தேரவாதம் என்னும் ஈனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து நாடுகளில் பெருமதமாக உள்ளது. ஹீனயான சமயத்தில் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட பிக்குகளின் சங்கம் இருக்கிறது. இதனால் அம் மூன்று நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகமாகிறது பற்றிய ஆய்வு நூல் வெளியாகியுள்ளது. அதன் அறிமுகக் கட்டுரை ஒரு குறளைச் சிந்திக்க வைக்கிறது. சில நாள்கள் முன்னர், நீலகேசி அம்மையார் கேட்டிருந்த கேள்விக்கு மறுமொழியாக, "சில குறள்கள் இருக்கின்றன. வள்ளுவர் சிரமண சமயி எனத் தெரிந்தாலும், சமணம், பௌத்தம் என்பதில் எது என்ற கேள்விக்கு விடையாக, பௌத்தர் அல்லர் எனக் காட்டும் குறள் உள்ளன. கொல்லாமை, புலால் உண்ணாமை பொருள்கொண்ட குறள்களில் சில பௌத்தத்தைச் சாடுவதும் பார்க்கலாம்" என அவருக்குக் குறிப்பிட்டேன். தேரவாத நாடுகளின் நூல் மதிப்புரையை வெள்ளுரையாகக் கடைசியில் இணைத்துள்ளேன்.
https://x.com/SushantSin/status/2014907725960876357மேலும்,
https://x.com/naa_ganesan/status/2015581325902721385நல்குரவு (வறுமை) அதிகாரக் குறளுக்கு வருவோம்.
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று - 1050
இரு பொருளிலே ஒரு சொல்லைச் சில முக்கியமான குறள்களிலே பயன்படுத்தலில் வள்ளுவர் வல்லவர். இங்கே துவரல் - துவருதல் = (1) முற்றிலுமாக (2) சிவந்து (செவ்வாடை - துவராடை) அணியும் பௌத்தரைக் குறிக்கும். துவரர் என்றால் துவராடை அணியும் பௌத்தர் ஆவர் (சம்பந்தர் தேவாரம்). அற ஆழி, கேள்வி - வரும் குறள்களிலும் இச் சொற்களுக்கு இரு பொருள் உண்டு.
https://kuralthiran.com/KuralThiran/KuralThiran1050.aspxமணக்குடவர் உரை: நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம்.
துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம்.
(மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)
துவர என்பதற்கு முழுமையாக என்ற பொருள் உண்டு. பொருநராற்றுப்படை. வள்ளுவரே இன்னொரு குறளில், நன்கு பசித்து என்னும் பொருளில் "துவரப் பசித்து" என்றாள்கிறார்.
நுட்பமாக, இக் குறளில் வள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம். சமணம், பௌத்தம் என்பன இரண்டிலும் சங்கங்கள் சமய, மொழி வளர்ச்சிக்கு உண்டு. சமண சமயத்தில் (1) சாது (2) சாத்வி (3) சிராவகன் (இல்லறத்தார்) (2) சிராவகி (பெண்டிர்) என துறவியரை, இல்லற மாந்தர் காக்க வேண்டும் என்றுண்டு. ஆனால், துறவிகள் சங்கம் வைத்து அரசியலில் பெரும்பங்கு ஆற்றியது இல்லை. ஆனால், பௌத்தத்தில் எப்போதும் பிக்ஷுக்களின் பங்கு பெரிது - மூன்று ரத்தினங்கள் எனப்படும் (1) புத்தம் சரணம் கச்சாமி (2) தம்மம் சரணம் கச்சாமி (3) சங்கம் சரணம் கச்சாமி எனப் போற்றப்படுகிறது.
பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, ஸ்டான்லி ஜே. தம்பையா போன்றோர் தேரவாத சமூகங்களில் பிக்குகளின் பங்களிப்பை ஆராய்ந்துள்ளனர். பேரா. ஆ. வேலுப்பிள்ளை என்னிடம் கூறியுள்ளார்: ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால், உள்ளதிலேயே குறும்பு உள்ளவனைச் சங்கத்தில் சேர்ப்பர். அப்படி இருப்பவர்களில் தலைவன் உருவாகி அரசிடம் அறிவுரை கூறும்போது சிறுபான்மையினர் நிலைமை என்னவாகும்? எண்ணிப் பார்க்க வேண்டும். மழித்தலும் எனத் தொடங்கும் குறளும், பிக்ஷுக்கள் மழித்தலைச் சொல்லுகிறார்.
இளைஞர்களைப் பௌத்த சங்கத்தில் சேர்த்து உணவை இலவசமாக அளிப்பர். "உப்பிற்கும் காடிக்கும் கூற்று." முழுமையான துறவு இல்லையாயின், அச் சங்கம் அளிக்கும் உணவு வீண் என்றார் வள்ளுவர். சங்கத்தில் உணவு, உடை, உறையுள் எல்லாம் இலவசம். துவரல் - உடலை முழுமையாகப் போர்த்துதல். புத்தரின் துவராடை அவ்வாறே அமைந்தது. பௌத்த பிக்ஷுகளூக்கும் அவ்வாறே.
https://www.fabriziomusacchio.com/weekend_stories/told/2023/2023-10-11-gandhara_style_buddhist_sculptures/https://www.reddit.com/r/ArtefactPorn/comments/ta9xdz/grecobuddhist_buddha_statue_standing_gandhara/https://searchcollection.asianart.org/objects/10756/standing-buddhaபிக்ஷு முழுமையான துவராடை:
https://lankamegamart.com/products/buddhist-monk-robe-shawl-set-ideal-gift-for-monks-100-cotton-copyஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - பழமொழி. நாலடியாருக்கு வேளாண் வேதம், குட்டித் திருக்குறள். திருக்குறளில் உழவைப் போற்றினாற்போல, வேறு எந்தத் தொழிலும் போற்றப்படவில்லை. உழவுக்குத் தனியதிகாரமே உள்ளது. எனவே, நாலடி போலவே, குறளும் வேளாண் வேதம் எனக் கூறுதல் தவறாகாது. உழவிலே துவரை என்பது பருப்பைச் செம்மண் துவரிப் போர்த்து, வெயிலில் காயவைத்துத் தயார் செய்தல். குலச்சின்னமாக, துவரை தானியத்தைக் கொண்டோர் தூரன் எனக் கொங்குநாட்டில் வாழ்கின்றனர். துவரை என்னும் காரணப் பெயர் வட நாட்டில் தூர் தால் (Dal) என வழங்குவர். துவரல் - சிவத்தல் என்னும் தொழிலால் துவரை எனப் பருப்புவகை பெயர் பெறுதல் போலவே, சிவந்த ஆடை அணியும் பவுத்தரும், துவரர்/துவரார் எனப்படுவது பழைய மரபு. நல்லன்/நல்லான், வல்லர்/வல்லார், ... துவரர்/துவரார் = பௌத்தர்கள்.
"அத்தமண் தோய் துவரார், அமண் குண்டர் யாதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல்" (தேவாரம்).
தேவார வண்ணனை. துவரர் = பௌத்தர்களைப் பற்றியது. சில காட்டுகள் (நூற்றுக்கு மேல் உள):
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி - தேவா-சம்:237/3
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து - தேவா-சம்:424/1
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் - தேவா-அப்:2935/1
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை - தேவா-சம்:1324/2
கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர் தேவா-சம்:2155/1,2 மண்டை - பிக்ஷாபாத்திரம்
துவரை (துவரம்பருப்பு) - பெயர்க் காரணம்
https://www.youtube.com/watch?v=YCVmAzFLa2khttps://www.youtube.com/watch?v=kdW246Aslmwhttps://www.youtube.com/watch?v=vMbOtD68XoMவள்ளுவர் ஒரு Idealist. தூக்குத் தண்டனையை உலகில் முதலில் எதிர்த்தவர் அவர். திருவள்ளுவர் தூக்குத் தண்டனையை வலியுறுத்துகிறாரா? - நாமக்கல் கவிஞர் விளக்கம்
https://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.htmlகுறள் 1050-ல் பௌத்த சங்கம் ஏற்படுத்தும் பிரச்சினைகளைக் குறிப்பிடுவது போல, பௌத்தர்களை இன்னொரு குறளிலும் கண்டிக்கிறார்.
சமண மதக் கோட்பாடுகளை நீர்த்துப் போகச் செய்வது பௌத்தம். அதனால் தான், புலால் உணவு பச்சையாகவும், சமைத்தும் உண்ணும்
கம்போடியா, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் பரவிற்று பௌத்தம். “தினற் பொருட்டால்” ... இக்குறளிலும் “துவரத் துறவாமை”
என்பதுபோலவே, பௌத்தரைக் கண்டிக்கிறார் வள்ளுவர்.
தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:256)
மணக்குடவர் உரை: தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை.
இது, கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை என்றார்க்கு, அதனாலும் கொலைப் பாவம் வரும் என்று கூறிற்று.
இதில் பௌத்தரின் செயலைக் கூறி அவர்கள் உண்மையான துறவியர் அல்லர் என்று காட்டுகிறார் வள்ளுவர்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
மணக்குடவர் உரை: புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின்.
இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.
பௌத்தம் உலக நாடுகளில் பரவ ஏற்றுக்கொண்ட புலால் உண்ணாமை விரதத் தளர்ச்சியை வள்ளுவர் ஏற்கவில்லை. "கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்று பௌத்த பிக்ஷுக்கள் பிட்சைப் பாத்திரத்தில் இடுவது எதுவாயினும் உண்பதனை வள்ளுவர் ஒப்பினார் அல்லர்.
எனவே, துவரல் = சிவந்து. அதாவது, செவ்வாடை போர்த்தும் பௌத்தர். சுவருக்கு வெள்ளை அடித்தான். இங்கே, வெள்ளை - சுண்ணாம்பு (பண்பாகுபெயர்). துவரர் - சிவந்த ஆடை அணியும் பவுத்தர் (பண்பாகுபெயர்). "உதிரம் துவரிய வேங்கை" (இரத்தம் சிவந்த வேங்கை).
துப்புரவு இல்லார் "சிவந்தும்" துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று - 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. - குறள் 1050
அதாவது, ஏழ்மையாலோ, வீட்டு நிர்ப்பந்தத்தாலோ சிவந்த துவராடை அணிந்து, துறவாமல் பேருக்கு பௌத்த சங்கத்தில் பிக்ஷு ஆக இருப்பது ஊரார் தரும் உணவுக்குக் கேடு, ஏதம், எமன் என்கிறார். இதனை தேரவாதப் பௌத்த சமூகங்களில் பார்த்து அறியலாகும். வறுமை என்னும் அதிகாரம் ஆதலால், துப்புரவு = நுகர்ச்சிப் பொருள் என உரைப்பர். இன்னொன்றும் உண்டு. துப்புரவொன்றில்லா வெற்றரையார் (தேவாரம்) - இங்கே, துப்புரவு - தூய்மை (free from dirt, pollution). மனத் தூய்மை இன்றி, செவ்வாடை அணிந்து, சங்கத்தில் சேர்வாருக்குச் சங்கம் அளிக்கும் உணவு வீண்.
அரசியலால் பிற சமயத்தாருக்கு இன்னல் விளைப்பவருக்கு வள்ளுவர் கூற்று:
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். (1047)
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
"Tiruvalluvar is a cunning technician who, by prodigious self-restraint and artistic vigilance supercharges his words with meaning and achieves an incredible terseness and an irreducible density. His commentators have, therefore, to squeeze every word and persuade it to yield its last drop of meaning. The success of each commentator has depended also upon the expertise which he has brought to bear upon the original." Justice S. Maharajan, Tiruvalluvar, Sahitya Akademi, 1982.
நா. கணேசன்