எருவைச் சேவல் கரிபுசிறை
தீய,
வேனில் நீடிய வேய்உயர்
நனந்தலை,
நீஉழந்து எய்தும்
செய்வினைப் பொருட்பிணி
பல்இதழ் மழைக்கண் மாஅ
யோள்வயிற்
பிரியின் புணர்வது ஆயிற்,
பிரியாது. .51-10
ஏந்துமுலை முற்றம்
வீங்கப், பல்வீழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ,
நாளும்
மனைமுதல் வினையொடும்
உவப்ப,
நினை - மாண் நெஞ்சம்!-
நீங்குதன் மறந்தே. .51-14
***
'வலந்த வள்ளி மரன்ஓங்கு
சாரல்,
கிளர்ந்த வேங்கைச்
சேண்நெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர்
வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல்
பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள்
அளைச் சிலம்பின் .52-5
ஆகொள் வயப்புலி ஆகும் அஃது"
எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக்,
கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும்
நாடன்
நெஞ்சுஅமர் வியன்மார்பு
உடைத்துஎன அன்னைக்கு
அறிவிப் பேம்கொல்?
அறியலெம் கொல்?' என .52-10
இருபாற் பட்ட சூழ்ச்சி
ஒருபாற்
சேர்ந்தன்று - வாழி, தோழி!-
'யாக்கை
இன்உயிர் கழிவது ஆயினும்,
நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செய்யா தீமே!
.52-15
***
அறியாய், வாழி, தோழி!
இருள்அற
விசும்புடன் விளங்கும்
விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த
விடுவாய் நிறைய,
நெடுங்கான் முருங்கை
வெண்பூத் தாஅய்,
நீர்அற வறந்த நிரம்பா
நீள்இடை, .53-5
வள்எயிற்றுச் செந்நாய்
வருந்துபசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை
உழிஞ்சில்
உள்ஊன் வாடிய சுரிமூக்கு
நொள்ளை
பொரிஅரை புதைத்த
புலம்புகொள் இயவின்,
விழுத்தொடை மறவர் வில்இட
வீழ்ந்தோர் .53-10
எழுத்துடை நடுகல்
இன்நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி,
என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று
இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப,
நம்மினும்
பொருளே காதலர் காதல்; .53-15
'அருளே காதலர்' என்றி, நீயே.
.53-16
***
விருந்தின் மன்னர்
அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை
தணிந்தனன்; தீம்பெயற்
காரும் ஆர்கலி தலையின்று:
தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
வள்வாய் ஆழி உள்உறுபு
உருளக், .54-5
கடவுக காண்குவம் - பாக! மதவு
நடைத்
தாம்புஅசை குழவி
வீங்குசுரை மடியக்,
கனையலம் குரல் காற்பரி
பயிற்றிப்,
படுமணி மிடற்ற பயநிரை ஆயம்
கொடுமடி உடையர் கோற்கைக்
கோவலர் .54-10
கொன்றையம் குழலர்
பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனைநகு
மாலைத்,
தனக்கென வாழாப் பிறர்க்கு
உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை
நுண்இலைப்
புன்காழ் நெல்லிப்
பைங்காய் தின்றவர் .54-15
நீர்குடி சுவையின் தீவிய
மிழற்றி,
'முகிழ்நிலாத் திகழ்தரும்
மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன்
ஒற்றி,
வருகுவை ஆயின், தருகுவென்
பால்' என,
விலங்கு அமர்க் கண்ணள்
விரல்விளி பயிற்றித் .54-20
திதலை அல்குல்எம் காதலி
புதல்வற் பொய்க்கும்
பூங்கொடி நிலையே! .54-22
***
காய்ந்துசெலற் கனலி
கல்பகத் தெறுதலின்,
ஈந்துகுருகு உருகும்
என்றூழ் நீள்இடை,
உளிமுக வெம்பரல் அடிவருத்
துறாலின்,
விளிமுறை அறியா வேய்கரி
கானம்,
வயக்களிற்று அன்ன
காளையொடு என்மகள் .55-5
கழிந்ததற்கு அழிந்தன்றோ
இலனே! ஒழிந்துயாம்
ஊதுஉலைக் குருகின்
உள்உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய
நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ -
ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப்
பறந்தலைப் .55-10
பொருதுபுண் நாணிய சேர
லாதன்
அழிகள மருங்கின் வான்வடக்
கிருந்தென,
இன்னா இன்உரை கேட்ட
சான்றோர்
அரும்பெறல் உலகத்து
அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகி
யாங்குப், பிரிந்து இவண்
.55-15
காதல் வேண்டி, எற் றுறந்து
போதல் செல்லாஎன் உயிரொடு
புலந்தே! .55-17
***
நகை ஆகின்றே - தோழி! -
நெருநல்-
மணிகண் டன்ன துணிகயம்
துளங்க,
இரும்புஇயன் றன்ன
கருங்கோட்டு எருமை,
ஆம்பல் மெல்லடை கிழியக்,
குவளைக்
கூம்புவிடு பன்மலர்
மாந்திக், கரைய .56-5
காஞ்சி நுண்தாது
ஈர்ம்புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை
புகுதரும்
தண்துறை ஊரன் திண்தார்
அகலம்
வதுவை நாள்அணிப்
புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன்
தெருவில் .56-10
புனிற்றாப் பாய்ந்தெனக்
கலங்கி, யாழ்இட்டு,
எம்மனைப் புகுதந் தோனே;
அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென்,
எதிர்சென்று,
'இம்மனை அன்று; அஃது உம்மனை'
என்ற
என்னும் தன்னும் நோக்கி,
.56-15
மம்மர் நெஞ்சினோன்
தொழுதுநின் றதுவே. .56-16
***
சிறுபைந் தூவிச் செங்காற்
பேடை
நெடுநீர் வானத்து,
வாவுப்பறை நீந்தி
வெயில்அவிர் உருப்பொடு
வந்து, கனி பெறாஅது,
பெறுநாள் யாணர் உள்ளிப்,
பையாந்து,
புகல்ஏக் கற்ற புல்லென்
உலவைக் .57-5
குறுங்கால் இற்றிப்
புன்தலை நெடுவீழ்
இரும்பிணர்த் துறுகல்
தீண்டி, வளி பொரப்,
பெருங்கை யானை நிவப்பின்
தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ்
நீள்இடை
யாமே எமியம் ஆகத், தாமே .57-10
பசுநிலா விரிந்த பல்கதிர்
மதியிற்
பெருநல் ஆய்கவின் ஒரீஇச்,
சிறுபீர்
வீஏர் வண்ணம் கொண்டன்று
கொல்லோ-
கொய்சுவற் புரவிக்
கொடித்தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி
முற்றிக் .57-15
களிறுபட எருக்கிய கல்லென்
ஞாட்பின்
அரும்புண் உறுநரின்
வருந்தினள், பெரிது
அழிந்து,
பானாட் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் - ஆய்சிறு
நுதலே! .57-19
***
இன்இசை உருமொடு கனைதுளி
தலைஇ,
மன்னுயிர் மடிந்த பானாட்
கங்குல்
காடுதேர் வேட்டத்து
விளிவுஇடம் பெறாஅது,
வரிஅதள் படுத்த சேக்கை,
தெரிஇழைத்
தேன்நாறு கதுப்பின்
கொடிச்சியர் தந்தை, .58-5
கூதிர் இல் செறியும் குன்ற
நாட!
வனைந்து வரல் இளமுலை
ஞெமுங்கப், பல்ஊழ்
விளங்குதொடி முன்கை
வளைந்துபுறம் சுற்ற,
நின்மார்பு அடைதலின்
இனிது ஆகின்றே-
நும்இல் புலம்பின் நும்
உள்ளுதொறும் நலியும் .58-10
தண்வரல் அசைஇய பண்புஇல்
வாடை
பதம்பெறு கல்லாது
இடம்பார்த்து நீடி-
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர்மடி கங்குல்,
நெடும்புற நிலையே! .58-14
***
தண்கயத்து அமன்ற வண்டுபடு
துணைமலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை,
பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே!-
வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல்
அகன்துறை,
அண்டர் மகளிர் தண்தழை
உடீஇயர் .59-5
மரம்செல மிதித்த மாஅல்
போலப்
புன்தலை மடப்பிடி உணீஇயர்,
அம்குழை,
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனை
கவுள்
படிஞிமிறு கடியும் களிறே-
தோழி!
சூர்மருங்கு அறுத்த
சுடர்இலை நெடுவேல், .59-10
சினம்மிகு முருகன்
தண்பரங் குன்றத்து,
அந்துவன் பாடிய சந்துகெழு
நெடுவரை,
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப்
பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச்
செண்இயற் சிறுபுறம்
தாம்பா ராட்டிய காலையும்
உள்ளார், .59-15
வீங்குஇறைப் பணைத்தோள்
நெகிழச், சேய்ந்நாட்டு
அருஞ்செயற் பொருட்பிணி
முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர்
சென்ற ஆறே! .59-18
***
பெருங்கடற் பரப்பில்
சேயிறா நடுங்கக்
கொடுந்தொழின் முகந்த
செங்கோல் அவ்வலை
நெடுந்திமில் தொழிலொடு
வைகிய தந்தைக்கு,
உப்புநொடை நெல்லின் மூரல்
வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச்
சொரிந்து, .60-5
கொழுமீன் தடியொடு
குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன்
தொண்டி அன்னஎம்
ஒண்தொடி ஞெமுக்கா தீமோ
தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர்மணல்
அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
.60-10
ஓரை ஆடினும் உயங்கும்நின்
ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள்
காணின், வென்வேற்
கொற்றச் சோழர் குடந்தை
வைத்த
நாடுதரு நிதியினுஞ் செறிய
அருங்கடிப் படுக்குவள்,
அறன்இல் யாயே .60-15
***
'நோற்றோர் மன்ற தாமே
கூற்றங்
கோளுற விளியார், பிறர்கொள
விளிந்தோர்' எனத்
தாள்வலம் படுப்பச்
சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர்
நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி!- தாழாது,
.61-5
உரும்எனச் சிலைக்கும்
ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண்
வன்சிலைக் கொளீஇ,
அருநிறத்து அழுத்திய
அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு
கொண்டு,
நறவுநொடை நெல்லின்
நாள்மகிழ் அயரும் .61-10
கழல்புனை திருந்துஅடிக்
கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண்
புல்லி
விழவுடை விழுச்சீர்
வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே -
முனாஅது
முழவுஉறழ் திணிதோள்
நெடுவேள் ஆவி .61-15
பொன்னுடை நெடுநகர்ப்
பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம்
பொருந்துதன் மறந்தே. .61-18
***
அயத்துவளர் பைஞ்சாய்
முருந்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும்
எயிறுகெழு துவர்வாய்,
ஆகத்து அரும்பிய முலையள்,
பணைத்தோள்,
மாத்தாட் குவளை
மலர்பிணைத் தன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅ
யோளொடு .62-5
பேயும் அறியா மறைஅமை
புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வு
பிரிந்து இசைப்பக்,
கரந்த கரப்பொடு
நாஞ்செலற்கு அருமையின்,
கடும்புனல் மலிந்த
காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம்
மண்ணுநள் போல, .62-10
நடுங்கு அஞர் தீர முயங்கி,
நெருநல்
ஆகம் அடைதந் தோளே -
வென்வேற்
களிறுகெழு தானைப் பொறையன்
கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து
வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,
.62-15
மடவது மாண்ட மாஅ யோளே! .62-16
***
கேளாய் வாழியோ மகளை! நின்
தோழி,
திருநகர் வரைப்பகம்
புலம்ப அவனொடு-
பெருமலை இறந்தது நோவேன்;
நோவல்-
கடுங்கண் யானை நெடுங்கை
சேர்த்தி,
முடங்குதாள் உதைத்த
பொலங்கெழு பூழி .63-5
பெரும்புலர் விடியல்
விரிந்து, வெயில் எறிப்பக்
கருந்தாள் மிடற்ற
செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு
குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம்
நீந்திக்.
கன்று காணாது, புன்கண்ண,
செவிசாய்த்து .63-10
மன்றுநிறை பைதல் கூறப், பல
உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின்
அசைஇ,
முதுவாய்ப் பெண்டின்
செதுகாற் குரம்பை,
மடமயில் அன்னஎன் நடைமெலி
பேதை .63-15
தோள்துணை யாகத் துயிற்றத்
துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு
கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல்?, எனக்
கலுழும்என் நெஞ்சே! .63-19
***
களையும் இடனாற் - பாக! உளை
அணி
உலகுகடப் பன்ன புள்இயற்
கலிமா
வகைஅமை வனப்பின் வள்புநீ
தெரியத்
தளவுப்பிணி அவிழ்ந்த
தண்பதப் பெருவழி,
ஐதுஇலங்கு அகல்இலை
நெய்கனி நோன்காழ் .64-5
வென்வேல் இளையர்
வீங்குபரி முடுகச்,
செலவுநாம் அயர்ந்தனம்
ஆயிற், பெயல
கடுநீர் வரித்த செந்நில
மருங்கின்,
விடுநெறி ஈர்மணல், வாரணம்
சிதரப்,
பாம்புஉறை புற்றத்து
ஈர்ம்புறங் குத்தி, .64-10
மண்ணுடைக் கோட்ட அண்ணல்
ஏஎறு
உடன்நிலை வேட்கையின்
மடநாகு தழீஇ,
ஊர்வயிற் பெயரும்
பொழுதிற், சேர்புஉடன்,
கன்றுபயிர் குரல,
மன்றுநிறை புகுதரும்
ஆபூண் தெண்மணி ஐதுஇயம்பு
இன்இசை .64-15
புலம்புகொள் மாலை
கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு
நிலையே. .64-17
***
உன்னங் கொள்கையொடு
உளம்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்;
என்னதூஉம்
ஈரம்சேரா இயல்பிற் பொய்ம்
மொழிச்
சேரிஅம் பெண்டிர்
சௌவையும் ஒழிகம்;
நாடுகண் அகற்றிய உதியஞ்
சேரற் .65-5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவஇனி - வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு
ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே -
மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய்
கூர்எரி, .65-10
மீன்கொள் பரதவர்
கொடுந்திமில் நளிசுடர்,
வான்தோய் புணரி மிசைக்கண்
டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅஉயர்
நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென்
றன்ன
கல்ஊர்பு இழிதரும்
புல்சாய் சிறுநெறிக், .65-15
காடுமீக் கூறும்
கோடுஏந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும்
அருஞ்சுரம், 'பணைத்தோள்,
நாறுஐங் கூந்தல், கொம்மை
வரிமுலை,
நிரைஇதழ் உண்கண்,
மகளிர்க்கு
அரியவால்' என அழுங்கிய
செலவே! .65-20
***
'இம்மை உலகத்து இசையொடும்
விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று
எய்துப,
செறுநரும் விழையும்
செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த
செம்மலோர்' எனப்
பல்லோர் கூறிய பழமொழி
எல்லாம் .66-5
வாயே ஆகுதல் வாய்த்தனம் -
தோழி!
நிரைதார் மார்பன் நெருநல்
ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப்,
புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு
இறப்போன்,
மாண்தொழில் மாமணி கறங்கக்,
கடை கழிந்து .66-10
காண்டல் விருப்பொடு
தளர்புதளர்பு ஓடும்
பூங்கட் புதல்வனை நோக்கி,
'நெடுந்தேர்
தாங்குமதி, வலவ!' என்று
இழிந்தனன்; தாங்காது,
மணிபுரை செவ்வாய்
மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும! செல்இனி,
அகத்து' எனக் .66-15
கொடுப்போற்கு ஒல்லான்
கலுழ்தலின், 'தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்'
என, மகனொடு
தானே புகுதந் தோனே; யான்
அது
படுத்தனென் ஆகுதல் நாணி,
இடித்து, 'இவற்
கலக்கினன் போலும்,
இக்கொடியோன்' எனச்சென்று
.66-20
அலைக்கும் கோலொடு குறுகத்,
தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர்
அவர்மனைப்
பயிர்வன போலவந்து
இசைப்பவும், தவிரான்
கழங்குஆடு ஆயத்து
அன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய,
.66-25
அழுங்கினன் அல்லனோ,
அயர்ந்த தன் மணனே! .66-26
***
யான்எவன் செய்கோ? தோழி!
பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும்,
அருளாது
உறைதுறந்து எழிலி
நீங்கலிற், பறைபு உடன்,
மரம்புல் லென்ற
முரம்புஉயர் நனந்தலை;
அரம்போழ் நுதிய வாளி
அம்பின் .67-5
நிரம்பா நோக்கின்; நிரயம்
கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல்அமர்க் கடந்த நாணுடை
மறவர்
பெயரும் பீடும் எழுதி
யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை
நடுகல் .67-10
வேல்ஊன்று பலகை
வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார்,
மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல்
நிரைகண் டன்ன
உவல்இடி பதுக்கை ஆள்உகு
பறந்தலை,
'உருஇல் பேஎய் ஊராத் தேரோடு
.67-15
நிலம்படு மின்மினி போலப்
பலஉடன்
இலங்கு பரல் இமைக்கும்'
என்ப - நம்
நலம்துறந்து உறைநர் சென்ற
ஆறே! .67-18
***
'அன்னாய்! வாழி, வேண்டு
அன்னை! நம் படப்பைத்
தணஅயத்து அமன்ற கூதளம்
குழைய,
இன்இசை அருவிப் பாடும்
என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு
அன்னை! நம் படப்பை
ஊட்டி யன்ன ஒண்தளிர்ச்
செயலை .68-5
ஓங்குசினைத் தொடுத்த ஊசல்,
பாம்புஎன,
முழுமுதல் துமிய
உரும்எறிந் தன்றே;
பின்னும் கேட்டியோ?'
எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனைதுயில்
மடிந்தனள்; அதன்தலை
மன்உயிர் மடிந்தன்றால்
பொழுதே ; காதலர் .68-10
வருவர் ஆயின், பருவம்இது'
எனச்
சுடர்ந்து இலங்கு எல்வளை
நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதுஅன்
றாக,
வந்தனர் - வாழி, தோழி!-
அந்தரத்து
இமிழ்பெயல் தலைஇய இனப்பல்
கொண்மூத் .68-15
தவிர்வுஇல் வெள்ளம்
தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யும்
கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல்
பலஉடன்
வெண்கோட்டு யானை விளிபடத்
துழவும்
அகல்வாய்ப் பாந்தட்
படாஅர்ப் .68-20
பகலும் அஞ்சும்
பனிக்கடுஞ் சுரனே. .68-21
***
ஆய்நலம் தொலைந்த மேனியும்,
மாமலர்த்
தகை வனப்புஇழந்த கண்ணும்,
வகைஇல
வண்ணம் வாடிய வரியும்
நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே;
உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
.69-5
செய்பொருள் திறவர் ஆகிப்,
புல்இலைப்
பராரை நெல்லி அம்புளித்
திரள்காய்
கான மடமரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது,
ஏமுற்று,
விண்பொரு நெடுங்குடை
இயல்தேர் மோரியர் .69-10
பொன்புனை திகிரி திரிதரக்
குறைத்த
அறைஇறந்து அகன்றனர்
ஆயினும், எனையதூஉம்
நீடலர் - வாழி, தோழி! -
ஆடுஇயல்
மடமயில் ஒழித்த
பீலிவார்ந்து, தம்
சிலைமாண் வல்வில்
சுற்றிப், பலமாண் .69-15
அம்புடைக் கையர் அரண்பல
நூறி,
நன்கலம் தரூஉம் வயவர்
பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண்
ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரின்
நாறும்நின்
அலர்முலை ஆகத்து
இன்துயில் மறந்தே. .69-20
***
கொடுந்திமிற் பரதவர்
வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும்
சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப்
பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை
பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை
முன்னே .70-5
அலர்வாய்ப் பெண்டிர்
அம்பல் தூற்றப்,
பலரும் ஆங்கு அறிந்தனர்
மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப்,
புதுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை
வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக்
கவினி மாநீர்ப் .70-10
பாசடைக் கலித்த கணைக்கால்
நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக்
கூட்டும்
வென்வேற் கவுரியர்
தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம்
இரங்கும் முன் துறை,
வெல்போர் இராமன்
அருமறைக்கு அவித்த .70-15
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ்,
அழுங்கல் ஊரே. .70-17
***
நிறைந்தோர்த் தேரும்
நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன்இன் மையின்
பற்றுவிட்டு, ஒரூஉம்
நயன்இல் மாக்கள் போல,
வண்டினம்
சுனைப்பூ நீத்துச்,
சினைப்பூப் படர,
மைஇல் மான்இனம் மருளப்,
பையென .71-5
வெந்துஆறு பொன்னின் அந்தி
பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு
படரோடு
அகல்இரு வானம் அம்மஞ்சு
ஈனப்,
பகல்ஆற்றுப் படுத்த
பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த
புலம்பின் நோதக, .71-10
ஆர்அஞர் உறுநர் அருநிறம்
சுட்டிச்
கூர்எஃகு எறிஞரின்
அலைத்தல் ஆனாது,
எள்அற இயற்றிய அழல்காண்
மண்டிலத்து
உள்ஊது ஆவியின் பைப்பய
நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் -
பெரிது அழிந்து, .71-15
இதுகொல் - வாழி, தோழி! என்
உயிர்
விலங்குவெங் கடுவளி
எடுப்பத்
துளங்குமரப் புள்ளின்
துறக்கும் பொழுதே? .71-18
***
இருள்கிழிப் பதுபோல்
மின்னி, வானம்
துளிதலைக் கொண்ட நளிபெயல்
நடுநாள்,
மின்னி மொய்த்த
முரவுவாய்ப் புற்றம்
பொன்எறி பிதிரிற் சுடர
வாங்கிக்,
குரும்பி, கெண்டும்
பெருங்கை ஏற்றை .72-5
இரும்புசெய் கொல்எனத்
தோன்றும் ஆங்கண்,
ஆறே அருமர பினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும்
சூருடை முதலைய;
கழைமாய் நீத்தம்
கல்பொருது இரங்க,
'அஞ்சுவம் தமியம்' என்னாது,
மஞ்சு சுமந்து, .72-10
ஆடுகழை நரலும் அணங்குடைக்
கவாஅன்,
ஈர்உயிர்ப் பிணவின்
வயவுப்பசி களைஇய,
இருங்களிறு அட்ட
பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட
உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர
ஈர்க்கும் .72-15
வாள்நடந் தன்ன
வழக்குஅருங் கவலை,
உள்ளுநர் உட்கும்
கல்அடர்ச் சிறுநெறி,
அருள்புரி நெஞ்சமொடு எஃகு
துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்;
தந்த
நீ தவறு உடையையும் அல்லை;
நின்வயின் .72-20
ஆனா அரும்படர் செய்த
யானே, தோழி, தவறுஉடை யேனே!
.72-22
***
பின்னொடு முடித்த மண்ணா
முச்சி
நெய்கனி வீழ்குழல்
அகப்படத் தைஇ;
வெருகுஇருள் நோக்கி யன்ன
கதிர் விடுபு
ஒருகாழ் முத்தம் இடைமுலை
விளங்க,
அணங்குறு கற்பொடு
மடம்கொளச் சாஅய், .73-5
நின்நோய்த் தலையையும்
அல்லை; தெறுவர
'என்ஆகுவள்கொல், அளியள்
தான்?' என,
என்அழிபு இரங்கும்
நின்னொடு யானும்
ஆறுஅன்று என்னா வேறுஅல்
காட்சி
இருவேம் நம்படர் தீர
வருவது .73-10
காணிய வம்மோ - காதல்அம்
தோழி!
கொடிபிணங்கு அரில
இருள்கொள் நாகம்
மடிபதம் பார்க்கும்,
வயமான் துப்பின்,
ஏனல்அம் சிறுதினைச்
சேணோன் கையதைப்
பிடிக்கை அமைந்த
கனல்வாய்க் கொள்ளி .73-15
விடுபொறிச் சுடரின்
மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால்
மழையே. .73-17
***
வினைவலம் படுத்த
வென்றியொடு மகிழ்சிறந்து,
போர்வல் இளையர் தாள்வலம்
வாழ்த்தத்,
தண்பெயல் பொழிந்த பைதுறு
காலை,
குருதி உருவின் ஒண்செம்
மூதாய்
பெருவழி மருங்கில் சிறுபல
வரிப்பப், .74-5
பைங்கொடி முல்லை மென்பதப்
புதுவீ
வெண்களர் அரிமணல் நன்பல்
தாஅய்,
வண்டுபோது அவிழ்க்கும்
தண்கமழ் புறவில்,
கருங்கோட்டு இரலைக் காமர்
மடப்பிணை
மருண்டமான் நோக்கம்
காண்தொறும், 'நின் நினைந்து
.74-10
"திண்தேர் வலவ! கடவு' எனக்
கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம்
பனி' என,
வன்புறை இன்சொல் நன்பல
பயிற்றும்
நின்வலித்து அமைகுவென்
மன்னோ - அல்கல்
புன்கண் மாலையொடு
பொருந்திக், கொடுங்கோற்
.74-15
கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய்ச் சிறுகுழல்
வருத்தாக் காலே! .74-17
***
"அருள் அன்று ஆக, ஆள்வினை,
ஆடவர்
பொருள்" என வலித்த
பொருள்அல் காட்சியின்
மைந்துமலி உள்ளமொடு
துஞ்சல் செல்லாது,
எரிசினம் தவழ்ந்த
இருங்கடற்று அடைமுதல்
கரிகுதிர் மரத்த கான
வாழ்க்கை, .75-5
அடுபுலி முன்பின்,
தொடுகழல் மறவர்
தொன்றுஇயல் சிறுகுடி
மன்றுநிழற் படுக்கும்
அண்ணல் நெடுவரை, ஆம்அறப்
புலர்ந்த
கல்நெறிப் படர்குவர்
ஆயின் - நல்நுதல்,
செயிர்தீர் கொள்கை,
சில்மொழி துவர்வாய், .75-10
அவிர்தொடிய முன்கை,
ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை
ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக்
குழையாது
சென்றுபடு விறற்கவின்
உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது,
பெயர்தந்து, யாவரும், .75-15
தருநரும் உளரோ, இவ் உலகத்
தான்?, என-
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம்மா மேனி, ஐதுஅமை
நுசுப்பின்;
பல்காசு நிரைத்த,
கோடுஏந்து, அல்குல்;
மெல்இயல் குறுமகள்!-
புலந்துபல கூறி .75-20
ஆனா நோலை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ ,
அரிதுபெறு சிறப்பின்
நின்வயி னானே?" .75-23
***
மண்கனை முழவொடு
மகிழ்மிகத் தூங்கத்,
தண்துறை ஊரன் எம்சேரி
வந்தென
இன்கடுங் கள்ளின் அஃதை
களிற்றொடு
நல்கலம் ஈயும் நாள்மகிழ்
இருக்கை
அவைபுகு பொருநர் பறையின்,
ஆனாது, .76-5
கழறுப என்ப, அவன் பெண்டிர்;
அந்தில்
கச்சினன், கழலினன்,
தேம்தார் மார்பினன்
வகைஅமைப் பொலிந்த,
வனப்புஅமை தெரியல்,
சுரியல்அம் பொருநனைக்
காண்டிரோ?' என,
ஆதி மந்தி பேதுற்று இனைய,
.76-10
சிறைபறைந்து உறைஇச்
செங்குணக்கு ஒழுகும்
அம்தண் காவிரி போல,
கொண்டுகை வலித்தல்
சூழ்ந்திசின், யானே! .76-13
***
'நல்நுதல் பசப்பவும்,
ஆள்வினை தரீஇயர்,
துன்அருங் கானம்
துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை
ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய,
நெஞ்சே!- வெய்துற
இடிஉமிழ் வானம் நீங்கி,
யாங்கணும் .77-5
குடிபதிப் பெயர்ந்த
சுட்டுடை முதுபாழ்,
கயிறுபிணிக் குழிசி ஓலை
கொண்மார்,
பொறிகண்டு அழிக்கும் ஆவண
மாக்களின்,
உயிர்திறம் பெயர,
நல்அமர்க் கடந்த
தறுக ணாளர் குடர்தரீஇத்
தெறுவச், .77-10
செஞ்செவி எருவை, அஞ்சுவர
இருக்கும்
கல்அதர்க் கவலை போகின்,
சீறூர்ப்
புல்அரை இத்திப் புகர்படு
நீழல்
எல்வளி அலைக்கும்,
இருள்கூர் மாலை,
வானவன் மறவன், வணங்குவில்
தடக்கை, .77-15
ஆனா நறவின் வண்மகிழ்
பிட்டன்
பொருந்தா மன்னர்
அருஞ்சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந்துயர் தரும், இவள்
பனிவார் கண்ணே! .77-19
***
'நனந்தலைக் கானத்து ஆளி
அஞ்சி,
இனம்தலைத் தரூஉம்
எறுழ்கிளர் முன்பின்,
வரிஞிமிறு ஆர்க்கும்,
வாய்புகு கடாஅத்துப்
பொறிநுதற் பொலிந்த
வயக்களிற்று ஒருத்தல்
இரும்பிணர்த் தடக்கையில்,
ஏமுறத் தழுவ, .78-5
கடுஞ்சூல் மடப்பிடி
நடுங்கும் சாரல்,
தேம்பிழி நறவின் குறவர்
முன்றில்
முந்தூழ் ஆய்மலர் உதிரக்,
காந்தள்
நீடுஇதழ் நெடுந்துடுப்பு
ஒசியத், தண்ணென
வாடை தூக்கும் வருபனி
அற்சிரம், .78-10
நம்இல் புலம்பின், நம்
ஊர்த் தமியர்
என்ஆ குவர்கொல் அளியர்
தாம்?' என
எம்விட்டு அகன்ற சின்னாள்,
சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ -
ஓங்குமலை நாட!
உலகுடன் திரிதரும்
பலர்புகழ் நல்இசை .78-15
வாய்மொழிக் கபிலன் சூழச்
சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின்
விளைகதிர் கொண்டு,
தடந்தாள் ஆம்பல் மலரொடு
கூட்டி,
யாண்டுபல கழிய,
வேண்டுவயிற் பிழையாது,
ஆள்இடூஉக் கடந்து,
வாள்அமர் உழக்கி, .78-20
ஏந்துகோட்டு யானை வேந்தர்
ஓட்டிய
நெடும்பரிப் புரவிக்
கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப்
பூத்த
தேம்கமழ் புதுமலர் நாறும் -
இவள் நுதலோ? .78-24
***
தோட்பதன் அமைத்த கருங்கை
ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி,
வினைப் படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய
வல்உயர்ப் படுவில்,
பார்உடை மருங்கின் ஊறல்
மண்டிய
வன்புலம் துமியப் போகிக்,
கொங்கர் .79-5
படுமணி ஆயம் நீர்க்கு
நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக்
குரூஉத் துகள்
அகல்இரு விசும்பின்
ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு
துணைப்ப,
'வல்லாங்கு வருதும்'
என்னாது, அல்குவர .79-10
வருந்தினை - வாழி என்
நெஞ்சே!- இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின்
வான்கட் பேடை,
ஆடுதொறு கனையும்
அவ்வாய்க் கடுந்துடிக்
கொடுவில் எயினர்
கோட்சுரம் படர
நெடுவிளி பயிற்றும்
நிரம்பா நீள்இடை, .79-15
கல்பிறங்கு அத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப்
பிரிந்த நீயே! .79-17
***
கொடுந்தாள் முதலையொடு
கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி இட்டுச்சுரம்
நீந்தி, இரவின்
வந்தோய் மன்ற - தண்கடற்
சேர்ப்ப !-
நினக்குஎவன் அரியமோ, யாமே?
எந்தை
புணர்திரைப் பரப்பகம்
துழைஇத் தந்த .80-5
பல்மீன் உணங்கற் படுபுள்
ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர்
அடைகரை
ஒண்பன் மலரக் கவட்டுஇலை
அடும்பின்
செங்கேழ் மென்கொடி ஆழி
அறுப்ப
இனமணிப் புரவி நெடுந்தேர்
கடைஇ, .80-10
மின்இலைப் பொலிந்த
விளங்கிணர் அவிழ்பொன்
தண்நறும் பைந்தாது
உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல்வந்
தீமே! .80-13
***
நாள்உலா எழுந்த கோள்வல்
உளியம்
ஓங்குசினை இருப்பைத்
தீம்பழம் முனையின்,
புல்அளைப் புற்றின்
பல்கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த
நனைவாய் நெடுங்கோடு
அரும்புஊது குருகின்,
இடந்து, இரை தேரும் .81-5
மண்பக வறந்த ஆங்கண்
கண்பொரக்
கதிர்தெறக் கவிழ்ந்த
உலறுதலை நோன்சினை
நெறிஅயல் மராஅம் ஏறிப்,
புலம்புகொள
எறிபருந்து உயவும்
என்றூழ் நீள்இடை
வெம்முனை அருஞ்சுரம்
நீந்திச் - சிறந்த .81-10
செம்மல் உள்ளம்
துரத்தலின், கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம்
களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில்
அன்ன, எம்
மைஎழில் உண்கண் கலுழ-
ஐய! சேறிரோ, அகன்றுசெய்
பொருட்கே? .81-15
ஆடுஅமைக் குயின்ற
அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக,
பாடுஇன் அருவிப் பனிநீர்
இன்இசைத்
தோடுஅமை முழவின்
துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும்
கடுங்குரற் றூம்பொடு .82-5
மலைப்பூஞ் சாரல்
வண்டுயாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக்,
கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன
நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலி
ஆடுமயில்
நனவுப்புகு விறலியின்
தோன்றும் நாடன்! .82-10
உருவவல் விற்பற்றி,
அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி
வினாஅய்ப்,
புலர்குரல் ஏனற் புழையுடை
ஒருசிறை,
மலர்தார் மார்பன்,
நின்றோற் கண்டோ ர்
பலர்தில், வாழி - தோழி -
அவருள், .82-15
ஆர்இருட் கங்குல் அணையொடு
பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு,
நெகிழ்தோ ளேனே? .82-18
***
வலம்சுரி மராஅத்துச்
சுரம்கமழ் புதுவீச்
சுரிஆர் உளைத்தலை பொலியச்
சூடி,
கறைஅடி மடப்பிடி கானத்து
அலறக்,
களிற்றுக் கன்று ஒழித்த
உவகையர், கலிசிறந்து,
கருங்கால் மராஅத்து
கொழுங்கொம்பு பிளந்து, .83-5
பெரும்பொழி வெண்நார்
அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும்
நியம மூதூர்,
நறவுநொடை நல்இல்
பதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன்
புல்லி
வியன்தலை நல்நாட்டு
வேங்கடம் கழியினும் .83-10
சேயர் என்னாது, அன்புமிகக்
கடைஇ,
எய்தவந் தனவால் தாமே -
நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர்
அன்ன
ஏந்துஎழில் மழைக்கண்எம்
காதலி குணனே! .83-14
***
மலைமிசைக் குலைஇய உருகெழு
திருவில்
பணைமுழங்கு எழிலி பௌவம்
வாங்கித்
தாழ்பெயற் பெருநீர்,
வலன்ஏர்பு வளைஇ,
மாதிரம் புதைப்பப்
பொழிதலின், காண்வர
இருநிலம் கவினிய ஏமுறு
காலை- .84-5
நெருப்பின் அன்ன சிறுகட்
பன்றி,
அயிர்க்கட் படாஅர்த்
துஞ்சுபுறம் புதைய,
நறுவீ முல்லை நாண்மலர்
உதிரும்
புறவு அடைந் திருந்த
அருமுனை இயவிற்
சீறூ ரோளே, ஒண்ணுதல்! - யாமே,
.84-10
எரிபுரை பன்மலர் பிறழ
வாங்கி,
அரிஞர் யாத்த அலங்குதலைப்
பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர்
களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங்கு
ஆர்எயில்
அருந்திறை கொடுப்பவும்
கொள்ளான், சினம்சிறந்து,
.84-15
வினைவயின் பெயர்க்குந்
தானைப்,
புனைதார், வேந்தன் பாசறை
யேமே! .84-17
***
'நன்னுதல் பசப்பவும்,
பெருந்தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு
உயிர்செலச் சாஅய்
இன்னம் ஆகவும், இங்குநத்
துறந்தோர்
அறவர் அல்லர் அவர்' எனப்
பலபுலந்து,
ஆழல் - வாழி, தோழி!- 'சாரல்,
.85-5
ஈன்றுநாள் உலந்த மென்னடை
மடப்பிடி,
கன்றுபசி களைஇய, பைங்கண்
யானை
முற்றா மூங்கில்
முளைதருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட
நெடுவரை;
நல்நாள் பூத்த நாகுஇள
வேங்கை .85-10
நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின்
நாறுசினை இருந்து,
துணைப்பயிர்ந்து அகவும்
துணைதரு தண்கார்,
வருதும், யாம்' எனத்
தேற்றிய
பருவம் காண் அது;
பாயின்றால் மழையே. .85-15
***
உழுந்துதலைப் பெய்த
கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப,
நிரைகால்
தண்பெரும் பந்தர்த்
தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை
தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு
காலைக், .86-5
கோள்கால் நீங்கிய
கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ்
நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர்,
புத்தகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம்
பெண்டிர்
முன்னவும் பின்னவும்
முறைமுறை தரத்தரப், .86-10
புதல்வற் பயந்த திதலை! அவ்
வயிற்று
வால்இழை மகளிர் நால்வர்
கூடிக்,
'கற்பினின் வழாஅ, நற்பல
உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை
ஆக'- என
நீரொடு சொரிந்த ஈர்இதழ்
அலரி .86-15
பல்இருங் கதுப்பின்
நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த
பின்றைக்,
கல்லென் சும்மையர்,
ஞெரேரெனப் புகுதந்து,
'பேர்இற் கிழத்தி ஆக' எனத்
தமர்தர;
ஓர்இற் கூடிய உடன்புணர்
கங்குல், .86-20
கொடும்புறம் வளஇக், கோடிக்
கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த
ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு
முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை,
யாழநின்
நெஞ்சம் படர்ந்தது
எஞ்சாது உரை' என. .86-25
இன்நகை இருக்கை, பின்யான்
வினவலின்-
செஞ்சூட்டு ஒண்குழை
வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி, முகன்
இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே -
மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி, மா அ யோளே.
.86-31
***
தீந்தயிர் கடைந்த
திரள்கால் மத்தம்
கன்றுவாய் சுவைப்ப,
முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல்வேய்
குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித்
தங்கிக்,
குடுமி நெற்றி நெடுமரச்
சேவல் .87-5
தலைக்குரல் விடியற் போகி,
முனாஅது,
கடுங்கண் மறவர் கல்லெழு
குறும்பின்
எழுந்த தண்ணுமை
இடங்கட்பாணி,
அருஞ்சுரம் செல்வோர்
நெஞ்சம் துண்ணெனக்,
குன்றுசேர் கவலை,
இசைக்கும் அத்தம், .87-10
நனிநீடு உழந்தனை மன்னே!
அதனால்
உவஇனி - வாழிய, நெஞ்சே - மைஅற
வைகுசுடர் விளங்கும்
வான்தோய் வியனகர்ச்
சுணங்குஅணி வனமுலை நலம்பா
ராட்டித்,
தாழ்இருங் கூந்தல்நம்
காதலி .87-15
நீள்அமை வனப்பின்
தோளுமார் அணைந்தே! .87-16
***
முதைச்சுவற் கலித்த
மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல்
உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி
பாடுஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம்
நோக்கி,
கடுங்கைக் கானவன்
கழுதுமிசைக் கொளீஇய .88-5
நெடுஞ்சுடர் விளக்கம்
நோக்கி வந்து, நம்
நடுங்குதுயர் களைந்த நன்ன
ராளன்
சென்றனன் கொல்லோ தானே -
குன்றத்து
இரும்புலி தொலைத்த
பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதரும்
காமர் கடாஅம் .88-10
இருஞ்சிறைத் தொழுதி
ஆர்ப்ப, யாழ்செத்து,
இருங்கல் விடர்அளை அசுணம்
ஓர்க்கும்
காம்புஅமல் இறும்பில்
பாம்புபடத் துவன்றிக்,
கொடுவிரல் உளியம்
கெண்டும்
வடுஆழ் புற்றின வழக்குஅரு
நெறியே? .88-15
***
தெறுகதிர் ஞாயிறு
நடுநின்று காய்தலின்,
உறுபெயல் வறந்த ஓடுதேர்
நனந்தலை,
உருத்துஎழு குரல குடிஞைச்
சேவல்,
புல்சாய் விடரகம் புலம்ப,
வரைய
கல்லெறி இசையின் இரட்டும்
ஆங்கண், .89-5
சிள்வீடு கறங்கும்
சிறியிலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிரக்,
காழியர்
கவ்வைப் பரப்பின்
வெவ்வுவர்ப்பு ஒழியக்,
களரி பரந்த கல்நெடு
மருங்கின்,
விளர்ஊன் தின்ற
வீங்குசிலை மறவர் .89-10
மைபடு திண்தோள் மலிர
வாட்டிப்,
பொறைமலி கழுதை நெடுநிரை
தழீஇய
திருந்துவாள் வயவர்
அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும்
ஞாட்பில், துடிஇகுத்து
அருங்கலம் தெறுத்த
பெரும்புகல் வலத்தர், .89-15
விலங்கெழு குறும்பில்
கோள்முறை பகுக்கும்
கொல்லை இரும்புனம் நெடிய
என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே -
தேம்பெய்து
அளவுறு தீம்பால்
அலைப்பவும் உண்ணாள், .89-20
இடுமணற் பந்தருள் இயலும்,
நெடுமென் பணைத்தோள், மாஅ
யோளே? .89-22
***
மூத்தோர் அன்ன வெண்தலைப்
புணரி
இளையோர் ஆடும் வரிமனை
சிதைக்கும்
தளைஅவிழ் தாழைக் கானல்அம்
பெருந்துறை
சில்செவித்து ஆகிய
புணர்ச்சி அலர்எழ,
இல்வயிற் செறித்தமை
அறியாய்; பன்னாள் .90-5
வருமுலை வருத்தா,
அம்பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு
வருந்தும் நின்வயின்,
'நீங்குக' என்று, யான்
யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறற் கடவுட்
செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று
ஆகி, யாணர், .90-10
இரும்புஇடம் படுத்த
வடுவுடை முகத்தர்,
கருங்கட் கோசர் நியமம்
ஆயினும்
'உறும்' எனக் கொள்குநர்
அல்லர்-
நறுநுதல் அரிவை பாசிலை
விலையே! .90-14
***
விளங்குபகல் உதவிய
பல்கதிர் ஞாயிறு
வளம்கெழு மாமலை பயம்கெடத்
தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை
மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ
நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங்கண் யானை
.91-5
ஓய்பசிப் பிடியொடு
ஒருதிறன் ஒடுங்க,
வேய்கண் உடைந்த
வெயில்அவிர் நனந்தலை
அரும்பொருள் வேட்கையின்
அகன்றனர் ஆயினும்,
பெரும்பேர் அன்பினர் -
தோழி!- இருங்கேழ்
இரலை சேக்கும், பரல்உயர்
பதுக்கைக் .91-10
கடுங்கண் மழவர் களவுஉழவு
எழுந்த
நெடுங்கால் ஆசினி
ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின்
குட்டுவன் காப்பப்,
பசிஎன அறியாப் பணைபயில்
இருக்கைத்,
தடமருப்பு எருமை தாமரை
முனையின், .91-15
முடமுதிர் பலவின்
கொழுநிழல் வதியும்,
குடநாடு பெறினும், தவிரலர்-
மடமாண் நோக்கி! நின்
மாண்நலம் மறந்தே! .91-18
***
நெடுமலை அடுக்கம் கண்கெட
மின்னிப்,
படுமழை பொழிந்த பானாட்
கங்குல்,
குஞ்சரம் நடுங்கத்
தாக்கிக், கொடுவரிச்
செங்கண் இரும்புலி
குழுமும் சாரல்
வாரல் - வாழியர், ஐய! நேர்இறை
.92-5
நெடுமென் பணைத்தோள்
இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே;
நாளை
மந்தியும் அறியா
மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த
ஆங்கண்
தண்பல் அருவித் தாழ்நீர்
ஒருசிறை, .92-10
உருமுச் சிவந்து எறிந்த
உரன்அழி பாம்பின்
திருமணி விளக்கிற்
பெறுகுவை-
இருள்மென் கூந்தல் ஏமுறு
துயிலே! .92-13
***
கேள்கேடு ஊன்றவும்
கிளைஞர் ஆரவும்,
கேள்அல் கேளிர்
கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய
ஊக்கமொடு புகல்சிறந்து,
ஆரங் கண்ணி அடுபோர்ச்
சோழர்
அறம்கெழு நல்அவை உறந்தை
அன்ன .93-5
பெறல்அரு நன்கலம் எய்தி
நாடும்
செயல்அருஞ் செய்வினை
முற்றினம் ஆயின்,
அரண்பல கடந்த, முரண்கொள்
தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள்அங் காடி நாறும்
நறுநுதல் .93-10
நீள்இருங் கூந்தன் மாஅ
யோளொடு,
வரைகுயின் றன்ன வான்தோய்
நெடுநகர்,
நுரைமுகந் தன்ன மென்பூஞ்
சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர்
விளக்கத்து,
நலம்கேழ் ஆகம் பூண்வடுப்
பொறிப்ப, .93-15
முயங்குகம் சென்மோ -
நெஞ்சே! வரிநுதல்
வயம்திகழ்பு இழிதரும்
வாய்புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு
நிலன்எறியாக் குறுகி,
ஆள்கோள் பிழையா, அஞ்சுவரு
தடக்கைக்,
கடும்பகட்டு யானை
நெடுந்தேர்க் கோதை .93-20
திருமா வியனகர்க் கருவூர்
முன்துறைத்,
தெண்நீர் உயர்கரைக்
குவைஇய
தன்ஆன் பொருநை மணலினும்
பலவே! .93-23
***
தேம்படு சிமயப் பாங்கர்ப்
பம்பிய
குவைஇலை முசுண்டை
வெண்பூக் குழைய,
வான்எனப் பூத்த பானாட்
கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த
பறிப்புற இடையன்
தண்கமழ் முல்லை
தோன்றியொடு விரைஇ, .94-5
வண்டுபடத் தொடுத்த
நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்,
குறுநரி உளம்பும்
கூர்இருள் நெடுவிளி
சிறுகட் பன்றிப் பெருநிரை
கடிய,
முதைப்புனம் காவலர்
நினைத்திருந்து ஊதும் .94-10
கருங்கோட்டு ஓசை யொடு
ஒருங்குவந்து இசைக்கும்
வன்புலக் காட்டுநாட்
டதுவே - அன்புகலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும்பல் கூந்தல்,
திருந்திழை ஊரே! .94-14
***
பைப்பயப் பசந்தன்று
நுதலும்; சாஅய்,
ஐதுஆ கின்று, என் தளிர்புரை
மேனியும்,
பலரும் அறியத் திகழ்தரும்
அவலமும்;
உயிர்கொடு கழியின் அல்லதை;
நினையின்
எவனோ?- வாழி, தோழி!- பொரிகாற்
.95-5
பொகுட்டுஅரை இருப்பைக்
குவிகுலைக் கழன்ற
ஆலிஒப்பின் தூம்புடைத்
திரள்வீ,
ஆறுசெல் வம்பலர் நீள்இடை
அழுங்க,
ஈனல் எண்கின் இருங்கிளை
கவரும்
சுரம்பல கடந்தோர்க்கு
இரங்குப என்னார், .95-10
கௌவை மேவலர் ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா
கூறுவ
புரைய அல்ல, என் மகட்கு'
எனப் பரைஇ,
நம்உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர், யாம்என்,
இதற்படலே? .95-15
***
நறவுண் மண்டை நுடக்கலின்
இறவுக்கலித்துப்,
பூட்டுஅறு வில்லிற்
கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப்
பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள்
நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல்அடை
துடக்கி, .96-5
அசைவரல் வாடை தூக்கலின்,
ஊதுஉலை
விசைவாங்கு தோலின்,
வீஞ்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி
ஊர!
'ஒண்தொடி ஆயத் துள்ளும்நீ
நயந்து
கொண்டனை' என்ப 'ஓர்
குறுமகள்'; அதுவே- .96-10
செம்பொற் சிலம்பின்,
செறிந்த குறங்கின்,
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடுபோர்ச்
சோழர்,
வெண்ணெல் வைப்பின்
பருவூர்ப் பறந்தலை,
இருபெரு வேந்தரும்
பொருதுகளத்து ஒழிய, .96-15
ஒளிறுவாள் நல்அமர்க்
கடந்த ஞான்றை,
களிறுகவர் கம்பலை போல,
அலர்ஆ கின்றது, பலர்வாய்ப்
பட்டே! .96-18
***
'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம்
பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர,
வலம்கடந்து,
புலவுப்புலி துறந்த
கலவுக்கழிக் கடுமுடை
இரவுக்குறும்பு அலற நூறி,
நிரைபகுத்து,
இருங்கல் முடுக்கர்த்
திற்றி கெண்டும் .97-5
கொலைவில் ஆடவர் போலப்,
பலவுடன்
பெருந்தலை எருவையொடு
பருந்துவந்து இறுக்கும்
அருஞ்சுரம் இறந்த
கொடியோர்க்கு அல்கலும்,
இருங்கழை இறும்பின்
ஆய்ந்துகொண்டு அறுத்த
நுணங்குகட் சிறுகோல்
வணங்குஇறை மகளிரொடு .97-10
அகவுநர்ப் புரந்த அன்பின்
கழல்தொடி,
நறவுமகிழ் இருக்கை, நன்னன்
வேண்மான்
வயலை வேலி வியலூர்
அன்னநின்
அலர்முலை ஆகம் புலம்பப் பல
நினைந்து,
ஆழேல், என்றி - தோழி! யாழ என்
.97-15
கண்பனி நிறுத்தல் எளிதோ -
குரவுமலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும்பத
வேனில்
அறல்அவிர் வார்மணல்
அகல்யாற்று அடைகரைத்
துறைஅணி மருத தொகல்கொள
ஓங்கிக்,
கலிழ்தளிர் அணிந்த
இருஞ்சினை மாஅத்து .97-20
இணர்ததை புதுப்பூ நிரைத்த
பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ்சு ஊர,
நுகர்குயில் அகவும்
குரல்கேட் போர்க்கே? .97-23
***
பனிவரை நிவந்த பயம்கெழு
கவாஅன்
துனிஇல் கொள்கையொடு
அவர்நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக,
முனிதக நிறுத்த நல்கல்
எவ்வம்
சூர்உறை வெற்பன்
மார்புஉறத் தணிதல் .98-5
அறிந்தனள் அல்லள், அன்னை;
வார்கோல்
செறிந்துஇலங்கு எல்வளை
நெகிழ்ந்தமை நோக்கிக்,
கையறு நெஞ்சினள் வினவலின்,
முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர்
பிரப்புஉளர்பு இரீஇ,
'முருகன் ஆர் அணங்கு'
என்றலின், அது செத்து .98-10
ஓவத் தன்ன வினைபுனை நல்இல்
'பாவை அன்ன பலர்ஆய்
மாண்கவின்
பண்டையின் சிறக்க, என்
மகட்கு' எனப் பரைஇ,
கூடுகொள் இன்இயம் கறங்கக்,
களன் இழைத்து,
ஆடுஅணி அயர்ந்த
அகன்பெரும் பந்தர், .98-15
வெண்போழ் கடம்பொடு சூடி,
இன்சீர்
ஐதுஅமை பாணி இரீஇக்,
கைபெயராச்,
செல்வன் பெரும்பெயர்
ஏத்தி, வேலன்
வெறிஅயர் வியன்களம் பொற்ப
வல்லோன்
பொறிஅமை பாவையிற் றூங்கல்
வேண்டின், .98-20
எ ன்ஆம் கொல்லோ?- தோழி!-
மயங்கிய
மையற் பெண்டிற்க்கு
நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையிற் சிறவாது ஆயின்,
இம்மறை
அலர்ஆ காமையோ அரிதே,
அஃதான்று, .98-25
அறிவர் உறுவிய அல்லல்கண்
டருளி,
வெறிகமழ் நெடுவேள் நல்குவ
னேயெனின்,
'செறிதொடி உற்ற செல்லலும்
பிறிது' எனக்
கான்கெழு நாடன் கேட்பின்,
யான்உயிர் வாழ்தல்
அதனினும் அரிதே! .98-30
***
வாள்வரி வயமான் கோள்உகிர்
அன்ன
செம்முகை அவிழ்ந்த
முள்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தா அய்,
மதர்எழில்
மாண் இழை மகளிர் பூணுடை
முலையின்
முகைபிணி அவிழ்ந்த
கோங்கமொடு அசைஇ, நனை .99-5
அதிரல் பரந்த அம்தண்
பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய்,
எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப்
பராஅம்
அணங்குடை நகரின் மணந்த
பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம,
.99-10
கண்டிசின வாழியோ -
குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை
மருப்பின்,
பிடிமிடை களிற்றின்
தோன்றும்
குறுநெடுந் துணைய
குன்றமும் உடைத்தே! .99-14
***
அரையுற்று அமைந்த ஆரம்
நீவிப்,
புரையப் பூண்ட கோதை
மார்பினை,
நல்லகம் வடுக்கொள முயங்கி,
நீ வந்து,
எல்லினில் பெயர்தல்
எனக்குமார் இனிதே!
பெருந்திரை முழக்கமொடு
இயக்குஅவிந் திருந்த .100-5
கொண்டல் இரவின் இருங்கடன்
மடுத்த
கொழுமீன் கொள்பவர்
இருள்நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன்
பாசறை
ஆடுஇயல் யானை அணிமுகத்து
அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத்
தோன்றும் .100-10
பாடுநர்த் தொடுத்த கைவண்
கோமான்,
பரியுடை நற்றோர்ப்
பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானற் புறந்தை
முன்துறை
வம்ப நாரை இனன்ஒலித் தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய -
தண்புலர் .100-15
வைகுறு விடியற் போகிய
எருமை
நெய்தல்அம் புதுமலர்
மாந்தும்
கைதைஅம் படப்பைஎம்
அழுங்கல் ஊரே! .100-18
***
அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்றுசெய் மருங்கில்
தீதுஇல்' என்னும்
தொன்றுபடு பழமொழி
இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச்
சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச்
செங்கண் மழவர் .101-5
வாய்ப்பகை கடியும்
மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல்
வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ,
நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய
ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த
கன்றுடைக் கொள்ளையர், .101-10
இனம்தலை பெயர்க்கும்
நனந்தலைப் பெருங்காட்டு,
அகல்இரு விசும்பிற்கு
ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர்
ஞாயிற்று
உருப்புஅவிர்பு ஊரிய
சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி
பன்மலர், .101-15
தண்கார் ஆலியின், தாவன
உதிரும்,
பனிபடு பன்மலை
இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம்
செய்தன்றோ இலமே! .101-18
***
உளைமான் துப்பின்,
ஓங்குதினைப்
பெரும்புனத்துக்
கழுதில் கானவன்
பிழிமகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல்
இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக்,
கைபெயரா,
ஒலியல் வார்மயிர் உளரினள்,
கொடிச்சி .102-5
பெருவரை மருங்கிற்
குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது,
நிலையினும் பெயராது,
படாஅப் பைங்கண்
பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழகளிறு
உறங்கும் நாடன்;
ஆர மார்பின் வரிஞிமிறு
ஆர்ப்பத், .102-10
தாரன் கண்ணியன், எஃகுடை
வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பிப்,
பையென
வீழாக் கதவம் அசையினன்
புகுதந்து,
உயங்குபடர் அகலம்
முயங்கித், தோள்மணந்து
இன்சொல் அளைஇப்,
பெயர்ந்தனன் - தோழி!- .102-15
இன்றுஎவன் கொல்லோ
கண்டிகும் - மற்றுஅவன்
நல்கா மையின் அம்பல் ஆகி,
ஒருங்குவந்து உவக்கும்
பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்நுதற்
பசப்பே! .102-19
***
நிழல்அறு நனந்தலை,
எழில்ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு
செந்நாவின்,
விதிர்த்த போலும் அம்நுண்
பல்பொறிக்,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளிஅரில் புலம்பப் போகி,
முனாஅது .103-5
முரம்பு அடைந் திருந்த
மூரி மன்றத்து,
அதர்பார்த்து அல்கும்
ஆகெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்குநிலை
வியன்மலை ;
இறைநிழல் ஒருசிறைப்
புலம்புஅயா உயிர்க்கும்
வெம்முனை அருஞ்சுரம்
நீந்தித், தம்வயின் .103-10
ஈண்டுவினை மருங்கின்
மீண்டோ ர் மன்என,
நள்ளென் யாமத்து
உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று,
தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ, நாம்
நயந்திசி னோரே? .103-15
***
வேந்துவினை முடித்த
காலைத், தேம்பாய்ந்து
இனவண்டு ஆர்க்கும்
தண்நறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற,
வலவன்
வள்புவலித்து ஊரின்
அல்லது, முள்உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி
ஆற்றா .104-5
நன்னால்கு பூண்ட கடும்பரி
நெடுந்தேர்
வாங்குசினை பொலிய ஏறிப்;
புதல
பூங்கொடி அவரைப் பொய்அதள்
அன்ன
உள்இல் வயிற்ற, வெள்ளை
வெண்மறி,
மாழ்கி யன்ன தாழ்பெருஞ்
செவிய, .104-10
புன்றலைச் சிறாரோடு உகளி,
மன்றுழைக்
கவைஇலை ஆரின் அங்குழை
கறிக்கும்
சீறூர் பலபிறக்கு ஒழிய,
மாலை
இனிதுசெய் தனையால் - எந்தை!
வாழிய!-
பனிவார் கண்ணள் பலபுலந்து
உறையும் .104-15
ஆய்தொடி அரிவை கூந்தற்
போதுகுரல் அணிய வேய்தந்
தோயே! .104-17
***
அகல்அறை மலர்ந்த
அரும்புமுதிர் வேங்கை
ஒள்இலைத் தொடலை தைஇ,
மெல்லென
நல்வரை நாடன் தற்பா ராட்ட
யாங்குவல் லுநள்கொல் தானே -
தேம்பெய்து,
மணிசெய் மண்டைத் தீம்பால்
ஏந்தி, .105-5
ஈனாத் தாயர் மடுப்பவும்
உண்ணாள்,
நிழற்கயத் தன்ன நீணகர்
வரைப்பின்
எம்முடைச் செல்வமும்
உள்ளாள், பொய்ம்மருண்டு
பந்துபுடைப் பன்ன பாணிப்
பல்லடிச்
சில்பரிக் குதிரை, பல்வேல்
எழினி .105-10
கெடல்அருந் துப்பின்
விடுதொழில் முடிமார்,
கனைஎரி நடந்த கல்காய்
கானத்து
வினைவல் அம்பின்
விழுத்தொடை மறவர்
தேம்பிழி நறுங்கள்
மகிழின், முனைகடந்து
வீங்குமென் சுரைய
ஏற்றினம் தரூஉம் .105-15
முகைதலை திறந்த வேனிற்
பகைதலை மணந்த பல்அதர்ச்
செலவே? .105-17
***
எரிஅகைந் தன்ன தாமரைப்
பழனத்துப்,
பொரிஅகைந் தன்ன பொங்குபல்
சிறுமீன்,
வெறிகொள் பாசடை, உணீஇயர்,
பைப்பயப்
பறைதபு முதுசிரல்
அசைபுவந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டுதன்,
கொழுநனை .106-5
நம்மொடு புலக்கும் என்ப -
நாம்அது
செய்யாம் ஆயினும், உய்யா
மையின்,
செறிதொடி தெளிர்ப்ப
வீசிச், சிறிதுஅவண்
உலமந்து வருகம் சென்மோ -
தோழி!-
ஒளிறுவாட் டானைக் கொற்றச்
செழியன் .106-10
வெளிறுஇல் கற்பின்
மண்டுஅமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன்
எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர்,
தன் வயிறே! .106-13
***
நீசெலவு அயரக் கேட்டொறும்,
பலநினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப்
பொறை மெலிந்த
என்அகத்து இடும்பை
களைமார், நின்னொடு
கருங்கல் வியல்அறைக்
கிடப்பி, வயிறுதின்று
இரும்புலி துறந்த
ஏற்றுமான் உணங்கல் .107-5
நெறிசெல் வம்பலர்
உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின்
அரிசியொடு ஓராங்கு
ஆன்நிலைப் பள்ளி
அளைசெய்து அட்ட
வால்நிணம் உருக்கிய வாஅல்
வெண்சோறு
புகர்அரைத் தேக்கின்
அகல்இலை மாந்தும் .107-10
கல்லா நீள்மொழிக் கதநாய்
வடுகர்
வல்லாண் அருமுனை நீந்தி,
அல்லாந்து,
உகுமண்ஊறு அஞ்சும்
ஒருகாற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி,
முடம் கூர்ந்து,
ஒருதனித்து ஒழிந்த உரனுடை
நோன்பகடு .107-15
அம்குழை இருப்பை அறைவாய்
வான்புழல்
புல்உளைச் சிறாஅர்
வில்லின் நீக்கி,
மரைகடிந்து ஊட்டும்
வரையகச் சீறூர்
மாலை இன்துணை ஆகிக், காலைப்
பசுநனை நறுவீப்
பரூஉப்பரல் உறைப்ப, .107-20
மணமனை கமழும் கானம்
துணைஈர் ஓதிஎன் தோழியும்
வருமே! .107-22
***
புணர்ந்தோர் புன்கண்
அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று மன்னால்!
எவன்கொல்? முத்தம்
வரைமுதற் சிதறிய வைபோல்,
யானைப்
புகர்முகம் பொருத
புதுநீர் ஆலி
பளிங்குசொரி வதுபோற் பாறை
வரிப்பக், .108-5
கார்கதம் பட்ட கண்அகன்
விசும்பின்
விடுபொறி ஞெகிழியிற்
கொடிபட மின்னி,
படுமழை பொழிந்த பானாட்
கங்குல்,
ஆர்உயிர்த் துப்பின்
கோள்மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல்
யாவதும் .108-10
அருளான் - வாழி தோழி!- அல்கல்
விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ
அரவின்
அணங்குடை அருந்தலை
பைவிரிப் பவைபோற்,
காயா மென்சினை தோய நீடிப்
பல்துடுப்பு எடுத்த
அலங்குகுலைக் காந்தள் .108-15
அணிமலர் நறுந்தாது ஊதும்
தும்பி
கைஆடு வட்டின் தோன்றும்
மைஆடு சென்னிய மலைகிழ வோனே!
.108-18
***
பல்இதழ் மென்மலர் உண்கண்,
நல்யாழ்
நரம்புஇசைத் தன்ன இன்தீம்
கிளவி,
நலம்நல்கு ஒருத்தி இருந்த
ஊரே-
கோடுழு களிற்றின் தொழுதி
ஈண்டிக்
காடுகால் யாத்த நீடுமரச்
சோலை .109-5
விழைவெளில் ஆடும் கழைவளர்
நனந்தலை;
வெண்நுனை அம்பின் விசைஇட
வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா
உவல்இடு பதுக்கைச்
சுரம்கெழு கவலை கோட்பாற்
பட்டென,
வழங்குநர் மடிந்த அத்தம்
இறந்தோர், .109-10
கைப்பொருள் இல்லை ஆயினும்,
மெய்க்கொண்டு
இன்உயிர் செகாஅர்
விட்டுஅகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு
வரி அதள் இறுக்கும்
அறன்இல் வேந்தன் ஆளும்
வறன்உறு குன்றம் பலவிலங்
கினவே. .109-15
***
அன்னை அறியினும் அறிக;
அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும்
கேட்க;
பிறிதுஒன்று இன்மை அறியக்
கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த்
தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன்,
நினக்கே; கானல் .110-5
தொடலை ஆயமொடு கடல்உடன்
ஆடியும்,
சிற்றில் இழைத்தும்,
சிறுசோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர
யாம் சிறிது
இருந்தன மாக எய்த வந்து
'தடமென் பணைத்தோள் மடநல்
லீரே! .110-10
எல்லும் எல்லின்று;
அசைவுமிக உடையேன்;
மெல்இலைப் பரப்பின்
விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித்
தங்கின்மற்று எவனோ?'
எனமொழிந் தனனே ஒருவன்;
அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தேம்
புறம்சேர்பு பொருந்தி, .110-15
'இவைநுமக்கு உரிய அல்ல;
இழிந்த
கொழுமீன் வல்சி' என்றனம்;
இழுமென
'நெடுங்கொடி நுடங்கும்
நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின்
சிதையா,
நில்லாது பெயர்ந்த
பல்லோர் ருள்ளும் .110-20
என்னே குறித்த நோக்கமொடு
'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக்
கூறி,
யான் 'பெயர்க' என்ன
நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி
பற்றி,
நின்றோன் போலும்
இன்றும்என் கட்கே! .110-25
***
உள் ஆங்கு உவத்தல்
செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து
ஏஎச்சொல் நாணி
வருவர் - வாழி, தோழி!- அரச
யானை கொண்ட துகிற்கொடி
போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த
சிலம்பி .111-5
ஓடைக் குன்றத்துக்
கோடையொடு துயல்வர
மழைஎன மருண்ட மம்மர்
பலஉடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை
நெடுங்கை
தொகுசொற் கோடியர்
தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள்
.111-10
செந்நாய் ஏற்றைக் கம்மென
ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச்
செஞ்செவி,
மண்டுஅமர் அழுவத்து
எல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின்,
தோன்றும்
விண்தோய் பிறங்கல்
மலைஇறந் தோரோ! .111-15
***
கூனல் எண்கின் குறுநடைத்
தொழுதி
சிதலை செய்த செந்நிலைப்
புற்றின்
மண்புனை நெடுங்கோடு உடைய
வாங்கி,
இரைநசைப் பரிக்கும்
அரைநாட் கங்குல்
ஈன்றுஅணி வயவுப்பிணப்
பசித்தென மறப்புலி .112-5
ஒளிறுஏந்து மருப்பின்
களிறுஅட்டுக் குழுமும்
பனிஇருஞ் சோலை எமியம்
என்னாய்
தீங்குசெய் தனையே,
ஈங்குவந் தோயே;
நாள்இடைப் படின், என் தோழி
வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும்
வெய்யை; .112-10
கழியக் காதலர் ஆயினும்,
சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம்
வெஃகார்;
வரையின் எவனோ?- வான்தோய்
வெற்ப!-
கணக்கலை இகுக்கும்
கறிஇவர் சிலம்பின்
மணப்புஅருங் காமம்
புணர்ந்தமை அறியார், .112-15
தொன்றுஇயல் மரபின் மன்றல்
அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள
நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல,
இவள்
புதுநாண் ஒடுக்கமும்
காண்குவம், யாமே! .112-19
***
நன்றுஅல் காலையும்
நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம்
திரிபுஇல் சூழ்ச்சியிற்,
புன்தலை மடப்பிடி அகவுநர்
பெருமகன்
அமர்வீசு வண்மகிழ் அஃதைப்
போற்றிக்,
காப்புக் கைந்நிறுத்த
பல்வேற் கோசர் .113-5
இளங்கள் கமழும்
நெய்தல்அம் செறுவின்
வளம்கெழு நன்னாடு அன்னஎன்
தோள்மணந்து,
அழுங்கன் மூதூர்
அலர்எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர்,
'என்றும்
கல்பொரூஉ மெலியாப் பாடின்
நோன்அடியன் .113-10
அல்கு வன்சுரைப் பெய்த
வல்சியர்
இகந்தன ஆயினும்,
இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும்
கூழ்கெழு குறும்பிற்
குவைஇமில் விடைய வேற்றுஆ
ஒய்யும்
கனைஇருஞ் சுருணைக்
கனிகாழ் நெடுவேல் .113-15
விழவுஅயர்ந் தன்ன
கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட்டு
உம்பர்,
நெறிசெல் வம்பலர்க் கொன்ற
தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச்
சின்னீர்
அறுதுறை அயிர்மணற்
படுகரைப் போகிச், .113-20
சேயர்' என்றலின், சிறுமை
உற்றஎன்
கையறு நெஞ்சத்து எவ்வம்
நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் -
பராரை
அலங்கல் அம்சினைக்
குடம்பை புல்லெனப்
புலம்பெயர் மருங்கிற்
புள்எழுந் தாங்கு, .113-25
மெய்இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கிற்
செலீஇயர், என் உயிரே! .113-27
***
கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறிஅயர் களத்துச் சிறுபல
தாஅய
விரவுவீ உறைத்த ஈர்நறும்
புறவின்,
உரவுக்கதிர் மழுங்கிய
கல்சேர் ஞாயிறு,
அரவுநுங்கு மதியின், ஐயென
மறையும் .114-5
சிறுபுன் மாலையும்
உள்ளார், அவர்என
நம்புலந்து உறையும்
எவ்வம், நீங்க
நூல்அறி வலவ! கடவுமதி,
உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும்
வான்தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய
நளிசுடர் .114-10
வானக மீனின் விளங்கித்
தோன்றும்,
அருங்கடிக் காப்பின்,
அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல்
கற்பின்,
அரிமதர் மழைக்கண், அமைபுரை
பணைத்தோள்,
அணங்குசால், அரிவையைக்
காண்குவம்- .114-15
பொலம்படைக் கலிமாப் பூண்ட
தேரே! .114-16
***
அழியா விழவின், அஞ்சுவரு
மூதூர்ப்
பழிஇலர் ஆயினும்,
பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்,
வெஞ்சொல்
சேரிஅம் பெண்டிர்
எள்ளினும் எள்ளுக;
நுண்பூண் எருமை குடநாட்
டன்னஎன் .115-5
ஆய்நலம் தொலையினும் தொலைக;
என்றும்
நோய்இல ராக, நம் காதலர் -
வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில்
பாணர்
கைதொழு மரபின்முன்
பரித்துஇடூஉப் பழிச்சிய
வள்உயிர் வணர்மருப்பு
அன்ன, ஒள்இணர்ச் .115-10
சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு
விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த
நீளிடைப்,
பிறைமருள் வான்கோட்டு
அண்ணல் யானை,
சினம்மிகு முன்பின்,
வாமான், அஞ்சி
இனம்கொண்டு ஒளிக்கும்
அஞ்சுவரு கவலை .115-15
நன்னர் ஆய்கவின் தொலையச்
சேய்நாட்டு
நம்நீத்து உறையும்
பொருட்பிணிக்
கூடா மையின், நீடி யோரே!
.115-18
***
எரியகைந் தன்ன தாமரை
இடைஇடை
அரிந்துகால் குவித்த
செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகும் சாகாடு
அளற்றுஉறின்,
ஆய்கடும்பு அடுக்கும்
பாய்புனல் ஊர!
பெரிய நாண்இலை மன்ற;
பொரிஎனப் .116-5
புன்குஅவிழ் அகன்துறைப்
பொலிய, ஒள்நுதல்,
நறுமலர்க் காண்வரும்
குறும்பல் கூந்தல்
மாழை நோக்கின், காழ்இயன்
வனமுலை,
எஃகுடை எழில்நலத்து
ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப;
அதுவே, .116-10
பொய்புறம் பொதிந்துயாம்
கரப்பவும் கையிகந்து
அலர்ஆ கின்றால் தானே; மலர்
தார்,
மையணி யானை, மறப்போர்ச்
செழியன்
பொய்யா விழவின் கூடற்
பறந்தலை,
உடன்இயைந்து எழுந்த
இருபெரு வேந்தர் .116-15
கடன்மருள் பெரும்படை
கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழியப்,
பரந்துஅவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடுகொள் வியன்களத்து
ஆர்ப்பினும் பெரிதே! .116-19
***
மௌவலொடு மலர்ந்த
மாக்குரல் நொச்சியும்,
அவ்வரி அல்குல் ஆயமும்
உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி,
ஏர்வினை
வளம்கெழு திருநகர்
புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண்,
அருள்வரக், .117-5
கருங்கால் ஓமை ஏறி,
வெண்தலைப்
பருந்து பெடைபயிரும்
பாழ்நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப
வீசிச், சேவடிச்
சிலம்புநக இயலிச்
சென்றஎன் மகட்கே-
சாந்துஉளர் வணர்குரல்
வாரி, வகைவகுத்து, .117-10
யான்போது துணைப்பத், தகரம்
மண்ணாள்,
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்
வெறிகமழ் பன்மலர் புனையப்
பின்னுவிடச்
சிறுபுறம் புதைய
நெறிபுதாழ்ந் தனகொல்-
நெடுங்கால் மாஅத்து ஊழுறு
வெண்பழம் .117-15
கொடுந்தாள் யாமை
பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா
யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம்நீர்க் கான்யாற்று
அவிர்அறல் போன்றே? .117-19
***
கறங்குவெள் அருவி
பிறங்குமலைக் கவாஅன்,
தேங்கமழ் இணர வேங்கை
சூடித்,
தொண்டகப் பறைச்சீர்ப்
பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும்
சிறுகுடிப் பாக்கத்து,
இயல்முருகு ஒப்பினை,
வயநாய் பிற்படப் .118-5
பகல்வரின் கவ்வை
அஞ்சுதும்; இகல்கொள,
இரும்பிடி கன்றொடு விரைஇய
கயவாய்ப்,
பெருங்கை யானைக்
கோள்பிழைத்து, இரீஇய
அடுபுலி வழங்கும்
ஆர்இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும்
அஞ்சுதும்; .118-10
என்ஆ குவள்கொல் தானே?
பல்நாள்
புணர்குறி செய்த
புலர்குரல் ஏனல்
கிளிகடி பாடலும்
ஒழிந்தனள்;
அளியள் தான்,நின் அளி அலது
இலளே! .118-14
***
'நுதலும், தோளும், திதலை
அல்குலும்,
வண்ணமும், வனப்பும்,
வரியும் வாட
வருந்துவள், இவள்' எனத்
திருந்துபு நோக்கி,
'வரைவுநன்று' என்னாது
அகலினும், அவர் - வறிது,
ஆறுசெல் மாக்கள் அறுத்த
பிரண்டை, .119-5
ஏறுபெறு பாம்பின்
பைந்துணி கடுப்ப,
நெறியயல் திரங்கும்
அத்தம்; வெறிகொள,
உமண்சாத்து இறந்த ஒழிகல்
அடுப்பில்,
நோன்சிலை மழவர்
ஊன்புழுக்கு அயரும்
சுரன்வழக்கு அற்றது
என்னாது, உரஞ்சிறந்து, .119-10
நெய்தல் உருவின்
ஐதுஇலங்கு அகல்இலைத்,
தொடைஅமை பீலிப் பொலிந்த
கடிகை,
மடைஅமை திண்சுரை, மரக்காழ்
வேலொடு
தணிஅமர் அழுவம் தம்மொடு
துணைப்பத்,
துணிகுவர் கொல்லோ தாமே -
துணிகொள .119-15
மறப்புலி உழந்த வசிபடு
சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய
மண்டிப்
படிமுழம் ஊன்றிய நெடுநல்
யானை
கைதோய்த்து உயிர்க்கும்
வறுஞ்சுனை,
மைதோய் சிமைய, மலைமுதல்
ஆறே! .119-20
***
நெடுவேள் மார்பின் ஆரம்
போலச்,
செவ்வாய் வானம் தீண்டி
மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம்
நிரைபறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பிக்,
குடவயின்
கல்சேர்ந் தன்றே, பல்கதிர்
ஞாயிறு - .120-5
மதர்எழில் மழைக்கண் கலுழ,
இவளே
பெருநாண் அணிந்த நறுமென்
சாயல்
மாண்நலம் சிதைய ஏங்கி,
ஆனாது
அழல்தொடங் கினளே - பெரும;-
அதனால்
கழிச்சுறா எறிந்த
புண்தாள் அத்திரி .120-10
நெடுநீர் இருங்கழிப்
பரிமெலிந்து; அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச்
செல்லாது
சேர்ந்தனை செலினே
சிதைகுவது உண்டோ -
பெண்ணை ஓங்கிய வெண்மணற்
படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
.120-15
சிறுகுரல் நெய்தல்எம்
பெருங்கழி நாட்டே! .120-16
*************** களிற்றுயானைநிரை
முற்றும். *********************