வி. கந்தவனம்
ஆசான் என்பதன் பொருள் யாது?
வி. கந்தவனம்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Apr 23, 2:38 pm, kandavanam vina <vinayaga...@yahoo.com> wrote:
> ஆசான் என்பதன் பொருள் யாது?
>
குரு. ஆசார்(ஆசாரி) எனும் வடசொல்லில் இருந்து பிறந்த தமிழ்ச்சொல்.
ஆசாள் என்பதற்கும் இலக்கிய ஆட்சி உள்ளது. தமிழ் சங்க காலத்தில்
நேரடியாய் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்து சொற்களைப் பெறவில்லை,
பிராகிருதத்தில் இருந்து பெற்றவை அனேகம்.
நா. கணேசன்
ஆசான் என்பதன் பொருள் யாது?
வி. கந்தவனம்
அன்புள்ள அ.ரா. ஐயா,
பக்தி பரவசமாகச் செய்கிறது உங்கள் விளக்கம். பாராட்டுகளும், நன்றியும்
பல.
ஆனாலும், மொழியியல் விஞ்ஞான சாஸ்திரத்துக்குப் பொருத்தமாக உள்ளதா?
என்றும் பார்க்கவேண்டுமன்றோ? ஆசு - ஆசாரிமாரின் கலைச்சொல், பற்றாசு.
தமிழ்
இணையப் பல்கலையில் ஆசார்களின் கலைச்சொல் (டெக் வொக்காபுலரி) இருக்கிறது,
அதை தமிழ் இலக்கணகாரர்கள் ஆசிடை வெண்பாவுக்குப் பிற்காலத்தில்
பயன்படுத்துகின்றனர்.
ஆசு - பற்றவைக்கும் பொடி. அதனால், யாப்பில் பற்ற வைக்கும் அசைக்கு
இலக்கணத்தில் பயன்படுத்த ஆரம்பித்தனர், பற்று ஆசு மூலம் என்றால்
ஆசன், ஆசள் என்றல்லவோ சொற்கள் தமிழில் அமையும்.
ஆனால், ஆசான், ஆசாள் என்றல்லவா சொற்கள் உள? வடசொல் ஆசாரி (ஆசார்)
ஒப்பிட்டுப் பார்க்கவும் வேண்டி உளது. ஆசான், ஆசாள் சொற்பிறப்பை
தமிழ்ப் பேரகராதி தருவதுடனும் ஆராய்வோம்.
-----------
ஆவிநன்குடி (பழனி அடிவார்த்தில் உள்ள ஊர்) - ஆ + இனன் + கு என்று
பிரித்து
ஆ காமதேனு, இனன் சூரியன், ... என்றும், பழம்நீ என்பதுதான் பழநி என்றானது
என்னும் புராணக்கதைகளுக்கும் அப்பெயர்களின் மூலத்துக்கும் தொடர்பில்லை.
மரை என்பது Antelopes, அதாவது antlers ஆண்டாண்டுக்கு கழண்டுவிழும்
deer இனத்தில் இருந்து வேறுபட்டது. சிறு Antelope வகை மான்கள்
http://en.wikipedia.org/wiki/Antelopes
அதிகம் கிழக்குக் கடற்கரையில் உள்ளன. அதனால் ஏற்பட்ட பெயர்
மரைக்காடு. அது, மறை ஆகி, வேதாரண்யம் ஆகிவிட்டது அல்லவா?
மரை என்பது திருகாணியாய் ஏண்ட்டிலோப் மானில் நிரந்தரமான கொம்பு.
ஆண்டாண்டு வீழ்ந்து முளைக்கும் டீரின் (deer) கொம்பன்று.
இந்திய ஏண்டீலோப் மரைகளில் பெரியது மாடு போல் சாதுவானது
சங்க இலக்கியத்தில் வரும் மரையா/மரையான். இதில் ஆணுக்குக்
கலை எனப்பெயர். ருஷ்யசிருங்கர் அணிந்துள்ள க்லைங்கோடு
மரை-ஆனின் கொம்பே. மரையான் 19-ஆம் நூற்றாண்டில் கூட
ஊட்டி, கோவை மாவட்டங்களில் இருந்தன. பிறகு வேட்டையாடிகள்
கொன்றொழித்துவிட்டனர். மரையா/மரையான் = நீல்காய்,
http://en.wikipedia.org/wiki/Nilgai சிந்து சமவெளியில்
மரையானின் இடம் பெரிது. உலகம் முழுவதும் யுனிகார்ன்
myth தோன்றுவதற்கு அடிப்படை சிந்து சமவெளி மக்களே.
பின்னர் பௌத்தர்களால் சீனாவுக்கும், யவனர்களால் எகிப்து,
பின் கிரேக்கம் இந்த பாரதக் கதைகள் பரவியுள்ளன.
விடங்கர்/இடங்கர் http://en.wikipedia.org/wiki/Gharial -
இந்தியாவில் உள்ள முதலை மூன்று ஜாதிகளில் முக்கியமான ஒன்று.
தென்னாட்டு நதிகளில் இன்றும் இங்கொன்றும், அங்கொன்றுமாய் உயிர்தப்பி
வாழ்கிறது, அநேகமாக இடங்கர் சாதி முதலைகள் இங்கே அழிந்துவிட்டன என்றே
சொல்லலாம். வட இந்தியாவின் கங்கை நதியில் உள்ளது. பாகிஸ்தான்
சிந்து நதியில் அழிந்துவிட்டது. ஆனால் இந்தியாவின் தொடக்க கால
கலைப்படைப்புகளில், சமயங்களில் விடங்கர் வகித்த பாகம் பெரிது.
புறநானூற்றுப்
பாடல் ஒன்றில் 3 ஜாதிகள் கொண்ட முதலைகளும் பாடியுள்ளனர்.
அதற்குப் பேராசிரியர் உரையும் பாருங்கள். விடுதல் என்னும் வினையால்
பிறப்பது விடை-, விடங்கு (விடங்கர் பெயர்ச்சொல்), (இணை/இணங்கு,
மடை/மடங்கு, தடை/தடங்கு, .... என்று ஏராளமான சொற்றொகுதிகள்
ஒப்பீடு செய்யலாம்). விடை/விடங்கர் ஏறு என்னும் பொருளுடைத்து.
சிவன் விடை உகந்தான், ஏறுகந்தான்.
http://www.harappa.com/indus/32.html
விடங்கர் - ம்ருகபதியாய் உள்ள சிற்பம். என்ன 4000 ஆண்டு பழமையான
சிற்பத்தை தோண்டி எடுத்தவர்கள் (Rich Meadow team @ Harvard) என்ன
எழுதியுள்ளனர் பாருங்கள்:
Mohenjo-daro.Terracotta sealing from Mohenjo-daro depicting a
collection of animals and some script symbols. This sealing may have
been used in specific rituals as a narrative token that tells the
story of an important myth.
கொற்றவையின் பூசாரி அட்டணங்கால் போட்டு மரத்தில் அமர்ந்து
விடங்கரை நோக்குகிறான். தமாஷ் என்ன தெரியுமா? 50 ஆண்டுகளாய்
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆராயும் அறிஞர் ஆஸ்கோ பார்ப்போலா
”மரத்தில் உள்ள குரங்கு” என ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிவிட்டார்.
அவருக்கு விடங்கரின் முக்கியத்துவம், கொற்றியின் பூசகன் பற்றி
எழுதி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது, அருமையான
ஆய்வுக் கட்டுரை முதலை கல்ட் பற்றி எழுதியுள்ளார்கள்.
சிந்து சமவெளி சமயத்தின் மிக மிக முக்கியமான வெளிப்பாடு
விடங்கரை காட்டி நிற்கிறது. அப்போது வருணன் என்றும் சொல்லலாம்,
பிற்காலத்தில் சிவமகாதேவனாக விடங்கர் ஆகிறார். கொற்றவையுடன்
விடங்கர் புணரும் சிற்பங்களும் சிந்தில் உள்ளன. பல ஊர்களில்
கிடைக்கும் விடங்கர் சிற்பங்களுக்கு சிறப்பு என்ன தெரியுமா?
கொஞ்சம் போல் erosion இருக்கிறது. தொல்லியலார் பூ, பால்
அபிடேகம் சிந்து சமவெளி கிராமங்களில் அரசமரத்தடி, ஆலடி
ஓலை வேய்ந்த சிறு கோயில்களில் நடந்த பூசையோ? என்கின்றனர்.
அவர்கள் திருமுருகும், சங்கமும் படிக்கவேணும்.
தஞ்சையில் ராஜராஜன் கட்டிய கோயிலில் மேரு விடங்கர்,
சைவத் திருமுறையில் மதுரை சுந்தர விடங்கர் (பெருந்தேவபாணி),
தேவாரத்தில் விடங்கருக்கு வீரன் என்ற பொருள் தி. வே. கோபாலையர்
அளிக்கிறார். கொங்க விடங்கர் ஆலயம் உண்டு. அதில் வீர
ராஜேந்திர சோழன் சனிதோஷம் தீர்ந்தது என கல்வெட்டுள்ளது.
கானூரில் பிரளய விடங்கர் - அருமையான பிரபந்தமும், தன்னுரையும்
(ஆட்டோ-காமெண்டரி) இலந்தை நமக்குக் கொடுத்துள்ளார்.
விடங்கர்/இடங்கர் மிக ஆழமான பொருள் கொண்ட தமிழ்ச் சொல்.
ஹிந்து சமய வரலாற்றில் ஓர் அடிப்படையான சொல்.
அதனை, புராணகாரர்கள் பழம்நீ, ஆ இனன் கு டி, மறைக்காடு (< மரை),
... எனும் விளக்கம் போல வி + டங்கம் என்று பகுத்து கதை
சொல்வதுண்டு. டங்கம் உளி, உளி இல்லாமல் ஆன லிங்கம் விடங்கர்
என்று. ஆரூரில் வீதி விடங்கன். தில்லை விடங்கன் தல கும்பாபிடேகம்
அண்மையில் நடந்தது. தினமணியில் வந்த கட்டுரையில்
தில்லைவிடங்கன் பொருள் சொல்ல இடர்ப்பட்டுள்ளார் ஆசான்
என தெரிகிறது.
வேளாண் நாகரீகமான சிந்து சமவெளி செம்பூழிக் காலத்தின்
தமிழ்த் தொடர்பைக் காட்டுவதில் மீனும், விடங்கரும் முக்கியமானவை.
1920களில் தான் சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.
1930களில் மீன் சின்னத்தை தமிழுடன் தொடர்பு படுத்தினார்
ஹீராஸ் பாதிரியார். விடங்கர் முதலை - கொற்றி தொடர்புகளை
2007-ல் கட்டுரை வெளியிட்டேன்.
மகர விடங்கர் தென்கடலில் பிறக்கும் தை 1 பற்றியும்,
சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டை தொல்காப்பியர் திருநாள்
எனக் கொண்டாட வேண்டியதை வலியுறுத்தியும் டில்லி
பத்திரிகையில் எழுதியுள்ளேன். அச்சாகும் அக் கட்டுரையைப்
படித்து உங்கள் மேலான கருத்துகளை அறியத் தாருங்கள்.
5000 ஆண்டுகளாய் பாரதத்தில் உழவர் குடியினர்
கொண்டாடும் வேளாண் பருவச் சுழற்சியும், அதில்
மகர விடங்கரின் இடமும்:
http://groups.google.com/group/mintamil/msg/eee52cf09b1e3c6b
திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும் - அச்சில்:
சிந்தில் கொற்றவை - (ஐராவதம் கொற்றவை சிற்பத்தை
ஜல்லிக்கட்டு எனச் சொன்னது பொருந்தாது என எழுதினேன்)
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
சங்க இலக்கியம் குறிப்பிடும் இந்தியாவின் 3 இன முதலைகள்.
தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியர் 3 சாதிகள் என்கிறார்.
3 species of Indian crocodiles & their ancient Tamil/Dravidian names:
http://nganesan.blogspot.com/2012/01/fremont-library-lecture-2011.html
நா. கணேசன்
> 2012/4/24 kandavanam vina <vinayaga...@yahoo.com>
சிறப்பாப்ன விளக்கம். நன்றி.
வி. கந்தவனம்
--- On Thu, 4/26/12, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
|
|
மிக்க நன்றி.
|
|
தேவ்
On Apr 23, 2:38 pm, kandavanam vina <vinayaga...@yahoo.com> wrote:
> ஆசான் என்பதன் பொருள் யாது?
>
> வி. கந்தவனம்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை வரையறை தருகிறார்.
ஆசானுக்கு
தாயென அன்பு செய்து
தந்தைபோற் பரிந்து சொந்தச்
சேயென அணைத்துப் பேசிச்
செவ்விய அறிவு கூறித்
தூயநன் னடத்தை கற்கத்
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமு ளோனே
"ஆசான்" என் றழைக்கத் தக்கோன். 1
தப்பிதம் கண்ட போதும்
தண்டிக்க முனைந்தி டாமல்
நட்புடைத் தோழன் போல
நயமாக எடுத்துக் காட்டி
ஒப்புற வாகப் பேசி
உள்ளத்தை உருக்க வல்ல
அப்பெருந் தகைமை யேநல்
லாசானுக் கமைய வேண்டும். 2
மாணவன் நினைக்குந் தோறும்
மகிழ்தரும் வடிவ மாகக்
காணுறும் போதே நெஞ்சக்
கசடறு காட்சி யாகி
நாணுதல் இன்றிச் சீடன்
நண்ணுதற் கெளிய னாகும்
ஆணவம் அற்ற தன்மை
அமைந்தவன் அவனே ஆசான். 3
மன்னிய தனது கீர்த்தி
மறைந்திட நேர்ந்திட் டாலும்
தன்னிலும் தனது சீடன்
தகுதிகள் மிக்கோன் என்ன
மன்னவை மதிக்கு மாறு
மாநிலம் வாழ்த்தக் கண்டால்
அன்னையின் உவகை யென்ன
ஆனந்தம் அடைவான் ஆசான். 4
ஊதியம் குறைந்து நெஞ்சில்
உளைச்சலே மிகுவ தேனும்
பூதலத் திளைஞ ருக்கு
நல்வழி புகட்டு கின்றோம்
ஆதலின் ஆசான் வேலை
அறந்தலை சிறந்த தென்ற
காதலால் கடமை செய்யும்
கண்ணிய வானே ஆசான். 5
நாமக்கல் கவிஞர்
On Apr 26, 10:58 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:
> ஆசான் என்பதில் உள்ள ஆசு பொருத்துதல், சேர்த்தல் ஆகிய பொருள்களில் வருவது.
> யாப்பு மரபறிந்தவர்கள் ஆசு இடையிடுதல் பற்றி அறிவார்கள்.
> ஜீவாத்மாவை, அதன் அஞ்ஞானத்தை விலக்கி, ஜீவேஸ்வர சம்பந்தத்தைப் புகட்டி,
> பரமாத்மாவோடு ஐக்கியப் படும் முயற்சியில் செலுத்துபவரே ஆசான்.
> அ.ரா
>
வில்லி பாரதச் செய்யுள்
அற்றராபதிகருதியாசானோடுரைத்தவெலாம்
ஒற்றராலக்கணத்தேயுணர்ந்தமுரசக்கொடியோன்
மற்றராவணைதுறந்மாயனுக்கும்விசயனுக்குஞ்
சொற்றராபதநெருங்கத்தொடைத்தும்பைபுனைந்தானே.
"ஆசான் -ஆசார்யன் என்னும் வடசொல்லின் விகாரம்." -
http://www.tamilvu.org/slet/l3800/l3800pd1.jsp?bookid=57&auth_pub_id=83&pno=35
ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர்
ஸ்ரீஉ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர்
உரைகள்
----------
ஆசான், ஆசாள் இவற்றுடன் ஆச்சான் என்ற சொல்லையும் ஒப்பிடலாம்.
”இந்தத் திருவாய்மொழி வியாக்கியானங்களை வைணவர்கள் ‘பகவத்விஷயம்’ என்று
கொண்டு அவற்றைப் போற்றுவர். இவ்வுரையாசிரியர்களில்
தனிச்சிறப்புப் பெற்றவர் பெரியவாச்சான்பிள்ளை ( ஆசான் =
ஆச்சான் ). இவர், திருவாய்மொழிக்கு மட்டுமல்லாமல், நாலாயிர திவ்வியப்
பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச்
சக்கரவர்த்தி” என்பர்.”
http://www.tamilvu.org/courses/degree/d061/d0613/html/d0613332.htm
நா. கணேசன்