--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
For more options, visit https://groups.google.com/d/optout.
<புவனாவின் குமரேசன் வாழ்க.pdf>
--
கல்விக் கடல்மூழ்கிக் காதலில் ஒன்றிணைந்த
இல்லறம் ஈசனருள் நல்லறம் -- தொல்லுலகில்
நம்பன் அருளால் புவனா குமரேசன்
தம்பதி வாழ்க தழைத்து.
பசுபதி
16-1-2019
திருமண நல்வாழ்த்து!======================
திருமண வாழ்த்து
நாள்: 15-2-2019
மணமகன்: திருவளர் செல்வன்: ச. குமரேசன்
மணமகள்: திருவளர் செல்வி: கோ. புவனா
கற்பனைச் சிறகு கட்டிக்
காற்றெலாம் துழவி, கண்ட
அற்புதம் எல்லாம் கூட்டி
அமைந்ததோர் கனவில் வாழ்வின்
நற்றுணை வடிவம் தோன்ற
நாளெலாம் கண்ட காட்சி
முற்றிலும் நனவாய் மாற
மூண்டது இல்ல றம்தான்
இல்லறம் தானே வாழ்வில்
என்றுமே சிறந்த தென்பார்
நல்லறம் அதனுள் இந்த
நாளினில் நுழையும் நீங்கள்
வல்லவ ராக என்றும்
மகிழ்வுடன் வாழ்க வாழ்க
வெல்லுவ தொன்றே உங்கள்
வேட்கையாய்ச் சிறந்து வாழ்க!
தானெனும் நிலைமை மாற்றித்
தாமெனக் கூட்டும் வாழ்க்கை
வானமாய் உயர்ந்த அன்பு
மாறிடா நேசம் பாசம்
கானமாய்க் குழையும் மென்மை
கனிந்திடும் வாழ்க்கை, அந்த
ஞானமார் இனிய வாழ்வில்
நன்றெனப் புகுந்தீர் வாழ்க!
ஒன்றையே நினைந்து, நேர்ந்த
ஒன்றிலே உறுதி காட்டி
ஒன்றியே சென்று வாழ்வின்
உன்னதம் எல்லாம் கூட்டி
நன்றென எவரும் போற்ற
நாளெலாம் வாழ்க, என்றும்
வென்றிடும் வண்ணம் மிக்க
மேன்மையாய் வாழ்க, வாழ்க!
புவனா குமரேசன் போலுண்டா என்றே
எவரும் புகழ்ந்திட இங்கே- உவகையுடன்
என்றென்றும் நல்வளங்கள் எய்தியே வாழ்ந்திடுக
நன்றே பெறுக , நலம்.
அன்புடன்,
இலந்தை சு இராமசாமி--
தெய்வத்தின் நல்லருளால் தேனான வாழ்வுக்குக்கைபற்றும் காதலர்காள் காலகாலம் மெய்பற்றிப்பூவாய் மணமாய் புவனா குமரேசப்பாவாய்ப் பொலிவரே பார்.
<> புவனா-குமரேசன் திருமண வாழ்த்து வெண்பா <>
அன்பாம் அணிபூண்(டு) அகிலத்தை ஆள்வதற்கோர்
இன்பத் துவக்கமாம் இல்லறத்தை – இன்றுமுதல்
நம்பிகும ரேசனுடன் நங்கைபுவ னாபயில
எம்பெருமான் ஈவான் அருள்.
… அனந்த் (அனந்தநாராயணன்)
<> புவனா-குமரேசன் திருமண வாழ்த்து வெண்பா <>
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
For more options, visit https://groups.google.com/d/optout.
சந்த வசந்தக் கவிஞர்களே!வணக்கம். என் மகள் திருமணம் சென்னிமலை சென்னியாண்டவர் கோவிலில் 15.2.2019 அன்று சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இரு தரப்புப் பெற்றோரின் ஆசியுடன் நடக்கும் காதல் மணம்!அழைப்பிதழை இணைத்துள்ளேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு வாழ்த்துப் பாவை யாத்து 31.1.2019 தேதிக்கு முன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்புக. அவற்றைத் தொகுத்துத் திருமண வாழ்த்தரங்கில் அரங்கேற்றி மணமக்களுக்குப் பரிசிலாய் அளிக்க விழைகின்றேன்.நன்றி.
--rgds,Dr. A. GOVINDARAJU,Retired Principal - National Awardee,
--