மதி உறை / மதில் நிறை / மருதை / மதிரை / மதுரை

63 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Feb 27, 2012, 1:01:16 PM2/27/12
to அருந்தமிழ் கேளீர்
மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த
ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். "மதுரை"
இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை
வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம்
கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில ...

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற
பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர்.
குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக
அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும்
(சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.
பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப்
பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது .
இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்
புறங்களில்குல தெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக்
காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர்
எனக் கருதுவது பொருத்தமாகும். குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும்
இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின்
பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து
வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே
பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர்.
குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க
யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள்
எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும்
என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது.
பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப் பட்டதாக சிலரும் கூறுவர்.

Reply all
Reply to author
Forward
0 new messages