ஆறு அறி அந்தணர்க்கு,
அருமறை பல பகர்ந்து, 1-1
தேறு நீர் சடைக் கரந்து,
திரிபுரம் தீ மடுத்துக், 1-2
கூறாமல் குறித்ததன் மேல்
செல்லும், கடும் கூளி, 1-3
மாறாப் போர் மணி மிடற்று
எண் கையாய்! கேள் இனி; 1-4
படு பறை பல இயம்பப், பல்
உருவம் பெயர்த்து நீ 1-5
கொடுகொட்டி ஆடும்கால்,
கோடு உயர் அகல் அல்குல் 1-6
கொடிபுரை நுசுப்பினாள்,
கொண்ட சீர் தருவாளோ? 1-7
மண்டு அமர் பல கடந்து,
மதுகையால் நீறு அணிந்து, 1-8
பண்டரங்கம் ஆடும்கால், பணை
எழில் அணை மென்தோள் 1-9
வண்டு அரற்றும் கூந்தலாள்,
வளர் தூக்கு தருவாளோ? 1-10
கொலை உழுவைத் தோல் அசைஇக்,
கொன்றைத்தார் சுவல் புரளத்
1-11
தலை அங்கை கொண்டு நீ
காபாலம் ஆடும்கால், 1-12
முலை அணிந்த முறுவலாள்
முன் பாணி தருவாளோ? 1-13
என ஆங்கு, 1-14
பாணியும் தூக்கும் சீரும்
என்று இவை 1-15
மாண் இழை அரிவை காப்ப, 1-16
ஆணம் இல் பொருள் எமக்கு
அமர்ந்தனை ஆடி. 1-17
***
முதலாவது பாலைக்கலி
தொடங்கல் கண் தோன்றிய
முதியவன் முதலாக, 2-1
அடங்காதார் மிடல் சாய,
அமரர் வந்து இரத்தலின், 2-2
மடங்கல் போல் சினைஇ, மாயம்
செய் அவுணரைக் 2-3
கடந்து அடு முன்பொடு,
முக்கண்ணான் மூவெயிலும் 2-4
உடன்றக்கால், முகம் போல ஒண்
கதிர் தெறுதலின் 2-5
சீறு அரும் கணிச்சியோன்
சினவலின், அவ்வெயில் 2-6
ஏறு பெற்று உதிர்வன போல்,
வரை பிளந்து, இயங்குநர் 2-7
ஆறு கெட விலங்கிய அழல்
அவிர் ஆர் இடை - 2-8
மறப்பு அரும் காதல் இவள்
ஈண்டு ஒழிய, 2-9
இறப்பத் துணிந்தனிர்,
கேண்மின் மற்று ஐய! 2-10
தொலைவு ஆகி, இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு என 2-11
மலை இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ - 2-12
நிலைஇய கற்பினாள், நீ
நீப்பின் வாழாதாள், 2-13
முலை ஆகம் பிரியாமை பொருள்
ஆயின் அல்லதை; 2-14
இல் என இரந்தோர்க்கு ஒன்று
ஈயாமை இழிவு எனக் 2-15
கல் இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ - 2-16
தொல் இயல் வழாஅமைத் துணை
எனப் புணர்ந்தவள் 2-17
புல் ஆகம் பிரியாமை பொருள்
ஆயின் அல்லதை; 2-18
இடன் இன்றி இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு எனக் 2-19
கடன் இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ - 2-20
வடமீன் போல் தொழுது ஏத்த
வயங்கிய கற்பினாள் 2-21
தட மென் தோள் பிரியாமை
பொருள் ஆயின் அல்லதை; 2-22
என இவள், 2-23
புன்கண் கொண்டு இனையவும்,
பொருள் வயின் அகறல் 2-24
அன்பு அன்று, என்று யான்
கூற, அன்புற்றுக் 2-25
காழ் வரை நில்லாக் கடும்
களிற்று ஒருத்தல் 2-26
யாழ் வரைத் தங்கியாங்குத்,
தாழ்பு, நின் 2-27
தொல்கவின் தொலைதல் அஞ்சி,
என் 2-28
சொல்வரைத் தங்கினர்,
காதலோரே. 2-29
***
அறன் இன்றி அயல் தூற்றும்
அம்பலை நாணியும், 3-1
வறன் நீந்தி நீ செல்லும்
நீள் இடை நினைப்பவும் - 3-2
இறை நில்லா வளை ஓட, இதழ்
சோர்பு பனி மல்கப், 3-3
பொறை நில்லா நோயோடு
புல்லென்ற நுதல் இவள் 3-4
விறல் நலன் இழப்பவும், வினை
வேட்டாய்! கேஎள் இனி; 3-5
'உடை இவள் உயிர் வாழாள், நீ
நீப்பின்' எனப், பல 3-6
இடை கொண்டு யாம் இரப்பவும்,
எம கொள்ளாய், ஆயினை; 3-7
கடைஇய ஆற்று இடை, நீர்
நீத்த வறும் சுனை, 3-8
அடையொடு வாடிய அணி மலர் -
தகைப்பன. 3-9
'வல்லை நீ துறப்பாயேல், வகை
வாடும் இவள்' என, 3-10
ஒல்லாங்கு யாம் இரப்பவும்,
உணர்ந்து ஈயாய் ஆயினை; 3-11
செல்லு நீள் ஆற்று இடைச்,
சேர்ந்து எழுந்த மரம்
வாடப், 3-12
புல்லு விட்டு இறைஞ்சிய
பூங் கொடி - தகைப்பன. 3-13
'பிணிபு நீ விடல் சூழின்,
பிறழ்தரும் இவள்' எனப் 3-14
பணிபு வந்து இரப்பவும், பல
சூழ்வாய் ஆயினை; 3-15
துணிபு நீ செலக் கண்ட ஆற்று
இடை, அம்மரத்து 3-16
அணி செல, வாடிய அம் தளிர் -
தகைப்பன. 3-17
என ஆங்கு, 3-18
யாம் நின் கூறவும் எம
கொள்ளாய் ஆயினை; 3-19
ஆனாது இவள் போல் அருள்
வந்தவை காட்டி, 3-20
மேல் நின்று மெய் கூறும்
கேளிர் போல், நீ செல்லும் 3-21
கானம் - தகைப்ப செலவு. 3-22
***
வலி முன்பின், வல்லென்ற
யாக்கைப் புலி நோக்கின் - 4-1
சுற்றுஅமை வில்லர், சுரி
வளர் பித்தையர், 4-2
அற்றம் பார்த்து அல்கும் -
கடுங்கண் மறவர் தாம் 4-3
கொள்ளும் பொருள் இலர்
ஆயினும், வம்பலர், 4-4
துள்ளுநர்க் காண்மார்
தொடர்ந்து, உயிர்
வௌவலின், 4-5
புள்ளும் வழங்காப்
புலம்பு கொள் ஆர் இடை, 4-6
வெள் வேல் வலத்திர் பொருள்
தரல் வேட்கையின், 4-7
உள்ளினிர் என்பது
அறிந்தனள், என் தோழி; 4-8
'காழ் விரி கவை ஆரம்
மீவரும் இளமுலை 4-9
போழ்து இடைப்படாஅமல்
முயங்கியும் அமையார், என்
4-10
தாழ் கதுப்பு அணிகுவர்,
காதலர்; மற்று, அவர் 4-11
சூழ்வதை எவன் கொல்?
அறியேன்!' என்னும்; 4-12
'முள் உறழ் முளை எயிற்று
அமிழ்து ஊறும் தீ நீரைக் 4-13
கள்ளினும் மகிழ் செயும் என
உரைத்தும் அமையார், என் 4-14
ஒள் இழை திருத்துவர்,
காதலர்; மற்று, அவர் 4-15
உள்ளுவது எவன் கொல்?
அறியேன்!' என்னும்; 4-16
'நுண் எழில் மாமை சுணங்கு
அணி ஆகம் தம் 4-17
கண்ணொடு தொடுத்து என
நோக்கியும் அமையார், என் 4-18
ஒண் நுதல் நீவுவர், காதலர்;
மற்று, அவர் 4-19
எண்ணுவது எவன் கொல்?
அறியேன்!' என்னும்; 4-20
என ஆங்கு, 4-21
'கழி பெரு நல்கல் ஒன்று
உடைத்து!' என, என் தோழி 4-22
அழிவொடு கலங்கிய
எவ்வத்தள்; ஒருநாள், நீர்,
4-23
பொழுது இடைப்பட நீப்பின்,
வாழ்வாளோ? 4-24
ஒழிக இனிப் பெரும! நின்
பொருள் பிணிச் செலவே. 4-25
***
பாஅல் அம் செவிப் பணைத்
தாள் மா நிரை 5-1
மாஅல் யானையொடு மறவர்
மயங்கித் 5-2
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு
அருஞ்சுரம், 5-3
இறந்து, நீர் செய்யும்
பொருளினும், யாம்
நுமக்குச் 5-4
சிறந்தனம் ஆதல்
அறிந்தனிர் ஆயின், 5-5
நீள் இரு முந்நீர் வளி கலன்
வௌவலின் 5-6
ஆள்வினைக்கு அழிந்தோர்
போறல் அல்லதைக், 5-7
கேள் பெருந்தகையோடு எவன்
பல மொழிகுவம்? 5-8
நாளும் கோள்மீன்
தகைத்தலும் தகைமே; 5-9
கல்லெனக் கவின் பெற்ற
விழவு ஆற்றுப்படுத்த பின்,
5-10
புல்லென்ற களம் போலப்
புலம்பு கொண்டு, அமைவாளோ? 5-11
ஆள்பவர் கலக்குற அலை பெற்ற
நாடு போல், 5-12
பாழ்பட்ட முகத்தோடு பைதல்
கொண்டு, அமைவாளோ? 5-13
ஓர் இரா வைகலுள், தாமரைப்
பொய்கையுள் 5-14
நீர் நீத்த மலர் போல, நீ
நீப்பின், வாழ்வாளோ? 5-15
என ஆங்கு, 5-16
பொய் நல்கல் புரிந்தனை
புறந்தரல் கைவிட்டு, 5-17
எந்நாளோ, நெடுந்தகாய்! நீ
செல்வது, 5-18
அந்நாள் கொண்டு இறக்கும்,
இவள் அரும்பெறல் உயிரே. 5-19
***
மரையா மரல் கவர, மாரி வறப்ப -
6-1
வரை ஓங்கு அரும் சுரத்து
ஆர் இடைச் செல்வோர், 6-2
சுரை அம்பு மூழ்கச்
சுருங்கிப், புரையோர் தம்
6-3
உள் நீர் வறப்பப் புலர்
வாடு நாவிற்குத் - 6-4
தண்ணீர் பெறாஅத்
தடுமாற்று அரும் துயரம் 6-5
கண்ணீர் நனைக்கும் கடுமைய
காடு என்றால், 6-6
என் நீர் அறியாதீர் போல இவை
கூறல்? 6-7
நின் நீர அல்ல நெடுந்தகாய்!
எம்மையும், 6-8
அன்பு அறச் சூழாதே, ஆற்று
இடை நும்மொடு 6-9
துன்பம் துணை ஆக நாடின்,
அது அல்லது 6-10
இன்பமும் உண்டோ , எமக்கு?
6-11
***
வேனில் உழந்த வறிது உயங்கு
ஓய் களிறு 7-1
வான் நீங்கு வைப்பின்
வழங்காத் தேர் நீர்க்கு
அவாஅம் 7-2
கானம் கடத்திர், எனக்
கேட்பின், யான் ஒன்று 7-3
உசாவுகோ - ஐய! சிறிது; 7-4
நீயே, செய் வினை மருங்கில்
செலவு அயர்ந்து, யாழ நின் 7-5
கை புனை வல் வில் ஞாண்
உளர்தீயே; 7-6
இவட்கே, செய்வுறு மண்டிலம்
மையாப்பது போல், 7-7
மை இல் வாள் முகம் பசப்பு
ஊருமே; 7-8
நீயே, வினை மாண் காழகம்
வீங்கக் கட்டிப் 7-9
புனை மாண் மரீஇய அம்பு
தெரிதீயே; 7-10
இவட்கே, சுனை மாண் நீலம்
கார் எதிர்பவை போல், 7-11
இனை நோக்கு உண் கண் நீர்
நில்லாவே; 7-12
நீயே, புலம்பு இல் உள்ளமொடு
பொருள் வயின் செலீஇய 7-13
வலம் படு திகிரி வாய்
நீவுதியே; 7-14
இவட்கே, அலங்கு இதழ்க்
கோடல் வீ உகுபவை போல் 7-15
இலங்கு ஏர் எல் வளை இறை
ஊரும்மே; 7-16
என நின், 7-17
செல் நவை அரவத்தும்
இனையவள் நீ நீப்பின், 7-18
தன் நலம்
கடைகொளப்படுதலின், மற்று
இவள் 7-19
இன் உயிர் தருதலும்
ஆற்றுமோ - 7-20
முன்னிய தேஎத்து முயன்று
செய் பொருளே? 7-21
***
நடுவு இகந்து ஒரீஇ நயன்
இல்லான் வினை வாங்கக், 8-1
கொடிது ஓர்த்த மன்னவன்
கோல் போல, ஞாயிறு 8-2
கடுகுபு கதிர் மூட்டிக்
காய்சினம் தெறுதலின், 8-3
உறல் ஊறு கமழ் கடாத்து
ஒல்கிய, எழில் வேழம் 8-4
வறன் உழு நாஞ்சில் போல்
மருப்பு ஊன்ற, நிலம் சேர, 8-5
விறல் மலை வெம்பிய போக்கு
அரு வெஞ்சுரம், 8-6
சொல்லாது இறப்பத்
துணிந்தனிர்க்கு, ஒரு
பொருள் 8-7
சொல்லுவது உடையேன்,
கேள்மின், மற்று ஐஇய! 8-8
வீழுநர்க்கு இறைச்சியாய்
விரல் கவர்பு இசைக்கும்
கோல் 8-9
ஏழும், தம் பயன் கெட இடை
நின்ற நரம்பு அறூஉம் 8-10
யாழினும், நிலை இல்லாப்
பொருளையும் நச்சுபவோ? 8-11
மரீஇத் தாம் கொண்டாரைக்
கொண்டக்கால் போலாது, 8-12
பிரியும்கால் பிறர்
எள்ளப், பீடு இன்றி புறம்
மாறும் 8-13
திருவினும், நிலை இல்லாப்
பொருளையும் நச்சுபவோ? 8-14
புரை தவப் பயன் நோக்கார்
தம் ஆக்கம் முயல்வாரை 8-15
வரைவு இன்றிச் செறும்
பொழுதில், கண் ஓடாது உயிர்
வௌவும் 8-16
அரைசினும், நிலை இல்லாப்
பொருளையும் நச்சுபவோ? 8-17
என ஆங்கு, 8-18
நச்சல் கூடாது பெரும
இச்செலவு 8-19
ஒழிதல் வேண்டுவல், சூழின்
பழி இன்று; 8-20
மன்னவன் புறந்தர, வரு
விருந்து ஓம்பித், 8-21
தன் நகர் விழையக் கூடின்,
8-22
இன் உறல் வியன் மார்ப! அது
மனும் பொருளே. 8-23
***
எறித்தரு கதிர் தாங்கி
ஏந்திய குடை நீழல், 9-1
உறித் தாழ்ந்த கரகமும், உரை
சான்ற முக்கோலும், 9-2
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு
ஓரா நெஞ்சத்துக் 9-3
குறிப்பு ஏவல் செயல்
மாலைக், கொளை நடை அந்தணீர்!-
9-4
வெவ் இடைச் செலல் மாலை
ஒழுக்கத்தீர்; இவ் இடை 9-5
என் மகள் ஒருத்தியும்,
பிறள் மகன் ஒருவனும், 9-6
தம் உளே புணர்ந்த தாம் அறி
புணர்ச்சியர்; 9-7
அன்னார் இருவரை காணிரோ?-
பெரும! 9-8
காணேம் அல்லேம், கண்டனம்,
கடத்து இடை; 9-9
ஆண் எழில் அண்ணலோடு அரும்
சுரம் முன்னிய 9-10
மாண் இழை மடவரல் தாயிர்
நீர் போறிர்; 9-11
பல உறு நறும் சாந்தம்
படுப்பவர்க்கு அல்லதை, 9-12
மலை உளே பிறப்பினும்,
மலைக்கு அவை தாம் என்
செய்யும்? 9-13
நினையும்கால் நும்மகள்
நுமக்கும் ஆங்கு அனையளே! 9-14
சீர்கெழு வெண் முத்தம்
அணிபவர்க்கு அல்லதை, 9-15
நீர் உளே பிறப்பினும்,
நீர்க்கு அவை தாம் என்
செய்யும்? 9-16
தேரும்கால் நும் மகள்
நுமக்கும் ஆங்கு அனையளே! 9-17
ஏழ் புணர் இன் இசை
முரல்பவர்க்கு அல்லதை, 9-18
யாழ் உளே பிறப்பினும்,
யாழ்க்கு அவை தாம் என்
செய்யும்? 9-19
சூழும்கால், நும்மகள்
நுமக்கும் ஆங்கு அனையளே! 9-20
என ஆங்கு, 9-21
இறந்த கற்பினாட்கு எவ்வம்
படரன்மின்; 9-22
சிறந்தானை வழிபடீஇச்
சென்றனள்; 9-23
அறம் தலை பிரியா ஆறும்
மற்று அதுவே. 9-24
***
வறியவன் இளமை போல், வாடிய
சினையவாய்ச், 10-1
சிறியவன் செல்வம் போல்,
சேர்ந்தார்க்கு நிழல்
இன்றி, 10-2
யார் கண்ணும் இகந்து
செய்து இசை கெட்டான் இறுதி
போல், 10-3
வேரொடு மரம் வெம்ப, விரி
கதிர் தெறுதலின் 10-4
அலவுற்றுக் குடி கூவ, ஆறு
இன்றிப் பொருள் வெஃகிக், 10-5
கொலை அஞ்சா வினைவரால், கோல்
கோடியவன் நிழல் 10-6
உலகு போல், உலறிய உயர் மர
வெஞ்சுரம் - 10-7
இடை கொண்டு பொருள் வயின்
இறத்தி நீ எனக் கேட்பின், 10-8
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி
ஓடற்பாள் மன்னோ! 10-9
படை அமை சேக்கையுள்
பாயலின் அறியாய் நீ 10-10
புடை பெயர்வாய் ஆயினும்,
புலம்பு கொண்டு இனைபவள்? 10-11
முனிவு இன்றி முயல்
பொருட்கு இறத்தி நீ எனக்
கேட்பின், 10-12
பனிய கண் படல் ஒல்லா படர்
கூர்கிற்பாள் மன்னோ! 10-13
நனி கொண்ட சாயலாள் நயந்து
நீ நகை ஆகத் 10-14
துனி செய்து நீடினும்,
துறப்பு அஞ்சிக்
கலுழ்பவள்? 10-15
பொருள் நோக்கிப் பிரிந்து
நீ போகுதி எனக் கேட்பின்,
10-16
மருள் நோக்கம் மடிந்து
ஆங்கே மயல் கூர்கிற்பாள்
மன்னோ! 10-17
இருள் நோக்கம் இடையின்றி,
ஈரத்தின் இயன்ற நின் 10-18
அருள் நோக்கம் அழியினும்,
அவலம் கொண்டு அழிபவள்? 10-19
என ஆங்கு, 10-20
'வினை வெஃகி நீ செலின்,
விடும் இவள் உயிர்' எனப் 10-21
புனை இழாய்! நின் நிலை யான்
கூறப், பையென, 10-22
நிலவு வேல் நெடுந்தகை, நீள்
இடைச் 10-23
செலவு ஒழிந்தனனால்; செறிக,
நின் வளையே! 10-24
***
'அரிது ஆய அறன் எய்தி
அருளியோர்க்கு அளித்தலும்,
11-1
பெரிது ஆய பகை வென்று
பேணாரைத் தெறுதலும், 11-2
புரிவு அமர் காதலின்
புணர்ச்சியும் தரும்' எனப்
11-3
பிரிவு எண்ணிப் பொருள்
வயின் சென்ற நம் காதலர் 11-4
வருவர்கொல், வயங்கு இழாஅய்!
வலிப்பல், யான்; கேஎள் இனி: 11-5
'அடி தாங்கும் அளவு இன்றி,
அழல் அன்ன வெம்மையால், 11-6
கடியவே, கனம் குழாஅய்! காடு'
-என்றார்; அக்காட்டுள், 11-7
துடிஅடிக் கயம்தலை
கலக்கிய சின் நீரைப் 11-8
பிடி ஊட்டிப், பின் உண்ணும்
களிறு, எனவும், உரைத்தனரே;
11-9
'இன்பத்தின் இகந்து ஒரீஇ,
இலை தீந்த உலவையால், 11-10
துன்புறூஉம் தகையவே காடு'
-என்றார்; அக்காட்டுள், 11-11
அன்புகொள் மடப் பெடை அசைஇய
வருத்தத்தை 11-12
மென் சிறகரால் ஆற்றும்
புறவு, எனவும், உரைத்தனரே;
11-13
'கல் மிசை வேய் வாடக் கனை
கதிர் தெறுதலான், 11-14
துன்னரூஉம் தகையவே காடு' -
என்றார்; அக்காட்டுள், 11-15
இன்நிழல் இன்மையான்
வருந்திய மட பிணைக்குத் 11-16
தன் நிழலைக் கொடுத்து
அளிக்கும் கலை, எனவும்,
உரைத்தனரே. 11-17
என ஆங்கு, 11-18
இனை நலம் உடைய கானம்
சென்றோர் 11-19
புனை நலம் வாட்டுநர்
அல்லர்; மனை வயின் 11-20
பல்லியும் பாங்கு ஒத்து
இசைத்தன; 11-21
நல்எழில் உண் கண்ணும்
ஆடுமால், இடனே. 11-22
***
இடு முள் நெடு வேலி போலக்,
கொலைவர் 12-1
கொடுமரம் தேய்த்தார்
பதுக்கை நிரைத்த 12-2
கடு நவை ஆர் ஆற்று, அறு சுனை
முற்றி, 12-3
உடங்கு நீர் வேட்ட உடம்பு
உயங்கு யானை 12-4
கடும் தாம் பதிபு, ஆங்கு கை
தெறப்பட்டு, 12-5
வெறி நிரை வேறு ஆகச் சார்ச்
சாரல் ஓடி, 12-6
நெறி மயக்குற்ற நிரம்பா
நீடு அத்தம் - 12-7
சிறு நனி நீ துஞ்சி
ஏற்பினும், அஞ்சும் 12-8
நறு நுதல் நீத்துப் பொருள்
வயின் செல்வோய்! 12-9
உரன் உடை உள்ளத்தை, செய்
பொருள் முற்றிய 12-10
வளமையான் ஆகும் பொருள் இது
என்பாய்! 12-11
இளமையும் காமமும் நின்
பாணி நில்லா - 12-12
இடை முலைக் கோதை குழைய
முயங்கும் 12-13
முறை நாள் கழிதல் உறாஅமைக்
காண்டை - 12-14
கடை நாள் இது என்று
அறிந்தாரும் இல்லை; 12-15
போற்றாய் - பெரும! நீ; காமம்
புகர்பட 12-16
வேற்றுமைக் கொண்டு, பொருள்
வயின் போகுவாய், 12-17
கூற்றமும் மூப்பும்
மறந்தாரோடு ஓராஅங்கு 12-18
மாற்றுமைக் கொண்ட வழி. 12-19
***
செரு மிகு சின வேந்தன்
சிவந்து இறுத்த புலம் போல,
13-1
எரி மேய்ந்த கரி வறல் வாய்
புகுவ காணாவாய்ப், 13-2
பொரி மலர்ந்தன்ன பொறிய மட
மான், 13-3
திரி மருப்பு ஏறொடு தேர்
அறற்கு ஓட, 13-4
மரல் சாய மலை வெம்ப, மந்தி
உயங்க, 13-5
உரல் போல் அடிய உடம்பு
உயங்கு யானை, 13-6
ஊறு நீர் அடங்கலின், உண்
கயம் காணாது, 13-7
சேறு சுவைத்துத், தம் செல்
உயிர் தாங்கும் 13-8
புயல் துளி மாறிய, போக்கு
அரு, வெஞ்சுரம் - 13-9
எல் வளை! எம்மொடு நீ வரின்,
யாழ நின் 13-10
மெல் இயல் மேவந்த சீறடித்,
தாமரை, 13-11
அல்லி சேர் ஆய் இதழ்
அரக்குத் தோய்ந்தவை போலக்
13-12
கல் உறின், அவ்வடி கறுக்குந
அல்லவோ? 13-13
நலம்பெறு சுடர் நுதால்!
எம்மொடு நீ வரின், 13-14
இலங்கு மாண் அவிர் தூவி
அன்ன மென் சேக்கையுள், 13-15
துலங்கு மான் மேல் ஊர்தித்
துயில் ஏற்பாய், மற்று
ஆண்டை 13-16
விலங்கு மான் குரல்
கேட்பின், வெருவுவை
அல்லையோ? 13-17
கிளி புரை கிளவியாய்!
எம்மொடு நீ வரின், 13-18
தளி பொழி தளிர் அன்ன எழில்
மேனி கவின் வாட, 13-19
முளி அரில் பொத்திய
முழங்கு அழல் இடை போழ்ந்த
13-20
வளி உறின், அவ் எழில்
வாடுவை அல்லையோ? 13-21
என ஆங்கு, 13-22
அனையவை காதலர் கூறலின்,
'வினை வயின் 13-23
பிரிகுவர்' எனப் பெரிது
அழியாது, திரிபு உறீஇக், 13-24
கடுங்குரை அருமைய காடு
எனின், அல்லது, 13-25
கொடுங் குழாய்! துறக்குநர்
அல்லர் - 13-26
நடுங்குதல் காண்மார், நகை
குறித்தனரே. 13-27
***
அணை மருள் இன் துயில் அம்
பணைத் தட மென் தோள், 14-1
துணை மலர் எழில் நீலத்து
ஏந்து எழில் மலர் உண் கண்,
14-2
மண மௌவல் முகை அன்ன மா வீழ்
வார் நிரை வெண்பல், 14-3
மணம் நாறு நறு நுதல், மாரி
வீழ் இரும் கூந்தல், 14-4
அலர் முலை ஆகத்து, அகன்ற
அல்குல், 14-5
சில நிரை வால் வளைச்
செய்யாயோ! எனப், 14-6
பல பல கட்டுரை பண்டையின்
பாராட்டி, 14-7
இனிய சொல்லி, இன்னாங்குப்
பெயர்ப்பது 14-8
இனி அறிந்தேன் அது துனி
ஆகுதலே; 14-9
'பொருள் அல்லால் பொருளும்
உண்டோ ?' என, யாழ நின் 14-10
மருளி கொள் மட நோக்கம்,
மயக்கப்பட்டு அயர்த்தாயோ?
14-11
'காதலார் எவன் செய்ப,
பொருள் இல்லாதார்க்கு?' என,
14-12
ஏதிலார் கூறும் சொல்
பொருள் ஆக மதித்தாயோ? 14-13
செம்மையின் இகந்து ஒரீஇப்
பொருள் செய்வார்க்கு
அப்பொருள் 14-14
இம்மையும் மறுமையும் பகை
ஆவது அறியாயோ? 14-15
அதனால், 14-16
எம்மையும் பொருள் ஆக
மதித்தீத்தை; நம்முள் நாம்
14-17
கவவுக் கைவிடப் பெறும்
பொருள் திறத்து 14-18
அவவுக் கைவிடுதல்; அது
மனும் பொருளே. 14-19
***
அரி மான் இடித்தன்ன, அம்
சிலை வல் வில் 15-1
புரி நாண், புடையின், புறம்
காண்டல் அல்லால் - 15-2
இணைப் படைத் தானை அரசோடு
உறினும் - 15-3
கணைத் தொடை நாணும், கடும்
துடி ஆர்ப்பின், 15-4
எருத்து வலிய எறுழ் நோக்கு
இரலை 15-5
மருப்பின் திரிந்து
மறிந்து வீழ் தாடி, 15-6
உருத்த கடும் சினத்து, ஓடா
மறவர், 15-7
பொருள் கொண்டு புண் செயின்
அல்லதை, அன்போடு 15-8
அருள் புறம் மாறிய ஆர் இடை
அத்தம் - 15-9
புரிபு நீ புறம் மாறிப்,
போக்கு எண்ணிப், புதிது
ஈண்டிப் 15-10
பெருகிய செல்வத்தான்
பெயர்த்தரல் ஒல்வதோ - 15-11
செயலை அம் தளிர் ஏய்க்கும்
எழில் நலம்; அந் நலம் 15-12
பயலையால் உணப்பட்டுப்
பண்டை நீர் ஒழிந்தக் கால்?
15-13
பொய் அற்ற கேள்வியால்,
புரையோரைப் படர்ந்து, நீ 15-14
மை அற்ற படிவத்தான்
மறுத்தரல் ஒல்வதோ - 15-15
தீம் கதிர் மதி ஏய்க்கும்
திருமுகம்; அம் முகம், 15-16
பாம்பு சேர் மதி போலப்
பசப்பு ஊர்ந்து தொலைந்தக்
கால்? 15-17
பின்னிய தொடர் நீவிப்,
பிறர் நாட்டுப் படர்ந்து,
நீ 15-18
மன்னிய புணர்ச்சியான்
மறுத்தரல் ஒல்வதோ - 15-19
புரி அவிழ் நறு நீலம் புரை
உண் கண் கலுழ்பு ஆனாத், 15-20
திரி உமிழ் நெய்யே போல்,
தெண் பனி உறைக்கும்கால்? 15-21
என ஆங்கு, 15-22
அனையவை போற்ற, நினைஇயன
நாடிக் காண்; 15-23
வளமையோ வைகலும் செயல்
ஆகும்; மற்று இவள் 15-24
முளை நிரை முறுவலார்
ஆயத்துள் எடுத்து ஆய்ந்த
15-25
இளமையும் தருவதோ, இறந்த
பின்னே? 15-26
***
பாடு இன்றிப் பசந்தகண்
பைதல பனிமல்க, 16-1
வாடுபு வனப்பு ஓடி, வணங்கு
இறை வளை ஊர, 16-2
ஆடு எழில் அழிவு அஞ்சாது,
அகன்றவர் திறத்து இனி 16-3
நாடும்கால், நினைப்பது
ஒன்று உடையேன் மன்? அதுவும்
தான்: 16-4
தொல்நலம் தொலைபு, ஈங்கு,
யாம் துயர் உழப்பத்
துறந்து உள்ளார், 16-5
துன்ன, நம் காதலர், துறந்து
ஏகும் ஆர் இடைக் 16-6
'கல் மிசை உருப்பு அறக் கனை
துளி சிதறு!' என, 16-7
இன் இசை எழிலியை இரப்பவும்
இயைவதுவோ? 16-8
புனை இழாய்! ஈங்கு நாம்
புலம்பு உறப் பொருள் வெஃகி,
16-9
முனை என்னார் காதலர்
முன்னிய ஆர் இடைச், 16-10
'சினை வாடச் சிறக்கும் நின்
சினம் தணிந்தீக!' எனக், 16-11
கனை கதிர்க் கனலியைக்
காமுறல் இயைவதுவோ? 16-12
ஒளி இழாய்! ஈங்கு நாம்
துயர் கூரப், பொருள் வயின்,
16-13
அளி ஒரீஇக் காதலர் அகன்று
ஏகும் ஆர் இந, 16-14
'முளி முதல் மூழ்கிய வெம்மை
தீர்ந்து உறுக' என, 16-15
வளி தரும் செல்வனை
வாழ்த்தவும் இயைவதுவோ? 16-16
என ஆங்கு, 16-17
செய் பொருள் சிறப்பு
எண்ணிச் செல்வார் மாட்டு,
இனையன 16-18
தெய்வத்துத் திறன்
நோக்கத், தெருமரல் - தேமொழி! -
16-19
'வறன் ஓடின் வையகத்து வான்
தரும் கற்பினாள் 16-20
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல்
உண்டு' என, 16-21
அறன் ஓடி விலங்கின்று, அவர்
ஆள்வினை திறத்தே. 16-22
***
படை பண்ணிப் புனையவும், பா
மாண்ட பல அணைப் 17-1
புடை பெயர்ந்து
ஒடுங்கவும், புறம் சேர
உயிர்ப்பவும், 17-2
'உடையதை எவன் கொல்?' என்று
ஊறு அளந்தவர் வயின் 17-3
நடை செல்லாய், நனி ஏங்கி
நடுங்கல் காண் - நறு நுதால்!
17-4
தொல் எழில் தொலைபு இவள்
துயர் உழப்பத், துறந்து நீ,
17-5
வல் வினை வயக்குதல்
வலித்திமன்; வலிப்பளவை, 17-6
நீள் கதிர் அவிர் மதி
நிறைவு போல் நிலையாது, 17-7
நாளினும் நெகிழ்பு ஓடும்
நலன் உடன் நிலையுமோ? 17-8
ஆற்றா நோய் அட, இவள் அணி வாட,
அகன்று நீ, 17-9
தோற்றம் சால் தொகு பொருள்
முயறிமன், முயல்வளவை 17-10
நாற்றம் சால் நளி பொய்கை
அடை முதிர் முகையிற்குக்
17-11
கூற்று ஊழ் போல்
குறைபடூஉம் வாழ் நாளும்
நிலையுமோ? 17-12
வகை எழில் வனப்பு எஞ்ச, வரை
போக வலித்து நீ, 17-13
பகை அறு பய வினை முயறிமன்;
முயல்வளவைத், 17-14
தகை வண்டு புதிது உண்ணத்
தாது அவிழ் தண் போதின் 17-15
முகை வாய்த்த தடம் போலும்
இளமையும் நிலையுமோ? 17-16
என ஆங்கு, 17-17
பொருந்தி யான் தான் வேட்ட
பொருள் வயின் நினைந்த சொல்,
17-18
திருந்திய யாக்கையுள்
மருத்துவன் ஊட்டிய 17-19
மருந்து போல், மருந்து, ஆகி
மனன் உவப்பப் 17-20
பெரும் பெயர் மீளி -
பெயர்ந்தனன் செலவே! 17-21
***
அரும் பொருள் வேட்கையின்
உள்ளம் துரப்பப், 18-1
பிரிந்து உறை சூழாதி -ஐய! -
விரும்பி நீ 18-2
என் தோள் எழுதிய
தொய்யிலும், யாழ நின் 18-3
மைந்து உடை மார்பில்
சுணங்கும். நினைத்துக்
காண்; 18-4
சென்றோர் முகப்பப்
பொருளும் கிடவாது; 18-5
ஒழிந்தவர் எல்லாரும்
உண்ணாதும் செல்லார்; 18-6
இளமையும், காமமும்
ஓராங்குப் பெற்றார் 18-7
வளமை விழைதக்கது உண்டோ ? உள
நாள், 18-8
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ
கை 18-9
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே
ஆயினும், 18-10
ஒன்றினார் வாழ்க்கையே
வாழ்க்கை; அரிது அரோ 18-11
சென்ற இளமை தரற்கு! 18-12
***
செவ்விய தீவிய சொல்லி,
அவற்றொடு 19-1
பைய முயங்கிய அஞ்ஞான்று,
அவை எல்லாம் 19-2
பொய் ஆதல் யான் யாங்கு
அறிகோ, மற்று? - ஐய! - 19-3
அகல் நகர் கொள்ளா அலர்
தலைத் தந்து, 19-4
பகல் முனி வெஞ்சுரம்
உள்ளல் அறிந்தேன்; 19-5
மகன் அல்லை மன்ற, இனி; 19-6
செல் இனிச் சென்று நீ
செய்யும் வினை முற்ற, 19-7
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத்
துறந்தவள் 19-8
பண்பும் அறிதிரோ' என்று,
வருவாரை 19-9
என் திறம் யாதும் வினவல்;
வினவின், 19-10
பகலின் விளங்கு நின்
செம்மல் சிதையத் 19-11
தவல் அரு செய் வினை
முற்றாமல், ஆண்டு ஓர் 19-12
அவலம் படுதலும் உண்டு. 19-13
***
பல் வளம் பகர்பு ஊட்டும்
பயன் நிலம் பைது அறச், 20-1
செல் கதிர் ஞாயிறு செயிர்
சினம் சொரிதலின், 20-2
தணிவு இல் வெம் கோடைக்குத்
தண் நயந்து அணி கொள்ளும் 20-3
பிணி தெறல் உயக்கத்த
பெருங் களிற்று இனம்
தாங்கும் 20-4
மணி திகழ் விறல் மலை வெம்ப
மண் பகத், 20-5
துணி கயம் துகள் பட்ட
தூங்கு அழல் வெஞ்சுரம்- 20-6
'கிளி புரை கிளவியாய்! நின்
-அடிக்கு எளியவோ, 20-7
தளி உறுபு அறியாவே, காடு!'
எனக் கூறுவீர்! 20-8
வளியினும் வரை நில்லா வாழு
நாள், நும் ஆகத்து 20-9
அளி என உடையேன் யான்; அவலம்
கொண்டு அழிவலோ? 20-10
'ஊறு நீர் அமிழ்து
ஏய்க்கும் எயிற்றாய்! நீ
உணல் வேட்பின், 20-11
ஆறு நீர் இல' என, அறன்
நோக்கிக் கூறுவீர்! 20-12
யாறு நீர், கழிந்தன்ன இளமை,
நும் நெஞ்சு என்னும் 20-13
தேறு நீர், உடையேன் யான்,
தெருமந்து ஈங்கு ஒழிவலோ? 20-14
'மாண் எழில் வேய் வென்ற
தோளாய்! நீ வரின், தாங்கும்
20-15
மாண் நிழல் இல ஆண்டை மரம்'
எனக் கூறுவீர்! 20-16
நீள் நிழல் தளிர் போல நிறன்
ஊழ்த்தல் அறிவேன்; நும் 20-17
தாள் நிழல் கைவிட்டு யான்
தவிர்தலைச் சூழ்வலே? 20-18
என ஆங்கு, 20-19
'அணை அரு வெம்மைய காடு' எனக்
கூறுவீர்; 20-20
கணை கழிகல்லாத கல் பிறங்கு
ஆர் இடைப் 20-21
பணை எருத்து எழில் ஏற்றின்
பின்னர்ப் 20-22
பிணையும் காணிரோ? பிரியுமோ,
அவையே? 20-23
***
'பால் மருள் மருப்பின்,
உரல் புரை பாவடி, 21-1
ஈர் நறும் கமழ் கடாஅத்து,
இனம் பிரி ஒருத்தல் 21-2
ஆறு கடி கொள்ளும் வேறு
புலம் படர், 21-3
பொருள் வயின் பிரிதல்
வேண்டும்' என்னும் 21-4
அருள் இல் சொல்லும், நீ
சொல்லினையே! 21-5
நன்னர் நறு நுதல் நயந்தனை
நீவி, 21-6
'நின்னின் பிரியலென்
அஞ்சல் ஓம்பு' என்னும் 21-7
நன்னர் மொழியும் நீ
மொழிந்தனையே! 21-8
அவற்றுள், யாவோ வாயின?
மாஅல் மகனே! 21-9
'கிழவர் இன்னோர்' என்னாது,
பொருள் தான், 21-10
பழ வினை மருங்கின், பெயர்பு
பெயர்பு உறையும்; 21-11
அன்ன பொருள் வயின்
பிரிவோய் - நின் இன்று 21-12
இமைப்பு வரை வாழாள் மடவோள்
21-13
அமை கவின் கொண்ட தோள் இணை
மறந்தே. 21-14
***
உண் கடன் வழிமொழிந்து
இரக்கும்கால் முகனும்,
தாம் 22-1
கொண்டது கொடுக்கும்கால்
முகனும், வேறு ஆகுதல் 22-2
பண்டும் இவ் உலகத்து
இயற்கை; அஃது இன்றும் 22-3
புதுவது அன்றே - புலன் உடை
மாந்திர்! - 22-4
தாய் உயிர் பெய்த பாவை போல,
22-5
நலன் உடையார் மொழிக் கண்
தாவார்; தாம் தம் நலம் 22-6
தாது தேர் பறவையின்
அருந்து, இறல்
கொடுக்கும்கால், 22-7
ஏதிலார் கூறுவது எவனோ நின்
பொருள் வேட்கை? 22-8
நறு முல்லை நேர் முகை ஒப்ப
நிரைத்த 22-9
செறி முறை பாராட்டினாய்;
மற்று, எம் பல்லின் 22-10
பறி முறை பாராட்டினையோ? - ஐய!
22-11
நெய் இடை நீவி மணி ஒளி
விட்டன்ன 22-12
ஐவகை பாராட்டினாய்; மற்று,
எம் கூந்தல் 22-13
செய் வினை பாராட்டினையோ? -
ஐய! 22-14
குளன் அணி தாமரைப் பாசு
அரும்பு ஏய்க்கும் 22-15
இளமுலை பாராட்டினாய்;
மற்று, எம் மார்பில் 22-16
தளர்முலை பாராட்டினையோ? -
ஐய! 22-17
என ஆங்கு, 22-18
அடர் பொன் அவிர் ஏய்க்கும்
அவ் வரி வாடச், 22-19
சுடர் காய் சுரம் போகும்
நும்மை யாம் எம் கண் 22-20
படர் கூற நின்றதும் உண்டோ -
தொடர் கூரத், 22-21
துவ்வாமை வந்தக் கடை? 22-22
***
இலங்கு ஒளி மருப்பின்
கைம்மா உளம்புநர், 23-1
புலம் கடி கவணையின், பூஞ்
சினை உதிர்க்கும் 23-2
விலங்கு மலை வெம்பிய
போக்கு அரு வெஞ்சுரம் 23-3
தனியே இறப்ப, யான் ஒழிந்து
இருத்தல் 23-4
நகுதக்கன்று, இவ் அழுங்கல்
ஊர்க்கே; 23-5
இனி யான், 23-6
உண்ணலும் உண்ணேன்; வாழலும்
வாழேன்; 23-7
தோள் நலம் உண்டு
துறக்கப்பட்டோ ர், 23-8
வேள் நீர் உண்ட குடை
ஓரன்னர்; 23-9
நல்குநர் புரிந்து நலன்
உணப்பட்டோ ர், 23-10
அல்குநர் போகிய ஊர்
ஓரன்னர்; 23-11
கூடினர் புரிந்து குணன்
உணப்பட்டோ ர். 23-12
சூடினர் இட்ட பூ ஓரன்னர்;
23-13
என ஆங்கு, 23-14
யானும் நின் அகத்து
அனையேன்; ஆனாது, 23-15
கொலை வெம் கொள்கையொடு நாய்
அகப்படுப்ப, 23-16
வலைவர்க்கு அமர்ந்த மட
மான் போல, 23-17
நின் ஆங்கு வரூஉம் என்
நெஞ்சினை 23-18
என் ஆங்கு வாராது ஓம்பினை
கொண்மே! 23-19
***
'நெஞ்சு நடுக்குறக்
கேட்டும், கடுத்தும், தாம்
24-1
அஞ்சியது ஆங்கே அணங்கு
ஆகும்', என்னும் சொல் - 24-2
இன் தீம் கிளவியாய்! - வாய்
மன்ற; நின் கேள் 24-3
புதுவது பல் நாளும்
பாராட்ட, யானும், 24-4
'இது ஒன்று உடைத்து' என
எண்ணி, அது தேர, 24-5
மாசு இல் வண் சேக்கை மணந்த
புணர்ச்சியுள், 24-6
பாயல் கொண்டு என் தோள்
கனவுவார்; ஆய் கோல், 24-7
தொடி நிரை முன்கையாள்
கையாறு கொள்ளாள், 24-8
கடி மனை காத்து ஓம்ப
வல்லுவள் கொல்லோ? 24-9
'இடு மருப்பு யானை இலங்கு
தேர்க்கு ஓடும் 24-10
நெடு மலை வெஞ்சுரம் போக'
என்றார், ஆய் இழாய்! 24-12
தாம் இடை கொண்டது அது
ஆயின், தம் இன்றி 24-13
யாம் உயிர் வாழும் மதுகை
இலேம் ஆயின், 24-14
'தொய்யில் துறந்தார் அவர்'
என தம் வயின், 24-15
நொய்யார் நுவலும் பழி
நிற்பத் தம்மொடு 24-16
போயின்று, சொல், என் உயிர்.
24-17
***
வயக்குறு மண்டிலம்
வடமொழிப் பெயர் பெற்ற 25-1
முகத்தவன் மக்களுள்
முதியவன் புணர்ப்பினால்,
25-2
'ஐவர்' என்று உலகு ஏத்தும்
அரசர்கள் அகத்தராக், 25-3
கை புனை அரக்கு இல்லைக்
கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
25-4
களி திகழ் கடாஅத்த கடும்
களிறு அகத்தவா, 25-5
முளி கழை உயர் மலை முற்றிய
முழங்கு அழல், 25-6
ஒள் உரு அரக்கு இல்லை
வளிமகன் உடைத்துத் தன் 25-7
உள்ளத்துக் கிளைகளோடு
உயப் போகுவான் போல, 25-8
எழு உறழ் தடக்கையின் இனம்
காக்கும் எழில் வேழம், 25-9
அழுவம் சூழ் புகை அழல்
அதர்பட மிதித்துத் தம் 25-10
குழுவொடு புணர்ந்து போம்,
குன்று அழல் வெஞ்சுரம் 25-11
இறத்திரால், ஐய! மற்று இவள்
நிலைமை கேட்டீமின்; 25-12
மணக்கும்கால், மலர் அன்ன
தகையவாய்ச், சிறிது நீர் 25-13
தணக்கும்கால், கலுழ்பு
ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
25-14
சிறப்புச் செய்து,
உழையராப், புகழ்பு ஏத்தி,
மற்று அவர் 25-15
புறக்கொடையே பழி தூற்றும்
புல்லியார் தொடர்பு போல்;
25-16
ஈங்கு நீர் அளிக்கும்கால்
இறை சிறந்து, ஒரு நாள் நீர்
25-17
நீங்கும்கால், நெகிழ்பு
ஓடும் வளை எனவும் உள அன்றோ?
25-18
செல்வத்துள் சேர்ந்து
அவர் வளன் உண்டு, மற்று அவர்
25-19
ஒல்கு இடத்து உலப்பு இலா
உணர்வு இலார் தொடர்பு போல்;
25-20
ஒரு நாள் நீர்
அளிக்கும்கால் ஒளி சிறந்து
ஒரு நாள் நீர் 25-21
பாராட்டாக்கால் பசக்கும்
நுதல் எனவும் உள அன்றோ? 25-22
பொருந்திய கேண்மையின் மறை
உணர்ந்து, அம் மறை 25-23
பிரிந்தக்கால் பிறர்க்கு
உரைக்கும் பீடு இலார்
தொடர்பு போல்; 25-24
என ஆங்கு, 25-25
யாம் நின் கூறுவது எவன்
உண்டு? எம்மினும் 25-26
நீ நற்கு அறிந்தனை,
நெடுந்தகை! - வானம் 25-27
துளி மாறு பொழுதின், இவ்
உலகம் போலும் - நின் 25-28
அளி மாறு பொழுதின், இவ் ஆய்
இழை கவினே. 25-29
***
ஒரு குழை ஒருவன் போல், இணர்
சேர்ந்த மராஅமும், 26-1
பருதி அம் செல்வன் போல்,
நனை ஊழ்த்த செருந்தியும்,
26-2
மீன் ஏற்றுக் கொடியோன்
போல், மிஞிறு ஆர்க்கும்
காஞ்சியும், 26-3
ஏனோன் போல், நிறம் கிளர்பு
கஞலிய ஞாழலும், 26-4
ஆன் ஏற்றுக் கொடியோன் போல்,
எதிரிய இலவமும், ஆங்குத் 26-5
தீது தீர் சிறப்பின்
ஐவர்கள் நிலை போலப், 26-6
போது அவிழ் மரத்தொடு பொரு
கரை கவின் பெற, 26-7
நோதக வந்தன்றால், இளவேனில்
மேதக; 26-8
பல் வரி இன வண்டு புதிது
உண்ணும் பருவத்துத், 26-9
தொல் கவின் தொலைந்த என் தட
மென் தோள் உள்ளுவார்! 26-10
ஒல்குபு நிழல்
சேர்ந்தார்க்கு உலையாது
காத்து ஓம்பி, 26-11
வெல் புகழ் உலகு ஏத்த
விருந்து நாட்டு உறைபவர்;
26-12
திசை திசை தேன் ஆர்க்கும்
திருமருதமுன்துறை, 26-13
வசை தீர்ந்த என் நலம்
வாடுவது அருளுவார்! 26-14
நசை கொண்டு தம் நீழல்
சேர்ந்தாரைத் தாங்கித்,
தம் 26-15
இசை பரந்து உலகு ஏத்த,
ஏதில் நாட்டு உறைபவர்; 26-16
அறல் சாஅய் பொழுதோடு, எம்
அணி நுதல் வேறு ஆகித், 26-17
திறல் சான்ற பெரு வனப்பு
இழப்பதை அருளுவார்! 26-18
ஊறு அஞ்சி நிழல்
சேர்ந்தார்க்கு, உலையாது
காத்து ஓம்பி, 26-19
ஆறு இன்றிப் பொருள் வெஃகி
அகன்ற நாட்டு உறைபவர்; 26-20
என நீ, 26-21
தெருமரல் வாழி, தோழி! நம்
காதலர் 26-22
பொரு முரண் யானையர், போர்
மலைந்து எழுந்தவர், 26-23
செரு மேம்பட்ட வென்றியர்,
26-24
'வரும்' என வந்தன்று, அவர்
வாய்மொழித் தூதே! 26-25
***
ஈதலில் குறை காட்டாது, அறன்
அறிந்து ஒழுகிய 27-1
தீது இலான் செல்வம் போல்,
தீம் கரை மரம் நந்தப், 27-2
பேதுறு மட மொழிப், பிணை
எழில் மான் நோக்கின், 27-3
மாதரார் முறுவல் போல் மண
மௌவல் முகை ஊழ்ப்பக் 27-4
காதலர்ப் புணர்ந்தவர்
கதுப்பு போல், கழல்குபு 27-5
தாதொடும் தளிரொடும், தண்
அறல் தகைபெறப், 27-6
பேதையோன் வினை வாங்கப்ப்
பீடு இலா அரசன் நாட்டு, 27-7
ஏதிலான் படை போல,
இறுத்தந்தது, இளவேனில்; 27-8
நிலம் பூத்த மர மிசை
நிமிர்பு ஆலும் குயில்
எள்ள, 27-9
நலம் பூத்த நிறம் சாய,
நம்மையோ மறந்தைக்க; 27-10
கலம் பூத்த அணியவர் காரிகை
மகிழ் செய்யப் 27-11
புலம் பூத்துப் புகழ்பு
ஆனாக் கூடலும் உள்ளார்
கொல்? 27-12
கல் மிசை மயில் ஆலக்,
கறங்கி ஊர் அலர் தூற்றத் 27-13
தொல் நலம் நனி சாய, நம்மையோ
மறந்தைக்க; 27-14
ஒன்னாதார்க் கடந்து
அடூஉம், உரவு நீர் மா கொன்ற,
27-15
வென் வேலான் குன்றின் மேல்
விளையாட்டும் விரும்பார்
கொல்? 27-16
மை எழில் மலர் உண்கண் மரு
ஊட்டி மகிழ் கொள்ளப், 27-17
பொய்யினால் புரிவுண்ட
நம்மையோ மறந்தைக்க; 27-18
தைஇய மகளிர்தம் ஆயமோடு
அமர்ந்து ஆடும் 27-19
வையை வார் உயர் எக்கர்
நுகர்ச்சியும் உள்ளார்
கொல்? 27-20
என ஆங்கு, 27-21
நோய் மலி நெஞ்சமோடு இனையல்,
தோழி! 27-22
'நாம் இல்லாப் புலம்பு
ஆயின், நடுக்கம் செய்
பொழுது ஆயின், 27-23
காமவேள் விழவு ஆயின்,
கலங்குவள் பெரிது' என 27-24
ஏமுறு கடும் திண் தேர் கடவ,
27-25
நாம் அமர் காதலர் துணை
தந்தார், விரைந்தே. 27-26
***
பாடல் சால் சிறப்பின்
சினையவும், சுனையவும், 28-1
நாடினர் கொயல் வேண்டா,
நயந்து தாம் கொடுப்ப போல்,
28-2
தோடு அவிழ் கமழ் கண்ணி
தையுபு புனைவார் கண் 28-3
தோடு உறத் தாழ்ந்து, துறை
துறை கவின் பெறச், 28-4
செய்யவள் அணி அகலத்து
ஆரமொடு அணி கொள்பு, 28-5
தொய்யகம் தாழ்ந்த
கதுப்புப் போல் துவர் மணல்
28-6
வையை வார் அவிர் அறல், இடை
போழும் பொழுதினான்; 28-7
விரிந்து ஆனா மலர் ஆயின்,
விளித்து ஆலும் குயில்
ஆயின், 28-8
பிரிந்து உள்ளார் அவர்
ஆயின், பேதுறூஉம் பொழுது
ஆயின், 28-9
அரும் படர் அவல நோய்
ஆற்றுவள் என்னாது 28-10
வருந்த, நோய் மிகும் ஆயின் -
வணங்கு இறை! அளி என்னோ? 28-11
புதலவை மலர் ஆயின், பொங்கர்
இன வண்டு ஆயின், 28-12
அயலதை அலர் ஆயின், அகன்று
உள்ளார் அவர் ஆயின், 28-13
மதலை இல் நெஞ்சொடு மதன்
இலள் என்னாது, 28-14
நுதல் ஊரும் பசப்பு ஆயின் -
நுணங்கு இறை! அளி என்னோ? 28-15
தோயின அறல் ஆயின், சுரும்பு
ஆர்க்கும் சினை ஆயின் 28-16
மாவின தளிர் ஆயின், மறந்து
உள்ளார் அவர் ஆயின், 28-17
பூ எழில் இழந்த கண் புலம்பு
கொண்டு அமையாது 28-18
பாயல் நோய் மிகும் ஆயின் -
பைந் தொடி அளி என்னோ? 28-19
என ஆங்கு, 28-20
ஆய் இழாய்! ஆங்கனம்
உரையாதி; சேயார்க்கு 28-21
நாம் தூது மொழிந்தனம்
விடல் வேண்டா; நம்மினும் 28-22
தாம் பிரிந்து உறைதல்
ஆற்றலர், 28-23
பரிந்து எவன் செய்தி -
வருகுவர் விரைந்தே! 28-24
***
தொல் எழில் வரைத்து அன்றி
வயவு நோய் நலிதலின், 29-1
அல்லாந்தார் அலவுற
ஈன்றவள் கிடக்கை போல், 29-2
பல் பயம் உதவிய பசுமை தீர்
அகல் ஞாலம் 29-3
புல்லிய புனிறு ஒரீஇ, புது
நலம் ஏர்தர; 29-4
வளையவர் வண்டல் போல், வார்
மணல் வடுக் கொள, 29-5
இளையவர் ஐம்பால் போல்
எக்கர் போழ்ந்து அறல் வார,
29-6
மா ஈன்ற தளிர் மிசை, மாயவள்
திதலை போல், 29-7
ஆய் இதழ்ப் பல் மலர் ஐய
கொங்கு உறைத்தர, 29-8
மேதக இளவேனில் இறுத்தந்த
பொழுதின் கண்; 29-9
சேயார் கண் சென்ற என்
நெஞ்சினைச் - சின் மொழி! - 29-10
நீ கூறும் வரைத்து அன்றி,
நிறுப்பென்மன்? நிறை நீவி,
29-11
வாய் விரிபு பனி ஏற்ற
விரவுப் பல் மலர் தீண்டி,
29-12
நோய் சேர்ந்த வைகலான், வாடை
வந்து அலைத்தரூஉம்; 29-13
போழ்து உள்ளார் துறந்தார்
கண் புரி வாடும்
கொள்கையைச் 29-14
சூழ்பு ஆங்கே - சுடர் இழாய்!
கரப்பென்மன்? கை நீவி 29-15
வீழ் கதிர் விடுத்த பூ
விருந்து உண்ணும் இரும்
தும்பி 29-16
யாழ் கொண்ட இமிழ் இசை இயல்
மாலை அலைத்தரூஉம்; 29-17
தொடி நிலை
நெகிழ்த்தார்கண் தோயும்
என் ஆர்உயிர் - 29-18
வடு நீங்கு கிளவியாய்!
வலிப்பென் மன்? வலிப்பவும்,
29-19
நெடு நிலாத் திறந்து உண்ண,
நிரை இதழ் வாய்விட்ட 29-20
கடி மலர் கமழ் நாற்றம்,
கங்குல் வந்து
அலைத்தரூஉம்; 29-21
என ஆங்கு, 29-22
வருந்தினை வதிந்த நின் வளை
நீங்கச், சேய் நாட்டுப் 29-23
பிரிந்து செய் பொருள் பிணி
பின் நோக்காது - ஏகி, நம் 29-24
அரும் துயர் களைஞர்
வந்தனர் - 29-25
திருந்து எயிறு இலங்கு
நின் தேமொழி படர்ந்தே. 29-26
***
அரும் தவம் ஆற்றியார்
நுகர்ச்சி போல், அணி கொள 30-1
விரிந்து ஆனாச் சினை
தொறூஉம், வேண்டும் தாது
அமர்ந்து ஆடிப், 30-2
புரிந்து ஆர்க்கும்
வண்டொடு, புலம்பு தீர்ந்து
எவ்வாயும், 30-3
இரும் தும்பி, இறைகொள
எதிரிய வேனிலான் - 30-4
துயில் இன்றி யாம் நீந்தத்,
தொழுவை அம் புனல் ஆடி, 30-5
மயில் இயலார் மரு உண்டு,
மறந்து அமைகுவான் மன்னோ -
30-6
'வெயில் ஒளி அறியாத விரி
மலர்த் தண் காவில் 30-7
குயில் ஆலும் பொழுது' எனக்
கூறுநர் உளர் ஆயின்? 30-8
பானாள் யாம் படர் கூரப் பணை
எழில் அணை மென் தோள் 30-9
மான் நோக்கினவரொடு மறந்து
அமைகுவான் மன்னோ - 30-10
'ஆனாச் சீர் கூடலுள்
அரும்பு அவிழ் நறு
முல்லைத் 30-11
தேன் ஆர்க்கும் பொழுது'
எனத் தெளிக்குநர் உளர்
ஆயின்? 30-12
உறலி யாம் ஒளி வாட,
உயர்ந்தவன் விழவினுள் 30-13
விறல் இழையவரோடு
விளையாடுவான் மன்னோ - 30-14
'பெறல் அரும் பொழுதோடு
பிறங்கு இணர்த் துருத்தி
சூழ்ந்து 30-15
அறல் வாரும், வையை' என்று
அறையுநர் உளர் ஆயின்? 30-16
என ஆங்கு, 30-17
தணியா நோய் உழந்து ஆனாத்
தகையவள் - தகைபெற, 30-18
அணி கிளர் நெடும் திண் தேர்
அயர்மதி - பணிபு நின் 30-19
காமர் கழல் அடி சேரா 30-20
நாமம் சால் தெவ்வரின்
நடுங்கினள் பெரிதே! 30-21
***
கடும் புனல் கால் பட்டுக்
கலுழ் தேறிக் கவின் பெற, 31-1
நெடும் கயத்து அயல் அயல்
அயிர் தோன்ற, அம்மணல் 31-2
வடுத்து ஊர வரிப்ப போல்
ஈங்கை வாடு உதிர்பு உகப், 31-3
பிரிந்தவர் நுதல் போலப்
பீர் வீயக், காதலர்ப் 31-4
புணர்ந்தவர் முகம் போலப்
பொய்கை பூப் புதிது ஈன, 31-5
மெய் கூர்ந்த பனியொடு மேல்
நின்ற வாடையால், 31-6
கையாறு கடைக்கூட்டக்
கலக்குறூஉம் பொழுதுமன் - 31-7
'பொய்யேம்' என்று, ஆய் இழாய்!
புணர்ந்தவர் உரைத்ததை; 31-8
மயங்கு அமர் மாறு அட்டு,
மண் வௌவி வருபவர், 31-9
தயங்கிய களிற்றின் மேல்,
தகை காண விடுவதோ - 31-10
பயம் கெழு பல் கதிர் பால்
போலும் பொழுதொடு, 31-11
வயங்கு இழை தண்ணென, வந்த
இவ் அசை வாடை? 31-12
தாள் வலம்பட வென்று, தகை
நல் மா மேல் கொண்டு, 31-13
வாள் வென்று வருபவர்
வனப்பு ஆர விடுவதோ - 31-14
நீள் கழை நிவந்த பூ நிறம்
வாடத் தூற்றுபு, 31-15
தோள் அதிர்பு அகம் சேரத்
துவற்றும் இச் சில் மழை? 31-16
பகை வென்று திறை கொண்ட பாய்
திண்தேர் மிசையவர் 31-17
வகை கொண்ட செம்மல் நாம்
வனப்பு ஆர விடுவதோ - 31-18
புகை எனப் புதல் சூழ்ந்து
பூ அம் கள் பொதி செய்யா 31-19
முகை வெண் பல் நுதி பொர,
முற்றிய கடும் பனி? 31-20
என ஆங்கு 31-21
வாளாதி வயங்கு இழாய்!
'வருந்துவள் இவள்' என, 31-22
நாள் வரை நிறுத்துத் தாம்
சொல்லிய பொய் அன்றி, 31-23
மீளி வேல் தானையர்
புகுதந்தார் - 31-24
நீள் உயர் கூடல் நெடு கொடி
எழவே. 31-25
***
எஃகு இடை தொட்ட, கார்க்
கவின் பெற்ற ஐம்பால் போல் -
32-1
மை அற - விளங்கிய, துவர் மணல்
அது; அது 32-2
ஐது ஆக நெறித்தன்ன அறல்
அவிர் நீள் ஐம்பால் 32-3
அணி நகை இடையிட்ட ஈகை அம்
கண்ணி போல், 32-4
பிணி நெகிழ் அலர் வேங்கை
விரிந்த பூ, வெறி கொளத் - 32-5
துணி நீரால், தூ மதி நாளால்,
அணிபெற - 32-6
ஈன்றவள் திதலை போல் ஈர்
பெய்யும் தளிரொடும், 32-7
ஆன்றவர் அடக்கம் போல்
அலர்ச் செல்லாச்
சினையொடும், 32-8
வல்லவர் யாழ் போல வண்டு
ஆர்க்கும் புதலொடும், 32-9
நல்லவர் நுடக்கம் போல்
நயம் வந்த கொம்பொடும், 32-10
உணர்ந்தவர் ஈகை போல் இணர்
ஊழ்த்த மரத்தொடும், 32-11
புணர்ந்தவர் முயக்கம்
போல் புரிவுற்ற கொடியொடும்
- 32-12
நயந்தார்க்கோ நல்லைமன்,
இளவேனில்! எம் போல? 32-13
பசந்தவர் பைதல் நோய், பகை
எனத் தணித்து, நம் 32-14
இன் உயிர் செய்யும்
மருந்து ஆகப், பின்னிய 32-15
காதலர் - எயிறு ஏய்க்கும்
தண் அருவி நறு முல்லைப் 32-16
போது ஆரக் கொள்ளும் கமழ்
குரற்கு என்னும் - 32-17
தூது வந்தன்றே, தோழி! 32-18
துயர் அறு கிளவியோடு!
அயர்ந்தீகம் விருந்தே! 32-19
***
வீறு சால் ஞாலத்து வியல்
அணி காணிய 33-1
யாறு கண் விழித்த போல்,
கயம் நந்திக் கவின் பெற, 33-2
மணி புரை வயங்கலுள் துப்பு
எறிந்தவை போலப், 33-3
பிணி விடு முருக்கு இதழ்
அணி கயத்து உதிர்ந்து உகத்,
33-4
துணி கய நிழல் நோக்கித்
துதைபு உடன் வண்டு ஆர்ப்ப,
33-5
மணி போல அரும்பு ஊழ்த்து,
மரம் எல்லாம் மலர் வேயக் 33-6
காதலர்ப் புணர்ந்தவர்
கவவு கை நெகிழாது, 33-7
தாது அவிழ் வேனிலோ
வந்தன்று; வாரார், நம் 33-8
போது எழில் உண் கண் புலம்ப
நீத்தவர்; 33-9
எரி உரு உறழ இலவம்
மலரப், 33-10
பொரி உரு உறழப் புன்கு பூ
உதிரப், 33-11
புது மலர்க் கோங்கம் பொன்
எனத் தாது ஊழ்ப்பத், 33-12
தமியார்ப் புறத்து
எறிந்து எள்ளி, முனிய வந்து,
33-13
ஆர்ப்பது போலும் பொழுது;
என் அணி நலம் 33-14
போர்ப்பது போலும் பசப்பு;
33-15
நொந்து நகுவன போல் நந்தின
கொம்பு; நைந்து உள்ளி 33-16
உகுவது போலும், என் நெஞ்சு;
எள்ளித் 33-17
தொகுபு உடன் ஆடுவ போலும்,
மயில்; கையில் 33-18
உகுவன போலும், வளை; என் கண்
போல் 33-19
இகுபு அறல் வாரும்
பருவத்தும் வாரார்; 33-20
மிகுவது போலும் இந் நோய்;
33-21
நரம்பின் தீம் குரல்
நிறுக்கும் குழல் போல் 33-22
இரங்கு இசை மிஞிறொடு
தும்பி தாது ஊதத் - 33-23
தூது அவர் விடுதரார்;
துறப்பார் கொல்? நோதக 33-24
இரும் குயில் ஆலும் அரோ;
33-25
என ஆங்கு, 33-26
புரிந்து நீ எள்ளும்
குயிலையும், அவரையும்,
புலவாதி; 33-27
நீல் இதழ் உண் கண்ணாய் நெறி
கூந்தல் பிணி விட 33-28
நாள் வரை நிறுத்துத் தாம்
சொல்லிய பொய் அன்ற, 33-29
மாலை தாழ் வியன் மார்பர்
துனைதந்தார் - 33-30
கால் உறழ் கடு திண் தேர்
கடவினர் விரைந்தே. 33-31
***
மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம்
புரவு ஈன்று, 34-1
பல் நீரால் பாய் புனல்
பரந்து ஊட்டி, இறந்த பின்,
34-2
சில் நீரால் அறல் வார, அகல்
யாறு கவின் பெற, 34-3
முன் ஒன்று தமக்கு ஆற்றி,
முயன்றவர் இறுதிக் கண் 34-4
பின் ஒன்று பெயர்த்து
ஆற்றும் பீடு உடையாளர்
போல், 34-5
பல் மலர் சினை உகச்
சுரும்பு இமிர்ந்து வண்டு
ஆர்ப்ப, 34-6
இன் அமர் இளவேனில்
இறுத்தந்த பொழுதினான்; 34-7
விரி காஞ்சித் தாது ஆடி
இரும் குயில் விளிப்பவும்,
34-8
பிரிவு அஞ்சாதவர் தீமை
மறைப்பென்மன்; மறைப்பவும்,
34-9
கரி பொய்த்தான் கீழ்
இருந்த மரம் போலக் கவின்
வாடி, 34-10
எரி பொத்தி, என் நெஞ்சம்
சுடும் ஆயின், எவன் செய்கோ?
34-11
பொறை தளர் கொம்பின் மேல்
சிதர் இனம் இறைகொள 34-12
நிறை தளராதவர் தீமை
மறைப்பென்மன்; மறைப்பவும்,
34-13
முறை தளர்ந்த மன்னவன்
கீழ்க் குடி போலக்
கலங்குபு, 34-14
பொறை தளர்பு பனி வாரும் கண்
ஆயின், எவன் செய்கோ? 34-15
தளை அவிழ் பூஞ் சினைச்
சுரும்பு யாழ் போல
இசைப்பவும், 34-16
கொளை தளராதவர் தீமை
மறைப்பென்மன்; மறைப்பவும்,
34-17
கிளை அழிய வாழ்பவன்
ஆக்கம்போல் புல் என்று, 34-18
வளை ஆனா நெகிழ்பு ஓடும்
தோள் ஆயின், எவன் செய்கோ? 34-19
என ஆங்கு, 34-20
நின் உள் நோய் நீ உரைத்து
அலமரல்; எல்லா! நாம் 34-21
எண்ணிய நாள் வரை இறவாது,
காதலர் 34-22
பண்ணிய மாவினர்
புகுதந்தார் 34-23
கண் உறு பூசல் கை
களைந்தாங்கே. 34-24
***
மடி இலான் செல்வம் போல்
மரன் நந்த, அச் செல்வம் 35-1
படி உண்பார் நுகர்ச்சி
போல் பல் சினை மிஞிறு
ஆர்ப்ப, 35-2
மாயவள் மேனி போல் தளிர் ஈன,
அம் மேனித் 35-3
தாய சுணங்கு போல் தளிர்
மிசைத் தாது உக, 35-4
மலர் தாய பொழில் நண்ணி மணி
நீர கயம் நிற்ப, 35-5
அலர் தாய துறை நண்ணி அயிர்
வரித்து அறல் வார, 35-6
நனி எள்ளும் குயில் நோக்கி
இனைபு உகு நெஞ்சத்தால், 35-7
'துறந்து உள்ளார் அவர்'
எனத், துனி கொள்ளல், எல்லா!
நீ; 35-8
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா
வையை வார் உயர் எக்கர்த் 35-9
தண் அருவி நறு முல்லைத்
தாது உண்ணும் பொழுது அன்றோ-
35-10
கண் நிலா நீர் மல்கக் கவவி,
நாம் விடுத்தக்கால் 35-11
ஒள் நுதால்! நமக்கு அவர்
'வருதும்' என்று உரைத்ததை?
35-12
மல்கிய துருத்தியுள்
மகிழ் துணைப் புணர்ந்து,
அவர் 35-13
வில்லவன் விழவினுள்
விளையாடும் பொழுது அன்றோ -
35-14
'வலன் ஆக, வினை!' என்று
வணங்கி, நாம்
விடுத்தக்கால், 35-15
ஒளி இழாய்! நமக்கு அவர்
'வருதும்' என்று உரைத்ததை?
35-16
நிலன் நாவில் திரிதரூஉம்
நீள் மாட கூடலார் 35-17
புலன் நாவில் பிறந்த சொல்
புதிது உண்ணும் பொழுது
அன்றோ- 35-18
பல நாடு நெஞ்சினேம்
பரிந்து, நாம்
விடுத்தக்கால், 35-19
சுடர் இழாய்! நமக்கு அவர்
'வருதும்' என்று உரைத்ததை?
35-20
என ஆங்கு, 35-21
உள்ளுதொறு உடையும் நின்
உயவு நோய்க்கு உயிர்ப்பு
ஆகி, 35-22
எள் அறு காதலர் இயைதந்தார்
- புள் இயல் 35-23
காமர் கடும் திண்தேர்
பொருப்பன், 35-24
வாய்மை அன்ன வைகலொடு
புணர்ந்தே. 35-25
***
கொடு மிடல் நாஞ்சிலான்
தார் போல், மராத்து 36-1
நெடு மிசைச் சூழும் மயில்
ஆலும் சீர, 36-2
வடி நரம்பு இசைப்ப போல்
வண்டொடு சுரும்பு
ஆர்ப்பத், 36-3
தொடி மகள் முரற்சி போல்
தும்பி வந்து இமிர்தர, 36-4
இயன் எழீஇயவை போல,
எவ்வாய்யும் 'இம்' மெனக் 36-5
கயன் அணி பொதும்பருள் கடி
மலர்த் தேன் ஊத, 36-6
மலர் ஆய்ந்து வயின் வயின்
விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப,
36-7
இரும் குயில் ஆலப், பெரும்
துறை கவின் பெறக் 36-8
குழவி வேனில் விழவு
எதிர்கொள்ளும் 36-9
சீரார் செவ்வியும்
வந்தன்று; 36-10
வாரார் தோழி நம் காதலோரே;
36-11
பாஅய்ப் பாஅய்ப்
பசந்தன்று, நுதல்; 36-12
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன
தோள்; 36-13
நனி அறல் வாரும் பொழுது என,
வெய்ய 36-14
பனி அறல் வாரும், என் கண்;
36-15
மலை இடை போயினர் வரல் நசைஇ
நோயொடு 36-16
முலை இடைக் கனலும், என்
நெஞ்சு; 36-17
காதலின் பிரிந்தார்
கொல்லோ? வறிது, ஓர் 36-18
தூதொடு மறந்தார் கொல்லோ?
நோதகக், 36-19
காதலர் காதலும் காண்பாம்
கொல்லோ? 36-20
துறந்தவர் ஆண்டு ஆண்டு
உறைகுவர் கொல்லோ? யாவது - 36-21
'நீள் இடைப்படுதலும்
ஒல்லும், யாழ நின் 36-22
வாள் இடைப்படுத்த வயங்கு
ஈர் ஓதி! 36-23
நாள் அணி சிதைத்தலும்
உண்டு' என நயவந்து 36-24
கேள்வி அந்தணர் கடவும் 36-25
வேள்வி ஆவியின்
உயிர்க்கும், என் நெஞ்சே.
36-26
****************** பாலைக்கலி முற்றும்
*************************