க‌லிங்க‌த்துப் ப‌ர‌ணி

41 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Sep 6, 2010, 4:36:25 AM9/6/10
to அருந்தமிழ் கேளீர்
க‌லிங்க‌த்துப் ப‌ர‌ணியில் ம‌ற்றுமொரு சுவைமிக்க‌ பாட‌ல்

“நக்காஞ்சிக்கும் வடமலைக்கும்
நடுவில் வெளிக்கே வேடனைவிட்டு
அக்கானகத்தே உயிர்பறிப்பீர்”

காஞ்சிக்கும்(பழமையான தமிழ் நகரம்) வடமலைக்கும்(இம‌ய‌ம‌லைக்கும்) ந‌டுவே
வேட‌னை விட்டு, அக்காட்டிலே அவனது உயிரை ப‌றிப்பீராக(கொல்லுவீராக). இது
வெளிப்ப‌டையான் அர்த்த‌ம்.

இதில் மறைந்திருக்கும் பொருள் என்னவெனில்,"ந‌ல்ல‌ அணிக‌ல‌ன் ம‌ற்றும்
மாலை அணிந்த‌ கொங்கைக‌ளுக்கும் ந‌டுவே இல்லாத‌ இட‌மாகிய‌ இடுப்பில்
ம‌ன்ம‌த‌னை விட்டு, ம‌ண‌ம் பொருந்திய‌ ம‌லை போன்ற‌ கொங்கைக‌ளால் அவ‌னைக்
இன்பத்தில் தோய்த்து எடுப்பீராக(கொல்லுவீராக)"

நக்காஞ்சி‍ -‍ ந‌ல்ல‌ அணிக‌ல‌ன்
வடமலை - மாலை அணிந்த‌ கொங்கைக‌ள்(மார்புக‌ள்)
நடுவில் - ந‌டுவுஇல் - ந‌டுஇட‌ம் அல்லாத‌
வெளி ‍- இடுப்பு
வேடனை - வேள்த‌னை - ம‌ன்ம‌த‌னை
அக்கானகத்தே - கான்ந‌க‌த்து - ம‌ண‌ம் பொருந்திய‌ ம‌லை போன்ற‌
கொங்கைக‌ளால்

Reply all
Reply to author
Forward
0 new messages