பாடல்வரிக்குப் பொருள் தேவை...

70 views
Skip to first unread message

வெண்கொற்றன்

unread,
Jun 13, 2023, 12:23:58 AM6/13/23
to சந்தவசந்தம்
புலவர் பெருமக்களுக்கு வணக்கம்,

எனது நண்பர் ஒருவர் இந்தத் திரைப்படப் பாடலின் வரிக்குப் பொருள் வினவினார், எனக்குப் பிடிபடவில்லை யாதலால் இவண் வினவுகிறேன், புலவர் பெருமக்கள் உதவுக... நன்றி!

படம்: காற்றினிலே வரும் கீதம் (1978)
பாடல்: ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே...’
ஆசிரியர்: திரு. பஞ்சு அருணாச்சலம்


பொருள் தெரிய வேண்டிய வரிகள்:
//ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம் தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா//

(இது தமிழ்தானா? இல்லை வேறேதேனும் மலைநாட்டு திராவிட மொழியா?)

முழுப்பாடல்:
குழு: தைய்யார தைய்யா...தைய்யார தைய்யா... தைய்யார தைய்யா...தைய்யார தைய்யா...

குழு: தைய்யார தைய்யா...தைய்யார தைய்யா... தைய்யார தைய்யா...தைய்யார தைய்யா...

ஆண்: {சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

குழு: தைய்யார தைய்யா

ஆண்: என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா

குழு: தைய்யார தைய்யா} (2)

ஆண்: ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம் தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா

ஆண்: சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

குழு: தைய்யார தைய்யா

ஆண்: என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா

குழு: தைய்யார தைய்யா

ஆண்: தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா

ஆண்: மைய்யை இட்ட கண்ணாலே மையல் கண்ட நேரம் மொத மொதலா தொட்டேனே வாய்க்கா கரையோரம் சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே

ஆண்: அள்ளி கட்டும் கண்டாங்கி அரை கொறையா ஓதுங்க அலுங்காம அணைத்தாளே வெதுவெதுப்ப மயங்க மஞ்சள் கொண்ட கைக்காரி மயக்கி விட்டள் என்னை ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம் தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா

ஆண்: சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

குழு: தைய்யார தைய்யா

ஆண்: என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா

குழு: தைய்யார தைய்யா

ஆண்: போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்ப்பா நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிற்ப்பா உணவில்லை உறவில்லை வாடுவாள்

ஆண்: என் முகத்தை பார்த்ததுமே துள்ளி துள்ளி வருவா முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம் தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா

ஆண்: சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா
குழு: ஆஹா ஆஹா தைய்யார தைய்யா ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா

ஆண்: ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம் தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா

ஆண்: சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா
குழு: ஆஹா ஆஹா தைய்யார தைய்யா ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா



நன்றி,
விசய்

Siva Siva

unread,
Jun 13, 2023, 9:18:41 AM6/13/23
to santhav...@googlegroups.com
சினிமாப் பாடல்கள் எழுதும் வைரமுத்துப் போன்றோர்க்கு அவ்வரி புரியக்கூடும்.

அசைச்சொற்களால் அமைந்த வரி என்று கொண்டாலும் இழுக்காது! :)  🙂

V. Subramanian

On Tue, Jun 13, 2023 at 12:24 AM வெண்கொற்றன் <vija...@gmail.com> wrote:
புலவர் பெருமக்களுக்கு வணக்கம்,

எனது நண்பர் ஒருவர் இந்தத் திரைப்படப் பாடலின் வரிக்குப் பொருள் வினவினார், எனக்குப் பிடிபடவில்லை யாதலால் இவண் வினவுகிறேன், புலவர் பெருமக்கள் உதவுக... நன்றி!

படம்: காற்றினிலே வரும் கீதம் (1978)
பாடல்: ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே...’
ஆசிரியர்: திரு. பஞ்சு அருணாச்சலம்


பொருள் தெரிய வேண்டிய வரிகள்:
//ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம் தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா//

(இது தமிழ்தானா? இல்லை வேறேதேனும் மலைநாட்டு திராவிட மொழியா?)
....

NATARAJAN RAMASESHAN

unread,
Jun 13, 2023, 10:01:49 AM6/13/23
to santhav...@googlegroups.com
These are probably gibberish lines used as fillers in a movie song 

                 R Natarajan 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP0Fg0s4g2e_HWCSemvTnJ3Utbmwy8f%3DkW16xhuN0FRWg%40mail.gmail.com.

சௌந்தர்

unread,
Jun 13, 2023, 4:07:02 PM6/13/23
to சந்தவசந்தம்
I tried Google translate assuming this is Tulu language.  I did not find Tulu in the list. But if I choose Mayalayam, " A kuriya elavali tandala valam" translates to 'A short leafy fertilizer'. Though this does not make sense, I tend to agree with the  'gibberish' conclusion by Sri Thillai Vendhan. We have a multi-linguist in our midst, perhaps he can help.
Soundar

Siva Siva

unread,
Jun 16, 2023, 8:29:10 AM6/16/23
to santhav...@googlegroups.com
It has been 3 days or so since several people replied to the query by Vijay
However, I do not think he has come back to this thread after that.

Just an observation.

V. Subramanian

வெண்கொற்றன்

unread,
Jun 19, 2023, 11:52:43 PM6/19/23
to சந்தவசந்தம்
வணக்கம்,

பதிலளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வரிகள் பொருளற்ற இடநிரப்பிகள் என்று கொள்வதே பொருத்தம் என்று நினைக்கிறேன்.

/ It has been 3 days or so since several people replied to the query by Vijay
However, I do not think he has come back to this thread after that./

ஐயா, 
நான் விடைகளைக் கண்டேன், எனினும் யாரும் உறுதியாக எதையும் சொல்லாமையால் மேலும் சற்றுப் பொருத்திருந்து பார்ப்போம் என்று எண்ணி வாளாவிருந்தேன்.

இக்குழுவின் மின்னஞ்சல் ஊட்டத்தைப் பெறுகிறவன் என்பதால், இங்கு நடக்கும் விவாதங்களையும் பதிவுகளையும் நான் தவறாமல் படித்துக்கொண்டேதான் இருக்கிறேன் ஐயா.

நன்றி :-)

வெள்ளி, 16 ஜூன், 2023அன்று பிற்பகல் 5:59:10 UTC+5:30 மணிக்கு Siva Siva எழுதியது:

Siva Siva

unread,
Jun 20, 2023, 10:07:28 PM6/20/23
to santhav...@googlegroups.com
Happy to hear that.

வெண்கொற்றன்

unread,
Jun 21, 2023, 5:28:21 AM6/21/23
to சந்தவசந்தம்
Thank you sir.

புதன், 21 ஜூன், 2023அன்று முற்பகல் 7:37:28 UTC+5:30 மணிக்கு Siva Siva எழுதியது:
Happy to hear that.



lns2...@gmail.com

unread,
Jun 21, 2023, 7:11:14 AM6/21/23
to சந்தவசந்தம்
> இது தமிழ்தானா? இல்லை வேறேதேனும் மலைநாட்டு திராவிட மொழியா?

இது நல்ல கேள்வி. 'குரியன்' என்பது மலையாளத்தில் ஒருவிதமான நாரையைக் குறிக்கும் :) இது தான் இங்கு அர்த்தம் என்று கூறவில்லை. இது மலையாளத்தின் கிளை மொழியாக இருக்கலாம்.

சினிமாக்காரர்களின் வரிகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பாடலின் (ஷூட்டிங்கின்) பின்புலம் அறிந்து கொண்டு துப்பறிய வேண்டும் :) 'அனுபவம் புதுமை' பாடலில் நடிகை ஒரு நைட்டி உடுத்திக்கொண்டு காலை ஆட்டி ஆட்டி அபிநயம் பிடிக்கிறார். மெட்டு மேல் நாட்டு சரக்கு என்று புரியாமலே பாட்டு மேல் நாட்டு சரக்கு என்று துணியலாம். 'besame mucho' (kiss me much) என்ற ஸ்பானிஷ்  ஹிட் பாடலின் மெட்டைத் தழுவிய பாடல் இந்த 'காதலிக்க நேரமில்லை' பாடல்.


1957 ராஜ் கப்பூர் படம் 'Shree 420'-ல் 'ரம்மையா வஸ்தாவையா' என்ற சூப்பர் ஹிட் பாடல் ஒன்று. இந்தக் காட்சியில் தம் மக்களை விட்டு வழி தவறிய கதாநாயகன் மறுபடியும் தம் குழுவிற்கே திரும்புகிறான். அந்தக் குழு ரோடு செப்பனிடும் தொழிலாளிகளின் குழு. பம்பாயில் அன்றிலிருந்து இன்று வரை ரோடு தொழிலாளிகள் தெலுங்கு பேசும் மக்கள். அன்று தெலங்கானா வட்டாரத்திலிருந்து கொத்தடிமையாக தருவித்தவர்கள். இந்த சொற்றொடரை பாடலில் புகுத்தி பாடலாசிரியர்/ டைரெக்டர் இந்த தெலுங்கு பேசும் குழுவிற்கு ஒரு tribute கொடுத்திருக்கிறார். இன்றளவும் 'ரம்மையா வஸ்தாவையா' என்ற சொற்றொடரை இந்திக்காரர்கள் gibberish என்றே நினைக்கிறார்கள். தெலுங்கில் இதற்கு 'வாய்யா வாய்யா' என்றே பொருள். அவ்வளவு தான்.


இதே போல் 'முத்துக்குளிக்க வாறீயளா' என்ற தொடரும் இந்திப் பாடலொன்றில் வரும். இதை இந்திக்காரர்கள் பெரும்பாலும் gibberish என்றே நினைக்கிறார்கள்.

:)

Srini

வெண்கொற்றன்

unread,
Jun 26, 2023, 12:08:17 AM6/26/23
to சந்தவசந்தம்
கருத்துகளுக்கு நன்றி Srini ஐயா!

புதன், 21 ஜூன், 2023அன்று பிற்பகல் 4:41:14 UTC+5:30 மணிக்கு lns2...@gmail.com எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages