தீபாவளித் திருநாள்!

14 views
Skip to first unread message

Balu Guruswamy

unread,
Nov 11, 2012, 2:33:20 AM11/11/12
to C.Rajendiran, Arumugam vetriselvan, srinivasan.h srinivasan.h, sanmarkk...@googlegroups.com, theyva-...@googlegroups.com, Narasimhan Gopinathan
தீப வழியில் 
முயலச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்!

தீப ஒளிபோல் 
மிளிரச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தீப வழியில் 
புரியச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தீப ஒளிபோல் 
விரியச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தீப வழியில் 
அறியச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தீப மொழியாய் 
திகழச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.


தீப வழியில் 
திருந்தச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தூய ஒளியை 
உள் அருந்தச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தீப வழியில் 
பொருந்தச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தூய ஒளியாய் 
உள்ளமே பொலியும் 
தீபாவளித் திருநாள்.

தீப வழியில் 
உயரச் சொல்லும் 
தீபாவளித் திருநாள்.

தூய ஒளியே 
உள்ளத்தில் ஒளிரும் 
தீபாவளித் திருநாள்.

தீப வழியில் 
இறையருள் நாடும் 
தீபாவளித் திருநாள்.

தூய ஒளியாய் 
ஈசனைக் காணும் 
தீபாவளித் திருநாள்.

தீப வழியில் 
சரணம் கோரும் 
தீபாவளித் திருநாள்.

தூய ஒளியால் 
மரணம் நீக்கும்
தீபாவளித் திருநாள். 


தீப வழியில் 
அகமெலாம் மலரும் 
தீபாவளித் திருநாள்.

தூய ஒளியாய் 
அனகமே நிறையும் 
தீபாவளித் திருநாள்!

பாலு குருசுவாமி.









Reply all
Reply to author
Forward
0 new messages