என்.எச்.எம் ரைட்டர் - விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10-ல் வேலை செய்ய

6 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Aug 6, 2015, 11:41:16 PM8/6/15
to palsuvai
badriseshadri.in

என்.எச்.எம் ரைட்டர் - விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10-ல் வேலை செய்ய

  • by Badri Seshadri 
  •  Aug. 6, 2015 
  •  1 min read 
  •  original
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8.1+ல் என்.எச்.எம் ரைட்டர் (NHM Writer) மூலம் தமிழில் (பிற இந்திய மொழிகளில்) எழுதுவது சரியாக நிகழவில்லை. ஷிஃப்ட் விசையை அழுத்தினால் அதன்பின் நடக்கவேண்டிய மாற்றங்கள் சரியாக நடக்கவில்லை. இது ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நுழைக்கப்பட்ட ஒரு அப்டேட்டினால் நிகழ்ந்த குளறுபடி. (Windows update KBKB2975719 changed the way of translating virtual key codes involving shift combinations into characters.) இதனை அவர்கள் சரி செய்வார்களா என்று பார்த்ததில் அந்த மாற்றம் நிகழவில்லை. விண்டோஸ் 10-இலும் இந்தப் பிரச்னை தொடர்ந்தது.

எனவே என்.எச்.எம் ரைட்டரில் மாற்றங்கள் செய்து, விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10 ஆகியவற்றிலும் சரியாக இயங்கும் வண்ணம் புதிய ரிலீஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அதனை http://software.nhm.in/products/writer என்ற பக்கத்தில் சென்று இறக்கிக்கொள்ளுங்கள். தற்போதைய என்.எச்.எம் ரைட்டர் வெர்ஷன் 2.9.

என்.எச்.எம் ரைட்டர் செயலி குறித்த சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாகக் கேட்க soft...@nhm.in என்ற முகவரிக்கு எழுதுங்கள். 
Reply all
Reply to author
Forward
0 new messages