வீங்கு நீர் அவிழ் நீலம்
பகர்பவர் வயல் கொண்ட 66-1
ஞாங்கர் மலர் சூழ்தந்து,
ஊர் புகுந்த வரி வண்டு, 66-2
ஓங்கு உயர் எழில் யானைக்
கனை கடாம் கமழ் நாற்றம் 66-3
ஆங்கு அவை விருந்து ஆற்றப்,
பகல் அல்கிக், கங்குலான், 66-4
வீங்கு இறை வடுக் கொள,
வீழுநர்ப் புணர்ந்தவர் 66-5
தேம் கமழ் கதுப்பின் உள்
அரும்பு அவிழ் நறு
முல்லைப் 66-6
பாய்ந்து ஊதிப் படர்
தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
66-7
பூம் பொய்கை மறந்து
உள்ளாப் புனல் அணி நல் ஊர!
66-8
அணை மென் தோள் யாம் வாட,
அமர் துணை புணர்ந்து நீ, 66-9
'மண மனையாய்!' என வந்த
மல்லலின் மாண்பு அன்றோ - 66-10
பொதுக் கொண்ட கவ்வையுள் பூ
அணிப் பொலிந்த நின் 66-11
வதுவை அம் கமழ் நாற்றம்
வைகறைப் பெற்றதை; 66-12
கனலும் நோய்த் தலையும், 'நீ
கனம் குழை அவரொடு 66-13
புனல் உளாய்' என வந்த
பூசலின் பெரிது அன்றோ - 66-14
தார் கொண்டாள் தலைக் கோதை
தடுமாறிப் பூண்ட நின் 66-15
ஈர் அணி சிதையாது, எம் இல்
வந்து நின்றதை; 66-16
தணந்ததன் தலையும், 'நீ தளர்
இயல் அவரொடு 66-17
துணங்கையாய்' என வந்த
கவ்வையின் கடப்பு அன்றோ - 66-18
ஒளி பூத்த நுதலாரோடு ஓர்
அணிப் பொலிந்த நின் 66-19
களி தட்ப வந்த இக் கவின்
காண இயைந்ததை; 66-20
என ஆங்கு, 66-21
அளி பெற்றேம், எம்மை நீ
அருளினை; விளியாது 66-22
வேட்டோ ர் திறத்து
விரும்பிய நின் பாகனும் 66-23
'நீட்டித்தாய்' என்று,
கடாஅம், கடும் திண் தேர், 66-24
பூட்டு விடாஅ நிறுத்து.
66-25
***
கார் முற்றி, இணர் ஊழ்த்த
கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
67-1
சீர் முற்றிப், புலவர்
வாய்ச் சிறப்பு எய்தி, இரு
நிலம் 67-2
தார் முற்றியது போலத், தகை
பூத்த வையை தன் 67-3
நீர் முற்றி, மதில் பொரூஉம்
பகை அல்லால், நேராதார் 67-4
போர் முற்று ஒன்று அறியாத
புரிசை சூழ் புனல் ஊரன் - 67-5
நலம் தகை, எழில் உண் கண்
நல்லார் தம் கோதையால் 67-6
அலைத்த, புண், வடுக் காட்டி,
அன்பு இன்றி வரின் - எல்லா! -
67-7
புலப்பேன் யான்
என்பேன்மன்? அந்நிலையே,
அவன் காணின், 67-8
கலப்பேன் என்னும், இக்
கையறு நெஞ்சே; 67-9
கோடு எழில் அகல் அல்குல்
கொடி அன்னார் முலை மூழ்கப்
67-10
பாடு அழி சாந்தினன், பண்பு
இன்றி வரின் - எல்லா! - 67-11
ஊடுவேன் என்பேன்மன்?
அந்நிலையே அவன் காணின் 67-12
கூடுவேன் என்னும், இக்
கொள்கை இல் நெஞ்சே; 67-13
இனிப் புணர்ந்த எழில்
நல்லார் இலங்கு எயிறு
உறாஅலின், 67-14
நனிச் சிவந்த வடுக் காட்டி,
நாண் இன்றி வரின்- எல்லா! -
67-15
துனிப்பேன் யான்
என்பேன்மன்? அந்நிலையே,
அவன் காணின், 67-16
தனித்தே தாழும், இத் தனி
இல் நெஞ்சே; 67-17
என ஆங்கு, 67-18
பிறை புரை ஏர் நுதால்! தாம்
எண்ணியவை எல்லாம் 67-19
துறைபோதல் ஒல்லுமோ - தூ
ஆகாது ஆங்கே 67-20
அறைபோகு நெஞ்சு
உடையார்க்கு? 67-21
***
பொது மொழி பிறர்க்கு இன்றி
முழுது ஆளும் செல்வர்க்கு
68-1
மதி மொழி இடல் மாலை வினைவர்
போல், வல்லவர் 68-2
செது மொழி சீத்த செவி செறு
ஆக, 68-3
முது மொழி நீராப், புலன் நா
உழவர் 68-4
புது மொழி கூட்டுண்ணும்,
புரிசை சூழ், புனல் ஊர! 68-5
'ஊரன்மன் உரன் அல்லன்,
நமக்கு' என்ன, உடன் வாளாது,
68-6
ஓர் ஊர் தொக்கு இருந்த நின்
பெண்டிருள் நேர் ஆகிக், 68-7
களையா நின் குறி வந்து, எம்
கதவம் சேர்ந்து அசைத்த கை
68-8
வளையின் வாய்விடல் மாலை
மகளிரை நோவேமோ - 68-9
'கேள் அலன், நமக்கு அவன்,
குறுகன்மின்' என, மற்று எம்
68-10
தோளொடு பகைபட்டு நினை வாடு
நெஞ்சத்தேம்? 68-11
'ஊடியார் நலம் தேம்ப,
ஒடியெறிந்து, அவர் வயின்
68-12
மால் தீர்க்கும் அவன்
மார்பு' என்று எழுந்த சொல்
நோவேமோ - 68-13
முகை வாய்த்த முலை பாயக்
குழைந்த நின் தார் எள்ள, 68-14
வகை வரிச் செப்பினுள்
வைகிய கோதையேம்? 68-15
சேரியால் சென்று, நீ
சேர்ந்த இல் வினாயினன், 68-16
தேரொடு திரிதரும் பாகனைப்
பழிப்பேமோ - 68-17
ஒலி கொண்ட சும்மையான் மண
மனை குறித்து, எம் இல் 68-18
'பொலிக' எனப் புகுந்த நின்
புலையனைக் கண்ட யாம்? 68-19
என ஆங்கு; 68-20
நனவினான் வேறு ஆகும் வேளா
முயக்கம் - 68-21
மனை வரின், பெற்று உவந்து,
மற்று எம் தோள் வாட, 68-22
'இனையர்' என உணர்ந்தார்
என்று ஏக்கற்று, ஆங்குக் 68-23
கனவினான் எய்திய
செல்வத்து அனையதே - 68-24
ஐய! எமக்கு நின் மார்பு. 68-25
***
போது அவிழ் பனிப் பொய்கைப்,
புதுவது தளைவிட்ட 69-1
தாது சூழ் தாமரைத் தனி மலர்
புறம் சேர்பு - 69-2
காதல் கொள் வதுவை நாள்,
கலிங்கத்துள் ஒடுங்கிய 69-3
மாதர் கொள் மான் நோக்கின்
மடந்தை தன் துணை ஆக, 69-4
ஓது உடை அந்தணன் எரி வலம்
செய்வான் போல், 69-5
ஆய் தூவி அன்னம் தன் அணி
நடைப் பெடையொடு - 69-6
மேதகத் திரிதரூஉம் மிகு
புனல் நல் ஊர! 69-7
தெள் அரிச் சிலம்பு
ஆர்ப்பத், தெருவின் கண்
தாக்கி, நின் 69-8
உள்ளம் கொண்டு,
ஒழித்தாளைக் குறை கூறிக்
கொள நின்றாய்; 69-9
துணிந்தது பிறிது ஆகத்,
'துணிவு இலள் இவள்' எனப், 69-10
பணிந்தாய் போல் வந்து,
ஈண்டுப், பயன் இல மொழிவாயோ?
69-11
பட்டுழி அறியாது, பாகனைத்
தேரொடும் 69-12
விட்டு, அவள் வரல் நோக்கி,
விருந்து ஏற்றுக்கொள
நின்றாய்; 69-13
நெஞ்சத்த பிற ஆக, 'நிறை இலள்
இவள்' என, 69-14
வஞ்சத்தான் வந்து ஈங்கு
வலி அலைத்து ஈவாயோ? 69-15
இணர் ததை தண் காவின், இயன்ற
நின் குறி வந்தாள் 69-16
புணர்வினில் புகன்று,
ஆங்கே புனல் ஆடப்
பண்ணியாய்; 69-17
தருக்கிய பிற ஆகத், 'தன்
இலள் இவள்' எனச் 69-18
செருக்கினால் வந்து,
ஈங்குச் சொல் உகுத்து
ஈவாயோ? 69-19
என ஆங்கு, 69-20
தருக்கேம் பெரும! நின்
நல்கல் விருப்புற்றுத் 69-21
தாழ்ந்தாய் போல் வந்து,
தகவு இல செய்யாது, 69-22
சூழ்ந்தவை செய்து, மற்று
எம்மையும் உள்ளுவாய் - 69-23
வீழ்ந்தார் விருப்பு
அற்றக் கால். 69-24
***
மணி நிற மலர்ப் பொய்கை,
மகிழ்ந்து ஆடும் அன்னம்
தன் 70-1
அணி மிகு சேவலை அகல் அடை
மறைத்தெனக் 70-2
கதுமெனக், காணாது, கலங்கி,
அம் மடப் பெடை 70-3
மதி நிழல் நீர் உள் கண்டு,
அது என உவந்து ஓடித், 70-4
துன்னத் தன் எதிர் வரூஉம்
துணை கண்டு, மிக நாணிப், 70-5
பல் மலர் இடை புகூஉம் பழனம்
சேர் ஊ! கேள்; 70-6
நலம் நீப்பத் துறந்து,
எம்மை நல்காய் நீ
விடுதலின், 70-7
பல நாளும் படாத கண், பாயல்
கொண்டு, இயைபவால்; 70-8
துணை மலர்க் கோதையார்
வைகலும் பாராட்ட, 70-9
மண மனைத் ததும்பும் நின் மண
முழ வந்து எடுப்புமே! 70-10
அகல நீ துறத்தலின், அழுது
ஓவா உண் கண், எம் 70-11
புதல்வனை மெய் தீண்டப்,
பொருந்துதல் இயைபவால்; 70-12
நினக்கு ஒத்த நல்லாரை நெடு
நகர்த் தந்து, நின் 70-13
தமர் பாடும் துணங்கையுள்
அரவம் வந்து எடுப்புமே! 70-14
வாராய் நீ துறத்தலின்,
வருந்திய எமக்கு, ஆங்கே 70-15
நீர் இதழ் புலராக் கண் இமை
கூம்ப இயைபவால்; 70-16
நேர் இழை நல்லாரை நெடு
நகர்த் தந்து, நின் 70-17
தேர் பூண்ட நெடு நல் மான்
தெள் மணி வந்து எடுப்புமே!
70-18
என ஆங்கு, 70-19
மெல்லியான் செவி முதல்,
மேல்வந்தான் காலை போல், 70-20
எல்லாம் துயிலோ எடுப்புக;
நின் பெண்டிர், 70-21
இல்லின் எழீஇய யாழ் தழீஇ
கல்லா வாய்ப் 70-22
பாணன் புகுதராக் கால்! 70-23
***
விரி கதிர் மண்டிலம் வியல்
விசும்பு ஊர்தரப் 71-1
புரி தலை தளை அவிழ்ந்த பூ
அங்கண் புணர்ந்து ஆடி, 71-2
வரி வண்டு வாய் சூழும் வளம்
கெழு பொய்கையுள் - 71-3
துனி சிறந்து இழிதரும்
கண்ணின் நீர் அறல் வார, 71-4
இனிது அமர் காதலன் இறைஞ்சி
தன் அடி சேர்பு, 71-5
நனி விரைந்து அளித்தலின்,
நகுபவள் முகம் போலப் - 71-6
பனி ஒரு திறம் வாரப்,
பாசடைத் தாமரைத் 71-7
தனி மலர் தளை விடூஉம் தண்
துறை நல் ஊர! 71-8
'ஒரு நீ, பிறர் இல்லை, அவன்
பெண்டிர்' என உரைத்துத், 71-9
தேரொடும் தேற்றிய பாகன்
வந்தீயான் கொல் - 71-10
ஓர் இல் தான் கொணர்ந்து
உய்த்தார் புலவியுள்
பொறித்த புண் 71-11
பாரித்துப் புணர்ந்த நின்
பரத்தைமை காணிய? 71-12
'மடுத்து அவன் புகு வழி
மறையேன்' என்று, யாழொடும்
71-13
எடுத்துச் சூள் பல உற்ற
பாணன் வந்தீயான் கொல் - 71-14
அடுத்துத் தன் பொய்
உண்டார்ப் புணர்ந்த நின்
எருத்தின் கண் 71-15
எடுத்துக் கொள்வது போலும்
தொடி வடு காணிய? 71-16
'தணந்தனை' எனக் கேட்டுத்,
தவறு ஓராது, எமக்கு நின் 71-17
குணங்களைப் பாராட்டும்
தோழன் வந்தீயான் கொல் - 71-18
கணம் குழை நல்லவர் கதுப்பு
அறல் அணைத் துஞ்சி, 71-19
அணங்கு போல் கமழும் நின்
அலர் மார்பு காணிய? 71-20
என்று நின், 71-21
தீரா முயக்கம் பெறுநர்ப்
புலப்பவர் 71-22
யார்? - நீ வரு நாள் போல்
அமைகுவம் யாம்; புக்கீமோ!
- 71-23
மாரிக்கு அவாவுற்றுப்
பீள் வாடும் நெல்லிற்கு,
ஆங்கு 71-24
ஆராத் துவலை அளித்தது
போலும், நீ 71-25
ஓர் யாட்டு ஒரு கால் வரவு.
71-26
***
'இணைபட நிவந்த நீல மென்
சேக்கையுள், 72-1
துணை புணர் அன்னத்தின்
தூவி மெல் அணை அசைஇச், 72-2
சேடு இயல் வள்ளத்துப்
பெய்த பால் சில காட்டி, 72-3
ஊடும் மெல் சிறு கிளி
உணர்ப்பவள் முகம் போலப் , 72-4
புது நீர புதல் ஒற்றப்,
புணர் திரைப் பிதிர் மல்க,
72-5
மதி நோக்கி அலர் வீத்த
ஆம்பல் வால் மலர் நண்ணிக்,
72-6
கடி கயத் தாமரைக் கமழ்
முகை, கரை மாவின் 72-7
வடி தீண்ட, வாய் விடூஉம்
வயல் அணி நல் ஊர! 72-8
கண்ணி, நீ கடி கொண்டார்க்
கனைதொறும், யாம் அழப், 72-9
பண்ணினால் களிப்பிக்கும்
பாணன் காட்டு என்றானோ - 72-10
'பேணான்' என்று உடன்றவர்
உகிர் செய்த வடுவினான், 72-11
மேல் நாள் நின் தோள்
சேர்ந்தார் நகை சேர்ந்த
இதழினை? 72-12
நாடி நின் தூது ஆடித்,
துறைச் செல்லாள், ஊரவர் 72-13
ஆடை கொண்டு, ஒலிக்கும்,
நின் புலைத்தி காட்டு
என்றாளோ - 72-14
கூடியார் புனல் ஆடப் புணை
ஆய மார்பினில், 72-15
ஊடியார் எறிதர ஒளி விட்ட
அரக்கினை? 72-16
வெறிது நின் புகழ்களை
வேண்டார் இல் எடுத்து
ஏத்தும் 72-17
அறிவு உடை அந்தணன் அவளைக்
காட்டு என்றானோ - 72-18
களி பட்டார் கமழ் கோதை
கயம்பட்ட உருவின் மேல் 72-19
குறி பெற்றார் குரல்
கூந்தல் கோடு உளர்ந்த
துகளினை? 72-20
என ஆங்கு, 72-21
செறிவுற்றேம்; எம்மை நீ
செறிய, அறிவுற்று, 72-22
அழிந்து உகு நெஞ்சத்தேம்,
அல்லல் உழப்பக் 72-23
கழிந்தவை உள்ளாது, கண்ட
இடத்தே, 72-24
அழிந்து நின் பேணிக்
கொளலின் இழிந்ததோ - 72-25
இந் நோய் உழத்தல் எமக்கு?
72-26
***
அகல் துறை அணிபெறப்,
புதலொடு தாழ்ந்த 73-1
பகன்றைப் பூ உற நீண்ட
பாசடைத் தாமரை, 73-2
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய
வள்ளத்தால் 73-3
தண் கமழ் நறும் தேறல்
உண்பவள் முகம் போல, 73-4
வண் பிணி தளை விடூஉம் வயல்
அணி நல் ஊர! 73-5
'நோதக்காய்' என நின்னை
நொந்தீவார் இல் வழித், 73-6
'தீது இலேன் யான்' எனத்
தேற்றிய வருதிமன் - 73-7
ஞெகிழ் தொடி இளையவர் இடை
முலைத் தாது சோர்ந்து, 73-8
இதழ் வனப்பு இழந்த நின்
கண்ணி வந்து உரையாக்கால்?
73-9
கனற்றி நீ செய்வது
கடிந்தீவார் இல்வழி, 73-10
'மனத்தில் தீது இலன்' என
மயக்கிய வருதிமன் - 73-11
அலமரல் உண் கண்ணார் ஆய்
கோதை குழைத்த நின் 73-12
மலர் மார்பின் மறுப்பட்ட
சாந்தம் வந்து
உரையாக்கால்? 73-13
என்னை நீ செய்யினும்,
உரைத்தீவார் இல் வழி, 73-14
முன் அடிப் பணிந்து, எம்மை
உணர்த்திய வருதிமன் - 73-15
நிரை தொடி நல்லவர்
துணங்கையுள் தலைக்
கொள்ளக், 73-16
கரை இடைக் கிழிந்த நின்
காழகம் வந்து உரையாக்கால்?
73-17
என ஆங்கு, 73-18
மண்டு நீர் ஆரா மலி கடல்
போலும் நின் 73-19
தண்டாப் பரத்தை தலைக்
கொள்ள, நாளும் 73-20
புலத் தகைப் பெண்டிரைத்
தேற்ற; மற்று யாம் எனின், 73-21
தோலாமோ நின் பொய் மருண்டு?
73-22
***
பொய்கைப் பூ புதிது உண்ட
வரி வண்டு கழி பூத்த 74-1
நெய்தல் தாது அமர்ந்து
ஆடிப், பாசடைச் சேப்பினுள்
74-2
செய்து இயற்றியது போல வயல்
பூத்த தாமரை, 74-3
மை தபு, கிளர் கொட்டை மாண்
பதி படர்தரூஉம், 74-4
கொய்குழை அகை காஞ்சித்
துறை அணி நல் ஊர! 74-5
'அன்பு இலன், அறன் இலன்,
எனப்படான்' என ஏத்தி, 74-6
நின் புகழ் பல பாடும்
பாணனும் ஏமுற்றான்; 74-7
நஞ்சு உயிர் செகுத்தலும்
அறிந்து உண்டாங்கு, அளி
இன்மை 74-8
கண்டுநின் மொழி தேறும்
பெண்டிரும் ஏமுற்றார். 74-9
முன்பகல் தலைக்கூடி,
நன்பகல் அவள் நீத்துப், 74-10
பின்பகல் பிறர்த் தேரும்
நெஞ்சமும் ஏமுற்றாய்; 74-11
என ஆங்கு; 74-12
'கிண்கிணி மணித் தாரொடு
ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்
74-13
பேர் அமர்க்
கண்ணார்க்கும் படு வலை இது'
என, 74-14
ஊரவர் உடன் நகத் திரிதரும்
74-15
தேர் ஏமுற்றன்று,
நின்னினும் பெரிதே! 74-16
***
நீர் ஆர் செறுவில்
நெய்தலொடு நீடிய 75-1
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ்
கொண்மார், 75-2
சீர் ஆர் சே இழை ஒலிப்ப,
ஓடும் 75-3
ஓரை மகளிர் ஓதை வெரீஇ
எழுந்து, 75-4
ஆரல் ஆர்கை அம் சிறைத்
தொழுதி 75-5
உயர்ந்த பொங்கர் உயர் மரம்
ஏறி, 75-6
அமர்க்கண் மகளிர் அலப்பிய
அந் நோய் , 75-7
தமர்க்கு உரைப்பன போல், பல்
குரல் பயிற்றும், 75-8
உயர்ந்த போரின் ஒலி நல்
ஊரன் 75-9
புதுவோர் புணர்தல்
வெய்யன் ஆயின், 75-10
வதுவை நாளால் வைகலும், அஃது
யான் 75-11
நோவேன், தோழி! நோவாய் நீ, என
75-12
என் பார்த்து உறுவோய்!
கேள், இனித் தெற்றென; 75-13
'எல்லினை வருதி, எவன்
குறித்தனை?' எனச் 75-14
சொல்லாதிருப்பேன் ஆயின்,
ஒல்லென, 75-15
விரி உளைக் கலி மான் தேரொடு
வந்த 75-16
விருந்து எதிர்கோடலின்,
மறப்பல், என்றும்; 75-17
'வாடிய பூவொடு வாரல்,
எம்மனை' என 75-18
ஊடி இருப்பேன் ஆயின்,
நீடாது, 75-19
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்
75-20
பொய்ச் சூள் அஞ்சிப்
புலவேன் ஆகுவல்; 75-21
'பகல் ஆண்டு அல்கினை, பரத்த'
என்று யான் 75-22
இகலியிருப்பேன் ஆயின்,
தான் தன் 75-23
முதல்வன் பெரும் பெயர்
முறை உளிப் பெற்ற 75-24
புதல்வன் புல்லிப் பொய்
துயில் துஞ்சும்; 75-25
ஆங்க , 75-26
விருந்து எதிர் கொள்ளவும்,
பொய்ச் சூள் அஞ்சவும், 75-27
அரும் பெறல் புதல்வனை
முயங்கக் காணவும், 75-28
ஆங்கு அவிந்து ஒழியும், என்
புலவி தாங்காது, 75-29
அவ் அவ் இடத்தான் அவை அவை
காணப் - 75-30
பூங் கண் மகளிர் புனை நலம்
சிதைக்கும் 75-31
மாய மகிழ்நன் பரத்தைமை 75-32
நோவென், தோழி! கடன் நமக்கு
எனவே. 75-33
***
புனை இழை நோக்கியும், புனல்
ஆடப் புறம் சூழ்ந்தும், 76-1
அணி வரி தைஇயும், நம் இல்
வந்து வணங்கியும், 76-2
நினையுபு வருந்தும் இந்
நெடுந்தகை திறத்து, இவ் ஊர்
76-3
'இனையள்' என்று எடுத்து
ஓதற்கு அனையையோ, நீ? என 76-4
வினவுதி ஆயின், விளங்கு
இழாய்! கேள், இனி; 76-5
'செவ் விரல் சிவப்பு ஊரச்,
சேண் சென்றாய்' என்று, அவன்
76-6
பௌவ நீர்ச் சாய்க்
கொழுதிப் பாவை
தந்தனைத்தற்கே - 76-7
'கௌவை நோய் உற்றவர், காணாது
கடுத்த சொல் 76-8
ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு
நிலையே உரைத்ததை? 76-9
ஒடுங்கி, யாம் புகல்
ஒல்லேம் பெயர்தர, அவன்
கண்டு, 76-10
நெடும் கய மலர் வாங்கி,
நெறித்துத் தந்தனைத்தற்கோ
- 76-11
விடுந்தவர் விரகு இன்றி
எடுத்த சொல் பொய் ஆகக் 76-12
கடிந்ததும் இலையாய், நீ
கழறிய வந்ததை? 76-13
'வரி தேற்றாய், நீ' என,
வணங்கு இறை அவன் பற்றித், 76-14
தெரி வேய்த் தோள் கரும்பு
எழுதித் தொய்யில்
செய்தனைத்தற்கோ - 76-15
புரிபு நம் ஆயத்தார் பொய்
ஆக எடுத்த சொல் 76-16
உரிது என உணராய், நீ
உலமந்தாய் போன்றதை? 76-17
என ஆங்கு, 76-18
அரிது இனி, ஆய் இழாய்! அது
தேற்றல், புரிபு ஒருங்கு,
76-19
அன்று நம் வதுவையுள் நமர்
செய்வது இன்று, ஈங்கே, 76-20
தான் நயந்து இருந்தது இவ்
ஊர் ஆயின், எவன் கொலோ - 76-21
நாம் செயற்பாலது இனி? 76-22
***
இணை இரண்டு இயைந்து ஒத்த
முகை நாப்பண், பிறிது
யாதும் 77-1
துணை இன்றித் தளை விட்ட,
தாமரை தனி மலர், 77-2
திரு முகம் இறைஞ்சினள்,
வீழ்பவற்கு, இனைபவள் 77-3
அரி மதர் மழைக் கண் நீர்
அலர் முலை மேல் தெறிப்ப
போல், 77-4
தகை மலர்ப் பழனத்த புள்
ஒற்ற, ஒசிந்து ஒல்கி, 77-5
மிக நனி சேர்ந்த அம் முகை
மிசை அம் மலர் 77-6
அக இதழ்த் தண் பனி
உறைத்தரும் ஊர! கேள்: 77-7
தண் தளிர்த் தகை பூத்த தாது
எழில் நலம் செலக் 77-8
கொண்டு, நீ மாறிய கவின்
பெறல் வேண்டேன்மன் - 77-9
உண்டாதல் சாலா என் உயிர்
சாதல் உணர்ந்து, 'நின் 77-10
பெண்டு' எனப் பிறர் கூறும்
பழி மாறப் பெறுகற்பின்? 77-11
பொன் எனப் பசந்த, கண் போது
எழில் நலம் செலத், 77-12
தொல் நலம் இழந்த கண் துயில்
பெறல் வேண்டேன்மன் - 77-13
நின் அணங்கு உற்றவர் நீ
செய்யும் கொடுமைகள் 77-14
என் உழை வந்து, நொந்து
உரையாமை பெறுகற்பின்?; 77-15
மாசு அற மண்ணுற்ற மணி ஏசும்
இருங் கூந்தல் 77-16
வீ சேர்ந்து வண்டு
ஆர்க்கும் கவின் பெறல்
வேண்டேன்மன் - 77-17
நோய் சேர்ந்த திறம் பண்ணி,
நின் பாணன், எம்மனை 77-18
நீ சேர்ந்த இல் வினாய்
வாராமை பெறுகற்பின்? 77-19
ஆங்க, 77-20
'கடைஇய நின் மார்பு தோயலம்'
என்னும், 77-21
இடையும், நிறையும் எளிதோ -
நின் காணின் 77-22
கடவுபு, கை தங்கா, நெஞ்சு
என்னும் தம்மோடு 77-23
உடன் வாழ் பகை
உடையார்க்கு? 77-24
***
பல் மலர்ப் பழனத்த பாசடைத்
தாமரை 78-1
இன் மலர் இமிர்பு ஊதும்
துணை புணர் இரும் தும்ப, 78-2
உண் துறை உடைந்த பூப் புனல்
சாய்ப்பப், புலந்து ஊடிப்
78-3
பண்பு உடை நல் நாட்டுப் பகை
தலை வந்தென, 78-4
அது கைவிட்டு அகன்று
ஒரீஇக், காக்கிற்பான் குடை
நீழல் 78-5
பதி படர்ந்து, இறைகொள்ளும்
குடி போலப் - பிறிதும் ஒரு
78-6
பொய்கை தேர்ந்து அலமரும்
பொழுதினான், மொய் தப 78-7
இறை பகை தணிப்ப அக் குடி
பதிப் பெயர்ந்தாங்கு, 78-8
நிறை புனல் நீங்க வந்து,
அத்தும்பி அம் மலர்ப் 78-9
பறை தவிர்பு அசைவிடூஉம்
பாய் புனல் நல் ஊர! 78-10
'நீக்கும்கால் நிறம்
சாய்ந்து, புணரும்கால்
புகழ் பூத்து 78-11
நாம் கொண்ட குறிப்பு, இவள்
நலம்' என்னும் தகையோ தான் -
78-12
எரி இதழ் சோர்ந்து உக
ஏதிலார்ப் புணர்ந்தமை 78-13
கரி கூறும் கண்ணியை, ஈங்கு
எம் இல் வருவதை? 78-14
'சுடர் நோக்கி மலர்ந்து,
ஆங்கே படின் கூம்பும் மலர்
போல், என் 78-15
தொடர் நீப்பின், தொகும்,
இவள் நலம்' என்னும் தகையோ
தான் - 78-16
அலர் நாணிக் கரந்த நோய்
கைம்மிகப், பிறர் கூந்தல்
78-17
மலர் நாறும் மார்பினை,
ஈங்கு எம் இல் வருவதை? 78-18
'பெயின் நந்தி, வறப்பின்
சாம், புலத்திற்குப் பெயல்
போல் யான் 78-19
செலின் நந்திச், செறின்
சாம்பும், இவள்' என்னும்
தகையோ தான்- 78-20
முடி உற்ற கோதை போல் யாம்
வாட, ஏதிலார் 78-21
தொடி உற்ற வடுக் காட்டி,
ஈங்கு எம் இல் வருவதை? 78-22
ஆங்க, 78-23
ஐய! அமைந்தன்று; அனைத்து
ஆகப் புக்கீமோ, 78-24
வெய்யாரும் வீழ்வாரும்
வேறு ஆகக், கையின் 78-25
முகை மலர்ந்தன்ன
முயக்கில் தகை இன்றே, 78-26
தண் பனி வைகல் எமக்கு? 78-27
***
புள் இமிழ் அகல் வயல் ஒலி
செந்நெல் இடைப் பூத்த 79-1
முள் அரைத் தாமரை முழு
முதல் சாய்த்து, அதன் 79-2
வள் இதழ் உற நீடி, வயங்கிய
ஒரு கதிர், 79-3
அவை புகழ் அரங்கின் மேல்
ஆடுவாள் அணி நுதல் 79-4
வகை பெற செரீஇய வயந்தகம்
போல், தோன்றும் 79-5
தகைபெறு கழனி அம் தண் துறை
ஊர! கேள்: 79-6
அணியொடு வந்து ஈங்கு எம்
புதல்வனைக் கொள்ளாதி; 79-7
மணி புரை செவ் வாய் நின்
மார்பு அகலம் நனைப்பதால்,
79-8
'தோய்ந்தாரை அறிகுவேன்,
யான்' எனக், கமழும் நின் 79-9
சாந்தினால் குறி கொண்டாள்
சாய்குவள் அல்லளோ? 79-10
புல்லல் எம் புதல்வனைப்;
புகல் அகல் நின் மார்பில்
79-11
பல் காழ் முத்து அணி ஆரம்
பற்றினன் பரிவானால், 79-12
மாண் இழை மட நல்லார்
முயக்கத்தை நின் மார்பில்
79-13
பூணினால் குறி கொண்டாள்
புலக்குவள் அல்லளோ? 79-14
கண்டே எம் புதல்வனைக்
கொள்ளாதி; நின் சென்னி 79-15
வண்டு இமிர் வகை இணர்
வாங்கினன் பரிவானால், 79-16
'நண்ணியார்க் காட்டுவது
இது' எனக் கமழும் நின் 79-17
கண்ணியால் குறி கொண்டாள்
காய்குவள் அல்லளோ? 79-18
என ஆங்கு, 79-19
பூங் கண் புதல்வனைப் பொய்
பல பாராட்டி, 79-20
நீங்காய் இகவாய் நெடும்
கடை நில்லாதி; 79-21
ஆங்கே அவர் வயின் சென்றீ -
அணி சிதைப்பான் - 79-22
ஈங்கு எம் புதல்வனைத்
தந்து. 79-23
***
நயம் தலை மாறுவார் மாறுக;
மாறாக், 80-1
கயம் தலை மின்னும் கதிர்
விடு முக் காழ்ப், 80-2
பயந்த எம் கண் ஆர யாம் காண
நல்கித் - 80-3
திகழ் ஒளி முத்து அங்கு
அரும்பு ஆகத் தைஇப் 80-4
பவழம் புனைந்த பருதி
சுமப்பக் 80-5
கவழம் அறியா நின் கை புனை
வேழம் 80-6
புரி புனை பூங் கயிற்றின்
பைபய வாங்கி, 80-7
அரி புனை புட்டிலின்
ஆங்கண் ஈர்த்து, ஈங்கே 80-8
வருக! - எம் பாக மகன்! 80-9
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச்
சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
80-10
தளர் நடை காண்டல் இனிது;
மற்று இன்னாதே, 80-11
'உளம்' என்னா நுந்தை மாட்டு
எவ்வம் உழப்பார் 80-12
வளை நெகிழ்பு யாம் காணும்
கால்; 80-13
ஐய! காமரு நோக்கினை,
'அத்தத்தா, என்னும் நின் 80-14
தே மொழி கேட்டல் இனிது;
மற்று இன்னாதே, 80-15
உய்வு இன்றி நுந்தை நலன்
உணச் சாஅய்ச் சாஅய்மார் 80-16
எவ்வ நோய் யாம் காணும்
கால்; 80-17
ஐய! 'திங்கள் குழவி! வருக!' என,
யான் நின்னை 80-18
அம்புலி காட்டல் இனிது;
மற்று இன்னாதே, 80-19
நல்காது, நுந்தை புறம்
மாறப்பட்டவர் 80-20
அல்குல் வரி யாம் காணும்
கால்; 80-21
ஐய! எம் காதில் கனம் குழை
வாங்கிப், பெயர்தொறும், 80-22
போது இல் வறும் கூந்தல்,
கொள்வதை, நின்னை யாம் - 80-23
ஏதிலார் கண் சாய - நுந்தை
வியல் மார்பில் 80-24
தாது தேர் வண்டின் கிளை
பாடத், தைஇய 80-25
கோதை பரிபு ஆடக்,
காண்கும். 80-26
***
மை அற விளங்கிய மணி மருள்
அவ் வாய் தன் 81-1
மெய் பெறா மழலையின்
விளங்கு பூண் நனைத்தரப், 81-2
பொலம் பிறையுள் தாழ்ந்த
புனை வினை உருள் கலன், 81-3
நலம்பெறு கமழ் சென்னி,
நகையொடு துயல்வர, 81-4
உரு எஞ்சாது இடை காட்டும்
உடை கழல் அம் துகில், 81-5
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு
ஓவா அடி தட்பப், 81-6
பாலோடு அலர்ந்த முலை
மறந்து, முற்றத்துக் 81-7
கால் வல் தேர் கையின்
இயக்க, நடை பயிற்றா, 81-8
ஆல் அமர் செல்வன் அணி சால்
பெரு விறல் 81-9
போல, வரும் என் உயிர்! 81-10
பெரும! விருந்தொடு கைதூவா
எம்மையும் உள்ளாய்; 81-11
பெருந் தெருவில் கொண்டாடி
ஞாயர் பயிற்றத், 81-12
திருந்துபு நீ கற்ற
சொற்கள் யாம் கேட்ப, 81-13
மருந்து ஓவா நெஞ்சிற்கு
அமிழ்தம் அயின்றற்றாப் 81-14
பெருந்தகாய்! கூறு சில. 81-15
எல் இழாய்! சேய் நின்று,
நாம் கொணர்ந்த பாணன்
சிதைந்து, ஆங்கே 81-16
வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்'
என்றற்றா, 81-17
'நோய் நாம் தணிக்கும்
மருந்து' எனப் பாராட்ட, 81-18
ஓவாது அடுத்து அடுத்து,
'அத்தத்தா!' என்பான் மாண 81-19
வேய் மென் தோள் வேய்த்
திறம் சேர்த்தலும், மற்று
இவன் 81-20
வாய் உள்ளின் போகான் அரோ!
81-21
உள்ளி, உழையே ஒருங்கு படை
விடக் 81-22
கள்ளர் படர்தந்தது போலத்,
தாம் எம்மை 81-23
எள்ளுமார் வந்தாரே, ஈங்கு!
81-24
ஏதப்பாடு எண்ணிப், புரிசை
வியல் உள்ளோர் 81-25
கள்வரைக் காணாது, 'கண்டேம்'
என்பார் போலச் 81-26
சேய் நின்று, செய்யாத
சொல்லிச் சினவல்; நின் 81-27
ஆணை கடக்கிற்பார் யார்?
81-28
அதிர்வு இல் படிறு எருக்கி,
வந்து என் மகன் மேல், 81-29
முதிர் பூண் முலை பொருத
ஏதிலாள் முச்சி 81-30
உதிர் துகள் உக்க நின் ஆடை
ஒலிப்ப, 81-31
எதிர் வளி நின்றாய், நீ
செல்; 81-32
இனி! 'எல்லா! யாம், தீது
இலேம்' என்று தெளிப்பவும்,
கைந் நீவி 81-33
யாது ஒன்றும் எம் கண்
மறுத்தரவு இல் ஆயின், 81-34
மேதக்க எந்தை பெயரனை யாம்
கொள்வேம், 81-35
தாவா விருப்பொடு கன்று
யாத்த உழிச் செல்லும் 81-36
ஆ போல் படர் தக நாம்! 81-37
***
ஞாலம் வறம் தீரப் பெய்யக்,
குணக்கு ஏர்பு 82-1
காலத்தில் தோன்றிய கொண்மூ
போல், எம் முலை 82-2
பாலொடு வீங்கத் தவ நெடிது
ஆயினை, 82-3
புத்தேளிர் கோட்டம் வலம்
செய்து இவனொடு 82-4
புக்க வழி எல்லாம் கூறு; 82-5
கூறுவேன்; மேயாயே போல
வினவி, வழிமுறைக் 82-6
காயாமை வேண்டுவல் யான்; 82-7
காயேம்; 82-8
மடக் குறு மாக்களோடு ஓரை
அயரும் 82-9
அடக்கம் இல் போழ்தின் கண்,
தந்தை காமுற்ற 82-10
தொடக்கத்துத் தாய் உழை
புக்காற்கு, அவளும் 82-11
மருப்புப் பூண் கையுறை ஆக
அணிந்து - 82-12
'பெருமான்! நகை முகம்
காட்டு' என்பாள், கண்ணீர்
82-13
சொரி முத்தம் காழ் சோர்வ
போன்றன; மற்றும், 82-14
வழிமுறைத் தாய் உழைப்
புக்காற்கு, அவளும் 82-15
மயங்கு நோய் தாங்கி, மகன்
எதிர் வந்து, 82-16
முயங்கினள் முத்தினள்
நோக்கி, நினைந்தே, 82-17
'நினக்கு யாம் யாரேம்
ஆகுதும்?' என்று, 82-18
வனப்பு உறக் கொள்வன நாடி
அணிந்தனள், 82-19
ஆங்கே, 'அரி மதர் உண் கண்
பசப்ப நோய் செய்யும் 82-20
பெருமான் பரத்தைமை ஒவ்வாத'
என்றாள்; 82-21
அவட்கு இனிது ஆகி
விடுத்தனன் போகித் 82-22
தலைக் கொண்டு நம்மொடு
காயும் மற்று ஈது ஓர் 82-23
புலத் தகை புத்தேள் இல்
புக்கான்- அலைக்கு ஒரு 82-24
கோல் தா; நினக்கு அவள் யார்
ஆகும்? - எல்லா! 82-25
வருந்தி யாம் நோய் கூர,
நுந்தையை என்றும் 82-26
பருந்து எறிந்தற்று ஆகக்
கொள்ளும்; கொண்டாங்கே 82-27
தொடியும் உகிரும் படை ஆக
நுந்தை 82-28
கடி உடை மார்பின் சிறு
கண்ணும் உட்காள், 82-29
வடுவும் குறித்தாங்கே
செய்யும்; விடு, இனி; 82-30
அன்ன பிறவும், பெருமான்
அவள் வயின் 82-31
துன்னுதல் ஓம்பித், திறவது
இல் முன்னி, நீ 82-32
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய,
எம் போலக் 82-33
கையாறு உடையவர் இல்
அல்லால் செல்லல்; 82-34
அமைந்தது; இனி நின் தொழில்.
82-35
***
பெரு திரு நிலைஇய வீங்கு
சோற்று அகல் மனைப், 83-1
பொருந்து நோன் கதவு
ஒற்றிப் புலம்பி, யாம் உலமர
83-2
இளையவர் தழூஉ ஆடும் எக்கர்
வாய் வியன் தெருவின் 83-3
விளையாட்டிக் கொண்டு
வரற்கு எனச் சென்றாய், 83-4
உளைவு இலை; ஊட்டலென் தீம்
பால் பெருகும் அளவு
எல்லாம் 83-5
நீட்டித்த காரணம் என்? 83-6
கேட்டீ - 83-7
பெரு மடல் பெண்ணைப்
பிணர்த் தோட்டுப் பைங்
குரும்பைக் 83-8
குட வாய்க் கொடிப் பின்னல்
வாங்கித், தளரும் 83-9
பெரு மணித் திண் தேர்க்
குறுமக்கள் நாப்பண், 83-10
அகல் நகர் மீள்தருவான்
ஆகப், புரி ஞெகிழ்பு 83-11
நீல நிரைப் போது உறு காற்கு
உலைவன போல், 83-12
சாலகத்து ஒல்கிய கண்ணர்,
'உயர் சீர்த்தி 83-13
ஆல் அமர் செல்வன் அணி சால்
மகன் விழாக் 83-14
கால்கோள்' என்று ஊக்கிக்,
கதுமென நோக்கித், 83-15
திருந்து அடி நூபுரம்
ஆர்ப்ப இயலி, விருப்பினால்
83-16
'கண்ணும், நுதலும், கவுளும்,
கவவியார்க்கு, 83-17
ஒண்மை எதிரிய அம் கையும்,
தண் எனச் 83-18
செய்வன சிறப்பின்
சிறப்புச் செய்து, இவ் இரா
83-19
எம்மொடு சேர்ந்து
சென்றீவாயால்; செம்மால்!
83-20
நலம் புதிது உண்டு உள்ளா
நாண் இலி செய்த 83-21
புலம்பு எலாம்
தீர்க்குவேம்மன், என்று
இரங்குபு, 83-22
வேற்று ஆனாத் தாயர்
எதிர்கொள்ள, மாற்றாத 83-23
கள்வனால் தங்கியது,
அல்லால், கதியாதி, 83-24
ஒள் இழாய்! யான் தீது இலேன்;
83-25
எள்ளலான், அம் மென் பணை
தோள் நுமர் வேய்ந்த
கண்ணியோடு 83-26
எம் இல் வருதியோ? எல்லா! நீ;
தன் மெய்க் கண் 83-27
அம் தீம் சொல் நல்லார்
அணிந்த கலம் காட்டி, 83-28
முந்தை இருந்து மகன் செய்த
நோய்த் தலை, 83-29
'வெந்த புண் வேல்
எறிந்தற்றால்' வடுவொடு 83-30
தந்தையும் வந்து நிலை. 83-31
***
உறு வளி தூக்கும் உயர் சினை
மாவின் 84-1
நறு வடி ஆர் இற்றவை போல்
அழியக், 84-2
கரந்து யான் அரக்கவும், கை
நில்லா வீங்கிச், 84-3
சுரந்த என் மெல் முலைப்
பால் பழுது ஆக - நீ 84-4
நல் வாயில் போத்தந்த
பொழுதினான், 'எல்லா! 84-5
கடவுள் கடி நகர் தோறும்
இவனை 84-6
வலம் கொளீஇ வா' எனச்,
சென்றாய், விலங்கினை 84-7
ஈரம் இலாத இவன் தந்தை
பெண்டிருள் 84-8
யார் இல் தவிர்ந்தனை?
கூறு; 84-9
நீருள் அடை மறை ஆய் இதழ்ப்
போது போல் கொண்ட 84-10
குடை நிழல் தோன்றும் நின்
செம்மலைக் காணூஉ 84-11
'இவன் மன்ற, யான் நோவ உள்ளம்
கொண்டு, உள்ளா 84-12
மகன் அல்லான் பெற்ற மகன்'
என்று அகல் நகர் 84-13
வாயில் வரை இறந்து
போத்தந்து, தாயர் 84-14
தெருவில் தவிர்ப்பத்
தவிர்ந்தனன்; மற்று, அவர்
84-15
தம் தம் கலங்களுள், 'கையுறை'
என்று இவற்கு, 84-16
ஒத்தவை ஆராய்ந்து,
அணிந்தார்; 'பிறன் பெண்டிர்
84-17
ஈத்தவை கொள்வான் ஆம், இஃது
ஒத்தன்; சீத்தை! 84-18
செறு தக்கான் மன்ற
பெரிது'; 84-19
சிறு பட்டி! ஏதிலார் கை,
எம்மை எள்ளுபு நீ தொட்ட 84-20
மோதிரம் யாவோ? யாம்
காண்கு; 84-21
அவற்றுள், நறா இதழ் கண்டன்ன
செவ் விரற்கு ஏற்பச் 84-22
சுறா ஏறு எழுதிய மோதிரம்
தொட்டாள்; 84-23
குறி அறிந்தேன்; 'காமன்
கொடி எழுதி, என்றும் 84-24
செறியாப் பரத்தை இவன்
தந்தை மார்பில் 84-25
பொறி ஒற்றிக் கொண்டு
ஆள்வல்' என்பது தன்னை 84-26
அறீஇய செய்த வினை; 84-27
அன்னையோ? இஃது ஒன்று; 84-28
முந்தைய கண்டும்
எழுகல்லாத என் முன்னர் 84-29
வெந்த புண் வேல்
எறிந்தற்றா, இஃது ஒன்று; 84-30
தந்தை இறைத் தொடி மற்று
இவன் தன் கைக் கண் 84-31
தந்தார் யார், எல்லாஅ! இது?
84-32
இஃது ஒன்று, என் ஒத்துக்
காண்க, பிறரும் இவற்கு
என்னும் 84-33
தன் நலம் பாடுவி, தந்தாளா?
நின்னை, 84-34
இது தொடுக என்றவர் யார்?
84-35
அஞ்சாதி; நீயும் தவறு இலை;
நின் கை இது தந்த 84-36
பூ எழில் உண் கண் அவளும்
தவறு இலள்! 84-37
வேனில் புனல் அன்ன
நுந்தையை நோவார் யார்? 84-38
மேல் நின்றும் எள்ளி, இது
இவன் கைத் தந்தாள் - 84-39
தான் யாரோ? என்று வினவிய,
நோய்ப்பாலேன் 84-40
யானே தவறு உடையேன்! 84-41
***
காலவை, சுடு பொன் வளைஇய ஈர்
அமை சுற்றொடு 85-1
பொடி அழல் புறம் தந்த
செய்வுறு கிண்கிணி; 85-2
உடுத்தவை கைவினைப்
பொலிந்த காசு அமை பொலம்
காழ் மேல் 85-3
மை இல் செந் துகிர்க் கோவை
அவற்றின் மேல் 85-4
தைஇய பூந் துகில் ஐது கழல்
ஒரு திரை 85-5
கையதை, அலவன் கண் பெற
அடங்கச் சுற்றிய 85-6
பல உறு கண்ணுள் சில கோல்
அவிர் தொடி; 85-7
பூண்டவை, எறியா வாளும்
எற்றா மழுவும் 85-8
செறியக் கட்டி ஈர் இடைத்
தாழ்ந்த 85-9
பெய் புல மூதாய்ப் புகர்
நிறத் துகிரின் 85-10
மை அற விளங்கிய ஆன் ஏற்று
அவிர் பூண்; 85-11
சூடின, இரும் கடல்
முத்தமும் பல் மணி பிறவும்
ஆங்கு 85-12
ஒருங்கு உடன் கோத்த உருள்
அமை மூக் காழ் மேல் 85-13
சுரும்பு ஆர் கண்ணிக்குச்
சூழ் நூல் ஆக 85-14
அரும்பு அவிழ் நீலத்து ஆய்
இதழ் நாணச் 85-15
சுரும்பு ஆற்றுப்படுத்த
மணி மருள் மாலை; 85-16
ஆங்க, அவ்வும் பிறவும்
அணிக்கு அணி ஆக நின் 85-17
செல்வு உறு திண் தேர்
கொடும் சினை கைப்
பற்றிப் 85-18
பைபயத் தூங்கும் நின் மெல்
விரல் சீறடி 85-19
நோதலும் உண்டு ஈங்கு என் கை
வந்தீ 85-20
செம்மால் நின் பால்
உண்ணிய; 85-21
பொய் போர்த்துப், பாண் தலை
இட்ட பல வல் புலையனைத் 85-22
தூண்டிலா விட்டுத்
துடக்கித் தான் வேண்டியார்
85-23
நெஞ்சம் பிணித்தல்
தொழிலாத் திரிதரும் 85-24
நுந்தை பால் உண்டி சில; 85-25
நுந்தை வாய், மாயச் சூள்
தேறி மயங்கு நோய் கைமிகப்
85-26
பூ எழில் உண் கண் பனி
பரப்பக் கண் படா 85-27
ஞாயர் பால் உண்டி சில; 85-28
அன்னையோ, யாம் எம் மகனைப்
பாராட்ட கதுமெனத் 85-29
தாம் வந்தார் தம் பால்
அவரொடு தம்மை 85-30
வருக என்றார் யார் கொல்லோ
ஈங்கு; 85-31
என் பாலல், பாராட்டு
உவந்தோய் குடி உண்டீத்தை
என் 85-32
பாராட்டைப் பாலோ சில; 85-33
செரு குறித்தாரை உவகைக்
கூத்தாட்டும் 85-34
வரிசைப் பெரு பாட்டொடு
எல்லாம் பருகீத்தை 85-35
தண்டுவென் ஞாயர் மாட்டைப்
பால். 85-36
***
மை படு சென்னி மழ களிற்று
ஓடை போல், 86-1
கை புனை முக் காழ் கயம்
தலைத் தாழப், 86-2
பொலம் செய் மழுவொடு வாள்
அணி கொண்ட 86-3
நலம் கிளர் ஒள் பூண்
நனைத்தரும் அவ் வாய் 86-4
கலந்து கண் நோக்கு ஆரக்,
காண்பு இன் துகிர் மேல் 86-5
பொலம் புனை செம் பாகம் போர்
கொண்டு இமைப்பக், 86-6
கடி அரணம் பாயா நின் கை
புனை வேழம், 86-7
தொடியோர் மணலின் உழக்கி,
அடி ஆர்ந்த 86-8
தேரை வாய்க் கிண்கிணி
ஆர்ப்ப, இயலும் என் 86-9
போர் யானை, வந்தீக, ஈங்கு;
86-10
செம்மால்! வனப்பு எலாம்
நுந்தையை ஒப்பினும்,
நுந்தை 86-11
நிலைப் பாலுள் ஒத்த குறி
என் வாய்க் கேட்டு ஒத்தி;
86-12
கன்றிய தெவ்வர்க் கடந்து
களம் கொள்ளும் 86-13
வென்றி மாட்டு ஒத்தி;
பெரும! - மற்று ஒவ்வாதி, 86-14
'ஒன்றினேம் யாம்' என்று
உணர்ந்தாரை, நுந்தை போல்,
86-15
மென் தோள் நெகிழ விடல்; 86-16
பால் கொளல் இன்றிப், பகல்
போல் முறைக்கு ஒல்கா 86-17
கோல் செம்மை ஒத்தி, பெரும! -
மற்று ஒவ்வாதி 86-18
கால் பொரு பூவின் கவின்
வாட, நுந்தை போல், 86-19
சால்பு ஆய்ந்தார் சாய
விடல்; 86-20
வீதல் அறியா விழுப் பொருள்
நச்சியார்க்கு 86-21
ஈதல் மாட்டு ஒத்தி, பெரும!
மற்று ஒவ்வாதி, 86-22
மாதர் மெல் நோக்கின்
மகளிரை, நுந்தை போல். 86-23
நோய் கூர நோக்காய் விடல்;
86-24
ஆங்க, 86-25
திறன் அல்ல யாம் கழற, யாரை
நகும், இம் 86-26
மகன் அல்லான் பெற்ற மகன்;
86-27
மறை நின்று, தாம் மன்ற
வந்தீத்தனர்; 86-28
'ஆய் இழாய்! தாவாத எனக்குத்
தவறு உண்டோ காவாது ஈங்கு
86-29
ஈத்தை, இவனை யாம்
கோடற்குச், சீத்தை, யாம் 86-30
கன்றி அதனைக் கடியவும், கை
நீவிக், 86-31
குன்ற இறுவரைக் கோண்மா
இவர்ந்தாங்குத், 86-32
தந்தை வியல் மார்பில்
பாய்ந்தான் - அறன் இல்லா 86-33
அன்பு இலி பெற்ற மகன். 86-34
***
ஒரூஉ நீ; எம் கூந்தல்
கொள்ளல் - யாம் நின்னை 87-1
வெரூஉதும், காணும் கடை; 87-2
தெரி இழாய்! செய் தவறு இல்
வழி, யாங்குச் சினவுவாய், 87-3
மெய் பிரிந்தன்னவர்
மாட்டு? 87-4
ஏடா! நினக்குத் தவறு உண்டோ ?
நீ வீடு பெற்றாய்; 87-5
இமைப்பின் இதழ் மறைபு
ஆங்கே கெடுதி; 87-6
நிலைப் பால் அறியினும்,
நின் நொந்து நின்னைப் 87-7
புலப்பார் உடையர் தவறு; 87-8
அணைத் தோளாய்! தீயாரைப்
போலத் திறன் இன்று
உடற்றுதி; 87-9
காயும் தவறு இலேன் யான்;
87-10
மான் நோக்கி! நீ அழ
நீத்தவன் ஆனாது 87-11
நாண் இலன் ஆயின், நலிதந்து
அவன் வயின் 87-12
ஊடுதல் என்னோ, இனி? 87-13
'இனி யாதும் மீக்கூற்றம்
யாம் இலம்' என்னும் 87-14
தகையது காண்டைப்பாய்,
நெஞ்சே! பனி ஆனாப் 87-15
பாடு இல் கண் பாயல் கொள! 87-16
***
ஒரூஉக்! கொடி இயல் நல்லார்
குரல் நாற்றத்து உற்ற 88-1
முடி உதிர் பூந் தாது
மொய்ம்பின ஆகத், 88-2
தொடிய, எமக்கு நீ யாரை?
பெரியார்க்கு 88-3
அடியரோ, ஆற்றாதவர்? 88-4
கடியர் தமக்கு, யார்
சொல்லத் தக்கார் மாற்று? 88-5
வினை கெட்டு, வாய் அல்லா
வெண்மை உரையாது, கூறு நின்
88-6
மாயம், மருள்வார் அகத்து;
88-7
ஆய் இழாய்! நின் கண் பெறின்
அல்லால், இன் உயிர்
வாழ்கல்லா 88-8
என் கண் எவனோ, தவறு? 88-9
இஃது ஒத்தன்! புள்ளிக்
களவன் புனல் சேர்
பொதுக்கம் போல் 88-10
வள் உகிர் போழ்ந்தனவும்,
வாள் எயிறு உற்றனவும், 88-11
ஒள் இதழ் சோர்ந்த நின்
கண்ணியும், நல்லார் 88-12
சிரறுபு சீறச் சிவந்த நின்
மார்பும், 88-13
தவறு ஆதல் சாலாவோ? கூறு; 88-14
அது தக்கது; வேற்றுமை என்
கண்ணோ ஓராதி; தீது இன்மை 88-15
தேற்றக் கண்டீயாய்;
தெளிக்கு; 88-16
இனி தேற்றேம் யாம்; 88-17
தேர் மயங்கி வந்த தெரி கோதை
அம் நல்லார் 88-18
தார் மயங்கி வந்த தவறு
அஞ்சிப், போர் மயங்கி, 88-19
நீ உறும் பொய்ச் சூள்
அணங்கு ஆகின், மற்று இனி 88-20
யார் மேல் விளியுமோ? கூறு.
88-21
***
யார் இவன்? எம் கூந்தல்
கொள்வான்? இதுவும் ஓர் 89-1
ஊராண்மைக்கு ஒத்த படிறு
உடைத்து; எம் மனை 89-2
வாரல் நீ; வந்தாங்கே மாறு;
89-3
என் இவை; ஓர் உயிர்ப்
புள்ளின் இரு தலையுள்
ஒன்று 89-4
போர் எதிர்ந்தற்றாப்
புலவல்; நீ கூறின், என் 89-5
ஆர் உயிர் நிற்கும் ஆறு
யாது? 89-6
ஏஎ! தெளிந்தேம் யாம்;
காயாதி - எல்லாம் வல் - எல்லா!
89-7
பெரும் காட்டுக்
கொற்றிக்குப் பேய்
நொடித்தாங்கு, 89-8
வருந்தல் நின் வஞ்சம்
உரைத்து; 89-9
மருந்து இன்று - மன்னவன்
சீறின், தவறு உண்டோ ? நீ
நயந்த 89-10
இன் நகை! தீதோ இலேன்; 89-11
மாண மறந்து உள்ளா நாண்
இலிக்கு இப் போர் 89-12
புறம் சாய்ந்து
காண்டைப்பாய் - நெஞ்சே!
உறழ்ந்து இவனைப் 89-13
பொய்ப்ப விடேஎம் என
நெருங்கின், தப்பினேன் 89-14
என்று அடி சேர்தலும்
உண்டு. 89-15
***
கண்டேன், நின் மாயம் களவு
ஆதல்; பொய்ந் நகா, 90-1
மண்டாத சொல்லித் தொடாஅல்;
தொடீஇய நின் 90-2
பெண்டிர் உளர் மன்னோ,
ஈங்கு? 90-3
ஒண் தொடி! நீ கண்டது எவனோ
தவறு? 90-4
கண்டது நோயும் வடுவும்
கரந்து, மகிழ் செருக்கிப்,
90-5
பாடு பெயல் நின்ற பானாள்
இரவில் - 90-6
தொடி பொலி தோளும்,
முலையும், கதுப்பும், 90-7
வடிவு ஆர் குழையும்,
இழையும், பொறையா 90-8
ஒடிவது போலும் நுசுப்போடு,
அடி தளரா 90-9
ஆராக் கவவின் ஒருத்தி
வந்து - அல்கல் தன் 90-10
சீர் ஆர் ஞெகிழம் சிலம்பச்,
சிவந்து, நின் 90-11
போர் ஆர் கதவம் மிதித்தது
அமையுமோ? 90-12
ஆய் இழை ஆர்க்கும் ஒலி
கேளா, அவ் எதிர் 90-13
தாழாது எழுந்து நீ சென்றது
அமையுமோ? 90-14
மாறாள் சினைஇ, அவள் ஆங்கே,
நின் மார்பில் 90-15
நாறு இணப் பைந் தார்
பரிந்தது அமையுமோ? 90-16
'தேறு நீ; தீயேன் அலேன்'
என்று மற்று அவள் 90-17
சீறு அடி தோயா இறுத்தது
அமையுமோ? 90-18
கூறு இனிக், காயேமா யாம்;
90-19
தேறின், பிறவும் தவறு இலேன்
யான்; 90-20
அல்கல் கனவு கொல் நீ
கண்டது? 90-21
கனை பெயல் தண் துளி வீசும்
பொழுதில் குறி வந்தாள் 90-22
கண்ட கனவு எனக், காணாது,
மாறு உற்றுப் - 90-23
பண்டைய அல்ல, நின் பொய்ச்
சூள், நினக்கு; எல்லா! - 90-24
நின்றாய், நின் புக்கில்
பல; 90-25
மென் தோளாய்! நல்கு, நின்
நல் எழில் உண்கு; 90-26
ஏடா! குறை உற்று நீ எம்
உரையல் - நின் தீமை 90-27
பொறை ஆற்றேம் என்றல்
பெறுதுமோ, யாழ 90-28
நிறை ஆற்றா நெஞ்சு
உடையேம்? 90-29
***
அரி நீர் அவிழ் நீலம்,
அல்லி, அனிச்சம், 91-1
புரி நெகிழ் முல்லை, நறவோடு
அமைந்த 91-2
தெரி மலர்க் கண்ணியும்
தாரும் நயந்தார் 91-3
பொரு முரண் சீறச் சிதைந்து,
நெருநையின் 91-4
இன்று நன்று, என்னை அணி; 91-5
அணை மென் தோளாய்! செய்யாத
சொல்லிச் சினவுவது ஈங்கு
எவன், 91-6
ஐயத்தால்? என்னை கதியாதி;
தீது இன்மை 91-7
தெய்வத்தான் - கண்டீ
தெளிக்கு; 91-8
மற்று அது, அறிவல், யான்
நின் சூள்; அனைத்து ஆக
நல்லார் 91-9
செறி தொடி உற்ற வடுவும்,
குறி பொய்த்தார் 91-10
கூர் உகிர் சாடிய மார்பும்,
குழைந்த நின் 91-11
தாரும், ததர் பட்ட
சாந்தமும், சேரி 91-12
அரி மதர் உண் கண்ணார்,
ஆராக் கவவின் 91-13
பரிசு அழிந்து யாழ நின்
மேனி கண்டு, யானும் 91-14
செரு ஒழிந்தேன்; சென்றீ,
இனி; 91-15
தெரி இழாய்! தேற்றாய்
சிவந்தனை - காண்பாய், நீ -
தீது இன்மை 91-16
ஆற்றின் நிறுப்பல்
பணிந்து; 91-17
அன்னதேல், ஆற்றல் காண்; 91-18
வேறுபட்டாங்கே கலுழ்தி;
அகப்படின், 91-19
மாறுபட்டாங்கே மயங்குதி;
யாது ஒன்றும் 91-20
கூறி உணர்த்தலும்
வேண்டாது, மற்று நீ 91-21
மாணா செயினும், மறுத்து,
ஆங்கே, நின் வயின் 91-22
காணின் நெகிழும் என்
நெஞ்சு ஆயின், என் உற்றாய்
91-23
பேணாய் நீ பெட்பச் செயல்?
91-24
***
புன வளர் பூங் கொடி
அன்னாய்! கழியக் 92-1
கனவு எனப்பட்டது ஓர்
காரிகை நீர்த்தே! 92-2
முயங்கிய நல்லார் முலை இடை
மூழ்கி, 92-3
மயங்கி, மற்று ஆண்டு
ஆண்டுச் சேறலும் செல்லாது,
92-4
உயங்கி இருந்தார்க்கு
உயர்ந்த பொருளும், 92-5
அரிதின் அறம் செய்யா,
ஆன்றோர் உலகும், 92-6
உரிதின் ஒருதலை எய்தலும் -
வீழ்வார்ப் 92-7
பிரிதலும், ஆங்கே
புணர்தலும், தம்மில் 92-8
தருதல் தகையாதால் மற்று;
92-9
நனவினால் போலும், நறு
நுதால்! அல்கல் 92-10
கனவினால் சென்றேன் - கலி
கெழு கூடல் 92-11
வரை உறழ் நீள் மதில் வாய்
சூழ்ந்த வையைக் 92-12
கரை அணி காவின் அகத்து; 92-13
உரை, இனி - தண்டாத் தீம்
சாயல் நெடுந்தகாய்! அவ்
வழிக் 92-14
கண்டது எவன் மற்று நீ? 92-15
கண்டது - உடன் அமர் ஆயமொடு,
அவ் விசும்பு ஆயும் 92-16
மட நடை மா இனம், அந்தி
அமையத்து, 92-17
இடன் விட்டு இயங்கா
இமையத்து ஒரு பால், 92-18
இறைகொண்டு இருந்தன்ன -
நல்லாரைக் கண்டேன்; 92-19
துறை கொண்டு உயர் மணல் மேல்
ஒன்றி நிறைவதை 92-20
ஓர்த்தது இசைக்கும் பறை
போல், நின் நெஞ்சத்து 92-21
வேட்டதே கண்டாய் கனா; 92-22
கேட்டை, விரையல் நீ; மற்று
வெகுள்வாய்! - உரை - ஆண்டு 92-23
இது ஆகும், இன் நகை நல்லாய்!
பொது ஆகத், 92-24
தாம் கொடி அன்ன தகையார்
எழுந்தது ஓர் 92-25
பூங் கொடி வாங்கி, இணர்
கொய்ய, ஆங்கே 92-26
சினை அலர் வேம்பின்
பொருப்பன் பொருத 92-27
முனை அரண் போல உடைந்தன்று,
அக் காவில் 92-28
துனை வரி வண்டின் இனம்; 92-29
மற்று ஆங்கே, நேர் இணர்
மூசிய வண்டு எல்லாம் அவ்
வழிக் 92-30
காரிகை நல்லார் நலம்
கவர்ந்து உண்ப போல்
ஓராங்கு மூச, 92-31
அவருள், 92-32
ஒருத்தி, செயல் அமை கோதை
நகை, 92-33
ஒருத்தி, இயல் ஆர் செருவில்
தொடியொடு தட்ப, 92-34
ஒருத்தி, தெரி முத்தம்
சேர்ந்த திலகம், 92-35
ஒருத்தி, அரி மாண் அவிர்
குழை ஆய் காது வாங்க, 92-36
ஒருத்தி, வரி ஆர் அகல்
அல்குல் காழகம், 92-37
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து
அணி சுறாத் தட்ப, 92-38
ஒருத்தி, புலவியால்
புல்லாது இருந்தாள்,
அலவுற்று 92-39
வண்டு இனம் ஆர்ப்ப, இடை
விட்டுக் காதலன் 92-40
தண் தார் அகலம் புகும்; 92-41
ஒருத்தி, அடி தாழ் கலிங்கம்
தழீஇ, ஒரு கை 92-42
முடி தாழ் இரும் கூந்தல்
பற்றிப், பூ வேய்ந்த 92-43
கடி கயம் பாயும், அலந்து;
92-44
ஒருத்தி, கணம் கொண்டு அவை
மூசக், கை ஆற்றாள், பூண்ட 92-45
மணம் கமழ் கோதை பரிபு
கொண்டு, ஓச்சி 92-46
வணங்கு காழ் வங்கம்
புகும்; 92-47
ஒருத்தி, இறந்த களியான்
இதழ் மறைந்த கண்ணள், 92-48
பறந்தவை மூசக் கடிவாள்,
கடியும் 92-49
இடம் தேற்றாள் சோர்ந்தனள்,
கை; 92-50
ஆங்க, கடி காவில் கால் ஒற்ற,
ஒல்கி ஒசியாக் 92-51
கொடி கொடி தம்மில்
பிணங்கியவை போல், 92-52
தெரி இழை ஆர்ப்ப மயங்கி
இரிவுற்றார் வண்டிற்கு 92-53
வண்டலவர்; கண்டேன், யான்;
92-54
நின்னை நின் பெண்டிர்
புலந்தனவும், நீ அவர் 92-55
முன் அடி ஒல்கி
உணர்த்தினவும், பல் மாண்
92-56
கனவின் தலையிட்டு உரையல்;
சினைஇ யான் 92-57
செய்வது இல் என்பதோ?
கூறு; 92-58
பொய் கூறேன் - அன்ன வகையால்
யான் கண்ட கனவு தான் 92-59
நல் வாயாக் காண்டை - நறு
நுதால்! பல் மாணும் 92-60
கூடிப் புணர்ந்தீர்!
பிரியன்மின்; நீடிப் 92-61
பிரிந்தீர்! புணர் தம்மின்,
என்பன போல 92-62
அரும்பு அவிழ் பூஞ் சினை
தோறும் இரும் குயில் 92-63
ஆனாது அகவும் பொழுதினான்,
மேவர, 92-64
நான்மாடக்கூடல் மகளிரும்
மைந்தரும் 92-65
தேன் இமிர் காவில்
புணர்ந்து இருந்து
ஆடுமார், 92-66
ஆனா விருப்போடு அணி அயர்ப,
காமற்கு 92-67
வேனில் விருந்து
எதிர்கொண்டு. 92-68
***
வண்டு ஊது சாந்தம் வடுக்
கொள நீவிய, 93-1
தண்டாத் தீம் சாயல் பரத்தை,
வியல் மார்ப! 93-2
பண்டு, இன்னை அல்லைமன்;
ஈங்கு எல்லி வந்தீயக், 93-3
கண்டது எவன்? மற்று உரை; 93-4
நன்றும், தடைஇய மென்
தோளாய்! கேட்டீவாய் ஆயின் -
93-5
உடன் உறை வாழ்க்கைக்கு
உதவி உறையும் 93-6
கடவுளர் கண் தங்கினேன்; 93-7
சோலை மலர் வேய்ந்த மான்
பிணை அன்னார் பலர், நீ 93-8
கடவுண்மை கொண்டு
ஒழுகுவார்; 93-9
அவருள், எக் கடவுள்? மற்று
அக் கடவுளைச் செப்பீமன்; 93-10
முத்து ஏர் முறுவலாய் நாம்
மணம் புக்கக் கால் 93-11
இப் போழ்து போழ்து என்று
அது வாய்ப்பக் கூறிய 93-12
அக் கடவுள், மற்று அக்
கடவுள்; - அது ஒக்கும் 93-13
நாவுள் அழுந்து தலை
சாய்த்து நீ கூறும் 93-14
மாயமோ;
கைப்படுக்கப்பட்டாய், நீ;
கண்டாரை 93-15
வாய் ஆக யாம் கூற
வேட்டீவாய்! கேள் இனி; 93-16
பெறல் நசை வேட்கையின் நின்
குறி வாய்ப்பப், 93-17
பறி முறை நேர்ந்த நகார்
ஆகக், கண்டார்க்கு 93-18
இறு முறை செய்யும் உருவொடு,
நும் இல், 93-19
செறி முறை வந்த கடவுளைக்
கண்டாயோ? 93-20
நறும் தண் தகரமும் நானமும்
நாறும் 93-21
நெறிந்த குரல் கூந்தல்
நாள் அணிக்கு ஒப்ப, 93-22
நோக்கின் பிணி கொள்ளும்
கண்ணொடு, மேல் நாள், நீ 93-23
பூப் பலி விட்ட கடவுளைக்
கண்டாயோ? 93-24
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப்
படிவத்துச் 93-25
சூர் கொன்ற செவ்வேலான்
பாடிப், பல நாளும், 93-26
ஆராக் கனை காமம் குன்றத்து
நின்னொடு 93-27
மாரி இறுத்த கடவுளைக்
கண்டாயோ? 93-28
கண்ட கடவுளர் தம் உள்ளும்,
நின்னை 93-29
வெறி கொள் வியல் மார்பு
வேறு ஆகச் செய்து, 93-30
குறி கொளச் செய்தார் யார்?
செப்பு; மற்று, யாரும் 93-31
சிறு வரைத் தங்கின்
வெகுள்வர்; செறு தக்காய்!
93-32
தேறினேன்; சென்றீ; நீ
செல்லா விடுவாயேல், 93-33
நல் தார் அகலத்துக்கு ஓர்
சார மேவிய 93-34
நெட்டு இரும் கூந்தல்
கடவுளர் எல்லார்க்கும் 93-35
முட்டுப்பாடு ஆகலும்
உண்டு. 93-36
***
என் நோற்றனை கொல்லோ? - 94-1
நீர் உள் நிழல் போல்
நுடங்கிய மென் சாயல் 94-2
ஈங்கு உருச் சுருங்கி 94-3
இயலுவாய்! நின்னோடு
உசாவுவேன்; நின்றீத்தை; 94-4
அன்னையோ! காண் தகை இல்லாக்
குறள் நாழிப் போழ்தினான் 94-5
ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே!
நீ எம்மை 94-6
'வேண்டுவல்' என்று
விலக்கினை; நின் போல்வார்
94-7
தீண்டப் பெறுபவோ மற்று? 94-8
மாண்ட, எறித்த படை போல்
முடங்கி மடங்கி, 94-9
நெறித்துவிட்டன்ன நிறை
ஏரால், என்னைப் 94-10
பொறுக்கல்லா நோய்
செய்தாய்; பொறீஇ
நிறுக்கல்லேன்; 94-11
நீ நல்கின் உண்டு, என்
உயிர்; 94-12
குறிப்புக் காண் -
வல்லுப்பலகை எடுத்து
நிறுத்தன்ன 94-13
கல்லாக் குறள! கடும் பகல்
வந்து எம்மை, 94-14
'இல்லத்து வா' என, மெய்
கொளீஇ, எல்லா! நின் 94-15
பெண்டிர் உளர் மன்னோ?
கூறு; 94-16
நல்லாய் கேள்! உக்கத்து
மேலும் நடு உயர்ந்து வாள்
வாய 94-17
கொக்கு உரித்தன்ன கொடு
மடாய்! நின்னை யான் 94-18
புக்கு அகலம் புல்லின்,
நெஞ்சு ஊன்றும்; புறம்
புல்லின் 94-19
அக்குளுத்துப் புல்லலும்
ஆற்றேன்; அருளீமோ. 94-20
பக்கத்துப் புல்லச்
சிறிது; 94-21
போ, சீத்தை! மக்கள் முரியே!
நீ மாறு, இனித், தொக்க 94-22
மரக் கோட்டம் சேர்ந்து
எழுந்த பூங் கொடி போல, 94-23
நிரப்பம் இல் யாக்கை
தழீஇயினர், எம்மைப், 94-24
புரப்பேம் என்பாரும்
பலரால்; பரத்தை, என் 94-25
பக்கத்துப் புல்லீயாய்
என்னுமால்; தொக்க 94-26
உழுந்தினும் துவ்வாக்,
குறு வட்டா! நின்னின் 94-27
இழிந்ததோ, கூனின் பிறப்பு? -
கழிந்து ஆங்கே, 94-28
'யாம் வீழ்தும்' என்று தன்
பின் செலவும், உற்றீயாக் 94-29
கூனி குழையும் குழைவு
காண்; 94-30
யாமை எடுத்து
நிறுத்தற்றால், தோள்
இரண்டும் வீசி, 94-31
யாம் வேண்டேம் என்று
விலக்கவும், எம் வீழும் 94-32
காமர் நடக்கும் நடை காண் -
கவர் கணைச் 94-33
சாமனார் தம் முன் செலவு
காண்; 94-34
ஓஒ! காண், நம்முள் நகுதல்
தொடீஇயர், நம்முள் நாம் 94-35
உசாவுவம்; கோன் அடி
தொட்டேன்; 94-36
ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப!
அடங்கினேன்; ஏஎ! 94-37
பேயும் பேயும் துள்ளல்
உறும் எனக் 94-38
கோயில் உள் கண்டார் நகாமை
வேண்டுவல்; 94-39
தண்டாத் தகடு உருவ! வேறு
ஆகக் காவின் கீழ்ப் 94-40
போதர்; அகடு ஆரப் புல்லி
முயங்குவேம் - 94-41
துகள் தபு காட்சி
அவையத்தார் ஓலை 94-42
முகடு காப்பு
யாத்துவிட்டாங்கு. 94-43
***
நில், ஆங்கு; நில், ஆங்கு;
இவர்தரல் - எல்லா! நீ 95-1
நாறு இரும் கூந்தலார் இல்
செல்வாய், இவ் வழி 95-2
ஆறு மயங்கினை போறி! நீ
வந்தாங்கே 95-3
மாறு; இனி நின் ஆங்கே நின்,
சே அடி சிவப்பச், 95-4
செறிந்து ஒளிர் வெண்
பல்லாய்! யாம் வேறு இயைந்த
95-5
குறும்பூழ் போர் கண்டேம்;
அனைத்தல்லது, யாதும் 95-6
அறிந்ததோ இல்லை, நீ வேறு
ஓர்ப்பது; 95-7
குறும்பூழ்ப் போர் கண்டமை
கேட்டேன், நீ என்றும்; 95-8
புதுவன ஈகை வளம் பாடிக்,
காலின் 95-9
பிரியாக் கவி கை புலையன்
தன் யாழின் 95-10
இகுத்த செவி சாய்த்து, இனி
இனிப் பட்டன 95-11
ஈகைப் போர் கண்டாயும் போறி;
மெய் எண்ணின், 95-12
தபுத்த புலர்வு இல புண்;
95-13
ஊரவர் கவ்வை உளைந்து ஈயாய்,
அல்கல் நின் 95-14
தாரின் வாய்க் கொண்டு
முயங்கிப், பிடி மாண்டு, 95-15
போர் வாய்ப்பக் காணினும்
போகாது கொண்டு, ஆடும் 95-16
பார்வைப் போர் கண்டாயும்
போறி; நின் தோள் மேலாம் 95-17
ஈரம் ஆய் விட்டன புண்; 95-18
கொடிற்றுப் புண் செய்யாது,
மெய்ம் முழுதும் கையின் 95-19
துடைத்து, நீ வேண்டினும்
வெல்லாது கொண்டு, ஆடும் 95-20
ஒட்டிய போர் கண்டாயும்
போறி; முகம் தானே 95-21
கொட்டிக் கொடுக்கும்
குறிப்பு; 95-22
ஆயின், ஆய் இழாய்! அன்னவை
யான் ஆங்கு அறியாமை 95-23
போற்றிய, நின் மெய்
தொடுகு; 95-24
அன்னையோ! மெய்யைp பொய்
என்று மயங்கிய, கை ஒன்று, 95-25
அறிகல்லாய் போறி காண், நீ;
95-26
நல்லாய்! பொய் எல்லாம்
ஏற்றிt, தவறு தலைப்பெய்து,
95-27
கையொடு கண்டாய்;
பிழைத்தேன்; அருள் இனி; 95-28
அருளுகம் யாம்; யாரேம்;
எல்லா! தெருள? 95-29
அளித்து நீ பண்ணிய பூழ்
எல்லாம் - இன்னும் 95-30
விளித்து, நின் பாணனோடு
ஆடி, அளித்தி - 95-31
விடலை நீ நீத்தலின், நோய்
பெரிது ஏய்க்கும்; 95-32
நடலைப்பட்டு, எல்லாம் நின்
பூழ். 95-33
***
ஏந்து எழில் மார்ப! எதிர்
அல்ல, நின் வாய் சொல்; 96-1
பாய்ந்து ஆய்ந்த தானைப்
பரிந்து ஆனா மைந்தினை; 96-2
சாந்து அழி வேரை; சுவல்
தாழ்ந்த கண்ணியை; 96-3
யாங்குச் சென்று, ஈங்கு
வந்தீத்தந்தாய்? கேள், இனி;
96-4
ஏந்தி, எதிர் இதழ் நீலம்
பிணைந்தன்ன கண்ணாய்! 96-5
குதிரை வழங்கி வருவல்; 96-6
அறிந்தேன், குதிரை தான்!
96-7
பால் பிரியா ஐங்கூந்தல்
பல் மயிர்க் கொய் சுவல், 96-8
மேல் விரித்து யாத்த
சிகழிகைச் செவ் உளை, 96-9
நீல மணிக் கடிகை வல்லிகை,
யாப்பின் கீழ் 96-10
ஞால் இயல் மெல் காதின்
புல்லிகைச் சாமரை, 96-11
மத்திகைக் கண்ணுறை ஆகக்
கவின் பெற்ற 96-12
உத்தி ஒரு காழ், நூல்
உத்தரியத் திண் பிடி, 96-13
நேர் மணி நேர் முக் காழ்ப்
பல் பல கண்டிகைத், 96-14
தார் மணி பூண்ட தமனிய
மேகலை, 96-15
நூபுரப் புட்டில், அடியொடு
அமைத்து யாத்த 96-16
வார் பொலம் கிண்கிணி
ஆர்ப்ப இயற்றி, நீ, 96-17
காதலித்து ஊர்ந்த நின்
காமக் குதிரையை, 96-18
ஆய் சுதை மாடத்து, அணி நிலா
முற்றத்துள், 96-19
ஆதி கொளீஇய, அசையினை ஆகுவை,
96-20
வாதுவன்; வாழிய நீ; 96-21
சேகா! கதிர் விரி வைகலில்,
கை வாரூஉக் கொண்ட 96-22
மதுரைப் பெரு முற்றம் போல,
நின் மெய்க் கண் 96-23
குதிரையோ, வீறியது? 96-24
கூர் உகிர் மாண்ட
குளம்பின் அது; நன்றே 96-25
கோரமே - வாழி! - குதிரை; 96-26
வெதிர் உழக்கு நாழியால்
சேதிகைக் குத்தக் 96-27
குதிரை உடல் அணி போல, நின்
மெய்க் கண் 96-28
குதிரையோ, கவ்வியது? 96-29
சீத்தை! பயம் இன்றி ஈங்குக்
கடித்தது; நன்றே 96-30
வியமமே வாழி! - குதிரை; 96-31
மிக நன்று; இனி அறிந்தேன்,
இன்று நீ ஊர்ந்த குதிரை; 96-32
பெரு மணம் பண்ணி,
அறத்தினில் கொண்ட 96-33
பருமக் குதிரையோ அன்று;
பெரும! நின் 96-34
ஏதில் பெரும் பாணன் தூது
ஆட, ஆங்கே ஓர் 96-35
வாதத்தான் வந்த வளிக்
குதிரை; ஆதி 96-36
உரு அழிக்கும் அக் குதிரை
ஊரல்; நீ ஊரின், பரத்தை 96-37
பரியாக, வாதுவனாய், என்றும்
மற்று அச்சார்த் 96-38
திரி, குதிரை ஏறிய செல். 96-39
***
அன்னை; கடுஞ் சொல்
அறியாதாய் போல, நீ 97-1
என்னைப் புலப்பது,
ஒறுக்குவென் மன் யான் - 97-2
சிறுகாலை இற்கடை வந்து,
குறி செய்த 97-3
அவ் வழி என்றும் யான்
காணேன் திரிதர, 97-4
எவ் வழிப் பட்டாய் சமன் ஆக,
இவ் எள்ளல்; 97-5
முத்து ஏர் முறுவலாய்! நம்
வலைப் பட்டது ஓர் 97-6
புத்தி யானை வந்தது
காண்பான் யான் தங்கினேன்; 97-7
ஒக்கும்; 97-8
அவ் யானை, வனப்பு உடைத்து
ஆகலும் கேட்டேன்; 97-9
அவ் யானை தான் சுண்ண நீறு
ஆடி, நறு நறா நீர் உண்டு - 97-10
ஒள் நுதல் யாத்த திலக அவிர்
ஓடைத், 97-11
தொய்யில் பொறித்த வன முலை
வான் கோட்டுத், 97-12
தொய்யகம் தோட்டிக், குழை
தாழ் வடி மணி, 97-13
உத்தி பொறித்த புனை பூண்
பருமத்து - 97-14
முத்து ஏய்க்கும் வெண் பல்
நகை திறந்து, 97-15
நல் நகர் வாயில் கதவ வெளில்
சார்ந்து, 97-16
தன் நலம் காட்டித்,
தகையினால், கால் தட்டி
வீழ்க்கும், 97-17
தொடர் தொடர் ஆக வலந்து,
படர் செய்யும் 97-18
மென் தோள் தடக் கையின்
வாங்கித், தன் கண்டார் 97-19
நலம் கவளம் கொள்ளும் நகை
முக வேழத்தை, 97-20
இன்று கண்டாய் போல், எவன்
எம்மைப் பொய்ப்பது, நீ? 97-21
எல்லா! கெழீஇத், தொடி
செறித்த தோள் இணை, தத்திக்
97-22
தழீஇ கொண்டு ஊர்ந்தாயும்
நீ; 97-23
குழீஇ, அவாவினால்
தேம்புவார் இல் கடை ஆறா, 97-24
உவா அணி ஊர்ந்தாயும் நீ;
97-25
மிகாஅது, சீர்ப்பட உண்ட
சிறு களி ஏர் உண் கண் 97-26
நீர்க்கு விட்டு,
ஊர்ந்தாயும் நீ; 97-27
சார்ச் சார் நெறி தாழ்
இரும் கூந்தல் நின்
பெண்டிர் எல்லாம் 97-28
சிறு பாகர் ஆக சிரற்றாது,
மெல்ல, 97-29
விடாஅது நீ எம் இல்
வந்தாய்; அவ் யானை 97-30
கடாஅம் படும் இடத்து
ஓம்பு. 97-31
***
யாரை நீ எம் இல்
புகுதர்வாய்? ஓரும் 98-1
புதுவ மலர் தேரும் வண்டே
போல் - யாழ 98-2
வதுவை விழவு அணி வைகலும்
காட்டினையாய் - 98-3
மாட்டு மாட்டு ஓடி, மகளிர்
தரத் தரப், 98-4
பூட்டு மான் திண் தேர்
புடைத்த மறுகு எல்லாம் 98-5
பாட்டு ஆதல் சான்ற நின்
மாயப் பரத்தைமை - 98-6
காட்டிய வந்தமை
கைப்படுத்தேன் - பண்டு
எலாம் 98-7
கேட்டும் அறிவேன்மன்,
யான்; 98-8
தெரி கோதை அம் நல்லாய்!
தேறீயல் வேண்டும் - 98-9
பொரு கரை வாய் சூழ்ந்த பூ
மலி வையை 98-10
வரு புனல் ஆடத்
தவிர்ந்தேன்; பெரிது
என்னைச் 98-11
செய்யா மொழிவது எவன்? 98-12
ஓஒ! புனல் ஆடினாய் எனவும்
கேட்டேன்; புனல் ஆங்கே 98-13
நீள் நீர் நெறி கதுப்பு
வாரும் அறல் ஆக, 98-14
மாண் எழில் உண் கண்,
பிறழும் கயல் ஆகக், 98-15
கார் மலர் வேய்ந்த கமழ்
பூம் பரப்பு ஆக 98-16
நாணுச் சிறை அழித்து
நன்பகல் வந்த அவ் 98-17
யாணர் புதுப் புனல்
ஆடினாய், முன் மாலைப் 98-18
பாணன் புணை ஆகப் புக்கு;
98-19
ஆனாது, அளித்து அமர்
காதலோடு அப் புனல் ஆடி, 98-20
வெளிப்படு கவ்வையை யான்
அறிதல் அஞ்சிக், 98-21
குளித்து ஒழுகினாய்
எனவும் கேட்டேன்;
குளித்தாங்கே, 98-22
போர்த்த சினத்தான்
புருவத் திரை இடா, 98-23
ஆர்க்கும் ஞெகிழத்தான்
நன் நீர் நடை தட்பச் 98-24
சீர்த் தக வந்த புதுப்
புனல் நின்னைக் கொண்டு 98-25
ஈர்த்து உய்ப்பக் கண்டார்
உளர்; 98-26
ஈர்த்தது, உரை சால்
சிறப்பின் நின் நீர்
உள்ளம் வாங்கப், 98-27
புரை தீர் புதுப் புனல்
வெள்ளத்தின் இன்னும் 98-28
கரை கண்டதூ உம் இலை; 98-29
நிரை தொடீஇ! பொய்யா வாள்
தானைப், புனை கழல் கால்
தென்னவன் 98-30
வையைப் புதுப் புனல் ஆடத்
தவிர்ந்ததைத் 98-31
தெய்வத்தின் தேற்றித்
தெளிப்பேன்; பெரிது
என்னைச் 98-32
செய்யா மொழிவது எவன்; 98-33
மெய்யதை, மல்கு மலர்
வேய்ந்த மாயப் புதுப்
புனல் 98-34
பல் காலும் ஆடிய செல்வுழி,
ஒல்கிக் 98-35
களைஞரும் இல் வழிக் கால்
ஆழ்ந்து தேரோடு 98-36
இள மணலுள் படல் ஓம்பு - முளை
நேர் 98-37
முறுவலார்க்கு ஓர் நகை
செய்து. 98-38
***
நறவினை வரைந்தார்க்கும்
வரையார்க்கும், அவை
எடுத்து 99-1
அற வினை இன்புறூஉம்
அந்தணர் இருவரும் 99-2
திறம் வேறு செய்தியின்
நூல் நெறி பிழையாது, 99-3
குழவியைப் பார்த்து
உறூஉம் தாய் போல், உலகத்து
99-4
மழை சுரந்து அளித்து
ஓம்பும் நல் ஊழி
யாவர்க்கும் 99-5
பிழையாது வருதல் நின்
செம்மையின் தர, வாய்ந்த 99-6
இழை அணி கொடித் திண் தேர்
இன மணி யானையாய்! 99-7
அறன் நிழல் எனக் கொண்டாய்,
ஆய் குடை; அக் குடை 99-8
புற நிழல் கீழ்ப் பட்டாளோ,
இவள்? இவள் காண்டிகா- 99-9
பிறை நுதல் பசப்பு ஊரப்
பெரு விதுப்பு உற்றாளை! 99-10
பொய்யாமை நுவலும் நின்
செங்கோல்; அச் செங்கோலின்
99-11
செய் தொழில் கீழ்ப்
பட்டாளோ, இவள்? இவள்
காண்டிகா- 99-12
காம நோய் கடைக் கூட்ட
வாழும் நாள் முனிந்தாளை! 99-13
ஏமம் என்று இரங்கும், நின்
எறி முரசம்; அம் முரசின் 99-14
ஏமத்து இகந்தாளோ, இவள்?
இவள் காண்டிகா- 99-15
வேய் நலம் இழந்த தோள் கவின்
வாட இழப்பாளை! 99-16
ஆங்கு; 99-17
நெடிது சேண் இகந்தவை
காணினும் தான் உற்ற 99-18
வடுக் காட்டக், கண்
காணாதற்று ஆக, என் தோழி 99-19
தொடி கொட்ப நீத்த
கொடுமையைக் 99-20
கடிது என உணராமை கடிந்ததோ,
நினக்கே? 99-21
***
ஈண்டு நீர் மிசைத் தோன்றி
இருள் சீக்கும் சுடரே போல்,
100-1
வேண்டாதார் நெஞ்சு உட்க,
வெரு வந்த கொடுமையும், 100-2
நீண்டு தோன்று உயர் குடை
நிழல் என சேர்ந்தார்க்குக்
100-3
காண்தகு மதி என்னக் கதிர்
விடு தண்மையும், 100-4
மாண்ட நின் ஒழுக்கத்தால்
மறு இன்றி, வியன் ஞாலத்து
100-5
யாண்டோ ரும் தொழுது
ஏத்தும் இரங்கு இசை
முரசினாய்! 100-6
'ஐயம் தீர்ந்து யார்
கண்ணும் அரும் தவ முதல்வன்
போல் 100-7
பொய் கூறாய்' என நின்னைப்
புகழ்வது கெடாதோ தான்- 100-8
நல்கி நீ தெளித்த சொல் நசை
என தேறியாள் 100-9
பல் இதழ் மலர் உண் கண் பனி
மல்கக் காணும் கால்! 100-10
'சுரந்த வான்
பொழிந்தற்றாச் சூழ நின்று
யாவர்க்கும் 100-11
இரந்தது நசை வாட்டாய்'
என்பது கெடாதோ தான்- 100-12
கலங்கு அஞர் உற்று, நின்
கமழ் மார்பு நசைஇயாள் 100-13
இலங்கு கோல் அவிர் தொடி இறை
ஊரக் காணும் கால்! 100-14
'உறை வரை நிறுத்த கோல்
உயிர் திறம் பெயர்ப்பான்
போல், 100-15
முறை செய்தி' என நின்னை
மொழிவது கெடாதோ தான்- 100-16
அழி படர் வருத்த நின் அளி
வேண்டிக் கலங்கியாள் 100-17
பழி தபு வாள் முகம் பசப்பு
ஊரக் காணும் கால்! 100-18
ஆங்கு; 100-19
தொல் நலம் இழந்தோள், நீ
துணை எனப் புணர்ந்தவள்; 100-20
இன் உறல் வியன் மார்ப!
'இனையையால் கொடிது' என 100-21
நின்னை யான் கழறுதல்
வேண்டுமோ, 100-22
என்னோர்கள் இடும்பையும்
களைந்தீவாய் நினக்கே! 100-23
***
************* மருதக்கலி முற்றும்
*************