பராபவ - தமிழ் ஆண்டுப் பிறப்பு

8 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Apr 14, 2026, 2:51:40 PM (2 days ago) Apr 14
to சந்தவசந்தம்
பராபவ ஆண்டிதுவாம் பத்தாறில் ஒன்றில் 
பராபரை ஆற்றல் பரவ - முராரியுடன் 
கந்தன், கணேசன் கனிந்தே அருள்பொழியச் 
செந்தமிழ்நா(டு)  ஓங்கும்  சிறந்து!


நல்லாரைத் தேர்ந்தெடுக்க, நாட்டினிலே வாழ்மாந்தர் 
ஒல்லு வகையோங்க ஒற்றுமையால் - அல்லாரின் 
சிந்தை திருந்தச் செயல்கள் புனிதமுறச் 
செந்தமிழ்நா(டு)  ஓங்கும்  சிறந்து!

போர்நீங்க,நல்லார் புகழ்ஓங்க, நல்லமைதி 
பாரோங்க, மாந்தர்தம் பண்பாலே - சீரோங்க 
நந்தம் தமிழ்ப்பெருமை நானிலத்தில் மிக்கோங்கச் 
செந்தமிழ்நா(டு)  ஓங்கும்  சிறந்து!

அடியேன் பிறப்பெடுத்த ஆண்டிதுவே,சொல்லும் 
படியெதுவும் செய்யாப் பழனி! - படியெடுத்துத் 
தந்தை வழியே தமிழ்கற்றேன், போற்றுகிறேன் 
தந்த தமிழ்கொண்டு தான்!

அரசி. பழனியப்பன் 










அரசி. பழனியப்பன் 









Siva Siva

unread,
Apr 14, 2026, 3:48:33 PM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
Nice.

/ அடியேன் பிறப்பெடுத்த ஆண்டிதுவே /

Oh! Happy 60 coming this year then!

==

Arasi Palaniappan

unread,
Apr 14, 2026, 4:24:19 PM (2 days ago) Apr 14
to சந்தவசந்தம்
Thanks Tiru Siva siva

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPxZWPQfvWLBEi%3DBtLgFsMZwE6CQJSho-MRNzmXwD8MKQ%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Apr 14, 2026, 10:48:53 PM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
அறுபது ஆண்டு நிறைந்த அருந்தமிழ்ப் புலவரே. அருமை நுந்தம் கவினுறு வெண்பாக்கள்.

மென்மேலும் புகழேணியின் உயர்வடையவும் பல்லாண்டு நலமுடன் வாழவும் அடியேனின் வாழ்த்துகள்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 15, 2026, at 01:54, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Arasi Palaniappan

unread,
Apr 15, 2026, 2:26:39 AM (yesterday) Apr 15
to சந்தவசந்தம்
அன்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி அண்ணலே!🙏

Subbaier Ramasami

unread,
Apr 15, 2026, 9:33:55 AM (17 hours ago) Apr 15
to santhav...@googlegroups.com
மிக அரிய வாழ்த்து

இலந்தை

On Tue, Apr 14, 2026 at 2:51 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Apr 15, 2026, 9:55:58 AM (17 hours ago) Apr 15
to சந்தவசந்தம்
மிக்க நன்றி தலைவரே!

அறுபது காணும் என்னையும் வாழ்த்த வேண்டுகிறேன்!


Reply all
Reply to author
Forward
0 new messages