ஓட்டைக் கலயம்
ஒழுகல் இல்லா ஓட்டைக் கலயம்
ஒன்றை எடுத்து வைத்துள்ளேன்
அழகுக் கலயம், அருமைக் கலயம்
அதனுள் எல்லாம் வியப்புத்தான்
இழைத்தி ழைத்தே எந்தக் குயவன்
இதனைச் சுட்டு வைத்தானோ?
பழைய கலயம் இதனை மீண்டும்
பாவிக் குயவன் சுடுவானோ?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMeXCW9FUM5xp-x5-CNJaEQOKnGKEZwOb_0bmANDtURQg%40mail.gmail.com.
2026-05-01
மெய்
-------------
(வெண்பா)
ஊனைத் தொளையார் உறையில் அடைத்ததொரு
பானை கொதிக்கும் பகல்தனில் - போன
பொழுது புனலூற்றுப் போலவெங் கெங்கும்
ஒழுகல் வியப்போ உரை!
வி. சுப்பிரமணியன்