குழந்தையும் பொம்மையும் - மீ. விசுவநாதன்

3 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 19, 2026, 8:55:05 PM (3 days ago) Mar 19
to Santhavasantham, M. Viswanathan
"குழந்தையும் பொம்மையும்"
           (மீ. விசுவநாதன்)

குழந்தை கையில் பொம்மை - தினம்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
பழமும் பாலும் ஊட்டும் - புதுக்
கதைகள் பலவும் சொல்லும்
அழகாய் மடியில் வைத்து -  தன்
அமுதக் குரலில் பாடி
பொழுதில் தூங்க வைக்கும் -  மறு
பொழுதில் தானும் தூங்கும்

கையில் உள்ள பொம்மை - தான்
அயர்ந்து தூங்கும் போது
பைய நழுவிப் போகும் - மனப்
பற்றை அதுபோல் வைத்துச்
செய்யும் வேலை யாவும் - கர்ம
வீரன் போலச் செய்வோம்
பொய்யி லாத அன்பால் - சிறு
குழந்தை போல வாழ்வோம்.
           (18.03.2026 21.11 pm)

Ram Ramakrishnan

unread,
Mar 19, 2026, 10:37:16 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
கருத்து செறிந்த பாடல், அருமை, திரு. மீ.வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 20, 2026, at 06:25, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-uR6RZ3itFc9WnSE4wChOiSY9SHUY7kfkDfv6EfWYsZDw%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Mar 19, 2026, 11:50:10 PM (2 days ago) Mar 19
to Santhavasantham
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
அன்பன்
மீ. விசுவநாதன்

Arasi Palaniappan

unread,
Mar 19, 2026, 11:51:52 PM (2 days ago) Mar 19
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை அண்ணா!

--
Reply all
Reply to author
Forward
0 new messages