பிள்ளையார் சதுர்த்தி

19 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 25, 2025, 3:18:32 PM (12 days ago) Aug 25
to Santhavasantham

பிள்ளையார் சதுர்த்தி 2025
--------------------

சைவ சித்தாந்தத்  தத்துவத்தின் சாரமாக, ஔவையார் விநாயகர் அகவல் பாடித் தந்துள்ளார். அதன் உரை:
(1) குகஶ்ரீ ரசபதி அடிகள்:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0231.html
(2) கவிஞர் இமயவரம்பன்:
https://imayavaramban.com/vinayagar-agaval/

யோக சாதனையின் முக்கியமான பகுதி குண்டலினி சக்தியை எழுப்புதல். இதுபற்றித்  திருமூலர் திருமந்திரத்தில் கற்கலாம். ஔவையாரும் சொல்லியுள்ளார். குண்டலினியின் குறியீடாக, பாம்பு ஒன்றை யக்ஞோபவீதமாகப் பூணுதல் கணபதி சிற்பங்கள் பலவற்றில் காண்கிறோம். இந்தியாவில் மட்டுமல்லாது, தென்கீழ் ஆசிய நாடுகள் முழுவதிலும் 7 - 15-ம் நூற்றாண்டுகளில் இந்த அமைப்புடன் கணேசர் சிற்பங்கள் கிடைக்கின்றன. கம்போதியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், ... சில உதாரணங்கள் தந்துள்ளேன்,
https://x.com/Param_Chaitanya/status/1959568702476898501

விநாயகர் அகவலின் நடுவே விளக்குகிறார் தமிழ் மூதாட்டி:
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

~1000 years ago, Auvaiyar sang Vinayakar Akaval. A short poem summarizing Shaiva Siddhantam to be memorized in Tamil classes in schools.
Seerkazhi Govindarajan sings: https://youtu.be/YhkaTNr3bPA
MS Subbulakshmi sings: https://youtu.be/H_aKytudu4k

Happy Ganesh Chaturthi,
N. Ganesan

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 25, 2025, 10:54:11 PM (12 days ago) Aug 25
to சந்தவசந்தம்
image.png


<> ஓங்கார கணபதி <>

 

உருவிலே சிறியனாய் உயர்விலே பெரியனாய்

... உலவுவோய்! மாந்தர் உன்னை

மருவிஉன் அருள்பெறும் வகையினை எளியதாய்

... வழங்கிட ஆவல் கொண்டு

சருவமும் ஆனஓங் காரமாய் ஆங்கதைச்

.. சாற்றிடும் ஒலியுள் நிற்பாய்
கருவென எழுத்துளே உகரமாய்த் தோன்றுவாய்*
.. கருணையின் எல்லை நீயே!

(* இது பிள்ளையார் சுழியைக் குறிப்பது)

                   ... அனந்த் 26-8-2025

------------

முன்னம் இட்டது:


<> எங்கும் கணபதி <>

 

image.png

         

நதியரு கேனும் நடுத்தெரு வேனும்

... அதிலொரு கணபதி உண்டு-அவன்

... அழகினை உணும்மன வண்டு              

அதிசய மான ஒலியுடன் ஆனைக்

... கதியுடன் கூடிய சந்தம் - பதம்

... குதிநடம் ஆடர விந்தம்

 

விதியுடன் விண்ணோர் வழிபடு மேலோன்

... சுதிபுகழ் அதிபல சூரன் - உமை

... மகிழ்வுடன் அணைசுகு மாரன்

மதியுடன் கொன்றை யணிபர மேசன்

... மகனிவன் மாமதி யாளன்-நெடு

... மலையினும் வலிமிகு தோளன்

 


ததியுடன் வெண்ணை திருடிடும் மாயன்

... தனக்கிவ  னொருமரு கோனாம் - இவன்

... தனக்கிளை யவன்முரு கோனாம்

 எதிர்வரு கின்ற துயர்பல கண்டு

... அதிர்வெதும் அடைந்திட லில்லை-அவன்

... துதிசொலின் விலகிடும் தொல்லை

         

எதிலுளம் சாரு மினியெனக் கேட்பின்

... அதுஅவன் எழிலுரு தானே- அதில்

... அமிழ்ந்தென திடர்களை வேனே!

கொதிதரு வாழ்வில் குளிர்தரு போலக்

... கருணையி னுருஅவன் காணீர் - மலர்க்

... கழலடி சிரமதில் பூணீர்!

 

அதிசயமான ஒலி= ஓங்காரம்; ஆனைக் கதி= யானையின் நடை; விதி=நான்முகன்; சுதி=மறை; ததி=தயிர்    


-----------------



VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 25, 2025, 11:01:20 PM (12 days ago) Aug 25
to சந்தவசந்தம்

முந்தைய இடுகையின் தொடர்ச்சி:

அரன்மகனை ஆனை முகத்தோனை ஐங்கரனை

இரவியின் மேலாம் எழிலோனை ஏந்தலை

அரவினைப் பூண்ட அழகோனை அன்பருக்குக்

கரவாமல் ஈயும் கணபதியின் கால்பணிவாம்.

அனந்த் 15-9-1999

-            <><><><>

யார்க்கும் முன்னே தோன்றிய பிள்ளை

யார்க்கோர் இணையிவ் வுலகில் உண்டோ?

யார்க்கும் விளையும் அல்லல் களைந்தடி

யார்க்கு முக்தி அளிப்பார் இவரே!

-------------

இமயவரம்பன்

unread,
Aug 26, 2025, 7:19:38 AM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அரவினைப் பூண்ட அழகோனை ஐங்கரனைப் பாடும் பாடல் அழகு! 

இமயவரம்பன்

unread,
Aug 26, 2025, 7:59:45 AM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com, Santhavasantham
குண்டலினி சக்தியைக் குறித்த அருமையான தகவலுக்கும்,  எனது உரையை அன்புடன் பகிர்ந்தமைக்கும் நனி நன்றி, திரு. கணேசன்.

Ram Ramakrishnan

unread,
Aug 26, 2025, 8:34:45 AM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
அற்புதம், ஆனந்த வெள்ளப் பெருக்கோட்டம், அனந்த் ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 25, 2025, at 22:54, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


<image.png>


<> ஓங்கார கணபதி <>

 

உருவிலே சிறியனாய் உயர்விலே பெரியனாய்

... உலவுவோய்! மாந்தர் உன்னை

மருவிஉன் அருள்பெறும் வகையினை எளியதாய்

... வழங்கிட ஆவல் கொண்டு

சருவமும் ஆனஓங் காரமாய் ஆங்கதைச்

.. சாற்றிடும் ஒலியுள் நிற்பாய்
கருவென எழுத்துளே உகரமாய்த் தோன்றுவாய்*
.. கருணையின் எல்லை நீயே!

(* இது பிள்ளையார் சுழியைக் குறிப்பது)

                   ... அனந்த் 26-8-2025

------------

முன்னம் இட்டது:


<> எங்கும் கணபதி <>

 

<image.png>

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia34LQRh%3DuhR%2Byios033HReNzN8M4oaeZUHT_peP8PfWHQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 26, 2025, 9:05:03 AM (11 days ago) Aug 26
to Santhavasantham
Earliest Ganesa
--------------------

Please see for photos,
https://x.com/naa_ganesan/status/1960004702684229961

காந்தாரம் போன்ற நாடுகளில் ஆண்ட கடைசி இந்தோ-கிரேக்க மன்னன் மறைந்த பின்னர், விநாயகர் பீடத்தில் அமர்ந்துள்ளது போன்ற காசுகள் வெளியாகியுள்ளன. அவற்றில் மூன்று கிடைக்கின்றன (காலம்: கி.மு. முதல் நூற்றாண்டு). இது கிரேக்க தெய்வம், சீயஸ் (Zeus)அமைப்பைச் சற்று மாற்றி யானைமுகன் வடிவம் அமைத்தது என்கிறார் A. K. நாராயண். கணபதி நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு. இது கணபதி நாணயம் அல்ல, சீயஸ் தான் என்பார் ஆஸ்மண்ட் போப்பராட்சி. 1993-ல் ஆஸ்மண்ட் சொல்லும் முக்கியக் காரணம் விநாயகர் பற்றி நூல்களில், தொல்லியலில் கிடைப்பதே  கி.பி. 5-ம் நூற்றாண்டு என்பதாகும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாய், கி.மு. 2-ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 4-ம் நூற்றாண்டு வரை பல கணபதி வடிவங்கள் கிடைத்துள்ளன.  கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து சாதவாகனர்கள் காலம் வரை பாட்னா, ஆந்திரம் போன்ற இடங்களில் விநாயகர் உருவங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மயிலம் அருகே, ஆலகிராமம் கோயிலில் 4-ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கிடைக்கும் விநாயகர் தான் மிகப் பழமையானவர். பிள்ளையார்பட்டி, திருவாரூர் வாதாபி கணபதி, ... போன்றவை ஆலகிராமத்திற்குப் பிற்காலம்.

We get Ganesa idol in Alagramam, Viluppuram district in 4th century Tamil Nadu (attached photo). This is one or two centuries later than what is found in Andhra Pradesh etc., There are Shunga period Ganesa images, and also from Mathura sculptures of Ganesa. Normally, in ancient times, it took centuries for ideas to move from North to South in India. For example, Brahmi script movement.
https://x.com/naa_ganesan/status/1945809900027994180
https://x.com/naa_ganesan/status/1939362125769576864

High resolution photos of all the coins taken to represent Ganesa by scholars like A.K. Narain with elephant head will help determine whether it is Zeus, a position held by Osmund Bopearachchi or Ganesa. Osmund Bopearachchi says the elephant trunk effect is due to low quality work by inexperienced die-engraver. In 1993, when OB's paper was published, he mentions the textual and archaeological evidence of Ganesa is only from 5th century CE. However, this statement is incorrect. We have many Ganesa images throught India from 2nd century BCE. Also after the demise of the Indo-Greek kings, Hindu "nomadic tribes" likely have started making gods of Hinduism in their coins. A. K. Narain cites the famous Balarama - Krishna silver coins, along with Ganesa coins from that period. In Tamilakam, Sangam era coins of the Tamil dynasties follow from classical Greek and Roman coins also.

https://x.com/BhandarkarI/status/1354356163731623936

(1) Robert L. Brown (ed.,), Ganesh - Studies of an Asian god, SUNY, 1997.
(See articled by A. K. Narain, M. K. Dhavalikar)

(2) Osmund Bopearachchi, On the so-called earliest representation of Ganesa,
Topoi, Orient-Occident, 1993, pp. 425-453.

Siva Siva

unread,
Aug 26, 2025, 10:10:21 AM (11 days ago) Aug 26
to சந்தவசந்தம்
Nice.

நதியரு கேனும் நடுத்தெரு வேனும்

... அதிலொரு கணபதி உண்டு-அவன்

... அழகினை உணும்மன வண்டு              /

இந்தப் பாடலின் அமைப்பு என்ன?

வி. சுப்பிரமணியன்

On Mon, Aug 25, 2025 at 10:54 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


<> ஓங்கார கணபதி <>

 

உருவிலே சிறியனாய் உயர்விலே பெரியனாய்

... உலவுவோய்! மாந்தர் உன்னை

மருவிஉன் அருள்பெறும் வகையினை எளியதாய்

... வழங்கிட ஆவல் கொண்டு

சருவமும் ஆனஓங் காரமாய் ஆங்கதைச்

.. சாற்றிடும் ஒலியுள் நிற்பாய்
கருவென எழுத்துளே உகரமாய்த் தோன்றுவாய்*
.. கருணையின் எல்லை நீயே!

(* இது பிள்ளையார் சுழியைக் குறிப்பது)

                   ... அனந்த் 26-8-2025

------------

முன்னம் இட்டது:


<> எங்கும் கணபதி <>

 


         

நதியரு கேனும் நடுத்தெரு வேனும்

Kaviyogi Vedham

unread,
Aug 26, 2025, 11:04:40 AM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
abaram ananth..
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 26, 2025, 12:49:46 PM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
Thanks. 
I don't know exactly what type of poem it is but it is close to Bharathi's kiLik kaNNi: 

நெஞ்சில் உரமுமின்றி
  நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாடடீ- கிளியே 
   வாய்ச்சொல்லில் வீரரடி 

பிற கவிஞர்கள் இதன் யாப்புப் பற்றிக் கருத்துச் சொல்லலாம்.
அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 26, 2025, 12:50:38 PM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
நன்றி வேதம்.

அனந்த்

abaram ananth..
  yogiyar

நதியரு கேனும் நடுத்தெரு வேனும்

இமயவரம்பன்

unread,
Aug 26, 2025, 1:07:24 PM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
Its style looks like Bharathi’s காவடிச் சிந்து :

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு - தழல் 

காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு - மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 26, 2025, 5:15:58 PM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com

Subbaier Ramasami

unread,
Aug 26, 2025, 6:47:26 PM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
மிக அழகிய சந்தம்.

கருவென எழுத்துளே உகரமாய்த் தோன்றுவாய்*---- அருமை

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Aug 27, 2025, 1:45:37 AM (10 days ago) Aug 27
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை.  வாழ்க வளமுடன்
Sent from my iPhone

On 26 Aug 2025, at 23:47, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


மிக அழகிய சந்தம்.

கருவென எழுத்துளே உகரமாய்த் தோன்றுவாய்*---- அருமை

இலந்தை

On Mon, Aug 25, 2025 at 9:54 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
<image.png>


<> ஓங்கார கணபதி <>

 

உருவிலே சிறியனாய் உயர்விலே பெரியனாய்

... உலவுவோய்! மாந்தர் உன்னை

மருவிஉன் அருள்பெறும் வகையினை எளியதாய்

... வழங்கிட ஆவல் கொண்டு

சருவமும் ஆனஓங் காரமாய் ஆங்கதைச்

.. சாற்றிடும் ஒலியுள் நிற்பாய்
கருவென எழுத்துளே உகரமாய்த் தோன்றுவாய்*
.. கருணையின் எல்லை நீயே!

(* இது பிள்ளையார் சுழியைக் குறிப்பது)

                   ... அனந்த் 26-8-2025

------------

முன்னம் இட்டது:


<> எங்கும் கணபதி <>

 

<image.png>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 27, 2025, 11:10:06 PM (10 days ago) Aug 27
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
அனந்த்

On Wed, Aug 27, 2025 at 1:45 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
அருமை.  வாழ்க வளமுடன்
Sent from my iPhone


N. Ganesan

unread,
Aug 28, 2025, 7:21:10 AM (9 days ago) Aug 28
to santhav...@googlegroups.com
On Tue, Aug 26, 2025 at 6:59 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
குண்டலினி சக்தியைக் குறித்த அருமையான தகவலுக்கும்,  எனது உரையை அன்புடன் பகிர்ந்தமைக்கும் நனி நன்றி, திரு. கணேசன்.

யோகேசுவர கணபதி, பேரங்கியூர்
--------------------------- வெண்கொற்றக்குடையின் கீழ், இருபுறமும் சாமரை வீசக் காட்சி அளிக்கும் அரிய கணேசர். தந்தை யோகேசுவரனின் அமிசமாக மான், மழு ஏந்தியுள்ளார். மோதகமும், உடைந்த கொம்பும் கீழ்க்கைகளில். வலம்புரியாகத் துதிக்கை அமுத கலசம் ஏந்தியுள்ளது. யோகேசுவர கணபதி. யோக சாதனையின் முக்கியமான பகுதி குண்டலினி சக்தியை எழுப்புதல். இதுபற்றித் திருமூலர் திருமந்திரத்தில் கற்கலாம். ஔவையாரும் சொல்லியுள்ளார். குண்டலினியின் குறியீடாக, பாம்பு ஒன்றை யக்ஞோபவீதமாகப் பூணுதல் கணபதி சிற்பங்கள் பலவற்றில் காண்கிறோம். இந்தியாவில் மட்டுமல்லாது, தென்கீழ் ஆசிய நாடுகள் முழுவதிலும் 7 - 15-ம் நூற்றாண்டுகளில் இந்த அமைப்புடன் கணேசர் சிற்பங்கள் கிடைக்கின்றன. கம்போதியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், ... சில உதாரணங்கள் தந்துள்ளேன்,
https://x.com/Param_Chaitanya/status/1959568702476898501 விநாயகர் அகவலின் நடுவே விளக்குகிறார் தமிழ் மூதாட்டி: மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே A unique Vinayaka with serpent thread. 1000+ years old Chola sculpture where rare Adiththa Karikalan inscription is there. There is a parasol above the Ganesa and with chowry/whisk on both sides. As Shiva himself, he holds an axe (Parasu) and deer (Mrga) in his top hands. Yogeshvara Ganapati, Perangiyur, Tirumoolanathar temple.
-------------
கவிஞர் அனந்த் அவர்களின் காவடிச்சிந்தும் இவ்விழையில் வந்துள்ளமை சிறப்பு.

~NG

N. Ganesan

unread,
Aug 28, 2025, 7:30:35 AM (9 days ago) Aug 28
to Santhavasantham
On Tue, Aug 26, 2025 at 6:59 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
குண்டலினி சக்தியைக் குறித்த அருமையான தகவலுக்கும்,  எனது உரையை அன்புடன் பகிர்ந்தமைக்கும் நனி நன்றி, திரு. கணேசன்.

யோகேசுவர கணபதி, பேரங்கியூர்
--------------------------- 

வெண்கொற்றக்குடையின் கீழ், இருபுறமும் சாமரை வீசக் காட்சி அளிக்கும் அரிய கணேசர். தந்தை யோகேசுவரனின் அமிசமாக மான், மழு ஏந்தியுள்ளார். மோதகமும், உடைந்த கொம்பும் கீழ்க்கைகளில். வலம்புரியாகத் துதிக்கை அமுத கலசம் ஏந்தியுள்ளது. யோகேசுவர கணபதி. 

 யோக சாதனையின் முக்கியமான பகுதி குண்டலினி சக்தியை எழுப்புதல். இதுபற்றித் திருமூலர் திருமந்திரத்தில் கற்கலாம். ஔவையாரும் சொல்லியுள்ளார். குண்டலினியின் குறியீடாக, பாம்பு ஒன்றை யக்ஞோபவீதமாகப் பூணுதல் கணபதி சிற்பங்கள் பலவற்றில் காண்கிறோம். இந்தியாவில் மட்டுமல்லாது, தென்கீழ் ஆசிய நாடுகள் முழுவதிலும் 7 - 15-ம் நூற்றாண்டுகளில் இந்த அமைப்புடன் கணேசர் சிற்பங்கள் கிடைக்கின்றன. கம்போதியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், ... சில உதாரணங்கள் தந்துள்ளேன்,

GOPAL Vis

unread,
Aug 28, 2025, 11:49:30 AM (9 days ago) Aug 28
to santhav...@googlegroups.com
அருமை!

ஒலியாய் எழுத்துமாய் ஓங்கார மாகும்
எலிமீ தமரும் இபம்!

கோபால்.

Ram Ramakrishnan

unread,
Aug 28, 2025, 12:42:59 PM (9 days ago) Aug 28
to santhav...@googlegroups.com
எலிமீது அமரும் இபம் - அருமையான பிரயோகம், திரு. கோபால்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 28, 2025, at 08:49, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 29, 2025, 1:42:52 PM (8 days ago) Aug 29
to santhav...@googlegroups.com
பேராசிரியர் பசுபதியின் கவிதை இயற்றிக் கலக்கு நூலில் பலவகைச் சிந்துப்பாடல்களின் யாப்பை விவரித்திருக்கிறார். எனினும், வித்தியாசமான புதுவகைச் சிந்துப் பாடல்களும் உண்டு. இது அத்தகைய ஒன்றாகவும் கருதலாம் (முன்னம் இட்ட ‘கானடா என்றொரு தேசம்’  என்ற சிந்துப் பாடலும் சற்று வித்தியாசமான அமைப்புக் கொண்டது (- குழு இடுகைகளைத் தேடியதில் அந்தப் பாடல் கிட்டவில்லை; யார்க்கேனும் கிடைத்தால் தெரிவிக்கவும்.)

On Tue, Aug 26, 2025 at 1:07 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

GOPAL Vis

unread,
Aug 30, 2025, 6:45:16 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்.
கோபால்.
Reply all
Reply to author
Forward
0 new messages