வெல் புகழ் மன்னவன்,
விளங்கிய ஒழுக்கத்தால்,
118-1
நல் ஆற்றின் உயிர் காத்து,
நடுக்கு அறத் தான் செய்த
118-2
தொல் வினைப் பயன் துய்ப்ப,
துறக்கம் வேட்டு
எழுந்தாற்போல் - 118-3
பல் கதிர் ஞாயிறு பகல்
ஆற்றி மலை சேர, 118-4
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து,
மற்று அவன் 118-5
ஏனையான் அளிப்பான் போல்,
இகல் இருள் மதி சீப்பக், 118-6
குடை நிழல் ஆண்டாற்கும்
ஆளிய வருவாற்கும் 118-7
இடை நின்ற காலம் போல்,
இறுத்தந்த மருள் மாலை! 118-8
மாலை நீ - தூ அறத் துறந்தாரை
நினைத்தலின், கயம் பூத்த 118-9
போது போல் குவிந்த என்
எழில் நலம் எள்ளுவாய்; 118-10
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப,
சினைப் பூ போல் தளை விட்ட
118-11
காதலர்ப் புணர்ந்தவர்
காரிகை கடிகல்லாய். 118-12
மாலை நீ - தை எனக் கோவலர்
தனிக் குழல் இசை கேட்டு 118-13
பையென்ற நெஞ்சத்தேம்
பக்கம் பாராட்டுவாய்; 118-14
செவ்வழி யாழ் நரம்பு அன்ன
கிளவியார் பாராட்டும், 118-15
பொய் தீர்ந்த
புணர்ச்சியுள் புது நலம்
கடிகல்லாய். 118-16
மாலை நீ - தகை மிக்க தாழ்
சினைப் பதி சேர்ந்து புள்
ஆர்ப்பப் 118-17
பகை மிக்க நெஞ்சத்தேம்
புன்மை பாராட்டுவாய்; 118-18
தகை மிக்க புணர்ச்சியார்
தாழ் கொடி நறு முல்லை 118-19
முகை முகம் திறந்தன்ன,
முறுவலும் கடிகல்லாய். 118-20
என ஆங்கு; 118-21
மாலையும் அலரும் நோனாது,
எம் வயின் 118-22
நெந்ஜ்சமும் எஞ்சும்மன்
தில்ல - எஞ்சி, 118-23
உள்ளாது அமைந்தோர்,
உள்ளும், 118-24
உள் இல் உள்ளம் உள் உள்
உவந்தே. 118-25
***
அகல் ஞாலம் விளக்கும் தன்
பல் கதிர் வாய் ஆக 119-1
பகல் நுங்கியது போலப் படு
சுடர் கல் சேர, 119-2
இகல் மிகு நேமியான் நிறம்
போல இருள் இவர, 119-3
நிலவுக் காண்பது போல அணி
மதி ஏர்தரக், 119-4
கண் பாயல் பெற்ற போல் கணைக்
கால மலர் கூம்பத் 119-5
தம் புகழ் கேட்டார் போல்
தலை சாய்த்து மரம் துஞ்ச,
119-6
முறுவல் கொள்பவை போல முகை
அவிழ்பு புதல் நந்தச் 119-7
சிறு வெதிர் குழல் போலச்
சுரும்பு இமிர்ந்து
இம்மெனப், 119-8
பறவை தம் பார்ப்பு உள்ளக்,
கறவை தம் பதி வயின் 119-9
கன்று அமர் விருப்பொடு
மன்று நிறை புகுதர, 119-10
மா வதி சேர, மாலை வாள் கொள
119-11
அந்தி அந்தணர் எதிர்கொள,
அயர்ந்து 119-12
செந்தீச் செவ் அழல் தொடங்க
- வந்ததை 119-13
வால் இழை மகளிர் உயிர் பொதி
அவிழ்க்கும் 119-14
காலை ஆவது அறியார், 119-15
மாலை என்மனார் மயங்கியோரே!
119-16
***
அருள் தீர்ந்த காட்சியான்,
அறன் நோக்கான், நயம்
செய்யான் 120-1
வெருவுற உய்த்தவன்
நெஞ்சம் போல், பைபய 120-2
இருள் தூர்பு, புலம்பு
ஊரக், கனை சுடர் கல் சேர - 120-3
உரவுத் தகை மழுங்கித் தன்
இடும்பையால் ஒருவனை 120-4
இரப்பவன் நெஞ்சம் போல்
புல்லென்று, புறம் மாறிக்
120-5
கரப்பவன் நெஞ்சம் போல்,
மரம் எல்லாம் இலை கூம்பத் -
120-6
தோற்றம் சால் செக்கருள்
பிறை நுதி எயிறு ஆக, 120-7
நால் திசையும்
நடுக்குறூஉம் மடங்கல்
காலைக், 120-8
கூற்று நக்கது போலும்,
உட்குவரு கடு மாலை! 120-9
மாலை நீ - உள்ளம் கொண்டு
அகன்றவர் துணை தாராப்
பொழுதின் கண் 120-10
வெள்ள மான் நிறம் நோக்கி
கணை தொடுக்கும் கொடியான்
போல், 120-11
அல்லற்பட்டு இருந்தாரை
அயர்ப்பிய வந்தாயோ? 120-12
மாலை நீ - ஈரம் இல் காதலர்
இகந்து, அருளா இடன்
நோக்கிப் 120-13
போர் தொலைந்து
இருந்தாரைப் பாடு எள்ளி
நகுவார் போல், 120-14
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய
வந்தாயோ? 120-15
மாலை நீ - கந்து ஆதல்
சான்றவர் களைதாராப்
பொழுதின் கண் 120-16
வெந்தது ஓர் புண்ணின் கண்
வேல் கொண்டு நுழைப்பான்
போல், 120-17
காய்ந்த நோய் உழப்பாரைக்
கலக்கிய வந்தாயோ? 120-18
என ஆங்கு; 120-19
இடன் இன்று அலைத்தரும்
இன்னா செய் மாலை 120-20
துனி கொள் துயர் தீர காதலர்
துனை தர 120-21
மெல்லியான் பருவத்து மேல்
நின்ற கடும் பகை 120-22
ஒல்லென நீக்கி, ஒருவாது
காத்து ஓம்பும் 120-23
நல் இறை தோன்றக்,
கெட்டாங்கு - 120-24
இல்லாகின்றால் இருள்
அகத்து ஒளித்தே. 120-25
***
ஒள் சுடர் கல் சேர, உலகு
ஊரும் தகையது, 121-1
தெள் கடல் அழுவத்துத் திரை
நீக்கா எழுதரூஉம், 121-2
தண் கதிர் மதியத்து அணி
நிலா நிறைத்தரப், 121-3
புள் இனம் இரை மாந்திப்
புகல் சேர, ஒலி ஆன்று, 121-4
வள் இதழ் கூம்பிய மணி மருள்
இரும் கழி 121-5
பள்ளி புக்கது போலும்
பரப்பு நீர்த் தண்
சேர்ப்ப! 121-6
தாங்க அரும் காமத்தைத்
தணந்து நீ புறம் மாறத் 121-7
தூங்கு நீர் இமிழ் திரை
துணை ஆகி ஒலிக்குமே - 121-8
உறையொடு வைகிய போது போல்,
ஒய்யென, 121-9
நிறை ஆனாது இழிதரூஉம் நீர்
நீந்து கண்ணாட்கு; 121-10
வாராய் நீ புறம் மாற,
வருந்திய மேனியாட்கு, 121-11
ஆர் இருள் துணை ஆகி அசை வளி
அலைக்குமே - 121-12
கமழ் தண் தாது உதிர்ந்து
உக, ஊழ் உற்ற கோடல் வீ 121-13
இதழ் சோரும் குலை போல, இறை
நீவு வளையாட்கு; 121-14
இன் துணை நீ நீப்ப, இரவின்
உள் துணை ஆகித், 121-15
தன் துணை பிரிந்து அயாஅம்
தனி குருகு உசாவுமே - 121-16
ஒள் சுடர் ஞாயிற்று
விளக்கத்தான் ஒளி சாம்பும்
121-17
நண்பகல் மதியம் போல், நலம்
சாய்ந்த அணியாட்கு; 121-18
என ஆங்கு; 121-19
எறி திரை தந்திட, இழிந்த
மீன் இன் துறை 121-20
மறி திரை வருந்தாமல்
கொண்டாங்கு, நெறி
தாழ்ந்து, 121-21
சாயினள் வருந்தியாள்
இடும்பை 121-22
பாய் பரிக் கடு திண் தேர்
களையினோ இடனே. 121-23
***
'கோதை ஆயமும் அன்னையும்
அறிவுறப், 122-1
போது எழில் உண் கண் புகழ்
நலன் இழப்பக், 122-2
காதல் செய்து அருளாது
துறந்தார் மாட்டு, ஏது
இன்றிச், 122-3
சிறிய துனித்தனை; துன்னா
செய்து அமர்ந்தனை; 122-4
பலவு நூறு அடுக்கினை; இனைபு
ஏங்கி அழுதனை; 122-5
அலவலை உடையை' என்றி - தோழீ !
122-6
கேள் இனி; 122-7
மாண் எழில் மாதர் மகளிரோடு
அமைந்து அவன் 122-8
காணும் பண்பு இலன் ஆதல்
அறிவேன் மன்; அறியினும், 122-9
பேணி அவன் சிறிது அளித்தக்
கால், என் 122-10
நாண் இல் நெஞ்சம்
நெகிழ்தலும் காண்பல்; 122-11
இருள் உறழ் இரும் கூந்தல்
மகளிரோடு அமைந்து அவன் 122-12
தெருளும் பண்பு இலன் ஆதல்
அறிவேன் மன்; அறியினும், 122-13
அருளி அவன் சிறிது
அளித்தக் கால், என் 122-14
மருளி நெஞ்சம் மகிழ்தலும்
காண்பல்; 122-15
ஒள் இழை மாதர் மகளிரோடு
அமைந்து அவன் 122-16
உள்ளும் பண்பு இலன் ஆதல்
அறிவேன் மன்; அறியினும், 122-17
புல்லி அவன் சிறிது
அளித்தக் கால், என் 122-18
அல்லல் நெஞ்சம் அடங்கலும்
காண்பல்; 122-19
அதனால்; 122-20
யாம நடுநாள் துயில் கொண்டு
ஒளித்த 122-21
காம நோயின் கழீஇய நெஞ்சம் -
122-22
தான் அவர்பால் பட்டது
ஆயின், 122-23
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி
உடைத்தே! 122-24
***
கரும் கோட்டு நறும் புன்னை
மலர் சினை மிசை தொறும் 123-1
சுரும்பு ஆர்க்கும்
குரலினோடு, இரும் தும்பி
இயைபு ஊத, 123-2
ஒருங்கு உடன் இம்மென
இமிர்தலின், பாடலோடு 123-3
அரும் பொருள் மரபின் மால்
யாழ் கேளா கிடந்தான் போல்,
123-4
பெரும் கடல் துயில்
கொள்ளும் வண்டு இமிர் நறு
கானல் - 123-5
காணாமை இருள் பரப்பிக்
கையற்ற கங்குலான், 123-6
மாணா நோய் செய்தான்கண்
சென்றாய்; மற்று அவனை நீ 123-7
காணவும் பெற்றாயோ? - காணாயோ?
மட நெஞ்சே! 123-8
கொல் ஏற்றுச் சுறவு இனம்
கடி கொண்ட மருள் மாலை, 123-9
அல்லல் நோய் செய்தான்கண்
சென்றாய்; மற்று அவனை நீ 123-10
புல்லவும் பெற்றாயோ? -
புல்லாயோ மட நெஞ்சே! 123-11
வெறி கொண்ட புள் இனம் வதி
சேரும் பொழுதினான், 123-12
செறி வளை நெகிழ்த்தான்கண்
சென்றாய்; மற்று அவனை நீ 123-13
அறியவும் பெற்றாயோ? -
அறியாயோ? மட நெஞ்சே! 123-14
என ஆங்கு; 123-15
எல்லையும் இரவும் துயில்
துறந்து, பல் ஊழ் 123-16
அரும் படர் அவல நோய்
செய்தான்கண் பெறல் நசைஇ, 123-17
இரும் கழி ஓதம் போல்
தடுமாறி, 123-18
வருந்தினை அளிய என் மடம்
கெழு நெஞ்சே! 123-19
***
ஞாலம் மூன்று அடித் தாய
முதல்வற்கு முது முறைப் 124-1
பால் அன்ன மேனியான்
அணிபெறத் தைஇய 124-2
நீல நீர் உடை போலத்,
தகைபெற்ற வெண் திரை 124-3
வால் எக்கர் வாய் சூழும்
வயங்கு நீர் தண் சேர்ப்ப!
124-4
ஊர் அலர் எடுத்து அரற்ற,
உள்ளாய், நீ துறத்தலின், 124-5
கூரும் தன் எவ்வ நோய்
என்னையும் மறைத்தாள்மன் -
124-6
காரிகை பெற்ற தன் கவின் வாட
கலுழ்பு, ஆங்கே 124-7
பீர் அலர் அணி கொண்ட பிறை
நுதல் அல்லாக்கால்; 124-8
இணைபு இவ் ஊர் அலர் தூற்ற,
எய்யாய், நீ துறத்தலின், 124-9
புணை இல்லா எவ்வ நோய்
என்னையும் மறைத்தாள் மன் -
124-10
துணையாருள் தகைபெற்ற தொல்
நலம் இழந்து, இனி, 124-11
அணி வனப்பு இழந்த தன் அணை
மென் தோள் அல்லாக்கால்; 124-12
இன்று இவ் ஊர் அலர் தூற்ற,
எய்யாய், நீ துறத்தலின், 124-13
நின்ற தன் எவ்வ நோய்
என்னையும் மறைத்தாள் மன் -
124-14
வென்ற வேல் நுதி ஏய்க்கும்
விறல் நலன் இழந்து, இனி, 124-15
நின்று நீர் உகக் கலுழும்
நெடும் பெரும் கண்
அல்லாக்கால்; 124-16
அதனால்; 124-17
பிரிவு இல்லாய் போல, நீ
தெய்வத்தின் தெளித்தக்
கால், 124-18
அரிது என்னாள், துணிந்தவள்
ஆய் நலம் பெயர்தரப், 124-19
புரி உளைக் கலி மான் தேர்
கடவுபு - 124-20
விரி தண் தார் வியல் மார்ப! -
விரைக நின் செலவே! 124-21
***
'கண்டவர் இல்', என உலகத்துள்
உணராதார், 125-1
தங்காது தகைவு இன்றித்
தாம் செய்யும் வினைகளுள்,
125-2
நெஞ்சு அறிந்த கொடியவை
மறைப்பினும், 'அறிபவர் 125-3
நெஞ்சத்துக் குறுகிய கரி
இல்லை ஆகலின்', 125-4
வண் பரி நவின்ற வய மான்
செல்வ! 125-5
நன்கு அதை அறியினும், நயன்
இல்லா நாட்டத்தால், 125-6
'அன்பு இலை' என வந்து
கழறுவல்; ஐய! கேள்: 125-7
மகிழ் செய் தே மொழித்
தொய்யில் சூழ் இள முலை 125-8
முகிழ் செய முள்கிய
தொடர்பு, அவள் உண் கண் 125-9
அவிழ் பனி உறைப்பவும்,
நல்காது விடுவாய்! 125-10
இமிழ் திரை கொண்க! கொடியை
காண் நீ; 125-11
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை
தைஇ, 125-12
நலம் செல நல்கிய தொடர்பு,
அவள் சாஅய்ப் 125-13
புலந்து அழப், புல்லாது
விடுவாய்! 125-14
இலங்கு நீர்ச் சேர்ப்ப!
கொடியை காண் நீ; 125-15
இன் மணிச் சிலம்பின் சில்
மொழி ஐம்பால் 125-16
பின்னொடு கெழீஇய தட அரவு
அல்குல் 125-17
நுண் வரி, வாட, வாராது
விடுவாய்! 125-18
தண்ணம் துறைவ! தகாஅய் காண்
நீ ; 125-19
என ஆங்கு; 125-20
அனையள் என்று, அளிமதி,
பெரும! நின் இன்று 125-21
இறை வரை நில்லா வளையள்
இவட்கு, இனிப் 125-22
பிறை ஏர் சுடர் நுதல் பசலை
125-23
மறையச் செல்லும், நீ
மணந்தனை விடினே. 125-24
***
பொன் மலை சுடர் சேரப்,
புலம்பிய இடன் நோக்கித், 126-1
தன் மலைந்து உலகு ஏத்தத்
தகை மதி ஏர்தரச், 126-2
செக்கர் கொள் பொழுதினான்
ஒலி நீவி, இன நாரை 126-3
முக்கோல் கொள் அந்தணர்
முது மொழி நினைவார் போல்,
126-4
எக்கர் மேல் இறைகொள்ளும்,
இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!
126-5
அணிச் சிறை இனக் குருகு
ஒலிக்கும்கால், நின் திண்
தேர் 126-6
மணிக் குரல் என இவள்
மதிக்கும்மன்:
மதித்தாங்கே, 126-7
உள் ஆன்ற ஒலியவாய்
இருப்பக் கண்டு, அவை கானல்
126-8
புள் என உணர்ந்து பின்
புலம்பு கொண்டு இனையுமே; 126-9
நீர் நீவிக் கஞன்ற பூக்
கமழும்கால், நின் மார்பின்
126-10
தார் நாற்றம் என இவள்
மதிக்கும்மன்;
மதித்தாங்கே, 126-11
அலர் பதத்து அசை வளி வந்து
ஒல்கக், கழிப் பூத்த 126-12
மலர் என உணர்ந்து, பின்
மம்மர் கொண்டு இனையுமே; 126-13
நீள் நகர் நிறை ஆற்றாள்,
நினையுநள் வதிந்தக் கால்,
126-14
தோள் மேலாய் என நின்னை
மதிக்கும்மன்:
மதித்தாங்கே, 126-15
நனவு என புல்லும்கால்,
காணாளாய்க், கண்டது 126-16
கனவு என உணர்ந்து, பின்
கையற்றுக் கலங்குமே; 126-17
என ஆங்கு; 126-18
பல நினைந்து இனையும் பைதல்
நெஞ்சின், 126-19
அலமரல் நோயுள் உழக்கும்
என் தோழி 126-20
மதி மருள் வாள் முகம்
விளங்கப், 126-21
புது நலம் ஏர்தரப், பூண்க,
நின் தேரே! 126-22
***
தெரி இணர் ஞாழலும், தேம்
கமழ் புன்னையும், 127-1
புரி அவிழ் பூவின கைதையும்,
செருந்தியும், 127-2
வரி ஞிமிறு இமிர்ந்து
ஆர்ப்ப, இரும் தும்பி இயைபு
ஊதச் - 127-3
செரு மிகு நேமியான் தார்
போலப் பெரும் கடல் 127-4
வரி மணல் வாய் சூழும்
வயங்கு நீர்த் தண்
சேர்ப்ப; 127-5
கொடும் கழி வளைஇய குன்று
போல், வால் எக்கர், 127-6
நடுங்கு நோய் தீர, நின்
குறி வாய்த்தாள் என்பதோ -
127-7
கடும் பனி அறல் இகு கயல்
ஏர் கண் பனி மல்க, 127-8
இடும்பையோடு இனைபு ஏங்க,
இவளை நீ துறந்ததை! 127-9
குறி இன்றிப் பல்நாள், நின்
கடும் திண் தேர் வருபதம்
கண்டு, 127-10
எறி திரை இமிழ் கானல்,
எதிர்கொண்டாள் என்பதோ - 127-11
அறிவு அஞர் உழந்து ஏங்கி,
ஆய் நலம் வறிது ஆகச் 127-12
செறி வளை தோள் ஊர, இவளை நீ
துறந்ததை! 127-13
காண்வர இயன்ற இக் கவின்
பெறு பனித் துறை, 127-14
யாமத்து வந்து, நின் குறி
வாய்த்தாள் என்பதோ - 127-15
வேய் நலம் இழந்த தோள்
விளங்கு இழை பொறை ஆற்றாள்,
127-16
வாள் நுதல் பசப்பு ஊர இவளை
நீ துறந்ததை! 127-17
அதனால்; 127-18
இறை வளை நெகிழ்ந்த எவ்வ
நோய் இவள் தீர, 127-19
'உரவுக் கதிர் தெறும்' என,
ஓங்கு திரை விரைபு, தன் 127-20
கரை அமல் அடும்பு
அளித்தாஅங்கு - 127-21
உரவு நீர்ச் சேர்ப்ப! -
அருளினை அளிமே! 127-22
***
'தோள் துறந்து, அருளாதவர்
போல் நின்று, 128-1
வாடை தூக்க, வணங்கிய தாழை
128-2
ஆடு கோட்டு இருந்த அசை நடை
நாரை, 128-3
நளி இரும் கங்குல், நம்
துயர் அறியாது, 128-4
அளி இன்று, பிணி இன்று,
விளியாது, நரலும் 128-5
கானல் அம் சேர்ப்பனைக்
கண்டாய் போலப் 128-6
புதுவது கவினினை' என்றி
ஆயின், 128-7
நனவின் வாரா நயன்
இலாளனைக் 128-8
கனவில் கண்டு, யான் செய்தது
கேள், இனி: 128-9
'அலந்தாங்கு அமையலென்'
என்றானைப் பற்றி, 'என் 128-10
நலம் தாராயோ?' எனத்,
தொடுப்பேன் போலவும், 128-11
கலந்து ஆங்கே என் கவின் பெற
முயங்கிப் 128-12
'புலம்பல் ஓம்பு' என,
அளிப்பான் போலவும் - 128-13
'முலை இடைத் துயிலும்
மறந்தீத்தோய்' என, 128-14
நிலை அழி நெஞ்சத்தேன்
அழுவேன் போலவும், 128-15
'வலை உறு மயிலின்
வருந்தினை, பெரிது' எனத் 128-16
தலையுற முன் அடிப் பணிவான்
போலவும் - 128-17
கோதை கோலா இறைஞ்சி நின்ற
128-18
ஊதை அம் சேர்ப்பனை,
அலைப்பேன் போலவும், 128-19
'யாது என் பிழைப்பு?' என
நடுங்கி, ஆங்கே, 128-20
'பேதையை பெரிது' எனத்
தெளிப்பான் போலவும் 128-21
ஆங்கு; 128-22
கனவினால் கண்டேன் - தோழி! -
'காண்தகக் 128-23
கனவின் வந்த கானலம்
சேர்ப்பன் 128-24
நனவின் வருதலும் உண்டு' என,
128-25
அனை வரை நின்றது, என் அரும்
பெறல் உயிரே. 128-26
***
தொல் ஊழி தடுமாறித் தொகல்
வேண்டும் பருவத்தால், 129-1
பல்வயின் உயிர் எல்லாம்
படைத்தான்கண் பெயர்ப்பான்
போல், 129-2
எல் உறு தெறு கதிர்
மடங்கித் தன் கதிர் மாய, 129-3
நல் அற நெறி நிறீஇ உலகு
ஆண்ட அரசன் பின், 129-4
அல்லது மலைந்திருந்து அற
நெறி நிறுக்கல்லா 129-5
மெல்லியான் பருவம் போல்,
மயங்கு இருள் தலை வர: 129-6
எல்லைக்கு வரம்பு ஆய,
இடும்பை கூர், மருள் மாலை -
129-7
பாய் திரைப் பாடு ஓவாப்
பரப்பு நீர் பனிக் கடல்! -
129-8
'தூ அற துறந்தனன் துறைவன்'
என்று, அவன் திறம் 129-9
நோய் தெற உழப்பார்கண்
இமிழ்தியோ? எம் போலக் 129-10
காதல் செய்து அகன்றாரை
உடையையோ? - நீ. 129-11
மன்று இரும் பெண்ணை மடல்
சேர் அன்றில்! - 129-12
'நன்று அறை கொன்றனர், அவர்'
எனக் கலங்கிய 129-13
என் துயர் அறிந்தனை நரறியோ?
எம் போல 129-14
இன் துணைப் பிரிந்தாரை
உடையையோ? - நீ. 129-15
பனி இருள் சூழ்தரப் பைதல்
அம் சிறு குழல்! - 129-16
'இனி வரின், உயரும் மன் பழி'
எனக் கலங்கிய 129-17
தனியவர் இடும்பை கண்டு
இனைதியோ? எம் போல 129-18
இனிய செய்து அகன்றாரை
உடையையோ? - நீ 129-19
என ஆங்கு; 129-20
அழிந்து, அயல் அறிந்த
எவ்வம் மேற்படப் 129-21
பெரும் பேதுறுதல் களைமதி,
பெரும! 129-22
வருந்திய செல்லல் தீர்த்த
திறன் அறி ஒருவன் 129-23
மருந்து அறைகோடலின்
கொடிதே, யாழ நின் 129-24
அருந்தியோர் நெஞ்சம்
அழிந்து உக விடினே. 129-25
***
'நயனும் வாய்மையும் நன்னர்
நடுவும் 130-1
இவனின் தோன்றிய இவை' என
இரங்கப், 130-2
புரை தவ நாடிப் பொய்
தபுத்து, இனிது ஆண்ட 130-3
அரைசனோடு உடன் மாய்ந்த நல்
ஊழிச் செல்வம் போல், 130-4
நிரை கதிர்க் கனலி பாடொடு
பகல் செலக் 130-5
கல்லாது முதிர்ந்தவன் கண்
இல்லா நெஞ்சம் போல், 130-6
புல் இருள் பரத்தரூஉம் -
புலம்பு கொள் மருள் மாலை.
130-7
இம் மாலை; 130-8
ஐயர் அவிர் அழல் எடுப்ப,
அரோ, என் 130-9
கையறு நெஞ்சம் கனன்று தீ
மடுக்கும்! 130-10
இம் மாலை; 130-11
இரும் கழி மா மலர் கூம்ப,
அரோ, என் 130-12
அரும் படர் நெஞ்சம்
அழிவொடு கூம்பும்! 130-13
இம் மாலை; 130-14
கோவலர் தீம் குழல் இனைய,
அரோ என் 130-15
பூ எழில் உண் கண் புலம்பு
கொண்டு இனையும்! 130-16
என ஆங்கு; 130-17
படுசுடர் மாலையொடு பைதல்
நோய் உழப்பாளைக், 130-18
குடி புறங்காத்து ஓம்பும்
செம் கோலான் வியன் தானை 130-19
விடுவழி விடுவழிச்
சென்றாங்கு, அவர் 130-20
தொடுவழித் தொடுவழி
நீங்கின்றால் பசப்பே. 130-21
***
பெரும் கடல் தெய்வம் நீர்
நோக்கித் தெளித்து, என் 131-1
திருந்து இழை மென் தோள்
மணந்தவன் செய்த 131-2
அரும் துயர் நீக்குவேன்
போல்மன் - பொருந்துபு 131-3
பூக் கவின் கொண்ட புகழ்
சால் எழில் உண் கண், 131-4
நோக்கும்கால் நோக்கின்
அணங்கு ஆக்கும், சாயலாய்!
தாக்கி 131-5
இன மீன் இகல் மாற வென்ற சின
மீன் 131-6
எறி சுறா வான் மருப்பு
கோத்து, நெறி செய்த 131-7
நெய்தல் நெடு நார்ப்
பிணித்து யாத்துக் கை
உளர்வின் 131-8
யாழ் இசை கொண்ட இன வண்டு
இமிர்ந்து ஆர்ப்பத் 131-9
தாழாது உறைக்கும் தட
மலர்த் தண் தாழை 131-10
வீழ் ஊசல் தூங்க பெறின்.
131-11
மாழை, மட மான் பிணை இயல்
வென்றாய்! நின் ஊசல் 131-12
கடைஇ யான் இகுப்ப, நீடு
ஊங்காய் தட மென் தோள் 131-13
நீத்தான் திறங்கள்
பகர்ந்து. 131-14
நாணின கொல் தோழி? நாணின
கொல் தோழி? 131-15
இரவு எலாம் நல்தோழி நாணின -
என்பவை 131-16
வாள் நிலா ஏய்க்கும்
வயங்கு ஒளி எக்கர் மேல், 131-17
ஆனாப் பரிய அலவன் அளை
புகூஉம்... 131-18
கானல் கமழ் ஞாழல் வீ
ஏய்ப்பத் தோழி! என் 131-19
மேனி சிதைத்தான் துறை. 131-20
மாரி வீழ் இரும் கூந்தல்,
மதைஇய நோக்கு எழில்
உண்கண் 131-21
தாழ் நீர முத்தின் தகை
ஏய்க்கும் முறுவலாய்! 131-22
தேயா நோய் செய்தான் திறம்
கிளந்து நாம் பாடும் 131-23
சேய் உயர் ஊசல்சீர் நீ
ஒன்று பாடித்தை. 131-24
பார்த்து உற்றன, தோழி!
பார்த்து உற்றன, தோழி! 131-25
இரவு எலாம், நல்தோழி!
பார்த்து உற்றன - என்பவை, 131-26
'தன் துணை இல்லாள்
வருந்தினாள் கொல்?' என, 131-27
இன் துணை அன்றில் இரவின்
அகவாவே - 131-28
அன்று, தான் ஈர்த்த கரும்பு
அணி வாட, என் 131-29
மென்தோள் ஞெகிழ்த்தான்
துறை. 131-30
கரை கவர் கொடும் கழிக்
கண்கவர் புள் இனம் 131-31
திரை உறப் பொன்றிய புலவு
மீன் அல்லதை, 131-32
இரை உயிர் செகுத்து
உண்ணாத் துறைவனை யாம்
பாடும் 131-33
அசை வரல் ஊசல்சீர் அழித்து
ஒன்று பாடித்தை. 131-34
அருளின கொல் தோழி? அருளின
கொல் தோழி? 131-35
இரவு எலாம், தோழி! அருளின -
என்பவை, 131-36
கணம் கொள் இடு மணல் காவி
வருந்தப் 131-37
பிணங்கு இரு மோட்ட திரை
வந்து அளிக்கும் - 131-38
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை
ஆங்கே 131-39
வணங்கி உணர்ப்பான் துறை.
131-40
என, நாம் 131-41
பாட, மறை நின்று கேட்டனன்,
நீடிய 131-42
வால் நீர்க் கிடக்கை
வயங்கு நீர்ச் சேர்ப்பனை
131-43
யான் என உணர்ந்து, நீ நனி
மருளத் 131-44
தேன் இமிர் புன்னை
பொருந்தித், 131-45
தான் ஊக்கினன், அவ் ஊசலை
வந்தே. 131-46
***
உரவு நீர்த் திரை பொர
ஓங்கிய எக்கர் மேல், 132-1
விரவுப் பல் உருவின வீழ்
பெடை துணை ஆக, 132-2
இரை தேர்ந்து உண்டு,
அசாவிடூஉம் புள் இனம்
இறைகொள - 132-3
முரைசு மூன்று ஆள்பவர்
முரணியோர் முரண் தப, 132-4
நிரை களிறு இடைபட, நெறி
யாத்த இருக்கை போல் 132-5
சிதைவு இன்றிச்
சென்றுழிச் சிறப்பு எய்தி,
வினை வாய்த்துத் 132-6
துறைய கலம் வாய் சூழும்
துணி கடல் தண் சேர்ப்ப! 132-7
புன்னைய நறும் பொழில்
புணர்ந்தனை இருந்தக்கால்
132-8
'நல் நுதால் அஞ்சல் ஓம்பு'
என்றதன் பயன் அன்றோ - 132-9
பாயின பசலையால், பகல் கொண்ட
சுடர் போன்றாள், 132-10
மாவின தளிர் போலும் மாண்
நலம் இழந்ததை? 132-11
பல்மலர் நறும் பொழில் பழி
இன்றிப் புணர்ந்தக்கால்
132-12
'சின் மொழி! தெளி' எனத்
தேற்றிய சிறப்பு அன்றோ - 132-13
வாடுபு வனப்பு ஓடி வயக்கு
உறா மணி போன்றாள் 132-14
நீடு இறை நெடு மென்தோள்
நிரை வளை நெகிழ்ந்தந்தை?
132-15
அடும்பு இவர் அணி எக்கர்
ஆடி நீ, மணந்தக்கால் 132-16
'கொடும் குழாய்! தெளி' எனக்
கொண்டதன் கொளை அன்றோ - 132-17
பொறை ஆற்றா நுசுப்பினால்,
பூ வீந்த கொடி போன்றாள் 132-18
மறை பிறர் அறியாமை மாணா
நோய் உழந்ததை? 132-19
என ஆங்கு - 132-20
வழிபட்ட தெய்வம்தான் வலி
எனச் சார்ந்தார்கண் 132-21
கழியும் நோய் கைம்மிக
அணங்கு ஆகியது போலப், 132-22
பழி பரந்து அலர் தூற்ற, என்
தோழி 132-23
அழி படர் அலைப்ப, அகறலோ
கொடிதே! 132-24
***
மா மலர் முண்டகம்
தில்லையோடு ஒருங்கு உடன்
133-1
கானல் அணிந்த உயர் மணல்
எக்கர் மேல், 133-2
சீர் மிகு சிறப்பினோன் மர
முதல் கை சேர்த்த 133-3
நீர் மலி கரகம் போல் பழம்
தூங்கு முடத் தாழைப் 133-4
பூ மலர்ந்தவை போலப், புள்
அல்கும் துறைவ! கேள்: 133-5
'ஆற்றுதல்' என்பது, ஒன்று
அலந்தவர்க்கு உதவுதல்; 133-6
'போற்றுதல்' என்பது,
புணர்ந்தாரை பிரியாமை; 133-7
'பண்பு' எனப்படுவது, பாடு
அறிந்து ஒழுகுதல்; 133-8
'அன்பு' எனப்படுவது, தன்
கிளை செறாஅமை; 133-9
'அறிவு' எனப்படுவது,
பேதையார் சொல் நோன்றல்; 133-10
'செறிவு' எனப்படுவது,
கூறியது மறாஅமை; 133-11
'நிறை' எனப்படுவது, மறை
பிறர் அறியாமை; 133-12
'முறை' எனப்படுவது,
கண்ணோடாது உயிர் வௌவல்; 133-13
'பொறை' எனப்படுவது,
போற்றாரை பொறுத்தல். 133-14
ஆங்கு அதை அறிந்தனிர்
ஆயின், என் தோழி 133-15
நல் நுதல் நலன் உண்டு
துறத்தல் - கொண்க! - 133-16
தீம் பால் உண்பவர் கொள்
கலம் வரைதல்; 133-17
நின்தலை வருந்தியாள்
துயரம் 133-18
சென்றனை களைமோ, பூண்க, நின்
தேரே! 133-19
***
மல்லரை மறம் சாய்த்த மலர்
தண் தார் அகலத்தோன், 134-1
ஒல்லாதார் உடன்று ஓட,
உருத்து, உடன் எறிதலின், 134-2
கொல் யானை அணி நுதல்
அழுத்திய ஆழி போல், 134-3
கல் சேர்பு ஞாயிறு கதிர்
வாங்கி மறைதலின், 134-4
இரும் கடல் ஒலித்து ஆங்கே
இரவுக் காண்பது போலப், 134-5
பெரும் கடல் ஓத நீர்
வீங்குபு கரை சேரப், 134-6
போஒய வண்டினால் புல்லென்ற
துறையவாய்ப் 134-7
பாயல் கொள்பவை போலக் கய
மலர் வாய் கூம்ப, 134-8
ஒரு நிலையே நடுக்குற்று
இவ் உலகு எலாம் அச்சுற, 134-9
இரு நிலம் பெயர்ப்பு அன்ன,
எவ்வம் கூர் மருள் மாலை; 134-10
தவல் இல் நோய் செய்தவர்க்
காணாமை நினைத்தலின், 134-11
இகல் இடும் பனி தின,
எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே,
134-12
கவலை கொள் நெஞ்சினேன்
கலுழ் தரக், கடல் நோக்கி, 134-13
அவலம் மெய்க் கொண்டது
போலும் - அஃது எவன் கொலோ? 134-14
நடுங்கு நோய் செய்தவர்
நல்காமை நினைத்தலின், 134-15
கடும் பனி கைம்மிகக்
கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே,
134-16
நடுங்கு நோய் உழந்த என்
நலன் அழிய, மணல் நோக்கி, 134-17
இடும்பை நோய்க்கு இகுவன
போலும் - அஃது எவன் கொலோ? 134-18
வையினர் நலன் உண்டார்
வாராமை நினைத்தலின், 134-19
கையறு நெஞ்சினேன்
கலக்கத்துள் ஆழ்ந்து,
ஆங்கே, 134-20
மையல் கொள் நெஞ்சொடு
மயக்கத்தால், மரன் நோக்கி,
134-21
எவ்வத்தால் இயன்ற போல் இலை
கூம்பல் எவன் கொலோ? 134-22
என ஆங்கு; 134-23
கரை காணாப் பௌவத்துக் கலம்
சிதைந்து ஆழ்பவன் 134-24
திரை தரப் புணை பெற்றுத்,
தீது இன்றி உய்ந்தாங்கு 134-25
விரைவனர் காதலர் புகுதர,
134-26
நிரை தொடி துயரம்
நீங்கின்றால் விரைந்தே.
134-27
***
துணை புணர்ந்து எழுதரும்
தூ நிற வலம்புரி 135-1
இணை திரள் மருப்பு ஆக எறி
வளி பாகனா - 135-2
அயில் திணி நெடும் கதவு
அமைத்து, அடைத்து அணி
கொண்ட 135-3
எயில் இடு களிறே போல் இடு
மணல் நெடு கோட்டைப் 135-4
பயில் திரை, நடு நன்னாள்,
பாய்ந்து உறூஉம் துறைவ!
கேள்: 135-5
கடி மலர்ப் புன்னைக் கீழ்
காரிகை தோற்றாளைத் 135-6
தொடி நெகிழ்த்த தோளளாத்
துறப்பாயால், மற்று நின் 135-7
குடிமைக் கண் பெரியது ஓர்
குற்றமாய்க் கிடவாதோ? 135-8
ஆய் மலர்ப் புன்னைக் கீழ்
அணி நலம் தோற்றாளை 135-9
நோய் மலி நிலையளாத்
துறப்பாயால், மற்று நின்
135-10
வாய்மைக் கண் பெரியது ஓர்
வஞ்சமாய்க் கிடவாதோ? 135-11
திகழ் மலர்ப் புன்னைக்
கீழ் திரு நலம் தோற்றாளை
135-12
இகழ் மலர்க் கண்ணளாத்
துறப்பாயால், மற்று நின்
135-13
புகழ்மைக் கண் பெரியது ஓர்
புகர் ஆகி கிடவாதோ? 135-14
என ஆங்கு; 135-15
சொல்லக் கேட்டனை ஆயின்,
வல்லே, 135-16
அணி கிளர் நெடு வரை
அலைக்கும் நின் அகலத்து,
135-17
மணி கிளர் ஆரம் தாரொடு
துயல்வர 135-18
உயங்கினள் உயிர்க்கும்
என் தோழிக்கு 135-19
இயங்கு ஒலி நெடும் திண்
தேர் கடவுமதி விரைந்தே! 135-20
***
இவர் திமில், எறி திரை
ஈண்டி வந்து அலைத்தக்கால்,
136-1
உவறு நீர் உயர் எக்கர்,
அலவன் ஆடு அளை வரித், 136-2
தவல் இல் தண் கழகத்துத்
தவிராது வட்டிப்பக், 136-3
கவறு உற்ற வடு ஏய்க்கும்,
காமரு பூங் கடல் சேர்ப்ப!
136-4
முத்து உறழ் மணல் எக்கர்
அளித்தக்கால், முன் ஆயம் 136-5
பத்து உருவம் பெற்றவன்
மனம் போல, நந்தியாள் - 136-6
அத் திறத்து நீ நீங்க, அணி
வாடி, அவ் ஆயம் 136-7
வித்தத்தால் தோற்றான்
போல், வெய் துயர் உழப்பவோ?
136-8
முடத் தாழை முடுக்கருள்
அளித்தக்கால், வித்தாயம்
136-9
இடைத் தங்கக் கண்டவன் மனம்
போல, நந்தியாள் - 136-10
கொடைத் தக்காய்! நீ ஆயின்,
நெறி அல்லாக் கதி ஓடி 136-11
உடைப் பொதி இழந்தான் போல்
உறு துயர் உழப்பவோ? 136-12
நறு வீ தாழ் புன்னைக் கீழ்
நயந்து நீ அளித்தக்கால்,
136-13
மறு வித்தம் இட்டவன் மனம்
போல, நந்தியாள் - 136-14
அறிவித்து நீ நீங்கக்
கருதியாய்க்கு, அப் பொருள்
136-15
சிறு வித்தம் இட்டான் போல்,
செறி துயர் உழப்பவோ? 136-16
ஆங்கு, 136-17
கொண்டு பலர் தூற்றும் கௌவை
அஞ்சாய் 136-18
தீண்டற்கு அருளித் திறன்
அறிந்து, எழீஇப் 136-19
பாண்டியம் செய்வான்
பொருளினும் 136-20
ஈண்டுக, இவள் நலம்; ஏறுக,
தேரே! 136-21
***
அரிதே, தோழி! நாண்
நிறுப்பாம் என்று உணர்தல்;
137-1
பெரிதே காமம்; என் உயிர்
தவச் சிறிதே; 137-2
பலவே யாமம்; பையுளும் உடைய;
137-3
சிலவே, நம்மோடு உசாவும்
அன்றில்; 137-4
அழல் அவிர் வயங்கு இழை
ஒலிப்ப, உலமந்து, 137-5
எழில் எஞ்சு மயிலின்
நடுங்கிச், சேக்கையின் 137-6
அழல் ஆகின்று, அவர் நக்கதன்
பயனே. 137-7
மெல்லிய நெஞ்சு பையுள்
கூரத், தம் 137-8
சொல்லினான் எய்தமை அல்லது,
அவர் நம்மை 137-9
வல்லவன் தைஇய வாக்கு அமை
கடு விசை 137-10
வில்லினான் எய்தலோ
இலர்மன்; ஆய் இழை! 137-11
வில்லினும் கடிது, அவர்
சொல்லினுள் பிறந்த நோய்.
137-12
நகை முதல் ஆக, நட்பினுள்
எழுந்த 137-13
தகைமையின் நலிதல் அல்லது,
அவர் நம்மை 137-14
வகைமையின் எழுந்த தொல்
முரண் முதல் ஆகப், 137-15
பகைமையின் நலிதலோ இலர்மன்;
ஆய் இழை! 137-16
பகைமையின் கடிது, அவர்
தகைமையின் நலியும் நோய்.
137-17
'நீயலேன்' என்று என்னை
அன்பினால் பிணித்துத், தம்
137-18
சாயலின் சுடுதல் அல்லது,
அவர் நம்மைப் 137-19
பாய் இருள் அற நீக்கும்
நோய் தபு நெடும் சுடர்த்
137-20
தீயினால் சுடுதலோ இலர்மன்;
ஆய் இழை! 137-21
தீயினும் கடிது அவர்
சாயலின் கனலும் நோய். 137-22
ஆங்கு - 137-23
அன்னர் காதலர் ஆக, அவர்
நமக்கு 137-24
இன் உயிர் போத்தரும்
மருத்துவர் ஆயின், 137-25
யாங்கு ஆவது கொல்? - தோழி!
எனையதூஉம். 137-26
தாங்குதல் வலித்தன்று
ஆயின், 137-27
நீங்க அரிது உற்றஅன்று,
அவர் உறீஇய நோயே. 137-28
***
எழில் மருப்பு எழில் வேழம்
இகுதரு கடாத்தால் 138-1
தொழில் மாறித் தலை வைத்த
தோட்டி கை நிமிர்ந்தாங்கு,
138-2
அறிவும், நம் அறிவு ஆய்ந்த
அடக்கமும், நாணொடு, 138-3
வறிது ஆகப் பிறர் என்னை
நகுபவும், நகுபு உடன் 138-4
மின் அவிர் நுடக்கமும்
கனவும் போல், மெய் காட்டி -
138-5
என் நெஞ்சம் என்னோடு
நில்லாமை நனி வௌவித் 138-6
தன் நலம் கரந்தாளைத்
தலைப்படும் ஆறு எவன் கொலோ?
138-7
மணிப் பீலி சூட்டிய நூலொடு
மற்றை 138-8
அணிப் பூளை, ஆவிரை,
எருக்கொடு, பிணித்து
யாத்து, 138-9
மல்லல் ஊர் மறுகின் கண்
இவள் பாடும், இஃது ஒத்தன் -
138-10
எல்லீரும் கேட்டீமின்
என்று. 138-11
படரும், பனை ஈன்ற மாவும் -
சுடர் இழை 138-12
நல்கியாள் நல்கியவை; 138-13
பொறை என் வரைத்து அன்றிப்
பூ நுதல் ஈத்த 138-14
நிறை அழி காம நோய் நீந்தி,
அறை உற்ற 138-15
உப்பு இயல் பாவை உறை உற்றது
போல, 138-16
உக்கு விடும் என் உயிர்.
138-17
பூளை, பொல மலர் ஆவிரை - வேய்
வென்ற 138-18
தோளாள் எமக்கு ஈத்த பூ; 138-19
உரிது என் வரைத்து அன்றி,
ஒள் இழை தந்த 138-20
பரிசு அழி பைதல் நோய்
மூழ்கி, எரி பரந்த 138-21
நெய்யுள் மெழுகின்
நிலையாது, பைபயத் 138-22
தேயும் - அளித்து - என்
உயிர். 138-23
இளையாரும், ஏதிலவரும் -
உளைய, யான் 138-24
உற்றது உசாவும் துணை. 138-25
என்று யான் பாடக் கேட்டு,
138-26
அன்புறு கிளவியாள் அருளி
வந்து அளித்தலின் - 138-27
துன்பத்தில் துணை ஆய மடல்
இனி இவள் பெற 138-28
இன்பத்துள் இடம்படல்
என்று இரங்கினள் -
அன்புற்று 138-29
அடங்குஅரும் தோற்றத்து
அரும் தவம் முயன்றோர் தம்
138-30
உடம்பு ஒழித்து உயர் உலகு
இனிது பெற்றாங்கே. 138-31
***
'சான்றவிர் வாழியோ!
சான்றவிர்! என்றும் 139-1
பிறர் நோயும் தம் நோய் போல்
போற்றி, அறன் அறிதல் 139-2
சான்றவர்க்கு எல்லாம்
கடன் ஆனால், இவ் இருந்த 139-3
சான்றீர்! உமக்கு ஒன்று
அறிவுறுப்பேன்: மான்ற 139-4
துளி இடை மின்னுப் போல்
தோன்றி, ஒருத்தி, 139-5
ஒளியோடு உரு என்னைக்
காட்டி, அளியள், என் 139-6
நெஞ்சு ஆறு கொண்டாள், அதன்
கொண்டும் துஞ்சேன்; 139-7
அணி அலங்கு ஆவிரைப் பூவோடு
எருக்கின் 139-8
பிணையல் அம் கண்ணி
மிலைந்து, மணி ஆர்ப்ப, 139-9
ஓங்கு இரும் பெண்ணை மடல்
ஊர்ந்து, என் எவ்வ நோய் 139-10
தாங்குதல் தேற்றா
இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
139-11
வீங்கு இழை மாதர் திறத்து
ஒன்று, நீங்காது, 139-12
பாடுவேன், பாய் மா
நிறுத்து. 139-13
யாமத்தும் எல்லையும்
எவ்வத் திரை அலைப்ப 139-14
'மா மேலேன்' என்று, மடல்
புணையா நீந்துவேன் - 139-15
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
139-16
காமக் கடல் அகப்பட்டு. 139-17
உய்யா அரு நோய்க்கு
உயவாகும் - மையல் 139-18
உறீஇயாள் ஈத்த இம் மா. 139-19
காணுநர் எள்ளக் கலங்கித்,
தலை வந்து, என் 139-20
ஆண் எழில் முற்றி உடைத்து
உள் அழித்தரும் - 139-21
'மாண் இழை மாதராள் ஏஎர்'
எனக் காமனது 139-22
ஆணையால் வந்த படை. 139-23
காமக் கடும் பகையின்
தோன்றினேற்கு ஏமம் - 139-24
எழில் நுதல் ஈத்த இம் மா.
139-25
அகை எரி ஆனாது, என் ஆர்
உயிர் எஞ்சும் 139-26
வகையினால், உள்ளம்
சுடுதரும் மன்னோ - 139-27
முகை ஏர் இலங்கு எயிற்று
இன் நகை மாதர் 139-28
தகையால் தலைக்கொண்ட
நெஞ்சு! 139-29
அழல் மன்ற காம அரு நோய்;
நிழல் மன்ற, 139-30
நேர் இழை ஈத்த இம் மா. 139-31
ஆங்கு அதை, 139-32
அறிந்தனிர் ஆயின்,
சான்றவிர்! தான் தவம் 139-33
ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ,
ஆன்றோர் 139-34
உள் இடப்பட்ட அரசனைப்
பெயர்த்து, அவர் 139-35
உயர்நிலை உலகம்
உறீஇயாங்கு, என் 139-36
துயர் நிலை தீர்த்தல் நும்
தலைக் கடனே. 139-37
***
கண்டவிர் எல்லாம் கதுமென
வந்து, ஆங்கே, 140-1
பண்டு அறியாதீர் போல
நோக்குவீர்; கொண்டது 140-2
மா என்று உணர்மின்; மடல்
அன்று; மற்று இவை 140-3
பூ அல்ல; பூளை, உழிந்ஞையோடு
யாத்த 140-4
புன வரை இட்ட வயங்கு தார்ப்
பீலி, 140-5
பிடி அமை நூலொடு பெய்ம் மணி
கட்டி, 140-6
அடர் பொன் அவிர் ஏய்க்கும்
ஆவிரம் கண்ணி, 140-7
நெடியோன் மகன் நயந்து
தந்தாங்கு, அனைய 140-8
வடிய வடிந்த வனப்பின், என்
நெஞ்சம் 140-9
இடிய இடைக் கொள்ளும் சாயல்,
ஒருத்திக்கு 40-10
அடியுறை காட்டிய செல்வேன்;
மடியன்மின், 140-11
அன்னேன் ஒருவனேன், யான்;
140-12
என்னானும், பாடு எனில்
பாடவும் வல்லேன், சிறிது
ஆங்கே 140-13
ஆடு எனில் ஆடலும்
ஆற்றுகேன்; பாடுகோ - 140-14
என் உள் இடும்பை தணிக்கும்
மருந்து ஆக, 140-15
நல் நுதல் ஈத்த இம் மா? 140-16
திங்கள் அரவு உறின்,
தீர்க்கலார் ஆயினும், 140-17
தம் காதல் காட்டுவர்
சான்றவர் - இன் சாயல் 140-18
ஒண் தொடி நோய் நோக்கில்
பட்ட என் நெஞ்ச நோய் 140-19
கண்டும், கண்ணோடாது, இவ்
ஊர். 140-20
தாங்காச் சினத்தொடு
காட்டி உயிர் செகுக்கும்
140-21
பாம்பும் அவைப் படில்
உய்யும்ஆம் - பூம் கண் 140-22
வணர்ந்து ஒலி ஐம்பாலாள்
செய்த இக் காமம் 140-23
உணர்ந்தும் உணராது இவ்
ஊர். 140-24
வெம் சுழிப் பட்ட மகற்குக்
கரை நின்றார் 140-25
அஞ்சல் என்றாலும்
உயிர்ப்பு உண்டுஆம் - அம்
சீர்ச் 140-26
செறிந்து ஏர் முறுவலாள்
செய்த இக் காமம் 140-27
அறிந்தும், அறியாது, இவ்
ஊர். 140-28
ஆங்க, 140-29
என் கண் இடும்பை
அறீஇயினென்; நும் கண் 140-30
தெருளுற நோக்கித்
தெரியும்கால், இன்ன 140-31
மருளுறு நோயொடு மம்மர்
அகல, 140-32
இருளுறு கூந்தலாள் என்னை
140-33
அருளுறச் செயின், நுமக்கு
அறனும்ஆர் அதுவே. 140-34
***
அரிதினின் தோன்றிய யாக்கை
புரிபு தாம் 141-1
வேட்டவை செய்து, ஆங்குக்,
காட்டி மற்று ஆங்கே, 141-2
அறம் பொருள் இன்பம் என்று
அம் மூன்றின் ஒன்றன் 141-3
திறம் சேரார் செய்யும்
தொழில்கள் அறைந்தன்று - 141-4
அணி நிலைப் பெண்ணை மடல்
ஊர்ந்து, ஒருத்தி 141-5
அணி நலம் பாடி வரற்கு. 141-6
ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி,
நிறை மதி 141-7
நீருள் நிழல்போல், கொளற்கு
அரியள் - போருள் 141-8
அடல் மா மேல் ஆற்றுவேன்,
என்னை, மடல் மா மேல் 141-9
மன்றம் படர்வித்தவள் -
வாழி, சான்றீர்! 141-10
பொய் தீர் உலகம் எடுத்த
கொடி மிசை, 141-11
மை அறு மண்டிலம் வேட்டனள் -
வையம் 141-12
புரவு ஊக்கும் உள்ளத்தேன்
என்னை இரவு ஊக்கும் 141-13
இன்னா இடும்பை செய்தாள் -
அம்ம, சான்றீர்! 141-14
கரந்தாங்கே இன்னா நோய்
செய்யும், மற்று இஃதோ - 141-15
பரந்த சுணங்கின் பணைத்
தோளாள் பண்பு? 141-16
இடி உமிழ் வானத்து, இரவு
இருள் போழும் 141-17
கொடி மின்னுக் கொள்வேன்
என்றன்னள் - வடி நாவின் 141-18
வல்லார் முன் சொல் வல்லேன்
என்னைப் பிறர் முன்னர்க்
141-19
கல்லாமை காட்டியவள் - வாழி,
சான்றீர்! 141-20
என்று ஆங்கே, 141-21
வருந்த மா ஊர்ந்து, மறுகின்
கண் பாடத் 141-22
திருந்து இழைக்கு ஒத்த
கிளவி கேட்டு, ஆங்கே 141-23
பொருந்தாதார் போர் வல்
வழுதிக்கு அரும் திறை 141-24
போலக், கொடுத்தார் தமர்.
141-25
***
புரிவு உண்ட புணர்ச்சிஉள்
புல் ஆரா மாத்திரை, 142-1
அருகுவித்து ஒருவரை
அகற்றலின், தெரிவார் கண் 142-2
செய நின்ற பண்ணின்உள் செவி
சுவை கொள்ளாது, 142-3
நயம் நின்ற பொருள் கெடப்
புரி அறு நரம்பினும் 142-4
பயன் இன்று மன்ற அம்ம,
காமம் - இவள் மன்னும், 142-5
ஒள் நுதல் ஆயத்தார்
ஓராங்குத் திளைப்பினும்,
142-6
முள் நுனை தோன்றாமை
முறுவல் கொண்டு, அடக்கித்,
தன் 142-7
கண்ணினும் முகத்தினும்
நகுபவள்; பெண் இன்றி 142-8
யாவரும் தண் குரல் கேட்ப,
நிரை வெண் பல் 142-9
மீ உயர் தோன்ற, நகாஅ,
நக்காங்கே, 142-10
பூ உயிர்த்தன்ன புகழ் சால்
எழில் உண் கண் 142-11
ஆய் இதழ் மல்க அழும். 142-12
ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல்
குறுகினம்; 142-13
காண்பாம் - கனம் குழை பண்பு.
142-14
என்று, எல்லீரும் என்
செய்தீர்? என்னை நகுதிரோ?
142-15
நல்ல நகாஅலிர் மன் கொலோ -
யான் உற்ற 142-16
அல்லல் உறீஇயான் மாய மலர்
மார்பு 142-17
புல்லிப் புணரப் பெறின்.
142-18
'எல்லா! நீ உற்றது எவனோ
மற்று? என்றீரேல், என் சிதை
142-19
செய்தான் இவன்' என, 'உற்றது
இது' என, 142-20
எய்த உரைக்கும் உரன்
அகத்து உண்டாயின், 142-21
பைதல ஆகி பசக்குவ மன்னோ -
என் 142-22
நெய்தல் மலர் அன்ன கண்? 142-23
கோடு வாய் கூடாப் பிறையைப்,
பிறிது ஒன்று 142-24
நாடுவேன், கண்டனென்;
சிற்றில்உள் கண்டு, ஆங்கே,
142-25
ஆடையான் மூஉய்
அகப்படுப்பேன்; சூடிய, 142-26
காணான், திரிதரும் கொல்லோ -
மணி மிடற்று 142-27
மாண் மலர் கொன்றையவன்? 142-28
'தெள்ளியேம்' என்று
உரைத்துத், தேராது, ஒரு
நிலையே, 142-29
'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலி
உறீஇ, 142-30
உள்ளி வருகுவர் கொல்லோ?
வளைந்து யான் 142-31
எள்ளி இருக்குவேன்மன்
கொலோ? நள்இருள் 142-32
மாந்தர் கடி கொண்ட கங்குல்,
கனவினால், 142-33
தோன்றினன் ஆகத்,
தொடுத்தேன்மன், யான்;
தன்னைப் 142-34
பையெனக் காண்கு விழிப்ப,
யான் பற்றிய 142-35
கை உளே மாய்ந்தான்,
கரந்து. 142-36
கதிர் பகா ஞாயிறே! கல்
சேர்தி ஆயின், 142-37
அவரை நினைத்து, நிறுத்து
என் கை நீட்டித் 142-38
தருகுவை ஆயின், தவிரும் -
என் நெஞ்சத்து 142-39
உயிர் திரியா மாட்டிய தீ.
142-40
மை இல் சுடரே! மலை சேர்தி நீ
ஆயின், 142-41
பௌவ நீர்த் தோன்றிப் பகல்
செய்யும் மாத்திரை, 142-42
கை விளக்கு ஆகக் கதிர் சில
தாராய்! என் 142-43
தொய்யில் சிதைத்தானைத்
தேர்கு. 142-44
சிதைத்தானைச் செய்வது
எவன் கொலோ? எம்மை 142-45
நயந்து, நலம் சிதைத்தான்.
142-46
மன்றப் பனை மேல் மலை மாந்
தளிரே! நீ 142-47
தொன்று இவ் உலகத்துக்
கேட்டும் அறிதியோ? 142-48
மென் தோள் ஞெகிழ்த்தான்
தகை அல்லால், யான் காணேன் -
142-49
நன்று தீது என்று பிற. 142-50
நோய் எரி ஆகச் சுடினும்,
சுழற்றி, என் 142-51
ஆய் இதழ் உள்ளே கரப்பன் -
கரந்தாங்கே 142-52
நோய் உறு வெந் நீர்;
தெளிப்பின், தலைக்கொண்டு
142-53
வேவது, அளித்து இவ் உலகு.
142-54
மெலியப் பொறுத்தேன்
களைந்தீமின் - சான்றீர்! -
142-55
நலிதரும் காமமும்
கௌவையும் என்று, இவ் 142-56
வலிதின் உயிர் காவாத்
தூங்கி, ஆங்கு, என்னை 142-57
நலியும் விழுமம் இரண்டு.
142-58
எனப் பாடி, 142-59
இனைந்து நொந்து அழுதனள்;
நினைந்து நீடு
உயிர்த்தனள்; 142-60
எல்லையும் இரவும் கழிந்தன
என்று எண்ணி, எல் இரா 142-61
நல்கிய கேள்வன் இவன் - மன்ற,
மெல்ல 142-62
மணிஉள் பரந்த நீர் போலத்
துணிவாம் - 142-63
கலம் சிதை இல்லத்துக் காழ்
கொண்டு தேற்றக் 142-64
கலங்கிய நீர் போல்
தெளிந்து நலம்பெற்றாள்,
142-65
நல் எழில் மார்பனைச்
சார்ந்து! 142-66
***
"அகல் ஆங்கண், இருள் நீங்க,
அணி நிலாத் திகழ்ந்த பின்
143-1
பகல் ஆங்கண் பையென்ற
மதியம் போல், நகல் இன்று 143-2
நல் நுதல் நீத்த திலகத்தள்,
'மின்னி 143-3
மணி பொரு பசும் பொன் கொல்?
மா ஈன்ற தளிரின் மேல் 143-4
கணிகாரம் கொட்கும் கொல்?'
என்றாங்கு அணி செல, 143-5
மேனி மறைத்த பசலையள், ஆனாது
143-6
நெஞ்சம் வெறியா நினையா,
நிலன் நோக்கா, 143-7
அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது
ஒத்தி 143-8
என் செய்தாள் கொல்?"
என்பீர் - கேட்டீமின்- பொன்
செய்தேன்.143-9
மறையின் தன் யாழ் கேட்ட
மானை அருளாது, 143-10
அறை கொன்று, மற்று அதன் ஆர்
உயிர் எஞ்ச, 143-11
பறை அறைந்தாங்கு, ஒருவன்
நீத்தான் - அவனை 143-12
அறை நவ நாட்டில் நீர்
கொண்டு தரின், யானும் 143-13
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற
- மறையின் என் 143-14
மென் தோள் நெகிழ்த்தானை
மேஎய், அவன் ஆங்கண் 143-15
சென்று, சேண் பட்டது என்
நெஞ்சு. 143-16
'ஒன்றி முயங்கும்' என்று,
என் பின் வருதிர்; மற்று
ஆங்கே 143-17
'உயங்கினாள்' என்று, ஆங்கு
உசாதிர்; 'மற்று அந்தோ 143-18
மயங்கினாள்!' என்று
மருடிர்; கலங்கன்மின் - 143-19
இன் உயிர் அன்னார்க்கு
எனைத்து ஒன்றும் தீது
இன்மை 143-20
என் உயிர் காட்டாதோ மற்று?
143-21
'பழி தபு ஞாயிறே! பாடு
அறியாதார் கண் 143-22
கழியக் கதழ்வை' எனக்
கேட்டு, நின்னை 143-23
வழிபட்டு இரக்குவேன்
வந்தேன் - என் நெஞ்சம் 143-24
அழியத் துறந்தானைச்
சீறும்கால் என்னை 143-25
ஒழிய விடாதீமோ என்று. 143-26
அழிதக, மாஅம் தளிர் கொண்ட
போழ்தினான், இவ் ஊரார் 143-27
தாஅம் தளிர் சூடித் தம்
நலம் பாடுப; 143-28
ஆஅம் தளிர்க்கும் இடைச்
சென்றார் மீள்தரின், 143-29
யாஅம் தளிர்க்குவேம் மன்.
143-30
நெய்தல் நெறிக்கவும்
வல்லன்; நெடு மென் தோள் 143-31
பெய் கரும்பு ஈர்க்கவும்
வல்லன்; இள முலை மேல் 143-32
தொய்யில் எழுதவும் வல்லன்;
தன் கையில் 143-33
சிலை வல்லான் போலும்
செறிவினான்; நல்ல 143-34
பல வல்லன் - தோள் ஆள்பவன்.
143-35
நினையும் என் உள்ளம் போல்,
நெடும் கழி மலர் கூம்ப, 143-36
இனையும் என் நெஞ்சம் போல்,
இனம் காப்பார் குழல்
தோன்றச் 143-37
சாய என் கிளவி போல்,
செவ்வழி யாழ் இசை நிற்ப, 143-38
போய என் ஒளியே போல், ஒரு
நிலையே பகல் மாய, 143-39
காலன் போல் வந்த
கலக்கத்தோடு என் தலை 143-40
மாலையும் வந்தன்று, இனி.
143-41
இருளொடு யான் ஈங்கு உழப்ப,
என் இன்றிப் பட்டாய், 143-42
அருள் இலை! வாழி! - சுடர்!
143-43
ஈண்டு நீர் ஞாலத்துள் எம்
கேள்வர் இல் ஆயின், 143-44
மாண்ட மனம் பெற்றார் மாசு
இல் துறக்கத்து 143-45
வேண்டிய வேண்டியாங்கு
எய்துதல் வாய் எனின், 143-46
யாண்டும் உடையேன் இசை. 143-47
ஊர் அலர் தூற்றும்; இவ்
உய்யா விழுமத்துப் 143-48
பீர் அலர் போல பெரியப்
பசந்தன - 143-49
நீர் அலர் நீலம் என,
அவர்க்கு, அஞ்ஞான்று, 143-50
பேர் அஞர் செய்த என் கண்.
143-51
தன் உயிர் போலத் தழீஇ,
உலகத்து 143-52
மன் உயிர் காக்கும் இம்
மன்னனும் என் கொலோ - 143-53
இன் உயிர் அன்னானைக்
காட்டி, எனைத்து ஒன்றும்
143-54
என் உயிர் காவாதது? 143-55
என ஆங்கு, 143-56
மன்னிய நோயொடு மருள் கொண்ட
மனத்தவள், 143-57
பல் மலை இறந்தவன் பணிந்து
வந்து அடி சேரத், 143-58
தென்னவன் தெளித்த தேஎம்
போல, 143-59
இன் நகை எய்தினள், இழந்த
தன் நலனே! 143-60
***
நல் நுதாஅல்! காண்டை;
நினையா, நெடிது உயிரா, 144-1
என் உற்றாள் கொல்லோ? இஃது
ஒத்தி - பல் மாண் 144-2
நகுதரும் - தன் நாணுக்
கைவிட்டு, இகுதரும் 144-3
கண்ணீர் துடையாக்,
கவிழ்ந்து, நிலன் நோக்கி
144-4
அன்ன இடும்பை பல செய்து,
தன்னை 144-5
வினவுவார்க்கு ஏதில
சொல்லிக், கனவு போல், 144-6
தெருளும் மருளும் மயங்கி
வருபவள் 144-7
கூறுப கேளாமோ, சென்று? 144-8
'எல்லா! நீ என் அணங்கு
உற்றனை? யார் நின் இது
செய்தார்? 144-9
நின் உற்ற அல்லல் உரை', என
என்னை 144-10
வினவுவீர்! தெற்றெனக்
கேண்மின்; ஒருவன், 144-11
'குரல் கூந்தால்! என் உற்ற
எவ்வம் நினக்கு யான் 144-12
உரைப்பனைத் தங்கிற்று, என்
இன் உயிர்' என்று 144-13
மருவு ஊட்டி, மாறியதன்
கொண்டு, எனக்கு 144-14
மருவு உழிப் பட்டது, என்
நெஞ்சு. 144-15
எங்கும் தெரிந்து அது
கொள்வேன், அவன் உள் வழி. 144-16
பொங்கு இரு முந்நீர் அகம்
எல்லாம் நோக்கினை 144-17
திங்கள்உள் தோன்றி இருந்த
குறு முயால்! - 144-18
எம்கேள் இதன் அகத்து
உள்வழிக் காட்டீமோ? 144-19
காட்டீயாய் ஆயின், கத நாய்
கொளுவுவேன்; 144-20
வேட்டுவர் உள் வழிச்
செப்புவேன்; ஆட்டி 144-21
மதியொடு பாம்பு மடுப்பேன்'
மதி திரிந்த 144-22
என் அல்லல் தீராய் எனின்.
144-23
என்று ஆங்கே உள் நின்ற
எவ்வம் உரைப்ப மதியொடு 144-24
வெள் மழை ஓடிப் புகுதி;
சிறிது என்னைக் 144-25
கண்ணோடினாய் போறி, நீ. 144-26
நீடு இலைத் தாழைத் துவர்
மணல் கானல்உள் 144-27
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன்!
பொழில் தொறும் 144-28
நாடுவேன்; கள்வன் கரந்து
இருக்கற்பாலன் கொல்? 144-29
ஆய் பூ அடும்பின் அலர்
கொண்டு உதுக் காண், எம் 144-30
கோதை புனைந்த வழி. 144-31
உதுக் காண் - சாஅய் மலர்
காட்டி, சால்பு இலான் யாம்
ஆடும் 144-32
பாவை கொண்டு ஓடியுழி. 144-33
உதுக் காண் - தொய்யில்
பொறித்த வழி. 144-34
உதுக் காண் - 'தையால்! தேறு'
எனத் தேற்றி, அறன் இல்லான்
144-35
பைய முயங்கியுழி. 144-36
அளிய என் உள்ளத்து, உயவுத்
தேர் ஊர்ந்து, 144-37
விளியா நோய் செய்து, இறந்த
அன்புஇல் அவனைத் 144-38
தெளிய - விசும்பினும்
ஞாலத்து அகத்தும் 144-39
வளியே! எதிர்போம் - பல கதிர்
ஞாயிற்று 144-40
ஒளி உள் வழி எல்லாம்
சென்று, முனிபு எம்மை 144-41
உண்மை நலன் உண்டு
ஒளித்தானைக் காட்டீமோ; 144-42
காட்டாயேல், மண்ணகம்
எல்லாம் ஒருங்கு சுடுவேன்,
என் 144-43
கண்ணீர் அழலால் தெளித்து.
144-44
பேணான் துறந்தானை நாடும்
இடம் விடாய் ஆயின் - 144-45
பிறங்கு இரு முந்நீர்! -
வெறு மணல் ஆகப் 144-46
புறம் காலின் போக
இறைப்பேன், முயலின் 144-47
அறம் புணை ஆகலும் உண்டு. 144-48
துறந்தானை நாடித்
தருகிற்பாய் ஆயின்,
நினக்கு ஒன்று 144-49
பாடுவேன், என் நோய்
உரைத்து. 144-50
புல்லிய கேளிர் புணரும்
பொழுது உணரேன் - 144-51
எல்லி ஆக, 'எல்லை' என்று
ஆங்கே, பகல் முனிவேன். 144-52
எல்லிய காலை இரா முனிவேன்;
யான் உற்ற 144-53
அல்லல் களைவார் இலேன். 144-54
ஓஒ! கடலே! தெற்றெனக் கண்
உள்ளே தோன்ற இமை எடுத்துப்
144-55
'பற்றுவேன்' என்று, யான்
விழிக்கும்கால் மற்றும்
என் 144-56
நெஞ்சத்துஉள் ஓடி ஒளித்து,
ஆங்கே, துஞ்சா நோய் 144-57
செய்யும், அறன் இல் அவன்.
144-58
ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு
கனலும் கடும் தீ உள் 144-59
நீர் பெய்த காலே சினம்
தணியும்; மற்று இஃதோ 144-60
ஈரம் இல் கேள்வன் உறீஇய
காமத் தீ 144-61
நீர் உள் புகினும் சுடும்.
144-62
ஓஒ! கடலே! 'எற்றம் இலாட்டி
என் ஏமுற்றாள்?' என்று இந்
நோய் 144-63
உற்று அறியாதாரோ நகுக!
நயந்தாங்கே 144-64
இற்றா அறியின், முயங்கலேன்,
மற்று என்னை 144-65
அற்றத்து இட்டு ஆற்று
அறுத்தான் மார்பு. 144-66
ஆங்கு, 144-67
கடலொடு புலம்புவோள்
கலங்கு அஞர் தீரக் 144-68
கெடல் அரும் காதலர் துனை
தரப், பிணி நீங்கி, 144-69
அறன் அறிந்து ஒழுகும்
அங்கணாளனைத் 144-70
திறன் இலார் எடுத்து தீ
மொழி எல்லாம் 144-71
நல் அவைஉள் படக்
கெட்டாங்கு, 144-72
இல்லாகின்று அவள் ஆய்
நுதல் பசப்பே. 144-73
***
'துனையுநர் விழைதக்க
சிறப்புp போல், கண்டார்க்கு
145-1
நனவின்உள் உதவாது நள்
இருள் வேறு ஆகும் 145-2
கனவின் நிலையின்றால்,
காமம்; ஒருத்தி 145-3
உயிர்க்கும்; உசாஅம்!
உலம்வரும்; ஓவாள், 145-4
கயல் புரை உண் கண் அரிப்ப
அரி வாரப், 145-5
பெயல் சேர் மதி போல, வாள்
முகம் தோன்ற, 145-6
பல ஒலி கூந்தலாள் பண்பு
எல்லாம் துய்த்துத் 145-7
துறந்தானை உள்ளி அழூஉம்;
அவனை 145-8
மறந்தாள் போல் ஆலி நகூஉம்;
மருளும்; 145-9
சிறந்த தன் நாணும் நலனும்
நினையாது, 145-10
காமம் முனைஇயாள், அலந்தாள்'
என்று, எனைக் காண, 145-11
நகான்மின்; கூறுவேன்,
மாக்காள்! மிகாஅது, 145-12
மகளிர் தோள் சேர்ந்த
மாந்தர் துயர் கூர
நீத்தலும், 145-13
நீள் சுரம் போகியார் வல்லை
வந்து அளித்தலும், 145-14
ஊழ் செய்து, இரவும் பகலும்
போல், வேறு ஆகி, 145-15
வீழ்வார் கண் தோன்றும்
தடுமாற்றம் ஞாலத்துள் 145-16
வாழ்வார்கட்கு எல்லாம்
வரும்; 145-17
தாழ்பு, துறந்து, தொடி
நெகிழ்த்தான் போகிய கானம்
145-18
இறந்து எரி நையாமல், பாஅய்
முழங்கி - 145-19
வறந்து என்னை செய்தியோ,
வானம்? - சிறந்த என் 145-20
கண்ணீர்க் கடலால், கனை துளி
வீசாயோ, 145-21
கொண்மூ குழீஇ முகந்து? 145-22
நுமக்கு எவன் போலுமோ?
ஊரீர்! எமக்கும் எம் 145-23
கண் பாயல் கொண்டு, உள்ளாக்
காதலவன் செய்த 145-24
பண்பு தர வந்த என் தொடர்
நோய் வேது 145-25
கொள்வது போலும், கடும்
பகல்? ஞாயிறே! 145-26
எல்லா கதிரும் பரப்பிப்
பகலொடு 145-27
செல்லாது நின்றீயல்
வேண்டுவல்; நீ செல்லின், 145-28
புல்லென் மருள் மாலைப்
போழ்து இன்று வந்து
என்னைக் 145-29
கொல்லாது போதல் அரிதால்;
அதனொடு யான் 145-30
செல்லாது நிற்றல் இலேன் .
145-31
ஒல்லை எம் காதலர்க் கொண்டு,
கடல் ஊர்ந்து, காலை நாள், 145-32
போதரின் - காண்குவேன் மன்னோ
- பனியொடு 145-33
மாலைப் பகை தாங்கி, யான்?
145-34
இனியன் என்று ஓம்படுப்பல்,
ஞாயிறு! இனி, 145-35
ஒள் வளை ஓடத் துறந்து;
துயர் செய்த 145-36
கள்வன் பால் பட்டன்று,
ஒளித்து என்னை, உள்ளி - 145-37
பெரும் கடல் புல்லெனக்
கானல் புலம்ப, 145-38
இரும் கழி நெய்தல் இதழ்
பொதிந்து தோன்ற, 145-39
விரிந்து இலங்கு வெண் நிலா
வீசும் பொழுதினான், 145-40
யான் வேண்டு ஒருவன், என்
அல்லல் உறீஇயான்; 145-41
தான் வேண்டுபவரோடு
துஞ்சும் கொல்? - துஞ்சாது
145-42
வானும் நிலனும் திசையும்
துழாவும் என் 145-43
ஆனா படர் மிக்க நெஞ்சு. 145-44
ஊரவர்க்கு எல்லாம் பெரு
நகை ஆகி, என் 145-45
ஆர் உயிர் எஞ்சும்மன்;
அங்கு நீ சென்றீ - 145-46
நிலவு உமிழ் வான் திங்காள்!
ஆய் தொடி கொட்ப, 145-47
அளி புறம் மாறி, அருளான்
துறந்த அக் 145-48
காதலன் செய்த கலக்குறு
நோய்க்கு ஏதிலார் 145-49
எல்லாரும் தேற்றர்,
மருந்து 145-50
வினைக் கொண்டு என் காம நோய்
நீக்கிய ஊரீர்! 145-51
எனைத்தானும் எள்ளினும்
எள்ளலன், கேள்வன்; 145-52
நினைப்பினும், கண் உள்ளே
தோன்றும்; அனைத்தற்கே 145-53
ஏமராது, ஏமரா ஆறு. 145-54
கனை இருள் வானம்! - கடல்
முகந்து, என் மேல் 145-55
உறையொடு நின்றீயல்
வேண்டும்; ஒருங்கே - 145-56
நிறை வளை கொட்பித்தான்
செய்த துயரால் 145-57
இறை இறை பொத்திற்றுத் தீ.
145-58
எனப் பாடி, 145-59
நோய் உடை நெஞ்சத்து எறியா,
இனைபு ஏங்கி, 145-60
"யாவிரும் எம் கேள்வன்
காணீரோ?" என்பவட்கு, 145-61
ஆர்வுற்ற பூசற்கு அறம் போல,
எய்தந்தார்; 145-62
பாயல் கொண்டு உள்ளாதவரை
வரக் கண்டு, 145-63
மாயவன் மார்பில் திருப்
போல் அவள் சேர, 145-64
ஞாயிற்று முன்னர் இருள்
போல மாய்ந்தது, என் 145-65
ஆய் இழை உற்ற துயர். 145-66
***
உரை செல உயர்ந்து ஓங்கிச்
சேர்ந்தாரை ஒரு நிலையே 146-1
வரை நில்லா விழுமம் உறீஇ
நடுக்கு உரைத்து, தெறல்
மாலை 146-2
அரைசினும் அன்பு இன்றாம்,
காமம்; புரை தீர 146-3
அன்ன மெல் சேக்கையுள்
ஆராது அளித்தவன் 146-4
துன்னி அகலத் துறந்த
அணியளாய், 146-5
நாணும் நிறையும்
உணர்கல்லாள், தோள்
ஞெகிழ்பு, 146-6
பேர் அமர் உண்கண் நிறை
மல்க, அந்நீர் தன், 146-7
கூர் எயிறு ஆடி, குவி முலை
மேல் வார்தர, 146-8
தேர் வழி நின்று தெருமரும்,
ஆய் இழை 146-9
கூறுப கேளாமோ, சென்று? 146-10
'எல் இழாய்! எற்றி
வரைந்தானை, நாணும்
மறந்தாள்' என்று, 146-11
உற்றனிர் போல, வினவுதிர்!
மற்று இது 146-12
கேட்டீமின், எல்லீரும்
வந்து: 146-13
வறம் தெற மாற்றிய வானமும்
போலும்; 146-14
நிறைந்து என்னை மாய்ப்பது
ஓர் வெள்ளமும் போலும் - 146-15
சிறந்தவன் தூ அற நீப்ப,
பிறங்கி வந்து, 146-16
என் மேல் நிலைஇய நோய். 146-17
'நக்கு நலனும் இழந்தாள்,
இவள்' என்னும் 146-18
தக்கவிர் போலும்!
இழந்திலேன் மன்னோ - 146-19
மிக்க என் நாணும் நலனும்
என் உள்ளமும் 146-20
அக்கால் அவன் உழை ஆங்கே
ஒழிந்தன! 146-21
உக்காண் - இஃதோ உடம்பு
உயிர்க்கு ஊற்று ஆகச் 146-22
செக்கர் அம் புள்ளித்
திகிரி அலவனொடு, யான் 146-23
நக்கது, பல் மாண்
நினைந்து. 146-24
கரை காணா நோயுள்
அழுந்தாதவனைப் 146-25
புரை தவ கூறிக், கொடுமை
நுவல்வீர்! 146-26
வரைபவன் என்னின் அகலான் -
அவனைத், 146-27
திரை தரும் முந்நீர்
வளாஅகம் எல்லாம், 146-28
நிரை கதிர் ஞாயிற்றை, நாடு
என்றேன்; யானும் 146-29
உரை கேட்புஉழி எல்லாம்
செல்வேன்; புரை தீர்ந்தான்
146-30
யாண்டு ஒளிப்பான் கொலோ
மற்று? 146-31
மருள் கூர் பிணை போல்
மயங்க, வெந்நோய் செய்யும்
146-32
மாலையும் வந்து, மயங்கி எரி
நுதி 146-33
யாமம் தலை வந்தன்று ஆயின்,
அதற்கு என் நோய் 146-34
பாடுவேன், பல்லாருள்
சென்று. 146-35
யான் உற்ற எவ்வம்
உரைப்பின், பலர்த்
துயிற்றும் 146-36
யாமம், நீ துஞ்சலை மன். 146-37
எதிர்கொள்ளும் ஞாலம்,
துயில் ஆராது ஆங்கண் 146-38
முதிர்பு என் மேல் முற்றிய
வெந்நோய் உரைப்பின் 146-39
கதிர்கள் மழுங்கி, மதியும்
அதிர்வது போல் 146-40
ஓடிச் சுழல்வது மன். 146-41
பேர் ஊர் மறுகில் பெரும்
துயில் சான்றீரே! 146-42
நீரைச் செறுத்து, நிறைவுற
ஓம்புமின்; 146-43
கார் தலைக்கொண்டு
பொழியினும், தீர்வது 146-44
போலாது, என் மெய் கனலும்
நோய். 146-45
இருப்பினும் நெஞ்சம்
கனலும்; செலினே, 146-46
வருத்துறும் யாக்கை,
வருந்துதல் ஆற்றேன்; 146-47
அருப்பம் உடைத்து, என்னுள்
எவ்வம் பொருத்திப் 146-48
பொறி செய் புனை பாவை போல
வறிது உயங்கிச் 146-49
செல்வேன், விழுமம் உழந்து.
146-50
என ஆங்கு பாட, அருள் உற்று,
146-51
வறம் கூர் வானத்து வள்
உறைக்கு அலமரும் 146-52
புள்ளிற்கு அது
பொழிந்தாஅங்கு, மற்றுத்
தன் 146-53
நல் எழில் மார்பன்
முயங்கலின் 146-54
அல்லல் தீர்ந்தன்று ஆய்
இழை பண்பே. 146-55
***
ஆறு அல்ல மொழி தோற்றி, அற
வினை கலக்கிய, 147-1
தேறுகள் நறவு உண்டார்
மயக்கம் போல், காமம் 147-2
வேறு ஒரு பாற்று ஆனது கொலோ?
சீறு அடிச் 147-3
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் -
இவள் மன்னோ, இனி மன்னும் 147-4
புலம்பு ஊரப் புல்லென்ற
வனப்பினாள் - விலங்கு ஆக, 147-5
வேல் நுதி உற நோக்கி,
வெயில் உற, உருகும் தன் 147-6
தோள் நலம் உண்டானைக்
கெடுத்தாள் போல், தெருவில்
பட்டு, 147-7
ஊண் யாதும் இலள் ஆகி,
உயிரினும் சிறந்த தன் 147-8
நாண் யாதும் இலள் ஆகி,
நகுதலும் நகூஉம்; ஆங்கே 147-9
பெண்மையும் இலள் ஆகி
அழுதலும் அழூஉம்; தோழி! ஓர்
147-10
ஒள் நுதல் உற்றது உழைச்
சென்று கேளாமோ? 147-11
இவர் யாவர்? ஏமுற்றார்
கண்டீரே! ஓஒ! 147-12
அமையும் தவறிலீர்மன் கொலோ?
- நகையின் 147-13
மிக்க தன் காமமும் ஒன்று
என்ப; அம் மா 147-14
புது நலம் பூ வாடி அற்று,
தாம் வீழ்வார் 147-15
மதி மருள நீத்தக்கடை. 147-16
என்னையே மூசிக், கதுமென
நோக்கன்மின்; வந்து 147-17
கலைஇய கண், புருவம், தோள்,
நுசுப்பு, ஏஎர் 147-18
சில மழை போல் தாழ்ந்து
இருண்ட கூந்தல், அவற்றை 147-19
விலை வளம் மாற அறியாது,
ஒருவன் 147-20
வலை அகப்பட்டது - என்
நெஞ்சு. 147-21
வாழிய, கேளிர்! 147-22
பலவும் சூள் தேற்றத்
தெளித்தவன் என்னை 147-23
முலை இடை வாங்கி
முயங்கினன்; நீத்த 147-24
கொலைவனைக் காணேன் கொல்,
யான்? 147-25
காணினும், என்னை அறிதிர்;
கதிர் பற்றி, 147-26
ஆங்கு எதிர் நோக்குவன்-
ஞாயிறே? - எம் கேள்வன் 147-27
யாங்கு உளன் ஆயினும்
காட்டீமோ? காட்டாயேல், 147-28
வானத்து எவன் செய்தி, நீ?
147-29
ஆர் இருள் நீக்கும்
விசும்பின் மதி போல, 147-30
நீர் உள்ளும் தோன்றுதி,
ஞாயிறே! அவ்வழித் 147-31
தேரை தினப்படல் ஓம்பு. 147-32
நல்கா ஒருவனை நாடி யான்
கொள்வனை, 147-33
பல் கதிர் சாம்பிப் பகல்
ஒழியப், பட்டீமோ - 147-34
செல் கதிர் ஞாயிறே! நீ . 147-35
அறாஅல் இன்று அரி முன்கைக்
கொட்கும் 147-36
பறாஅப் பருந்தின் கண்
பற்றிப் புணர்ந்தான் 147-37
கறாஅ எருமைய காடு இறந்தான்
கொல்லோ? 147-38
உறாஅத் தகை செய்து, இவ் ஊர்
உள்ளான் கொல்லோ? 147-39
செறாஅது உளன் ஆயின்,
கொள்வேன்; அவனைப் 147-40
பெறாஅது யான் நோவேன்; அவனை
என் காட்டிச் 147-41
சுறாஅக் கொடியான்
கொடுமையை, நீயும் 147-42
உறாஅ அரைச! நின் ஓலைக் கண்
கொண்டீ; 147-43
மறாஅ அரைச! நின் மாலையும்
வந்தன்று; 147-44
அறாஅ தணிக, இந்நோய். 147-45
தன் நெஞ்சு ஒருவற்கு
இனைவித்தல் யாவர்க்கும்
147-46
அன்னவோ - காம! நின் அம்பு? 147-47
கையாறு செய்தானைக் காணின்,
கலுழ் கண்ணால் 147-48
பையென நோக்குவேன்; தாழ்
தானை பற்றுவேன்; 147-49
ஐயம் கொண்டு, என்னை அறியான்
விடுவானேல், 147-50
'ஒய்' எனப் பூசல்
இடுவேன்மன், யான் - அவனை 147-51
மெய் ஆகக் கள்வனோ என்று. 147-52
வினவன்மின் ஊரவிர்! என்னை,
எஞ்ஞான்றும் - 147-53
மடாஅ நறவு உண்டார் போல,
மருள 147-54
விடாஅது உயிரொடு கூடிற்று -
என் உண்கண் 147-55
படாஅமை செய்தான் தொடர்பு.
147-56
கனவினான் காணிய, கண்படா
ஆயின், 147-57
நனவினான் ஞாயிறே! காட்டாய்
நீ ஆயின், 147-58
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன்
வரக் காமன் 147-59
கணை இரப்பேன், கால்
புல்லிக்கொண்டு. 147-60
என ஆங்கு, 147-61
கண் இனைபு, கலுழ்பு
ஏங்கினள்; 147-62
தோள் ஞெகிழ்பு, வளை
நெகிழ்ந்தனள்; 147-63
அன்னையோ! எல்லீரும்
காண்மின்; மடவரல் 147-64
மெல் நடை பேடை துனை தரத்
தன் சேர்ந்த 147-65
அன்ன வான் சேவல் புணர்ச்சி
போல், ஒள் நுதல் 147-66
காதலன் மன்ற அவனை வரக்
கண்டு, ஆங்கு 147-67
ஆழ் துயரம் எல்லாம்
மறந்தனள், பேதை, 147-68
நகை ஒழிந்து, நாணு மெய்
நிற்ப, இறைஞ்சி, 147-69
தகை ஆகத் தையலாள்
சேர்ந்தாள் - நகை ஆக, 147-70
நல் எழில் மார்பன் அகத்து !
147-71
***
தொல் இயல் ஞாலத்துத்
தொழில் ஆற்றி ஞாயிறு, 148-1
வல்லவன் கூறிய வினை தலை
வைத்தான் போல், 148-2
கல் அடைபு, கதிர் ஊன்றி, கண்
பயம் கெடப் பெயர, 148-3
அல்லது கெடுப்பவன் அருள்
கொண்ட முகம் போல, 148-4
மல்லல் நீர்த் திரை ஊர்பு,
மால் இருள் மதி சீப்ப, 148-5
இல்லவர் ஒழுக்கம் போல்
இரும் கழி மலர் கூம்ப, 148-6
செல்லும் என் உயிர்
புறத்து இறுத்தந்த மருள்
மாலை! 148-7
மாலை நீ - 148-8
இன்புற்றார்க்கு
இறைச்சியாய் இயைவதோ
செய்தாய்மன்; 148-9
அன்புற்றார் அழ, நீத்த
அல்லலுள், கலங்கிய 148-10
துன்புற்றார்த் துயர்
செய்தல் தக்கதோ, நினக்கு?
148-11
மாலை நீ - 148-12
கலந்தவர் காமத்தை கனற்றலோ
செய்தாய்மன்; 148-13
நலம் கொண்டு நல்காதார் நனி
நீத்த புலம்பின் கண் 148-14
அலந்தவர்க்கு அணங்கு ஆதல்
தக்கதோ, நினக்கு? 148-15
மாலை நீ - 148-16
எம் கேள்வன் தருதல் உம்
தருகல்லாய்; துணை அல்லை! 148-17
பிரிந்தவர்க்கு நோய்
ஆகிப் புணர்ந்தவர்க்குப்
புணை ஆகித் 148-18
திருந்தாத செயின் அல்லால்
இல்லையோ, நினக்கு? 148-19
என ஆங்கு, 148-20
ஆய் இழை மடவரல் அவலம் அகல,
148-21
பாய் இருள் பரப்பினை பகல்
களைந்தது போலப் 148-22
போய் அவர் மண் வௌவி வந்தனர்
- 148-23
சேய் உறை காதலர் செய் வினை
முடித்தே. 148-24
***
நிரை திமில் களிறு ஆகத்
திரை ஒலி பறை ஆகக், 149-1
கரை சேர் புள் இனத்து அம்
சிறை படை ஆக, 149-2
அரைசு கால் கிளர்ந்தன்ன
உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்;
149-3
கற்பித்தான் நெஞ்சு
அழுங்க பகர்ந்து உண்ணான்,
விச்சைக்கண் 149-4
தப்பித்தான் பொருளே போல்
தமியவே தேயுமால்; 149-5
ஒற்கத்துள் உதவியார்க்கு
உதவாதான், மற்று அவன் 149-6
எச்சத்துள் ஆயினும், அஃது
எறியாது விடாதே காண்; 149-7
கேளிர்கள் நெஞ்சு
அழுங்கக் கெழுவுற்ற
செல்வங்கள் 149-8
தாள் இலான் குடியே போல்
தமியவே தேயுமால்; 149-9
சூள் வாய்த்த மனத்தவன்
வினை பொய்ப்பின், மற்று
அவன் 149-10
வாள் வாய் நன்று ஆயினும்,
அஃது எறியாது விடாதே காண்;
149-11
ஆங்கு, 149-12
அனைத்து, இனி - பெரும! - அதன்
நிலை, நினைத்துக் காண்; 149-13
சினைஇய வேந்தன் எயில்
புறத்து இறுத்த 149-14
வினை வரு பருவரல் போல, 149-15
துனை வரு நெஞ்சமொடு
வருந்தினள் பெரிதே. 149-16
***
அயம் திகழ் நறும் கொன்றை
அலங்கல் அம் தெரியலான் 150-1
இயங்கு எயில் எயப் பிறந்த
எரி போல, எவ் வாயும், 150-2
கனை கதிர் தெறுதலின்,
கடுத்து எழுந்த காம்புத்
தீ 150-3
மலை பரந்து தலைக் கொண்டு
முழங்கிய முழங்கு அழல் 150-4
மயங்கு அதர் மறுகலின், மலை
தலைக்கொண்டென, 150-5
விசும்பு உற நிவந்து
அழலும், விலங்கு அரும் வெம்
சுரம் - 150-6
இறந்து தாம் எண்ணிய
எய்துதல் வேட்கையால், 150-7
அறம் துறந்து - ஆய் இழாய்!
ஆக்கத்தில் பிரிந்தவர்; 150-8
பிறங்கு நீர் சடைக்
கரந்தான் அணி அன்ன நின்
நிறம் 150-9
பசந்து, நீ இனையையாய்,
நீத்தலும் நீப்பவோ? 150-10
கரி காய்ந்த கவலைத்தாய்க்,
கல் காய்ந்த காட்டு அகம்,
150-11
'வெரு வந்த ஆறு' என்னார்,
விழுப் பொருட்கு அகன்றவர்;
150-12
உருவ ஏற்று ஊர்தியான் ஒள்
அணி நக்கன்ன, நின் 150-13
உரு இழந்து இனையையாய்,
உள்ளலும் உள்ளுபவோ? 150-14
கொதித்து உராய்க் குன்று
இவர்ந்து, கொடிக் கொண்ட
கோடையால், 150-15
'ஒதுக்கு அரிய நெறி'
என்னார், ஒண் பொருட்கு
அகன்றவர்; 150-16
புதுத் திங்கள் கண்ணியான்
பொன் பூண் ஞான்று அன்ன, நின்
150-17
கதுப்பு உலறும் கவினையாய்
காண்டலும் காண்பவோ? 150-18
ஆங்கு 150-19
அரும் பெறல் ஆதிரையான்
அணிபெற மலர்ந்த 150-20
பெரும் தண் சண்பகம் போல,
ஒருங்கு அவர் 150-21
பொய்யார் ஆகுதல்
தெளிந்தனம் - 150-22
மை ஈர் ஓதி மட மொழியோயே! 150-23
***
முற்றும்