில்நீ வலக்க ரத்தை மேல்தூக்கி

……வரமும் அளிக்கும் மகிழ்ச்சியிலே வந்த உணர்வின் விளைவேஇம்

……….மாந்தர் செயல்கள் எனஅறிந்தே மகிழ்ந்தேன் அதனைத் தொடர்ந்திந்தப்

 

பேதை யேன்ஓர் அறிவில்லாப் பிச்சன் உன்றன் பேர்சொல்லிப்

….பிறரை நானுன் அடியனெனும் பிரமை கொள்ள வைப்பவனின்

……பிழைகள் யாவும் பொறுத்தென்மேல் பிரியம் காட்டி எனக்குமுன்றன்

…….பேரெ ழில்சேர் நாட்டியத்தின் பெருமை விளக்கி அருளாயோ?  

 

(குறிப்பு: இது ஜனவரி 2016-ல் இடப்பட்ட பாடலைச் சற்றே திருத்தி அமைப்பட்ட வடிவம்; தாதை – நடன ஒலிக்குறிப்பு; தந்தை; வாதை = துன்பம்பிச்சன் = மருண்டவன்)

                                                                                 ... அனந்த் 14-2-2026

Siva Siva

unread,
Feb 13, 2026, 9:50:51 PMFeb 13
to santhav...@googlegroups.com
Nice.

24 சீர் விருத்தம்!

வி, சுப்பிரமணியன்

On Fri, Feb 13, 2026 at 9:39 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று மகாசிவராத்திரிக்கு முந்திய சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                  திருச்சிற்றம்பலம் 

                  <> காரணம் அறிந்தேன் <>


   

வாய்பாடு:

GOPAL Vis

unread,
Feb 13, 2026, 10:24:40 PMFeb 13
to santhav...@googlegroups.com
அற்புதம் ..

மாகாய் பலவுமோர் மாவின் பழமாகிப் 
பாகாய் இனித்திடும் பா!

கோபால் 

On Sat, Feb 14, 2026 at 8:09 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று மகாசிவராத்திரிக்கு முந்திய சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                  திருச்சிற்றம்பலம் 

                  <> காரணம் அறிந்தேன் <>

   

வாய்பாடு:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 13, 2026, 11:16:58 PMFeb 13
to santhav...@googlegroups.com
என் பாடலுக்குப் பின்னூட்டம் தந்த அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 15, 2026, 10:43:13 PMFeb 15
to சந்தவசந்தம், rathnamaalai

 

இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

        

          Sri Nataraja - 2020.jpg

இராவண்ணம் கொண்டொழுகு(ம்) ஈஞ் ஞான(ம்)

ராவண்ண(ம்) ஆக்கு(ம்) இரவியா(ம்) – அராவணிந்(து)

அம்பலத்தே ஆடு(ம்)என் ஐயன் சிதம்பரத்தான்

செம்பதம் சிந்தும் ஒளி.

        ..அனந்த் 15-2-2026

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 15, 2026, 10:56:00 PMFeb 15
to சந்தவசந்தம், rathnamaalai

 

இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

     

 

இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.

            திருச்சிற்றம்பலம்

          <> பாத ஒளி <>

Sri Nataraja - 2020.jpg


இராவண்ணம் கொண்டொழுகு(ம்) ஈஞ் ஞான(ம்)*

ராவண்ண(ம்) ஆக்கு(ம்) இரவி – அராவணிந்(து)

அம்பலத்தே ஆடு(ம்)என் ஐயன் சிதம்பரத்தான்

செம்பதம் சிந்தும் ஒளி.

(* இது நம் உள்ளத்தில் எப்போதும் இலங்கும் மெய்யறிவின் ஒளியைக் குறிப்பது.)

        ..அனந்த் 15-2-2026


GOPAL Vis

unread,
Feb 15, 2026, 11:50:29 PMFeb 15
to santhav...@googlegroups.com
பராபரனை எட்டாப் பரசிவனை யேத்திப்
பராவிய பாங்கரும் பாகு!
கோபால்!

On Mon, Feb 16, 2026 at 9:26 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

 

இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

     

இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.

            திருச்சிற்றம்பலம்

          <> பாத ஒளி <>

இராவண்ணம் கொண்டொழுகு(ம்) ஈஞ் ஞான(ம்)*

Reply all
Reply to author
Forward
0 new messages