Re: Pradhosham

463 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 21, 2024, 11:03:59 AM2/21/24
to santhav...@googlegroups.com

Pradhosham in Chidhambaram 🙏🌺🙏
திருச்சிற்றம்பலம்.                      
திருச்சிற்றம்பலம்.                                திருச்சிற்றம்பலம்                                        திருச்சிற்றம்பலம்.                              இதுவே இன்றைய பிரதோஷப் பாடல்  🙏🌺🙏.         இதுவே இன்றைய பிரதோஷப் பாடல் 🙏🌺🙏
                                         Feb 11, 2024, at 5:31 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


பிரதோஷப் பாடலுக்குப் பின்னூட்டம் தந்த பெரியோர்களுக்கு என் நன்றி.

அனந்த்

On Sun, Feb 11, 2024 at 5:26 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
Thanks.
I had labelled it as Kalith thuRai (instead of KattaLaik kaliththuRai) for its not strictly obeying KKT rules. 
ananth

On Wed, Feb 7, 2024 at 8:38 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Nice.

மனையவள் உன்னை மதியா ளிதை

On Wed, Feb 7, 2024 at 4:39 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

பதத்தில் இருத்திடுவாய்

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                    <> பதத்தில் இருத்திடுவாய் <>


(கலித்துறைப் பா)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 22, 2024, 11:17:22 AM2/22/24
to santhav...@googlegroups.com

பிரதோஷ நன்னாளாகிய நேற்று இட இயலாது போன பாடல் கீழே:

திருச்சிற்றம்பலம்

                          <>  காப்பாய் <>



                  
AruNachalam.jpg

அகந்தையின் நீட்சியாம் எண்ணங்கள் அளிக்கும்

சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா

வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்

அண்ணா மலையாய் நிதம்.


(நீட்சி = நீட்டல்; வரை = மலை; நிதம் = நித்யம்சாச்வதம்.)

..... அனந்த்  21/22-2-1024


On Wed, Feb 21, 2024 at 9:33 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
🙏இதுவே இன்றைய பிரதோஷப் பாடல்  🙏🌺🙏.     

 திருச்சிற்றம்பலம்     
 திருச்சிற்றம்பலம்                                     
 திருச்சிற்றம்பலம்.        
Pradhosham in Chidhambaram 🙏🌺 🙏           
----------------------------------          

Siva Siva

unread,
Feb 22, 2024, 11:40:16 AM2/22/24
to santhav...@googlegroups.com
Nice.

Some comments below.

V. Subramanian

On Thu, Feb 22, 2024 at 11:17 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

                          <>  காப்பாய் <>

அகந்தையின் நீட்சியாம் எண்ணங்கள் அளிக்கும்

சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா

வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்

அண்ணா மலையாய் நிதம்.


-->  / சகத்தினை /
சகந்தனை - என்றால் எதுகையொலி இன்னும் சிறக்கும்.

-->
ஈற்றடியில் மோனை அமைக்க முயன்றிலீர்போல்.


Ram Ramakrishnan

unread,
Feb 22, 2024, 12:51:02 PM2/22/24
to santhav...@googlegroups.com
அருமையான பிரதோஷத் துதி, அனந்த் ஜீ
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2LjcsPbqmvqhvNmRpa971nvsSFN%3D_%2Ba7xoFTszxbYEfA%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Feb 22, 2024, 10:42:22 PM2/22/24
to santhav...@googlegroups.com
எண்ணங்கள் அளிக்கும் - எண்ணம் அளிக்கும்?
கோபால். 

On Thu, Feb 22, 2024 at 9:47 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

பிரதோஷ நன்னாளாகிய நேற்று இட இயலாது போன பாடல் கீழே:

திருச்சிற்றம்பலம்

                          <>  காப்பாய் <>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 23, 2024, 2:08:03 AM2/23/24
to santhav...@googlegroups.com
Thanks very much for all who read my poem and for the feedback comments

சிவசிவா: >> / சகத்தினை /   -- சகந்தனை - என்றால் எதுகையொலி இன்னும் சிறக்கும்.
ஆம் , அவ்வாறு மாற்றுகிறேன்.
ஈற்றடியில் மோனை அமைக்க முயன்றிலீர்போல். - ஆம்.

கோபால்: எண்ணங்கள் அளிக்கும்எண்ணம் அளிக்கும்?  
வேதாந்தத்தின்படி, நாம் புறத்தே காணும், செயல்படும், துய்க்கும் உலகம் யாவும் (கனவுலகம் உட்பட)  நம்மை மெய்ப்பொருளிலிருந்து பிரித்து உணர வைக்கும் அகந்தையின் விளைவுகளே.   அந்த உணர்வின் (அகந்தையின்) மூலம்  `நான்` என்னும் தனி (`தனித்துவ`) எண்ணமே. அது எழுந்த உடனேயே அது தொடர்ந்து பல எண்ணங்களால், நாம் துய்க்கும் வெளியுலகத்தைத் தோற்றுவிக்கிறது/அளிக்கிறது. எனக்குத் தெரிந்தது இவ்வளவே. 

அனந்த்

GOPAL Vis

unread,
Feb 23, 2024, 7:24:56 AM2/23/24
to santhav...@googlegroups.com
கோபால்: எண்ணங்கள் அளிக்கும் எண்ணம் அளிக்கும்?  
நான் தளை விலகலைச் சுட்டியிருந்த போதிலும், உங்கள் விளக்கம் கிட்டிய பேறு பெற்றேன். 
ப்ரபஞ்சம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்குள்ள பெரும்பாலான பொருள்கள் உண்மைக்கு மாறான பிம்பத்தைச் சுட்டுவனவாகவே இருப்பது நோக்கத் தக்கது. பிரபஞ்சம் என்பது காட்சி எதுவாகத் தெரிகிறதோ அதுவே! ஆகவே அதன் உருவமும் தன்மையும் காண்பவருக்குப் புலப்பட்டவாறே என்பதைச் சுட்டும் அருமையான பெயர்/சொல் ப்ரபஞ்சம்! 
கோபால். 

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 23, 2024, 11:27:08 AM2/23/24
to santhav...@googlegroups.com
நன்றி கோபால். பிரபஞ்ச விளக்கம் அருமை. லோகம் என்பதும் புறக் கண்ணால் காணும் காட்சியைக் குறிப்பது அன்றோ?

திருத்திய வடிவம். ஈற்றடி மோனைக் குறைவையும் சரிசெய்து:.  

 அகந்தையின் நீட்சியாம் எண்ணம் அளிக்கும்*

சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா

வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்

அண்ணா அருளாழி யே.


(குறிப்பு:  ”எண்ணங்க ளேமனம் யாவினும் நானென்னும்

எண்ணமே மூலமாம் உந்தீபற 

யானாம் மனமெனல் உந்தீபற;

அருணமலையைப் பகவான் ரமணர் அருட்கடல் என்று குறித்தல் உண்டு.)


அனந்த் 23-2-2024 

Anand Ramanujam

unread,
Feb 24, 2024, 12:33:38 AM2/24/24
to santhav...@googlegroups.com
அருமை!

“தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்”
“பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்”

என்னும் திருமந்திர வாசகங்களை நினைவுறுத்துகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 7, 2024, 11:29:45 AM3/7/24
to santhav...@googlegroups.com

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


          சிவன்பாலபிஷேகம்.jfif


இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார

ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த

பாசமற வேண்டிப் பரிந்து.

                              **********

                     <> உருகினேனே <> 


     நடராஜர் பாலபிஷேகம்.jpeg


உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

காத்துநீ கனகம் வேய்ந்த

மன்றினைக் காட்டி மலையையும் காட்டி

மயிலையில் அன்னை யோடு

நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட

.. நலத்தினில் உருகி னேனே.

                              **********

அனந்த்  8-3-2024

Kaviyogi Vedham

unread,
Mar 7, 2024, 8:54:26 PM3/7/24
to santhav...@googlegroups.com
யாவும் அழகே  அநந்த். வாழ்க
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 7, 2024, 9:17:47 PM3/7/24
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்கள், அனந்த் ஜீ.

மிகவும் ரசித்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
Mar 7, 2024, 10:08:15 PM3/7/24
to santhav...@googlegroups.com
Nice.

/கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்/
காணுறு = ?
காண்புறு?

/மன்றினைக் காட்டி மலையையும்/
In the meter you are using for this song, should not this காட்டி seer be a விளம்?

V. Subramanian


On Thu, Mar 7, 2024 at 11:29 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


                              **********

                     <> உருகினேனே <> 


     


GOPAL Vis

unread,
Mar 7, 2024, 10:37:04 PM3/7/24
to santhav...@googlegroups.com
அருமை! இம்முறை தாய்நாட்டில் பெற்ற சிவ தரிசன அனுபவத்தின் மகிழ்ச்சி பாடல்களில் தென்படுகிறது.
கோபால்.

On Thu, Mar 7, 2024 at 9:59 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 

இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார

ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த

பாசமற வேண்டிப் பரிந்து.

                              **********

                     <> உருகினேனே <> 

உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

GOPAL Vis

unread,
Mar 7, 2024, 10:39:58 PM3/7/24
to santhav...@googlegroups.com
பிரதோஷ/சிவராத்திரிப் பாடல்
[08 மார்ச் 2024]
[எழுசீர்; கருவிளம்x6 + புளிமாங்காய்]

சொல்லில் சிவம் இனித்திட!

உடுக்கையில் உதித்தெழும் ஒலித்துளி தமையெமக்(கு)
……உணர்வென வெளிப்படும் மொழியாகக்
கொடுத்தனை! அதைக்கொடு குவித்திரு கரத்தொடு
……குனிந்துநின் பதங்களைத் துதியாமல்,
அடுத்தவர் இடத்தினில் அரட்டையில் இறைத்திட,
……அடைப்புகள் உடைந்தவொர் வெளமாகிக்
கெடுத்திடு மிறைச்சலிற் கிறங்கிடும் அவத்தையில்
……கிறுக்கிய எழுத்தென இழிவாகும்..(1)

நினைத்துனை அழைப்பது நிலத்தினில் பிறந்தவன்
……நெடுந்தொடர்த் தவப்பயன் இலையோ?நான்
உனைச்சிவ, நுதற்கண, உமைக்கிடம் அளித்தவ,
……உரப்பணி உகந்தவ, எனவோதும்
வினைப்பயன் அறுத்திடும் விதிச்சுமை அகற்றிடும்
……விழுத்துணை மகத்துவம் கைவராமல்
எனைக்கவும் அகந்தையின் இழுப்பினில் அரற்றியே
……இலக்கற அளக்கிறேன் ஒருநோய்போல்!..(2)

சடைக்கிடை சிறைப்படு தணப்பொடு, மிடுக்கொடு
……தருக்கிடும் அரைப்பிறைத் தலையோனே!
விடைப்பரி உகந்தவா, விடக்குவி உனக்கென
……விணோர்க்கமு(து) எனப்பகிர்ந்(து) அருள்வோனே!
படைப்பவன் அளப்பவன் பறக்கினும் தொளைக்கினும்
……பரப்பினை அறிந்திடாச் சுடரே!நீ
துடைத்திடென் அழுக்கினைத் துலக்கிடென் மனத்தினைச்
……சொலிற்சிவம் இனித்திடத் தருவாயே!..(3)

உருத்திர நடத்தினில் ஒலிக்கிற மறைக்கிடை
……உடுக்கிசை முழக்கொடு மகிழ்வோனே!
பருப்பதி இடத்தவ, பணிந்தவர்க்(கு) இரங்கிடும்
……பனிக்கிணை அருட்குளிர் விழியோனே!
வருத்தமும் மகிழ்ச்சியும் வருந்தொறும் திருவடி
……மலரினில் சமர்ப்பணம் பணுவேனோ!
கருத்தினிற் குறையறக் கடுஞ்சொலின் உறவறக்
……கனிந்தமென் மொழிவரப் பெறுவேனோ!..(4)

அரநினக்(கு) இணையிலை அணையெலை முடிவிலை
……அறிந்திட வொணாப்பெருஞ் சிவச்சோதி!
உரத்(து)அர எனச்சொலின் உலப்பிலி இனிப்பென
……உணர்ந்தவர் சொலப்பினும் அறியாமல்
திரம்பெறாத் திரவியம் திருவென விழைந்திவண்
……சிறுமையில் உழன்றலைந் ததுபோதும்!
சிரத்தையோ(டு) இனிக்குமச் சிவசிவ எனுமருஞ்
……செபத்தினில் உறைந்திட அருளாயே!..(5)
— — — — — — — — — — — — — —
சொற்பிரிவு; பொருள்:

உடுக்கையில் உதித்தெழும் ஒலித் துளி தம்மை எமக்கு உணர்வென வெளிப்படும் மொழியாகக் கொடுத்தனை! அதைக்கொண்டு,
குவித்த இரு கரத்தொடு, குனிந்து நின் பதங்களைத் துதியாமல்,
அடுத்தவர் இடத்தினில் அரட்டையில் இறைத்திட,
அடைப்புகள் உடைந்த ஒரு வெள்ளமாகி,
கெடுத்திடும் இறைச்சலில் கிறங்கிடும் அவத்தையில்
கிறுக்கிய எழுத்தென இழிவாகும்..(1)
[உன் உடுக்கையிலிருந்து எழுந்த ஒலித்துளிகளை எமக்கு மொழியாக நீ கொடுத்திருக்கிறாய். அதைக் கொண்டு உன்னைத் துதியாமல் மொழியை அரட்டைகளில் விரயம் செய்வதால் அது கிறுக்கிய எழுத்துபோல் இழிவாகிப் போகிறது!]

நினைத்து உன்னை அழைப்பது நிலத்தினில் பிறந்தவன் நெடுந்தொடர்த் தவப்பயன் இல்லையோ?
நான் உன்னைச்
சிவ, நுதற்கண்ண, உமைக்கு இடம் அளித்தவ, உரப் பணி உகந்தவ, என ஓதும் வினைப் பயன் அறுத்திடும் விதிச் சுமை அகற்றிடும் விழுத்துணை மகத்துவம் கைவராமல்,
என்னைக் கவ்வும் அகந்தையின் இழுப்பினில் அரற்றியே, இலக்கற அளக்கிறேன், ஒருநோய் போல்!..(2)
[உன்னை எண்ணி அழைப்பது என்பது பலகாலத் தவப்பயன் அன்றோ! பாவங்களை நீக்கும் உன்னதமான உன் பெயர்களைச் சொல்லி உன்னை அழைப்பது கைவராமல், என்னைப் பிடித்த அகந்தையின் இழுப்பில் இலக்கின்றி ஒரு நோயாளன் போல் அரற்றிக் கொண்டிருக்கிறேன்.
உரம் = மார்பு; பணி = பாம்பு; உகந்தவ = விரும்புபவனே! அளத்தல் = வெற்றுப் பேச்சுப் பேசுதல்]

சடைக்கு இடை சிறைப்படு தண் அப்பொடு, மிடுக்கொடு தருக்கிடும் அரைப் பிறைத் தலையோனே!
விடைப் பரி உகந்தவா, விடக் குவி உனக்கென விண்ணோர்க்கு அமுது எனப் பகிர்ந்து அருள்வோனே!
படைப்பவன் அளப்பவன் பறக்கினும் தொளைக்கினும் பரப்பினை அறிந்திடாச் சுடரே!
நீ துடைத்திடு என் அழுக்கினைத் துலக்கிடு என் மனத்தினைச் சொல்லில் சிவம் இனித்திடத் தருவாயே!..(3)
[சடைக்குள் சிறைப்பட்ட தண்ணீரோடு, மிடுக்குடன் கருவமாய் மிளிரும் அரைப் பிறையையும் சூடிய தலையை உடையவனே! காளை வாகனம் விரும்புபவனே! விடத்தின் திரளை உனக்கென்றும் அமுதைத் தேவருக்கும் என்றும் பகிர்ந்தவனே! படைப்பவனாகிய பிரமன் பறந்தும், காப்பவனாகிய அரி தொளைத்தும் முயன்ற போதும் அறிய முடியாதவாறு பரந்திருக்கும் சோதியே! என் மனத்தைச் சுத்தம் செய்து என் வாக்கில் சிவம் இனிக்க அருள வேண்டும்!
அப்பு = நீர்;
கோபப்பட்ட கங்கை சிறைப் பட்டாள். அரைகுறையான நிலா கருவப் படுகிறது. இறைவன் விடமேற்று அமுதை அருள்கிறான்.]

உருத்திர நடத்தினில் ஒலிக்கிற மறைக்கு இடை
……உடுக்கு இசை முழக்கொடு மகிழ்வோனே!
பருப்பதி இடத்தவ, பணிந்தவர்க்(கு) இரங்கிடும்
……பனிக்கு இணை அருள் குளிர் விழியோனே!
வருத்தமும் மகிழ்ச்சியும் வருந்தொறும் திருவடி
……மலரினில் சமர்ப்பணம் பண்ணுவேனோ!
கருத்தினிற் குறை அறக் கடுஞ்சொல்லின் உறவு அறக்
……கனிந்த மென் மொழி வரப் பெறுவேனோ!..(4)
[பருப்பதி இடத்தவ = பார்வதியை இடப்பகுதியில் கொண்டவனே! பனிக்குச் சமமாக அருளால் குளிர்ந்த விழியோனே! நான் என் சுக துக்கங்களை உன்னிடம் சமர்ப்பித்தவனாகி, நல்ல எண்ணமும் இனிய பேச்சும் பெற்றிருக்க வேண்டும்!]

அர! நினக்(கு) இணையில்லை அணை எல்லை முடிவு இல்லை!
அறிந்திட ஒண்ணாப் பெருஞ் சிவச்சோதி!
உரத்து அர எனச் சொல்லின் உலப்பு இலி இனிப்பு என உணர்ந்தவர் சொல்லப் பின்னும் அறியாமல்,
திரம் பெறாத் திரவியம் திருவென விழைந்து, இவண்
……சிறுமையில் உழன்று அலைந்தது போதும்!
சிரத்தையோ(டு) இனிக்கும் அச் சிவசிவ எனும் அருஞ்
……செபத்தினில் உறைந்திட அருளாயே!..(5)
[உலப்பு இலி = தீராதது; திரம் = நிரந்தரம்;
உணர்ந்தவர்கள், அர என்று உரக்கச் சொல்வது தீரா இனிப்பு என்று சொல்லியும், அதில் நாட்டமின்றி, செல்வத்தை நாடி அலைந்தது போதும். சிவசிவ என்னும் இனிய ஜபத்தில் ஈடுபட அருள் செய்க!]

நல்வாழ்த்துகள்
கோபால்
[08/03/2024]VGK

குருநாதன் ரமணி

unread,
Mar 8, 2024, 3:44:00 AM3/8/24
to சந்தவசந்தம்
பாட்ல்கள் அருமை, அனந்த் ஸார்.
ரமணி

On Thursday, March 7, 2024 at 9:59:45 PM UTC+5:30 VETTAI ANANTHANARAYANAN wrote:

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 

     

 

இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

Ram Ramakrishnan

unread,
Mar 8, 2024, 8:12:00 AM3/8/24
to santhav...@googlegroups.com
ஆகா! என்ன சரளம், என்ன நடை!

மிகவும் ரசித்தேன், திரு. கோபால்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 7, 2024, at 22:37, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 8, 2024, 9:06:59 AM3/8/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராம். 
கோபால். 

On Fri, Mar 8, 2024 at 6:42 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
ஆகா! என்ன சரளம், என்ன நடை!

மிகவும் ரசித்தேன், திரு. கோபால்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 7, 2024, at 22:37, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


. . . . . . . 

N. Ganesan

unread,
Mar 8, 2024, 9:12:31 AM3/8/24
to சந்தவசந்தம்
சிவ தாண்டவ தோத்திரம்: https://youtu.be/SMrG9t0sE1M
சம்பு நடனம்: https://youtu.be/aopCCxY2UBA  (தில்லைக் கூத்தன் மீது)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 9, 2024, 8:04:53 AM3/9/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, ராம்கி.

அனந்த்
Please keep the minimal details in the post you are replying to (deleting pics in particular) in order to save google space

On Thu, Mar 7, 2024 at 6:17 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமையான பாடல்கள், அனந்த் ஜீ.

மிகவும் ரசித்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Thu, Mar 7, 2024 at 11:29 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 9, 2024, 8:05:48 AM3/9/24
to santhav...@googlegroups.com
உங்கள் பாராட்டுக்கு நன்றி ரமணி.

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 9, 2024, 8:16:37 AM3/9/24
to santhav...@googlegroups.com
படித்துக் கருத்து சொன்னதற்கு நன்றி சிவசிவா.

காணுறு பற்றி: இராமலிங்க அடிகளார் பாடல் ஒன்று கீழே:

     காணுறு பசுக்கள் கன்றுக ளாதி
          கதறிய போதெல்லாம் பயந்தேன்
     ஏணுறு மாடு முதல்பல விருகம்
          இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்




On Thu, Mar 7, 2024 at 7:08 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Nice.

/கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்/
காணுறு = ?
காண்புறு?

/மன்றினைக் காட்டி மலையையும்/
In the meter you are using for this song, should not this காட்டி seer be a விளம்?
    ஆம். மன்றினைக் காட்டியோர் மலையையும் காட்டி என மாற்றுகிறேன் (ஓர் என்பது உயர்வையும் குறிக்கும்):

உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

… காத்துநீ கனகம் வேய்ந்த

மன்றினைக் காட்டியோர் மலையையும் காட்டி

… மயிலையில் அன்னை யோடு

நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட

.. நலத்தினில் உருகி னேனே.

 
மீண்டும் நன்றி. 
அனந்த் 9-3-2024

V. Subramanian


On Thu, Mar 7, 2024 at 11:29 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 9, 2024, 8:18:16 AM3/9/24
to santhav...@googlegroups.com
நன்றி கோபால்.

அனந்த்

On Thu, Mar 7, 2024 at 7:37 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
அருமை! இம்முறை தாய்நாட்டில் பெற்ற சிவ தரிசன அனுபவத்தின் மகிழ்ச்சி பாடல்களில் தென்படுகிறது.
கோபால்.

On Thu, Mar 7, 2024 at 9:59 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

                     <> உருகினேனே <> 

உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

காத்துநீ கனகம் வேய்ந்த


                              **********

அனந்த்  8-3-2024


 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 21, 2024, 9:47:26 PM3/21/24
to santhav...@googlegroups.com

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


                               <> அன்பருக்கு அன்பன் <>

                


 தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்

...தோன்றும் உடலை நாளுந்

.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்

.......சுழலும் அவதி நீங்கக்


காலை உயர்த்தியருள் காட்டும் கரமுடைய

.. கடவுள் உன்னை அண்டிக்

.. காலை பகலந்தி காலம் தவறாமல்

….. கரங்கள் குவிக்கு மன்பர்


மாலை யறுத்திதயத் தேபுக் காங்கவரை

… வாழ்வித் துயர்த்து முன்சீர்

….. வாய்கொண் டுரைத்திடவு மாமோ அடியனுமுன்

….. வாயில் வந்து நின்றேன்


பாலை அளித்துதமிழ்ப் பாடல் மழைபொழியப்

..பாலர்க் குதவு பரமா

..... பாலை நிகர்மொழியள் பக்கல் துணையிருக்கப்

…...பரதம் புரியு(ம்) ஐயே.


(மாலை = மயக்கத்தை, மாயையை; பாலர் – திருஞானசம்பந்தர்; ஐயே = ஐயனே. )

                                                                           ... அனந்த் 21-3-2024

https://vsa-pradoshappaadalgal.blogspot.com/       

=========================================
On Thu, Mar 7, 2024 at 1:00 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார

ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த

பாசமற வேண்டிப் பரிந்து.

                              **********

                     <> உருகினேனே <> 


 

உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

காத்துநீ கனகம் வேய்ந்த

மன்றினைக் காட்டி மலையையும் காட்டி

மயிலையில் அன்னை யோடு

நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட

.. நலத்தினில் உருகி னேனே.

                              **********

அனந்த்  8-3-2024

On Thu, Feb 22, 2024 at 8:17 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

பிரதோஷ நன்னாளாகிய நேற்று இட இயலாது போன பாடல் கீழே:

திருச்சிற்றம்பலம்

                          <>  காப்பாய் <>



..... அனந்த்  21/22-2-1024

Ram Ramakrishnan

unread,
Mar 21, 2024, 9:55:43 PM3/21/24
to santhav...@googlegroups.com
அருமையான பதினான்கு சீர் விருத்தம், அனந்த் ஜீ.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 21, 2024, at 21:47, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 21, 2024, 10:06:48 PM3/21/24
to santhav...@googlegroups.com
Nice.

தொடர்ந்து பேணியதைப் போற்றிப் /

ஒருபொருட்பன்மொழியோ?

பாலை நிகர்மொழியள் /
If you want to avoid repeating பாலை  - As in thiruppugazh, பாகு கனிமொழி may fit as well.

V. Subramanian

On Thu, Mar 21, 2024 at 9:47 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


                               <> அன்பருக்கு அன்பன் <>

     

GOPAL Vis

unread,
Mar 21, 2024, 10:07:09 PM3/21/24
to santhav...@googlegroups.com
மிக அருமை!
கோபால்

On Fri, Mar 22, 2024 at 7:17 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 

                               <> அன்பருக்கு அன்பன் <>

 தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்

...தோன்றும் உடலை நாளுந்

.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்

.......சுழலும் அவதி நீங்கக்

. . . . . . . . .

GOPAL Vis

unread,
Mar 21, 2024, 10:08:13 PM3/21/24
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [22 மார்ச் 2024]

வண்ணச் சந்தம் (90)
[தானத்த தனதானா தானத்த தனதானா
தானத்த தனதானா தனதான]

கூடல் அரசே!

தேனொத்த பெயரோனே வாளொத்த நுதல்மீதார்
……தீயொத்த விழியோனே செமையான
……சீரற்ற சடைமீறா நீரத்தில் நனைவோனே!
……தேகத்தில் எரிநீறால் மிளிர்வோனே!

வானொத்த பெரியோனே கூறுற்ற பிறைசூடீ
……மார்சுற்று பணிதாராம் அணியாக
……மாவெற்பு மகளானாள் மாலுக்க னுசையானாள்
……மாதொட்டி இடமேவோர் உருவோனே!

கானொப்ப அதனூடே பேயொப்ப அவையோடே
……காலொத்து நடமாடீ! களநீலா!
……காயத்தில் அழலேறா நாளுக்குள் முடிமேலோர்
……காலிட்டு வினைதீராய் மறவாமல்!

கூனொற்றை எயிறானோ(டு) ஓர்பச்சை மயில்மேலூர்
……கூர்மிக்க தொருவேலோ னணைவாகக்
……கோலத்தி லழகானாய்! மாசத்தி மணவாளா
……கூடற்கொர் அரசானாய் பெருமானே!

— — — — — — — — — —

சொற்பிரிவு; பொருள்:

தேன் ஒத்த பெயரோனே! வாள் ஒத்த நுதல் மீது ஆர்
……தீ ஒத்த விழியோனே!
[நுதல் = நெற்றி; ஆர் = விளங்குகிற]
செம்மையான
……சீர் அற்ற சடை மீறா நீரத்தில் நனைவோனே!
[நீரம் = நீர்; செம்மை = சிவப்பு; சடை மீறா = சடையை விட்டு விலகாத]
……தேகத்தில் எரி நீறால் மிளிர்வோனே!
[தேகம் = உடல்; எரி நீறு = சூடான சாம்பல்]

வான் ஒத்த பெரியோனே கூறு உற்ற பிறை சூடீ
[கூறு உற்ற = முழுமை இழந்த]
……மார் சுற்று பணி தாராம் அணியாக
[பணி = பாம்பு; தார் = மாலை; அணி = அழகு, ஆபரணம்]
……மா வெற்பு மகள் ஆனாள் மாலுக்கு அனுசை ஆனாள்
[வெற்பு = மலை; அனுசை = தங்கை]
……மாது ஒட்டி இடம் மேவு ஓர் உருவோனே!
[மாது = பெண்; ஒட்டி = இணைந்து; இடம் = இடப்பக்கம்]

கான் ஒப்ப அதன் ஊடே பேய் ஒப்ப அவையோடே
[கான் ஒப்ப = காடு விருப்பமாக; ஊடே = இடையே; பேய் ஒப்ப = பேய்கள் பொருத்தமென]
……கால் ஒத்து நடம் ஆடீ! கள நீலா!
[ஆடீ = ஆடுபவனே! களம் = கழுத்து; கள நீலா = நீலகண்டனே!]
……காயத்தில் அழல் ஏறா நாளுக்குள் முடிமேல் ஓர்
[காயத்தில் = (என்) உடலில்; அழல் = நெருப்பு; முடிமேல் = (என்)தலைமீது]
……கால் இட்டு வினை தீராய் மறவாமல்!
[கால் இட்டு = காலை வைத்து]

கூன் ஒற்றை எயிறானோடு ஓர் பச்சை மயில் மேல் ஊர்
……கூர் மிக்கதொரு வேலோன் அணைவாகக்
[கூன் = வளைந்த; ஒற்றை எயிறான் = ஒரே தந்தத்தை உடையவன்; ஊர் = பவனி வருகின்ற; அணைவாக = அருகிலிருக்க]
……கோலத்தில் அழகானாய்! மா சத்தி மணவாளா
……கூடற்கு ஒர் அரசானாய் பெருமானே!
[கூடல் = மதுரைப் பதி; ஒர் = இணையற்ற]


நல்வாழ்த்துகள்
கோபால்.

सर्वे जना: सुखिनो भवन्तु ।


On Fri, Mar 8, 2024 at 9:10 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷ/சிவராத்திரிப் பாடல்
[08 மார்ச் 2024]
[எழுசீர்; கருவிளம்x6 + புளிமாங்காய்]

சொல்லில் சிவம் இனித்திட!

உடுக்கையில் உதித்தெழும் ஒலித்துளி தமையெமக்(கு)
……உணர்வென வெளிப்படும் மொழியாகக்
. . . . . . . . . . . . . . . . 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 21, 2024, 11:00:23 PM3/21/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
அனந்த்

On Thu, Mar 21, 2024 at 9:55 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமையான பதினான்கு சீர் விருத்தம், அனந்த் ஜீ.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 21, 2024, at 21:47, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:



இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


                               <> அன்பருக்கு அன்பன் <>

                


 தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்

...தோன்றும் உடலை நாளுந்

.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்

.......சுழலும் அவதி நீங்கக்



                              **********

குருநாதன் ரமணி

unread,
Mar 21, 2024, 11:19:00 PM3/21/24
to சந்தவசந்தம்
அருமையான பாடல், அனந்த் ஸார்.
ரமணி

On Friday, March 22, 2024 at 7:25:43 AM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
அருமையான பதினான்கு சீர் விருத்தம், அனந்த் ஜீ.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 21, 2024, at 21:47, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:



இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


                               <> அன்பருக்கு அன்பன் <>

 தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 21, 2024, 11:19:36 PM3/21/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, சிவசிவா.

>>தொடர்ந்து பேணியதைப் போற்றிப் /  -> ஒருபொருட்பன்மொழியோ? அவ்வாறும் கொள்ளலாம்.
பேணல் = விரும்பல், காத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டது. போற்றல் என்ற பொருளுமுண்டு, அதன் பின்னர் வரும், போற்றி (=துதித்து, உபசரித்து) என்ற சொல் உடலைச் சிலாகித்துப் புகழ்வதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்/கொள்ளவும்.   

> பாலை என்ற சொல்லை இருமுறை பயன்படுத்தல் பற்றிச் சுட்டியதற்கு நன்றி. அதை மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை.  
... அனந்த்

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 21, 2024, 11:20:39 PM3/21/24
to santhav...@googlegroups.com
கருத்திற்கு நன்றி, ரமணி.

அனந்த்

குருநாதன் ரமணி

unread,
Mar 21, 2024, 11:22:25 PM3/21/24
to சந்தவசந்தம்
அருமை, கோபால்ஜி.
ரமணி

குருநாதன் ரமணி

unread,
Mar 22, 2024, 2:05:19 AM3/22/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்
பிரதோஷத் துதி: தட்டழிவு குன்ற அருள்வீரே!
0344. தத்ததன தந்த | தத்ததன தந்த | தத்ததன தந்த —— தனதான
(வண்ணப் பாடல்)

பித்தனென வந்து அத்தனென நின்று
. . பிச்சைதனை யுண்டு —— மகிழ்வீரே
. பிற்பகல கன்ற அத்தமனம் வந்து
. . பெட்டனிவன் நின்று —— களியேனே
 [பெட்டன்: பொய்யன்]

வத்தியொளி சிந்த அற்பமன மெங்கும்
. . வக்கிரம கன்ற —— ஒளிவீச
. வட்டமிடு கண்கள் அர்ச்சனைமு ழங்கும்
. . வச்சியமு வந்து —— மகிழேனே
 [வத்தி: திரி; வக்கிரம்: கோணல், கலக்கம்; வச்சியம்: வசியம்]

எத்தனனுளம் வந்து சித்துருவில் என்றும்
. . எக்கணமும் நின்று —— அருள்வீரே
. எப்பொழுதும் உங்கள் அற்புதமு வந்து
. . எச்சுதலில் நின்று —— வருநாளில்
 [எத்தன்: என்னை நானே ஏமாற்றிக் கொள்வதால் எத்தன்; எச்சுதல்: வணங்குதல்]

தத்துவம றிந்து கற்பனையை வென்று
. . தத்வமசி விந்தை —— அறியேனோ
. தக்கணனின் அங்கை முத்திரைய றிந்து
. . தட்டழிவு குன்ற —— அருள்வீரே.
 [தக்கணன்: தட்சிணாமூர்த்தி; முத்திரை: அபய முத்திரை; தட்டழிவு: கலக்கம், தோல்வி]

—22 மார்ச் 2024

★★★
திருப்புகழ் 344 நச்சு அரவம் என்று  (காஞ்சீபுரம்)
தத்ததன தந்த தத்ததன தந்த
. தத்ததன தந்த ...... தனதான

நச்சரவ மென்று நச்சரவ மென்று
. .  நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும்
. நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
. . நத்திரைவ ழங்கு ...... கடலாலும்

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
. . இச்சிறுமி நொந்து ...... மெலியாதே
. எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
. . இத்தனையி லஞ்ச ...... லெனவேணும்

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
. . பச்சைமலை யெங்கு ...... முறைவோனே
. பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
. . பத்திரம ணிந்த ...... கழலோனே

கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
. . கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா
. கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
. . கைத்தளைக ளைந்த ...... பெருமாளே.

★★★★★

GOPAL Vis

unread,
Mar 22, 2024, 5:22:50 AM3/22/24
to santhav...@googlegroups.com
அழகான சந்தம், திரு ரமணி.
சில இடங்களில் ஐயங்கள்:
கோபால்.

பித்தனென வந்து அத்தனென நின்று                   [புணர்ச்சி]

. . பிச்சைதனை யுண்டு —— மகிழ்வீரே
. பிற்பகல கன்ற அத்தமனம் வந்து                        
. . பெட்டனிவன் நின்று —— களியேனே
 [பெட்டன்: பொய்யன்]

வத்தியொளி சிந்த அற்பமன மெங்கும்
. . வக்கிரம கன்ற —— ஒளிவீச                                  
. வட்டமிடு கண்கள் அர்ச்சனைமு ழங்கும்
. . வச்சியமு வந்து —— மகிழேனே
 [வத்தி: திரி; வக்கிரம்: கோணல், கலக்கம்; வச்சியம்: வசியம்]

எத்தனனுளம் வந்து சித்துருவில் என்றும்
. . எக்கணமும் நின்று —— அருள்வீரே                    [புணர்ச்சி]

. எப்பொழுதும் உங்கள் அற்புதமு
வந்து
. . எச்சுதலில்
நின்று —— வருநாளில்                       [புணர்ச்சி]

 [எத்தன்: என்னை நானே ஏமாற்றிக் கொள்வதால் எத்தன்; எச்சுதல்: வணங்குதல்]

தத்துவம றிந்து கற்பனையை வென்று
. . தத்வமசி விந்தை —— அறியேனோ                    [அறிவேனோ?]

. தக்கணனின் அங்கை முத்திரைய றிந்து
. . தட்டழிவு குன்ற —— அருள்வீரே.
 [தக்கணன்: தட்சிணாமூர்த்தி; முத்திரை: அபய முத்திரை; தட்டழிவு: கலக்கம், தோல்வி]
On Fri, Mar 22, 2024 at 11:35 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_திருப்புகழ்
பிரதோஷத் துதி: தட்டழிவு குன்ற அருள்வீரே!
0344. தத்ததன தந்த | தத்ததன தந்த | தத்ததன தந்த —— தனதான
(வண்ணப் பாடல்)

பித்தனென வந்து அத்தனென நின்று
. . பிச்சைதனை யுண்டு —— மகிழ்வீரே
. பிற்பகல கன்ற அத்தமனம் வந்து
. . பெட்டனிவன் நின்று —— களியேனே
 [பெட்டன்: பொய்யன்]

Siva Siva

unread,
Mar 22, 2024, 9:14:27 AM3/22/24
to santhav...@googlegroups.com
You can see if you can sequence the request phrases together and praise phrases together - instead of mixing them throughout.

V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
Mar 22, 2024, 10:17:23 AM3/22/24
to சந்தவசந்தம்
Thanks for the suggestion, Siva Siva. Will keep it in mind.
ramaNi

குருநாதன் ரமணி

unread,
Mar 22, 2024, 10:20:42 AM3/22/24
to சந்தவசந்தம்
திருத்தங்களுக்கு நன்றி, கோபால்ஜி. திருத்திய பாடல்:

#ரமணி_திருப்புகழ்
பிரதோஷத் துதி: தட்டழிவு குன்ற அருள்வீரே!
0344. தத்ததன தந்த | தத்ததன தந்த | தத்ததன தந்த —— தனதான

பித்தனென வந்த அத்தனென நின்று
. . பிச்சைதனை யுண்டு —— மகிழ்வீரே
. பிற்பகல கன்ற அத்தமனம் வந்து
. . பெட்டனிவன் நின்று —— களியேனே

வத்தியொளி சிந்த அற்பமன மெங்கும்
. . வக்கிரம கன்ற —— ஒளிவீச
. வட்டமிடு கண்கள் அர்ச்சனைமு ழங்கும்
. . வச்சியமு வந்து —— மகிழேனே

எத்தனனுளம் வந்து சித்துருவில் என்றும்
. . எக்கணமும் நின்று —— மகிழ்வீரே

. எப்பொழுதும் உங்கள் அற்புதமு வந்த
. . எச்சுதலில் நின்று —— வருநாளில்

தத்துவம றிந்து கற்பனையை வென்று
. . தத்வமசி விந்தை —— அறிவேனோ

. தக்கணனின் அங்கை முத்திரைய றிந்து
. . தட்டழிவு குன்ற —— அருள்வீரே.
 
—22 மார்ச் 2024

[பெட்டன்: பொய்யன்; வத்தி: திரி; வக்கிரம்: கோணல், கலக்கம்; வச்சியம்: வசியம்;  [எத்தன்: என்னை நானே ஏமாற்றிக் கொள்வதால் எத்தன்; எச்சுதல்: வணங்குதல்; [தக்கணன்: தட்சிணாமூர்த்தி; முத்திரை: அபய முத்திரை; தட்டழிவு: கலக்கம், தோல்வி]

★★★

GOPAL Vis

unread,
Apr 5, 2024, 9:58:35 PM4/5/24
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [06 ஏப்ரல் 2024]
வண்ணச் சந்தம் (92)

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்த தத்த தந்ததான

பசித்திருப்பவருக்கு அளிப்பவன்!

சடைப்பினற் கிடைப்புனற் குளிர்ப்பினிற் களிக்குமிச்
……சகத்தினைச் சுழற்று பித்த னென்றகோனே!
……சதிக்கிடப் புறத்தினைக் கொடுத்தமுப் புரத்தினைச்
……சமர்க்களத் தெரித்து வெற்றி கொண்டவீரா!

தொடைக்கெனப் படப்பணிக் கழற்றுமைக் கழுத்தினிற்
……றொடுத்தவக் கினுக்க டுத்தி டங்கொடீசா!
……சுடச்சுடப் பழுத்தவக் கினிக்கரத் தமற்புலித்
……துருத்தியைக் கடிக்கி சைத்த சம்புதேவா!

துடைத்திடிப் பிறப்பிறப் புழத்தலைப் பிறக்கினெத்
……துயர்க்குமச் சிவச்செ பத்தை நெஞ்சிலீவாய்!
……சொலச்சொலச் சுவைக்குமச் சுகத்திலர்ப் பணித்துனைத்
……துதித்திடப் பணித்தி டத்த அன்பினாலே!

படைப்பவற் களப்பவற் குமெத்தனித் துமெற்றெனப்
……பரப்பினைச் சொலச்சொ லற்று நின்றசோதீ!
……பரத்துவக் கருத்தினைத் தருத்தலத் திருக்கையிற்
……பசித்திருப் பவர்க்க ளிக்கு மெம்பிரானே!

— — — — — — — — — — — —
சொற்பிரிவு; பொருள்:

சடைப் பினற்கு இடைப் புனல் குளிர்ப்பினில் களிக்கும், இச்
……சகத்தினைச் சுழற்று பித்தன் என்ற கோனே!
[சடைப் பி(ன்)னற்கு = பின்னலுற்ற சடைக்கு; இடைப் புனல் குளிர்ப்பினில் களிக்கும் = நடுவில் தங்கும் தண்ணீரின் குளிரில் மகிழ்பவனே!]

……சதிக்கு இடப் புறத்தினைக் கொடுத்த, முப் புரத்தினைச்
……சமர்க் களத்து எரித்து வெற்றி கொண்ட, வீரா!
[சதி = பார்வதி; சமர் = போர்]

தொடைக்கெனப் படப் பணிக்கு அழற்று மைக் கழுத்தினில்
……தொடுத்த அக்கினுக்கு அடுத்து இடங் கொடு ஈசா!
[தொடை = மாலை; படப்பணி = படமெடுக்கும் பாம்பு; அழற்று = (விஷத்தால்) சுட்டு வருத்துகிற; மைக் கழுத்து = கறுத்த கழுத்து; அக்கு = எலும்பு; தொடுத்த அக்கு = எலும்பு மாலை; எலும்பு மாலையை அடுத்துப் பாம்பு மாலைக்கு இடம் கொடுத்தவன்]

……சுடச்சுடப் பழுத்த அக்கினிக் கரத்த! மற்புலித்
……துருத்தியைக் கடிக்கு இசைத்த சம்பு தேவா!
[அக்கினிக் கரத்த! = தீ ஏந்திய கையை உடையவனே! மற்புலி = வலிமை மிகுந்த புலி; துருத்தி = தோல்; கடி = இடுப்பு; இசைத்த = கட்டிய, அணிந்த]

துடைத்திடு இப் பிறப்பு இறப்பு உழத்தலை! பிறக்கின்,
எத்துயர்க்கும் அச் சிவச் செபத்தை நெஞ்சில் ஈவாய்!
[உழத்தல் = துன்பப் படுதல்; பிறப்பு இறப்புத் துன்பத்தை நீக்கு! பிறந்தால், எத்தகைய துயர் வரினும் சிவநாம ஜபம் நெஞ்சில் இருக்குமாறு அருள் செய்!]

……சொ(ல்)லச் சொ(ல்)லச் சுவைக்கும் அச் சுகத்தில் அர்ப்பணித்து உ(ன்)னைத்
……துதித்திடப் பணித்திடு அத்த! அன்பினாலே!
[துதித்திடப் பணித்திடு = துதிக்கும் வேலையைக் கொடு; அத்த! = தந்தையே!]

படைப்பவற்கு அளப்பவற்கும் எத்தனித்தும் எற்றெனப்
……பரப்பினைச் சொ(ல்)லச் சொ(ல்)லற்று நின்ற சோதீ!
[அளத்தல் = காத்தல்; எத்தனித்தல் = முயற்சி செய்தல்; எற்று = எத்தன்மை உடையது; படைப்பவனாகிய பிரமனும், காப்பவனாகிய விஷ்ணுவும் முயன்றும் உன் விரிவு எத்தகையது என்று சொல்ல வார்த்தையின்றி ஸ்தம்பித்து நிற்குமாறு, சோதியாய் விளங்குபவனே!]

……பரத்துவக் கருத்தினைத் தருத்தலத்து இருக்கையில்
……பசித்து இருப்பவர்க்கு அளிக்கும் எம்பிரானே!
[பரத்துவம் = இறைமைத் தத்துவம்; தருத்தலம் = மரத்தடி; பசித்து இருப்பவர் = ஞானம் பெறும் ஒரே குறிக்கோளுடன் காத்திருப்பவர்; தக்‌ஷிணாமூர்த்தியாய் மரத்தடியில் அமர்ந்தவாறு ஞான வேட்கை உள்ள சீடர்களுக்கு இறைத் தத்துவத்தை உணர்த்தும் எங்கள் இறைவனே!]


நல்வாழ்த்துகள்
கோபால்
[06/04/2024]VGK

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 5, 2024, 10:21:04 PM4/5/24
to santhav...@googlegroups.com
வண்ணமிகு பிரதோஷத் துதி. 

அனந்த்

 >> (விஷத்தால்) சுட்டு வருத்துகிற; மைக் கழுத்து = கறுத்த கழுத்து
சிவபெருமானை விஷம் வருத்துமா?

GOPAL Vis

unread,
Apr 5, 2024, 10:40:26 PM4/5/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.

 >> (விஷத்தால்) சுட்டு வருத்துகிற; மைக் கழுத்து = கறுத்த கழுத்து
சிவபெருமானை விஷம் வருத்துமா?
சிவபிரானின் கழுத்தும் மையாகும் வகையில் சுட்டு வருத்துவது விஷத்தின் தன்மை. கொடிய, கைத்த . . என்று சொல்வது போல.  சுடச்சுடப் பழுத்த அக்கினிக் கரத்த  என்பதும் அதுபோலத் தான்! அவனை எதுவும் பாதிக்காது என்பது உண்மை!
திருத்தம் தேவை என்று கருதுகிறீர்களா?
கோபால்.

. . . .  

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 5, 2024, 11:23:23 PM4/5/24
to santhav...@googlegroups.com

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

                                                  











துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>

                     

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்

எண்ணிடின் அலாலிவ்  வீனனுன் னருள்பெறப்

பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.  

                                                                      .......... அனந்த் 6-4-2024

https://vsa-pradoshappaadalgal.blogspot.com/


குருநாதன் ரமணி

unread,
Apr 6, 2024, 1:33:06 AM4/6/24
to சந்தவசந்தம்
#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி
திருப்114. 0344. சிற்பவுரு சென்ற —— பெருமானே.
(வண்ணப் பாடல்)
(குருநாதன் ரமணி)

தத்ததன தந்த | தத்ததன தந்த |
 தத்ததன தந்த —— தனதான

அத்தமனம் வந்து தற்பரையு வந்த
. . அத்தனுரு சென்று —— தெருமேவும்
. அர்ச்சனையில் நின்ற கட்செவியு டுத்த
. . அக்கினிய ணிந்த —— பெருமானே

பித்தனென நின்று பொற்கழல்ந டந்து
. . பிச்சையையு வந்த —— விடையோனே
. பெற்றியென அன்பும் நிச்சலமு மென்று
. . பிட்டுதனை யுண்ட —— பிறைசூடீ

வத்திரம ணிந்து சிற்சபையு வந்த
. . வத்ஸனென நின்ற —— கறையோனே
. வக்கிரம டங்கி மெத்தனம ழிந்து
. . வற்சலமி லங்க —— அருள்வீரே

சித்தமதை வென்று கற்பனைய கன்று
. . சிக்கலற வந்து —— புரப்பீரே
. சிட்சைதனில் நின்று மித்தையற வந்த
. . சிற்பவுரு சென்ற —— பெருமானே.

06 ஏப். 2024

[கட்செவி: பாம்பு; பெற்றி: இயல்பு, தன்மை, குணம்; நிச்சலம்: அசைவின்மை; வத்ஸன்: அன்பு குறிக்குஞ் சொல்; கறையோன்: கழுத்தில் நச்சுக் கறை கொண்டவன்; வற்சலம்: பேரன்பு; மித்தை: பொய், மாயை]


★★★
திருப்புகழ் 344 நச்சு அரவம் என்று  (காஞ்சீபுரம்)
தத்ததன தந்த தத்ததன தந்த
 தத்ததன தந்த —— தனதான

நச்சரவ மென்று நச்சரவ மென்று
. . நச்சுமிழ்க ளங்க —— மதியாலும்

. நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
. . நத்திரைவ ழங்கு —— கடலாலும்


இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
. . இச்சிறுமி நொந்து —— மெலியாதே

. எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
. . இத்தனையி லஞ்ச —— லெனவேணும்


பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
. . பச்சைமலை யெங்கு —— முறைவோனே

. பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
. . பத்திரம ணிந்த —— கழலோனே


கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
. . கச்சியில மர்ந்த —— கதிர்வேலா

. கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
. . கைத்தளைக ளைந்த —— பெருமாளே.

★★★★★

GOPAL Vis

unread,
Apr 6, 2024, 1:36:53 AM4/6/24
to santhav...@googlegroups.com
பொன்னாய் ஒளிரும் புனிதத் திருமேனி!
கன்றிச் சிவந்த கனற்சடை! - என்னே
அழகவன் காட்சி! அனந்தம் எனினும்
கழலைத் தருவான் கனிந்து!

கோபால்


On Sat, Apr 6, 2024 at 8:53 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்

எண்ணிடின் அலாலிவ்  வீனனுன் னருள்பெறப்

பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.  

                                                                      .......... அனந்த் 6-4-2024

https://vsa-pradoshappaadalgal.blogspot.com/

. . . . . . 

GOPAL Vis

unread,
Apr 6, 2024, 2:00:41 AM4/6/24
to santhav...@googlegroups.com
கடசெவியு டுத்த. - தந்த வாய்பாடு. <---
புரப்பீரே - தனதான வாய்பாடு <---

முதல் கண்ணியை விளக்க வேண்டுகிறேன். 
வத்ஸன், வத்ஸலம், (வாத்ஸல்யம்) - தொடர்புடைய சொற்கள் தாமே! ஒரே முறையில் எழுதலாமன்றோ?
சில இடங்களில் உவந்த என்பதை விட உகந்த என்பது அதிகம் பொருந்துமோ?

பித்தனென நின்று பொற்கழல்ந டந்து
. . பிச்சையையு வந்த —— விடையோனே

காலால் நின்று, நடந்த விடையோன்! முரண்போலத் தோன்றும் வருணனை! 

அழகான சந்தம், பாடல்!

கோபால். 

குருநாதன் ரமணி

unread,
Apr 6, 2024, 3:01:05 AM4/6/24
to சந்தவசந்தம்
நன்றி, கோபால்ஜி.

முதற் கண்ணியின் பொருள்:

மாலை வந்தபின்னர் பார்வதியைக் காதலிக்கும் அத்தனின் உரு ஊர்வலமாகச் சென்று தெருவில் பொருந்தும். அப்போது அர்ச்சனை செய்வோர்க்காக நின்று செல்லும், பாம்பு பரந்த, கையில்/நுதலில் அக்கினையைக் கொண்ட பெருமானே.

திருத்திய பாடல்
#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி
திருப்114. 0344. சிற்பவுரு சென்ற —— பெருமானே.
(வண்ணப் பாடல்)
(குருநாதன் ரமணி)

தத்ததன தந்த | தத்ததன தந்த |
 தத்ததன தந்த —— தனதான

அத்தமனம் வந்து தற்பரையு கந்த

. . அத்தனுரு சென்று —— தெருமேவும்
. அர்ச்சனையில் நின்ற கட்செவிப ரந்த

. . அக்கினிய ணிந்த —— பெருமானே

பித்தனென நின்று பொற்கழல்ந டந்து
. . பிச்சையையு கந்த —— விடையோனே

. பெற்றியென அன்பும் நிச்சலமு மென்று
. . பிட்டுதனை யுண்ட —— பிறைசூடீ

வத்திரம ணிந்து சிற்சபையு வந்த
. . வத்ஸனென நின்ற —— கறையோனே
. வக்கிரம டங்கி மெத்தனம ழிந்து
. . வத்ஸலமி லங்க —— அருள்வீரே


சித்தமதை வென்று கற்பனைய கன்று
. . சிக்கலற வந்த —— தருநீரே

. சிட்சைதனில் நின்று மித்தையற வந்த
. . சிற்பவுரு சென்ற —— பெருமானே.

06 ஏப். 2024

[கட்செவி: பாம்பு; பெற்றி: இயல்பு, தன்மை, குணம்; நிச்சலம்: அசைவின்மை; வத்ஸன்: அன்பு குறிக்குஞ் சொல்; கறையோன்: கழுத்தில் நச்சுக் கறை கொண்டவன்; வத்ஸலம்: பேரன்பு; தரு: கற்பகத்தரு; மித்தை: பொய், மாயை]

★★★★★

GOPAL Vis

unread,
Apr 6, 2024, 4:15:41 AM4/6/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு ரமணி.

அத்தமனம் வந்து தற்பரையு கந்த
. . அத்தனுரு சென்று —— தெருமேவும்
. அர்ச்சனையில் நின்ற கட்செவிப ரந்த
. . அக்கினிய ணிந்த —— பெருமானே

. அர்ச்சனையில் நின்ற கட்செவிய ணிந்த
. . அக்கினியொ ளிர்ந்த —— விழியோனே!        -- பொருந்தக் கூடும்.

கோபால்.


On Sat, Apr 6, 2024 at 12:31 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
நன்றி, கோபால்ஜி.

. . . . . . . . . . . . . . .

தத்ததன தந்த | தத்ததன தந்த |
 தத்ததன தந்த —— தனதான

அத்தமனம் வந்து தற்பரையு கந்த
. . அத்தனுரு சென்று —— தெருமேவும்
. அர்ச்சனையில் நின்ற கட்செவிப ரந்த
. . அக்கினிய ணிந்த —— பெருமானே

 . . . . . . . . . 

Siva Siva

unread,
Apr 7, 2024, 12:02:00 PM4/7/24
to santhav...@googlegroups.com
Nice.

தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே. /

உள்ளில் - sounds  unusual to me. 
நெஞ்சில்?

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும் /

கண்ணிலே தூசு விழுந்துநீர் கசியினும்?

V. Subramanian


On Fri, Apr 5, 2024 at 11:23 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

                  

துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>

                     

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 7, 2024, 12:23:21 PM4/7/24
to santhav...@googlegroups.com
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

உள்ளில் என்பதை நெஞ்சில் என மாற்றுகிறேன். 
-> கசியினும் என்பது கரையினும்  என்பதை விடப் பொருத்தமானதே. எனினும், கருத்தில் மிக்க மாற்றமில்லையாதலால், பாடலை எழுதும்போது தோன்றிய சொல் அவ்வாறே இருக்குமாறு விட்டுவிடலாமெனத் தோன்றுகிறது. 

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 7, 2024, 12:26:30 PM4/7/24
to santhav...@googlegroups.com
திருத்திய வடிவம்:

                  திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் நெஞ்சில் சொலிக்கும் தழலெனவே.

                                                                      .......... அனந்த் 7-4-2024

Siva Siva

unread,
Apr 7, 2024, 12:37:42 PM4/7/24
to santhav...@googlegroups.com
கரைதல் - மனத்தின் செயல் / நிலை. பக்தியினால் நிகழ்வது.
கண்ணில் நீர் கசிதல் - உடலின் செயல்.  மனத்தின் ஈடுபாடு இன்றியும் நிகழும். வெங்காயம் நறுக்கும் போதும் கண்ணில் புகை / புழுதி படும்போதும் நிகழ்வது.

V. Subramanian



VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 19, 2024, 10:28:00 PM4/19/24
to santhav...@googlegroups.com

நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                    <> ஏங்குவனே <> 

                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்

வாசம்செய் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்

நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்

ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே


                                       🌺🌺🌺

                                 < அரனும் அரவமும்>

                       

இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்

அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு

பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு

எண்ணிலெம் ஈசற் கிணை.

(பாம்பு:  ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய  ஆடை உண்டு.  மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.

சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)  

------------------------------------
https://vsa-pradoshappaadalgal.blogspot.com/

On Fri, Apr 5, 2024 at 11:23 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>           

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

Siva Siva

unread,
Apr 19, 2024, 11:17:32 PM4/19/24
to santhav...@googlegroups.com
Nice.

இரைதேடி /
சிவன்: உணவைத் தேடி /

I do not know if "இரை" is the best word in the context of humans or divine beings.

Appar uses it in a song - for some people - in a reproaching tone.
5.90.5
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

V. Subramanian

On Fri, Apr 19, 2024 at 10:28 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                            < அரனும் அரவமும்>

Ram Ramakrishnan

unread,
Apr 20, 2024, 7:29:12 AM4/20/24
to santhav...@googlegroups.com

வழக்கம் போல் தங்கள் பிரதோஷப் பாடல் மிகச் சிறப்பாய் அமைந்து உள்ளத்தைத் தொடுகிறது, அனந்த் ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Apr 2024, at 7:58 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1hHb5T0gJgG%3DpHPZgdwWVNG1BV1seWyNQBGyFU4hEA5Q%40mail.gmail.com.

குருநாதன் ரமணி

unread,
Apr 20, 2024, 8:55:14 AM4/20/24
to சந்தவசந்தம்
#ரமணி_பிரதோஷம்
நாளை ( 21 ஏப். 2024) பிரதோஷம்.
பிரதோஷத் துதி
திருப்116. 0857. அந்தே சத்தினில் —— விழுவேனே.

(வண்ணப் பாடல்)
(குருநாதன் ரமணி)

தந்தா தத்தன | தந்தா தத்தன |
. தந்தா தத்தன —— தனதான

நஞ்சோ டக்களம் வந்தே சட்டென
. . நங்காள் அக்கண —— நெரியாலே
. நன்றாய் நிற்றலில் வென்றீர் நச்சினை
. . நந்தா தப்புகழ் —— நிலையாகும்

 [களம்: இடம்; நிற்றல்: கழுத்தில் நிற்கை; நந்தாது: கெடாது, அழியாது;]

சஞ்சா ரத்துடல் செஞ்சா யத்தலை
. . சந்தா னத்துரு —— முதலாமே
. சந்தோ ஷத்தினில் நின்றா டித்திளை
. . சம்பூர் ணத்துரு —— வரர்பேறு
 [சாயம்: நிறம்; சந்தானம்: குரு பரம்பரை; வரர்: தேவர்]

மஞ்சார் பத்திரம் நின்றா டித்தரும்
. . மந்தா ரத்தரு —— கொடையாமே
. மண்டூ கக்குரல் நின்றோ டித்தெரு
. . வந்தா டக்களி —— மனமாகும்
 [மஞ்சார் பத்திரம்: மேகங்கள் நிறைந்த மலை; மந்தாரத் தரு: பஞ்ச தருக்களில் ஒன்று; மண்டூகம்: தவளை]

அஞ்சேல் இக்கணம் என்றே நட்புடன்
. . அன்பாய் இப்புறம் —— வருவீரே
. அண்டா மெத்தனன் அம்பா ரச்சுமை
. . அந்தே சத்தினில் —— விழுவேனே.
 [அண்டா மெத்தன்: அண்டாது அக்கறையின்றி இருப்பவன்;
அம்பாரச் சுமை: எண்ணக் குவியலாக உயிர் மீதேறும் மனச்சுமை; அந்தேசம்: கதியின்மை]

★★★
திருப்புகழ் 857. கொந்தார் மைக்குழல் (திருப்பனந்தாள்)
தந்தா தத்தன தந்தா தத்தன
     தந்தா தத்தன ...... தனதான

கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
     யென்றே செப்பிய ...... மொழிமாதர்
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
     னந்தா னித்தரை ...... மலைபோலே

வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
     னந்தா னிப்படி ...... யுழலாமல்
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
     என்றே யிப்படி ...... அருள்வாயே

இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
     மண்டா நற்றவர் ...... குடியோட
எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
     யென்றே திக்கென ...... வருசூரைப்

பந்தா டித்தலை விண்டோ டக்களம்
     வந்தோ ரைச்சில ...... ரணகாளிப்
பங்கா கத்தரு கந்தா மிக்கப
     னந்தா ளுற்றருள் ...... பெருமாளே.

★★★★★

Ram Ramakrishnan

unread,
Apr 20, 2024, 12:00:30 PM4/20/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. ரமணி.

மிகவும் கடினமான வண்ணப் பாடலை அருமையாகப் படைத்துள்ளீர்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 20, 2024, at 18:25, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

#ரமணி_பிரதோஷம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Apr 20, 2024, 12:59:26 PM4/20/24
to santhav...@googlegroups.com
அஞ்சேல் இக்கணம் என்றே நட்புடன்
. . அன்பாய் இப்புறம் —— வருவீரே”

மிக அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 20, 2024, 1:23:39 PM4/20/24
to santhav...@googlegroups.com
நன்றி.

> இரைதேடி - மோனை நோக்கித் திணைவழுவமைதியாகக் கொள்க. 

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 20, 2024, 1:25:20 PM4/20/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ராம்.

அனந்த்

On Sat, Apr 20, 2024 at 7:29 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

வழக்கம் போல் தங்கள் பிரதோஷப் பாடல் மிகச் சிறப்பாய் அமைந்து உள்ளத்தைத் தொடுகிறது, அனந்த் ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Apr 2024, at 7:58 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                    <> ஏங்குவனே <> 

                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்

குருநாதன் ரமணி

unread,
Apr 20, 2024, 1:33:10 PM4/20/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, ராம்கிராம் அவர்களே.
ரமணி

GOPAL Vis

unread,
Apr 21, 2024, 9:58:05 AM4/21/24
to santhav...@googlegroups.com
இரண்டு பாடல்களும் அருமை, திரு அனந்த். சிலேடை மிக அருமை.
கோபால்.

On Sat, Apr 20, 2024 at 7:58 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                    <> ஏங்குவனே <> 

                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்

வாசம்செய் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்

நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்

ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே


                                       🌺🌺🌺

                                 < அரனும் அரவமும்>

இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்

அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு

பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு

எண்ணிலெம் ஈசற் கிணை.

(பாம்பு:  ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய  ஆடை உண்டு.  மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.

சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)  

------------------------------------
 

GOPAL Vis

unread,
Apr 21, 2024, 10:05:15 AM4/21/24
to santhav...@googlegroups.com
இரைதேடி.
I feel இரை must be accepted in this context. Normally பலி is not a word used to refer to the food taken by humans or beloved gods. It is reserved for animals, demons, durdevatAs, and so on. பலி translates to இரை. இரை seems appropriate where பலி is. 
gopal.

குருநாதன் ரமணி

unread,
Apr 21, 2024, 10:10:42 AM4/21/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, இமயவரம்பரே!
ரமணி

குருநாதன் ரமணி

unread,
Apr 21, 2024, 10:13:25 AM4/21/24
to சந்தவசந்தம்
பொதுவாக பலிபீடத்தில் கோவில் யானைக்கு சோற்றுரண்டை படைப்பார்கள்.
ரமணி

GOPAL Vis

unread,
Apr 21, 2024, 10:17:19 AM4/21/24
to santhav...@googlegroups.com
அருமை.
கோபால்.

குருநாதன் ரமணி

unread,
Apr 21, 2024, 11:46:40 AM4/21/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, திரு. கோபால்.
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 21, 2024, 8:39:00 PM4/21/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி கோபால்.

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 21, 2024, 8:48:48 PM4/21/24
to santhav...@googlegroups.com
சந்தமும் பொருளும் அருமை, ரமணி.

அனந்த்


On Sat, Apr 20, 2024 at 8:55 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_பிரதோஷம்
நாளை ( 21 ஏப். 2024) பிரதோஷம்.
பிரதோஷத் துதி

குருநாதன் ரமணி

unread,
Apr 21, 2024, 9:42:07 PM4/21/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, அனந்த் ஸார்.
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 4, 2024, 10:34:48 PM5/4/24
to santhav...@googlegroups.com

     நாளை (5-5-2024) பிரதோஷ நன்னாள்

     திருச்சிற்றம்பலம்

   <> துணையடி சேர்ப்பாய் <>



              


வெண்மதி கங்கை கொன்றை

.. விளங்கிடும் சடையோய்! உன்றன்


கண்கவர் கோலம் கண்டும்

.. கருத்திலோர் நெகிழ்வு மின்றி


மண்ணிலோர் விலங்காய் வாழ்ந்த

.. வகையினை இன்றென் நெஞ்சில்


எண்ணிநான் வருந்தி உன்றன்

.. இணையடி சேர்ந்தேன் ஐயே!


          🌹🌹🌹

 

ஐயனே ஐயோ வென்றுன்

.. அடியிணைக் கீழ்வி ழுந்தேன்


பொய்யனே ஆயி னும்மென்

.. பிழையெலாம் பொறுப்பாய் என்று


மெய்யடி யார்கள் சொல்லல்

.. மிகையிலை என்று நம்பிக்


கையிணை குவித்துன் முன்னே

… கதறினேன் காத்தி டாயோ?


         🌹🌹🌹


ஆயபல் பிழைகள் யாவும்

… ஆக்கிய பிண்ட மாகக்


காயமொன் றுடையேன் பாவக்

.. காற்றையே நிரப்பி வைத்த


தீயதோர் பாண்ட மிஃதைச்

.. சுமந்துல கலையு மென்னைத்


தூயவ னாக்கி உன்றன்

… துணையடி சேர்த்தி டாயோ?


          🌹🌹🌹

                                             ..அனந்த் 4-5-2024

-----------------------------------------------------------------------------


On Fri, Apr 19, 2024 at 10:27 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                    <> ஏங்குவனே <> 

                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்

வாசம்செய் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்

நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்

ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே


                                       🌺🌺🌺

                                 < அரனும் அரவமும்>

                       

இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்

அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு

பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு

எண்ணிலெம் ஈசற் கிணை.

(பாம்பு:  ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய  ஆடை உண்டு.  மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.

சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)  

------------------------------------
https://vsa-pradoshappaadalgal.blogspot.com/

குருநாதன் ரமணி

unread,
May 4, 2024, 10:40:58 PM5/4/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்_பிரதோஷம்
பிரதோஷத்துதி: எனைநடத்தி அருள்வீரே.
திருப்119. 1295. தத்தனத் தனனதத்த —— தனதான

வத்தகத் தினையெடுத்த —— ஒருவாடல்
. வத்தகத் தழிவெடுத்த —— ஒருவாடல்
மத்தகத் தனையியற்றும் —— ஒருநாமம்
. மட்டனைத் தினைவிடுத்த —— ஒரு ரூபம்
நத்தியுற் றுடலடுத்த —— ஒருநாகம்
. நச்சுறக் கறையதொட்டும் —— மிடறாகும்
சித்தமுற் றெனையடுத்து —— வருவீரே
. சிக்கறுத் தெனைநடத்தி —— அருள்வீரே.

பொருள்:
• ஓராடல் வர்த்தகம்-வளர்ச்சியைக் கைக்கொள்ளும்.
• இன்னோராடல் வளர்ச்சியைக் கைக்கொள்ளும்.
• சிவ என்னும் ஒரு நாமம் தலைகளை வழிநடத்தும்.
• எல்லைகள் அனைத்தையும் விட்டுவிட்ட ஒரு ரூபம்.
• விரும்பி உடலைச் சேர்ந்த ஒரு நாகம்.
• ஆலகால நஞ்சுண்டதால் அதன் கறை ஒட்டும் கழுத்தாகும்.
• என் சித்தத்தில் நின்று என்னை அடைந்து வருவீரே.
• ஐயம் அறுத்து என்ன நடத்தி அருள்வீரே.

05 மே 2024

★★★
1295. பொதுப்பாடல்கள்   நித்தம் உற்றுனை  
தத்தனத் தனனதத்த ...... தனதான
நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி
   நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக
      நத்தியு தமதவத்தி ...... னெறியாலே
         லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள
   விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே
      குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே
         குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே

★★★★★

GOPAL Vis

unread,
May 5, 2024, 8:36:22 AM5/5/24
to santhav...@googlegroups.com
அருமை.
எண்ணிநான் வருந்தி உன்றன்
.. இணையடி சேர்ந்தேன் ஐயே!
. . . . . . . 
தூயவ னாக்கி உன்றன்
… துணையடி சேர்த்தி டாயோ?


இந்த இரண்டிலும் சேர்தல் நிலை வெவ்வேறு என்று உணர்கிறேன்.

ஐந்தியல் பூதங் கொண்டே
......அயன்கையால் மண்ணிற் கோடி
மைந்தரை ஆக்கி யோனே
......மறப்பனோ? தந்தை யன்றே!
பைந்தளிர்க் கூவி ளத்தால்
......பதமலர் தொழுது விட்டால்
நைந்தருள் பொழியும் வள்ளல்
......நற்றமிழ்க் கிரங்கி டானோ!

கோபால்


On Sun, May 5, 2024 at 8:04 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

     நாளை (5-5-2024) பிரதோஷ நன்னாள்

     திருச்சிற்றம்பலம்

   <> துணையடி சேர்ப்பாய் <>



              வெண்மதி கங்கை கொன்றை

.. விளங்கிடும் சடையோய்! உன்றன்

GOPAL Vis

unread,
May 5, 2024, 8:56:01 AM5/5/24
to santhav...@googlegroups.com
வத்தகத் தினையெடுத்த —— ஒருவாடல்
வத்தகத் தழிவெடுத்த —— ஒருவாடல்            வர்த்தக என்றே கூட இருக்கலாமோ? 

மத்தகத் தனையியற்றும் —— ஒருநாமம்      வழிநடத்தும் = இயக்கும்?
. . . . . . .
நச்சுறக் கறையதொட்டும் —— மிடறாகும்   கறைநிலைத்த?


பொருள்:
• ஓராடல் வர்த்தகம்-வளர்ச்சியைக் கைக்கொள்ளும்.
• இன்னோராடல் வளர்ச்சியைக் கைக்கொள்ளும்.          என்ன வேறுபாடு?

ஐயம் அறுத்து என்ன நடத்தி அருள்வீரே.       என்ன - typo?

கோபால்.


குருநாதன் ரமணி

unread,
May 5, 2024, 9:10:14 AM5/5/24
to சந்தவசந்தம்
நன்றி, கோபால்ஜி. திருத்திய பாடல்:

#ரமணி_திருப்புகழ்_பிரதோஷம்
பிரதோஷத்துதி: எனைநடத்தி அருள்வீரே.
திருப்119. 1295. தத்தனத் தனனதத்த —— தனதான

வர்த்தகத் தினையெடுத்த —— ஒருவாடல்

. வத்தகத் தழிவெடுத்த —— ஒருவாடல்
மத்தகத் தனையியக்கும் —— ஒருநாமம்

. மட்டனைத் தினைவிடுத்த —— ஒரு ரூபம்
நத்தியுற் றுடலடுத்த —— ஒருநாகம்
. நச்சுறக் கறைநிலைத்த —— மிடறாகும்

சித்தமுற் றெனையடுத்து —— வருவீரே
. சிக்கறுத் தெனைநடத்தி —— அருள்வீரே.

பொருள்:
• ஓராடல் வர்த்தகம்-வளர்ச்சியைக் கைக்கொள்ளும்.
• இன்னோராடல் வளர்ச்சியை அழித்தலைக் கைக்கொள்ளும்.
• சிவ என்னும் ஒரு நாமம் தலைகளை இயக்கும்

• எல்லைகள் அனைத்தையும் விட்டுவிட்ட ஒரு ரூபம்.
• விரும்பி உடலைச் சேர்ந்த ஒரு நாகம்.
• ஆலகால நஞ்சுண்டதால் அதன் கறை நிலைத்த கழுத்தாகும்.

• என் சித்தத்தில் நின்று என்னை அடைந்து வருவீரே.
• ஐயம் அறுத்து என்னை நடத்தி அருள்வீரே.

05 மே 2024

★★★

Siva Siva

unread,
May 5, 2024, 11:13:02 AM5/5/24
to santhav...@googlegroups.com
ஒருவாடல் = ஒரு + வாடல்?

ஒரு + ஆடல் என்ற பொருளில் எனில்:
இத்தகைய பிரயோகம் பொதுவாக வாராது.
திருவாடல்?

/ நச்சுறக் கறை /
நஞ்சு என்பது நச்சு என்று வலித்தல் விகாரம் பெற்றதா?

V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
May 5, 2024, 11:37:56 AM5/5/24
to சந்தவசந்தம்
திருவாடல் என்று திருத்திக் கொண்டேன். நச்சுற என்றதை வலித்தல் விகாரம் என்றும் குறித்துவிட்டேன். திருத்தியபின்:

#ரமணி_திருப்புகழ்_பிரதோஷம்
பிரதோஷத்துதி: எனைநடத்தி அருள்வீரே.
திருப்119. 1295. தத்தனத் தனனதத்த —— தனதான

வர்த்தகத் தினையெடுத்த —— திருவாடல்
. வத்தகத் தழிவெடுத்த —— திருவாடல்

மத்தகத் தனையியக்கும் —— ஒருநாமம்
. மட்டனைத் தினைவிடுத்த —— ஒரு ரூபம்
நத்தியுற் றுடலடுத்த —— ஒருநாகம்
. நச்சுறக் கறைநிலைத்த —— மிடறாகும்
சித்தமுற் றெனையடுத்து —— வருவீரே
. சிக்கறுத் தெனைநடத்தி —— அருள்வீரே.

பொருள்:
• ஓராடல் வர்த்தகம்-வளர்ச்சியைக் கைக்கொள்ளும்.
• இன்னோராடல் வளர்ச்சியை அழித்தலைக் கைக்கொள்ளும்.
• சிவ என்னும் ஒரு நாமம் தலைகளை இயக்கும்
• எல்லைகள் அனைத்தையும் விட்டுவிட்ட ஒரு ரூபம்.
• விரும்பி உடலைச் சேர்ந்த ஒரு நாகம்.
• ஆலகால நஞ்சுண்டதால் அதன் கறை நிலைத்த கழுத்தாகும். (நஞ்சு: நச்சு, வலித்தல் விகாரம்)

• என் சித்தத்தில் நின்று என்னை அடைந்து வருவீரே.
• ஐயம் அறுத்து என்னை நடத்தி அருள்வீரே.

05 மே 2024

★★★ ★ ★

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 19, 2024, 11:47:31 PM5/19/24
to santhav...@googlegroups.com

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

 

திருச்சிற்றம்பலம்


                         

                                                             <> இப்படியும் ஒருவர்! <>

 

மடியில் இருபாலர் மங்கையொரு பாலர்

 

குடியில் ஒருமூவர் மூவர் – குடியில்

 

இவர்ஒருவர் ஈடில் ஒருவரிவர் கீழே

 

தவத்தவர் தாம்நால்வர் காண்.

 

(பொருள் விளக்கம்சிவபெருமான் மடியில் இருபாலகர்களையும் உடலிலொரு பாகத்தில் மனையாளாகிய உமையையும் கொண்டவர்ஆக இவர் குடும்பத்தில் மூவர் உளர்பிரமன்திருமால் ஆகியோருடன் இவரையும் சேர்த்து மூவர் என உலகோ வழிகாட்டிரால் அழைக்கப்படுபவர்இவர் தமக்கு இணையில்லாத ஒருவர்; (தட்சிணாமூர்த்தி குருவாக இவர் ஆலின் அடியில் அமர்ந்திருக்கஅவர் கீழே சனகர்சனாதனர்சனந்தர்சனத்குமாரர் என்னும் நான்கு தவசிகள் இருப்பர்.) 

 

... அனந்த் 20-5-2024

https://vsa-pradoshappaadalgal.blogspot.com/

------------------------------
On Sat, May 4, 2024 at 10:34 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

     நாளை (5-5-2024) பிரதோஷ நன்னாள்

     திருச்சிற்றம்பலம்

   <> துணையடி சேர்ப்பாய் <>


குருநாதன் ரமணி

unread,
May 20, 2024, 12:38:43 AM5/20/24
to சந்தவசந்தம்
#ரமணி_பிரதோஷம்
ஆவியைக் காத்த ருள்வீர்
(அறுசீர் விருத்தம்: விளம் மா மா விளம் மா மா)

நெற்றியில் கண்ணைக் கொண்டீர் நீற்றினை உடலில் கொண்டீர்
தற்பரை இடத்தில் கொண்டீர் தாணுவாய் ஆல மர்ந்தீர்
பொற்பத நடனம் பார்த்துப் போற்றுவார் மூவா யிருவர்
அற்பனுக் கருள்செய் வீரே ஆவியைக் காத்த ருள்வீர். ... 1

அப்பரின் நோய்தீர் தருளி அடியவ ராகக் கொண்டீர்
முப்புரம் சிரித்தெ ரித்தீர் மூவுல காளும் வேந்தே
இப்பிறப் பகன்றே செல்ல இனியொரு பிறவி வேண்டேன்
செப்பரும் ஐந்தெ ழுத்தைச் சொல்லுவேன் காத்த ருள்வீர். ... 2

ஊர்வலம் தெருவில் வருவீர் உமையுடன் கூடி நின்றே
தேர்வலம் ஊரைக் கூட்டும் தில்லையில் ஆடும் தேவே
கார்வலம் வந்தே மாரி காட்டினில் பெய்யச் செய்வீர்
கேவலம்  தந்த ருள்வீர் கேடுகள் நீங்கச் செய்தே. ... 3

20 மே 2024

★★★★★
 

Ram Ramakrishnan

unread,
May 20, 2024, 1:48:28 AM5/20/24
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. ரமணி.

“மூவா யிருவர்” - எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 20, 2024, at 10:08, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

#ரமணி_பிரதோஷம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

குருநாதன் ரமணி

unread,
May 20, 2024, 2:01:48 AM5/20/24
to சந்தவசந்தம்
மூவா யிரவர்: மூவாயிரம் அந்தணர்கள் என்று மாற்றிக் கொள்கிறேன். இந்த வலைதளத்தில் இரண்டும் பயனுறக் காண்கிறேன்; எனினும் மூவாயிரவர் என்பதே சரியாகத் தோன்றுகிறது.
https://ta.wikisource.org/wiki/வேங்கடம்_முதல்_குமரி_வரை_2/தில்லைச்_சிற்றம்பலவன்
அன்புடன்,
ரமணி

குருநாதன் ரமணி

unread,
May 20, 2024, 2:05:17 AM5/20/24
to சந்தவசந்தம்
வாய்பாடு மாறாததால் மூவாயிரம் பேர் என்றே கொள்கிறேன்.

நெற்றியில் கண்ணைக் கொண்டீர் நீற்றினை உடலில் கொண்டீர்
தற்பரை இடத்தில் கொண்டீர் தாணுவாய் ஆல மர்ந்தீர்
பொற்பத நடனம் பார்த்துப் போற்றுவார் மூவா யிரம்பேர்

அற்பனுக் கருள்செய் வீரே ஆவியைக் காத்த ருள்வீர். ... 1

Arasi Palaniappan

unread,
May 20, 2024, 2:34:00 AM5/20/24
to santhav...@googlegroups.com
போற்றுமூ வாயி ரம்பேர் 

என்றிருந்தால் 

விளம் மா மா 
சரியாக வரும் 

அரசி. பழனியப்பன் 

saidevo

unread,
May 20, 2024, 2:51:57 AM5/20/24
to santhav...@googlegroups.com
நன்றி. அப்படியே கொள்கிறேன்.
ரமணி

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/-mUox7DB-1w/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYrhHosHwdZBe%3DvjYU_xSTrgZ1shaPVweKrFAy2KC_NjQ%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
May 20, 2024, 6:04:47 AM5/20/24
to santhav...@googlegroups.com
மிக அருமை.

ஆலக் கழுத்தனை ஆலத் தடியனை
மூலக் கருத்தினை மோனத்தால் - சீலர்க்(கு)
உரைத்தானைப் பெண்பங்(கு) உடையானைத் தோலார்
அரைக்கோனை ஆசானை நம்பு!
கோபால்



On Mon, May 20, 2024 at 9:17 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

 

திருச்சிற்றம்பலம்


GOPAL Vis

unread,
May 20, 2024, 6:15:08 AM5/20/24
to santhav...@googlegroups.com
அருமை.
அப்பரின் நோய்தீர் தருளி 
ஊர்வலம் தெருவில் வருவீர்
அரையடியின் 3ஆம் சீர் தேமா ஆதல் சிறக்கும் என்று தோன்றுகிறது.
கோபால்.

குருநாதன் ரமணி

unread,
May 20, 2024, 10:05:11 AM5/20/24
to சந்தவசந்தம்
மாற்றிக் கொண்டேன் திரு. கோபால். மாற்றியபின் பாடல்:

#ரமணி_பிரதோஷம்
ஆவியைக் காத்த ருள்வீர்
(அறுசீர் விருத்தம்: விளம் மா மா விளம் மா மா)

நெற்றியில் கண்ணைக் கொண்டீர் நீற்றினை உடலில் கொண்டீர்
தற்பரை இடத்தில் கொண்டீர் தாணுவாய் ஆல மர்ந்தீர்
பொற்பத நடனம் பார்த்துப் போற்றுமூ வாயி ரம்பேர்

அற்பனுக் கருள்செய் வீரே ஆவியைக் காத்த ருள்வீர். ... 1

அப்பரின் நோயைத் தீர்த்தே அடியவ ராகக் கொண்டீர்

முப்புரம் சிரித்தெ ரித்தீர் மூவுல காளும் வேந்தே
இப்பிறப் பகன்றே செல்ல இனியொரு பிறவி வேண்டேன்
செப்பரும் ஐந்தெ ழுத்தைச் சொல்லுவேன் காத்த ருள்வீர். ... 2

ஊர்வலம் தெருவில் காண்போம் உமையுடன் கூடி நின்றே

தேர்வலம் ஊரைக் கூட்டும் தில்லையில் ஆடும் தேவே
கார்வலம் வந்தே மாரி காட்டினில் பெய்யச் செய்வீர்
கேவலம்  தந்த ருள்வீர் கேடுகள் நீங்கச் செய்தே. ... 3

20 மே 2024

★★★★★

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 20, 2024, 5:02:50 PM5/20/24
to santhav...@googlegroups.com
அருமை!
>> கேவலம்  தந்த ருள்வீர் கேடுகள் நீங்கச் செய்தே. ... 

அனந்த்

குருநாதன் ரமணி

unread,
May 20, 2024, 11:26:56 PM5/20/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, அனந்த் ஸார்.
ரமணி

குருநாதன் ரமணி

unread,
Jun 4, 2024, 12:35:21 AM6/4/24
to சந்தவசந்தம்
#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி
சிறுவனுக் கருள்வாரோ?
(அந்தாதி மாலை)
(கலிவிருத்தம்: விளம் காய் விளம் காய்)

கோவண மேனியரைக் கூத்தரைச் செம்பொருளை
ஆவண வீதியிலே வாங்கிய மாலையுடன்
பார்வதி இடமுறையும் பசுபதிப் பேரொளியை
ஊர்வலம் வரக்கண்டே ஊன்றிநான் துதித்தேனே. ... 1
[ஆவண வீதி: கடைவீதி]

தேன்மிகு மலர்களிலே சிறகடிக் கும்வண்டு
வான்மிகச் செம்மையுறும் மாலையின் வேளையிலே
கூன்மிகு மதியணியும் செஞ்சடைக் கங்கையின்கேள்
ஊன்மிகு மேனியனென் உள்மனம் வருவாரோ? ... 2

வாரணி மங்கையவள் வாமமே வீற்றிருக்கக்
காரிருள் சூழுமுன்னே கதிரவன் மலையிறங்க
பாரினில் மாதேவன் பரிவுடன் வந்திறங்கி
சீரெதும் இல்லாத சிறுவனுக் கருள்வாரோ? ... 3

காணுவர் காணாதார் கற்றவர் கல்லாதார்
ஆணவம் மிக்காரும் யாவரும் காணுமுரு
தாணுவாய்க் கல்லாலத் தருவடி வீற்றிருந்தும்
ஆணுடன் பெண்ணாகும் அத்தனின் உருவாமே. ... 4

உருவுடன் உருவமிலா உருத்திரர் உமையாள்கேள்
இருமையில் ஒருமைகொளும் இறப்பிலி பரம்பொருளாய்
வருமொரு பிறவியிலா வரம்தரும் வாழ்முதலாம்
குருமணி கொக்கிறகர் கூத்தராம் கோவணரே. ... 5

06 ஜூன் 2024

★★★★★
 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 4, 2024, 1:33:19 AM6/4/24
to santhav...@googlegroups.com

இன்று பிரதோஷ நன்னாள் 

திருச்சிற்றம்பலம்

                      <> உன்னருள் திறம் <> 


         Sri Natarajar-June 2024.jpg


சதுராடும் ஐய!உனைச் சாருமடி யார்பால்

எதிர்பார்க்கும் நற்குணங்கள் ஏதும் – பதரனையேற்(கு)

இன்றென் றறிந்துமெனை ஏற்றாய் இதற்கெங்ஙன்

நன்றி நவில்வேன் நான்.

                 🌹🌹🌹


                   large-15-bronze-dancing-shiva.jpg


சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி

ஊற்றுக் கோல்தந் துதவியுன்தாள் உறுமா றிட்டாய் உன்னருளை

ஏற்கத் தகுதி இல்லேனுக் கிங்ஙன் இரங்கும் ஈச!உன்போல்  

வேற்றோர் தெய்வம் மேதினியில் உண்டோ விளம்பற் கறியேனே.

                           🌹🌹🌹

…அனந்த் 4-6-2024   

GOPAL Vis

unread,
Jun 4, 2024, 2:20:12 AM6/4/24
to santhav...@googlegroups.com
குருமணி பாடல் அருமை!
வந்திறங்கி சீரெதும் --> “ச்”?
கோபால்.

On Tue, Jun 4, 2024 at 10:05 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி
சிறுவனுக் கருள்வாரோ?
(அந்தாதி மாலை)
(கலிவிருத்தம்: விளம் காய் விளம் காய்)

கோவண மேனியரைக் கூத்தரைச் செம்பொருளை
ஆவண வீதியிலே வாங்கிய மாலையுடன்
பார்வதி இடமுறையும் பசுபதிப் பேரொளியை
ஊர்வலம் வரக்கண்டே ஊன்றிநான் துதித்தேனே. ... 1
[ஆவண வீதி: கடைவீதி]

குருநாதன் ரமணி

unread,
Jun 4, 2024, 2:27:55 AM6/4/24
to சந்தவசந்தம்
நன்றி, கோபால்ஜி. திருத்திக் கொண்டேன்.
ரமணி

GOPAL Vis

unread,
Jun 4, 2024, 2:29:37 AM6/4/24
to santhav...@googlegroups.com
அருமை! 
நான் முயன்றிருக்கும் பிரதோஷப் பாடலும் உங்கள் பாடல்களின் உணர்வோடு ஒத்திருப்பதாக எண்ணுகிறேன்.
நன்றி நவில்வேன் நான். தளை.  நவில்வெனோ?
கோபால்.

On Tue, Jun 4, 2024 at 11:03 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள் 

திருச்சிற்றம்பலம்

                      <> உன்னருள் திறம் <> 

சதுராடும் ஐய!உனைச் சாருமடி யார்பால்

எதிர்பார்க்கும் நற்குணங்கள் ஏதும் – பதரனையேற்(கு)

இன்றென் றறிந்துமெனை ஏற்றாய் இதற்கெங்ஙன்

நன்றி நவில்வேன் நான்.

                 🌹🌹🌹


                   

சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி

GOPAL Vis

unread,
Jun 4, 2024, 2:32:03 AM6/4/24
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [04 ஜூன் 2024]
(ஒருபா ஒரு பஃது; நேரிசை வெண்பா)

அறியேன்!

அறியேன்! அறியேன் எனவும் அறியேன்!
செறியும் சிறுமைச் செருக்கில் - வறியன்
அரசே எனஆர்த்(து) அலம்பும் வகையில்
முரசாய் முழங்குமென் நா! ..(1)
[அலம்புதல் = வெற்றுப் பேச்சு]

நாவம் கவிழ, நடுமா அலையினில்
பாவம் நினைந்து பதறுகையில் - சீவன்
பிழைக்கத் தவித்துமுன் பேரை மொழிந்தே
அழைக்கத் தெரியா(து) அர! ..(2)
[நாவம் = படகு]

அரணாம் பணமென்(று) அறவழி ஒவ்வா
முரணென்(று) உணர்ந்து, முயன்று - பரணில்
குறைவறச் செல்வத்தைக் கூட்டிப் பதுக்கி
நிறைக்கையில் ஏதுன் நினைவு?! ..(3)
[அரண் = பாதுகாப்பு]

நினையே நினைப்பேன் நீயிக் கலியைப்
புனையா திருந்தால்! புவியில் - அனைத்தும்
புரட்டென ஆகவே, புண்ணியம் எல்லாம்
திரட்டிய செல்வம்! தெளி! ..(4)

தெளிவேன் நினதே திசைகள், ககனம்,
வளி,தீ புனலுமென் வாழ்வும்! - அளிநீ
அறஞ்சூழ் உலகினை, அன்றேல் எளியேன்
மறமுன் கணக்கினில் மாற்று! ..(5)
[ககனம் = வானம்; மறம் = பாவம்]

மாற்றென் விதியை மலர்ப்பதம் சேர்ந்(து)ஊழின்
சேற்றை விடுத்துச் சீருற்றுக் - கூற்றின்
கயிறும் வயிறும் கடனென ஊசல்
பயிலும் கதியைக் களை! ..(6)
[கூற்றின் கயிறு ~> இறப்பு; வயிறு ~> பிறப்பு]

களைத்தேன் இளைத்தேன் கற்றேனோ? அல்லேன்!
முளைத்த விதியால் முடிவேன்! - திளைத்துன்
பெயரின் சுகத்தைப் பெறவும் உயவும்
செயவே இவண்பார் சிறிது! ..(7)
[முளைத்த = பிறந்த; உயவும் = உய்யவும்]

சிறியேன் நினசேய் சிவனே மறவேல்!
பொறியைந் துளெனைப் புகுத்தி - வெறியைக்
கிளப்பும் பவத்தில் கிடத்திய நீயே
உளத்தை உனபால் இழு! ..(8)
[உனபால் = உன்பால், உன்பக்கம்]

இழுக்கும் அழுக்கும் எனைத்தொற் றியதீ
ஒழுக்கம் கருதி ஒதுக்கி - ‘விழுநீ
குழியில்’ எனச்சொல் கொடியன் அலன்நீ!
வழிகாட் டிடுமுன(து) அன்பு! ..(9)

அன்பின் வடிவே அரனே இடத்தினில்
மென்பூங் கொடிபகிர் மேனியனே! - சன்மமிங்(கு)
ஒன்றோ பலவோ உனைத்தொழவே ஆகட்டும்!
அன்றேலோ வேண்டேன் அறி! ..(10)
[அன்றேலோ = அவ்வாறு இல்லை என்றாலோ]

நல்வாழ்த்துகள்
கோபால்
[4/6/2024]VGK

GOPAL Vis

unread,
Jun 4, 2024, 2:42:40 AM6/4/24
to santhav...@googlegroups.com
இழையில் இட்டபின் உறுத்திய பிழைகள், திருத்தங்கள்:

நினையே நினைப்பேன் நீயிக் கலியைப்   --> நினைத்திருப்பேன்.
களைத்தேன் இளைத்தேன் கற்றேனோ?    --> களைத்தே இளைத்தேனே கற்றேனோ.

கோபால்

குருநாதன் ரமணி

unread,
Jun 4, 2024, 2:59:40 AM6/4/24
to சந்தவசந்தம்
மிகவும் அருமை, கோபால்ஜி.
ரமணி

Ram Ramakrishnan

unread,
Jun 4, 2024, 4:28:02 AM6/4/24
to santhav...@googlegroups.com
மிக அருமையான பிரதோஷப் பாடல்கள், அனந்த ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 4 Jun 2024, at 11:03 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:



இன்று பிரதோஷ நன்னாள் 

திருச்சிற்றம்பலம்

                      <> உன்னருள் திறம் <> 


         
<Sri Natarajar-June 2024.jpg>


சதுராடும் ஐய!உனைச் சாருமடி யார்பால்

எதிர்பார்க்கும் நற்குணங்கள் ஏதும் – பதரனையேற்(கு)

இன்றென் றறிந்துமெனை ஏற்றாய் இதற்கெங்ஙன்

நன்றி நவில்வேன் நான்.

                 🌹🌹🌹


                   
<large-15-bronze-dancing-shiva.jpg>


சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி

ஊற்றுக் கோல்தந் துதவியுன்தாள் உறுமா றிட்டாய் உன்னருளை

ஏற்கத் தகுதி இல்லேனுக் கிங்ஙன் இரங்கும் ஈச!உன்போல்  

வேற்றோர் தெய்வம் மேதினியில் உண்டோ விளம்பற் கறியேனே.

                           🌹🌹🌹

…அனந்த் 4-6-2024   

GOPAL Vis

unread,
Jun 4, 2024, 4:42:07 AM6/4/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ரமணி.
கோபால்.

. . . . . . .

Ram Ramakrishnan

unread,
Jun 4, 2024, 6:19:42 AM6/4/24
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு, திரு. கோபால்.

பாட்டின் ஓட்டத்தை ஒத்து 1, 6, 8, 9 ம் பாக்களின் ஈற்றடிகளில் மோனை இல்லாமற் போனதோ?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 4 Jun 2024, at 12:02 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Jun 4, 2024, 9:32:44 AM6/4/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்.
1, 8 இல் இணைமோனை காணலாம்.
6,9 இல் தவறவிட்டிருப்பதை இப்போது தான் காண்கிறேன்.
வ, அ மோனை சில இடங்களில் அனுமதிக்கப் பட்டதைக் கண்டிருக்கிறேன்.
கோபால்.

On Tue, Jun 4, 2024 at 3:49 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிகச் சிறப்பு, திரு. கோபால்.

பாட்டின் ஓட்டத்தை ஒத்து 1, 6, 8, 9 ம் பாக்களின் ஈற்றடிகளில் மோனை இல்லாமற் போனதோ?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 4 Jun 2024, at 12:02 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
 

பிரதோஷப் பாடல் [04 ஜூன் 2024]
(ஒருபா ஒரு பஃது; நேரிசை வெண்பா)

அறியேன்!

அறியேன்! அறியேன் எனவும் அறியேன்!
செறியும் சிறுமைச் செருக்கில் - வறியன்
அரசே எனஆர்த்(து) அலம்பும் வகையில்
முரசாய் முழங்குமென் நா! ..(1)
[அலம்புதல் = வெற்றுப் பேச்சு]

It is loading more messages.
0 new messages