கவியரங்கம் 61 - கவியோகி வேதம் அவர்களுக்கு அழைப்பு

17 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Nov 16, 2025, 9:16:05 PM (9 days ago) Nov 16
to santhav...@googlegroups.com

கவிஞர் இமயவரம்பன் கவிதைக்குப் பின்னூட்டம்


ஆனந்தக் களிப்பு


மந்தண மென்றொன்று மில்லை – தினம்

மனவிருள் நீக்கிடின் வாராத் தொல்லை

சிந்திக்கத் துன்பங்கள் தீரும் – பிரிவினைச்

சிக்கலால் பேதத்தி னின்லல்கள் சேரும்

மந்தணம் – ரகசியம்

 

சிந்தையைச் சொந்தத்தில் கூட்டி – உற்ற

செம்மையைப் போற்றிடும் பாங்கினைக் காட்டு

வந்திடும் தீமையை ஓட்டு – வருபவர்

வாழ்ந்திட வேற்றுமை நீக்கலே மாட்சி

 

உன்மனமும் “நான்யார்” கேட்டல் – உன்ற

னுள்ளின் றருள்தரு மேகனின் னாட்டல்

அன்பெனும் பாடத்தின் சீர்மை – என்றும்

ஆருயிர் மேன்மைக்கு வித்தாகும் பான்மை

 

சோதிடம் கைரேகை நம்பின் – உன்னில்

துன்பமே சேர்ந்தங்குச் சிந்தையும் வெம்பும்

பேதங்கள் மாய்த்திடும் செம்மை – நாளும்

பிரிவினைப் பாங்கை விடுப்பின் நன்மை

 

ஆனந்த னிங்கிட்ட தீர்ப்பு – ஏற்றே

அன்னவர் சொற்கேட்டுச் சிந்திக்க வாய்ப்பு

தேனெனக் கொள்வமேல் சீர்ப்பு – இதுவு

மானந்த மேவுங் கவியத னார்ப்பு.


கவியரங்கம் 61 ஐந்தாம் அழைப்பு - கவியோகி வேதம்


யோகியார், தம் கவிதையை எனது தனி மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளார். அதனை இடுவதற்கு முன், 

அவருக்கு அழைப்பு விடுத்து மரியாதை செய்தபின்,அவர்தம் கவிதையை இங்கு இடுவேன்:

 

ஆனந்தக் களிப்பு

அத்தாழ நல்லூரில் தோற்றம்- அவர்தம்

ஆழ்ந்தநல் லறிவொடு கற்றலில் ஆற்றல்

சித்தமாய்க் கொண்டவர் திறனே - என்றும்

சீர்தந்து செல்வம்போல் காத்திடு மரணே.

 

பாடிப் பரவசம் கொள்வார்- லகரி

பாபாவின் ஆசியைத் தான்கொண்டு வெல்வார்

கோடிக் கணக்கிலே சொந்தம்- எங்கும்

கூடிக் குலவும் கவிகளின் பந்தம்.

  

(வேறு)

அறுசீர் விருத்தம்

 

வேகமாய்ச் சிந்தனைகள் உருவாக்கும்

மென்மனங் கொண்டவரா மருள்நேசர்

தாகமே இவரேற்ற தவவாழ்ககை

தண்மையாம் சீர்ச்சேர்த்த பொருளாளர்

போகமே மடைதிறந்த கவிதைவெள்ளம்

புண்ணிய மிவரேற்ற லகரியுள்ளம்

ஆகம வாழ்கையதில் பவித்திரத்தை

அண்டுநல் யோகியர்தம் கவிதருவீர்



அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Kaviyogi Vedham

unread,
Nov 16, 2025, 9:18:25 PM (9 days ago) Nov 16
to santhav...@googlegroups.com
mikkananri,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BC6448FA-D33B-4A5B-ABC4-00D8C98E911D%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Nov 16, 2025, 9:36:07 PM (9 days ago) Nov 16
to santhav...@googlegroups.com

கவியோகி வேதம் அவர்கள் என் மின்னஞ்கலுக்கு அனுப்பிய அவர்தம் க்விதையை இங்கிடுகிறேன்:

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்..

 

*******(கவியோகி வேதம்)*******

 

எந்தத் தலைப்பிலும் எழுதும்   திறன்பெற்ற

அரங்கத் தலைவரை  அழகுற வணங்கினேன்;

என்னால் முடிந்த   எண்ணம்   தருகிறேன்;--

அந்த  நாட்கள்  எங்கு போயின?—ஆ!

சிந்தனை புரண்ட  சீர்மிகு  நாட்கள்;

கருத்துகள் உதிர்ந்து கனிதந்த நாட்கள்;

திரண்ட  உடனேயே திருப்திக்  கணங்கள்!

சீடர்க்  கெல்லாம்  அவற்றைப் பகிர்ந்து

புதுமைப் பாதை பூரித்த நாட்கள்,

எல்லாக் கணமும் எங்கு  போயின?

 அந்தக் கருத்துகள்,  ஆழச் சிந்தனை

முதுமை  வந்ததும்   முடங்கிப் போனவோ?

இளமை  இருப்பின்தான் மூளையில் இருக்குமோ?

உடுக்கை  இழந்தாற்போல் ஏனோ   ஆயினேன்!

மாத்திரை களில்தான்  யாத்திரை  தொடர்கிறது;

படுக்கையில்    வீழ்ந்ததும் பாதாளம் விரியுமோ?

கடுக்காய்   கொடுக்குமோ  கருத்துப் புதுமைகள்?

எத்தனை  புதுமைகள்! எத்தனை  பாதைகள்;

வெள்ளம்  வயல்களில் தங்காத வண்ணம்

வடிய புத்தியில்  வந்த   கருவிகள்,

வறட்சிக் காலத்தில்  முகிலைக் கொணர்ந்தே(வீடுமுன்)

மழையைத் திரட்டிய  சிந்தனைச்  சிதறல்கள்

ஊழல்கள் களைய  உதவிய ராணுவம்,

சட்டக்  கிடுக்கியில்  அற்பரை நெருக்கல்,

என்றபல்  சிந்தனை  எல்லாம் போச்சே!

கிராமங்கள் வளர உதித்த கருத்தும்

மராமத்து செய்யாமல்   மங்கிப் போயிற்றே!

மறதி  என்கிற பாம்பு  விழுங்கியதே!

.சரிதான். சென்றது கனவாய்ச்  சரிந்தது;

என்றே   கொள்கிறேன்.இனிவரும் கருத்தை

ஏட்டில்  எழுதுவோம்;இளம் விஞ் ஞானிகள்

கையில் தந்தால் புதுமை செய்வரே!

சரியே;சின்னாள் போகட்டும்;  பார்ப்போம்.

கருகிய மொட்டின்  பக்கமே இன்னொரு

விரிந்த மொட்டு வளராமல் போகுமா?

நேற்றைய குயிலும் இன்றுவந்து   கூவாதா?

மனத்தை   இளமையாய்  வைப்போம்;

ஜனிக்கும்  ஆயிரம் சிந்தனை!தளர்விலை;

நாளைய பாரதம் நன்றாய் இருக்கும்.

சிந்தனைப்  பந்தல் சீராய்  விரியும்;

எனும்   நம்பிக்கை யுடனே  எழுந்தேன்;

வாழ்க  நேரிய எண்ணம்; வாழ்க என்-நாடு!

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



Subbaier Ramasami

unread,
Nov 16, 2025, 9:44:47 PM (9 days ago) Nov 16
to santhav...@googlegroups.com
எதுவும்  யோகத் திசையும் போது
முதுமை  உம்மை முடக்கிப் போடாது   
சமவய துடையோம் நானும் நீங்களும்
அமைவாய் மூளைக் காட்சி கொடுத்தால்
இயங்கும் இயங்கும் இயங்கிக்கொண் டிருக்கும்
அயர விடுத்தல் ஆகா தன்பரே
இன்னும் கொஞ்சம் இயக்கிப் பார்த்தால்
பின்னும் பின்னும் பெருமை சேர்க்குமே!

இலந்தை


On Sun, Nov 16, 2025 at 8:36 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

கவியோகி வேதம் அவர்கள் என் மின்னஞ்கலுக்கு அனுப்பிய அவர்தம் ருபவர்

இமயவரம்பன்

unread,
Nov 16, 2025, 9:46:45 PM (9 days ago) Nov 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எனது கவிதையின் கருத்துகளையெல்லாம் கவினுறத் தொகுத்துப் பின்னூட்டம் தந்து வாழ்த்திய தலைவர் திரு. இராம்கிராம் அவர்களுக்கு மிக்க நன்றி!

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 16, 2025, 11:35:04 PM (9 days ago) Nov 16
to santhav...@googlegroups.com
ஆற்றொழுக்கு நடை ; அழகிய சொற்றொடர்கள்; ஆழமான கருத்துகள் 
பழைமையைப் புதுமையின் பக்கத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவம் .— இவையே கவியோகியாரின் கவின் மிகு கவிதைகள்.
மிகவும் அருமை
Truly inspiring 

                —தில்லைவேந்தன்
..

Ram Ramakrishnan

unread,
Nov 17, 2025, 1:55:43 AM (9 days ago) Nov 17
to santhav...@googlegroups.com
இந்த இழை கவியரங்கம் 61 என்ற இழையினின்றும் வேறுபட்டுத் தனி யாக நிற்கிறது. காரணம் நானே. மன்னிப்பீராக.

இதுவரையில் பதிவிட்டதெல்லாம் கவியரங்கம் 61 இழையில் இணைத்து விட்டேன்.

இனிமேல் கவியரங்கம் 61 இழையில் தொடர்வீர்களாக.

நன்றி

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Nov 17, 2025, 11:26:00 AM (8 days ago) Nov 17
to santhav...@googlegroups.com
 கருத்துக்கள்,.. பாராட்டு..,   உதிர்த்த  என்  அன்பருக்கெல்லாம்  என்  தனி  நன்றி. வாழ்க அவர்தம் நந்நெஞ்சம்,
 யோகியார்

Arasi Palaniappan

unread,
Nov 17, 2025, 11:38:22 AM (8 days ago) Nov 17
to சந்தவசந்தம்
வேதக் கவிதை சாதகக் கவிதை
சேதம் இல்லாச் சிந்தனைக் கவிதை
அனுபவம் சொல்லும் அற்புதக் கவிதை
பனுவல் ஆகப் பயிற்றும் கவிதை
சிந்தனை சற்றும் சிதறாக் கவிதை
விந்தை புரியும் வேதக் கவிதை
யோகம் பயின்ற யோக்கியர் படைத்த
வேகம் இல்லா விவேகக் கவிதை
இலந்தையார் தந்த இன்னலக்
கவிதையால்
நலங்கொள் சிந்தையர் நவின்ற கவிதை
இன்னும் சிந்திக்க எமக்கருள் செய்யும்
இன்றமிழ்க் கவிதை; இன்னும் சொல்ல
எனக்(கு)  ஏலாத ஏற்றக் கவிதை
மனங்கள் மயக்கும் மதுவார் கவிதை
வேதக் கவிதை வெல்லும்
பாதம் பணிந்தேன் பனுவலால்
மகிழ்ந்தே!

வணங்கி வாழ்த்தும்
அரசி. பழனியப்பன்


Arasi Palaniappan

unread,
Nov 17, 2025, 11:42:56 AM (8 days ago) Nov 17
to சந்தவசந்தம்

Lalitha & Suryanarayanan

unread,
Nov 17, 2025, 11:49:45 AM (8 days ago) Nov 17
to santhav...@googlegroups.com
அரசியார் பின்னூட்டம் அழகு!
சிவசூரி.

Arasi Palaniappan

unread,
Nov 17, 2025, 11:52:38 AM (8 days ago) Nov 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐய!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramramak

unread,
Nov 18, 2025, 12:38:45 AM (8 days ago) Nov 18
to சந்தவசந்தம்
கவிஞர் குழாமிற்கு அன்பான வேண்டுகோள்.

தயை கூர்ந்து, இவிவிழையைத் தொடராமல், உங்கள் பின்னூட்டங்களைக் "கவியரங்கம் 61" என்ற இழையில் தொடருங்கள்.

இந்த இழைக்கு இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

நன்றி.

Swaminathan Sankaran

unread,
Nov 18, 2025, 12:34:08 PM (7 days ago) Nov 18
to santhav...@googlegroups.com
அருமையான பல கவிதைகள்.

ஆனால் எனக்கு திரு. சிவசூரி, யோகியார் இருவருடைய கவிதைகளும்  
கிடைக்கவில்லை.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran
Reply all
Reply to author
Forward
0 new messages