கார்விரி கொன்றைப்
பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த
கண்ணியன்;
மார்பி னஃதே மை இல்
நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல்
அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே ;
மூவாய் 0-5
வேலும் உண்டு அத் தோலா
தோற்கே;
ஊர்ந்தது ஏறே ; சேர்ந்தோள்
உமையே-
செவ்வான் அன்ன மேனி,
அவ்வான்
இலங்குபிறை அன்ன
விலங்குவால் வைஎயிற்று,
எரியகைந் தன்ன அவிர்ந்து
விளங்கு புரிசடை, 0-10
முதிராத் திங்களொடு
சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும்
பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை
மரபின்,
வரிகிளர் வயமான் உரிவை
தைஇய,
யாழ்கெழு மணிமிடற்று,
அந்தணன் 0-15
தாவில் தாள்நிழல்
தவிர்ந்தன்றால் உலகே. .0-16
*****
வண்டுபடத் ததைந்த கண்ணி,
ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர்
ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள்
ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி
யாங்கண்,
சிறுகா ரோடன் பயினொடு
சேர்த்திய 1-5
கல்போற் பிரியலம் என்ற
சொல்தாம்
மறந்தனர் கொல்லோ -
தோழி!-சிறந்த
வேய்மருள் பணைத்தோள்
நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை
தருமார்-நிலம்பக
அழல்போல் வெங்கதிர்
பைதறத் தெறுதலின், .1-10
நிழல் தேய்ந்து உலறிய
மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப்
புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய;
யாவரும்
வழங்குநர் இன்மையின்,
வௌவுநர் மடிய
சுரம்புல் லென்ற ஆற்ற;
அலங்கு சினை .1-15
நாரில் முருங்கை நவிரல்
வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப,
ஆருற்று,
உடைதிரைப் பிதிர்வின்
பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு
இறந்தோரே? .1-19
***
கோழிலை வாழைக் கோள்முதிர்
பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த்
தடுத்த
சாரற் பலவின் சுளையொடு,
ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த
தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
.2-5
கறிவளர் சாந்தம் ஏறல்
செல்லாது,
நறுவீ அடுக்கத்து
மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின்,
நின் மலைப்
பல்வேறு விலங்கும்,
எய்தும் நாட!
குறித்த இன்பம்
நினக்கெவன் அரிய? .2-10
வெறுத்த ஏஎர், வேய்புரை
பணைத்தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு
நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின்,
தந்தை
அருங்கடிக் காவலர்
சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை;
பைம்புதல் .2-15
வேங்கையும் ஒள்ளிணர்
விரிந்தன;
நெடுவெண் திங்களும்
ஊர்கொண் டன்றே! .2-17
***
இருங்கழி முதலை மேஎந்தோல்
அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின்
பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று
இளைப்பட்ட,
கொடுவாய்ப் பேடைக்கு
அல்கிரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த
செஞ்செவி எருவை- .3-5
வான்தோய் சிமைய
விறல்வரைக் கவா அன்,
துளங்குநடை மரையா
வலம்படத் தொலைச்சி,
ஒண்செங் குருதி
உவற்றியுண்டு அருந்துபு;
புலவுப்புலி துறந்த
கலவுக்கழிக் கடுமுடை
கொள்ளை மாந்தரின்- ஆனாது
கவரும் .3-10
புல்லிலை மராஅத்த
அகல்சேண் அத்தம்,
கலந்தரல் உள்ளமொடு கழியக்
காட்டிப்
பின்நின்று துரக்கும்
நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி
எவ்வமென் களைமா-
கவிரிதழ் அன்ன காண்பின்
செவ்வாய், .3-15
அந்தீங் கிளவி, ஆயிழை
மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த
நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை
விலங்கும் ஞான்றே? .3-18
***
முல்லை வைந்நுனை தோன்ற,
இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி
அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு
மருப்பின்,
பரலவல் அடைய, இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம்
புலம்புபுறக் கொடுப்ப, .4-5
கருவி வானம் கதழுறை
சிதறிக்
கார்செய் தன்றே, கவின்பெறு
கானம்;
குரங்குளைப் பொலிந்த
கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன,
வாங்குவள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு
வதிந்த .4-10
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத்
தேரன்,
உவக்காண் தோன்றும்
குறும்பொறை நாடன்,
கறங்கிசை விழவின்
உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து
அமன்ற காந்தட் .4-15
போதவிழ் அலரின் நாறும்-
ஆய்தொடி அரிவை! - நின்
மாணலம் படர்ந்தே. .4-17
***
அளிநிலை பொறாஅது அமரிய
முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள்,
மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக்
கொளா அக்,
குறுக வந்துதன் கூர்எயிறு
தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல்
முறுவலள் .5-5
கண்ணிய துணரா அளவை,
ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா
நினைவுடன்-
முளிந்த ஓமை முதையலம்
காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய்
நெல்லி,
மோட்டிரும் பாறை
ஈட்டுவட்டு ஏய்ப்ப, .5-10
உதிர்வன படூஉம் கதிர்தெறு
கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை
தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக்
கூர்ங்கல்.
விரல்நுதி சிதைக்கும்
நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல்
கானம் .5-15
இறப்ப எண்ணுதிர் ஆயின் -
'அறத்தாறு
அன்று' என மொழிந்த
தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின்
உரையா
ஓவச் செய்தியின் ஒன்று
நினைந்து ஒற்றி .5-20
பாவை மாய்த்த பனிநீர்
நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன்
புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை
பிணையல்
மோயினள் உயிர்த்த காலை,
மாமலர்
மணிஉரு இழந்த அணியழி
தோற்றம் .5-25
கண்டே கடிந்தனம், செலவே -
ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும்
நாம் எனினே! .5-28
***
அரிபெய் சிலம்பின்
ஆம்பலந் தொடலை,
அரம்போழ் அவ்வளைப்
பொலிந்த முன்கை,
இழையணி பணைத்தோள், ஐயை
தந்தை,
மழைவளம் தரூஉம் மாவண்
தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை
ஆங்கண்- .6-5
கழைநிலை பெறாஅக் காவிரி
நீத்தம்,
குழைமாண் ஒள்ளிழை நீ வெய்
யோளொடு,
வேழ வெண்புணை தழீஇப்,
பூழியர்
கயம்நாடு யானையின்
முகனமர்ந் தாங்கு,
ஏந்தெழில் ஆகத்து
பூந்தார் குழைய, .6-10
நெருநல் ஆடினை, புனலே ;
இன்று வந்து
'ஆக வனமுலை அரும்பிய
சுணங்கின்,
மாசில் கற்பின், புதல்வன்
தாய்' என,
மாயப் பொய்ம்மொழி சாயினை
பயிற்றி, எம்
முதுமை எள்ளல்; அஃது
அமைகும் தில்ல! .6-15
சுடர்ப்பூந் தாமரை
நீர்முதிர் பழனத்து
அம்தூம்பு வள்ளை ஆய்கொடி
மயக்கி,
வாளை மேய்ந்த வள்ளெயிற்று
நீர்நாய்,
முள்ளரைப் பிரம்பின்
மூதரில் செறியும்,
பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன
எம் .6-20
இளமை சென்று தவத்தொல் லஃதே;
இனிமைஎவன் செய்வது,
பொய்ம்மொழி, எமக்கே? .6-22
***
முலைமுகம் செய்தன;
முள்ளெயிறு இலங்கின;
தலைமுடி சான்று; தண்தழை
உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும்
படாஅல்;
மூப்புடை முதுபதி தாக்கு
அணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்;
கடையும் போகலை; .7-5
பேதை அல்லை - மேதையம்
குறுமகள்!
பெதும்பைப் பருவத்து
ஒதுங்கினை, புறத்து' என,
ஒண்சுடர் நல்லில்
அருங்கடி நீவி,
தன்சிதைவு அறிதல்
அஞ்சி-இன்சிலை
ஏறுடை இனத்த, நாறு உயிர்
நவ்வி!- .7-10
வலைகாண் பிணையின் போகி,
ஈங்கு ஓர்
தொலைவில் வெள்வேல்
விடலையொடு, என்மகள்
இச் சுரம் படர்தந் தோளே;
ஆயிடை,
அத்தக் கள்வர் ஆதொழு
அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி
ஓடி, .7-15
மெய்த்தலைப் படுதல்
செல்லேன், இத்தலை,
நின்னொடு வினவல் கேளாய்;-
பொன்னொடு
புலிப்பல் கோத்த
புலம்புமணித் தாலி,
ஒலிக்குழைச் செயலை
உடைமாண் அல்குல்,
ஆய்சுளைப் பலவின் மேய்கலை
உதிர்த்த .7-20
துய்த்தலை வெண்காழ்
பெறூஉம்
கல்கெழு சிறுகுடிக்
கானவன் மகளே. .7-22
***
ஈயற் புற்றத்து
ஈர்ம்புறத்து இறுத்த
குரும்பி வல்சிப்
பெருங்கை ஏற்றைக்
தூங்குதோல் துதிய
வள்உகிர் கதுவலின்,
பாம்பு மதன்அழியும்
பானாட் கங்குலும்,
அரிய அல்ல-மன் இகுளை! 'பெரிய
.8-5
கேழல் அட்ட பேழ்வாய்
ஏற்றைப்
பலாவமல் அடுக்கம் புலாவ
ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண்,
வழையொடு
வாழை ஓங்கிய தாழ்கண்
அசும்பில்,
படுகடுங் களிற்றின்
வருத்தம் சொலியப் .8-10
பிடிபடி முறுக்கிய
பெருமரப் பூசல்
விண்தோய் விடரகத்து
இயம்பும் அவர்நாட்டு,
எண்ணரும் பிறங்கல் மானதர்
மயங்காது,
மின்னுவிடச் சிறிய
ஒதுங்கி, மென்மெலத்
துளிதலைத் தலைஇய மணியேர்
ஐம்பால் .8-15
சிறுபுறம் புதைய வாரி,
குரல் பிழியூஉ
நெறிகெட விலக்கிய, நீயிர்,
இச் சுரம்
அறிதலும் அறிதிரோ?'
என்னுநர்ப் பெறினே. .8-18
***
கொல்வினைப் பொலிந்த,
கூர்ங்குறும் புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப்
பெய்த
அம்புநுனை ஏய்ப்ப
அரும்பிய இருப்பை
செய்படர் அன்ன செங்குழை
அகந்தோறு,
இழுதின் அன்ன தீம்புழல்
துய்வாய் .9-5
உழுதுகாண் துளைய வாகி,
ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்,
துப்பின் அன்ன செங்கோட்டு
இயவின்,
நெய்த்தோர் மீமிசை
நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அங்குடிச்
சீறூர்- .9-10
கொடுநுண் ஓதி மகளிர்
ஓக்கிய
தொடிமாண் உலக்கைத்
தூண்டுரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு
இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி,
உரந்துரந்து,
ஞாயிறு படினும்,
'ஊர்சேய்த்து' எனாது, .9-15
துனைபரி துரக்கும்
துஞ்சாச் செலவின்
எம்மினும், விரைந்து
வல்எய்திப் பல்மாண்
ஓங்கிய நல்லில் ஒரு சிறை
நிலைஇ,
பாங்கர்ப் பல்லி
படுதொறும் பரவிக்,
கன்றுபுகு மாலை நின்றோள்
எய்தி, .9-20
கைகவியாச் சென்று, கண்
புதையாக் குறுகி,
பிடிக்கை அன்ன பின்னகம்
தீண்டி,
தொடிக்கை தைவரத்
தோய்ந்தன்று கொல்லோ-
நாணொடு மிடைந்த கற்பின்,
வாணுதல்,
அம்தீம் கிளவிக் குறுமகள்
.9-25
மென்தோள் பெறநசைஇச்
சென்றவென் நெஞ்சே? .9-26
***
வான்கடற் பரப்பில்
தூவற்கு எதிரிய,
மீன்கண் டன்ன மெல்லரும்பு
ஊழ்த்த,
முடவுமுதிர் புன்னைத்
தடவுநிலை மாச்சினை,
புள்ளிறை கூரும் மெல்லம்
புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல
கலுழப் .10-5
பிரிதல் எண்ணினை ஆயின்,
நன்றும்,
அரிது துற்றனையால். பெரும!-
உரிதினின்
கொண்டு ஆங்குப்
பெயர்தல்வேண்டும்-
கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி
உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற
புதுவலைப் பரதவர் .10-10
மோட்டுமணல் அடைகரைக்
கோட்டுமீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப்
பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள்
நலனே. .10-13
***
வானம் ஊர்ந்த வயங்கொளி
மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த
உருப்பவிர் அங்கட்டு,
இலையில மலர்ந்த முகையில்
இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு
எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி
பொற்பத் தோன்றி, .11-5
கயந்துகள் ஆகிய பயம்தபு
கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின்,
கம்மென,
வம்புவிரித் தன்ன
பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர்
எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர்
முயக்கம் .11-10
அவரும் பெறுகுவர் மன்னே!
நயவர,
நீர்வார் நிகர்மலர்
கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல,
அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ
மன்னே! .11-15
***
யாயே, கண்ணினும் கடுங்
காதலளே
எந்தையும், நிலன்உரப்
பொறாஅன்; 'சீறுடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்!
இயங்குதி! என்னும்;'
யாமே, பிரிவு இன்று இயைந்த
துவரா நட்பின்,
இருதலைப் புள்ளின் ஓர்
உயிரம்மே; .12-5
ஏனல்அம் காவலர் ஆனாது
ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும்
வெளில்ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின்
பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை
புதைய,
வேங்கை தாஅய தேம்பாய்
தோற்றம் .12-10
புலிசெத்து, வெரீஇய
புகர்முக வேழம்,
மழைபடு சிலம்பில் கழைபடப்
பெயரும்
நல்வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான்
வாழலளே .12-14
***
தன்கடற் பிறந்த முத்தின்
ஆரமும்,
முனைதிரை கொடுக்கும்
துப்பின், தன்மலைத்
தெறல் அருமரபின் கடவுட்
பேணிக்,
குறவர் தந்த சந்தின்
ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற
அணியும் .13-5
திருவீழ் மார்பின்
தென்னவன் மறவன் -
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும்
சிறுவரை அல்லது,
வரைநிலை இன்றி இரவலர்க்கு
ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப்
பொருநன்- .13-10
பண்ணி தைஇய பயம்கெழு
வேள்வியின்,
விழுமிது நிகழ்விது
ஆயினும்- தெற்குஏர்பு,
கழிமழை பொழிந்த
பொழுதுகொள் அமையத்துச்,
சாயல் இன்துணை
இவட்பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்!
வயிற்பட .13-15
மாசுஇல் தூமடி விரிந்த
சேக்கை,
கவவுஇன் புறாமைக் கழிக- வள
வயல்,
அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல்
அலங்கல்
நிரம்புஅகன் செறுவில்
வரம்புஅணையாத் துயல்வரப்,
.13-20
புலம்பொடு வந்த
பொழுதுகொள் வாடை,
இலங்குபூங் கரும்பின்
ஏர்கழை இருந்த
வெண்குருகு நரல, வீசும்
நுண்பல் துவலைய தண்பனி
நாளே! .13-24
***
'அரக்கத்து அன்ன செந்நிலப்
பெருவழி,
காயாஞ் செம்மல் தாஅய்,
பலஉடன்
ஈயல் மூதாய் வரிப்பப்,
பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம்
கவைஇய
அம்காட்டு ஆர்இடை,
மடப்பிணை தழீஇத், .14-5
திரி மருப்பு இரலை
புல்அருந்து உகள,
முல்லை வியன்புலம்
பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின்
நறும்பூ அயரப்
பதவு மேயல் அருந்து
மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல்,
தீம்பால் பிலிற்ற .14-10
கன்றுபயிர் குரல,
மன்றுநிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின்,
காலை
யாங்கு ஆகுவம் கொல்? பாண!"
என்ற
மனையோள் சொல்எதிர்
சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல்யாழ்
இசையினென், பையெனக் .14-15
கடவுள் வாழ்த்திப் பையுள்
மெய்ந் நிறுத்து,
அவர்திறம் செல்வேன்
கண்டனென், யானே-
விடுவிசைக் குதிரை
விலங்குபரி முடுகக்
கல்பொருது இரங்கும்
பல்ஆர் நேமிக்
கார்மழை முழக்குஇசை
கடுக்கும், .14-20
முனைநல் ஊரன், புனைநெடுந்
தேரே! .14-21
***
எம்வெங் காமம் இயைவது
ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண்,
செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க்
குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக்கட்
பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு
அன்ன, .15-5
வறுங்கை வம்பலர்த்
தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல்
மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுக
தில்ல-
தோழி மாரும் யானும்
புலம்பச்,
சூழி யானைச் சுடர்ப்பூண்
நன்னன் .15-10
பாழி அன்ன கடியுடை
வியன்நகர்ச்
செறிந்த காப்புஇகந்து,
அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர்கழல்
புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம்
பரக்க,
கொன்றை யம்சினைக்
குழற்பழம் கொழுதி, .15-15
வன்கை எண்கின் வயநிரை
பரக்கும்-
இன்துணைப் படர்ந்த
கொள்கையொடு ஒராங்குக்,
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற- ஆறே!
.15-19
***
நாயுடை முதுநீர்க் கலித்த
தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ்
புரையும்,
மாசுஇல் அங்கை, மணிமருள்
அவ்வாய்,
நாவொடு நவிலா நகைபடு
தீஞ்சொல்,
யாவரும் விழையும்
பொலந்தொடிப் புதல்வனைத்,
.16-5
தேர்வழங்கு தெருவில்,
தமியோற் கண்டே,
கூர்எயிற்று அரிவை
குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின்,
செத்தனள் பேணிப்,
பொலங்கலம் சுமந்த
பூண்தாங்கு இளமுலை,
'வருக மாள, என் உயிர்!' எனப்
பெரிது உவந்து, .16-10
கொண்டனள் நின்றோட் கண்டு,
நிலைச் செல்லேன்,
'மாசுஇல் குறுமகள்! எவன்
பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என
யான்தற்
கரைய, வந்து விரைவனென்
கவைஇ,
களவு உடம்படுநரின்
கவிழ்ந்து, நிலம்கிளையா,
.16-15
நாணி நின்றோள் நிலை கண்டு,
யானும்
பேணினென் அல்லெனோ- மகிழ்ந!-
வானத்து
அணங்குஅருங் கடவுள்
அன்னோள், நின்
மகன்தாய் ஆதல் புரைவது -
ஆங்கு எனவே! .16-19
***
வளம்கெழு திருநகர்ப்
பந்து சிறிது எறியினும்,
இளந்துணை ஆயமொடு கழங்கு
உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை!
என்மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த
நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும் மன்னே!
இனியே, .17-5
தொடி மாண் சுற்றமும்
எம்மும் உள்ளாள்,
நெடுமொழித் தந்தை
அருங்கடி நீவி,
நொதும லாளன் நெஞ்சுஅறப்
பெற்றஎன்
சிறுமுதுக் குறைவி
சிலம்புஆர் சீறுடி
வல்லகொல், செல்லத் தாமே-
கல்லென- .17-10
ஊர்எழுந் தன்ன உருகெழு
செலவின்,
நீர்இல் அத்தத்து ஆர்இடை,
மடுத்த,
கொடுங்கோல் உமணர்,
பகடுதெழி தெள்விளி
நெடும்பெருங் குன்றத்து
இமிழ்கொள இயம்பும்,
கடுங்கதிர் திருகிய
வேய்பயில் பிறங்கல், .17-15
பெருங்களிறு உரிஞ்சிய மண்
அரை யாஅத்து
அருஞ்சுரக் கவலைய அதர்படு
மருங்கின்,
நீள்அரை இலவத்து ஊழ்கழி
பல்மலர்,
விழவுத் தலைக்கொண்ட
பழவிறல் மூதூர்,
நெய்உமிழ் சுடரின்
கால்பொரச் சில்கி, .17-20
வைகுறு மீனின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய
சுரனே! .17-22
***
நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு
உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடுவரற்
கான்யாற்று,
கராஅம் துஞ்சும் கல்உயர்
மறிசுழி,
மராஅ யானை மதம்தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு
நீத்தம்- .18-5
கடுங்கண் பன்றியின்
நடுங்காது துணிந்து,
நாம அருந்துறைப்
பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ?- ஓங்கல்
வெற்ப!-
ஒருநாள் விழுமம் உறினும்,
வழிநாள்,
வாழ்குவள் அல்லள், என்
தோழி; யாவதும் .18-10
ஊறுஇல் வழிகளும் பயில
வழங்குநர்
நீடுஇன்று ஆக இழுக்குவர்,
அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும்,
எம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த
கோடுஉயர் நெடுவரை,
பழம்தூங்கு நளிப்பிற்
காந்தள்அம் பொதும்பில்,
.18-15
பகல்நீ வரினும் புணர்குவை -
அகல்மலை
வாங்குஅமைக் கண்இடை
கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தடமென்
தோளே. .18-18
***
அன்றுஅவண் ஒழிந்தன்றும்
இலையே; வந்துநனி
வருந்தினை- வாழி, என்
நெஞ்சே!- பருந்து இருந்து
உயாவிளி பயிற்றும், யாஉயர்
நனந்தலை,
உருள்துடி மகுளியின்
பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங்குரற் குடிஞைய
நெடும்பெருங் குன்றம், .19-5
எம்மொடு இறத்தலும்
செல்லாய்; பின்நின்று,
ஒழியச் சூழ்ந்தனை ஆயின்,
தவிராது,
செல்இனி; சிறக்க நின்
உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி; எம்மே -
நறவின்
சேயிதழ் அனைய ஆகிக், குவளை
.19-10
மாஇதழ் புரையும்
மலிர்கொள் ஈர்இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு
உலறி,
பழங்கண் கொண்ட,
கதழ்ந்துவீழ், அவிர்அறல்
வெய்ய உகுதர, வெரீஇப்,
பையென,
சில்வளை சொரிந்த மெல்இறை
முன்கை .19-15
பூவீழ் கொடியின்
புல்லெனப் போகி;
அடர்செய் ஆய்அகல் சுடர்
துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்குசாய் சிறுபுறம்
முயங்கிய பின்னே! .19-19
***
பெருநீர் அழுவத்து எந்தை
தந்த
கொழுமீன் உணங்கற் படுபுள்
ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன்நிழல்
அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு
அளை கெண்டி,
ஞாழல் ஓங்குசினைத்
தொடுத்த கொடுங்கழித் .20-5
தாழை வீழ்கயிற்று ஊசல்
தூங்கிக்,
கொண்டல் இடுமணல் குரவை
முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு
ஆடி,
மணிப்பூம் பைந்தழை தைஇ,
அணித்தகப்
பல்பூங் கானல் அல்கினம்
வருதல் .20-10
கவ்வை நல்அணங்கு உற்ற,
இவ்வூர்,
கொடிதுஅறி பெண்டிர்
சொற்கொண்டு, அன்னை
கடிகொண் டனளே- தோழி:-
பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது
கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி, .20-15
நிலவு மணல் கொட்கும்ஓர்
தேர் உண்டு எனவே! .20-16
***
'மனைஇள நொச்சி மௌவல்
வால்முகைத்
துணை நிரைத்தன்ன; மாவீழ்,
வெண்பல்,
அவ்வயிற்று, அகன்ற அல்குல்,
தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென்
பணைத்தோள்
மடந்தை மாண்நலம் புலம்பச்,
சேய்நாட்டுச் .21-5
செல்லல் என்று யான்
சொல்லவும், ஒல்லாய்
வினைநயந்து அமைந்தனை
ஆயினை ; மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்-
வல்லே,
எழுஇனி, வாழி என் நெஞ்சே!-
புரி இணர்
மெல்அவிழ் அம்சினை புலம்ப;
வல்லோன் .21-10
கோடுஅறை கொம்பின் வீஉகத்
தீண்டி
மராஅம் அலைத்த மணவாய்த்
தென்றல்,
சுரம்செல் மள்ளர் சுரியல்
தூற்றும்,
என்றூழ் நின்ற புன்தலை
வைப்பில்
பருந்து இளைப்படூஉம்
பாறுதலை ஓமை .21-15
இருங்கல் விடரகத்து, ஈன்று
இளைப்பட்ட;
மென்புனிற்று அம்பிணவு
பசித்தெனப், பைங்கட்
செந்நாய் ஏற்றை கேழல்
தாக்க,
இரியற் பிணவல் தீண்டலில்,
பரீஇச்
செங்காய் உதிர்த்த
பைங்குலை ஈந்தின் .21-20
பரல்மண் சுவல முரண்நிலம்
உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார்,
கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில்
கானவர்
இகழ்ந்தியங்கு இயவின்
அகழ்ந்தகுழி செத்து, .21-25
இருங்களிற்று இனநிரை
தூர்க்கும்
பெருங்கல் அத்தம்
விலங்கிய காடே! .21-27
***
அணங்குடை நெடுவரை
உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக்
கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு
அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற்
பொழுதில்
'படியோர்த் தேய்த்த
பல்புகழ்த் தடக்கை .22-5
நெடுவேட் பேணத் தணிகுவள்
இவள்' என,
முதுவாய்ப் பெண்டிர்
அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக்
கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப்
பலி கொடுத்து,
உருவச் செந்தினை
குருதியொடு தூஉய், .22-10
முருகுஆற்றுப் படுத்த
உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த்
ததைந்த
சாரல் பல்பூ வண்டுபடச்
சூடி,
களிற்று - இரை தெரீஇய
பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின்
வயப்புலி போல, .22-15
நல்மனை, நெடுநகர்க் காவலர்
அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை
வாய்ப்ப,
இன்உயிர் குழைய
முயங்குதொறும்
மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே -
எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
.22-20
ஏதில் வேலற்கு உலந்தமை
கண்டே? .22-21
***
மண்கண் குளிர்ப்ப வீசித்
தண்பெயல்,
பாடு உலந்தன்றே,
பறைக்குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின்
இதல்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு
ஒருங்குபிணி அவிழக்,
காடே கம்மென் றன்றே; அவல,
.23-5
கோடு உடைந்தன்ன கோடற்
பைம்பயிர்,
பதவின் பாவை, முனைஇ,
மதவுநடை
அண்ணல்இரலை அமர்பிணை
தழீஇத்,
தண்அறல் பருகித்
தாழ்ந்துபட் டனவே;
அனையகொல் - வாழி, தோழி!- மனைய
.23-10
தாழ்வின் நொச்சி, சூழ்வன
மலரும்
மௌவல், மாச்சினை காட்டி,
அவ்அளவு என்றார்,
ஆண்டுச்செய் பொருளே! .23-13
***
வேளாப் பார்ப்பான் வாளரந்
துமித்த
வளைகளைந்து ஒழிந்த
கொழுந்தின் அன்ன,
தலைபிணி அவிழா, சுரிமுகப்
பகன்றை
சிதரல்அம் துவலை தூவலின்,
மலரும்
தைஇ நின்ற தண்பெயல்
கடைநாள், .24-5
வயங்குகதிர் கரந்த வாடை
வைகறை,
விசும்பு உரிவதுபோல்,
வியல்இடத்து ஒழுகி,
மங்குல் மாமழை, தென்புலம்
படரும்
பனிஇருங் கங்குலும்
தமியள் நீந்தி,
தம்ஊ ரோளே, நன்னுதல்; யாமே
.24-10
கடிமதில் கதவம் பாய்தலின்,
தொடிபிளந்து
நுதிமுகம் மழுகிய மண்ணை
வெண்கோட்டுச்,
சிறுகண் யானை நெடுநா ஒண்
மணி,
கழிப்பிணிக் கறைத்தோல்
பொழிகணை உதைப்பு,
தழங்குகுரல் முரசமொடு
முழங்கும் யாமத்து, .24-15
கழித்துஉறை செறியா வாளுடை
எறுழ்த்தோள்,
இரவு துயில் மடிந்த தானை,
உரவுச்சின வேந்தன் பாசறை
யேமே! .24-18
***
"நெடுங்கரைக்
கான்யாற்றுக் கடும்புனல்
சாஅய,
அவிர்அறல் கொண்ட
விரவுமணல் அகன்துறைத்
தண்கயம் நண்ணிய
பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போதுமலி
எக்கர்,
வதுவை நாற்றம் புதுவது கஞல,
.25-5
மாநனை கொழுதிய மணிநிற
இருங்குயில்
படுநா விளியா னடுநின்று,
அல்கலும்,
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச்சிதர் உகுத்த இலவத்து
ஆங்கண்
சினைப்பூங் கோங்கின்
நுண்தாது பகர்நர் .25-10
பவளச் செப்பில்
பொன்சொரிந் தன்ன,
இகழுநர் இகழா இளநாள்
அமையம்
செய்தோர் மன்ற குறி" என,
நீநின்
பைதல் உண்கண் பனிவார்பு
உறைப்ப
வாரா மையின் புலர்ந்த
நெஞ்சமொடு, .25-15
நோவல், குறுமகள்! நோயியர்,
என் உயிர்!" என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி - தோழி - பொருநர்
செல்சமம் கடந்த வில்கெழு
தடக்கைப்
பொதியிற் செல்வன்,
பொலந்தேர்த் திதியன் .25-20
இன்இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு
இறந்தோரே! .25-22
***
கூன்முள் முள்ளிக்
குவிகுலைக் கழன்ற,
மீன்முள் அன்ன, வெண்கால்
மாமலர்
பொய்தல் மகளிர்
விழவுஅணிக் கூட்டும்
அவ்வயல் தண்ணிய வளம்கேழ்
ஊரனைப்
புலத்தல் கூடுமோ - தோழி! -
அல்கல் .26-5
பெருங் கதவு பொருத யானை
மருப்பின்
இரும்புசெய் தொடியின் ஏர
ஆகி,
'மாக்கண் அடைய மார்பகம்
பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என
மயங்கி,
'யான் ஓம்' என்னவும்
ஒல்லார், தாம்மற்று .26-10
இவை பாராட்டிய பருவமும்
உளவே ; இனியே
புதல்வற் றடுத்த பாலொடு
தடைஇத்
திதலை அணிந்த தேம்கொள்
மென்முலை
நறுஞ் சாந்து அணிந்த
கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண்
டினமே; .26-15
தீம்பால் படுதல் தாம்
அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை
போற்றி, மதவுநடைச்
செவிலி கைஎன் புதல்வனை
நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர்
நீயிர் ; இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்'
என, மெல்லஎன் .26-20
மகன் வயின் பெயர்தந் தேனே;
அதுகண்டு
'யாமும் காதலம், அவற்கு'
எனச் சாஅய்,
சிறுபுறம் கவையின னாக,
உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பலஉழு
செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து, அவற்
கலுழ்ந்தே .26-25
நெஞ்சுஅறை போகிய அறிவி
னேற்கே? .26-26
***
"கொடுவரி இரும்புலி தயங்க,
நெடுவரை
ஆடுகழை இருவெதிர்
கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார்,
நாம்அழ,
நின்றதுஇல் பொருட்பிணிச்
சென்றுஇவண் தருமார்,
செல்ப" என்ப, என்போய்! நல்ல
.27-5
மடவை மன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த
வெண்கோட்டு யானை,
மறப்போர்ப் பாண்டியர்
அறத்தின் காக்கும்
கொற்கைஅம் பெருந்துறை
முத்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும்
எயிறுகெழு துவர்வாய் .27-10
தகைப்பத் தங்கலர் ஆயினும்,
இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே -
தேம்படத்
தெள்நீர்க்கு ஏற்ற
திரள்காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும்,
அமையா பருந்துபட
வேந்துஅமர்க் கடந்த
வென்றி நல்வேல் .27-15
குருதியொடு துயல்வந்
தன்னநின்
அரிவேய் உண்கண் அமர்த்த
நோக்கே? .27-17
***
மெய்யின் தீரா மேவரு
காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல்
- தோழி!
கொய்யா முன்னும்,
குரல்வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங்கால்
தோறும்
இருவி தோன்றின பலவே; நீயே,
.28-5
முருகு முரண்கொள்ளும்
தேம்பாய் கண்ணி,
பரியல் நாயொடு பன்மலைப்
படரும்
வேட்டுவற் பெறலொடு
அமைந்தனை; யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க,
எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள்விளி இடைஇடை
பயிற்றி, .28-10
ஆங்காங்கு ஒழுகாய்ஆயின்,
அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள்
இவள்' எனப்,
பிறர்த் தந்து
நிறுக்குவள் ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன்
மலர்ந்த மார்பே! .28-14
***
"தொடங்கு வினை தவிர,
அசைவில் நோன்தாள்,
கிடந்துஉயிர் மறுகுவது
ஆயினும், இடம்படின்
வீழ்களிறு மிசையாப்
புலியினும் சிறந்த
தாழ்வுஇல் உள்ளம்
தலைத்தலைச் சிறப்பப்
செய்வினைக்கு அகன்ற காலை,
எஃகு உற்று .29-5
இருவேறு ஆகிய தெரிதகு
வனப்பின்
மாவின் நறுவடி போலக்,
காண்தொறும்
மேவல் தண்டா மகிழ்நோக்கு
உண்கண்
நினையாது கழிந்த வைகல்,
எனையதூஉம்,
வாழலென் யான்" எனத்
தேற்றிப், "பல்மாண் .29-10
தாழக் கூறிய தகைசால்
நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச்
சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய்
இன்நகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை!-
கேள்இனி-
வெம்மை தண்டா எரிஉகு
பறந்தலை, .29-15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங்கு அறியாது,
தேர்மருங்கு ஓடி,
அறுநீர் அம்பியின்
நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும்
ஊக்குஅருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள்தரல்
விருப்பொடு .29-20
நாணுத் தளைஆக வைகி,
மாண்வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை
அல்லதை,
மடம்கெழு நெஞ்சம் நின்உழை
யதுவே! .29-23
***
நெடுங்கயிறு வலந்த
குறுங்கண் அவ்வலை,
கடல்பாடு அழிய, இனமீன்
முகந்து,
துணைபுணர் உவகையர் பரத
மாக்கள்
இளையரும் முதியரும்
கிளையுடன் துவன்றி
உப்புஒய் உமணர் அருந்துறை
போக்கும் .30-5
ஒழுகை நோன்பகடு ஒப்பக்
குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப
வாங்கிப்,
பெருங்களம் தொகுத்த உழவர்
போல,
இரந்தோர் வறுங்கலம் மல்க
வீசி,
பாடுபல அமைத்துக் கொள்ளை
சாற்றிக் .30-10
கோடுஉயர் திணிமணல்
துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ -
ஒருநாள்
மண்ணா முத்தம் அரும்பிய
புன்னைத்
தண்நறுங் கானல் வந்து "நும்
வண்ணம் எவனோ?" என்றனிர்
செலினே? .30-15
***
நெருப்புஎனச் சிவந்த
உருப்புஅவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத்
தெறுதலின், ஞொள்கி,
"நிலம்புடை பெயர்வது
அன்றுகொல், இன்று?" என
மன்உயிர் மடிந்த மழைமாறு
அமையத்து,
இலைஇல ஓங்கிய நிலைஉயர்
யாஅத்து .31-5
மேற்கவட்டு இருந்த
பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின்
வயவர் வில்இட,
நிணவரிக் குறைந்த நிறத்த
அதர்தொறும்,
கணவிர மாலை அடூஉக்
கழிந்தன்ன
புண்உமிழ் குருதி
பரிப்பக் கிடந்தோர் .31-10
கண்உமிழ் கழுகின் கானம்
நீந்திச்,
'சென்றார்' என்பு இலர்
-தோழி!- வென்றியொடு
வில்இலைத்து உண்ணும்
வல்ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை
இறந்தே. .31-15
***
நெருநல் எல்லை ஏனல்
தோன்றிச்,
திருமணி ஒளிர்வரும் பூணன்
வந்து,
புரவலன் போலும் தோற்றம்
உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி
பயிற்றிச்,
சிறுதினைப் படுகிளி
கடீஇயர், பன்மாண் .32-5
குளிர்கொள் தட்டை மதன்இல
புடையாச்
'சூரர மகளிரின் நின்ற
நீமற்று
யாரையோ? எம்அணங்கியோய்!
உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக,
அதற்கொண்டு
இகுபெயல் மண்ணின்
ஞெகிழ்பு, அஞர்உற்ற என் .32-10
உள்அவன் அறிதல் அஞ்சி,
உள்இல்
கடிய கூடு, கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின்
ஒரீஇ, நின்ற
என்உரத் தகைமையின்
பெயர்த்து, பிறிதுஎன்வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே;
அல்லாந்து, .32-15
இனம்தீர் களிற்றின்
பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை- தோழி! நாம்
சென்மோ,
சாய்இறைப் பணைத்தோட்
கிழமை தனக்கே
மாசு இன் றாதலும் அறியான்,
ஏசற்று,
என்குறைப் புறனிலை
முயலும் .32-20
அங்க ணாளனை நகுகம், யாமே!
.32-21
***
வினைநன் றாதல் வெறுப்பக்
காட்டி,
மனைமாண் கற்பின் வாணுதல்
ஒழியக்,
கவைமுறி இழந்த செந்நிலை
யாஅத்து
ஒன்றுஓங்கு உயர்சினை
இருந்த வன்பறை,
வீளைப் பருந்தின் கோள்வல்
சேவல் .33-5
வளைவாய்ப் பேடை வருதிறம்
பயிரும்
இளிதேர் தீங்குரல்
இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது,
சென்று, அவண்
மலர்பாடு ஆன்ற, மைஎழில்,
மழைக்கண்
தெளியா நோக்கம் உள்ளினை,
உளிவாய் .33-10
வெம்பரல் அதர குன்றுபல
நீந்தி,
யாமே எமியம்ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் -
முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி
மீமிசை,
நுணங்குஅமை புரையும்
வணங்குஇறைப் பணைத் தோள்,
.33-15
வரிஅணி அல்குல், வால்எயிற்
றோள்வயிற்
பிரியாய் ஆயின் நன்றுமற்
றில்ல.
அன்றுநம் அறியாய் ஆயினும்,
இன்றுநம்
செய்வினை ஆற்றுற
விலங்கின்
எய்துவை அல்லையோ, பிறர்நகு
பொருளே? .33-20
***
சிறுகரும் பிடவின்
வெண்தலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும்
தண்நறும் புறவில்,
தொடுதோற் கானவன்
கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல்
இரலை
செறிஇலைப் பதவின்
செங்கோல் மென்குரல் .34-5
மறிஆடு மருங்கின்
மடப்பிணை அருத்தித்,
தெள்அறல் தழீஇய வார்மணல்
அடைகரை,
மெல்கிடு கவுள
துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த
நெஞ்சம் ஏமுறச்;
செல்க, தேரே - நல்வலம்
பெறுந!- .34-10
பசைகொல் மெல்விரல்,
பெருந்தோள், புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர்
எகினம்
துணையொடு திளைக்கும்
காப்புடை வரைப்பிற்,
செந்தார்ப் பைங்கிளி
முன்கை ஏந்தி,
'இன்றுவரல் உரைமோ,
சென்றிசினோர் திறத்து' என,
.34-15
இல்லவர் அறிதல் அஞ்சி,
மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண்நலம்
பெறவே! .34-18
***
ஈன்று புறந்தந்த எம்மும்
உள்ளாள்,
வான்தோய் இஞ்சி நன்னகர்
புலம்பத்-
தனிமணி இரட்டும் தாளுடைக்
கடிகை,
நுழைநுதி நெடுவேல்,
குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின்
வீழ்த்த .35-5
வில்ஏர் வாழ்க்கை
விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுட்
பேண்மார்;
நடுகல் பீலி சூட்டித்;
துடிப்படுத்துத்,
தோப்பிக் கள்ளொடு
துரூஉப்பலி கொடுக்கும்
போக்குஅருங் கவலைய
புலவுநாறு அருஞ்சுரம் .35-10
துணிந்து பிறள் ஆயினள்
ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன்
அளைஇத், தன்
மார்பு துணையாகத்
துயிற்றுக தில்ல-
துஞ்சா முழவிற் கோவற்
கோமான்
நெடுந்தேர்க் காரி
கொடுங்கான் முன்துறை, .35-15
பெண்ணையம் பேரியாற்று
நுண் அறல் கடுக்கும்
நெறிஇருங் கதுப்பின்என்
பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய
துணையே! .35-18
***
பகுவாய் வராஅல் பல்வரி
இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின்
கோள்இரை துற்றி,
ஆம்பல் மெல்லடை கிழியக்
குவளைக்
கூம்புவிடு பன்மலர்
சிதையப் பாய்ந்து, எழுந்து,
அரில்படு வள்ளை ஆய்கொடி
மயக்கித் .36-5
தூண்டில் வேட்டுவன் வாங்க
வாராது,
கயிறுஇடு கதச்சேப் போல
மதம்மிக்கு,
நாள், கயம் உழக்கும்
பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார்மணல்
அகன்துறைத்
திருமருது ஓங்கிய
விரிமலர்க் காவில், .36-10
நறும்பல் கூந்தற்
குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே,
கொய்சுவற் புரவிக்
கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை
சிவப்பச்,
சேரல், செம்பியன்,
சினம்கெழு திதியன், .36-15
போர்வல் யானைப் பொலம்பூண்
எழினி,
நார்அரி நறவின் எருமை
யூரன்,
தேம்கமழ் அகலத்துப்
புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான்,
இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க,
ஒருபகல் .36-20
முரைசொடு வெண்குடை
அகப்படுத்து, உரைசெலக்,
கொன்று களம்வேட்ட ஞான்றை,
வென்றிகொள் வீரர்
ஆர்ப்பினும் பெரிதே! .36-23
***
மறந்து, அவண் அமையார்
ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலிமகிழ்
உழவர்
பொங்கழி முகந்த தாஇல்
நுண்துகள்,
மங்குல் வானின், மாதிரம்
மறைப்ப,
வைகுபுலர் விடியல்
வைபெயர்த்து ஆட்டித் .37-5
தொழிற் செருக்கு
அனந்தர்வீட, எழில்தகை
வளியொடு சினைஇய வண்தளிர்
மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர்
வடித்துப்
புளிப்பதன் அமைந்த
புதுக்குட மலிர்நிறை
வெயில்வெரிந் நிறுத்த
பயில்இதழ்ப் பசுங்குடைக்,
.37-10
கயமண்டு பகட்டின் பருகிக்,
காண்வரக்
கொள்ளொடு பயறுபால் விரைஇ,
வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால்அவிழ்
மிதவை
வாங்குகை தடுத்த பின்றை
ஓங்கிய,
பருதிஅம் குப்பை சுற்றிப்,
பகல்செல, .37-15
மருத மரநிழல், எருதொடு
வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண்நலம் நுகரும் துணைஉடை
யோர்க்கே! .37-18
***
விரிஇணர் வேங்கை வண்டுபடு
கண்ணியன்,
தெரிஇதழ்க் குவளைத்
தேம்பாய் தாரன்,
அம்சிலை இடவதுஆக, வெஞ்
செலற்
கணைவலம் தெரிந்து, துணை
படர்ந்து உள்ளி;
வருதல் வாய்வது வான்தோய்
வெற்பன், .38-5
வந்தனன் ஆயின், அம்தளிர்ச்
செயலைத்
தாழ்வுஇல் ஓங்குசினைத்
தொடுத்த வீழ்கயிற்று
ஊசல் மாறிய மருங்கும்,
பாய்புஉடன்
ஆடா மையின் கலுழ்புஇல தேறி,
நீடுஇதழ் தலையிய
கவின்பெறு நீலம் .38-10
கண்என மலர்ந்த சுனையும்,
வண்பறை
மடக்கிளி எடுத்தல்
செல்லாத் தடக்குரல்
குலவுப்பொறை யிறுத்த
கோல்தலை மருவி
கொய்துஒழி புனமும், நோக்கி;
நெடிதுநினைந்து,
பைதலன் பெயரலன் கொல்லோ?
ஐ.தேங்கு - .38-15
'அவ்வெள் அருவி சூடிய
உயர்வரைக்
கூஉம் கணஃது எம்ஊர், என
ஆங்குஅதை அறிவுறல்
மறந்திசின், யானே, .38-18
***
'ஒழித்தது பழித்த
நெஞ்சமொடு வழிப்படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?" என,
யாழநின்
முள்எயிற்றுத் துவர்வாய்
முறுவல் அழுங்க,
நோய்முந் துறுத்து
நொதுமல் மொழியல ; நின்
ஆய்நலம் மறப்பெனோ மற்றே?
சேண்இகந்து .39-5
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி
ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி,
நெடுநிலை
முளிபுன் மீமிசை வளிசுழற்
றுறாஅக்
காடுகவர் பெருந்தீ
ஓடுவயின் ஓடலின்,
அதர்கெடுத்து அலறிய
சாத்தொடு ஒராங்கு .39-10
மதர்புலி வெரீஇய மையல்
வேழத்து
இனம்தலை மயங்கிய
நனந்தலைப் பெருங்காட்டு,
ஞான்று தோன்று அவிர்சுடர்
மான்றால் பட்டெனக்,
கள்படர்ஓதி! நிற்படர்ந்து
உள்ளி,
அருஞ்செலவு ஆற்றா ஆர்இடை,
ஞெரேரெனப் .39-15
பரந்துபடு பாயல் நவ்வி
பட்டென,
இலங்குவளை செறியா இகுத்த
நோக்கமொடு,
நிலம்கிளை நினைவினை நின்ற
நிற்கண்டு,
'இன்னகை! இனையம் ஆகவும்,
எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?' என,
யாழநின் .39-20
கோடுஏந்து புருவமொடு
குவவுநுதல் நீவி,
நறுங்கதுப்பு உளரிய
நன்னர் அமையத்து,
வறுங்கை காட்டிய வாய்அல்
கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின்,
புலத்தியால் எம்மே! .39-25
***
கானல், மாலைக் கழிப்பூக்
கூம்ப,
நீல்நிறப் பெருங்கடல்
பாடுஎழுந்து ஒலிப்ப
மின்ஆர் குருகின்
மென்பறைத் தொழுதி
குவைஇரும் புன்னைக்
குடம்பை சேர,
அசைவண்டு ஆர்க்கும்
அல்குறு காலைத், .40-5
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு
கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறுபு
இனையத்
துயரம் செய்துநம் அருளார்
ஆயினும்-
அறாஅ லியரோ அவருடைக்
கேண்மை! .40-10
அளிஇன் மையின் அவண்உறை
முனைஇ,
வாரற்க தில்ல - தோழி! - கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத்
ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள்
நாரை
செறிமடை வயிரின்
பிளிற்றிப் பெண்ணை .40-15
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில்
சென்றஎன் நெஞ்சே! .40-17
***
அரிகால் போழ்ந்த
தெரிபகட்டு உழவர்
ஓதைத் தெள்விளி
புலந்தொறும் பரப்பக்
கோழிணர் எதிரிய மரத்த
கவினிக்,
காடுஅணி கொண்ட காண்தகு
பொழுதில்,
நாம்பிரி புலம்பின் நலம்
செலச் சாஅய் .41-10
நம்பிரிபு அறியா நலமொடு
சிறந்த
நல்தோள் நெகிழ, வருந்தினள்
கொல்லோ-
மென்சிறை வண்டின் தண்கமழ்
பூந்துணர்
தாதுஇன் துவலை
தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளைஇய, .41-15
நுண்பல் தித்தி, மாஅ யோளோ?
.41-16
***
மலிபெயல் கலித்த மாரிப்
பித்திகத்துக்
கொயல்அரு நிலைஇய பெயல்ஏர்
மணமுகைச்
செவ்வெரிந் உறழும்
கொழுங்கடை மழைக்கண்
தளிர்ஏர் மேனி, மாஅ யோயே!
நாடுவறம் கூர, நாஞ்சில
துஞ்சக் .42-5
கோடை நீடிய பைதுஅறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட,
யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள,
உள்இல்
என்றூழ் வியன்குளம் நிறைய
வீசிப்,
பெரும்பெயல் பொழிந்த ஏம
வைகறை, .42-10
பல்லோர் உவந்த உவகை
எல்லாம்
என்னுள் பெய்தந் தற்று -
சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான்தோய் வெற்பன் வந்த
மாறே! .42-14
கடல்முகந்து கொண்ட
கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர் மின்னொடு
வலன்ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன்தலை
மடப்பிடி
கைமாய் நீத்தம் களிற்றொடு
படீஇய,
நிலனும் விசும்பும்
நீர்இயைந்து ஒன்றி, .43-5
குறுநீர்க் கன்னல்
எண்ணுநர் அல்லது,
கதிர்மருங்கு அறியாது,
அஞ்சுவரப் பாஅய்,
தளிமயங் கின்றே தண்குரல்
எழிலி, யாமே
கொய்அகை முல்லை காலொடு
மயங்கி,
மைஇருங் கானம் நாறும்
நறுநுதல், .43-10
பல்இருங் கூந்தல்,
மெல்இயல் மடந்தை
நல்எழில் ஆகம் சேர்ந்தனம்,
என்றும்
அளியரோ அளியர்தாமே -
அளிஇன்று
ஏதில் பொருட்பிணிப்
போகித், தம்
இன்துணைப் பிரியும் மடமை
யோரே! .43-15
***
வந்துவினை முடித்தனன்
வேந்தனும்; பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்ஆ
யினரே;
முரண்செறிந் திருந்த தானை
இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே;
நின்தேர்
முன்இயங்கு ஊர்திப்
பின்னிலை ஈயாது .44-5
ஊர்க, பாக! ஒருவினை, கழிய-
நன்னன், ஏற்றை, நறும்பூண்
அத்தி,
துன்அருங் கடுந்திறல்
கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை
என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்பு
அருங் கட்டூர், .44-10
பருந்துபடப் பண்ணிப்,
பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித்
திண்தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம்
தந்த
பிணையல்அம் கண்ணிப்
பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
.44-15
பழம்பல் நெல்லின்
பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய
பசுமிளை,
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில்
பெறவே! .44-19
***
வாடல் உழுஞ்சில்
விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன
ஒலிப்பக்,
கோடை நீடிய அகன்பெருங்
குன்றத்து,
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன
களிறுஅட்டு
ஆள்இல் அத்தத்து உழுவை
உகளும் .45-5
காடு இறந்தனரே, காதலர்;
மாமை,
அரிநுண் பசலை பாஅய,
பீரத்து
எழில்மலர் புரைதல்
வேண்டும்,அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலை,
திதியன்
தொல்நிலை முழுமுதல்
துமியப் பண்ணி, .45-10
புன்னை குறைத்த ஞான்றை,
வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும்
பெரிதே; யானே,
காதலற் கெடுத்த
சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென்
கொல்வோ - பொலந்தார், .45-15
கடல்கால் கிளர்ந்த வென்றி
நல்வேல்,
வான வரம்பன் அடல்முனைக்
கலங்கிய
உடைமதில் ஓர் அரண்போல
அஞ்சுவரு நோயொடு, துஞ்சா
தேனே! .45-19
***
சேற்றுநிலை முனைஇய
செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தளை
பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின்
நீக்கி
நீர்முதிர் பழனத்து
மீன்உடன் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கித்
தாமரை .46-5
வண்டூது பனிமலர் ஆரும் ஊர!
யாரை யோ? நிற் புலக்கேம்,
வாருற்று,
உறை இறந்து, ஒளிரும்
தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை
நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப; அஃது
யாம் .46-10
கூறேம்; வாழியர், எந்தை!
செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய
நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச்
செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர்
அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும்
நெகிழ்க; .46-15
சென்றீ, பெரும! நிற்
றகைக்குநர் யாரோ? .46-16
***
அழிவில் உள்ளம் வழிவழிச்
சிறப்ப
வினைஇவண் முடித்தனம்
ஆயின், வல்விரைந்து
எழுஇனி - வாழிய நெஞ்சே! -
ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி,
விலங்குஎழுந்து,
கடுவளி உருத்திய கொடிவிடு
கூர்எரி .47-5
விடர்முகை அடுக்கம்
பாய்தலின், உடனியைந்து,
அமைக்கண் விடுநொடி
கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம்
நீந்திக் கைம்மிக்கு
அகன்சுடர் கல்சேர்பு மறைய,
மனைவயின்
ஒண்தொடி மகளிர்
வெண்திரிக் கொளாஅலின், .47-10
குறுநடைப் புறவின்
செங்காற் சேவல்
நெடுநிலை வியன்நகர்
வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண்
மாலை
"யாண்டு உளர்கொல்?" எனக்,
கலிழ்வோள் எய்தி,
இழைஅணி நெடுந்தேர்க்
கைவண் செழியன் .47-15
மழைவிளை யாடும் வளம்கெழு
சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும்
வெற்பின்
வேய்புரை பணைத்தோள்,
பாயும்
நோய்அசா வீட, முயங்குகம்
பலவே! .47-19
***
"அன்னாய்! வாழி! வேண்டு
அன்னை! நின்மகள்
பாலும் உண்ணாள், பழங்கண்
கொண்டு,
நனிபசந் தனள்" என வினவுதி;
அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்;
மேல்நாள்,
மலிபூஞ் சாரல், என்தோழி
மாரோடு .48-5
ஒலிசினை வேங்கை கொய்குவம்
சென்றுழி
"புலிபுலி!" என்னும் பூசல்
தோன்ற-
ஒண்செங் கழுநீர்க்
கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய்
மாலையன்,
பக்கம் சேர்த்திய
செச்சைக் கண்ணியன், .48-10
குயம்மண்டு ஆகம்
செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை
தெரிந்துகொண்டு
"யாதோ, மற்றுஅம் மாதிறம்
படர்?" என
வினவிநிற் றந்தோனே. அவற்
கண்டு,
எம்முள் எம்முள்
மெய்மறைபு ஒடுங்கி .48-15
நாணி நின்றனெ மாகப், பேணி,
"ஐவகை வகுத்த கூந்தல்
ஆய்நுதல்
மைஈர் ஓதி மடவீர்! நும்
வாய்ப்
பொய்யும் உளவோ?" என்றனன்
பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன்,
எதிர்மறுத்து, .48-20
நின்மகள் உண்கண் பன்மாண்
நோக்கிச்
சென்றோன் மன்ற அக்
குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப்
படுசுடர் அமையத்து,
அவன்மறை தேஎம்நோக்கி,
"மற்றுஇவன்
மகனே, தோழி!" என்றனள் .48-25
அதன்அளவு உண்டுகோள்,
மதிவல் லோர்க்கே. .48-26
***
'கிளியும், பந்தும்,
கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும்,
இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர்,
என்உயிர்' என,
கொடுந்தொடைக் குழவியொடு
வயின்மரத்து யாத்த
கடுங்கட் கறவையின்
சிறுபுறம் நோக்கி, .49-5
குறுக வந்து, குவவுநுதல்
நீவி,
மெல்லெனத் தழீஇயினே னாக,
என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை
வியர்ப்ப,
பல்கால் முயங்கினள் மன்னே!
அன்னோ!
விறல்மிகு நெடுந்தகை பலபா
ராட்டி, .49-10
வறன்நிழல் அசைஇ,
வான்புலந்து வருந்திய
மடமான் அசாஇனம்
திரங்குமரல் சுவைக்கும்
காடுஉடன் கழிதல் அறியின் -
தந்தை
அல்குபதம் மிகுந்த
கடியுடை வியன்நகர்,
செல்வுழிச் செல்வுழி
மெய்ந்நிழல் போல, .49-15
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்,
தோடுஅமை அரிச்சிலம்பு
ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன்
மன்னே! .49-18
***
கடல்பாடு அவிந்து, தோணி
நீங்கி,
நெடுநீர் இருங்கழிக்
கடுமீன் கலிப்பினும்;
செவ்வாய்ப் பெண்டிர் கௌவை
தூற்றினும்,
மாண்இழை நெடுந்தேர் பாணி
நிற்பப்,
பகலும் நம்வயின் அகலா
னாகிப் .50-5
பயின்றுவரும் மன்னே,
பனிநீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம்
தணப்ப நீந்தி,
"வாராதோர் நமக்கு யாஅர்?"
என்னாது,
மல்லன் மூதூர் மறையினை
சென்று,
சொல்லின் எவனோ - பாண! 'எல்லி
.50-10
மனைசேர் பெண்ணை மடிவாய்
அன்றில்
துணைஒன்று பிரியினும்
துஞ்சா காண்' எனக்
கண்நிறை நீர்கொடு
கரக்கும்
ஒண்நுதல் அரிவை "யான் என்
செய்கோ?" எனவே! .50-14
***
தொடரும்--