ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக்
கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦
வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப்
பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள்
பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப்போயிருக்கும். ஏனெனில்
ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250
வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது
காலமே மெதுவாகத்தான் நகருமாம்.
இந்தியப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் காலத்தை கடந்த மனிதர்கள் என்று
பலபேரை குறிப்பிடுவதுண்டு. தமிழ் சமூகத்தில் காலத்தை வென்றவர்கள் என்று
சித்தர்களை கூறுவதுண்டு. என் கல்லூரி நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழைக்
காடுகளில் இருநூறு வருடங்களை கடந்த சித்தர்களை கண்டதாக ஊர் மக்கள்
சொல்லியதாக என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை
கேள்விக்குறியே.
முதலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடியுமா? அறிவியல் என்ன
சொல்கிறது..
ஐன்ஸ்டீன் விதிப்படி "ஒளியின் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும்போது காலமே
மெதுவாக நகரகத் தொடங்கும். பொருளின் நிறை மேலும் கூடியும், அதன் அடர்த்தி
அதிகமாகியும் பொருள் அதற்குமேல் பயணிக்க முடியாததாகி விடும்"
ஆனால் எலக்ட்ரான் வெற்றிடம் அல்லாத வேறு ஒரு ஊடகத்தின் வழியே, ஒளியின்
வேகத்தில் எந்தவொரு சேதாரமும் இன்றி பயணிக்க முடியும் என்கிறார்கள் சில
அறிஞர்கள். எலக்ட்ரானுக்கு நிறை உண்டு.
வானூர்தி கண்டுபிடிப்பதற்கு முன்பு "காற்றை விட கனமானது எதுவும் பறக்க
முடியாது" என்ற அறிவியல் கோட்பாடு இருந்தது. அதை உடைத்துதான் மனிதன்
பறந்தான்.
அதற்கடுத்து ஒலியின்(சப்தத்தின்) வேகத்தை விட எந்தவொரு பொருளும் பறக்க
முடியாது என்றார்கள்.ஆனால் இப்பொழுது ஒலியை விட வேகத்தில் பறக்க கூடிய
விமானங்களும்(சூப்பர்சோனிக் விமானங்கள்), மணிக்கு எழுபத்திரெண்டாயிரம்
கி.மீ வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளும் வந்துவிட்டன.ஆனாலும்
ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளுக்கு எரிபொருள் தேவை என்பது
ஒரு பெரிய தடையே. யார் கண்டது வரும் தலைமுறை அணுப்பிளவினாலோ /
இணைப்பினாலோ கிடைக்க கூடிய மாபெரும் சக்தியை வைத்து பறக்க கூடிய
ராக்கெட்டுகளை கண்டுபிடிக்கலாம்.
ஆக இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மனிதன் ஒளியின் வேகத்தில்
பயணிக்க முடியும். அன்று அவனுடைய சராசரி வயது பல ஆயிர வருடங்களை
கொண்டிருக்கும்.