கய மலர் உண் கண்ணாய்!
காணாய்; ஒருவன் 37-1
வய மான் அடித் தேர்வான்
போலத், தொடை மாண்ட 37-2
கண்ணியன், வில்லன், வரும்;
என்னை நோக்குபு, 37-3
முன்னத்தின் காட்டுதல்
அல்லது, தான் உற்ற 37-4
நோய் உரைக்கல்லான்
பெயரும்மன், பல் நாளும்! 37-5
பாயல் பெறேஎன், படர்
கூர்ந்து, அவன் வயின், 37-6
சேயேன்மன் யானும் துயர்
உழப்பேன்; ஆயிடைக் 37-7
கண் நின்று கூறுதல்
ஆற்றான், அவன் ஆயின்; 37-8
பெண் அன்று, உரைத்தல்
நமக்கு ஆயின்; 'இன்னதூஉம் 37-9
காணான், கழிதலும் உண்டு'
என்று, ஒரு நாள், என் 37-10
தோள் நெகிழ்பு உற்ற
துயரால் துணிதந்து, ஓர் 37-11
நாண் இன்மை செய்தேன், நறு
நுதால்! ஏனல் 37-12
இனக் கிளி யாம் கடிந்து
ஓம்பும் புனத்து அயல், 37-13
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு
ஞான்று வந்தானை, 37-14
'ஐய! சிறிது என்னை ஊக்கி'
எனக் கூறத், 37-15
'தையால்! நன்று' என்று அவன்
ஊக்கக், கை நெகிழ்பு, 37-16
பொய்யாக வீழ்ந்தேன், அவன்
மார்பில்; வாய்யாச் செத்து,
37-17
ஒய்யென ஆங்கே எடுத்தனன்;
கொண்டான் மேல் 37-18
மெய் அறியாதேன் போல்
கிடந்தேன்மன்; ஆயிடை 37-19
மெய் அறிந்து ஏற்று
எழுவேன் ஆயின், மற்று
ஒய்யென, 37-20
'ஒண் குழாய்! செல்க' எனக்
கூறி விடும் பண்பின் 37-21
அங்கண் உடையன் அவன்! 37-22
***
இமைய வில் வாங்கிய ஈர்ஞ்
சடை அந்தணன் 38-1
உமை அமர்ந்து உயர் மலை
இருந்தனன் ஆக, 38-2
ஐ இரு தலையின் அரக்கர்
கோமான் 38-3
தொடிப் பொலி தடக் கையின்
கீழ் புகுத்து, அம் மலை 38-4
எடுக்கல் செல்லாது
உழப்பவன் போல - 38-5
உறு புலி உரு ஏய்ப்பப்
பூத்த வேங்கையைக் 38-6
கறுவு கொண்டு, அதன் முதல்
குத்திய மத யானை, 38-7
நீடு இரு விடர் அகம்
சிலம்பக் கூய்த், தன் 38-8
கோடு புய்க்கல்லாது,
உழக்கும் நாட! கேள்; 38-9
ஆர் இடை என்னாய் நீ அரவு
அஞ்சாய் வந்தக்கால், 38-10
நீர் அற்ற புலமே போல்
புல்லென்றாள், வைகறை, 38-11
கார் பெற்ற புலமே போல்,
கவின் பெறும்; அக் கவின் 38-12
தீராமல் காப்பது ஓர் திறன்
உண்டேல் உரைத்தைக் காண்! 38-13
இருள் இடை என்னாய் நீ இரவு
அஞ்சாய் வந்தக்கால், 38-14
பொருள் இல்லான் இளமை போல்
புல்லென்றாள், வைகறை, 38-15
அருள் வல்லான் ஆக்கம் போல்
அணிபெறும்; அவ் அணி 38-16
தெருளாமல் காப்பது ஓர்
திறன் உண்டேல், உரைத்தைக்
காண்; 38-17
மறந்திருந்தார் என்னாய்
நீ மலை இடை வந்தக்கால், 38-18
அறம் சாரான் மூப்பே போல்
அழிதக்காள், வைகறை, 38-19
திறம் சேர்ந்தான் ஆக்கம்
போல் திருத்தகும்; அத்
திருப் 38-20
புறங்கூற்றுத் தீர்ப்பது
ஓர் பொருள் உண்டேல்
உரைத்தைக் காண்; 38-21
என ஆங்கு, 38-22
நின் உறு விழுமம் கூறக்
கேட்டு 38-23
வருமே, தோழி! நல் மலை நாடன் -
38-24
வேங்கை விரிவு இடம் நோக்கி,
38-25
வீங்கு இறைப் பணைத் தோள்
வரைந்தனன் கொளற்கே. 38-26
***
காமர் கடும் புனல் கலந்து
எம்மோடு ஆடுவாள், 39-1
தாமரைக் கண் புதைத்து,
அஞ்சித் தளர்ந்து, அதனோடு
ஒழுகலான் 39-2
நீள் நாக நறும் தண் தார்
தயங்கப் பாய்ந்து,
அருளினால், 39-3
பூண் ஆகம் உற தழீஇ
போத்தந்தான் அகல் அகலம், 39-4
வரு முலை புணர்ந்தன
என்பதனால், என் தோழி 39-5
அரு மழை தரல் வேண்டின்
தருகிற்கும் பெருமையளே; 39-6
அவனும் தான், ஏனல் இதணத்து
அகில் புகை உண்டு இயங்கும்
39-7
வான் ஊர் மதியம் வரை
சேரின், அவ் வரைத், 39-8
'தேனின் இறால்' என, ஏணி
இழைத்திருக்கும் 39-9
கான் அகல் நாடன் மகன்; 39-10
சிறுகுடியீரே!
சிறுகுடியீரே! - 39-11
வள்ளி கீழ் வீழா; வரை
மிசைத் தேன் தொடா; 39-12
கொல்லை குரல் வாங்கி ஈனா -
மலை வாழ்நர் 39-13
அல்ல புரிந்து ஒழுகலான்;
39-14
காந்தள் கடி கமழும், கண்
வாங்கு, இரும் சிலம்பின் 39-15
வாங்கு அமை மென் தோள்
குறவர் மட மகளிர் 39-16
தாம் பிழையார்; கேள்வர்த்
தொழுது எழலால், தம் ஐயரும்
39-17
தாம் பிழையார் தாம்
தொடுத்த கோல்; 39-18
என ஆங்கு, 39-19
அறத்தொடு நின்றேனைக்
கண்டு திறப்பட 39-20
என்னையர்க்கு உய்த்து
உரைத்தாள் யாய்; 39-21
அவரும், தெரி கணை நோக்கிச்
சிலை நோக்கிக், கண் சேந்து
39-22
ஒரு பகல் எல்லாம் உருத்து
எழுந்து, ஆறி, 39-23
'இருவர் கண் குற்றமும்
இல்லையால்' என்று, 39-24
தெருமந்து சாய்த்தார்
தலை; 39-25
தெரி இழாய்! நீயும் நின்
கேளும் புணர, 39-26
வரை உறை தெய்வம் உவப்ப,
உவந்து 39-27
குரவை தழீஇ யாம் ஆடக்
குரவையுள் 39-28
கொண்டு நிலை பாடிக் காண்;
39-29
நல்லாய் - 39-30
நன்னாள் தலை வரும் எல்லை,
நமர் மலைத் 39-31
தம் நாண் தாம் தாங்குவார்,
என் நோற்றனர் கொல்? 39-32
புன வேங்கைத் தாது
உறைக்கும் பொன் அறை
முன்றில் 39-33
நனவில் புணர்ச்சி
நடக்குமாம் அன்றோ? 39-34
நனவில் புணர்ச்சி
நடக்கலும் ஆங்கே, 39-35
கனவில் புணர்ச்சி
கடிதுமாம் அன்றோ? 39-36
விண் தோய் கல் நாடனும்
நீயும் வதுவையுள் 39-37
பண்டு அறியாதீர் போல்
படர்கிற்பீர்மன் கொல்லோ? 39-38
பண்டு அறியாதீர் போல்
படர்ந்தீர் பழம் கேண்மை 39-39
கண்டு அறியாதேன் போல்
கரக்கிற்பென்மன் கொல்லோ?
39-40
மை தவழ் வெற்பன் மண அணி
காணாமல், 39-41
கையால் புதை பெறூஉம்
கண்களும் கண்களோ? 39-42
என்னைமன், நின் கண்ணால்
காண்பென்மன், யான்; 39-43
நெய்தல் இதழ் உண் கண், நின்
கண் ஆக, என் கண் மன; 39-44
என ஆங்கு, 39-45
நெறி அறி செறி குறி புரி
திரிபு அறியா அறிவனை
முந்துறீஇத், 39-46
தகை மிகு தொகை வகை அறியும்
சான்றவர் இனம் ஆக, 39-47
வேய் புரை மென் தோள்
பசலையும், அம்பலும், 39-48
மாய புணர்ச்சியும்,
எல்லாம் உடன் நீங்கச், 39-49
சேய் உயர் வெற்பனும்
வந்தனன்; 39-50
பூ எழில் உண் கணும் பொலிக
மா இனியே! 39-51
***
அகவினம் பாடுவாம், தோழி! -
அமர்க் கண் 40-1
நகை மொழி, நல்லவர் நாணும்
நிலை போல், 40-2
தகை கொண்ட ஏனலுள் தாழ்
குரல் உரீஇ, 40-3
முகை வளர் சாந்து உரல்,
முத்து ஆர் மருப்பின் 40-4
வகை சால் உலக்கை வயின்
வயின் ஓச்சிப், 40-5
பகை இல் நோய் செய்தான் பய
மலை ஏத்தி, 40-6
அகவினம் பாடுவாம், நாம்.
40-7
ஆய் நுதல், அணி கூந்தல், அம்
பணைத் தட மென் தோள் 40-8
தேன் நாறு கதுப்பினாய்! -
யானும் ஒன்று ஏத்துகு - 40-9
வேய் நரல் விடர் அகம் நீ
ஒன்று பாடித்தை; 40-10
கொடிச்சியர் கூப்பி வரை
தொழு கை போல், 40-11
எடுத்த நறவின் குலை அலங்கு
காந்தள் 40-12
தொடுத்த தேன் சோரத்,
தயங்கும் - தன் உற்றார் 40-13
இடுக்கண் தவிர்ப்பான்
மலை; 40-14
கல்லாக் கடுவன் கணம் மலி
சுற்றத்து, 40-15
மெல் விரல் மந்தி குறை
கூறும் செம்மற்றே - 40-16
தொல் எழில் தோய்ந்தார்
தொலையின், அவரினும் 40-17
அல்லல் படுவான் மலை; 40-18
புரி விரி, புதை துதை, பூத்
ததைந்த தாழ் சினைத் 40-19
தளிர் அன்ன எழில் மேனி தகை
வாட, நோய் செய்தான் 40-20
அரு வரை அடுக்கம் நாம்
அழித்து ஒன்று பாடுவாம்; 40-21
விண் தோய் வரைப், பந்து
எறிந்த அயா வீடத், 40-22
தண் தாழ் அருவி, அரமகளிர்,
ஆடுபவே - 40-23
பெண்டிர் நலம் வௌவித் தண்
சாரல் தாது உண்ணும் 40-24
வண்டின் துறப்பான் மலை;
40-25
ஒடுங்கா எழில் வேழம் வீழ்
பிடிக்கு உற்ற 40-26
கடுஞ் சூல் வயாவிற்கு
அமர்ந்து, நெடுஞ் சினைத் 40-27
தீம் கண் கரும்பின் கழை
வாங்கும் - 'உற்றாரின் 40-28
நீங்கலம்' என்பான் மலை; 40-29
என நாம், 40-30
தன் மலை பாட, நயவந்து
கேட்டு அருளி, 40-31
மெய் மலி உவகையன்
புகுதந்தான் - புணர்ந்து
ஆரா 40-32
மென் முலை ஆகம் கவின் பெறச்
40-33
செம்மலை ஆகிய மலை கிழவோனே!
40-34
***
பாடுகம், வா - வாழி, தோழி!
வயக் களிற்றுக் 41-1
கோடு உலக்கை ஆக, நல்
சேம்பின் இலை சுளகா 41-2
ஆடு கழை நெல்லை அறை உரலுள்
பெய்து, இருவாம் 41-3
பாடுகம், வா - வாழி, தோழ! நல்
தோழி! - பாடுற்று; 41-4
இடி உமிழ்பு இரங்கிய விரவு
பெயல் நடுநாள், 41-5
கொடி விடுபு இருளிய
மின்னுச் செய்
விளக்கத்துப், 41-6
பிடியொடு மேயும் புன்செய்
யானை 41-7
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட
கானவன், 41-8
நெடு வரை ஆசினிப் பணவை
ஏறிக் 41-9
கடு விசை கவணையில் கல் கை
விடுதலின், 41-10
இறு வரை வேங்கையின் ஒள் வீ
சிதறி, 41-11
ஆசினி மெல் பழம் அளிந்தவை
உதிராத் , 41-12
தேன் செய் இறாஅல் துளைபடப்
போகி, 41-13
நறு வடி மாவின் பை துணர்
உழக்கிக், 41-14
குலை உடை வாழைக் கொழு மடல்
கிழியாப், 41-15
பலவின் பழத்துள் தங்கும்,
மலை கெழு வெற்பனைப் 41-16
பாடுகம், வா - வாழி, தோழி! நல்
தோழி! - பாடுற்று; 41-17
இலங்கும் அருவித்து,
இலங்கும் அருவித்தே; 41-18
வானின் இலங்கும்
அருவித்தே - தான் உற்ற 41-19
சூள் பேணான் பொய்த்தான்
மலை; 41-20
பொய்த்தற்கு உரியனோ?
பொய்த்தற்கு உரியனோ? 41-21
'அஞ்சல் ஓம்பு' என்றாரைப்
பொய்த்தற்கு உரியனோ? 41-22
குன்று அகல் நல் நாடன்
வாய்மையில் பொய் தோன்றின்
41-23
திங்களுள் தீத்
தோன்றியற்று; 41-24
இள மழை ஆடும்; இள மழை ஆடும்;
41-25
இள மழை வைகலும் ஆடும் - என்
முன்கை 41-26
வளை நெகிழ வாராதோன்
குன்று; 41-27
வாராது அமைவானோ? வாராது
அமைவானோ? 41-28
வாராது அமைகுவான் அல்லன்;
மலை நாடன், 41-29
ஈரத்துள் இன்னவை தோன்றின்,
நிழல் கயத்து 41-30
நீருள் குவளை வெந்தற்று;
41-31
மணி போலத் தோன்றும்; மணி
போலத் தோன்றும்; 41-32
மண்ணா மணி போலத் தோன்றும் -
என் மேனியைத் 41-33
துன்னான் துறந்தான் மலை;
41-34
துறக்குவன் அல்லன்;
துறக்குவன் அல்லன்; 41-35
தொடர் வரை வெற்பன்
துறக்குவன் அல்லன் - 41-36
தொடர்புள் இனையவை
தோன்றின், விசும்பில் 41-37
சுடருள் இருள்
தோன்றியற்று; 41-38
என ஆங்கு, 41-39
நன்று ஆகின்றால் -தோழி! நம்
வள்ளையுள் 41-40
ஒன்றி நாம் பாட, மறை நின்று
கேட்டு அருளி, 41-41
மென் தோள் கிழவனும்
வந்தனன்; நுந்தையும் 41-42
மன்றல் வேங்கைக் கீழ்
இருந்து, 41-43
மணம் நயந்தனன், அம் மலை
கிழவோற்கே. 41-44
***
மறம் கொள் இரும் புலித்
தொல் முரண் தொலைத்த 42-1
முறம் செவி வாரணம் முன்
குளகு அருந்திக் 42-2
கறங்கு வெள் அருவி ஓலின்
துஞ்சும் 42-3
பிறங்கு இரும் சோலை நல் மலை
நாடன் 42-4
மறந்தான்; மறக்க; இனி, எல்லா!
நமக்குச் 42-5
சிறந்தமை நாம் நற்கு
அறிந்தனம்; ஆயின், அவன்
திறம் 42-6
கொல் யானைக் கோட்டால்
வெதிர் நெல் குறுவாம் நாம்.
42-7
வள்ளை அகவுவம் வா, இகுளை!
நாம் 42-8
வள்ளை அகவுவம், வா; 42-9
காணிய வா - வாழி தோழி! - வரைத்
தாழ்பு - 42-10
வாள் நிறம் கொண்ட
அருவித்தே, நம் அருளா 42-11
நாண் இலி நாட்டு மலை; 42-12
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய
விடுவானோ - 42-13
ஓர்வு உற்று ஒரு திறம்
ஒல்காத நேர்கோல் 42-14
அறம் புரி நெஞ்சத்தவன்?
42-15
தண் நறும் கோங்கம் மலர்ந்த
வரை எல்லாம் 42-16
பொன் அணி யானை போல்
தோன்றுமே - நம் அருளாக் 42-17
கொன்னாளன் நாட்டு மலை; 42-18
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ?
- தன் மலை 42-19
நீரினும் சாயல் உடையன்,
நயந்தோர்க்குத் 42-20
தேர் ஈயும் வண் கையவன்; 42-21
வரை மிசை மேல் தொடுத்த நெய்
கண் இறாஅல் 42-22
மழை நுழை திங்கள் போல்
தோன்றும் - இழை நெகிழ 42-23
எவ்வம் உறீஇயினான்
குன்று; 42-24
எஞ்சாது, எல்லா! கொடுமை
நுவலாதி - 42-25
அஞ்சுவது அஞ்சா அறன் இலி
அல்லன், என் 42-26
நெஞ்சம்
பிணிக்கொண்டவன்! 42-27
என்று யாம் பாட, மறை நின்று
கேட்டனன்; 42-28
தாழ் இரும் கூந்தல் என்
தோழியைக் கை கவியாச், 42-29
சாயல் இன் மார்பன்
சிறுபுறம் சார்தர, 42-30
ஞாயிற்று முன்னர் இருள்
போல மாய்ந்தது என் 42-31
ஆய் இழை மேனிப் பசப்பு. 42-32
***
வேங்கை தொலைத்த வெறி பொறி
வாரணத்து 43-1
ஏந்து மருப்பின், இன வண்டு
இமிர்பு ஊதும் 43-2
சாந்த மரத்தின், இயன்ற
உலக்கையால், 43-3
ஐவன வெண் நெல் அறை உரலுள்
பெய்து, இருவாம், 43-4
ஐயனை ஏத்துவாம் போல,
அணிபெற்ற 43-5
மை படு சென்னிப் பய மலை
நாடனைத் 43-6
தையலாய்! பாடுவாம் நாம்;
43-7
தகையவர் கைச் செறித்த தாள்
போலக் காந்தள் 43-8
முகையின் மேல் தும்பி
இருக்கும் - பகை எனின், 43-9
கூற்றம் வரினும் தொலையான்,
தன் நட்டார்க்குத் 43-10
தோற்றலை நாணாதோன் குன்று;
43-11
வெருள்பு உடன் நோக்கி,
வியல் அறை யூகம், 43-12
இருள் தூங்கு இறு வரை ஊர்பு
இழிபு ஆடும் 43-13
வருடைமான் குழவிய வள மலை
நாடனைத் 43-14
தெருளத் தெரி இழாய்! - நீ
ஒன்று பாடித்தை; 43-15
நுண் பொறி மான் செவி போல,
வெதிர் முளைக் 43-16
கண் பொதி பாளை கழன்று உகும்
பண்பிற்றே - 43-17
மாறு கொண்டு ஆற்றார்
எனினும், பிறர் குற்றம் 43-18
கூறுதல் தேற்றாதோன்
குன்று; 43-19
புணர் நிலை வளகின் குளகு
அமர்ந்து உண்ட 43-20
புணர் மருப்பு எழில் கொண்ட
வரை புரை செலவின் 43-21
வயங்கு எழில் யானைப் பய மலை
நாடனை - 43-22
மணம் நாறு கதுப்பினாய்! -
மறுத்து ஒன்று பாடித்தை; 43-23
கடும் கண் உழுவை அடி போல
வாழைக் 43-24
கொடும் காய் குலை தொறூஉம்
தூங்கும் - இடும்பையால் 43-25
இன்மை உரைத்தார்க்கு, அது
நிறைக்கல் ஆற்றாக்கால், 43-26
தன் மெய் துறப்பான் மலை;
43-27
என ஆங்கு, 43-28
கூடி அவர் திறம் பாட, என்
தோழிக்கு 43-29
வாடிய மென் தோளும் வீங்கின
- 43-30
ஆடு அமை வெற்பன்
அளித்தக்கால் போன்றே! 43-31
***
கதிர் விரி கனை சுடர்க்
கவின் கொண்ட நனம் சாரல் 44-1
எதிர் எதிர் ஓங்கிய மால்
வரை அடுக்கத்து, 44-2
அதிர் இசை அருவி தன் அம்
சினை மிசை வீழ, 44-3
முதிர் இணர் ஊழ் கொண்ட
முழவுத் தாள் எரி வேங்கை, 44-4
வரி நுதல் எழில் வேழம் பூ
நீர் மேல் சொரிதரப், 44-5
புரி நெகிழ் தாமரை மலர் அம்
கண் வீறு எய்தித் 44-6
திரு நயந்து இருந்தன்ன
தேம் கமழ் விறல் வெற்ப! 44-7
தன் எவ்வம் கூரினும், நீ
செய்த அருள் இன்மை 44-8
என்னையும் மறைத்தாள், என்
தோழி - அது கேட்டு 44-9
நின்னை யான் பிறர்
முன்னர்ப் பழி கூறல் தான்
நாணி; 44-10
கூரும் நோய் சிறப்புவும்,
நீ செய்த அருள் இன்மை 44-11
சேரியும் மறைத்தாள், என்
தோழி -அது கேட்டாங்கு, 44-12
'ஓரும் நீ நிலையலை' எனக்
கூறல் தான் நாணி; 44-13
நோய் அட வருந்தியும், நீ
செய்த அருள் இன்மை 44-14
ஆயமும் மறைத்தாள், என் தோழி
- அது கேட்டு 44-15
மாய நின் பண்பு இன்மை பிறர்
கூறல் தான் நாணி; 44-16
என ஆங்கு, 44-17
இனையன தீமை நினைவனள்
காத்தாங்கு, 44-18
அனை அரு பண்பினான், நின்
தீமை காத்தவள் 44-19
அரும் துயர் ஆர் அஞர்
தீர்க்கும் 44-20
மருந்து ஆகி செல்கம்,
பெரும! நாம் விரைந்தே! 44-21
***
விடியல் வெம் கதிர் காயும்
வேய் அமல் அகல் அறைக், 45-1
கடி சுனைக் கவினிய காந்தள்
அம் குலையினை, 45-2
அரு மணி அவிர் உத்தி அரவு
நீர் உணல் செத்துப், 45-3
பெரு மலை மிளிர்ப்பன்ன
காற்றுடைக் கனைப் பெயல் 45-4
உருமுக் கண்ணுறுதலின்,
உயர் குரல் ஒலி ஓடி, 45-5
நறு வீய நனம் சாரல்
சிலம்பலின், கதுமெனச், 45-6
சிறுகுடி துயில் எழூஉம்
சேண் உயர் விறல் வெற்ப! 45-7
கால் பொர நுடங்கல கறங்கு
இசை அருவி நின் 45-8
மால் வரை மலி சுனை மலர்
ஏய்க்கும் என்பதோ - 45-9
புல் ஆராப் புணர்ச்சியால்
புலம்பிய என் தோழி 45-10
பல் இதழ் மலர் உண் கண்
பசப்ப! நீ சிதைத்ததை? 45-11
புகர் முகக் களிறொடு புலி
பொருது உழக்கும் நின் 45-12
அகல் மலை அடுக்கத்த அமை
ஏய்க்கும் என்பதோ - 45-13
கடை எனக் கலுழும் நோய்
கைம்மிக, என் தோழி 45-14
தடையின திரண்ட தோள் தகை
வாடச் சிதைத்ததை? 45-15
சுடர் உற உற நீண்ட சுரும்பு
இமிர் அடுக்கத்த 45-16
விடர் வரை எரி வேங்கை இணர்
ஏய்க்கும் என்பதோ - 45-17
யாமத்தும் துயிலலள்
அலமரும் என் தோழி 45-18
காமரு நல் எழில் கவின்
வாடச் சிதைத்ததை? 45-19
என ஆங்கு, 45-20
தன் தீமை பல கூறிக்
கழறலின், என் தோழி 45-21
மறையில் தான் மருவுற மணந்த
நட்பு அருகலான் 45-22
பிறை புரை நுதல்! அவர்ப்
பேணி நம் 45-23
உறை வரைந்தனர், அவர்
உவக்கும் நாளே. 45-24
***
வீ அகம் புலம்ப, வேட்டம்
போகிய 46-1
மாஅல் அம் சிறை மணி நிறத்
தும்பி, 46-2
வாய் இழி கடாத்த, வால்
மருப்பு ஒருத்தலோடு 46-3
ஆய் பொறி உழுவை தாக்கிய
பொழுதின், 46-4
'வேங்கை அம் சினை' என விறல்
புலி முற்றியும் 46-5
பூம் பொறி யானைப் புகர்
முகம் குறுகியும், 46-6
வலி மிகு வெகுளியான் வாள்
உற்ற மன்னரை 46-7
நயன் நாடி நட்பு ஆக்கும்
வினைவர் போல், மறிதரும் 46-8
அயம் இழி அருவிய அணி மலை
நல் நாட! 46-9
ஏறு இரங்கு இருள் இடை
இரவினில் பதம் பெறாஅன், 46-10
மாறினென் எனக் கூறி மனம்
கொள்ளும், தான் என்ப - 46-11
கூடுதல் வேட்கையான், குறி
பார்த்துக் குரல் நொச்சிப்
46-12
பாடு ஓர்க்கும் செவியோடு
பைதலேன் யான் ஆக; 46-13
அரும் செலவு ஆர் இடை அருளி
வந்து, அளி பெறாஅன் 46-14
வருந்தினென் என பல
வாய்விடூஉம், தான் என்ப - 46-15
நிலை உயர் கடவுட்குக் கடம்
பூண்டு தன் மாட்டுப் 46-16
பல சூழும் மனத்தோடு
பைதலேன் யான் ஆக; 46-17
கனை பெயல் நடுநாள் யான் கண்
மாறக், குறி பெறாஅன், 46-18
புனை இழாய்! என் பழி
நினக்கு உரைக்கும், தான்
என்ப - 46-19
துளி நசை வேட்கையான் மிசை
பாடும் புள்ளின், தன் 46-20
அளி நசை ஆர்வுற்ற
அன்பினேன் யான் ஆக; 46-21
என ஆங்கு, 46-22
கலந்த நோய் கைம்மிகக் கண்
படா என் வயின் 46-23
புலந்தாயும் நீ ஆயின்,
பொய்யானே வெல்குவை - 46-24
இலங்கு தாழ் அருவியோடு அணி
கொண்ட நின் மலைச் 46-25
சிலம்பு போல், கூறுவ கூறும்
46-26
இலங்கு ஏர் எல் வளை, இவள்
உடை நோயே. 46-27
***
ஒன்று இரப்பான் போல்
எளிவந்தும் சொல்லும்,
உலகம் 47-1
புரப்பான் போல்வது ஓர்
மதுகையும் உடையன்; 47-2
வல்லாரை வழிபட்டு ஒன்று
அறிந்தான் போல், 47-3
நல்லார் கண் தோன்றும்
அடக்கமும் உடையன்; 47-4
இல்லோர் புன்கண், ஈகையின்
தணிக்க 47-5
வல்லான் போல்வது ஓர்
வன்மையும் உடையன்; 47-6
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை
விட்டு, என்னைச் 47-7
சொல்லும் சொல், கேட்டீ -
சுடர் இழாய்! பல் மாணும்; 47-8
'நின் இன்றி அமையலேன், யான்'
என்னும் அவன் ஆயின், 47-9
அன்னான் சொல் நம்புண்டல்
யார்க்கும் இங்கு அரிது
ஆயின், 47-10
என் உற்ற பிறர்க்கும்
ஆங்கு உள கொல்லோ? - நறு
நுதால்! 47-11
'அறியாய் நீ, வருந்துவல்
யான்' என்னும் அவன் ஆயின்,
47-12
தமியரே துணிகிற்றல்
பெண்டிர்க்கும் அரிது
ஆயின், 47-13
அளியரோ, எம் போல ஈங்கு இவன்
வலைப்பட்டார்? 47-14
'வாழலேன், யான்' என்னும் 'நீ
நீப்பின்' அவன் ஆயின், 47-15
ஏழையர் எனப் பலர் கூறும்
சொல் பழி ஆயின், 47-16
சூழும்கால், நினைப்பது
ஒன்று அறிகலேன்,
வருந்துவல்; 47-17
சூழும்கால், நறு நுதால்!
நம் உளே சூழ்குவம். 47-18
அவனை, 47-19
நாண் அடப் பெயர்த்தல்
நமக்கும் ஆங்கு ஒல்லாது; 47-20
'பேணினர்' எனப்படுதல்
பெண்மையும் அன்று; அவன் 47-21
'வௌவினன் முயங்கும்
மாத்திரம் வா' எனக் 47-22
கூறுவென் போலக் காட்டி 47-23
மற்று அவன் மேஎவழி மேவாய்
நெஞ்சே! 47-24
***
ஆம் இழி அணி மலை அலர்
வேங்கைத் தகை போலத், 48-1
தே மூசு, நனை கவுள், திசை
காவல் கொளற்கு ஒத்த 48-2
வாய் நில்லா வலி முன்பின்,
வண்டு ஊது புகர் முகம் 48-3
படு மழை அடுக்கத்த, மா
விசும்பு ஓங்கிய 48-4
கடி மரத் துருத்திய, கமழ்
கடாம் திகழ்தரும் 48-5
பெரு களிற்று இனத்தொடு,
வீங்கு எருத்து எறுழ்
முன்பின் 48-6
இரும் புலி மயக்குற்ற இகல்
மலை நல் நாட! 48-7
வீழ் பெயல் கங்குலின் விளி
ஓர்த்த ஒடுக்கத்தால், 48-8
வாழும் நாள் சிறந்தவள்
வருந்து தோள் தவறு உண்டோ -
48-9
தாழ் செறி கடும் காப்பின்
தாய் முன்னர், நின் சாரல்
48-10
ஊழுறு கோடல் போல், எல் வளை
உகுபவால்? 48-11
இனை இருள் இது என ஏங்கி,
நின் வரல் நசைஇ, 48-12
நினை துயர் உழப்பவள் பாடு
இல் கண் பழி உண்டோ - 48-13
'இனையள்' என்று எடுத்து
அரற்றும் அயல் முன்னர்,
நின் சுனைக் 48-14
கனை பெயல் நீலம் போல், கண்
பனி கலுழ்பவால்? 48-15
பல் நாளும் படர் அடப்,
பசலையால் உணப்பட்டாள் 48-16
பொன் உரை மணி அன்ன, மாமைக்
கண் பழி உண்டோ - 48-17
இன் நுரைச் செதும்பு
அரற்றும் செவ்வியுள், நின்
சோலை - 48-18
மின் உகு தளிர் அன்ன,
மெலிவு வந்து உரைப்பதால்?
48-19
என ஆங்கு, 48-20
பின் ஈதல் வேண்டும், நீ
பிரிந்தோள் நட்பு - என
நீவிப் 48-21
பூங் கண் படுதலும்
அஞ்சுவல்; தாங்கிய 48-22
அரும் துயர் அவலம்
தூக்கின், 48-23
மருங்கு அறிவாரா
மலையினும் பெரிதே! 48-24
***
கொடுவரி தாக்கி வென்ற
வருத்தமொடு 49-1
நெடு வரை மருங்கின்
துஞ்சும் யானை, 49-2
நனவில் தான் செய்தது
மனத்தது ஆகலின், 49-3
கனவில் கண்டு, கதுமென
வெரீஇப் 49-4
புதுவது ஆக மலர்ந்த
வேங்கையை 49-5
'அது' என உணர்ந்து, அதன் அணி
நலம் முருக்கிப் 49-6
பேணா முன்பின் தன் சினம்
தணிந்து, அம் மரம் 49-7
காணும் பொழுதின் நோக்கல்
செல்லாது, 49-8
நாணி இறைஞ்சும் நல் மலை நல்
நாட! 49-9
போது எழில் மலர் உண் கண்
இவள் மாட்டு நீ இன்ன 49-10
காதலை என்பதோ இனிது - மற்று
இன்னாதே, 49-11
மின் ஓரும் கண் ஆக, இடி
என்னாய், பெயல் என்னாய், 49-12
இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு
நீ வருவதை; 49-13
இன்புற அளித்தனை இவள்
மாட்டு நீ இன்ன 49-14
அன்பினை என்பதோ இனிது -
மற்று இன்னாதே, 49-15
மணம் கமழ் மார்பினை, மஞ்சு
இவர் அடுக்கம் போழ்ந்து, 49-16
அணங்கு உடை ஆர் இடை, ஈங்கு
நீ வருவதை; 49-17
இருள் உறழ் இரும் கூந்தல்
இவள் மாட்டு நீ இன்ன 49-18
அருளினை என்பதோ இனிது -
மற்று இன்னாதே, 49-19
ஒளிறு வேல் வலன் ஏந்தி,
'ஒருவன் யான்' என்னாது, 49-20
களிறு இயங்கு ஆர் இடை,
ஈங்கு நீ வருவதை; 49-21
அதனால், 49-22
இரவின் வாரல்; ஐய! விரவு வீ
49-23
அகல் அறை வரிக்கும் சாரல்,
49-24
பகலும் பெறுவை, இவள் தட
மென் தோளே. 49-25
***
வாங்கு கோல் நெல்லொடு
வாங்கி, வரு வைகல், 50-1
மூங்கில் மிசைந்த
முழந்தாள் இரும் பிடி, 50-2
தூங்கு இலை வாழை நளி
புக்கு, ஞாங்கர் 50-3
வருடை மட மறி ஊர்வு இடைத்
துஞ்சும் 50-4
இருள் தூங்கு சோலை, இலங்கு
நீர் வெற்ப! 50-5
அரவின் பொறியும் அணங்கும்
புணர்ந்த 50-6
உரவு வில் மேல் அசைத்த
கையை, ஓராங்கு 50-7
நிரை வளை முன்கை என் தோழியை
நோக்கிப், 50-8
படி கிளி பாயும் பசும்
குரல் ஏனல் 50-9
கடிதல் மறப்பித்தாய்
ஆயின், இனி நீ 50-10
நெடிது உள்ளல் ஓம்புதல்
வேண்டும்; இவளே 50-11
பல் கோள் பலவின் பயிர்ப்பு
உறு தீம் கனி 50-12
அல்கு அறைக் கொண்டு ஊண்
அமலைச் சிறுகுடி 50-13
நல்கூர்ந்தார் செல்வ மகள்.
50-14
நீயே, வளியின் இகல் மிகும்
தேரும், களிறும் 50-15
தளியின் சிறந்தனை - வந்த
புலவர்க்கு 50-16
அளியொடு கைதூவலை; 50-17
அதனால், 50-18
கடு மா கடவுறூஉம் கோல்
போல், எனைத்தும் 50-19
கொடுமை இலை ஆவது அறிந்தும்,
அடுப்பல் - 50-20
வழை வளர் சாரல் வருடை நல்
மான் 50-21
குழவி வளர்ப்பவர் போலப்
பாராட்டி, 50-22
உழையின் பிரியின்,
பிரியும், 50-23
இழை அணி அல்குல் என்
தோழியது கவினே! 50-24
***
சுடர் தொடீஇ! கேளாய் -
தெருவில் நாம் ஆடும் 51-1
மணல் சிற்றில் காலின்
சிதையா, அடைச்சிய 51-2
கோதை பரிந்து, வரிப் பந்து
கொண்டு ஓடி , 51-3
நோதக்க செய்யும் சிறு
பட்டி, மேல் ஓர் நாள், 51-4
அன்னையும் யானும்
இருந்தேமா, 'இல்லிரே! 51-5
உண்ணு நீர் வேட்டேன்' என
வந்தாற்கு, அன்னை 51-6
'அடர் பொன் சிரகத்தால்
வாக்கிச், சுடர் இழாய்! 51-7
உண்ணு நீர் ஊட்டி வா'
என்றாள்; என, யானும் 51-8
தன்னை அறியாது சென்றேன்;
மற்று, என்னை 51-9
வளை முன்கை பற்றி நலியத்,
தெருமந்திட்டு, 51-10
'அன்னாய்! இவன் ஒருவன்
செய்தது காண்!' என்றேனா, 51-11
அன்னை அலறிப் படர்தர, தன்னை
யான், 51-12
'உண்ணு நீர் விக்கினான்'
என்றேனா, அன்னையும் 51-13
தன்னைப் புறம்பு அழித்து
நீவ, மற்று என்னைக் 51-14
கடைக் கண்ணால் கொல்வான்
போல் நோக்கி, நகை கூட்டம்
51-15
செய்தான், அக் கள்வன் மகன்!
51-16
***
முறம் செவி மறைப் பாய்பு
முரண் செய்த புலி செத்து, 52-1
மறம் தலைக்கொண்ட
நூற்றுவர் தலைவனைக் 52-2
குறங்கு அறுத்திடுவான்
போல், கூர் நுதி மடுத்து,
அதன் 52-3
நிறம் சாடி முரண் தீர்ந்த
நீள் மருப்பு எழில் யானை, 52-4
மல்லரை மறம் சாய்த்த மால்
போல், தன் கிளை நாப்பண், 52-5
கல் உயர் நனம் சாரல்,
கலந்து இயலும் நாட! கேள்; 52-6
தாமரைக் கண்ணியைத், தண்
நறும் சாந்தினை, 52-7
நேர் இதழ்க் கோதையாள் செய்
குறி நீ வரின், 52-8
'மணம் கமழ் நாற்றத்த மலை
நின்று பலி பெறூஉம் 52-9
அணங்கு' என அஞ்சுவர்,
சிறுகுடியோரே; 52-10
ஈர்ந் தண் ஆடையை, எல்லி
மாலையை, 52-11
சோர்ந்து வீழ்
கதுப்பினாள் செய் குறி நீ
வரின், 52-12
ஒளி திகழ் ஞெகிழியர்,
கவணையர், வில்லர், 52-13
'களிறு' என ஆர்ப்பவர், ஏனல்
காவலரே; 52-14
ஆர மார்பினை, அண்ணலை, அளியை
52-15
ஐது அகல் அல்குலாள் செய்
குறி நீ வரின், 52-16
'கறி வளர் சிலம்பில்
வழங்கல் ஆனாப் 52-17
புலி' என்று ஓர்க்கும், இக்
கலி கேழ் ஊரே; 52-18
என ஆங்கு, 52-19
விலங்கு ஓரார், மெய்
ஓர்ப்பின், இவள் வாழாள்,
இவள் அன்றிப் 52-20
புலம் புகழ் ஒருவ! யானும்
வாழேன்; 52-21
அதனால் பொதி அவிழ் வைகறை
வந்து நீ குறை கூறி, 52-22
வதுவை அயர்தல் வேண்டுவல்,
ஆங்குப் 52-23
புதுவை போலும் நின் வரவும்,
இவள் 52-24
வதுவை நாண் ஒடுக்கமும்,
காண்குவல் யானே. 52-25
***
வறன் உறல் அறியாத வழை அமை
நறும் சாரல் 53-1
விறல் மலை வியல் அறை, வீழ்
பிடி உழையதா 53-2
மறம் மிகு வேழம், தன் மாறு
கொள் மைந்தினான், 53-3
புகர் நுதல் புண் செய்த
புய் கோடு போல 53-4
உயர் முகை நறும் காந்தள்
நாள் தோறும் புதிது ஈன, 53-5
அயம் நந்தி அணிபெற, அருவி
ஆர்த்து இழிதரும் 53-6
பய மழை தலைஇய பாடு சால்
விறல் வெற்ப! 53-7
மறையினின் மணந்து, ஆங்கே
மருவு அறத் துறந்த பின் 53-8
இறை வளை நெகிழ்பு ஓட,
ஏற்பவும் ஒல்லும்மன் - 53-9
அயல் அலர் தூற்றலின், ஆய்
நலன் இழந்த, கண்! 53-10
கயல் உமிழ் நீர் போலக், கண்
பனி கலுழாக்கால்? 53-11
இனிய செய்து அகன்று, நீ
இன்னாதாத் துறத்தலின், 53-12
'பனி இவள் படர்' எனப் பரவாமை
ஒல்லும்மன் - 53-13
ஊர் அலர் தூற்றலின், ஒளி
ஓடி நறு நுதல் 53-14
பீர் அலர் அணி கொண்டு, பிறை
வனப்பு இழவாக்கால்? 53-15
'அஞ்சல்' என்று அகன்று, நீ
அருளாது துறத்தலின், 53-16
நெஞ்சு அழி துயர் அட,
நிறுப்பவும் இயையும்மன் -
53-17
நனவினால் நலம் வாட, நலிதந்த
நடுங்கு அஞர், 53-18
கனவினால் அழிவுற்றுக்,
கங்குலும் ஆற்றாக்கால்? 53-19
என ஆங்கு, 53-20
விளியா நோய் உழந்து ஆனா என்
தோழி, நின் மலை 53-21
முளிவுற வருந்திய முளை
முதிர் சிறு தினை 53-22
தளி பெறத் தகைபெற்றாங்கு,
நின் 53-23
அளி பெற நந்தும், இவள் ஆய்
நுதல் கவினே! 53-24
***
'கொடியவும் கோட்டவும் நீர்
இன்றி நிறம் பெறப் 54-1
பொடி அழல் புறந்தந்த
பூவாப் பூம் பொலன் கோதைத்,
54-2
தொடி செறி யாப்பு அமை அரி
முன்கை, அணைத் தோளாய்! 54-3
அடி உறை அருளாமை ஒத்ததோ
நினக்கு?' என்ன, 54-4
நரந்தம் நாறு இரும்
கூந்தல் எஞ்சாது நனி
பற்றிப், 54-5
பொலம் புனை மகரவாய்
நுங்கிய சிகழிகை, 54-6
நலம்பெறச் சுற்றிய குரல்
அமை ஒரு காழ் 54-7
விரல் முறை சுற்றி,
மோக்கலும் மோந்தனன்; 54-8
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல்
விரல் போது கொண்டு 54-9
செறாஅச் செங் கண் புதைய
வைத்துப் 54-10
பறாஅக் குருகின்
உயிர்த்தலும் உயிர்த்தனன்;
54-11
தொய்யில் இள முலை இனிய
தைவந்து, 54-12
தொய்யல் அம் தடம் கையின்,
வீழ் பிடி அளிக்கும் 54-13
மையல் யானையின்,
மருட்டலும் மருட்டினன்; 54-14
அதனால், 54-15
அல்லல் களைந்தனன் தோழி! நம்
நகர் 54-16
அரும் கடி நீவாமை
கூறின்,'நன்று' என, 54-17
நின்னொடு சூழ்வல், தோழி,
'நயம் புரிந்து, 54-18
இன்னது செய்தாள் இவள்' என
54-19
மன்னா உலகத்து மன்னுவது
புரைமே! 54-20
***
மின் ஒளிர் அவிர் அறல் இடை
போழும் பெயலே போல், 55-1
பொன் அகை தகை வகிர் வகை
நெறி வயங்கிட்டுப் 55-2
போழ் இடை இட்ட கமழ் நறும்
பூங் கோதை, 55-3
இன் நகை, இலங்கு எயிற்றுத்,
தேமொழித், துவர்ச்
செவ்வாய் 55-4
நல் நுதால் நினக்கு ஒன்று
கூறுவாம்; கேள், இனி; 55-5
'நில்' என, நிறுத்தான்;
நிறுத்தே வந்து. 55-6
நுதலும், முகனும், தோளும்,
கண்ணும், 55-7
இயலும், சொல்லும், நோக்குபு
நினைஇ, 55-8
'ஐ தேய்ந்தன்று, பிறையும்
அன்று; 55-9
மை தீர்ந்தன்று, மதியும்
அன்று; 55-10
வேய் அமன்றன்று, மலையும்
அன்று; 55-11
பூ அமன்றன்று, சுனையும்
அன்று; 55-12
மெல்ல இயலும், மயிலும்
அன்று; 55-13
சொல்லத் தளரும், கிளியும்
அன்று' 55-14
என ஆங்கு, 55-15
அனையன பல பாராட்டிப்,
பையென, 55-16
வலைவர் போலச் சோர் பதன்
ஒற்றிப், 55-17
புலையர் போலப் புன்கண்
நோக்கித், 55-18
தொழலும் தொழுதான்; தொடலும்
தொட்டான்; 55-19
காழ் வரை நில்லாக் கடும்
களிறு அன்னோன் 55-20
தொழூஉம்; தொடூஉம்; அவன்
தன்மை 55-21
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!
55-22
***
ஊர்க் கால் நிவந்த
பொதும்பருள், நீர்க் கால்,
56-1
கொழு நிழல் ஞாழல் முதிர்
இணர் கொண்டு, 56-2
கழும முடித்துக், கண் கூடு
கூழை 56-3
சுவல் மிசைத் தாதொடு தாழ,
அகல் மதி 56-4
தீம் கதிர் விட்டது போல,
முகன் அமர்ந்து 56-5
ஈங்கே வருவாள் இவள் யார்
கொல்? ஆங்கே, ஓர் 56-6
வல்லவன் தைஇய பாவை கொல்?
நல்லார் 56-7
உறுப்பு எலாம் கொண்டு,
இயற்றியாள் கொல்?
வெறுப்பினால் 56-8
வேண்டு உருவம் கொண்டது ஓர்
கூற்றம் கொல்? - ஆண்டார், 56-9
கடிது, இவளைக் காவார்
விடுதல்; கொடி இயல், 56-10
பல் கலைச் சில் பூங்
கலிங்கத்தள் - ஈங்கு இது ஓர்
56-11
நல்கூர்ந்தார் செல்வ
மகள்! 56-12
இவளை சொல்லாடிக் காண்பேன்,
தகைத்து; 56-13
நல்லாய்! கேள்; 56-14
ஆய் தூவி அனம் என, அணி மயில்
பெடை எனத், 56-15
தூது உண் அம் புறவு எனத்,
துதைந்த நின் எழில் நலம் -
56-16
மாதர் கொள் மான் நோக்கின்
மட நல்லாய்! - நின்
கண்டார்ப் 56-17
பேதுறூஉம் என்பதை அறிதியோ?
அறியாயோ? 56-18
நுணங்கு அமைத் திரள் என,
நுண் இழை அணை என, 56-19
முழங்கு நீர்ப் புணை என,
அமைந்த நின் தட மென் தோள் -
56-20
வணங்கு இறை வால் எயிற்று
அம் நல்லாய்! - நின்
கண்டார்க்கு, 56-21
அணங்கு ஆகும் என்பதை
அறிதியோ? அறியாயோ? 56-22
முதிர் கோங்கின் முகை என,
முகம் செய்த குரும்பை எனப்,
56-23
பெயல் துளி முகிழ் எனப்,
பெருத்த நின் இள முலை - 56-24
மயிர் வார்ந்த வரி முன்கை
மட நல்லாய்! - நின் கண்டார்
56-25
உயிர் வாங்கும் என்பதை
உணர்தியோ? உணராயோ? 56-26
என ஆங்கு, 56-27
பேதுற்றாய்ப் போலப் பிறர்
எவ்வம் நீ அறியாய், 56-28
யாது ஒன்றும் வாய் வாளாது
இறந்தீவாய்! கேள், இனி; 56-29
நீயும் தவறு இலை; நின்னைப்
புறங்கடை 56-30
போதர விட்ட நுமரும், தவறு
இலர்; 56-31
நிறை அழி கொல் யானை
நீர்க்கு விட்டாங்குப் 56-32
'பறை அறைந்து அல்லது
செல்லற்க' என்னா 56-33
***
வேய் எனத் திரண்ட தோள்,
வெறி கமழ் வணர் ஐம்பால், 57-1
மா வென்ற மட நோக்கின்,
மயில் இயல், தளர்பு ஒல்கி -
57-2
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப,
அவிர் ஒளி இழை இமைப்பக் 57-3
கொடி என, மின் என, அணங்கு என,
யாது ஒன்றும் 57-4
தெரிகல்லா இடையின் கண் கண்
கவர்பு ஒருங்கு ஓட, 57-5
வளமை சால் உயர் சிறப்பின்
நுந்தை தொல் வியல் நகர் 57-6
இளமையான் எறி பந்தொடு -
இகத்தந்தாய்! கேள் இனி; 57-7
பூம் தண் தார்ப் புலர்
சாந்தின், தென்னவன் உயர்
கூடல் 57-8
தேம் பாய அவிழ் நீலத்து
அலர் வென்ற அமர் உண் கண் 57-9
ஏந்து கோட்டு எழில் யானை
ஒன்னாதார்க்கு அவன்
வேலின், 57-10
சேந்து நீ இனையையால்;
ஒத்ததோ? - சின் மொழி! 57-11
பொழி பெயல் வண்மையான்
அசோகம் தண் காவினுள், 57-12
கழி கவின் இள மாவின் தளிர்
அன்னாய்! அதன் தலைப் 57-13
பணை அமை பாய் மான் தேர்
அவன் செற்றார் நிறம்
பாய்ந்த 57-14
கணையினும், நோய் செய்தல்
கடப்பு அன்றோ? - கனம்
குழாய்! 57-15
வகை அமை தண் தாரான் கோடு
உயர் பொருப்பின் மேல், 57-16
தகை இணர் இள வேங்கை மலர்
அன்ன சுணங்கினாய்! 57-17
மத வலி மிகு கடாஅத்து அவன்
யானை மருப்பினும் 57-18
கதவவால் - தக்கதோ? காழ்
கொண்ட இள முலை! 57-19
என ஆங்கு, 57-20
இனையன கூற, இறைஞ்சுபு நிலம்
நோக்கி, 57-21
நினையுபு, நெடிது ஒன்று
நினைப்பாள் போல், மற்று
ஆங்கே, 57-22
துணை அமை தோழியர்க்கு
அமர்த்த கண்ணள், 57-23
மனை ஆங்குப் பெயர்ந்தாள்,
என் அறிவு அகப்படுத்தே! 57-24
***
வார் உறு வணர் ஐம்பால்,
வணங்கு இறை நெடு மென் தோள்,
58-1
பேர் எழில் மலர் உண் கண்,
பிணை எழில் மான் நோக்கின்,
58-2
கார் எதிர் தளிர் மேனிக்,
கவின் பெறு சுடர் நுதல், 58-3
கூர் எயிற்று முகை வெண்
பல், கொடி புரையும்
நுசுப்பினாய், 58-4
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப
நிரை தொடிக் கை வீசினை, 58-5
ஆர் உயிர் வௌவிக்கொண்டு
அறிந்தீயாது இறப்பாய்!
கேள்; 58-6
உளனா, என் உயிரை உண்டு, உயவு
நோய் கைம்மிக, 58-7
இளமையான் உணராதாய்! நின்
தவறு இல்லானும், 58-8
களைநர் இல் நோய் செய்யும்
கவின் அறிந்து, அணிந்து, தம்
58-9
வளமையான் போத்தந்த நுமர்
தவறு இல் என்பாய்; 58-10
நடை மெலிந்து, அயர்வு உறீஇ,
நாளும் என் நலியும் நோய்
58-11
மடமையான் உணராதாய்! நின்
தவறு இல்லானும், 58-12
இடை நில்லாது எய்க்கும்
நின் உரு அறிந்து, அணிந்து,
தம் 58-13
உடைமையால் போத்தந்த நுமர்
தவறு இல் என்பாய்; 58-14
அல்லல் கூர்ந்து அழிவுற,
அணங்கு ஆகி அடரும் நோய் 58-15
சொல்லினும் அறியாதாய்!
நின் தவறு இல்லானும், 58-16
ஒல்லையே உயிர் வௌவும் உரு
அறிந்து, அணிந்து, தம் 58-17
செல்வத்தால் போத்தந்த
நுமர் தவறு இல் என்பாய்; 58-18
என ஆங்கு, 58-19
ஒறுப்பின், யான் ஒறுப்பது
நுமரை; யான், மற்று இந் நோய்
58-20
பொறுக்கலாம் வரைத்து
அன்றிப் பெரிது ஆயின்,
பொலம் குழாய்! 58-21
மறுத்து இவ் ஊர் மன்றத்து
மடல் ஏறி, 58-22
நிறுக்குவென் போல்வல்
யான், நீ படு பழியே! 58-23
***
தளை நெகிழ், பிணி நிவந்த
பாசு அடைத் தாமரை 59-1
முளை நிமிர்ந்தவை போலும்
முத்துக் கோல் அவிர் தொடி,
59-2
அடுக்கம் நாறு அலர்
காந்தள் நுண் ஏர் தண் ஏர்
உருவின் 59-3
துடுப்பு எனப் புரையும்
நின் திரண்ட, நேர் அரி
முன்கைச் 59-4
சுடர் விரி வினை வாய்ந்த
தூதையும் பாவையும் 59-5
விளையாட, அரிப் பெய்த அழகு
அமை புனை வினை 59-6
ஆய் சிலம்பு எழுந்து
ஆர்ப்ப, அம் சில இயலும் நின்
59-7
பின்னு விட்டு இருளிய
ஐம்பால் கண்டு, என் பால 59-8
என்னை விட்டு இகத்தர,
இறந்தீவாய்! கேள், இனி; 59-9
'மருளி, யான் மருள் உற இவன்
உற்றது எவன்?' என்னும் 59-10
'அருள் இலை இவட்கு' என
அயலார் நின் பழிக்கும்கா,
59-11
வை எயிற்றவர் நாப்பண், வகை
அணிப் பொலிந்து, நீ 59-12
தையில் நீர் ஆடிய தவம்
தலைப்படுவாயோ? 59-13
உருள் இழாய்! 'ஒளி வாட, இவன்
உள் நோய் யாது' என்னும் 59-14
'அருள் இலை இவட்கு' என
அயலார் நின்
பழிக்கும்கால், 59-15
பொய்தல மகளையாய்ப், பிறர்
மனைப் பாடி, நீ 59-16
எய்திய பலர்க்கு ஈத்த பயம்
பயக்கிற்பதோ? 59-17
ஆய் தொடி! 'ஐது உயிர்த்து,
இவன் உள் நோய் யாது?'
என்னும் 59-18
'நோய் இலை இவட்கு' என
நொதுமலர் பழிக்கும்கால்,
59-19
சிறு முத்தனைப் பேணிச்
சிறு சோறு மடுத்து, நீ 59-20
நறு நுதலவரொடு நக்கது
நன்கு இயைவதோ? 59-21
என ஆங்கு, 59-22
அனையவை - உளையவும், யான்
நினக்கு உரைத்ததை 59-23
இனைய நீ செய்தது உதவாய்
ஆயின், சே இழாய்! 59-24
செய்ததன் பயம் பற்று
விடாது; 59-25
நயம் பற்று விடின் - இல்லை -
நசைஇயோர் திறத்தே. 59-26
***
சுணங்கு அணி வன முலைச்,
சுடர் கொண்ட நறு நுதல், 60-1
மணம் கமழ் நறும் கோதை மாரி
வீழ் இரும் கூந்தல், 60-2
நுணங்கு எழில் ஒள் தித்தி,
நுழை நொசி மட மருங்குல், 60-3
வணங்கு இறை வரி முன்கை, வரி
ஆர்ந்த அல்குலாய்! 60-4
'கண் ஆர்ந்த நலத்தாரைக்,
கதுமெனக், கண்டவர்க்கு, 60-5
உள் நின்ற நோய் மிக, உயிர்
எஞ்சு துயர் செய்தல் 60-6
பெண் அன்று, புனை இழாய்!'
எனக் கூறி தொழூஉம்; தொழுதே
60-7
கண்ணும் நீர் ஆக
நடுங்கினன்; இன் நகாய்! 60-8
என் செய்தான் கொல்லோ! இஃது
ஒத்தன் தன் கண் 60-9
பொரு களிறு அன்ன தகை
சாம்பி, உள் உள் 60-10
உருகுவான் போலும்,
உடைந்து? 60-11
தெருவின் கண் காரணம்
இன்றிக் கலங்குவார்க்
கண்டு, நீ 60-12
வாரணவாசிப் பதம்
பெயர்த்தல், ஏதில, 60-13
நீ நின் மேல் கொள்வது,
எவன்? 60-14
அலர் முலை, ஆய் இழை நல்லாய்!
கதுமெனப் 60-15
பேர் அமர் உண் கண் நின்
தோழி உறீஇய 60-16
ஆர் அஞர் எவ்வம் உயிர்
வாங்கும்; 60-17
மற்று இந் நோய் தீரும்
மருந்து அருளாய், ஒண் தொடீ!
60-18
'நின் முகம் காணும்
மருந்தினேன்' என்னுமால்;
60-19
நின் முகம் தான் பெறின்
அல்லது, கொன்னே 60-20
மருந்து பிறிது யாதும்
இல்லேல், திருந்து இழாய்!
60-21
என் செய்வாம் கொல், இனி
நாம்? 60-22
பொன் செய்வாம்; 60-23
ஆறு விலங்கித் தெருவின்
கண் நின்று ஒருவன் 60-24
கூறும் சொல் வாய் எனக்
கொண்டு, அதன் பண்பு உணராம்,
60-25
'தேறல் எளிது' என்பாம் நாம்;
60-26
'ஒருவன் சாம் ஆறு எளிது'
என்பாம் மற்று; 60-27
சிறிது, ஆங்கே - மாணா ஊர்
அம்பல் அலரின் அலர்க என, 60-28
நாணும் நிறையும் நயப்பு
இல் பிறப்பு இலி, 60-29
பூண் ஆகம் நோக்கி, இமையான்,
நயந்து நம் 60-30
கேண்மை விருப்புற்றவனை,
எதிர் நின்று, 60-31
நாண் அடப், பெயர்த்தல்
நயவரவு இன்றே. 60-32
***
எல்லா! இஃது ஒத்தன் என்
பெறான்? கேட்டைக் காண்; 61-1
செல்வம் கடைகொளச், சாஅய்ச்,
சான்றவர் 61-2
அல்லல் களை தக்க கேளிர்
உழைச் சென்று 61-3
சொல்லுதல் உற்று,
உரைகல்லாதவர் போலப் 61-4
பல் ஊழ் பெயர்ந்து என்னை
நோக்கும்; மற்று யான்
நோக்கின் 61-5
மெல்ல இறைஞ்சும் தலை; 61-6
எல்லா! நீ, முன்னத்தான்
ஒன்று குறித்தாய் போல்
காட்டினை; 61-7
நின்னின் விடாஅ நிழல் போல்
திரிதருவாய்! 61-8
என் நீ பெறாதது? ஈது என்?
61-9
சொல்லின், மறாது ஈவாள்
மன்னோ, இவள்? 61-10
செறாஅது, ஈதல்
இரந்தார்க்கு, ஒன்று
ஆற்றாது வாழ்தலின், 61-11
சாதலும் கூடுமாம் மற்று;
61-12
இவள் தந்தை, காதலின்
யார்க்கும் கொடுக்கும்
விழுப் பொருள்; 61-13
யாது நீ வேண்டியது; 61-14
பேதாய்! பொருள் வேண்டும்
புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ
61-15
மருளி மட நோக்கின் நின்
தோழி என்னை 61-16
அருளீயல் வேண்டுவல், யான்;
61-17
'அன்னையோ!' மண்டு அமர் அட்ட
களிறு அன்னான், தன்னை ஒரு
61-18
பெண்டிர் அருளக் கிடந்தது
எவன் கொலோ? 61-19
ஒண் தொடீ! நாண் இலன் மன்ற;
இவன்; 61-20
ஆயின், ஏஎ! 61-21
'பல்லார் நக்கு எள்ளப்படு
மடல்மா ஏறி, 61-22
மல்லல் ஊர் ஆங்கண் படுமே,
நறு நுதல் 61-23
நல்காள் கண்மாறிவிடின்'
எனச் செல்வான் - நாம் 61-24
எள்ளி நகினும் வரூஉம்; இடை
இடைக் 61-25
கள்வர் போல் நோக்கினும்
நோக்கும்; குறித்தது 61-26
கொள்ளாது போகாக் குணன்
உடையன், எந்தை தன் 61-27
உள்ளம் குறைபடா ஆறு. 61-28
***
ஏஎ! இஃது ஒத்தன், நாண் இலன் -
தன்னொடு 62-1
மேவேம் என்பாரையும்
மேவினன் கைப்பற்றும்; 62-2
மேவினும், மேவாக்கடையும்
அஃது எல்லாம் 62-3
நீ அறிதி; யான் அஃது
அறிகல்லேன்; பூ அமன்ற 62-4
மெல் இணர் செல்லாக் கொடி
அன்னாய்! நின்னை யான் 62-5
புல் இனிது ஆகலின்,
புல்லினென்; - எல்லா! 62-6
தமக்கு இனிது என்று,
வலிதின் பிறர்க்கு இன்னா
62-7
செய்வது நன்று ஆமோ
மற்று? 62-8
சுடர் தொடீ! போற்றாய் களை,
நின் முதுக்குறைமை;
போற்றக் கேள் 62-9
வேட்டார்க்கு இனிது ஆயின்
அல்லது, நீர்க்கு இனிது
என்று 62-10
உண்பவோ, நீர் உண்பவர்? 62-11
செய்வது அறிகல்லேன்; யாது
செய்வேன் கொலோ - 62-12
ஐ வாய் அரவின் இடைப்பட்டு,
நை வாரா? 62-13
'மை இல் மதியின் விளங்கும்
முகத்தாரை 62-14
வௌவிக் கொளலும் அறன்' எனக்
கண்டன்று; 62-15
அறனும் அது கண்டற்று ஆயின்,
திறன் இன்றிக் 62-16
கூறும் சொல் கேளான்,
நலிதரும்; பண்டு நாம் 62-17
வேறு அல்லம் என்பது ஒன்று
உண்டால்; அவனொடு 62-18
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு?
62-19
***
நோக்கும்கால், நோக்கித்
தொழூஉம், பிறர் காண்பார் 63-1
தூக்கு இலி; தூற்றும் பழி
என கை கவித்துப் 63-2
போக்கும்கால், போக்கு
நினைந்திருக்கும்; மற்று
நாம் 63-3
காக்கும் இடம் அன்று, இனி;
63-4
எல்லா! எவன் செய்வாம்? 63-5
பூங் குழாய்! செல்லல் அவன்
உழைக் கூஉய்க் கூஉய் 63-6
விரும்பி யான் விட்டேனும்
போல்வல்; என் தோள் மேல் 63-7
கரும்பு எழுது
தொய்யிற்குச் செல்வல்;
'ஈங்கு ஆக 63-8
இருந்தாயோ?' என்று ஆங்கு
இற; 63-9
அவன் நின் திருந்து அடி
மேல் வீழ்ந்து இரக்கும்,
நோய் தீர்க்கும் 63-10
மருந்து நீ ஆகுதலான்; 63-11
இன்னும், கடம் பூண்டு ஒரு
கால் நீ வந்தை,
'உடம்பட்டாள்' 63-12
என்னாமை என் மெய் தொடு; 63-13
இஃதோ அடங்கக் கேள்; 63-14
நின்னொடு சூழும்கால்,
நீயும் நிலம் கிளையா, 63-15
என்னொடு நிற்றல் எளிது
அன்றோ? மற்று அவன் 63-16
தன்னொடு நின்று விடு. 63-17
***
அணி முகம் மதி ஏய்ப்ப, அம்
மதியை நனி ஏய்க்கும் 64-1
மணி முகம்; மா மழை, நின் பின்
ஒப்ப, பின்னின் கண் 64-2
விரி நுண் நூல் சுற்றிய ஈர்
இதழ் அலரி 64-3
அரவுக் கண் அணி உறழ் ஆரல்
மீன் தகை ஒப்ப, 64-4
அரும் படர் கண்டாரைச்
செய்து, ஆங்கு இயலும் 64-5
விரிந்து ஒலி கூந்தலாய்!
கண்டை! எமக்குப் 64-6
பெரும் பொன் படுகுவை
பண்டு; 64-7
ஏஎ! எல்லா, மொழிவது கண்டை,
இஃது ஒத்தன்; தொய்யில் 64-8
எழுதி இறுத்த பெரு பொன்
படுகம்? 64-9
உழுவது உடையமோ, யாம்?; 64-10
உழுதாய்; 64-11
சுரும்பு இமிர் பூங் கோதை
அம் நல்லாய்! யான் நின் 64-12
திருந்து இழை மென் தோள்
இழைத்த, மற்று இஃதோ, 64-13
கரும்பு எல்லாம் நின் உழவு
அன்றோ? ஒருங்கே 64-14
துகள் அறு வாள் முகம் ஒப்ப
மலர்ந்த 64-15
குவளையும், நின் உழவு
அன்றோ? இகலி 64-16
முகை மாறு கொள்ளும்
எயிற்றாய்! இவை அல்ல, 64-17
என் உழுவாய் நீ, மற்று இனி?
64-18
எல்லா! நல் தோள் இழைத்த
கரும்புக்கு நீ கூறு; 64-19
முற்று எழில் நீல மலர் என
உற்ற, 64-20
இரும்பு ஈர் வடி அன்ன,
உண்கட்கும், எல்லாம், 64-21
பெரும் பொன் உண்டு என்பாய்!
இனி; 64-22
நல்லாய்! இகுளை! கேள்; 64-23
ஈங்கே தலைப்படுவன்,
உண்டான் தலைப்பெயின், 64-24
வேந்து கொண்டன்ன பல; 64-25
ஆங்கு ஆக! அத்திறம்
அல்லாக்கால், வேங்கை வீ 64-26
முற்று எழில் கொண்ட
சுணங்கு அணி பூண் ஆகம் 64-27
பொய்த்து ஒருகால் எம்மை
முயங்கினை சென்றீமோ 64-28
முத்து ஏர் முறுவலாய்! நீ
படும் பொன் எல்லாம் 64-29
உத்தி எறிந்துவிடற்கு. 64-30
***
திருந்து இழாய்! கேளாய்,
நம் ஊர்க்கு எல்லாம்
சாலும் 65-1
பெரு நகை! அல்கல்
நிகழ்ந்தது; ஒரு நிலையே 65-2
மன்பதை எல்லாம் மடிந்த
இரும் கங்குல், 65-3
அம் துகில் போர்வை அணிபெற
தைஇ, நம் 65-4
இன் சாயல் மார்பன் குறி
நின்றேன் யான் ஆகத் - 65-5
தீரத் தறைந்த தலையும், தன்
கம்பலும் 65-6
காரக் குறைந்து,
கறைப்பட்டு வந்து, நம் 65-7
சேரியின் போகா முட முதிர்
பார்ப்பானைத், 65-8
தோழி! நீ போற்றுதி என்றி -
அவன் ஆங்கே, 65-9
பாராக், குறழாப், பணியாப்,
'பொழுது அன்றி 65-10
யார் இவண் நின்றீர்?' எனக்
கூறிப், பையென 65-11
வை காண் முது பகட்டின்,
பக்கத்தின் போகாது, 65-12
'தையால்! தம்பலம் தின்றியோ?'
என்று, தன் 65-13
பக்கு அழித்துக், 'கொண்டீ'
எனத் தரலும் - யாது ஒன்றும்
65-14
வாய்வாளேன் நிற்பக் - கடிது
அகன்று கைமாறிக் 65-15
'கைப்படுக்கப்பட்டாய்
சிறுமி! நீ மற்று, யான் 65-16
ஏனை பிசாசு, அருள் என்னை
நலிதரின், 65-17
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல்
கொள்வேன்' 65-18
எனப் பலவும் தாங்காது வாய்
பாடி நிற்ப - 65-19
முது பார்ப்பான் அஞ்சினன்
ஆதல் அறிந்து, யான், எஞ்சாது
65-20
ஒரு கை மணல் கொண்டு, மேல்
தூவக் கண்டே 65-21
கடிது அரற்றிப் பூசல்
தொடங்கினன், ஆங்கே, 65-22
ஒடுங்கா வயத்தின், கொடும்
கேழ்க், கடுங்கண் 65-23
இரும் புலி கொண்மார்
நிறுத்த வலையுள் ஓர் 65-24
ஏதில் குறு நரி பட்டற்றால்;
காதலன் 65-25
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு
எலாஅம் 65-26
ஆகுலம் ஆகி விளைந்ததை
என்றும் தன் 65-27
வாழ்க்கை அது ஆகக் கொண்ட
முது பார்ப்பான் 65-28
வீழ்க்கைப் பெரும் கரும்
கூத்து. 65-29
*************** குறிஞ்சிக்கலி
முற்றும் ***************