7 Thirai Vilakkam

27 views
Skip to first unread message

arumugha arasu.v.t

unread,
Jan 5, 2011, 2:34:47 AM1/5/11
to Sanmarkkam Groups
Anbulla Sanmarga Nanbarukku,
Vanakkam

Ayya Peruman sonna 7 thirai, athan niram (Coloru) mattrum antha 7 thirai namadhu agathil (udambu) engu ullathu idhu pattriya Thelivana villakkam tharaum.
Palar Pala Vilakkam tharugirargal. athanal puriyavillai.
Thangal Thayau Koornthu Vilakkam Tharaum
Anban,
N.Mohanraj




அன்பு நண்பர் மோகன் அவர்களுக்கு

நமது வள்ளல் பெருமான் கூறிய ௭ திரைகள் நமது அக அனுபவத்தில் மனம் அடங்கும்போது புருவமத்தியத்தில் சோதி தரிசனத்திற்கு முன்னர் உள்ள அனுபவம் திரைகள் விலகுவது. இது ஒரு விதத்தில் மனதினது பல்வேறு அசுத்தங்கள் விலகுவதே. நமது தற்போதம் என்னும் நான் என்னும் உணர்வு நம்மை விட்டு விலகுவதைதான் திரை விலக்கமாக வள்ளல் பெருமான் கூறி உள்ளார்.


கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

அன்பு நண்பரே பார்க்கும் பொருள் நிறம் அனைத்தும் கரைந்து நாம் எனும் உணர்வும் கரைந்து இறைவன் எனும் ஒன்றை தேடுகின்றோம் எனும் நிலையும் கரைந்து இந்த திரை விலக்கு நடைபெறும். மற்றபடி இந்த நிறம் என்று நாம் நினைத்துக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டால் அவ்விதமான நிறம் நமக்கு தெரியாது. காரணம் அது அனுபவம் அதை அதனால் உணர வேண்டும். 

மொத்தத்தில் மனம் அடங்குவதே முக்கியம். 
மனம் அடங்கினால் தான் எனும் உணர்வும் குறையும்
அதுவே மிகமுக்கியமானது.

நிறத்தில் கணக்கில் கொள்ளாதீர்கள். அது உங்களை தியானத்தில் ஈடுபாடு கொள்ள விடாது. அதுவே தானாய் தெரியும்.

அன்புடன்,
அரசு




On 5 January 2011 11:15, MOHANRAJ N <mohan...@yahoo.com> wrote:

N.MohanrajP Please consider your environmental responsibility before printing this e-mail  


--- On Mon, 3/1/11, MOHANRAJ N <mohan...@yahoo.com> wrote:

> From: MOHANRAJ N <mohan...@yahoo.com>
> Subject: 7 Thirai Vilakkam
> To: arumug...@gmail.com
> Date: Monday, 3 January, 2011, 4:18 AM
> Anbulla Sanmarga Nanbarukku,
> Vanakkam
>
> Ayya Peruman sonna 7 thirai, athan niram (Coloru) mattrum
> antha 7 thirai namadhu agathil (udambu) engu ullathu idhu
> pattriya Thelivana villakkam tharaum.
> Palar Pala Vilakkam tharugirargal. athanal puriyavillai.
> Thangal Thayau Koornthu Vilakkam Tharaum
> Anban,
> N.Mohanraj
>
>
>
>




MOHANRAJ N

unread,
Jan 6, 2011, 3:14:01 AM1/6/11
to sanmarkk...@googlegroups.com
Anbu Ayya
 
Arumiyana vilakkam thandeergal. Thangal vilakkathirku mikka mikka mikka nandri.
 
Ungal,
N.Mohanraj

P Please consider your environmental responsibility before printing this e-mail

 


--- On Wed, 5/1/11, arumugha arasu.v.t <arumug...@gmail.com> wrote:
--
இக்குழுவில் உங்கள் பதிவை வெளியிட sanmarkk...@googlegroups.com
மெலும் தகவலறிய பார்வையிடுங்கள்
http://groups.google.co.in/group/sanmarkkam-groups?hl=en-GB

Reply all
Reply to author
Forward
0 new messages