தளி பெறு தண் புலத்துத் தலை
பெயற்கு அரும்பு ஈன்று, 101-1
முளி முதல் பொதுளிய முள்
புற பிடவமும்; 101-2
களி பட்டான் நிலையே போல்
தடவுபு துடுப்பு ஈன்று, 101-3
ஞெலிபு உடன் நிரைத்த
ஞெகிழ் இதழ் கோடலும்; 101-4
மணி புரை உருவின காயாவும்;
பிறவும்; 101-5
அணி கொள மலைந்த கண்ணியர்-
தொகுபு உடன், 101-6
மாறு எதிர்கொண்ட தம்
மைந்துடன் நிறுமார், 101-7
சீறு அரு முன்பினோன்
கணிச்சி போல் கோடு சீஇ, 101-8
ஏறு தொழூஉப் புகுத்தனர்
இயைபு உடன் ஒருங்கு. 101-9
அவ் வழி, முழக்கு என, இடி என,
முன் சமத்து ஆர்ப்ப- 101-10
வழக்கு மாறு கொண்டு, வருபு
வருபு ஈண்டி- 101-11
நறையொடு துகள் எழ நல்லவர்
அணி நிற்பத், 101-12
துறையும், ஆலமும், தொல் வலி
மராஅமும், 101-13
முறை உளி பராஅய்ப்,
பாய்ந்தனர் தொழூஉ. 101-14
மேல் பாட்டு உலண்டின்
நிறன் ஒக்கும் புன் குருக்
கண் 101-15
நோக்கு அஞ்சான் பாய்ந்த
பொதுவனைச் சாக் குத்திக்,
101-16
கோட்டு இடைக் கொண்டு,
குலைப்பதன் தோற்றம் காண்-
101-17
அம் சீர் அசை இயல் கூந்தல்
கை நீட்டியான் 101-18
நெஞ்சம் பிளந்து இட்டு,
நேரார் நடுவண், தன் 101-19
வஞ்சினம் வாய்த்தானும்
போன்ம்! 101-20
சுடர் விரிந்தன்ன சுரி
நெற்றிக் காரி, 101-21
விடர் இயம் கண்ணிப்
பொதுவனைச் சாடிக், 101-22
குடர் சொரியக் குத்திக்,
குலைப்பதன் தோற்றம் காண்-
101-23
படர் அணி அந்திப், பசும்
கண் கடவுள் 101-24
இடரிய ஏற்று எருமை நெஞ்சு
இடந்து இட்டுக் 101-25
குடர் கூளிக்கு
ஆர்த்துவான் போன்ம்! 101-26
செவி மறை நேர் மின்னும்
நுண் பொறி வெள்ளைக் 101-27
கதன் அஞ்சான், பாய்ந்த
பொதுவனைச் சாடி, 101-28
நுதி நுனைக் கோட்டால்
குலைப்பதன் தோற்றம் காண்-
101-29
ஆர் இருள் என்னான், அரும்
கங்குல் வந்து, தன் 101-30
தாளின் கடந்து அட்டுத்,
தந்தையைக் கொன்றானைத் 101-31
தோளின் திருகுவான்
போன்ம்! 101-32
என ஆங்கு; 101-33
அணி மாலைக் கேள்வன்
தரூஉமார், ஆயர் 101-34
மணி மாலை ஊதும் குழல். 101-35
கடாஅக் களிற்றினும்
கண்ணஞ்சா ஏற்றை 101-36
விடாஅது நீ கொள்குவை ஆயின்,
படாஅகை 101-37
ஈன்றன ஆய மகள் தோள். 101-38
பகலிடக் கண்ணியன், பைதல்
குழலன், 101-39
சுவல் மிசைக் கோல் அசைத்த
கையன், அயலது, 101-40
கொல் ஏறு சாட
இருந்தார்க்கு, எம் பல்
இரும் 101-41
கூந்தல் அணை கொடுப்பேம்
யாம். 101-42
'கோளாளர் என் ஒப்பார் இல்'
என நம் ஆன் உள், 101-43
தாளாண்மை கூறும் பொதுவன்,
நமக்கு ஒரு நாள், 101-44
கேளாளன் ஆகாமை இல்லை; அவன்
கண்டு 101-45
வேளாண்மை செய்தன கண். 101-46
ஆங்கு, ஏறும் வருந்தின;
ஆயரும் புண் கூர்ந்தார்;
101-47
நாறு இரும் கூந்தல்
பொதுமகளிர் எல்லாரும் 101-48
முல்லை அம் தண் பொழில்
புக்கார், பொதுவரொடு, 101-49
எல்லாம் புணர் குறி
கொண்டு. 101-50
***
கண் அகல் இரு விசும்பில்
கதழ் பெயல் கலந்து ஏற்ற, 102-1
தண் நறு பிடவமும், தவழ்
கொடித் தளவமும், 102-2
வண்ண வண் தோன்றியும்,
வயங்கு இணர்க் கொன்றையும்,
102-3
அன்னவை பிறவும், பல் மலர்
துதையத் 102-4
தழையும் கோதையும் இழையும்
என்று இவை 102-5
தைஇயினர், மகிழ்ந்து திளைஇ
விளையாடும் 102-6
மட மொழி ஆயத்தவருள் இவள்
யார்- உடம்போடு 102-7
என் உயிர் புக்கவள்,
இன்று? 102-8
ஓஒ! இவள், 'பொரு புகல் நல்
ஏறு கொள்பவர் அல்லால், 102-9
திரு மா மெய் தீண்டலர்'
என்று கருமமா, 102-10
எல்லாரும் கேட்ப அறைந்து,
எப்பொழுதும் 102-11
சொல்லால் தரப்பட்டவள்.
102-12
'சொல்லுக, பாணியேம்'
என்றார்; 'அறைக' என்றார்;
பாரித்தார். 102-13
மாண் இழை ஆறு ஆகச் சாறு.
102-14
சாற்றுள், பெடை அன்னார் கண்
பூத்து, நோக்கும் வாய்
எல்லாம் 102-15
மிடை பெறின், நேராத்
தகைத்து. 102-16
தகை வகை மிசை மிசைப்
பாயியர் ஆர்த்து, உடன் 102-17
எதிர் எதிர் சென்றார் பலர்.
102-18
கொலை மலி சிலை செறி செயிர்
அயர் சினம் சிறந்து, 102-19
உருத்து எழுந்து ஓடின்று
மேல். 102-20
எழுந்தது துகள்; 102-21
ஏற்றனர் மார்பு; 102-22
கவிழ்ந்தன மருப்பு; 102-23
கலங்கினர் பலர். 102-24
அவருள், மலர்மலி புகல்எழ
அலர்மலி மணிபுரை
நிமிர்தோள் பிணைஇ 102-25
எருத்தோடு இமில் இடைத்
தோன்றினன், தோன்றி, 102-26
வருத்தினான் மன்ற, அவ்
ஏறு. 102-27
ஏறு எவ்வம் காணா எழுந்தார்-
எவன் கொலோ- 102-28
ஏறு உடை நல்லார்; பகை? 102-29
மடவரே நல் ஆயர் மக்கள்-
நெருநை, 102-30
அடல் ஏற்று எருத்து
இறுத்தார்க் கண்டும்,
மற்று இன்றும், 102-31
உடல் ஏறு கோள் சாற்றுவார்!
102-32
ஆங்கு இனித்; 102-33
தண்ணுமைப் பாணி தளராது
எழூஉக- 102-34
பண் அமை இன் சீர்
குரவையுள், தெள் கண்ணித்
102-35
திண் தோள், திறல் ஒளி, மாயப்
போர், மா மேனி, 102-36
அம் துவர் ஆடைப் பொதுவனோடு,
ஆய்ந்த 102-37
முறுவலாள் மென் தோள்
பாராட்டிச், சிறுகுடி 102-38
மன்றம் பரந்தது, உரை! 102-39
***
மெல் இணர்க் கொன்றையும்,
மென் மலர்க் காயாவும், 103-1
புல் இலை வெட்சியும்
பிடவும், தளவும், 103-2
குல்லையும், குருந்தும்,
கோடலும், பாங்கரும்- 103-3
கல்லவும், கடத்தவும் கமழ்
கண்ணி மலைந்தனர், 103-4
பல ஆன் பொதுவர்; கதழ் விடை
கோள் காண்மார்- 103-5
முல்லை முகையும்
முருந்தும் நிரைத்தன்ன 103-6
பல்லர், பெரு மழைக் கண்ணர்,
மடம் சேர்ந்த 103-7
சொல்லர், சுடரும் கனம்
குழைக் காதினர், 103-8
நல்லவர்- கொண்டார், மிடை;
103-9
அவர் மிடை கொள- 103-10
மணி வரை மருங்கின் அருவி
போல 103-11
அணி வரம்பு அறுத்த வெண்
கால் காரியும், 103-12
மீன் பூத்து அவிர் வரும்
அந்தி வான் விசும்பு போல்
103-13
வான் பொறி பரந்த புள்ளி
வெள்ளையும், 103-14
கொலைவன் சூடிய குழவித்
திங்கள் போல் 103-15
வளையுபு மலிந்த கோடு அணி
சேயும், 103-16
பொரு முரண் முன்பின் புகல்
ஏறு பல பெய்து- 103-17
அரிமாவும், பரிமாவும்,
களிறும், கராமும், 103-18
பெரு மலை விடர் அகத்து,
ஒருங்கு உடன் குழீஇ, 103-19
படு மழை ஆடும் வரை அகம்
போலும்- 103-20
கொடி நறை சூழ்ந்த தொழூஉ. 103-21
தொழுவினுள், புரிபு புரிபு
புக்க பொதுவரைத் 103-22
தெரிபு தெரிபு குத்தின,
ஏறு. 103-23
ஏற்றின், அரி பரிபு
அறுப்பன, சுற்றி, 103-24
எரி திகழ் கணிச்சியோன்
சூடிய பிறைக் கண் 103-25
உருவ மாலை போலக் 103-26
குருதிக் கோட்டொடு குடர்
வலந்தன; 103-27
கோட்டொடு சுற்றிக் குடர்
வலந்த ஏற்றின் முன் 103-28
ஆடி நின்று, அக்குடர்
வாங்குவான் பீடு காண்- 103-29
செந் நூல் கழி ஒருவன்
கைப்பற்ற, அந்நூலை 103-30
முந் நூலாக் கொள்வானும்
போன்ம்! 103-31
இகுளை! இஃது ஒன்று கண்டை;
இஃது ஒத்தன்; 103-32
கோட்டு இனத்து ஆயர் மகன்
அன்றே- மீட்டு ஒரான்- 103-33
போர் புகல் ஏற்றுப் பிணர்
எருத்தில் தத்துபு, 103-34
தார் போல் தழீஇயவன்! 103-35
இகுளை! இஃது ஒன்று கண்டை;
இஃது ஒத்தன்; 103-36
கோ இனத்து ஆயர் மகன் அன்றே-
ஓவான்- 103-37
மறை ஏற்றின் மேல் இருந்து
ஆடித் துறை அம்பி 103-38
ஊர்வான் போல் தோன்றும்
அவன்! 103-39
தொழீஇஇ! காற்றுப் போல வந்த
கதழ் விடைக் காரியை 103-40
ஊற்று களத்தே அடங்கக்
கொண்டு, அட்டு, அதன் 103-41
மேல் தோன்றி நின்ற பொதுவன்
தகை கண்டை- 103-42
ஏற்று எருமை நெஞ்சம்
வடிம்பின் இடந்து இட்டுச்
103-43
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட
ஞான்று இன்னன் கொல் 103-44
கூற்று என, உட்கிற்று, என்
நெஞ்சு! 103-45
இகுளை! இஃது ஒன்று கண்டை;
இஃது ஒத்தன்; 103-46
புல் இனத்து ஆயர் மகன்
அன்றே- புள்ளி 103-47
வெறுத்த வய வெள் ஏற்று
அம்புடைத் திங்கள் 103-48
மறுப் போல் பொருந்தியவன்!
103-49
ஓவா வேகமோடு உருத்துத் தன்
மேல் சென்ற 103-50
சேஎச் செவி முதல் கொண்டு,
பெயர்த்து ஒற்றும் 103-51
காயாம் பூங் கண்ணிப்
பொதுவன் தகை கண்டை- 103-52
மேவார் விடுத்தந்த
கூந்தல் குதிரையை 103-53
வாய் பகுத்து இட்டுப்
புடைத்த ஞான்று, இன்னன்
கொல் 103-54
மாயோன் என்று உட்கிற்று,
என் நெஞ்சு! 103-55
ஆங்கு, இரும் புலித்
தொழுதியும் பெரும் களிற்று
இனமும் 103-56
மாறு மாறு உழக்கியாங்கு
உழக்கிப், பொதுவரும் 103-57
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ
விட்டனர்- விட்டாங்கே 103-58
மயில் எருத்து உறழ் அணி மணி
நிலத்துப் பிறழப்- 103-59
பயில் இதழ் மலர் உண் கண்
103-60
மாதர் மகளிரும் மைந்தரும்
மைந்து உற்றுத் 103-61
தாது எரு மன்றத்து அயர்வர்,
தழூஉ. 103-62
கொல் ஏற்றுக் கோடு
அஞ்சுவானை மறுமையும் 103-63
புல்லாளே, ஆய மகள். 103-64
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர்
அல்லதை, 103-65
நெஞ்சு இலார் தோய்தற்கு
அரிய- உயிர் துறந்து- 103-66
நைவாரா ஆய மகள் தோள். 103-67
வளியா அறியா உயிர், காவல்
கொண்டு, 103-68
நளிவாய் மருப்பு அஞ்சும்
நெஞ்சினார் தோய்தற்கு 103-69
எளியவோ, ஆய மகள் தோள்? 103-70
விலை வேண்டார், எம் இனத்து
ஆயர் மகளிர்- 103-71
கொலை ஏற்றுக் கோட்டு இடைத்
தாம் வீழ்வார் மார்பின் 103-72
முலை இடைப் போலப்,
புகின். 103-73
ஆங்கு; 103-74
குரவை தழீஇ யாம், மரபுளி
பாடி, 103-75
தேயா விழுப் புகழ்த்
தெய்வம் பரவுதும்- 103-76
மாசு இல் வான் முந்நீர்ப்
பரந்த தொல் நிலம் 103-77
ஆளும் கிழமையொடு புணர்ந்த
103-78
எம் கோ வாழியர், இம் மலர்
தலை உலகே! 103-79
***
மலி திரை ஊர்ந்து தன் மண்
கடல் வௌவலின், 104-1
மெலிவு இன்றி மேல் சென்று,
மேவார் நாடு இடம்படப், 104-2
புலியொடு வில் நீக்கிப்,
புகழ் பொறித்த கிளர்
கெண்டை, 104-3
வலியினான் வணக்கிய, வாடாச்
சீர் தென்னவன் 104-4
தொல் இசை நட்ட குடியொடு
தோன்றிய 104-5
நல் இனத்து ஆயர், ஒருங்கு
தொக்கு, எல்லாரும்- 104-6
வான் உற ஓங்கிய வயங்கு
ஒளிர் பனைக் கொடிப் 104-7
பால் நிற வண்ணன் போல் பழி
தீர்ந்த வெள்ளையும், 104-8
பொரு முரண் மேம்பட்ட பொலம்
புனை புகழ் நேமித் 104-9
திரு மறு மார்பன் போல்
திறல் சான்ற காரியும், 104-10
மிக்கு ஒளிர் தாழ் சடை
மேவரும் பிறை நுதல் 104-11
முக்கண்ணான் உருவே போல்
முரண் மிகு குராலும், 104-12
மா கடல் கலக்குற மா கொன்ற
மடங்காப் போர் 104-13
வேல் வல்லான் நிறனே போல்
வெரு வந்த சேயும், ஆங்கு அப்
104-14
பொரு வரும்
பண்பினவ்வையும், பிறவும்
104-15
உருவப் பல் கொண்மூக்
குழீஇயவை போலப், 104-16
புரிபு புரிபு புகுத்தனர்,
தொழூஉ. 104-17
அவ் வழி, முள் எயிற்று ஏஎர்
இவளை பெறும், இது ஓர் 104-18
வெள் ஏற்று எருத்து
அடங்குவான். 104-19
ஒள் இழை, வாருறு கூந்தல்
துயில் பெறும், வை
மருப்பின் 104-20
காரி கதன் அந்ஜ்சான்
கொள்பவன்,- ஈர் அரி 104-21
வெரூஉப் பிணை மான்
நோக்கின் நல்லாள் பெறூஉம்,
இக் 104-22
குரூஉக் கண் கொலை ஏறு
கொள்வான்,- வரிக் குழை 104-23
வேய் உறழ் மென் தோள் துயில்
பெறும், வெந்துப்பின் 104-24
சேஎய் சினன் அஞ்சான்
சார்பவன்,- என்று ஆங்கு 104-25
அறைவனர், நல்லாரை, ஆயர்
முறையினால் 104-26
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி
போல், மிடை மிசைப் 104-27
பேணி நிறுத்தார் அணி. 104-28
அவ் வழி பறை எழுந்து
இசைப்பப், பல்லவர்
ஆர்ப்பக், 104-29
குறையா மைந்தர் கோள் எதிர்
எடுத்த- 104-30
நறை வலம் செய விடா இறுத்தன
ஏறு. 104-31
அவ் ஏற்றின், 104-32
மேல் நிலை மிகல் இகலின்,
மிடை கழிபு இழிபு, மேல்
சென்று, 104-33
வேல் நுதி புரை விறல் திறன்
நுதி மருப்பின் மாறு
அஞ்சான், 104-34
பால் நிற வெள்ளை
எருத்தத்து பாய்ந்தானை 104-35
நோனாது குத்தும் இளம்
காரித் தோற்றம் காண்- 104-36
பால் மதி சேர்ந்த அரவினைக்
கோள் விடுக்கும் 104-37
நீல் நிற வண்ணனும் போன்ம்.
104-38
இரிபு எழுபு அதிர்பு
அதிர்பு இகந்து உடன் பலர்
நீங்க, 104-39
அரிபு அரிபு இறுபு இறுபு
குடர் சோரக் குத்தித் தன்
104-40
கோடு அழியக் கொண்டானை
ஆட்டித் திரிபு உழக்கும்
104-41
வாடில் வெகுளி எழில் ஏறு
கண்டை- இஃது ஒன்று- 104-42
வெரு வரு தூமம் எடுப்ப,
வெகுண்டு 104-43
திரிதரும் கொல் களிறும்
போன்ம். 104-44
தாள் எழு துணி பிணி, இசை
தவிர்பு இன்றித் தலைச்
சென்று, 104-45
தோள் வலி துணி பிணி,
துறந்து இறந்து எய்தி, மெய்
சாய்ந்து 104-46
கோள் வழுக்கித் தன்
முன்னர் வீழ்ந்தான் மேல்
செல்லாது, 104-47
மீளும் புகர் ஏற்றுத்
தோற்றம் காண்- மண்டு அமருள்
104-48
வாள் அகப்பட்டானை 'ஒவ்வான்'
எனப் பெயரும் 104-49
மீளி மறவனும் போன்ம். 104-50
ஆங்க, செறுத்து அறுத்து
உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
104-51
மறுத்து மறுத்து மைந்தர்
சாரத், 104-52
தடி குறை இறுபு இறுபு தாயின
கிடப்ப- 104-53
இடி உறழ் இசையின் இயம்
எழுந்து ஆர்ப்பப்- 104-54
பாடு ஏற்றுக் கொள்பவர்
பாய்ந்து மேல் ஊர்பவர், 104-55
கோடு இடை நுழைபவர், கோள்
சாற்றுபவரொடு- 104-56
புரிபு மேல் சென்ற
நூற்றுவர் மடங்க, 104-57
வரி புனை வல் வில் ஐவர்
அட்ட 104-58
பொரு களம் போலும், தொழூஉ.
104-59
தொழுவினுள் கொண்ட ஏறு
எல்லாம் புலம் புகத்
தண்டாச் சீர் 104-60
வாங்கு எழில் நல்லாரும்,
மைந்தரும், மல்லல் ஊர் 104-61
ஆங்கண் அயர்வர், தழூஉ. 104-62
பாடுகம் வம்மின்- பொதுவன்
கொலை ஏற்றுக் 104-63
கோடு குறி செய்த மார்பு.
104-64
நெற்றிச் சிவலை நிறை
அழித்தான் நீள் மார்பில்,
104-65
செற்றார் கண் சாய, யான்
சாராது அமைகல்லேன், 104-66
பெற்றத்தார் கவ்வை எடுப்ப,
அது பெரிது 104-67
உற்றீயாள், ஆயர் மகள். 104-68
தொழீஈ ஒருக்கு நாம் ஆடும்
குரவையுள் நம்மை 104-69
அருக்கினான் போல் நோக்கி,
அல்லல் நோய் செய்தல், 104-70
'குரூஉக் கண் கொலை ஏறு
கொண்டேன், யான்' என்னும் 104-71
தருக்கு அன்றோ- ஆயர் மகன்?
104-72
நேர் இழாய்! கோள் அரிது ஆக
நிறுத்த கொலை ஏற்றுக் 104-73
காரி கதன் அஞ்சான் பாய்ந்த
பொதுவற்கே, 104-74
ஆர்வுற்று, எமர், கொடை
நேர்ந்தார்- அலர் எடுத்த
104-75
ஊராரை உச்சி மிதித்து. 104-76
ஆங்கு; 104-77
தொல் கதிர் திகிரியான்
பரவுதும்- ஒல்கா 104-78
உரும் உறழ் முரசின்
தென்னவற்கு 104-79
ஒரு மொழி கொள்க, இவ் உலகு
உடன், எனவே. 104-80
***
அரைசு படக் கடந்து அட்டு,
ஆற்றின் தந்த 105-1
முரைசு கெழு முது குடி
முரண் மிகு செல்வற்குச்- 105-2
சீர் மிகு சிறப்பினோன்
தொல் குடிக்கு உரித்து
எனப் 105-3
பார் வளர், முத்தமொடு படு
கடல் பயந்த 105-4
ஆர் கலி உவகையர் ஒருங்கு
உடன் கூடித், 105-5
'தீது இன்று பொலிக!' என
தெய்வக் கடி அயர்மார், 105-6
வீவு இல் குடிப் பின் இரும்
குடி ஆயரும், 105-7
தா இல் உள்ளமொடு துவன்றி,
ஆய்பு உடன், 105-8
வள் உருள் நேமியான் வாய்
வைத்த வளை போலத் 105-9
தெள்ளிதின் விளங்கும்
சுரி நெற்றக் காரியும், 105-10
ஒரு குழையவன் மார்பில் ஒள்
தார் போல் ஒளி மிகப் 105-11
பொரு அறப் பொருந்திய செம்
மறு வெள்ளையும், 105-12
பெரும் பெயர் கணிச்சியோன்
மணி மிடற்று அணி போல 105-13
இரும் பிணர் எருத்தின்
ஏந்து இமில் குராலும் 105-14
அணங்கு உடை வச்சிரத்தோன்
ஆயிரம் கண் ஏய்க்கும் 105-15
கணம் கொள் பல் பொறிக் கடும்
சினப் புகரும் 105-16
வேல் வலான் உடைத் தாழ்ந்த
விளங்கு வெண் துகில்
ஏய்ப்ப 105-17
வாலிது கிளர்ந்த வெண் கால்
சேயுஉம் 105-18
கால முன்பின் பிறவும், சால
105-19
மடங்கலும், கணிச்சியும்,
காலனும், கூற்றும், 105-20
தொடர்ந்து செல் அமையத்து
துவன்று உயிர் உணீஇய, 105-21
உடங்கு கொட்பன போல்
புகுத்தனர், தொழூஉ. 105-22
அவ் வழி; 105-23
கார் எதிர் கலி ஒலி கடி இடி
உருமின் இயம் கறங்க, 105-24
ஊர்பு எழு கிளர்பு உளர்
புயல் மங்குலின் நறை பொங்க,
105-25
நேர் இதழ் நிரை நிரை நெறி
வெறக் கோதையர் அணி
நிற்பச், 105-26
சீர் கெழு சிலை நிலைச்
செயிர் இகல் மிகுதியின்,
சினப் பொதுவர் 105-27
தூர்பு எழு துதை புதை துகள்
விசும்பு உற எய்த, 105-28
ஆர்பு, உடன் பாய்ந்தார்,
அகத்து. 105-29
மருப்பில் கொண்டும்,
மார்பு உற தழீஇயும், 105-30
எருத்து இடை அடங்கியும்,
இமில் இறப் புல்லியும் 105-31
தோள் இடைப் புகுதந்தும்,
துதைந்து பாடு ஏற்றும், 105-32
நிரைபு மேல் சென்றாரை நீள்
மருப்பு உறச் சாடிக், 105-33
கொள இடம் கொள விடா
நிறுத்தன, ஏறு. 105-34
கொள்வாரைக் கொள்வாரைக்
கோட்டு வாய் சாக் குத்திக்,
105-35
கொள்வார் பெறாஅக் குரூஉச்
செகில் காணிகா- 105-36
செயிரின் குறை நாளால் பின்
சென்று சாடி, 105-37
உயிர் உண்ணும் கூற்றமும்
போன்ம்! 105-38
பாடு ஏற்றவரைப் படக்
குத்திச் செங் காரிக் 105-39
கோடு எழுந்து ஆடும் கண மணி
காணிகா- 105-40
நகை சால் அவிழ் பதம்
நோக்கி, நறவின் 105-41
முகை சூழும் தும்பியும்
போன்ம்! 105-42
இடைப் பாய்ந்து
எருத்தத்துக் கொண்டானோடு
எய்தி, 105-43
மிடைப் பாயும் வெள் ஏறு
கண்டைகா- 105-44
வாள் பொரு வானத்து, அரவின்
வாய் கோட்பட்டுப் 105-45
போதரும் பால் மதியும்
போன்ம்! 105-46
ஆங்க, ஏறும் பொதுவரும்
மாறுற்று, மாறா 105-47
இரு பெரு வேந்தரும் இகலி
கண்ணுற்ற 105-48
பொரு களம் போலும், தொழூஉ;
105-49
வெல் புகழ் உயர்நிலைத்
தொல் இயல் துதை புதை
துளங்கு இமில் 105-50
நல் ஏறு கொண்ட, பொதுவன்
முகன் நோக்கிப், 105-51
பாடு இல, ஆய மகள் கண். 105-52
நறு நுதால்!- என் கொல்-
ஐங்கூந்தல் உளரச் 105-53
சிறு முல்லை நாறியதற்கு
குறு மறுகி, 105-54
ஒல்லாது உடன்று, எமர்
செய்தார், அவன் கொண்ட 105-55
கொல் ஏறு போலும் கதம்? 105-56
நெட்டிரும் கூந்தலாய்!
கண்டை, இஃது ஓர் சொல்; 105-57
கோட்டு இனத்து ஆயர் மகனொடு
யாம் பட்டதற்கு 105-58
எம் கண் எமரோ பொறுப்பர்;
பொறாதார் 105-59
தம் கண் பொடிவது எவன்? 105-60
ஒள் நுதால்! 105-61
இன்ன உவகை பிறிது யாது-யாய்
என்னைக் 105-62
கண் உடைக் கோலள்
அலைத்ததற்கு, என்னை 105-63
மலர் அணி கண்ணிப்
பொதுவனோடு எண்ணி, 105-64
அலர் செய்துவிட்டது இவ்
ஊர்? 105-65
ஒன்றிப் புகர் இனத்து ஆய
மகற்கு- ஒள் இழாய்!- 105-66
இன்று எவன், என்னை எமர்
கொடுப்பது- அன்று, அவன் 105-67
மிக்குத் தன் மேல் சென்ற
செங் காரிக் கோட்டு இடைப்
105-68
புக்கக் கால் புக்கது, என்
நெஞ்சு! 105-69
என; 105-70
பாடு இமிழ் பரப்பு அகத்து
அரவணை அசைஇய 105-71
ஆடு கொள் நேமியான்
பரவுதும்-'நாடு கொண்டு 105-72
இன் இசை முரசின் பொருப்பன்,
மன்னி 105-73
அமை வரல் அருவி ஆர்க்கும்
105-74
இமையத்து உம்பர் உம்
விளங்குக!' எனவே. 105-75
***
கழுவொடு சுடு படை
சுருக்கிய தோல் கண். 106-1
இமிழ் இசை மண்டை உறியொடு
தூக்கி, 106-2
ஒழுகிய கொன்றைத் தீம்
குழல் முரற்சியர், 106-3
வழூஉ சொல் கோவலர், தம் தம்
இன நிரை 106-4
பொழுதொடு தோன்றிய கார் நனை
வியன் புலத்தார். 106-5
அவ் வழி, 106-6
நீறு எடுப்பவை, நிலம்
சாடுபவை, 106-7
மாறு ஏற்றுச் சிலைப்பவை,
மண்டிப் பாய்பவையாய்த் 106-8
துளங்கு இமில் நல் ஏற்று
இனம் பல - களம் புகும் 106-9
மள்ளர் வனப்பு ஒத்தன. 106-10
தாக்குபு தம் உள்
பெயர்த்து ஒற்றி, எவ்
வாயும், 106-11
வை வாய் மருப்பினால்
மாறாது குத்தலின், 106-12
மெய் வார் குருதிய ஏறு
எல்லாம் - பெய் காலைக் 106-13
கொண்டல் நிரை ஒத்தன. 106-14
அவ் ஏற்றை, 106-15
பிரிவு கொண்டு, இடைப்
போக்கி, இனத்தோடு புனத்து
ஏற்றி, 106-16
இரு திறனா நீக்கும்
பொதுவர் - 106-17
உரு கெழு மா நிலம்
இயற்றுவான், 106-18
விரி திரை நீக்குவான்,
வியன் குறிப்பு - ஒத்தனர்.
106-19
அவரைக் கழல உழக்கி, எதிர்
சென்று சாடி, 106-20
அழல் வாய் மருப்பினால்
குத்தி, உழலை 106-21
மரத்தைப் போல் தொட்டன -
ஏறு. 106-22
தொட்ட தம், புண் வார்
குருதியால் கை பிசைந்து,
மெய் திமிரித் 106-23
தங்கார் - பொதுவர் - கடலுள்
பரதவர் 106-24
அம்பி ஊர்ந்தாங்கு,
ஊர்ந்தார், ஏறு. 106-25
ஏறு தம் கோலம் செய்
மருப்பினால் தோண்டிய வரிக்
குடர் 106-26
ஞாலம் கொண்டு எழூஉம்
பருந்தின் வாய் வழீஇ, 106-27
ஆலும் கடம்பும் அணிமார்
விலங்கிட்ட 106-28
மாலை போல், தூங்கும்
சினை. 106-29
ஆங்கு, 106-30
தம் புல ஏறு பரத்தர உய்த்த
தம் 106-31
அன்பு உறு காதலர் கை
பிணைந்து, ஆய்ச்சியர் 106-32
இன்புற்று அயர்வர், தழூஉ.
106-33
முயங்கிப் பொதிவேம்;
முயங்கிப் பொதிவேம்; 106-34
முலை வேதின் ஒற்றி
முயங்கிப் பொதிவேம் - 106-35
கொலை ஏறு சாடிய புண்ணை - எம்
கேளே! 106-36
பல் ஊழ் தயிர் கடையத் தாஅய
புள்ளி மேல் 106-37
கொல் ஏறு கொண்டான் குருதி
மயக்குறப் 106-38
புல்லல் எம் தோளிற்கு
அணியோ! எம் கேளே! 106-39
ஆங்கு, போர் ஏற்று அரும்
தலை அஞ்சலும் ஆய்ச்சியர்
106-40
காரிகை தோள் காமுறுதலும்
இவ் இரண்டும் 106-41
ஓராங்குச் சேறல் இலவோ? - எம்
கேளே! 106-42
'கொல் ஏறு கொண்டான் இவள்
கேள்வன்' என்று ஊரார் 106-43
சொல்லும் சொல் கேளா, அளை
மாறி யாம் வரும் 106-44
செல்வம் எம் கேள்வன் தருமோ?
- எம் கேளே! 106-45
ஆங்க, 106-46
அரும் தலை ஏற்றொடு
காதலர்ப் பேணிச், 106-47
சுரும்பு இமிர் கானம் நாம்
பாடினம் பரவுதும்; 106-48
ஏற்றவர் புலம் கெடத் திறை
கொண்டு, 106-49
மாற்றாரைக் கடக்க, எம் மறம்
கெழு கோவே! 106-50
***
எல்லா! இஃது ஒன்று - கூறு
குறும்பு இவர் 107-1
புல் இனத்தார்க்கும்,
குடம் சுட்டவர்க்கும், எம்
107-2
கொல் ஏறு கோடல் குறை எனக்,
கோவினத்தார் 107-3
பல் ஏறு பெய்தார் தொழூஉ.
107-4
தொழுவத்து, 107-5
சில்லைச் செவி மறைக்
கொண்டவன் சென்னிக் குவி
முல்லை 107-6
கோட்டம் காழ் கோட்டின்
எடுத்துக்கொண்டு, ஆட்டிய
107-7
ஏழை இரும் புகர் பொங்க, அப்
பூ வந்து என் 107-8
கூழையுள் வீழ்ந்தன்று
மன்; 107-9
அதனைக், கெடுத்தது
பெற்றார் போல், கொண்டு யான்
முடித்தது 107-10
கேட்டனள், என்பவோ, யாய்?
107-11
கேட்டால் எவன் செய்ய
வேண்டுமோ? மற்று இகா? 107-12
அவன் கண்ணி அன்றோ, அது? 107-13
'பெய் போது அறியாத் தன்
கூழையுள் ஏதிலான் 107-14
கை புனை கண்ணி முடித்தாள்'
என்று, யாய் கேட்பின் 107-15
செய்வது இல் ஆகுமோ
மற்று? 107-16
எல்லாத் தவறும் அறும். 107-17
ஓஒ! அஃது அறும் ஆறு? 107-18
ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ
ஆயின், 107-19
நின் வெய்யன் ஆயின், அவன்
வெய்யை நீ ஆயின், 107-20
அன்னை நோதக்கதோ இல்லை மன்; -
நின் நெஞ்சம், 107-21
அன்னை நெஞ்சு ஆகப் பெறின்.
107-22
அன்னையோ? 107-23
ஆயர் மகனையும் காதலை;
கைம்மிக 107-24
ஞாயையும் அஞ்சுதி; ஆயின்,
அரிது அரோ 107-25
நீ உற்ற நோய்க்கு மருந்து.
107-26
மருந்து இன்று, யான் உற்ற
துயர் ஆயின், - எல்லா! 107-27
வருந்துவேன் அல்லனோ, யான்?
107-28
வருந்தாதி - 107-29
மண்ணி மாசு அற்ற நின்
கூழையுள் ஏறு அவன் 107-30
கண்ணி தந்திட்டது எனக்
கேட்டுத், 'திண்ணிதாத் 107-31
தெய்வ மால், காட்டிற்று
இவட்கு' என, நின்னை அப் 107-32
பொய் இல் பொதுவற்கு அடை
சூழ்ந்தார் - தந்தையோடு 107-33
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.
107-34
***
இகல் வேந்தன் சேனை இறுத்த
வாய் போல - 108-1
அகல் அல்குல் தோள் கண் என
மூ வழிப் பெருகி, 108-2
நுதல், அடி, நுசுப்பு என மூ
வழி சிறுகிக், 108-3
கவலையால் காமனும் படை விடு
வனப்பினோடு, 108-4
அகல் ஆங்கண் அளை மாறி,
அலமந்து பெயரும்கால், 108-5
'நகை வல்லேன் யான்' என்று
என் உயிரோடு படை தொட்ட 108-6
இகலாட்டி! நின்னை எவன்
பிழைத்தேன், எல்லா! யான்? 108-7
அஃது அவலம் அன்று மன; 108-8
ஆயர் எமர் ஆனால்
ஆய்த்தியேம் யாம் மிகக்;
108-9
காயாம் பூம் கண்ணிக் கரும்
துவர் ஆடையை, 108-10
மேயும் நிரை முன்னர்க்
கோல் ஊன்றி நின்றாய், ஓர்
108-11
ஆயனை அல்லை; பிறவோ அமரர்
உள் 108-12
ஞாயிற்றுப் புத்தேள்
மகன்? 108-13
அதனால் வாய்வாளேன்; 108-14
முல்லை முகையும்
முருந்தும் நிரைத்தன்ன 108-15
பல்லும் பணைத் தோளும் பேர்
அமர் உண் கண்ணும், 108-16
'நல்லேன், யான்,' என்று, நலம்
தகை நம்பிய 108-17
சொல்லாட்டி! நின்னொடு சொல்
ஆற்றுகிற்பார் யார்? 108-18
சொல்லாதி; 108-19
'நின்னை தகைத்தனென்,'
அல்லல் காண்மன். 108-20
மண்டாத கூறி, மழ குழக்கு
ஆகின்றே, 108-21
கண்ட பொழுதே கடவரைப் போல,
நீ 108-22
பண்டம் வினாய படிற்றால்
தொடீஇய, நின் 108-23
கொண்டது எவன் - எல்லா! -
யான்? 108-24
கொண்டது; 108-25
அளை மாறிப் பெயர் தருவாய்! -
அறிதியோ? - அஞ்ஞான்று 108-26
தளவ மலர் ததைந்தது ஓர்
கானச் சிற்றாற்று அயல், 108-27
இள மாங்காய் போழ்ந்தன்ன
கண்ணினா, என் நெஞ்சம் 108-28
களமாக் கொண்டு ஆண்டாய், ஓர்
கள்வியை அல்லையோ? 108-29
நின் நெஞ்சம் களமாக்
கொண்டு யாம் ஆளல் எமக்கு
எவன் எளிது ஆகும் 108-30
புனத்து உளான்
என்னைக்குப் புகா
உய்த்துக் கொடுப்பதோ? 108-31
இனத்து உளான் எந்தைக்குக்
கலத்தொடு செல்வதோ? 108-32
தினைக் காலுள் யாய் விட்ட
கன்று மேய்க்கிற்பதோ? 108-33
அனைத்து ஆக; 108-34
வெண்ணெய்த் தெழி கேட்கும்
அண்மையால், சேய்த்து அன்றி,
108-35
அண்ண அணித்து ஊர் ஆயின்,
நன்பகல் போழ்து ஆயின், 108-36
கண் நோக்கு ஒழிக்கும்
கவின் பெறு பெண் நீர்மை 108-37
மயில் எருத்து வண்ணத்து
மாயோய்! மற்று இன்ன 108-38
வெயிலொடு, எவன், விரைந்து
சேறி? உது காண். 108-39
பிடி துஞ்சு அன்ன அறை மேல,
நுங்கின் 108-40
தடி கண் புரையும் குறும்
சுனை ஆடிப், 108-41
பனிப் பூம் தளவொடு முல்லை
பறித்துத், 108-42
தனிக் காயாம் தண் பொழில்,
எம்மொடு வைகிப், 108-43
பனிப் படச் செல்வாய், நும்
ஊர்க்கு. 108-44
இனிச் செல்வேம் யாம்; 108-45
மா மருண்டன்ன மழைக் கண்
சி(ற்)று ஆய்த்தியர் 108-46
நீ மருட்டும் சொல்க் கண்
மருள்வார்க்கு உரை, அவை; 108-47
ஆ முனியா ஏறு போல் வைகல்,
பதின்மரைக் 108-48
காமுற்றுச் செல்வாய்; ஓர்
கண் குத்தி கள்வனை; 108-49
நீ எவன் செய்தி,
பிறர்க்கு? 108-50
யாம் எவன் செய்தும்,
நினக்கு? 108-51
கொலை உண் கண் கூர்
எயிற்றுக் கொய் தளிர் மேனி,
108-52
இனை வனப்பின், மாயோய்!
நின்னின் சிறந்தார் 108-53
நில உலகத்து இன்மை தெளி; நீ
வருதி; 108-54
மலையொடு மார்பு அமைந்த
செல்வன் அடியைத் 108-55
தலையினால் தொட்டு உற்றேன்,
சூள். 108-56
ஆங்கு உணரார் நேர்ப; அது
பொய்ப்பாய் நீ; ஆயின் - 108-57
தேம் கொள் பொருப்பன்
சிறுகுடி எம் ஆயர் 108-58
வேந்து ஊட்டு அரவத்து, நின்
பெண்டிர் காணாமை, 108-59
காஞ்சித் தாது உக்கன்ன
தாது எரு மன்றத்துத் 108-60
தூங்கும் குரவையுஉள் நின்
பெண்டிர் கேளாமை, 108-61
ஆம்பல் குழலால் பயிர்
பயிர் - எம் படப்பைக் 108-62
காஞ்சிக் கீழ் செய்தேம்
குறி. 108-63
***
கார் ஆரப் பெய்த கடி கொள்
வியன் புலத்துப் 109-1
பேராது சென்று, பெரும்
பதவப் புல் மாந்தி, 109-2
நீர் ஆர் நிழல குடம் சுட்டு
இனத்து உள்ளும் 109-3
போர் ஆரா ஏற்றின், பொரு
நாகு, இள பாண்டில் 109-4
தேர் ஊரச் செம்மாந்தது
போல், மதைஇனள் - 109-5
பேர் ஊரும் சி(ற்)று ஊரும்
கௌவை எடுப்பவள் போல், 109-6
மோரோடு வந்தாள் - தகை கண்டை;
யாரோடும் 109-7
சொல்லியாள் அன்றே வனப்பு!
109-8
பண்ணித் தமர் தந்து ஒரு
புறம் தைஇய 109-9
கண்ணி எடுக்கல்லாக் கோடு
ஏந்து அகல் அல்குல் - 109-10
புண் இல்லார் புண் ஆக
நோக்கும்; முழு மெய்யும்
109-11
கண்ணளோ? - ஆய மகள்! 109-12
இவள் தான் திருத்தாச்
சுமட்டினள், ஏனைத் தோள்
வீசி 109-13
வரிக் கூழ வட்டி தழீஇ,
அரிக் குழை 109-14
ஆடல் தகையள்; கழுத்தினும்
வாலிது 109-15
நுண்ணிதாத் தோன்றும்,
நுசுப்பு. 109-16
இடை தெரியா ஏஎர் இருவரும்
தம் தம் 109-17
உடை வனப்பு எல்லாம் இவட்கு
ஈத்தார் கொலோ? 109-18
படை இடுவான் மன் கண்டீர்,
காமன் - மடை அடும் 109-19
பாலொடு கோட்டம் புகின்,
109-20
இவள் தான், வருந்த நோய்
செய்து இறப்பின் அல்லால்,
மருந்து அல்லள் - 109-21
'யார்க்கும் அணங்கு ஆதல்
சான்றாள்' என்று ஊர்ப்
பெண்டிர், 109-22
'மாங்காய் நறும் காடி
கூட்டுவேம், யாங்கும் 109-23
எழு நின் கிளையொடு போக'
என்று, தம் தம் 109-24
கொழுநரைப் போகாமல் காத்து,
முழு நாளும், 109-25
வாயில் அடைப்ப, வரும். 109-26
***
கடி கொள் இரும் காப்பில்
புல் இனத்து ஆயர் 110-1
குடி தொறும் நல்லாரை
வேண்டுதி - எல்லா! - 110-2
இடு தேள் மருந்தோ, நின்
வேட்கை? தொடுதரத் 110-3
துன்னித் தந்தாங்கே நகை
குறித்து, எம்மைத் 110-4
திளைத்தற்கு எளியமாக்
கண்டை. 'அளைக்கு எளியாள் 110-5
வெண்ணெய்க்கும் அன்னள்'
எனக் கொண்டாய் - ஒள் நுதால்
110-6
ஆங்கு நீ கூறின், அனைத்து
ஆக; நீங்குக; 110-7
அச்சத்தான் மாறி,
அசைவினான் போத்தந்து 110-8
நிச்சம் தடுமாறும் - மெல்
இயல் ஆய் மகள்! 110-9
மத்தம் பிணித்த கயிறு போல்
நின் நலம் 110-10
சுற்றிச் சுழலும் என்
நெஞ்சு. 110-11
விடிந்த பொழுதினும் இல்
வயின் போகாது, 110-12
கொடும் தொழுவினுள் பட்ட
கன்றிற்குச் சூழும் 110-13
கடும் சூல் ஆ நாகு போல்,
நின் கண்டு நாளும் 110-14
நடுங்கு அஞர் உற்றது - என்
நெஞ்சு. 110-15
எவ்வம் மிகுதர, எம்
திறத்து, எஞ்ஞான்றும், 110-16
நெய் கடை பாலின் பயன்
யாதும் இன்று ஆகிக், 110-17
கை தோயல் மாத்திரை அல்லது,
செய்தி 110-18
அறியாது - அளித்து என்
உயிர். 110-19
அன்னையோ? - மன்றத்துக்
கண்டாங்கே, 'சான்றார்
மகளிரை 110-20
இன்றி அமையேன்' என்று,
இன்னவும் சொல்லுவாய்; 110-21
நின்றாய்; நீ சென்றீ; எமர்
காண்பர்; நாளையும் 110-22
கன்றொடு சேறும், புலத்து.
110-23
***
தீம் பால் கறந்த கலம்
மாற்றக், கன்று எல்லாம் 111-1
தாம்பின் பிணித்து, மனை
நிறீஇ, யாய் தந்த 111-2
பூம் கரை நீலம் புடை தாழ
மெய் அசைஇ, பாங்கரும் 111-3
முல்லையும் தாய பாட்டம்
கால் - தோழி! - நம் 111-4
புல் இனத்து ஆயர் மகளிரோடு
எல்லாம் 111-5
ஒருங்கு விளையாட, அவ் வழி
வந்த 111-6
குருந்தம் பூம் கண்ணிப்
பொதுவன், மற்று என்னை, 111-7
'முற்று இழை ஏஎர் மட
நல்லாய்! நீ ஆடும் 111-8
சிற்றில் புனைகோ சிறிது?'
என்றான்; 'எல்லா! நீ 111-9
'பெற்றேம் யாம்' என்று
பிறர் செய்த இல் இருப்பாய்;
111-10
கற்றது இலை மன்ற காண்'
என்றேன்; 'முற்று இழாய்! 111-11
தாது சூழ் கூந்தல்
தகைபெறத் தைஇய 111-12
கோதை புனைகோ நினக்கு?'
என்றான்; 'எல்லா! நீ 111-13
ஏதிலார் தந்த பூக்
கொள்வாய்; நனி மிகப் 111-14
பேதையை மன்ற பெரிது'
என்றேன்; 'மாதராய்! 111-15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி
மென் முலை மேல் 111-16
தொய்யில் எழுதுகோ மற்று?'
என்றான்; 'யாம் பிறர் 111-17
செய் புறம் நோக்கி
இருத்துமோ? நீ பெரிது 111-18
மையலை மாதோ; விடுக' என்றேன்.
தையலாய்! 111-19
சொல்லிய ஆறு எல்லாம் மாறு
மாறு யான் பெயர்ப், 111-20
அல்லாந்தான் போலப்
பெயர்ந்தான் அவனை நீ 111-21
ஆயர் மகளிர் இயல்பு
உரைத்து, எந்தையும் 111-22
யாயும் அறிய உரைத்தீயின்,
யான் உற்ற 111-23
நோயும் களைகுவை மன். 111-24
***
யார் இவன், என்னை
விலக்குவான்? நீர் உளர் 112-1
பூம் தாமரைப் போது தந்த
விரவுத் தார்க் 112-2
கல்லாப் பொதுவனை; நீ மாறு;
நின்னொடு 112-3
சொல்லல் ஓம்பு என்றார்,
எமர். 112-4
எல்லா! 'கடாஅய கண்ணால்,
கலைஇய நோய் செய்யும் 112-5
நடாஅக் கரும்பு அமன்ற
தோளாரைக் காணின், 112-6
விடாஅல், ஓம்பு' என்றார்,
எமர். 112-7
கடாஅயார், நல்லாரைக்
காணின், விலக்க, நயந்து,
அவர் 112-8
பல் இதழ் உண் கண்ணும்
தோளும் புகழ் பாட, 112-9
நல்லது கற்பித்தார் மன்ற,
நுமர். பெரிதும் 112-10
வல்லர், எமர் கண் செயல்.
112-11
ஓஒ! வழங்காப் பொழுது நீ
கன்று மேய்ப்பாய் போல், 112-12
வழங்கல் அறிவார்
உரையாரேல், எம்மை 112-13
இகழ்ந்தாரே அன்றோ, எமர்?
112-14
ஒக்கும்; அறிவல் - யான்
எல்லா! - விடு. 112-15
'விடேன், யான்; என், நீ
குறித்தது? - இரும்
கூந்தால்! 112-16
நின்னை, "என் முன் நின்று
112-17
சொல்லல் ஓம்பு" என்றமை
அன்றி, "அவனை நீ 112-18
புல்லல் ஓம்பு" என்றது
உடையரோ? மெல்ல 112-19
முயங்கு, நின் முள் எயிறு
உண்கும். எவன் கொலோ? 112-20
மாயப் பொதுவன் உரைத்த உரை
எல்லாம் 112-21
வாய் ஆவது ஆயின்,
தலைப்பட்டாம்; பொய் ஆயின்
112-22
சாயல் இன் மார்பில், கமழ்
தார் குழைத்த நின் 112-23
ஆய் இதழ் உண் கண் பசப்பத்
தட மென் தோள் 112-24
சாயினும் ஏஎர் உடைத்து.
112-25
***
நலம் மிக நந்திய நய வரு தட
மென் தோள், 113-1
அலமரல் அமர் உண் கண், அம்
நல்லாய்! நீ உறீஇ, 113-2
உலமரல் உயவு நோய்க்கு
உய்யும் ஆறு உரைத்துச்
செல். 113-3
பேர் ஏமுற்றார் போல, முன்
நின்று, விலக்குவாய் 113-4
யார் - எல்லா! நின்னை
அறிந்ததூ உம் இல் வழி? 113-5
தளிர் இயால்! என் அறிதல்
வேண்டின், பகை அஞ்சாப் 113-6
புல் இனத்து ஆயர் மகனேன்,
மற்று யான். 113-7
ஒக்கும் மன்; 113-8
புல் இனத்து ஆயனை நீ ஆயின்,
குடம் சுட்டு 113-9
நல் இனத்து ஆயர், எமர். 113-10
எல்லா! 113-11
நின்னொடு சொல்லின், ஏதமோ
இல்லை மன்; 113-12
ஏதம் அன்று எல்லை வருவான்
விடு. 113-13
விடேன், 113-14
உடம்பட்டு நீப்பார் கிளவி
மடம் பட்டு. 113-15
மெல்லிய ஆதல் அறியினும்,
மெல்லியால்! 113-16
நின் மொழி கொண்டு, யானோ
விடுவேன்? - மற்று என் மொழி
கொண்டு 113-17
என் நெஞ்சம் ஏவல் செயின்?
113-18
'நெஞ்சு ஏவல் செய்யாது' என
நின்றாய்க்கு, 'எஞ்சிய 113-19
காதல் கொள் காமம் கலக்குற'
ஏதிலார் 113-20
பொய்ம் மொழி தேறுவது என்?
113-21
தெளிந்தேன், தெரி இழாய்!
யான். 113-22
பல் கால், யாம் கான் யாற்று
அவிர் மணல் தண் பொழில், 113-23
அல்கல் அகல் அறை, ஆயமொடு
ஆடி, 113-24
முல்லை குருந்தொடு முச்சி
வேய்ந்து, எல்லை 113-25
இரவு உற்றது; இன்னும்
கழிப்பி; அரவு உற்று 113-26
உருமின் அதிரும் குரல்
போல், பொரு முரண் 113-27
நல் ஏறு நாகு உடன் நின்றன,
113-28
பல் ஆன் இன நிரை நாம் உடன்
செலற்கே. 113-29
***
வாரி, நெறிப்பட்டு, இரும்
புறம் தாஅழ்ந்த 114-1
ஓரிப் புதல்வன் அழுதனன்
என்பவோ... 114-2
புதுவ மலர் தைஇ, எமர் என்
பெயரால், 114-3
வதுவை அயர்வாரை கண்டு, 'மதி
அறியா 114-4
ஏழையை' என்று அகல நக்கு,
வந்தீயாய், நீ - 114-5
தோழி! - அவன் உழைச் சென்று
114-6
சென்று யான் அறிவேன்;
கூறுக. மற்று இனி. 114-7
'சொல் அறியாப் பேதை - மடவை! -
மற்று எல்லா! 114-8
நினக்கு ஒரூஉம்; மற்று
என்று அகல் அகலும்; நீடு
இன்று; 114-9
நினக்கு வருவதாக்
காண்பாய். அனைத்து ஆகச் 114-10
சொல்லிய சொல்லும் வியம்
கொளக் கூறு. 114-11
தரு மணல் தாழப் பெய்து, இல்
பூவல் ஊட்டி, 114-12
எருமைப் பெடையோடு, எமர்
ஈங்கு அயரும் 114-13
பெரு மணம் எல்லாம் தனித்தே
ஒழிய - 114-14
வரி மணல் முன்துறைச்
சிற்றில் புனைந்த 114-15
திரு நுதல் ஆயத்தார்
தம்முள் புணர்ந்த 114-16
ஒரு மணம் தான் அறியும்;
ஆயின் எனைத்தும் 114-17
தெருமரல் கைவிட்டு
இருக்கோ... அலர்ந்த 114-18
விரி நீர் உடுக்கை உலகம்
பெறினும் 114-19
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
114-20
இரு மணம் கூடுதல் இல்
இயல்பு அன்றே? 114-21
***
தோழி! நாம், காணாமை உண்ட
கடும் கள்ளை, மெய் கூர 115-1
நாணாது சென்று நடுங்க
உரைத்தாங்குக் 115-2
கரந்ததூஉம் கையொடு கோள்
பட்டாம், கண்டாய்; நம் 115-3
புல் இனத்து ஆயர் மகன் சூடி
வந்தது ஓர் 115-4
முல்லை ஒரு காழும்
கண்ணியும், மெல்லியால்! 115-5
கூந்தலுள் பெய்து
முடித்தேன் மன்; தோழி! யாய்
115-6
வெண்ணெய் உரைஇ விரித்த
கதுப்போடே, 115-7
அன்னையும் அத்தனும்
இல்லரா, யாய் நாண, 115-8
அன்னை முன் வீழ்ந்தன்று
அப் பூ. 115-9
அதனை வினவலும் செய்யாள்;
சினவலும் செய்யாள்; 115-10
நெருப்புக் கை தொட்டவர்
போல விதிர்த்திட்டு, 115-11
நீங்கிப்புறங்கடை
போயினாள். யானும், என் 115-12
சாந்து உளர் கூழை முடியா,
நிலம் தாழ்ந்த 115-13
பூம் கரை நீலம் தழீஇத்,
தளர்பு ஒல்கிப், 115-14
பாங்கரும் கானத்து
ஒளித்தேன். - அதற்கு, எல்லா
115-15
ஈங்கு எவன் அஞ்சுவது? 115-16
அஞ்சல் - அவன் கண்ணி நீ
புனைந்தாய் ஆயின், நமரும்
115-17
அவன் கண் அடை சூழ்ந்தார்
நின்னை. அகல் கண் 115-18
வரைப்பில் மணல் தாழப்
பெய்து, திரைப்பில் 115-19
வதுவையும் ஈங்கே அயர்ப;
அதுவே யாம் 115-20
அல்கலும் சூழ்ந்த வினை!
115-21
***
பாங்கு அரும் பாட்டம் கால்
கன்றொடு செல்வேம் எம் 116-1
தாம்பின் ஒரு தலை பற்றினை,
ஈங்கு எம்மை 116-2
முன்னை நின்றாங்கே
விலக்கிய எல்லா! நீ 116-3
என்னையே முற்றாய் விடு.
116-4
விடேஎன்; தொடீஇய
செல்வார்த் துமித்து,
எதிர் மண்டும் 116-5
கடு வய நாகு போல் நோக்கித்
தொழு வாயில் 116-6
நீங்கிச் சினவுவாய்
மற்று. 116-7
நீ நீங்கு, கன்று
சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ
சென்றாங்கு 116-8
வன்கண்ணள் ஆய் வரல்
ஓம்பு; 116-9
யாய் வருக ஒன்றோ, பிறர்
வருக; மற்று நின் 116-10
கோ வரினும் இங்கே வருக;
தளரேன் யான், 116-11
நீ அருளி நல்க பெறின். 116-12
நின்னை யான் சொல்லினவும்
பேணாய், நினைஇ 116-13
கனை பெயல் ஏற்றின் தலை
சாய்த்து, எனையதூஉம் 116-14
மாறு எதிர் கூறி,
மயக்குப்படுகுவாய்! - 116-15
கலத்தொடு யாம் செல்வுழி
நாடிப், புலத்தும் 116-16
வருவையால் - நாண் இலி! நீ.
116-17
***
மாண உருக்கிய நல் பொன் மணி
உறீஇ, 117-1
பேணித் துடைத்தன்ன
மேனியாய்! கோங்கின் 117-2
முதிரா இள முகை ஒப்ப,
எதிரிய 117-3
தொய்யில் பொறித்த வன
முலையாய்! மற்று, நின் 117-4
கையது எவன்? மற்று உரை. 117-5
'கையதை - சேரிக் கிழவன்
மகளேன் யான்; மற்று இஃது ஓர்
117-6
மாதர்ப் புலைத்தி விலை
ஆகச் செய்தது ஓர் 117-7
போழில் புனைந்த வரிப்
புட்டில்' - 'புட்டில் உள்
என் உள? 117-8
காண்தக்காய்! என் காட்டிக்
காண்.' 117-9
காண், இனி; தோட்டார்
கதுப்பின் என் தோழி அவரொடு
117-10
காட்டுச் சார் கொய்த சிறு
முல்லை, மற்று இவை. 117-11
முல்லை இவை ஆயின் - முற்றிய
கூழையாய்! 117-12
எல்லிற்றுப் போழ்து ஆயின் -
ஈதோளிக் கண்டேனால்; 117-13
'செல்' என்று நின்னை
விடுவேன், யான்; மற்று
எனக்கு 117-14
மெல்லியது, ஓராது அறிவு.
117-15
************** முல்லைக் கலி
முற்றும் *****************