உறவுகண்டே வேடுவன்தோலாமல் அவை எய்யவேண்டும் என்று ஒருகணை
தொடுத்து வில்வாங்கி நிற்க
ஊடு ஆடி எழும்பிடில் அடிப்பதற்கு
உளவு ராசாளி கூட
உயரப்பறந்து கொண்டே திரிய அப்போது
உதைத்த சிலைவேடன் அடியில்
சேடாக வல்விடம் தீண்டவே அவன் விழச்
சிலையில் தொடுத்த வாளி
சென்று ராசாளி மெய்த்தைத் துவிழ அவ்விரு
சிறைப் புறா வாழ்ந்தது அன்றோ
வாடாமல் இவை எலாம் உன் செயல்கள் அல்லாது என்
மனச்செயலினால் வருமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே.