ழகரம் தமிழுக்குச் சிகரம்

233 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 3, 2024, 6:26:06 AM3/3/24
to Santhavasantham
ழகரம் தமிழுக்குச் சிகரம்
=======================
தமிழில் ல் , ள் , ழ்  ஆகிய மூன்றும் மருங்கொலிகள் எனப்படும் .

மூச்சுக்காற்றை நாக்கினால் தடுத்துக்கொண்டு, அதை நாக்கின் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கமாகவோ செலுத்தும்போது பிறக்கும் ஒலியை மருங்கொலி ( lateral ) என்பா் .

இவற்றுள் லகரம் நுனிநா நுனியண்ண மருங்கொலி , ளகரம் நாவளை மருங்கொலி , ழகரம் நாவளை மருங்கு தொடரொலி எனப்படும் .

தமிழும் மலையாளமும்
=====================
ழகரம் திராவிட மொழிகளுள் தமிழிலும் , மலையாளத்திலும் உண்டு . உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியில் மட்டும் உள்ளது .

ஆலப்புழை , விழிஞம் ஆகியன கேரளாவிலுள்ள ஊா்ப் பெயா்களாகும் . இவற்றில் ழகரம் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் . தமிழில் " விழுகின்றான் " என்பதை மலையாளத்தில் " விழுன்னு "
என்று சொல்வா் . இன்னும் பல சொற்களில் ழகரம் ஆண்டு வருகின்றது .

பிரெஞ்சு மொழியில் ஒலியில்தான் ழகரம்
இருக்கின்றது . சொல்லில் இல்லை .
Page என்பதைப் பாழ்  என்றும் , Rouge என்பதை ரூழ் என்றும் சொல்கின்றனா் .

தமிழும் ஆங்கிலமும்
====================
தமிழ் மொழியிலுள்ள ழகர உச்சாிப்பை , ஆங்கில மொழியிலுள்ள  L என்ற எழுத்தால் கொண்டு வர முடியாது . ழ் என்பதை lz ஆகிய  எழுத்துக்கள் மூலமாகவும் , ழ என்பதை zha
ஆகிய எழுத்துக்கள் மூலமாகவும் ஓரளவுக்குக் கொண்டு வர முடியும் . அன்பழகன் என்பதை Anbalagan என்றே ஆங்கிலத்தில் எழுதுகின்றனா் . Anbazhagan என்று பெரும்பாலோா் எழுதுவதில்லை .

ழகரம் எங்கெங்கு வரும் ?
=======================
ழ் என்னும் ஒற்றெழுத்து தனிக்குறிலை அடுத்து வராது . நெடிலை அடுத்து வரலாம் .
அழ்  என்று வராது ஆழ் என்று வரும் .
உழ் என்று வராது ஊழ் என்று வரும் .
எழ் என்று வராது ஏழ் என்று வரும் .
கழ் என்று வராது காழ் என்று வரும் .
இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம் .

இரண்டு குறில்களை அடுத்து ழகரம் வரலாம் .
அகழ் , இதழ் , புகழ் என்று வரலாம் .

ழகரத்தை அடுத்து ழகரமோ , அதன் வா்க்க எழுத்துக்களோ வராது .

வெல்லம், பள்ளம் -- இச்சொற்களில் முறையே லகர , ளகரங்கள் சோ்ந்து வருகின்றன . இவ்வாறு இரண்டு ழகரங்கள் சோ்ந்து லருகின்ற சொற்கள் தமிழில் இல்லை .

சொல்லுக்கு முதலில் வரும் ஒன்பது மெய்களும் , ங வும் , ழகரத்தை அடுத்து வரும் . அஃதாவது கசதபஞநமயவங ஆகிய எழுத்துக்கள் ழகரத்தை அடுத்து வரும் .

சூழ்க , வீழ்ச்சி , அமிழ்து , காழ்ப்பு , சூழ்ஞாலம் , வாழ்நாள் , ஆழ்மனம் , ஆழ்யாறு , ஊழ்வினை ,
பாழ்ங்கிணறு  என்று வரும்.

ழகரம் கெடுதல்
===============
பெரும்பாலான மக்கள் உரையாடலில் ழகர
மெய் , சில இடங்களில் அறவே மறைந்து விடுகிறது . வினைத்தொகை தவிர மற்ற தொகைச் சொற்களில் , ஒரு நெடிலை அடுத்து வரும் ழகரமே இவ்வாறு கெடுகிறது .

கேழ்வரகு > கேவரகு
தாழ்ப்பாள் > தாப்பாள்
தாழ்வாரம் > தாவரம்
வாழ்க்கைப்படு > வாக்கப்படு
வாழ்வரசி > வாவரசி

சென்னைத் தமிழில்,  இழுத்து > இஸ்த்து
என்று வழங்குகிறது .

ழகர ஈற்றுப் புணா்ச்சி
====================
ழகரத்தின் முன் வல்லினம் வந்தால் , சில இடங்களில் ஒற்று மிகுந்தும் , சில இடங்களில் ஒற்று மிகாமலும் வரும் .

சூழ் + கலை = சூழ் கலை
என ஒற்று மிகாமல் வரும் . ஏனெனில் சூழ்கலை வினைத்தொகையாகும் . வினைத்தொகையில் ஒற்று மிகாது .

புகழ் + புாிந்தாா் = புகழ் புாிந்தாா்
இது இரண்டாம் வேற்றுமைத் தொகை . எனவே வலி மிகாது .

தமிழ் + புலவா் = தமிழ்ப் புலவா்
ஊழ் + பயன் = ஊழ்ப் பயன்
ழகரத்தின் முன் வல்லெழுத்தில் தொடங்கும் பெயா்ச்சொல் வந்தால் வலி மிகும் .

ழகரத்தின் முன் மெல்லினம் வந்தால் இயல்பாகப் புணரும் .
தமிழ் + மொழி = தமிழ் மொழி
புகழ் + மணம் = புகழ் மணம்
சூழ் + நிலை = சூழ் நிலை

ழகரத்தின் முன் இடையினம் வந்தால்
இயல்பாகப் புணரும் .
பாழ் + விலங்கு = பாழ் விலங்கு
புகழ் + வளா்த்த = புகழ் வளா்த்த
சூழ் + வாி = சூழ் வாி
வாழ் + யுகம் = வாழ் யுகம்

திசைப் புணா்ச்சியில்
====================
கிழக்கு + தெரு = கீழத் தெரு
கிழக்கு > கீழ் > கீழ என்று மாறி , வருமொழி
தெருவுடன் புணரும்போது கீழத்தெரு என்று வரும் .

உாிச்சொல் புணா்ச்சியில்
========================
குழ , மழ ஆகியன உாிச் சொற்களாகும் .

குழ+ களிறு = குழக் களிறு என்று ஒற்று மிகுந்து வரும் .
ஆனால் ,
மழ + களிறு = மழ களிறு என்று ஒற்று மிகாமல் வரும் . இதற்குத் தெளிவான விதி இல்லை . மரபு புணா்ச்சியாதலால் , அதை நாம் ஏற்க வேண்டும் .

ழகரம் டகரமாய்த் திாிதல்
=======================
பழந்தமிழில் வருமொழி முதலில் தகரம்
வருமானால் ழகரம் , டகரமாய்த் திாிவதுண்டு .

திகழ் + சக்கரம் = திகட சக்கரம்
என்று வரும் .

ழகரம் ணகரமாய்த் திாிதல்
==========================
வாழ் + நாள் = வாணாள்
சோழ + நாடு = சோணாடு

என்று மாறும் .

அடுக்குத் தொடாில்
===================
அடுக்குத் தொடா்கள் இயல்பாகவே புணரும் .

பாழ் பாழ் , தாழ் தாழ் என்பன அடுக்குத் தொடா்கள் . இடையே ஒற்று மிகாது .
பாழ்ப்பாழ் , தாழ்த்தாழ் என்று வராது .
இது முகநூலில் உள்ள சொல்லாய்வு என்னும் குழுமத்தில் திரு.ஜெகதீசன் முத்துகிருஷ்ணன் என்பவர் எழுதிய பதிவு.

N. Ganesan

unread,
Mar 3, 2024, 6:30:14 AM3/3/24
to Santhavasantham
நிரஞ்சன்:

> ழகரம் தமிழுக்குச் சிகரம்
=======================
தமிழில் ல் , ள் , ழ்  ஆகிய மூன்றும் மருங்கொலிகள் (lateral) எனப்படும் .

அஷ்ரப்:
>சிகரம்தான், அதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த சிகரத்தை சரியாக உச்சரிக்க பெரும்பாலான தமிழர்களுக்கு வருவதில்லையே?
இதன் ரகசியம் என்ன என்று தெரியவில்லை. ஏன் இப்படி ஆயிற்று? இந்த அவல நிலைக்குக் காரணம் என்ன? வரலாறு என்ன? இதற்கு யாராவது பதில் சொல்ல முடியுமா?

கோதைமோகன்:
> அந்தச்  சிகரத்தைச் சரியாக உச்சரிக்கப்
பெரும்பாலான மலையாளிகளுக்கு மட்டும் வருவது எவ்வாறு?.
இதன் ரகசியம் என்ன என்றும் தெரியவில்லையே!.
இதற்கு விடை கண்டால், அதன் இன்மையே தமிழர்களின் தடுமாற்றத்திற்குக் காரணம் எனக் கொள்ளலாமோ!.

கணேசன்:
> பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். அவர்கள் மாணவர்கள் எழுத்துக்களை உச்சரிக்க நேரம் செலவிடணும். பெற்றோர்கள் நேரம் செலவிடாமல், மந்திரத்தால் மாங்காய் விழாது. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் முயன்றாலும், கல்விவள்ளல்களின் பள்ளிகள் பெரிய பிசினஸ். எனவே, அரசு பள்ளிகள் அழியணும் என்பது அவர்கள் விழைவு. Conflict of Interest between Private schools' lobby vs. Govt. run schools. தனியார் பள்ளிகளில் தமிழுக்கு மதிப்பில்லை என்கிறார்கள். பிறகு எப்படி சரியான பலுக்கல் கற்பிப்பர் - குறைந்த சம்பளத்தில்?

புலவர் சுந்தர கணேசன்:
> ஆசிரியப் பணியை விட மற்ற பணிகள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம்.
அதனாலேயே கல்வித்தரம் குறைகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு பரிசோதனையைக் கொண்டு வந்து ஆசிரியப் பணியைக் கெடுக்கின்றனர்.
இன்னும் பத்தாண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளிகள் பெயரளவில் இயங்கும்.

எழுத்து உச்சரிப்பு சரிவர, நல்ல மந்திரத்தை, ஔவைப் பாட்டி சொல்லியுள்ளார்: “செந்தமிழும் நாப்பழக்கம்”. பெற்றோர், ஆசிரியர் வாய்விட்டுப் படித்துக் காட்டி, மாணாக்கரைத் திரும்பச் சொல்லவைக்காவிட்டால், தமிழ்ப் பலுக்கல் கொலையாகும். தமிழ் டிவி ந்யூஸ் வாசிப்புகளைக் கேட்டால் தெரியும்.

”சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” - ஔவை.

நா. கணேசன்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

  - ஆழ்ந்த பொருள்கொண்ட வெண்பா

lns2...@gmail.com

unread,
Mar 3, 2024, 8:10:40 AM3/3/24
to சந்தவசந்தம்
அருமையான இடுகை. உரையாடல் தமிழை ஆங்காங்கே குறிப்பிட்டதும் சிறப்பு. சிறிய சந்தேகம்;

(வாழ் + நாள் =) வாணாள் என்பது உரையாடல் தமிழா அல்லது எழுத்து தமிழா? பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஆசிரியர்  பிள்ளையவர்கள் உரையாடலில் அடிக்கடி இச்சொல்லை கையாள்கிறார்.

இந்த நாவலில் உள்ள உரையாடல் பொதுவாக தற்காலத் தமிழிலேயே இருந்ததாக நினைவு.

அன்புடன்,

Srini

lns2...@gmail.com

unread,
Mar 3, 2024, 8:26:40 AM3/3/24
to சந்தவசந்தம்
Coromandel என்ற ஆங்கிலச் சொல்லில் ரகரம் எப்படி வந்தது? சோழமண்டலத்தின் ழகரம் திரிந்தா இல்லை பேச்சுத் தமிழ் ளகரம் திரிந்தா?

'சோழமண்டலத்தின்' 'ச' எப்படி 'க' வாக திரிந்தது என்பது பெரிய கதை. இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம் :)

Srini

lns2...@gmail.com

unread,
Mar 3, 2024, 8:30:49 AM3/3/24
to சந்தவசந்தம்
பின்னூட்டத்துடன் தொடங்கியதும் சிந்திக்க வைக்கும் வெண்பாவுடன் முடித்ததும் அருமை.

Srini

Ram Ramakrishnan

unread,
Mar 3, 2024, 8:45:49 AM3/3/24
to santhav...@googlegroups.com
மிகவும் உபயோகமான பதிவு.

மிக்க நன்றி, திரு. கணேசன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 3, 2024, at 06:26, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUeLjWzN3bmcygaqw1imj%2BgOR0wHWrqE9hYDXnvu8G9fMg%40mail.gmail.com.

Swaminathan Sankaran

unread,
Mar 3, 2024, 10:52:45 AM3/3/24
to santhav...@googlegroups.com
A minor observation, not a fault-finding correction.
French does not have the proper 'ழ ' sound. The name 'Jean' for example, is pronounced close to, but not exactly 
as, the Thamizh ' ழா ' sound, as far as I know. Many other examples abound.

Sankaran




--
 Swaminathan Sankaran

Ramamoorthy Ramachandran

unread,
Mar 3, 2024, 11:09:01 AM3/3/24
to Santhavasantham
May be Russian ப்ரழ்னேவ்! 

Siva Siva

unread,
Mar 3, 2024, 3:55:39 PM3/3/24
to santhav...@googlegroups.com
ழ is dying a natural death in Tamil - in most people's tongue.
ற is also experiencing a similar fate.

தெலுங்கு கன்னட மொழிகளிலும் ழ ஆதிகாலத்தில் இருந்தது. 500 - 1000 ஆண்டுகள்முன் அம்மொழிகளில் வழக்கொழிந்தது. 
(வல்லின றவும் அவ்வாறே கன்னடத்தில் 200+ ஆண்டுகள்முன் வழக்கொழிந்தத்து. தெலுங்கில் கிட்டத்தட்ட வழக்கொழிந்தமாதிரிதான்).

தமிழ்ப் பத்திரிகைகளில் சந்தி எந்த இடத்தை இப்பொழுது அடைந்துள்ளது?
அந்த இடத்தை ழ அடைய இன்னும் 100 - 200 ஆண்டுகள் ஆகக்கூடும்.
அதுவரை அங்கலாய்க்கலாம், ஆராதிக்கலாம். 
அரசியலில் உள்ளோர் தினமும் தமிழ்த்தாய் வாழ்க  என்று கோஷம் போடலாம்.

V. Subramanian

சௌந்தர்

unread,
Mar 3, 2024, 9:13:34 PM3/3/24
to சந்தவசந்தம்
தமிழின் சிறப்பு பற்றி காஞ்சி பெரியவா சொன்னது:                                                                                                
 "தமிழின் சிறப்பே 'ழ' கரம்தானே! வேறு எந்த பாஷையிலும் இது கிடையாது. 'ழ'கரம் வரும் சொற்கள் எல்லாமே பெரும்பாலும் இனியது. நல்ல பொருள் உடையது. 'மழலை,குழவி, வாழை,யாழ்,பொழிவு, வியாழன்,சூழல்,ஆழி, மேழி, ஊழி...' இப்படி ழ,ழி, வரும் சொற்களை வரிசையாக சொல்லிக் கொண்டே வந்த பெரியவா,"தம்மிடம் இப்படி இனிய தன்மை கொண்ட 'ழ'வை உடையது என்பதால் தமிழ் என்று வந்துவிட்டதோ?"

On Sunday 3 March 2024 at 15:55:39 UTC-5 Siva Siva wrote:

Anand Ramanujam

unread,
Mar 4, 2024, 6:23:28 AM3/4/24
to santhav...@googlegroups.com
அருமையான பதிவு!

இப்பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குத் தொடர்பான தொல்காப்பியச் சூத்திரங்களைத் தேடிப் பார்த்தேன். நான் கண்டறிந்த எழுத்ததிகார நூற்பாக்களை இங்கே பகிர்கிறேன்.

இமயவரம்பன்

On Sun, Mar 3, 2024 at 4:56 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ழகரம் தமிழுக்குச் சிகரம்
=======================
தமிழில் ல் , ள் , ழ்  ஆகிய மூன்றும் மருங்கொலிகள் எனப்படும் .

மூச்சுக்காற்றை நாக்கினால் தடுத்துக்கொண்டு, அதை நாக்கின் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கமாகவோ செலுத்தும்போது பிறக்கும் ஒலியை மருங்கொலி ( lateral ) என்பா் .

இவற்றுள் லகரம் நுனிநா நுனியண்ண மருங்கொலி , ளகரம் நாவளை மருங்கொலி , ழகரம் நாவளை மருங்கு தொடரொலி எனப்படும் .

நூற்பா 95:
நுனிநா அணரி அண்ணம் வருட 
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் . 

 பொருள்: நா நுனி மேல் நோக்கி அண்ணத்தினை வருட, ரகர ழகரம் ஆகிய இரண்டு எழுத்துகளும் பிறக்கும்
=======================


ழகரம் எங்கெங்கு வரும் ?
=======================
ழ் என்னும் ஒற்றெழுத்து தனிக்குறிலை அடுத்து வராது.

நூற்பா 49: 
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. 

 பொருள்: குறில் எழுத்துகளின் பின் ர, ழ என்னும் மெய்கள் வாரா (ழ் என்னும் ஒற்றெழுத்து தனிக்குறிலை அடுத்து வராது) 

=======================

ழகரத்தை அடுத்து ழகரமோ , அதன் வா்க்க எழுத்துக்களோ வராது .

நூற்பா 30 
மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும் 
தம்முன் தாம் வரூஉம் ரழ அலங் கடையே.  

பொருள்: ரகர ழகரங்கள் அல்லாத பதினாறு மெய்களும் தம்முன் தாம் வந்து மயங்கும் (ழகரத்தை அடுத்து ழகரமோ , அதன் வா்க்க எழுத்துக்களோ வராது) 

=======================

சொல்லுக்கு முதலில் வரும் ஒன்பது மெய்களும் , ங வும் , ழகரத்தை அடுத்து வரும் . அஃதாவது கசதபஞநமயவங ஆகிய எழுத்துக்கள் ழகரத்தை அடுத்து வரும் .

நூற்பா 48:
யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக் 
கசதபவஞநம ஈர்ஒற்று ஆகும். 

பொருள்: ய ர ழ என்னும் மூன்றனுள் ஒன்று முன் ஒற்றாய் நிற்க, கசதபவஞநம என்னும் எட்டு ஒற்றுகளுள் ஒன்று வர, அவை இரண்டும் இணைந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும். 

 எடுத்துக்காட்டு : காழ்ப்பு, பாழ்ங்கிணறு
=======================

Anand Ramanujam

unread,
Mar 4, 2024, 6:27:30 AM3/4/24
to santhav...@googlegroups.com
அடியேன் அருவாணாள்
சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக்காணே”
 - திருவாய்மொழி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

lns2...@gmail.com

unread,
Mar 4, 2024, 8:32:38 AM3/4/24
to சந்தவசந்தம்
நன்றி, ஆனந்த் அவர்களே :)

Srini

Ram Ramakrishnan

unread,
Mar 4, 2024, 8:34:09 AM3/4/24
to santhav...@googlegroups.com
அறிந்தேன், தெளிந்தேன்.
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன் மற்றும் திரு. கணேசன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 4, 2024, at 06:23, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:



VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 4, 2024, 8:38:24 AM3/4/24
to santhav...@googlegroups.com
முன்பு இங்குக்  கண்ட ழகரப் பாடல்கள்:

https://mail.google.com/mail/u/0/#search/%E0%AE%85%E0%AE%B4(%E0%AE%95%E0%AF%81)+%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/FMfcgxcZBmJPQQlpgbRwdFLcGWzSqfTh

அனந்த்

On Sun, Mar 3, 2024 at 4:56 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Mar 4, 2024, 9:00:33 AM3/4/24
to santhav...@googlegroups.com
Prof. Ananth,

This link is from your gmail account, so no one will be able to see those searches.

Can you please send those verses as a Word file?

Thanks
N. Ganesan


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 4, 2024, 9:07:33 AM3/4/24
to santhav...@googlegroups.com
றகரம் தமிழுக்குச் சிகரம் இல்லையா?
Just curious.

By the way, every language / language family may have some unique features or sounds - compared to other language families.
It is the nature of languages. 

V. Subramanian

On Mon, Mar 4, 2024 at 9:00 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

lns2...@gmail.com

unread,
Mar 4, 2024, 9:11:55 AM3/4/24
to சந்தவசந்தம்
இமயவரம்பன் சொன்னதும் புத்தகத்தைப் புரட்டி பார்த்தேன். ழ்-ந் ==> ண் சந்தி மிகவும் பழமையானது என்று தெரிகிறது.

1. சோணாடு

குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு,
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி,
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி,  30
பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்,
கழி சூழ் படப்பை கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை; ( பட்டினப்பாலை 28-33)

2. வாணாள்

செழுபல ராவி நீங்கும் எல்லையில் செறிந்து காயம்
கழுமிய உதிரம் போல இமைப்பினுள் கரந்து நீங்கக்
கொழுமலர்க் குவளைக் கண்ணிக் கூற்றுயிர் உண்பதேபோல்
விழுமிய தெவ்வர் வாணாள் வீழ்ந்துக வெம்பினானே. (சிவக சிந்தாமணி 3079)

அன்புடன்,

Srini

On Monday, March 4, 2024 at 6:27:30 AM UTC-5 Anand Ramanujam wrote:

lns2...@gmail.com

unread,
Mar 4, 2024, 9:17:29 AM3/4/24
to சந்தவசந்தம்
சீவக சிந்தாமணி (3079) - தட்டச்சுப் பிழை

எனது கணினியின் shift key அடிக்கடி மக்கர் பண்ணும்.

Srini

Anand Ramanujam

unread,
Mar 4, 2024, 9:36:56 AM3/4/24
to santhav...@googlegroups.com
பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் அளித்தமைக்கு மிக்க நன்றி! 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 7, 2024, 11:50:59 AM3/7/24
to santhav...@googlegroups.com
Dear Ganesan,
Thanks for the alert. I guess it is now too late to post it, especially since it is an old poem from my blog
ananth

Reply all
Reply to author
Forward
0 new messages