காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த

56 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Sep 4, 2010, 9:33:34 AM9/4/10
to அருந்தமிழ் கேளீர்
"காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ"

ஏதேச்சையாக இந்தப் கலிங்கத்துப் பரணி பாட‌லை ப‌டிக்க‌ நேர்ந்த‌து.
மிக‌வும் ர‌சிக்க‌ வைத்த‌து. நீங்க‌ளும் பாருங்க‌ளேன்.

காஞ்சியை ஆண்ட குலோத்துங்க‌ச் சோழ‌ன் காஞ்சியில் இருந்து கொண்டு
க‌லிங்க‌ம் மீது போர் தொடுக்க‌ ஆணையிட‌, அவ‌ன் ஆணையால் சோழப்படைகள்
கலிங்கத்தை அழித்தனவாம். மேம்போக்காகப் பார்த்தால் இதுதான் பொருள். ஆனால்
இதற்க்கு இன்னொரு பொருளும் கூறலாம்.


காஞ்சி - மகளிர் இடையில் உடுத்தும் ஒருவகை ஆபரணம்
கலிங்கம் - உடை

புணர்ச்சிக்(கலவி) காலத்தில் இடையில் அணிந்த ஆபரணம் அப்படியே இருக்க,
இடையணிந்த உடை மட்டும் உலைந்தன எனவும் பொருள் கொள்ளலாம். கொஞ்சம்
வில்லங்கமாத்தான் இருக்கு...

Reply all
Reply to author
Forward
0 new messages